ஓட்டுப்போடுவது மார்க்க
கடமை
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ
لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ
முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஓட்டுப் போடுவது ஜனநாயக
கடமை மட்டுமல்ல சமயக் கடமையுமாகும்.
ஒட்டுப் போடுவதும் நன்மையை பெற்றுத்தருகிற
ஒரு இபாதத் ஆகும்.
இஸ்லாமியப்பார்வையில் ஓட்டுப் போடுவது
நீதிமன்றத்தில்சாட்சியமளிப்பதின் அந்தஸ்ததை வகிக்கிறது என பிரபல இஸ்லாமிய சட்ட
அறிஞர் முப்தீ முஹம்மது ஷபீ
அவருடைய திருக்குர் ஆன் விரிவுரையில் குறிப்பிடுகிறார்.
(மஆரிபுல்
குர்ஆன் பாகம்3 பக்கம் 71 வசன எண் 5.8)
திருக்குர்ஆன் போதிக்கிற شهادة (சாட்சியமளித்தல்) شفاعة (சான்றளித்தல்) وكالة(ஒப்புவித்தல்) அகிய மூன்று தார்மீகக்
கடமைகளின் படியுமும் ஓட்டளிப்பது முஸ்லிம்களின் கடமை என அவர் குறிப்பிடுகிறார்.
இஸ்லாமின் பார்வையில் ஒருவருக்கு
ஓட்டுப்போடுவது “இவர் இந்த நாட்டின் நிர்வாகப் பொறுப்பிற்கு
தகுதியானவர்” என்று சாட்சி(ஷஹாதத்) சொல்வதும். பரிந்துரைப்பதும் (ஷபாஅத்) ஆகும். அதுபோல் பொறுப்பை
ஒப்படைப்பது (வகாலத்) துமாகும்.
இந்த பொறுப்பின் அடிப்படையில் நாம் சில
அம்சங்களை கவனிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.
1. சாட்சியை நிறைவேற்றுவது
எப்படி கடமையோ அது போல ஓட்டளிப்பதும் கடமையாகும்.
தேர்தல் நாளை விடுமுறை நாள் என்று கருதி
சும்மா இருந்து விடக்கூடாது.
படித்தவர்களும் பண வசதி படைத்தவர்களும்
வரிசையில் நின்று வாக்களிப்பதை சிரம்மாக கருதுகின்றனர்.
முன்னாள் தேர்தல் கமிஷனர் ஒருத்தர் சொன்னார்:
“அடுத்த ஐந்து வருடத்திற்கு அரசியல் நடத்துவது யார் என்பதை
தீர்மாணிக்கிற சக்தியை நமது விரல் நுனிக்கு இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ளது. “சினிமா தியேட்டரில்
கூட்டம்இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமா? தடுப்பு ஊசி போடும் இடத்தில்
கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமா? ஐந்து வருடங்களைத்
தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக்காத்துக்கிடக்கலாம்..”
முஸ்லிம்களைப் பொறுத்தவரை நாட்டிற்கு சரியான
ஆட்சியாளரை அடையாளம் காட்ட சாட்சி சொல்கிறோம் என்ற நிய்யத்தோடு வரிசையில் நிற்கிற
ஒவ்வொரு நிமிடமும் சவாபிற்குரியதாகும்.
إنما الأعمال بالنيات
சும்மா முகம் கழுவினால் அது சுத்தம் மட்டுமே!. ஒளு என்ற நிய்யத்தோடு முகம் கழிவினால் சுத்தத்துடன்
நன்மையும் சேர்ந்து கிடைக்கிறது அல்லவா? அது போல!
· சிலர் “என் ஒரு ஓட்டினால் என்ன ஆகிவிடப் போகிறது
என்று நினைக்கின்றனர்.
· கள்ள ஓட்டுப்
போடுபவர்களுக்கு இந்த எண்ணம் தான் வாய்ப்பளிக்கிறது.
· நூறு பேர் இப்படி
நினைத்தால் ஒரு நல்ல வேட்பாளர் தோற்றுப் போய்விடுவார்.
· ஒரு ஓட்டின் முக்கியத்துவம்
என்ன என்பதை அரசியல் வாதி புரிந்துவைத்திருக்கிறார். அதனால் தான அவர் சந்து
பொந்துக்களில் புகுந்து கூட ஓட்டுகேட்கிறார்.
