வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 02, 2016

உற்சாகத்தை வெளிப்படுத்துவோம்



புனிதம் மிக்க ரமலான் இன்னும் சில நாட்களில் பிறக்க இருக்கிறது, அல்லாஹ்வுடைய அருளையும் கருணையையும் அதிகமதிகமாக கொண்டு வரப்போகிறது.
ரமலான் என்று நினைத்தாலே நமக்கு மகிழ்ச்சிதான்.
عن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم  أتاكم رمضان شهر بركة يغشاكم الله فيه فينزل الرحمة ويحط الخطايا ويستجيب فيه الدعاء وينظر الله تعالى الى تنافسكم ويباهي بكم ملائكته فأروا الله تعالى من أنفسكم خيرا فإن الشقي من حرم فيه رحمة الله عزوجلرواه الطبراني في الكبير
நம்மை படைத்த ரப்பு நமக்கு கணக்கற்ற நிஃமத்களை வழங்கியிருக்கிறான்,
·        படைத்தான்.
·        உணவளிக்கிறான்
·        இடமளித்திருக்கிறான்
·        வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை கொடுத்தான், 
 
அல்லாஹ் கொடுத்தது சுத்தமான தண்ணீரையும், சுத்தமான காற்றையும் தான்,  வீடு! வியாபாரம். தொழில் 
·        வாழ்க்கையை சுகமாக்கி கொள்ளும் ஏற்பாடுகளையும் தந்திருக்கிறான். 
ஏசி – விமானம் – 
·        வாழ்க்கையின் இன்பங்களை தங்கு தடையின்றி அனுபவிப்பதற்கேற்ற ஆரோக்கியத்தை வழங்கியிருக்கிறான்.

நம்மைச் சுற்றி உடல் நலமில்லாதவர்கள் எப்படி எல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தால் நமக்கு கிடைத்துள்ள மகத்தான அருளின் மரியாதை புரியும்.
·         
ஒற்றை தலைவலியில் அவஸ்தை படுகிறவர்கள்
·         
கேன்சர் – கேன்சர் நோய் வந்தவர்களின் மரணம் அந்த கேன்ஸராலேயே ஏற்படும்.
·         
இதயம் – கிட்னி நோயுக்கு ஆளானவர்கள்
·        உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவர்கள்
ஒரு ஆலிம் வீட்டுக்கு மருத்துவர் ஒருவர் விருந்தாளியாக வந்துள்ளார். அவரை உபசரித்து உணவளித்து ஒரு அறையை தயார் செய்து அதில் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு சொன்னார் அந்த ஆலிம். அங்கிருந்த இருக்கைகளில் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு ஆலிம் எழுந்து உறங்குவதற்காக தன் அறைக்குச் சென்றார். காலையில் டாக்டர் தங்கியிருந்த அறைக் கதவை திறந்தவருக்கு ஆச்சரியம். டாக்டர் உட்கார்ந்த படியே உறங்கிக் கொண்டிருந்தார்.
ஆலிம் காரணம் விசாரித்தார்.
மருத்துவர் சொன்னார் : எட்டு வருடமாக நான் இப்படித்தான் தூங்கிக் கொண்டிருக்கிறேன். நாம் சாப்பிடுகிற உணவு உண்வுக்குழாய் வழியே கீழே இறங்கி வயிற்ற்குக்குள் செல்கிறது. சாப்பிட்டு விட்டு நாம் உடலை சாய்த்தால் உணவு அந்த வழியே திரும்பி விடாதவாறு கட்டுப்படுத்த ஒரு வால்வு இருக்கிறது. அந்த “வால்வுக்கு நான் ரிடர்ன் வால்வு என்று பெயர்’ எனக்கு அந்த வால்வில் ஓட்டை விழுந்து விட்டது. எனவே நான் சாப்பிட்ட உணவு திரும்ப வாய்வழியாக வெளியே வந்து விடும். எனவே படுக்கையில் படுத்து என்னால் உறங்க முடியாது .
அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற நிஃமத்தை எப்படி கணக்கிடுவது.
وإن تعدوا نعمة ت الله لا تعصوها

