வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 12, 2016

நம்மை யார் ஆளவேண்டும் ?


قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاء } الآية آل عمران26- 27

இன்ஷா அல்லாஹ் வருகிற 16 ம் தேதி திங்கட்கிழமை நம்முடைய தமிழ் நாட்டில் 15 வது சட்ட மன்றத்தின் 234 தொகுதிக்கான தேர்தல் நடை பெற இருக்கிறது.

இப்போதிருக்கிற தமிழ் நாடு சட்டமன்ற வடிவம் 1967 ல் நடை பெற்ற தேர்தலிலிருந்து உருவானதாகும்.

இதற்கு முன்பு சென்ன மாகாண சபையாக இருந்தது. அந்தக் அந்தக் கால கட்டத்தில் முன்று சட்ட மன்றத் தேர்ந்தல்கள் நடை பெற்றுள்ளன. அத்தேர்தல்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது, இந்த கால கட்டத்தில் தான் 8 ஆண்டுகள் காமராஜர் முதலமைச்சராக இருந்தார்,

அவர் 1962 ல் முதல்வர் பதவியிலிருந்து விலகி அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் தலைவர் பொறுப்பேற்று டெல்லி சென்று விட்டார். அவருக்கு பதிலாக முதல்வரான பக்தவத்சலத்திடம்காமராஜரிடமிருந்த நிர்வாகத் திறனும், மக்கள் செல்வாக்கும் இருக்கவில்ல்லை.

1964 இல் தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை சமாளிக்கத் தெரியாமல் அரசு திண்டாடியது.

காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?” என்ற கோஷத்தை அப்போதை எதிர்கட்சியாக இருந்த திமுக மக்களிடம் கொண்டு சென்றது.

எரிகிற நெருப்பில் எண்ணயூற்றுகிற கதையாக 1965 ஆம் ஆண்டு இந்தியாவின் தனி ஆட்சி மொழியாக இந்தியைக் கொண்டு வர மத்திய  அரசு முயன்றது. அதை பக்தவட்சலம் ஆதரித்தார்.  ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமென தமிழக மக்கள் கருதினர்.  மாணவர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்தி தனி ஆட்சி மொழியாவதை எதிர்த்துபோராட்டத்தில் ஈடுபட்டனர் அது அரசியலில் பேரலையை உருவாக்கியது.

இந்த்ச் சூழலில் வாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் திமுக வின் வேட்பாளரும் முன்னணி நடிகருமான எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்), நடிகர் எம். ஆர். ராதாவால் சுடப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் திமுகவுக்கு ஆதரவான அனுதாப அலையையும் ஏற்படுத்தியது 
1867 ல் தமிழ் மாநில சட்டமன்றத்திற்கு நடை பெற்ற 4 வது தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது, பக்தவட்சலம் ஸ்ரீபெரும்பூர் தொகுதியிலும் காமராஜர் விருதுநகர் தொகுதியிலும் தோற்றுப் போயினர். 179 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக மகத்தான வெற்றியை பெற்றது. இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சியை முதன் முதலில் திமுக பிடித்தது.
இந்திய அரசியல் வரலாற்றில் அது ஒரு மகத்தான புரட்சியாக கருதப்பட்டது.   
அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை என்ற  அறிஞர் அண்ணா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து விட்டு 10 அமைச்சர்களுடன் 1967 பிப்ரவரியில் முதலமைச்சராக ஆனார்.

சென்னை மாநிலம் என்பது தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அறிஞர் அண்ணா இரண்டு வருடங்களில் இறந்து போகவே கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்

1972 ல் திமுகவிலிருந்து கட்சியின் பொருளாளராக இருந்த எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட பிறகு அதிமுக என்ற கட்சி உதயமானது 1977 ல் நடைபெற்ற தேர்தலில் எம் ஜி ஆர் பெரும் வெற்றியை பெற்றுமுதலமைச்சர் ஆனார். அந்த தேர்தலில் முஸ்லிம் லீக் எம் ஜி ஆருடன் கூட்டணி வைத்திருந்தது.
1987 ல் எம் ஜி ஆர் இறந்தார் . அதன் பிறகு நடை பெற்ற சட்ட மன்ற தேர்தல்களில் திமுக் அதிமுக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனன்  
1967லிருந்து இன்று வரை சுமார் 50 ஆண்டுகளாக திமுகவும் அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றன. தேர்தல்களில் வெற்றி தோல்வி மாறி மாறி கிடைத்து வருகிறது.   

