வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 23, 2026

மக்களாட்சியா இது?

 

நமது நாட்டிலுள்ளா படிக்கும் இளைஞர்களுக்கு உள்ள ஒரு பெரிய கனவு டாக்டர் ஆக வேண்டும் என்பது.

பணக்கார்ர்கள் எத்தனை கோடி கொடுத்தாவது இடம் பிடித்து விட நினைக்கிற வாய்ப்பு அது.

ஆனால் மக்களின் உயிரோடு விளையாடுகிற அந்த வேலையை எளிதில் கொடுத்து விட முடியாது என்பதனால் 12 வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறூகிவர்களுக்கு தர வரிசைப் படி மருத்துவ கல்வி வாய்ப்புக்கல் வழங்கப்பட்டன.

இதில் நமது தமிழ் நாடு முன்னணியில் இருந்த்து.

மத்திய அரசு நீட் தேர்வு என்கிற மிக கடுமையான ஒரு நடைமுறையை இதில் கொண்டு வந்து புகுத்தியது. இதனால் 12 வகுப்பு தேர்வில் மிக ச் சிறப்பான் மதிப்ப் பெண் பெற்றவர்கள் கூட மருத்துவ கல்வியை பெற முடியவில்லை.

வாழ்நாள் முழுவதும் தேக்கி வைத்திருந்த இந்த ஆசை நிறைவேற வில்லை என்ற கவலையில் பல இளைஞர்களும் இளம் பெண்களும் தற்கொலை செய்து கொண்ட்தை நாம் அறிவோம்.

நீட் தேவி நடை பெறும் வளாகத்தின் வாசலில் பெண்களின் கம்மலை கூட கழற்றி பரிசோதிப்பார்கள்,

இந்த அளவு பாதுகாப்பு கெடுபிடிகல் நிறைந்த நீட் தேர்வின் வினா தாள்கள் சமிப சில ஆண்டுகளாக கசிந்து வந்தன .

இதனால கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வையே அரசு ரத்து செய்ய வேண்டி வந்த்து. இது சாமாணிய விசயமல்ல இந்தியாவின் இளம் சமுதாயத்தின் வாழ்க்கையோடு விளையாடு ஒரு விவகாரம்.

எனவே இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான பூச்சி கட்சியின் தில்லியில் பெரும் போராட்ட்த்தில் இறங்கியுள்ளனர்.

நியாயமாக அவர்கள் மத்திய அரசை அணுகி அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்கான கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளனர்.

இது இப்போது இந்திய மக்களின் கோரிக்கையாக உருவெதடுத்துள்ளது.

இதற்கு நியாயமாக பதில் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. வெறூ வாய் வார்த்தைகள் அல்ல; சரியான நடவடிக்கை வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கல்.

மத்திய அரசு இந்த போரட்ட்த்தை முறை கேடாக ஒடுக்க நினைத்து போராட்டக் கார்ர்கள் மீது கடுமையான தடி யடிப் பிரயோகத்தை நடத்தில் பல இளைஞர்களை காயப்படுத்தியுள்ளது.

போராட்டக் கார்ர்கள் மீது காவல் துறை ஏவி விட்ட கடுமையான வன்முறையை தொலைக்காட்சி வழியே பார்த்தவர்கள் கொதிப்படையாமல் இருக்க முடியாது.

காவல் துறையின் போர்வையில் குண்டர்கள் இறக்க் விடப்பட்டு அடித்து விரட்டப் பட்டிருக்கிறார்கள். இதை யும் மிகுந்த வன்மத்தோடு அவர்கள் செய்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் நம்முடிய நாட்டில் உண்மையில் மக்களுக்கான ஒரு அரசு – குடிமக்களின் அரசு நடைபெறூகிறதா என்பது ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

சர்வதேச ஊடகங்களும் இந்த அடக்குமூறையை மிக வியப்பாக பார்க்கிறார்கள்.

இப்போது இந்திய அளவில் மிகப் பெரிய கேள்வி என்ன வென்றால்..  

இந்தியாவின்  குடியரசு தத்துவம் பாதுகாப்பாக இருக்கிறதா ?  என்பதே

குடியரசு என்றால் நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று பொருள். ஆனால் இங்கு இப்போது சிறுபான்மையின மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் இந்து மத தீவிரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி தங்களது அடிப்படை உரிமைகளை நாட்டின் பல இடங்களிலும் இழந்து வருகிறார்கள். காணும் இடந்தோறும் கோயில்கள் கட்டப்படுகின்றன. ஆனால் பள்ளிவாசல்களும் தேவாலங்களும் செயல்பட பலத்த எதிர்ப்பு காட்டப்படுகிறது. நீதிமன்றங்களும் காவல்துறையும் கூட அரசியல் சாசணத்தின் தூய வழியில் நடப்பதில்லை. பள்ளிவாசலுக்கான அனுமதியை மறுக்கிறார்கள். வேறு இடத்தில் கட்டிக் கொள்ளுங்கள் என்று மிகவும் கூலாக காவல் அதிகாரி கூறுவார். வேறு இடம் எங்கே என்று கேட்டால் பதிலே இருக்காது.

பணக்கார்ர்களுக்கு சலுகை காட்டப்படுகிறது. ஏழை எளிய மக்கள் மேலும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். விலை வாசியும், வரிகளும் வானத்தை தொடுமளவு உயர்ந்து நிற்கின்றன. ஆனால் பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி தரப்படுகிறது. சில நிறுவங்களின் கைப்பிடிக்குள் நாடு சென்று கொண்டிருக்கிறது.

மக்களின் கடைசி தேடலாக இருக்கிற நீதி மன்றங்கள் சட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்கவேண்டு, ஆனால் இப்போது அவை சனாதன தர்மத்திற்கு மட்டுமே செங்கோல் செய்கின்றவையாக மாறிவருகின்றன.