இவ்வளவு நிஃமத்துக்களை வழங்கிய இறைவன் நாம் அவனது உத்தரவுகளுக்கு கட்டுப்படுகிறோமா என்பதை பல வகைகளில் பரிசோதிக்கிறான்.
அந்த வகையில் ஒன்று தான் ரமலான்.
மனிதனுக்கு எந்த நிமிடமும் உணவளிக்கிற இறைவன், தன் கட்டளைப்படி சிறிது நேரம் சாப்பிடுவதை மனிதன் நிறுத்திக் கொள்கிறானா என்பதை சோதிக்கவே நோன்பை கடமையாக்கினான் என்கின்றனர் மாக்க அறிஞர்கள்.
நிஃமத்துக்களை அனுபவிக்கிற நாம் அந்த நிஃமத்துக்களை வழங்கியனுக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு – அப்படி நடக்கிறோம் என்பதை அல்லாஹ்வுக்கு காட்டுவதற்கு அற்புதமான மாதம் ரமலான்,
இதைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மேலே கூறப்பட்ட ஹதீஸில் அறிவுறுத்தினார்கள்.
فأروا الله تعالى من أنفسكم خيرا
இது ரமலான்,
அல்லாஹ்வின் அளப்பெரும் அருட்கொடைகளுக்கான மாதம் என்று உணர்ந்து அமல்களில் துடிப்போடும் ஆர்வத்தோடும் ஈடுபடுங்கள்!
அல்லாஹ் மலக்குகளிடம் நம்மைக் குறித்து பெருமிதம் கொள்கிறான்,
ويباهي بكم ملائكته

அல்லாஹ் நமக்கு வழங்கிய நிஃமத்துக்களை உணர்ந்து அதற்கு நன்றி செலுத்துகிறவர்களாக நாம் வாழ வேண்டும்.
நாம் சாப்பிட்ட பிறகு ஒரு முறை அல்ஹம்து லில்லாஹ் சொல்கிறோம்.
நமது கடமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்த் ஒரு பெருந்தை ஒரு முறை உணவு உண்ணும் போது 32 முறை அல்ஹ்மது லில்லாஹ் சொன்னாராம்.
அல்ஹ்மதுலில்லாஹ் என அதிகமாக சொல்கிற அவருடை வழக்கத்தை பார்த்து அவர் உணவரும் போது எத்தனை முறை அல்ஹம்து லில்லாஹ் சொல்கிறார் என்பதை அவருடன் இருந்தவர் கண்க்கிட்டு கவனித்திருக்கிறார், அப்போது இந்த எண்ணிக்கை தெரிந்திருக்கிறது,
ஒவ்வொரு பருக்கைக்கும் அல்ஹம்துலில்லாஹ் சொல்ல நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் நிஃம்த்துக்களை உணர்ந்து நான் நன்றி செலுத்துபவராக இருந்தால் அல்லாஹ் மேலும் நிஃமத்துக்களை அதிகப்படுத்துகிறான்,
لئن شكرتم لآزيدنكم
ஒருபெரியவர் அல்லாஹ் தனக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த முடியாமல் போய்விடுமோ என பயந்துயா அல்லாஹ் போதும் போதும்! என்று பிரார்த்தனை செய்தார். ஆனால் அவருக்கும் மேலும் மேலும் அதிகமாக நிஃமத் கிடைத்துக் கொண்டிருந்தது. தன்னை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வில்லையோ என நினைத்து கவலையோடு அழுது பிரார்த்தனை செய்தார். அவருடை கனவில் ஒரு செய்தி சொல்லப்பட்டது, நீங்கள் போதும் போதும் என்று சொன்னது அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னதாகவே அர்த்தம். எனவே அல்லாஹ் உங்களுக்கு மேலும் அதிகமாக தருகிறான், கவலை வேண்டாம்.

அல்லாஹ் வழங்கிய நிஃமத்துக்களுக்கு நன்றி செலுத்த தவறினால் அந்த நிஃமத்துக்களை பறிகொடுத்த நாம் தயாராகி விட்டோம் என்று பெருள் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுவதுண்டு.