தமிழக சட்ட மன்றத்திற்கான இந்த 15 வது பொதுத் தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்பது கருத்துக் கணிப்பாளர்களால் சரியான ஒரு தீர்வுக்கு வர முடியாத நிலையில் இருக்கிறது,

2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.. ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று லயோலா கல்லூரியின்பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பு கூறியுள்ளது

திமுகவை விட அதிமுக சற்று முன்னணியில் இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி பிப்ரவரி 15 அன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தெரிவித்தது

வடநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களா டைம்ஸ் நவ் தொலைக்காட்சி  ஏப்ரல் 1 வெள்யிட்ட கருத்துக் கணிப்பில் , 130  தொகுதிகளில் அதிமுக வும் 70 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெரும் என்று அறிவித்தது.
அதே நாளில் நியூஸ் நேசச்ன தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அதிமுக 107 லிலும் திமுக 111 தொக்தியிலும் என்று சொல்லப்பட்டது.
இந்த தேர்தல் கணிப்புக்கள் அனைத்தும் காசு கொடுத்து உருவாக்கப்பட்டவை என்ற கருத்தும் பரவலாக முன் வைக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் 18 முதல் 19 வயதுடையோர் - 21.05 இலட்சம் பேரும் 20 முதல் 29 வயதுடையோர் - 1.17 கோடி பேரும் என்ன செய்யப் போகிறார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, ஏனெனில் வெற்றி தோல்வியை தீர்மாணிப்பதில் இவர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் படித்தவர்கள் நல்ல வசதியான பணிகளில் இருப்பவர்கள் ஓட்டுப்போட வரமாட்டார்கள் , ஆணால் இப்போது சமூக வலைத்தளங்கள் இணையத்தள பிரச்சாரங்களின் பயனாக இளையவர்களும் பெருவாரியாக வாக்களிக்க முன்வருவார்கள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகி யிருக்கிறது.

ஆகவே இந்த தேர்தலின் முடிவு கடந்த 50 ஆண்டு கால அரசியல் தொடருக்கு ஒரு முடிவாக அமையுமா அல்லது அதையே தொடருமாமா என்ற பெரும் கேள்வி எழ்ந்திருக்கிற நிலையில் தமிழக வாக்களர்கள் மிக அக்கறையோடும் கவலையோடும் சில விசய்ங்களை சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டிருக்கிறார்கள்,

ஏனெனில் தமிழகத்தின் அரசில் நடைமுறையும் கலாச்சாரமும் வெகுவாக மாற்றம் கண்டிருக்கிறது.

1967ல் இந்தியாவை ஆச்சரியப்பட வைத்த தமிழ் நாடு இன்று இந்திய அரசியல் அரங்கில் மிகவும் கேலிக்குரிய இடத்தை வகிக்கிறது

நாடு முழுவதிலும் ஊழலும் அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டமும் தனி நபர் துதுபாடலும் அதிகரித்திருக்கிறது என்றாலும் தமிழகத்தில் அது அறிவுடைய எவராலும் சகித்துக் கொள்ள முடியாத அளவில் வளர்ந்திருக்கீறது.
அத்தோடு தமிழகத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பெரும் பாதிப்படைந்திருக்கிறது

ஒரு பேருந்து வசதியை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் போதும் , ஒரு காலத்தில் நம்முடைய மாநிலத்தில் கழித்துக் கட்டுகிற வண்டிகளை வாங்கி சேவை நடத்திய அண்டைய மாநிலங்கள் இன்று பிரமிப்பூட்டு கிற போக்கு வரத்து வசதிகளை செய்து வருகின்றன. நமது மாநிலப் பேருந்துகள் அழுது வடிகின்றனவெளியூர் பேருந்து போக்கு வரத்து பெரும்பாலும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது,

பக்கத்து மாநிலங்களில் ஆற்று மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டு அதை உறுதியாக கடை பிடிக்கிற நிலையில் நமது மாநிலத்தில் ஆறுகள் எல்லாம் மொட்டையடிக்கப்பட்டு வருகிறது,

சமீபத்தில் ஒரு செய்தியை நீங்கள் படித்திருக்கலாம் கேரளாவிலும் கர்நாடாகவிலும் உள்ள குப்பைக் கழிவுகள் தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன,

தமிழகம் எப்படி இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட இதை விட வேறு உதாரணம் தேவையில ,

கணக்கு வழக்கின்றி அனுமதிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் மக்களை ஒரு புறம் சுரண்டிக் கொண்டிருக்க மறு புறம்  டாஸ்மாக் கடைகள் மூலமாகவும் ஏகமாக பெருகிவிட்ட இலஞ்ச நடை முறை மூலமாகவும் அரசு மக்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது,

வாக்களப் பெருங்குடி மக்களே !

மிக ஆழ்ந்து நாம் சிந்திக்கவும் கவலைப்படவும் கடமைப் பட்டிருக்கிறோம்.

ஒரு தேர்தலில் வாக்களிப்பை ஏதோ ஒரு பாஸ்ட்புட் கடையில் மசால் பூரியும் தயிர் வடையும் சாப்பிட்டு வருவதை போல சிந்தனையற்ற ஒரு செயலாக செய்து வருகிறோம்.