2. சாட்சியை நிறைவேற்ற எப்படி கூலி வாங்கக்
கூடாதோ அது போல ஓட்டுக்கு காசு பொருள் ஆகியவற்றை பெறக் கூடாது.
இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட்டுள்ள மிகப்
பெரிய பாதிப்பு 200 க்கும்500 க்கும் மக்கள் தங்களது ஓட்டுக்களை
விற்றுவருவது.
ஒரு வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச்
சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால்,வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான்
அதற்குப் பொறுப்பு.
3. பொய்சாட்சி சொல்லக்கூடாது என்றால் கள்ள ஓட்டு
போடக்கூடாது என்று பொருளாகும்.
பொய்சாட்சி எப்படி நீதியை
தடுமாற வைத்து விடுமோ அது போல கள்ள ஓட்டு அரசியலை தடுமாறச் செய்து விடும்.
4. ஜாதி இன மத அடிப்படையில் தப்பான வேட்பாளரை
தேர்வு செய்து விடக்கூடாது.
தங்களுடையவர் என்பதற்காக
சாட்சியில் பிறழ்தல் கூடாது என்பது இஸ்லாமின் கடுமையான் அறிவுறையாகும்.
وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ
وَالْأَقْرَبِينَ
தங்களுடையவர் என்பதற்காக தப்பானவர்களை
ஆதரிப்பது இனவெறி என்று மார்க்கம் கூறுகிறது. அது அழிவிற்கு வழி வகுக்கும்
என்றும் மார்க்கம் எச்சரிக்கிறது.
عَبْدِ اللَّهِ بْنِ
مَسْعُودٍ ِ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ
كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ - ابوداوود -4453
அசத்தியமான ஒரு காரியத்திற்காக
தன்னுடைய சமுதாயத்திற்கு உதவுகிறவர்ன் கிணற்றில் விழுப் போகிற் ஒட்டகை அதன்
வாலைப் பிடித்து இழுப்பவனை போலிருகிறான்.
عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ الشَّامِيِّ عَنْ
امْرَأَةٍ مِنْهُمْ يُقَالُ لَهَا فُسَيْلَةُ قَالَتْ سَمِعْتُ أَبِي يَقُولُ
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ
اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ قَالَ لَا
وَلَكِنْ مِنْ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ- إبن
ماجة 3939
என்வே கொலை கொள்ளை மோசடி ஆட்கடத்தல் போன்ற குற்ற வழக்கில்ஈடுபட்ட கிரிமினல்களை முஸ்லிம் புறக்கணிக்க
வேண்டும். அவர் முஸ்லிம் வேட்பாளராக இருந்தாலும் சரி.
கத்தர் பல்கலைகழகத்தின் ஷரீஆ துறை தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான
யூசுப் அல்கர்ழாவியும் தேர்தல் முறையை ஒருவகை பரிந்துறையே
என்றும் அது நீதிமன்றத்தின் முன்
சாட்சியம்அளிப்பதை ஒத்தது என்றும் கூறுகிறார்.
திருக்குர்ஆன் கூறுகிறது
يَاأَيُّهَا الَّذِينَ
آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى
أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ
فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا
وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ
خَبِيرًا(135)
مَنْ يَشْفَعْ
شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً
سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ
مُقِيتًا
நாம் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்தால்
அவர் செய்கிற நன்மைகள் ஒவ்வொன்றிலும் நமக்கும் ஒரு பங்கு கிடைக்கிறது,தீயவரை தேர்வு செய்தால்..?
தேர்தலில் ஜெயித்த பிற்கு அவர்கள் மாறிப்போனால் அதற்கு நாம்
பொறுப்பல்ல.
மந்தை தனமாக இல்லாமல் சிந்தித்து
வாக்களித்தால், யாருக்கு வாக்களித்தாலும் அது நல்ல வாக்கு
தான்.
அரபியில் تحري தஹர்ரீ என்ற ஒரு சொல்
உண்டு. தேடித்தெரிதல் என்பது அதன் பொருள்.
ஒரு புது ஊருக்கு செல்பவர் யோசிக்காமல் கொள்ளாமல் ஏதாவது ஒருதிசையைப் பார்த்து தொழுவிட்டார். பின்னர் கிப்லா வேறு என்று தெரிந்தால்அவர் திருப்பி தொழ வேண்டும்.
