إِنَّ
أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ(4)71 இது கோடைக்காலம். வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து மக்கள்
இறந்து போகின்றனர்,
ஒடிசா மாநிலத்தின் ஒரு பகுதியில் சில நாட்களுக்கு முன் 45 டிகிரி வெயில் அடித்திருக்கிறது.
அன்று மட்டும் சுமார் 30 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு உக்கிரமான வெயில் காலம் இன்னும் ஆரம்பிக்க வில்லை அதற்குள்ளாக நாடு முழுவதும் அனல் காற்று மற்றும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் இதுவரை 130
பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் மாதம் துவங்கியது முதல் தெலுங்கானாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த வெயிலுக்கு இதுவரை 66
பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானாவில்
தகிக்கும் வெயில் தன் வீட்டு முற்றத்தில் தரையில் ஒரு பெண் ஆம்லெட் தயாரிக்கும்
வீடியோ காட்சி வலைத் தளங்களில் பிரபலமாகி வருகிறது.
தமிழ் நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் முதியவர் ஒருவர் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.
தமிழ்க முதலமைச்சரின் தேர்தல் பிரச்சார பயனத்தின் போது
ஆட்டுப்பட்டியை போல அடைத்து வைக்கப்பட்ட மக்களில் விருத்தாச்சலத்தில் ஒருவரும்
சேலத்தில் இருவருமாக இதுவரை மூவர் உக்கிரமான வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.
அடுத்த சில நாட்களில் தமிழகம்,
மேற்கு வங்கம்,
ஒடிஷா,
மகாராஷ்டிரா,
தெலுங்கானா,
ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்,
அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இருந்த வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடுமுழுவதும் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது.
தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் அந்த எச்சரிக்கைகளை கடை பிடிக்க வேண்டும்.
மருத்துவர்கள் அறிவுரை தருகிறார்கள்,
1.
நிறைய தண்ணீர் குடியுங்கள்
2.
வெளியே செல்வதானால தலையை மறைத்துக் கொள்ளுங்கள்
3.
நிறைய பழங்கள் சாப்பிடுங்கள்
(அல்லாஹ்வுடை குத்ரத்தின் ஒரு பெரும் அடையாளம். வெயில் காலத்தில் அதிக பழங்கள்
கிடைக்கின்றன, விலைக் குறைவாக – அதே போல நீர் சத்து அதிகமுள்ள பழங்கள் அதிகமாக கிடைக்கின்றன,)
4.
உச்சி நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க
வேண்டும். குறிப்பாக பெண்கள் முதியவர்கள் சிறுவர்கள்.
சூரிய வெப்பம் என்பது மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. அதே போல் உடல் நலத்தை திடீர் என பாதித்து விடக்கூடியது.
அலட்சியமாக இருந்து விடக்கூடாது,
குறிப்பாக உடல் நலம் குன்றியோர். பலகீனமானவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் சூரிய வெப்பம் குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
நரகத்திற்கு மூச்சை இழுத்து வெளியே விட அல்லாஹ் அனுமதி கொடுத்தான். இழுப்பது
குளிர் காலம் விடுவது வெயில் காலம்
حديث أبي هريرة رضي
الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «اشتكت النار إلى ربها فقالت: رب أكل بعضي بعضاً، فأذن لها بنفسين، نفس
في الشتاء، ونفس في الصيف فهو أشد ما تجدون من الحر، وأشد ما تجدون من الزمهرير»
இன்று வெயிலின்
சூட்டிலிருந்து நம்மை காத்துக் கொள்ள எத்தனையோ சவுகரியங்களை வைத்திருக்கிறோம்.
சஹாபாக்கள்
கோடை காலத்தில் சஜ்தா செய்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்
قال أنس رضي الله عنه: "كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم في شدة الحر فإذا لم يستطع
أحدنا أن يمكن جبهته من الأرض بسط ثوبه فسجد عليه".
இதனாலேயே
வெயில் காலத்தில் வெயில் சற்று தாழ்ந்த பிறகு லுஹரை
தொழுது கொள்ளுங்கள் என்று பெருமானார் (ஸல்)
கூறினார்கள்
قال عليه الصلاة والسلام: «إذا اشتد الحر فأدبروا عن الصلاة فإن شدة الحر من فيح جهنم
ஒவ்வொரு
கோடையின் வெப்பத்தின் போதும் மஹ்ஷரின் வெப்பத்தை
நினைத்துக் கொள்ள வேண்டும்
قال عليه الصلاة والسلام: «تدنوا الشمس يوم القيامة من الخلق حتى تكون كمقدار ميل، فيكون الناس
على قدر أعمالهم في العرق، فمنهم من يكون إلى كعبيه، ومنهم من يكون إلى ركبتيه،
ومنهم ما يكون إلى حقوبه، ومنهم من يلجمه العرق إلجاماً»، وأشار النبي صلى الله عليه وسلم بيده إلى فيه.