இந்த முறையும் நாம் அப்படி இருந்து கொண்டு விட க் கூடாது.
நமக்கு எப்படிப் பட்ட தலைவர்கள் ஆட்சியாளர்கள் வேண்டும் என்பதில் நமக்கு ஒரு எண்ணம் அல்லது உறுதி வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு செய்தி  மிக முக்கியமானது

நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி நமது ஆட்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்

كما تكونوا يولى عليكم . رواه البيهقي عن أبي إسحاق السبيعي مرسلاً

நம் நாடு எத்தகைய சிறந்த தலைவர்களை சந்தித்திருக்கீறது என்பதை கொன்ஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

காந்திஜி தஞ்சாவூரில் சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி திரட்ட வந்திருந்த போது ஒரு ஜமீந்தார் வீட்டில் தங்கியிருந்தார், ஊரிலிருந்த பெரியவர்கள் எல்லாம் தேடி வந்து நிதி கொடுத்து சென்றார். அந்த வீட்டிலிருந்த வேலைக்காரி ஒரு அரையணாவை கொண்டு வந்து ஐயா என் குழந்தைக்கு பால் வாங்க வைத்திருந்த காசு இது . இது தான் என்னிடமிருக்கிறது என்று கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட காந்தி அன்று மாலை தஞ்சையில் நடை பெற்ற நிதியளிப்புக் கூட்டத்தில் தனக்கு கிடைத்த பணத்தை எல்லாம் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து விட்டு கூட்டத்தை நோக்கி தன் கையில் வைத்திருந்த அரயணாவைக் காட்டினார், இந்த அரையணாவை நான் வைத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா நான் இதை என் இடுப்பில் முடிந்து வைத்துக் கொள்வதற்காக கேட்கிறேன். இந்த சுதந்திரப் போராட்டில் இரு ஏழைத் தான் தன் குழந்தைக்கு பால் வாங்க வைத்திருந்த காசை கொடுத்து எனது பணிக்கு உதவியிருக்கிறார் என்பதை எனக்கு இது நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்று காந்தி சொன்னார், கூட்டம் கண்ணீரோடு அதற்கு அனுமதியளித்தது,

இப்படி நமக்கு தலைவர்கள் இருந்தார்கள் என்பதை நாம் மறந்து விட்டோமா?
முதலமைச்சர் காமராஜர் இரண்டு திரையரங்குகளை திறந்து வைப்பதற்காக திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார். அப்போது ஏற்பாட்டாளர்கள் அவரிடம் ஒரு புகாரை முன்வைத்தனர், ஐய்யா நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்தும் திரையரங்கை திறக்க மாவட்ட கலெக்டர் அனுமதிக்க வில்லை என்கின்றனர், ஏன் என்று கேட்டார் காமராஜர். சுவர்கள் ஈரமாக இருப்பதால் மின்சார ஒயர்களில் கசிவு ஏற்படலாம் என வே தரமுடியாது என்கிறார் என ஒருவர் சொன்னார், அப்படியானால் சரி நான் திறந்து வைத்து விடுகிறேன், கலெக்டர் அனுமதி தந்தவுடன் நீ படம் காட்டிக் கொள் என்று திரையரங்க உரிமையாளரிடம் சொன்னார் காமராஜர், அப்போது ஒருவர் மெல்ல குரலை இழைத்த படி”  கலெக்டர் அனுமதி தராதது கூட பெரிய விசயம் இல்லைங்க ஐயா!. கமராஜர் வருகிறார் என்று சொன்னோம். அதுக்கென்ன? . நான் நினைச்சா சி எம் ஆக முடியும், உங்க காமராஜர் நினைச்சா கலெக்டராக முடியாதுன்னு அந்தக் கலெக்டர் சொன்னாரய்யா என்று கூறினார். யாருய்யா அந்த கலெக்டர் அவர் வீட்டுக்க்கு கூட்டிட்டிப் போ என்று காமராஜர் கூற . இன்னக்கு கலெக்டருக்கு வேட்டு தான் என்ற எண்ணத்தோடு கூட்டம் காமராஜைர பின் தொடர்கிறது, புரோட்டோக்கால் விதிக்கு மாறாக முதலைமைச்சர் ஒரு மாவட்டக் கலெக்டரின் வீட்டுக் சென்று காந்திருந்தார். கலெக்டர் பதறியடித்து வந்த போது அவரை கட்டியணைத்த காமரஜர் இதற்காக தானேய்ய நாங்க உங்கள படிக்க வச்சோம். ரொம்ப சந்தோஷம் , அதிகாரிகள் இப்படித்தான் இருக்கனும் என்று சொன்னார். குடும்பத்தினர் தவறாக எதுவும் நினைத்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்து அங்கே தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு காமராஜர் புறப்பட்டார்.  

இப்படியு நமக்கு தலைவர்கள் இருந்தார்கள் என்பதை நாம் மறந்து விட்டோமா?