إذا لم تشكر تعرضت للزوال
فإن شكرت قيد تها بإقلال
நீ நன்றி செலுத்தி விட்டால் சங்கிலி கொண்டு அதை கட்டிப்போட்டு விட்டாய்!
எனவே இந்த புனித ரமலானில் கால மெல்லாம் அருட் செய்யும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவனக்கு முடிந்த வரை யில் நன்றி செலுத்துவோம்.
நோன்பை சரியாகவும் சிறப்பாகவும் கடைபிடிப்போம், குடும்பத்தில் உள்ளோரை நண்பர்களை நோன்பை கடைபிடிக்க உற்சாகப்படுத்துவோம்.
நோன்பு அல்லாஹ்வை அடைந்து கொள்ளும் ஷார்ட் ரூட் !
الصوم لي ، وأنا اجزي به
நானே கூலி கொடுக்கிறேன் என்பதன் பொருள் நானே நேரடியாக கொடுக்கிறேன் என்பதாகும்
வ அன உஜ்ஸா என்றும் அறிவிப்பாளர்கள் படிப்பதுண்டு, அப்படியானால் நானே கூலி ஆவேன் என்று பெருள் வரும்.
நற்செயல்களுக்கான கூலியைப் பற்றி சொல்கிற போது திருக்குர் ஆன் பல இடத்திலும்
وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
என்று சொல்கிறது,
மற்ற வணக்கங்களில் ஜன்னத் கிடைக்கிறது,
நோன்பில் ஜன்னத்திற்கு சொந்தக் காரனான ரப்பு கிடைக்கிறான்,
அதனால் தான் நபிமார்கள் நோன்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள்
·        ஆதம் அலை மாதந்தோறும் 13, 14, 15 ஆகிய நாட்களில் நோன்பை கடைபிடித்தார்கள்
·        நூஹ் அலை பெரும்பாலும் நோன்பாளியாக இருந்தார்கள்
·        தாவுத் அலை ஒரு நாள் விட்டு மறுநாள் நோன்பு வைப்பவராக இருந்தார்கள்
·        ஈஸா அலை மூன்று நாளைக்கு ஒரு நாள் நோன்று வைப்பவராக இருந்தார்கள்.
நோன்பு அல்லாஹ்வை அடை சிறந்த வழி என்பதே இதற்கு காரணம்.
மஹ்மூது அல் கஜ்னவி – கஜ்னீ முஹம்மது – ஒரு முறை தனது அமைச்சர்களுக்கு விலை உயர்ந்த கற்களை எடுத்துப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார், மற்ற அமைச்சர்கள் அவற்றில் தமக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ள போட்டி போட்டனர், ஆனால் அமைச்சர் அயாஸ் அதில் கவனம் செலுத்தாமல் மன்னரின் பின்னாலேயே சென்றார். உனக்கு வைரங்கள் தேவையில்லையா என கஜ்னவி கேட்க எனக்கு வைரக்குவியல்களின் சொந்தக் காரர் போதும் என்றாராராம் அயாஸ் ,
மிஷ்காத்தில் ஒரு ஹதீஸ் உண்டு,
ரபீ ஆ ரலி பெருமானாருக்கு ஒரு முறை ஓளு செய்ய தண்ணீர் எடுத்துக் கொடுத்தார்,
நபி (ஸல்) சொன்னார்கள்     سل يا ربيعة  என்றார்கள்,
ரபீஆ   (ரலி)  கேட்டார்,
أسئلك مرافقتك في الجنة
சிறப்பானதை அதிகமாக அடைந்து கொள்ள முயற்சி செய்வதே புத்திசாலிகளின் இயல்பு.
என்வே நோன்பை தொடராகவும் பரிசுத்தமாகவும் நிறைவேற்ற அதிகப்படியான கவனத்தை செலுத்துவோம்.
அது போல நிறைய வணக்கங்களை செய்வோம்.
தஹஜ்ஜுத் – தஸ்பீஹாத் திலாவத்
தர்மம் – இரக்கம் கருணை யை வெளிப்படுத்தி சக மனிதர்களுக்கு உதவியாக இருப்போம்.
(மற்ற உரைக்குறிப்புகளில் இதற்கான ஹதீஸ்கள் உண்டு)
பெருமானார் (ஸல் ) அவர்கள் அறிவுறுத்திய படி
فأروا الله تعالى من أنفسكم خيرا
அல்லாஹ்விடம் நமது ஆர்வத்தையையும் துடிப்பையும் வெளிப்படுத்துவோம். அல்லாஹ் கிருபை செய்வானாக!
அன்பான ஆலிம் பெருமக்கள் ரமலானில் தங்களுடைய துஆ வில் என்னையும் எனது குடும்பத்தாரையும் இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்,

تقبل الله منا صالح الأعمال ووفقنا لما يحب ويرضاه






No comments:

Post a Comment