அதே நபர் விசாரித்து அல்லது
தேடிப்பார்த்து ஒரு திசையைப் நோக்கி தொழுதார். பிறகு அவருக்கு கிப்லா
வேறு என்று தெரிந்தால் அவர் திருப்பி தொழ வேண்டியதில்லை என்று
இஸ்லாமிய சட்டம் சொல்கிறது.
إذا
شك ولا يتحري – أن صلوته علي الفساد وإذا شك وتحري ان الصلوة علي الجواز ولو
تبين الخطأء- حاشية القدوري
சிந்தித்து, ஒன்றை நல்லதென உணர்ந்து
செயல்படுவதற்கும் சிந்திக்காமல் செயல்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
முஸ்லிம் வாக்களர் சிந்தித்து
வாக்களித்தால் அவரது வாக்கு நாட்டுக்கு நன்மையாய் அமையும். அவருக்கும்
நன்மையை தேடித்தரும். மீண்டும்
திருக்குர்ஆன் மேலும் கூறுகிறது
وَلَا
تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ
بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
இந்த வசனத்தின் அடிப்படையில் வாக்களிக்க
செல்லாமல் இருக்க கூடாது. அது சாட்சியை மறைக்கிற குற்றமாகிவிடும்,
ஒரு வழக்கில் சாட்சி
பின்வாங்கி விட்டாலோ அல்லது பிறழ்ந்த விட்டாலோ
நீதி நிலை தடுமாறிப் போய்விடுமல்லவா
அது போலவேஓட்டளிக்கும் உரிமை பெற்றவர் தனது கடமையை நிறைவேற்றாவிட்டால்
தவறான மனிதர்களிடம் சமூகத்தை
ஒப்புக் கொடுத்த பிழையை செய்தவிட்டவர்
ஆவார்.
தீயவர்கள் ஆட்சிப் பொறுப்புகு வந்து விடாமல்
தடுக்கிற கடமையை ஓட்டுப்போடுகிற வாக்காளர் நிறைவேற்றுகிறார்.
தங்களது தேர்தல் கடமையை (வாஜிபல் இன்திகாபி) நிறைவேற்றாத முஸ்லிம்கள்
தீயவர்கள் ஆட்சிக்கு வர அனுமதிக்கிறார்கள்
என்றேஅர்த்தம் என யூசுப் அல்கர்ழாவி
கூறுகிறார்.
பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
إِنَّ النَّاسَ إِذَا
رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمْ
اللَّهُ بِعِقَابٍ
مَا مِنْ قَوْمٍ
يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا ثُمَّ
لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ - أَبُو دَاوُد 3775
மக்கள் அநியாயக்காரனை பார்த்து விட்டு அவன்
கையையைப்பிடித்து தடுக்காவிட்டால் அதற்கான தண்டனையை அல்லாஹ் ஒட்டு மொத்த
சமுதாயத்திற்கும் தருவான்.
பாவங்கள் ஒரு சமூகத்தில் அதிகரித்து , அதை மாற்றும் ச்கதி அவர்களிடம் இருந்தும்
அவர்கள் அதை மாற்றாவிட்டால் அல்லாஹ்வின் த்ண்டனை அவர்களை மொத்தமாக வந்தடையும் .
தற்காலத்தில் தேர்தலைப் பற்றி ஒரு
அவநம்பிக்கை பரவிவருகிறது.யாருக்கு ஓட்டு போட்டு
என்ன பயன் ? எல்லோரும் திருட்டுப் பயல்கள் ஒருத்தனும் நமக்கு நல்லத்
பன்றதில்லை என்ற விரக்தி பலரிடமும் இருக்கிறது.
திருட்டுக் குற்றத்திற்காக ஒரு ஆசாமியை
சிறையில் அடைத்தார்கள்.அங்கேயும் அவன் சும்மா இருக்கவில்லை. சிறைக்கூடத்தின்
கம்பிகளையே திருடிவிட்டான். அவனை எந்த
செல்லில் போடுவது ஜெயிலர் யோசித்தக் கொண்டிருந்த போது ஒரு அனுபவ சாலி சார்
இவனை சட்டசபையில் போடுங்கள் என்று சொன்னாராம்.