(இன்று கமிஷ்ன் பெற்றுத்தராத அதிகாரியை தற்கொலைக்கு தூண்டுகிற அமைச்சர்களை அல்லவா நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம்,)

கடந்த வாரத்தில் திஹிந்து பத்ரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது
தில்லியில் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவில்லத்தில், ஒரு கண்ணாடிப் பேழைக்குள் விரலளவு கொண்ட சின்ன டம்ளர் ஒன்றை வைத்திருக்கிறார்கள்
விரலளவே கொண்ட அந்த பொம்மை டம்ளருக்குப் பின் ஒரு  முக்கியச் செய்தி இருக்கிறது,
து சாஸ்திரியிடம் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற அவருடைய மனைவி லலிதா வாங்கிய டம்ளர்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் சாஸ்திரி சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே ஏழ்மையான பின்னணியைக் கொண்ட அவருடைய குடும்பத்தை சாஸ்திரியின் சிறைவாசம் மேலும் வறுமையில் தள்ளியது. சிறையிலிருந்த சாஸ்திரியைப் பார்க்க லலிதா சென்றபோது அவர் கடுமையாக மெலிந்திருந்தார். சாஸ்திரி சிறையிலிருந்தபோது குடும்பச் சுமையை ஏற்றிருந்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தார் லலிதா. தன் உடல்நலத்தை அவர் எப்போதுமே பொருட்படுத்த மாட்டார் என்பதால், ‘எனக்காக தினமும் ஒரு டம்ளர் பால் மட்டுமாவது நீ சேர்த்துக்கொள்ள வேண்டும்என்று லலிதாவிடம் உறுதிகேட்டார் சாஸ்திரி. லலிதா உறுதிகொடுத்தார். தினமும் அப்படிப் பால் குடிக்கும் அளவுக்கு வீட்டின் நிதி நிலைமை இல்லை. அதேசமயம், கணவருக்குக் கொடுத்த உறுதியையும் மீறக் கூடாது என்று நினைத்தவர் குழந்தைகள் விளையாட்டுக்குப் பயன்படுத்தும் விரலளவு டம்ளரை வாங்கினார். வீட்டுக்குப் பிள்ளைகளுக்கு டீ போட வாங்கும் கொஞ்சம் பாலில், தன் பங்கை இதில் நிரப்பிக் குடித்தார். அந்த டம்ளரே து

சாஸ்திரியைப் பற்றிய இன்னொரு குறிப்பும் நம் கண்களில் கசிவை ஏற்படுத்தக் கூடியது.

ஒரு முறை காஷ்மீரில் கலவரம் ஏற்பட்ட போது நேரில் சென்று நிலமையை ஆராய்ந்து வருமாறு  பிரதார்  நேரு சாஸ்திரியிடம் கூறினார், அப்போது அதற்கு வேறு ஒருவரை அனுப்புமாறு சாஸ்திரி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?

என்னிடம் உல்லன் கோட் இல்லை
நேரு தனது ஒரு கோட்டை இலவசமாக சாஸ்திரிக்கு கொடுத்தார்நேரு உயரமானவர். சாஸ்திரி குள்ளமானவர், அந்தக் கோட் சாஸ்திரியின் கணுக்கால்  வரை இருந்தது. தயக்கமாக் அந்த கோட்டை பெற்றுக் கொண்டு காஷ்மீருக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டுக் வந்த போது கூட இருந்த நண்பர்கள் அந்தக் கோட்டு அவருக்கு பொருந்தாது என்று கூறினார்கள், அவசர அவசரமாக டைலரை வரவழைத்து சாஸ்திரி ஒரு கோட் தைத்துக் கொண்டார், அந்த ஒரு கோட்டு தான் அவர் மத்திய அமைச்சராக இருந்த போது தைத்தது, அதை அணிந்து தான் அவர் பிரதரான பிறகு தாஷ்கண்டு சென்றார், அங்கேயே திடீர் என அவர் இறந்தார்.

சாஸ்திரி பிரதமராக இருந்த போது அந்த அதிகாரத்தின் சுவை அவரது குடும்பத்தினர் துளியும் அனுபவிக்க வில்லை,
அவரது மகன் அனில் சாஸ்திரி தில்லிப் பல்கலைக் கழகத்தில் செயிண்ட் ஸ்டீபன் பல்கலைக் கழகத்தில் கட்டணம் செலுத்த நீண்ட கியூவில் நின்றால், வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார், பல்கலைக் கழக ஊழியர்கள் தண்ணீர் தொளித்து மயக்கம் தெளித்து அவரது விலாசத்தை விசாரித்த போது அவர் விலாசம் சென்னார். தந்தை பெயர் லால்பகதூர் சாஸ்திர்நம்பர் 1 மோதிலால் மார்க், என்ற விலாசத்தை எழுதிக் கொண்ட போதுதான் அந்தக் கூட்டத்திற்கு அவர் பிரதமரின் மகன் என்று தெரிந்தது, அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்,   

நமக்கு இப்படிப்பட்ட குடும்பங்களை கொண்ட தலைவர்கள் இருந்தார்கள் என்பதை நாம் மறந்து விட்டோமா?

காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்
·         1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
·         1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
·         1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளாமஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
·         52 லிருந்து 71 வரை சுமார் 20 வருடங்கள்  இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காயிதே மில்லத் தன்னுடை பதவிக்காலத்தில் தன்னுடன் எவரையும் அழைத்துச் செல்ல மாட்டார் என அவருடை பெயரால் வழங்கப் பட்ட விருதைப் பெற்றுக் கொண்டு 2016 மார்ச் மாதம் நடை பெற்ற கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா கூறினார். அத்தோடு தனக்கு வழங்கப்பட்ட இரண்டரை இலட்சம் விருதுத் தொகையை காயிதே மில்லத் பெயரிலான கல்விப்பணிக்கு வழங்கினார்,

நாம் சுயநலமற்ற இத்தகைய தலைவர்களை பார்த்ததில்லையா?

நேரு இந்தியாவின் முதல் பிரதமர் 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்பெரும் செல்வந்தக் குடும்பத்தின் வாரிசு.
காந்தி இலண்டனில் படிக்கிற போது மூன்று வேலை உணவுக்கு ஆறு பைசா செலவளிக்க சிரமப்பட்டார். வல்லபாய் பட்டேன் இலண்டனில் நடந்து சென்று படித்தார். நேருவோ ஆண்டுக்கு 800 பவுண்டு செலவழித்து அங்கேயே ஒரு இளவரைச் போல வாழ்ந்தார்
அந்த நேருவிக்காக அவரது தந்தை மோதிலால் நேரு அன்றைய அலகாபாத்தில் வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கிற பகுதியில் மாபெரும் ஒரு மாளிகையை விலைக்கு வாங்கி, அதில் மின்சார வசதி ஏற்படுத்திநீச்சல் குளம் பரந்த தோட்டம் என அனைத்தையும் அமைத்து சைவ அசைவ ஐரோப்பிய உணவு வகைகளுக்காக மூன்று சமையல் கூடங்களை அமைத்து அந்த சமையல் கூடங்களில் இருப்பவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்ற நிபந்தனையிட்டு பணியாட்கள் அமர்த்திக் கொடுத்தார். அன்றைய காலத்தில் பிரான்ஸிலிருந்து இறக்குமதியான் காரைப் பயன்படுத்திய ஒரே குடும்பம் நேருவின் குடும்பம்
இத்தைகைய பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்த நேரு அலகாபாத்தின் அந்த அனந்த பவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தது,
செல்வத்தை வளர்ப்பதில் அக்கறை செலுத்தாமல் நாட்டு நலப்பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டது,
ஒரு முறை காங்கிரஸ் செய்ற்குழு கூட்டத்தில் தன்னுடைய நண்பர் நிஜலிங்கப்பாவிடம் கிழிந்த இடத்தில் தையல் போட்டிருந்த சட்டையை காட்டிய  நேரு பிரதம்ரின் சம்பளத்தில் என் செலவு போக மிஞ்சுவது 9 ரூபாய் தான் என்று சொன்னார்.
தனது செல்வச் செழிப்பை நாட்டுக்கு அர்ப்பணித்தவர் ஆட்சிக்கு வந்த பிறகு தன் சொத்துக்களை வளர்ந்த்துக் கொண்டாரில்லை.
காஷ்மீர் விசயத்தில் நேரு கையாண்ட நடை முறையை பட்டேல் எதிர்த்தார், அப்போது காங்கிரஸின் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பட்டேலுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டது, பட்டேல் தயார் என்றால் அடுத்து அவர்தான் பிரதமர் என சிலர் வல்ல பாய் பட்டேலிடம் சொன்னார்கள், அப்போது பட்டேல் சொன்னார்.
கட்சி என்னுடன் இருக்கிறது, மக்கள் நேருவுடன் அல்லவா இருக்கிறார்கள்
மக்களிடம் இந்த அளவிலா அன்பை பெற்ற தலைவர்கள் வெகு சாதரணமாக நம்முடன் வாழ்ந்தார்கள்  என்பதை நாம் மறந்து விட்டோமா?

அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் குடியரசுத்ட் தலைவராக இருந்த போது தனது மூத்த சகோதரரையும் அவரது குடும்பத்தையும் ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடன் இருக்க தன்னுடை சொந்த செலவில் அழைத்து வருவார்,

இத்தகைய பொதுவாழ்க்கை பண்புகள் பொய்யாய் பழங்கதையாய் கனவாய் போய்விட்டது என் நாம் புலம்புகிறோம்.

நமது புலம்பல்கள் அர்த்தமற்றவை – பொறுப்பற்றைவை

இத்தகைய தலைவர்கள் இனியும் நமக்கு வேண்டும் – அப்போதுதான் நாடு நல்லாகும் என்ற சிந்தனை நமக்குள் வலுக்கும் என்றால் நிச்சயம் இத்தகைய தலைவர்கள் நமக்கு கிடைப்பார்கள். இப்போது இருக்கிற தலைவர்களே நல்லவர்களாக மாறுவார்கள், மாற வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்க் ஏற்படும்.