நரகத்தின்
சூடும் இதை விட பன்
மடங்கு கொடியது.
அதில் நுழைந்தவனுக்கு
இறப்பும் கிடையாது, சூடும் குறையாது.
نار جهنم من دخلها لا يقضى عليه فيموت، ولا يخفف عنه من عذابها، كلما
نضجت جلودهم بدلوا جلوداً غيرها ليذوقوا العذاب.
இந்த
உலகில் மொத்தமாக மனிதன் மூட்டுகிற மொத்த
நெருப்பு – (அடுப்புக்காக – தொழிற்சாலைகளுக்காக - ) நரக நெருப்பின் எழுபதில்
ஒரு பகுதிதான்.
இரும்புத் தொழிற்சாலையின்
நெருப்பு நிமிச நேரத்தில் மனிதனை ஆவியாக்கிவிடும்.
ال النبي صلى الله عليه والسلام: «ناركم جزء من سبعين جزءاً من نار جهنم»
قيل: يا رسول الله، إن كانت لكافية. قال: «فضلت عليها بتسعة وستين جزءاً كلهن مثل حرها
قيل: يا رسول الله، إن كانت لكافية. قال: «فضلت عليها بتسعة وستين جزءاً كلهن مثل حرها
எந்த
வகையிலும் தாங்கிக் கொள்ள முடியாதது நரகம்
என்பதை உள்ளார்த்தமாக உணர்ததாலேயே நம் முன்னோர்கள் இந்த உலக வெயிலின் சூட்டைத் தாங்கிக் கொண்டவர்கள்
நரகத்திற்கு
அதிகம் பய்ந்தார்கள்,
يقول فاروق هذه الأمة عمر بن الخطاب رضي الله عنه: "لو نادى مناد من السماء، أيها الناس، إنكم داخلون الجنة كلكم إلا
رجلاً واحداً لخفت أن أكون هو".
وقال عثمان بن عفان رضي الله عنه: "لو أني بين الجنة والنار ولا أدري إلى أيتهما يؤمر بي لاخترت أن أكون رماداً قبل أن أعلم إلى أيتهما أصير".
وقال عثمان بن عفان رضي الله عنه: "لو أني بين الجنة والنار ولا أدري إلى أيتهما يؤمر بي لاخترت أن أكون رماداً قبل أن أعلم إلى أيتهما أصير".
கோடைக்
கால மரணங்கள் நம்மை அச்சுறுத்துகின்றன,
நடந்த் போகிறவர்கள்
திடீரென விழுந்து இறந்து விடுகிறார்கள்
இன்று ஒரு நெகிழ்ச்சியான
நிகழ்ச்சி. லுஹருக்கு ஒரு 48 வயது பெண்மணியின் ஜனாஸா வந்தது.
அதிர்ச்சியளித்த
மரணம் அது.
தன்னுடைய மகளுக்கு
பிறந்த குழந்தைக்கு உடல் நலமில்லை என்று அந்த தாயிக்கு தகவல் வந்தது. உடனடியாக பஸ்
ஏறி மதிய நேரத்தில் கிளம்பினார். பேருந்திலிருந்து இறங்கி மகளிடம் ஆஸ்பத்ரியில் எந்த
உடம் என்று கேட்டு விட்டு நடக்கிறார். பஸ்ஸிலிருந்து இறங்கிய தாய் நீண்ட நேரமாகியும்
வரவில்லை என்பதை அறிந்து மகள் குழந்தையை ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு தாயை தேடி வருகிறார்.
வழியில் ஓரிடத்தில் ஒரு பெண் விழுந்து கிடப்பது தெரிகிறது. ஓடிப்போய்ப் பார்க்கிறார்.
அவரது அம்மா தான் விழுந்து கிடக்கிறார். வெயில் தாங்க முடியாமல் மயங்கிக் கிடக்கிறார்
என்று தான் நினைத்தார். ஆனால் அந்தப் பெண் இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.
ஜனஸா வந்த இடத்தில்
இறந்தவரின் தந்தை இந்தச் செய்தியை சொல்லும் போது துடித்த அழுகை இதயத்தை பிழிந்து விட்டது.
அந்தப் பெண்ணுக்காக
அவருடைய குடும்பத்திற்காக எவ்வளவோ துஆ செய்த பிறகும் கூட இந்த மரணத்தின் வடு அழுத்தமாக
இருக்கிறது.
இது போன்ற மரணங்கள்
நமக்கு எச்சரிக்கைகள்!