இத்தகைய போக்கினால் அரசியலில் பங்கேற்பதையும் தேர்தலில்நிற்பதை ஓட்டுப் போடுவதையும் சிலர் தவிர்க்கிறார்கள்
இது தவறான போக்கு. இதன் விளைவு. சமூகத்திறகு தீங்குவிளைவிக்கக் கூடியது.
தேர்தலில் நாம் செய்ய வேண்டிய கடமையை நாம்
நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் கடமையை செய்வதில்லை, அல்லது அக்கிரம்ம் செய்கிறார்கள் என்றால்
அதற்கு பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள் அவர்களே!.
அடுத்தவர்கள் தமது க்டமையை செய்வதில்லை
என்பது நாம் நமது கடமையை நிறைவேற்றுவதற்கு தடையாக அமைந்து விடக்கூடாது. அது
அறிவார்த்தமும் பொறுப்புணர்ச்சியும் அல்ல.
மட்டுமல்ல நாம் ஒட்டுப் போடும் போடும்
பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டால் நல்ல மாற்றங்கள் நிகழும் வாய்ப்புண்டு அல்லவா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
كما تكونوا يولى عليكم . رواه البيهقي عن أبي إسحاق السبيعي
مرسلاً
ஓட்டுப் போடுங்கள்
ஓட்டுப் போடுவது உங்கள் கடமை
உங்கள் குடும்பத்தில் உள்ளோரை வாக்களிக்கச் செய்யுங்கள்!
உங்களது நிறுவனங்களில் பணியாற்றுவோர் வாக்களிக்கச் செல்ல அனுமதி கொடுங்கள்।
உங்களது நிறுவனங்களில் பணியாற்றுவோர் வாக்களிக்கச் செல்ல அனுமதி கொடுங்கள்।
இது உங்களது தேசீய கடமை மட்டுமல்ல சமயக் கடமையும் கூட।
முடக்குவாத்ததால் பாதிக்கப்பட்டுள்ள தேனி யை சேர்ந்த ஏ.பி.பழனிவேல் (57) என்ற முதியவர் சொல்வதைக்
கேளுங்கள்
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஆட்டோவில்சென்றாவது, தவறாமல் ஓட்டுரிமையை செலுத்தி விடுவேன். பணம்பெற்றுக்கொண்டு வாக்களிப்பது குற்றம். வாக்குரிமையை விற்க கூடாது.நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் பணத்தை அருகில் வைத்து விட்டுசென்று விடுகின்றனர். அந்த பணத்தை நான் எனது சொந்த செலவுக்குபயன்படுத்த மாட்டேன். நான் நினைக்கும் வேட்பாளருக்கே ஓட்டுபோடுவேன்.:
நாம் கடை வைத்தாலும் ரிஜ்கு தருகிறவன்
அல்லாஹ், நாம் உழவு செய்தாலும் விளைச்சலைத் தருகிறவன்
அல்லாஹ். நாம்ஓட்டுப்போட்டாலும் ஆட்சியதிகாரம்
அல்லாஹ்விற்கே உரியது. அவனே நல்ல தீய ஆட்சியாளர்களைத்தறுகிறான்.
நமக்கு நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க
பெருமானார் கற்றுத்தந்த அருமையான பிரார்த்தனை.
ربنا لا تسلط علينا من
لا يخافك فينا ولا يرحمنا
அற்புதமன் இந்தப் பிரார்த்தனை நல்ல ஆட்சியாளர்களுக்கான்
இலக்கணத்தை அற்புதமாக படம் பிடிக்கிறது.
நல்ல் ஆட்சியாளர் என்பர்
மக்கள் விச்யத்தில் இறைவனை பயபடுகிற்வராக இருக்க் வேண்டும்,
மக்கள் விச்யத்தில் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நம் விசய்த்தில் இறைவனை பயந்து கொள்ள்க் குடிய நம்
மீது அன்பு காட்டக் கூடிய ஆட்சியாளர்களை த்ந்தருளவானாகா!
அல்ஹம்துலில்லாஹ் காலத்திற்கு ஏற்ப நல்ல தகவல்கள் தருகின்றீர்கள் ஹதீஸ்களுக்கு தமிழ் தர்ஜூமா தரலாமே
ReplyDelete