அழுத்தமாக ஒரு செய்தியை நினைவூட்டுகிறேன்,
  
இந்த சட்ட மன்றத் தேர்தலில் அனைத்து அரசிய்ல கட்சிகளும் யூனிபார்மாக அறிவித்த ஒரு திட்டம் மதுவிலக்கை அமுல் படுத்தும் திட்டம்

எந்தக் கட்சியும் இந்த திட்டத்தை பேசாமல் இல்லை.

அரசியல் கட்சிகள் அனைத்தும் புனிதமாகிவிட்டது என்பதல்ல இதற்கு அர்த்தம்.

தேசம் முழுவதை ஆட்சி செய்கிற பஜக் கட்சி நாடு முழுக்க மது விலக்கை கொண்டு வருவதைப் பற்றி பேசாமல் தமிழ் நாட்டில் மது விலக்கை கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது,

இந்த திட்டத்தைப் பற்றி கூறாமல் ஒரு தேர்தல் அறிக்கை தயாரித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது என்ற நிர்பந்தத்தை  தமிழக மக்கள்தான் ஏற்படுத்தினார்கள்,

மதுவுக்கு எதிரான சிந்தனை எல்லா மட்டத்திலும் மேலோங்கி நின்றதே அரசியல் கட்சிகளின் இந்த முடிவுக்கு காரணம்  

சுமார் 33 ஆயிரம் கோடி மாத வருவாயை சுலபமாக பெற்றுத் தருகிற ஒரு திட்டத்தை எந்த அரசும் இலேசில் விட்டு விட முடியாது,

இன்றைய அரசியல் வாதிகளுக்கு மக்களின் மீதான அக்கறையின் வெளிப்பாடு இது என்று சொன்னால் சின்னப் பிள்ளை கூட சிரிக்கும்.

இத்தகைய ஒரு கடுமையான முடிவை – சாராயம் தயாரித்து விற்ற்கு கொண்டிருக்கிற கம்பெனிகளின் உரிமையாளர்கள் இருக்கிற கட்சிகளே அறிவிக்கிறது என்றால் அதற்கு காரணம் மக்களிடம் ஏற்பட்டுள்ள தீர்மாணமேயேயாகும்.

அதே போல் இந்த தேர்தலில் ஒரிரு இலவசங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பெரும்பாலும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவிப்பதை கட்சிகள் நிறுத்தி விட்டன,

இதற்கும் காரணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வேயேகும்
இந்த விழிப்புணர்வு இந்த தேர்தலி வாக்களிக்கிற சமயத்தில் இன்னும் அழுத்தமாக வரவேண்டும்.

இன்னும் பல விசயங்களில் அந்த அழுத்தம் எழு வேண்டும்,

·         மக்களை ஜாதி மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி விரோத உணார்வை வளர்க்கிற எதையும் எவரையும் ஏற்கமாட்டோம்.
·         ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நெருக்கமானவர்களின் மறைமுக அதிகாரத்தை ஏற்க மாட்டோம்.
குறிப்பாக
·         ஊழலை  எந்த வடிவத்திலும் ஏற்க மாட்டோம்

என்ற கொள்கைப் பூர்வமான அழுத்தம் நம்மிடம் வரவேண்டும். இது விசயத்தில் போராட்டங்கள் தொடங்க வேண்டும்.

அது வரும் என்றால் இன்று மதுவிலக்கை அறிவித்த அரசியல் கட்சிகள் நிச்சயமாக நாளையாவது இது விசயத்தில் தம மனமாற்றத்தை வெளியிடுவார்கள்

இலஞ்ச ஊழல் நமது வாழ்வை பெரும் பாட்டுக்கு உட்படுத்தி விட்டது,

சென்னையிலிருந்து ஒரு நண்பர் கூறினார்
வீட்டில் ஒரு சின்ன ஆல்ட்ரேசன் வேலை – ஆர்சியில் விரிசல் ஏற்பட்டு மழை நீர் கசிகிறது,

அதை சரி செய்வதற்காக வீட்டு வாசலில் கொஞ்சம் மணல் கொண்டு வந்து கொட்டப்பட்டது.
உடனே கவுன்சிலர் வந்து விட்டான், எப்படித் தேன் அவன் மூக்கு வேர்த்ததோ தெரியலே.

கட்டிட வேலை செய்தால் அவனுக்கு காசு கொடுத்தாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது,

எல்லோரும் ரவுடிப்பயல்களாக இருக்கிறார்கள், அரசாங்கத்தை நம்பி பாதுகாப்பு கேட்க முடியலே , மொத்த அரசும் இலஞ்சத்தில் குளித்துக் கொண்டிருக்கிறது அவனுக்கு காசு கொடுக்காமல் ஒளுகும் என் வீட்டை சரி செய்ய முடியவில்லை