·
மனிதன் அல்லாஹ்வை எப்போதும் நினைவில் வைத்திருக்கனும். அவன் தான் ரப்பு காலிக் மாலிக் ராஸிக்
·
மனித இயல்பின் பலகீனத்தை அல்லாஹ் அற்புதமாக சுட்டிக் காட்டுகிறான்.
·
கஷ்டம் வரும் போது மட்டும் நினைத்துக் கொள்வது,
இது தவறு.
وَإِذَا مَسَّ
الْإِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا
كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَنْ لَمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَسَّهُ
كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ(12
அதே போல் மனிதன் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று மரணம்.
எப்போதும் வரலாம். எப்படியும் வரலாம். யாருக்கும் வரலாம்.
சில் மாதங்களுக்கு முன் ஒரு முஸ்லிம் ஊரில் நடந்த உண்மைச் சம்பவம்.
சமீபமாக அமைப்பு இயக்க வெறி தலைக்கேறி நடக்கிற இளைஞர்கள் பெருகிவிட்டனர்,
அவ்வாறு இயக்க வெறி தலைக்கேறிய tntj வைச் சேர்ந்த ஒரு இளைஞன் தன் தந்தையிடம் “ நீ மவ்தானா
உன்னை அடக்கம் செய்யும் அனைத்து காரியங்களையும் நான் மட்டுமே பார்த்துக் கொள்வேன்,
உன்னுடைய ஜனாஸாவை என்னிடத்தில் ஒப்ப்டைத்து விட வேண்டும் என ஒரு பத்திரத்தில் எழுதிக்
கொடு என்று கேட்டிருக்கிறான்,
தகப்பனாருக்கு பேரதிர்ச்சி. தந்தை நீடூழி வாழ வேண்டும் என்று நினைக்கிற பிள்ளைகளைத்
தான் பார்த்திருப்போம். தனக்கு இப்படி ஒரு பிள்ளையா என பெரிதும் கவலை அடைந்தார், ஆனாலும் தைரியத்தை இழக்காமல் மகனிடம் அவர் கூறியுள்ளார்,
வெள்ளிக்கிழமை ஜும் ஆ விலே ஹழரத் சொன்னார் . அனஸ் ரலி அவர்கள் தனது கையால்
80 பேரை அடக்கம் செய்திருக்கிறார்களாம். அல்லாஹ் யாருக்கு எவ்வளவு ஆயுசுன்னு வச்சிறுக்கான்,
உனக்கு முன்னாடி நானோ எனக்கு முன்னாடி நீயோ யார் முந்தின்னு யாருக்கு தெரியும் போடா
போ என்று சொன்னாராம்.
யாருடைய பலவீனமான நிலையிலும் அவருடைய மவ்தை நினைத்து பேசுகிற போது அதற்குள்
நமக்கு மரணம் வந்து விடும் வாய்ப்பிருக்கிறது என்பதை முஃமின்கள் எப்போதும் நினைவில்
வைத்திருக்க வேண்டும்.
இதையும் எப்போதும் நினைவில் நிறுத்தனும் , ஏதாவது சோகமயமான மரணச் செய்திகளின்
போது மட்டுமல்ல.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ يَعْنِي الْمَوْتَ -
إبن ماجة
عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَجَلَسَ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَبَكَى
حَتَّى بَلَّ الثَّرَى ثُمَّ قَالَ يَا إِخْوَانِي لِمِثْلِ هَذَا فَأَعِدُّوا - إبن ماجة
மரணத்தை நினைவில் நிறுத்திக் கொண்டால் ஒவ்வொரு இடத்திலும் – காசு சேர்க்கும்
போது – அதிகாரம் கிடைக்கும் போது – உல்லாசத்தில் மிதக்கும் போது – என ஒவ்வொரு இடத்திலும்
அது தகுந்த உபதேசத்தை தரும்
இஹ்யாவுலூமுத்தீனில் இரு ஹதீஸ்கள் (பாபு திக்ரில் மவ்த்)
وعنه : " أكيس
الناس أكثرهم ذكرا للموت وأشدهم استعدادا له أولئك هم الأكياس ذهبوا بشرف الدنيا
وكرامة الآخرة " .
இமாம்
கஸ்ஸாலி மரணச் சிந்தனை குறித்து
மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கிறார்கள்
1.
உலக இன்பத்தில் மூழ்கியவன்
2.
பாவத்திலிருந்து மீண்டவன்
3.
இறை ஞானி
أما المنهمك فلا يذكر الموت ، وإن ذكره فيذكره
للتأسف على دنياه ويشتغل بمذمته ، وهذا يزيده ذكر الموت من الله بعدا .