சமீபத்திய ஒரு தீர்ப்பை கவனித்தாலே போதுமானது.

2020இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து குஜராத்திற்கு 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக 22 வயதான முகமது அமீன் என்ற நபரை குஜராத் காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை குஜராத்தின் தாபி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத் சந்திராமுகமது அமீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன.

நீதிபதி சமீர் தனது தீர்ப்பில், "பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். பசுக்கள் கவலையுடன் இருக்கும் இடத்தில் செல்வங்கள் அழிந்து போகும். பசு ஒரு விலங்கு அல்லஅது ஒரு தாய்.

இந்த உலகத்திற்கே பசு முக்கியமானது. பசுவின் ரத்தம் பூமியில் சிந்தக்கூடாது. அவ்வாறு பசுவின் ரத்தம் பூமியில் என்றைக்கு சிந்தாமல் இருக்கிறதோஅன்றுதான் இந்த உலகம் செழிப்பாக இருக்கும்உலகில் உள்ள வேறு எந்த ஜீவராசியும் பசுவை போன்று நன்றியுணர்வு கொண்டது இல்லை. எனவேஅத்தகைய நன்றியுணர்வு கொண்ட பசுக்களுக்கு நாம் மிகவும் மதிப்பளிக்க வேண்டும்.

பொருளாதார ரீதியாகவும்அறிவியல் ரீதியாகவும் பசுக்கள் பலன் கொடுக்க கூடியவை ஆகும். உதாரணமாகஒருவர் பசுவை துன்புறுத்தினால் அவரது சொத்துகள் அனைத்தும் அழிந்துபோகும்.

 பசு சாணத்தை வீடுகளில் பூசினால் அணு கதிர் வீச்சு பாதிக்காது என்பது அறிவியல் உண்மை. பசுவின் கோமியம் தீராத நோய்களையும் தீர்க்கும். என்றைக்கு பூமியில் பசுவின் ரத்தம் சிந்தாமல் இருக்கிறதோ அன்று தான் உலகின் அனைத்து பிரச்னைகளும் தீரும்” என்று தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

ஒரு மனிதனுக்கு ஆயுள் தண்டனையும் ஐந்து இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கிற ஒரு நீதிபதி சட்டம் அரசியல் சாசனம் என்று எதைப்பற்றியாவது கவலை கொண்டுள்ளாரா என்பதை கவனிக்க வேண்டும்.

நமது மாபெரும் குடியரசு நாட்டில் குறிப்பிட்ட ஒரு உயர் சாதியினரை கோட்பாடு எப்படி கோலோச்சுகிறது பார்த்தீர்களா ?

அதனால் தான் நமது குடியரசின் தத்துவத்தை பாதுகாப்பதற்காக நாம் ஒரு விழா எடுக்க வேண்டும்.. ஒரு பெரும் முயற்சி செய்ய வேண்டும் என்று நமது நாட்டின் ஜனநாயக சக்திகள் கூறுகின்றன.

எல்லாம் வல்ல இறைவன் நமது நாட்டின் இறையாண்மையை, குடியரசை,கியாமத் நாள் வரை பாதுகாப்பானாக! நாட்டின் பன்முகத்தன்மைக்கும் மக்களின் சமத்துவ வாழ்விற்கும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருக்கிற சக்திகளை முறியடிப்பானாக. முனை மழுங்க்ச் செய்வானாக!

குடியரசு என்பது வெறும் எழுத்துக்களாலும் விதிகளாலும் கோர்க்கப்பட்ட புத்தகம் அல்ல. அது மனித வரலாற்றின் மகத்தான ஒரு தர்மம். பெரும் சத்தியம்.

அந்த சத்தியத்திற்கு சில நேரங்களில் சோதனைகள் வரலாம். சட்டமும் நீதியும் சில காலம் வளைக்கப்படலாம். ஆனால் அது நிலைக்காது.

திருக்குர் உறுதியளிக்கிறது.

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا (81)

 

பெருமானார் (ஸல்) அவர்களை மக்கவிலிருந்து விரட்டி விட மக்காவின் எதிரிகள் முயற்சி செய்த போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.

இன்னொரு கருத்தின் படி கஃபாவைச் சுற்றி 360 சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் மனம் வருந்திய போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.

 إن الباطل كان زهوقا என்பதன் பொருள் . அநீதி ஒரு போதும் நிலைக்காது என்பதாகும்.

குர்துபி கூறுகிறார்.

إن الباطل كان زهوقا  أي لا بقاء له والحق الذي يثبت

 தங்களை நபி என்று சொல்லிக் கொண்டவர்கள் பரிதாபமாக அழிந்தார்கள். மிர்சா குலாமைப் போல

தங்களை சர்வாதிகளாக பிரகனப்படுத்திக் கொண்டவர்கள் அழிந்தார்கள் பிர்அவனை போல. ஹிட்ல்ர் முசோலியனைப் போல.

உலகின் மகத்தான சீர்திருத்தங்களுக்கு காரணமான இஸ்லாமிய் மார்க்கத்தை, “இஸ்லாம் ஏ ஹாண்டிகேப்ட் ரிலீஜன்இஸ்லாம் ஒரு  நொண்டி மார்க்கம் என்று விமர்ச்சித்தார் . பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீன் . இன்று அவர் முடமாகிக் கிடக்கிறார்.

அநீதி இழைத்தவர்கள் ஒரு போதும் நிம்மதியாக இருந்து விட முடியாது.

எல்லாம் வல்ல இறைவன் நமது நாட்டை அதன் வளத்தை செழிப்பை சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பானாக! குடியரசு தத்துவத்தை நிலை நாட்டியருள்வானாக

 

No comments:

Post a Comment