சென்னையை சேர்ந்த இன்னொரு நண்பர் சொல்கிறார்,
வீடு கட்டு எல்லா வேலைகளை முறைப்படி செய்து விட்டு குடி நீர் கனெக்சனுக்காக மாநகராட்சி அலுவலகத்துக் சென்றேன் . எல்லா பேப்பரும் முறைப்படி இருந்தன. அனுமதி தர வேண்டிய அந்த அதிகாரி கவுன்சிலரை பார்த்து விட்டு வாங்க என்றார், எல்லாத்தையும் நான் முடிச்சுத் தர்ரேன் 65 ஆயிரம் கொடுங்கள் என்று அவன் கேட்கிறான்.. நியாயமாக கட்ட வேண்டிய அனைத்து தொகைகளையும் கட்டிய பிறகு 65 ஆயிரத்தை இலஞ்சமாக கொடுத்த பிறகு தான் எனக்கு கனக்சென் கிடைத்தது என்கிறார்

புலி யை ஆங்கிலத்தில் Tiger டைகர் என்று  சொல்வார்கள்,  அதே புலி மனித இரத்ததை சுவைத்து விட்டால் அதன் பெயர் மாறிவிடும்.  அதை Man eater மேன்ஈட்டர் ஆட்கொல்லி என்று சொல்வார்கள்.
புலி நமது நாட்டின் தேசிய விலங்கு. அது வாழும் காடுகள் மதிப்பு மிக்கவை, அதை பாதுகாக்கவும் பராமரிக்கவும் அரசு ஏராளாமக செலவழிக்கிறது. அதை கொன்று நகங்கள் தோல்களை திருடுவதை கடும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது.
ஆயினும் ஒரு புலி மேன் ஈட்டராக மாறி விட்டால் அதை சுட்டுக்கொல்ல சட்டம் அனுமதிக்கிறது.
நமது நாட்டில் ஆட்கொல்லி புலியை விட அதிக ஆபத்து மிக்கதாக இலஞ்சம் மாறிவிட்டது.
வக்பு வாரியத்தில் ஊழல் செய்கிற அதிகாரிகளைப் பற்றிப் பேசுகிற போது மர்ஹும் மறுமலர்ச்சி யூசுப் சாஹிப் அவர்களை மேன் ஈட்டரோடு ஒப்பிட்டுச் சொன்னார்.  ஊழல் செய்து பழகியவர்கள் அல்லாஹ்வின் சொத்து என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிடவே செய்வார்கள் என்றார் அவர்.)

இலஞ்சத்தால்
·         மக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற முடியாமல் ஒவ்வொரு துறையிலும் தவிக்கிறார்கள்.
·         சமூகத்திற்கெதிராக எந்த மிகப்பெரிய குற்றம் செய்தவனும் இலஞ்சத்தின் காரணமாக தப்பித்துக் கொள்கிறான். இந்திய மக்களின் வரிப்பணம் தொள்ளாயிரம் கோடியை சுருட்டி மல்லையாவை இங்கிலாந்திற்கு தப்ப விட்ட தன் பின்னணியில் இலஞ்சத்தின் விளையாட்டு இருக்கிறது. நீதிமன்றங்கள் இலஞ்சத்தில் திழைத்து நிற்கின்றன
·         நாட்டின் இயறகை வளங்களை சுரண்டப்படுகிறது,
·         சொந்த நாட்டின் வியாபாரிகளை தொழிலாளர்களை பரம ஏழைகளாக மாற்றும் திட்டங்களில் இலஞ்சம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
·         நாட்டின் பாதுகாபை கேள்விக்குரியாகி வருகிறது, ஆயுதம் மற்றும் தளவாடங்கள் வாங்குவதில் இரக்சியங்களை கசியவிடுவதில் இலஞ்சம் கோலோச்சுகிறது.
ஒரு காலத்தில் சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்து தருவதற்கு காசு கேட்டார்கள். இப்போது சட்டப்படியான வேலையை செய்வதற்கே காசு கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்ரிகளில் தொடங்கி ஊராட்சி அலுவலகங்களில் தொடர்ந்து நீதிமன்றங்கள் வரை அங்கிங்கெனாதபடி இலஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.

பர்த் சர்ட்பிகேட்டிலிருந்து வாரிசு சான்றிதழ் வரை எதுவும் உரிய கட்டணத்தில் கிடைப்பதில்லை

முறைப்படி எம்ப்ளாய்மெண்ட் வரிசையில் காத்திருந்து கிடைத்த கண்டக்டெர் வேலைக்கான அனுமதியை வாங்குவதற்கு ஐந்து இலட்சம் – அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி பெற 10  இலட்சம் பல்கலைக் கழக துணை வேந்தராக 10 கோடி எனும் அளவில் இலஞ்சம் அளவளவாக ஆதிக்கம் செலுத்துகிறது,

இந்த நிலை தொடருமானால் இனி ஒரு ஹோட்டலில் சென்று சாப்பிடுவதற்கு  முன்னாள் ஆளும் கட்சியை சேர்ந்தவருக்கு கப்பம் தனியாக கப்பம் கட்டு விட்டுத்தான் செல்ல வேண்டு ம் என்ற நிலை வரலாம்.

நான்கு மாடி வீடு கட்டினீர்கள் என்றால் ஒரு மாடியை ஆளும்கட்டிக் காரனுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலை வரலாம்.