وأما التائب فإنه يكثر من ذكر الموت لينبعث به من قلبه الخوف والخشية فيفي بتمام التوبة .
وأما العارف فإنه يذكر الموت دائما لأنه موعد للقائه لحبيبه ، والمحب لا ينسى قط موعد لقاء الحبيب .
وأما التائب فإنه يكثر من ذكر الموت لينبعث به من قلبه الخوف والخشية فيفي بتمام التوبة .
وأما العارف فإنه يذكر الموت دائما لأنه موعد للقائه لحبيبه ، والمحب لا ينسى قط موعد لقاء الحبيب .
மரணத்தை
நினைக்க சிறந்த வழியை இமாம்
கஸ்ஸாலி கற்றுத்தருகிறார்கள்
உங்களுடன்
இருது இறந்து போன்வர்களை நண்பர்களை
எண்ணிப்பாருங்கள் , நோயாளிகளை
சந்தியுங்கள்.
இமாம் கஸ்ஸாலி
(ரஹ்) கூறுகிறார்
ثم إن أنجع طريق في ذكر الموت
أن يكثر ذكر أشكاله وأقرانه الذين مضوا قبله ، فيتذكر موتهم ومصارعهم
تحت التراب ، ويتذكر صورهم في مناصبهم وأحوالهم ، ويتأمل كيف محا التراب الآن حسن
صورهم وكيف تبددت أجزاؤهم في
قبورهم وخلت منهم مساجدهم ومجالسهم وانقطعت آثارهم ،
وأنه مثلهم وستكون عاقبته كعاقبتهم .
فملازمة هذه الأفكار مع دخول المقابر ومشاهدة المرضى هو الذي يجدد ذكر
الموت في القلب فيستعد له ويتجافى عن دار الغرور ، ومهما طاب قلبه بشيء من الدنيا
ينبغي أن يتذكر في الحال أنه لا بد من مفارقته
நிறைவாக்
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) ஒரு
நிகழ்வை எடுத்துக் காட்டுகிறார்
نظر " ابن مطيع " ذات يوم إلى داره فأعجبه حسنها ثم بكى فقال : " والله لولا الموت لكنت بك مسرورا ، ولولا ما نصير إليه من ضيق القبور لقرت بالدنيا أعيننا " ثم بكى رحمه الله تعالى .
நம்மைச் சுற்றி நடக்கிற அனுபவங்கள் நம்மை எச்சரிக்கின்றன.
ஒரு எச்சரிக்கை தரக்கூடாதா என தாவூது அலை கேட்டார்கள்
மலக்குல் மவ்த் பதில் சொன்னார்.
روي أن ملك الموت دخل
على داود عليه السلام فقال : (( من أنت ؟ فقال ملك الموت : أنا من لا يهاب الملوك
، ولا تمنع منه القصور ، ولا يقبل الرشوة ، قال : فإذًا أنت ملك الموت ، قال : نعم
، قال : أتيتني ولم أستعد بعد ! قال : يا داود أين فلان قريبك ؟ أين فلان جارك ؟
قال : مات ، قال : أما كان لك في هؤلاء عبرة لتستعد ؟!
நமது முன்னோர்கள்
ஜனஸாக்களை பார்க்கிற போதெல்லாம் தமது பயணத்தை நினைத்துக் கொண்டார்கள்
وكان أبو هريرة -رضي الله عنه- إذا رأى أحدًا يحمل
جنازة يقول لها: "امضوا، فإنا على الأثر"
وكان مكحول إذا رأى جنازة يقول: اغدوا فإنا
رائحون، موعظة بليغة قليلة، وغفلة شنيعة، يذهب الأول، والآخر لا يعتبر
كان عمر بن عبد العزيز يجمع كل ليلة الفقهاء،
فيتذاكرون الموت والقيامة والآخرة، ثم يبكون حتى كأنَّ بين أيديهم جنازة
நாமும் கூட
கப்ருஸ்தான்களுக்கு செல்லும் போது .
இதோ பின்னால் நாங்கள் என்று சொல்கிறோம். அதன்
பெருள் என்ன என நினைப்பதில்லை.
மரணத்தையும்
மரணத்திற்கு பிந்திய வாழ்வையும் நினைத்து வாழ்
அஞ்சை நடக்க வேண்டிய ஒரு பக்குவததையும் கோடை காலம் நமக்கு தருகிறது.
அல்லாஹ் கோடையின்
வெப்பத்திலிந்தும் அதன் அனைத்து வகை தீமையிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!
பாதுகாப்பான
மழையை தந்தருள்வானாக!
Hazrath .thalaippu kodai veppathai vida hot
ReplyDeleteالله أكبر الله أكبر لا حول و لا قوة إلا بالله
ReplyDelete