உங்களது தோட்டத்தின் ஒரு பகுதியை தொகுதி எம் எல் ஏவுக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற நிலை வரலாம்.

இது கற்பனையான எச்சரிக்கை என்று நினைக்காதீர்கள், டாஸ்மாக் கடைகள் சமூகத்தில் என்ன சீரழிவை ஏற்படுத்தியதோ அதை விட அதிகமான சீரழிவையும் சிரமத்தை இலஞ்சம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இது தடுக்க முடியாதது அல்ல, மதுவுக்கு எதிராக அரசியல் வாதிகளையே தீர்மாணம் போட வைத்தது போல மற்ற சீர்கேடுகளுக்கு எதிராகவும் அவர்களையே தீர்மாணம் போட வைக்க முடியும் அதற்கு மக்கள் சக்தி ஒரு அழுத்தமான தீர்மாணத்திற்கு வரவேண்டும், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

நிறைவாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன், மதுவுக்கு எதிராக ஒன்று திரண்டது போல இந்த தேர்தலில் ஊழலுக்கு எதிரான ஒரு ஒரு முகப்பட்ட சிந்தனையில் நமது வாக்குகள் அமையட்டும்! 

கட்சி இயக்கம் அமைப்பு என்ற மோகத்தில் நாட்டு நலனை அடகு வைக்கிற பாதகத்தை தவிர்த்து விடுவோம். 

அதே போல வரட்டு சிந்தத்தில் ஓட்டுக்களை வீணடித்தும் விடாதீர்கள். لا تسرفوا என்ற இறைவாக்கு ஓட்டுக்கும் பெருந்தும். 

நமக்கு எத்தகை தலைவர்கள் கிடைத்திருந்தார்கள். எது மாதிரி தலைவர்கள் நமக்கு வேண்டும் என்பதில் நமது நிய்யத் அழுத்தமாக இருக்குமானால் வேட்பாளைர்களை தேர்ந்தெடுப்பதிலும். நல்லவர்களை வெற்றி பெறச்செய்வதிலும் அல்லாஹ் நமக்கு துணை நிற்பான்,  

நோயுக்கு நிவாரணம் தருகிறவன் அல்லாஹ்வே,
மாத்திரைகள் அதற்கு ஒரு காரணம் அவ்வளவே!
ஆட்சியாளர்களை தேர்வு செய்பவனும் அல்லாஹ்வே!
தேர்தல் அதற்கு காரணம் அவ்வளவே!

நமது கடமையை நாம் சரியாக செய்து விட்டு அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம்.!
اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا




5 comments:

  1. அல்லாஹு அக்பர் மாஷா அல்லாஹ் மிக மிக மிக அருமை. ரப்புல் ஆலமீன் தங்களின் வாழ்விலும் சிந்தனையிலும் பரகத் செய்வானாக.
    தாங்கள் இப்போது என் முன்னாள் இருந்தால் தங்களின் நெற்றியிலும் வளகரத்திலும் முத்தமிட்டுருப்பேன் ஹழ்ரத் பாரகல்லாஹ்.

    ReplyDelete
  2. Anonymous10:11 PM

    அல்ஹம்துலில்லாஹ்.
    மிக அருமையான பதிவு.
    ஜஸாகல்லாஹு கைரா.

    ReplyDelete
  3. Anonymous10:12 PM

    @புதியவன்@, [13.05.16 07:16]
    அல்ஹம்துலில்லாஹ்.
    மிக அருமையான பதிவு.
    ஜஸாகல்லாஹு கைரா.

    K.s. மஸ்லஹி மஸ்லஹி, [13.05.16 08:26]
    இன்றைய காலதிற்குதேவையான நல்ல சிந்தனையுள்ள பதிவு ஜஸாகல்லாஹுகைர.

    ReplyDelete
  4. Anonymous10:13 PM

    @புதியவன்@, [13.05.16 07:16]
    அல்ஹம்துலில்லாஹ்.
    மிக அருமையான பதிவு.
    ஜஸாகல்லாஹு கைரா.

    K.s. மஸ்லஹி மஸ்லஹி, [13.05.16 08:26]
    இன்றைய காலதிற்குதேவையான நல்ல சிந்தனையுள்ள பதிவு ஜஸாகல்லாஹுகைர.

    Abbas Riyazi, [13.05.16 09:28]
    சத்தியமாக தாங்கள் வாழும் வாஞ்ஞானி

    ReplyDelete
  5. Anonymous10:14 PM

    😃👏👏👏மாஷாஅல்லாஹ்
    உலமாக்கள் மிகுந்த திருப்தியோடு துஆ செய்கிறார்கள் அட்மின் ஹஜ்ரத்திற்கு ஜஜாகல்லாஹ்
    உலமாக்கள் பொருந்திகககொண்டது போல அல்லாஹீம் அவனின் தூதர் ஸல்லல்லாஹீ அலைஹி வஸ்ஸல்லமும் இருவர்களும் பொருந்தி கொள்வார்களாக! ஆமீன்

    ReplyDelete