يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى
الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்போம்.
இது அல்லாஹ்வின் உத்தரவு.
فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ
இதில் விதிவிலக்கு சிலருக்கு மட்டுமே
·
நோன்பு
வைக்க அறவே இயலாத முதியவர்கள், நோயாளிகள் – இத்தகையோரில் வசதியுள்ளவர்கள் பித்யா
கொடுக்க வேண்டும்.
·
அசுத்த
நிலையிலிருக்கிற அல்லது கர்ப்பிணிப் பெண்கள்,
அல்லது பால் கொடுக்கும் பெண்கள் – இவர்கள் நோன்பை கழா செய்ய வேண்டும்.
·
பயணிகள்
– இவர்களும் பின்னர் நோன்பை கழா செய்ய வேண்டும்
மற்ற எவரும் நோன்பை விட அனுமதியில்லை.
மறந்து விடவேண்டாம் . இது அல்லாஹ்வின் உத்தரவு
فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ
சிரமத்தின்
காரணமாக நோன்பை தற்காலிகமாக விட்டுக்
கொள்ள அனுமதிக்கப்பட்டவர்கள் கூட (தடுக்கப்பட்டவர்களை தவிர) நோன்பு
நோற்றுக் கொண்டால் அது நன்மையானதே என்கிறான்
அல்லாஹ்
وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
நோன்பு வைத்தால் கிடைக்கும் நன்மை
قال صلى الله عليه وسلم : من صام رمضان إيماناً واحتساباً غفر له ما
تقدم من ذنبه } البخاري ومسلم
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ سَبْعِينَ
خَرِيفًا- بخاري2628
خَرِيفًا : عاما
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ فِي الْجَنَّةِ
بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ
لَا يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَدْخُلُونَ
مِنْهُ فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ – مسلم -
1974
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ فِي الدُّنْيَا
عِنْدَ إِفْطَارِهِ وَفَرْحَةٌ فِي الْآخِرَةِ-
احمد
நோன்பின் பரிந்துரை
· عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ وَالْقُرْآنُ
يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ
مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ
الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ
فَيُشَفَّعَانِ احمد
நோன்பின் மகத்துவம் –
ஷஹாதத்தை
கோரிய தோழருக்கு மாற்றாக பெருமானார் சொன்ன
அறிவுரை நோன்பு
عَنْ
أَبِي أُمَامَةَ قَالَ أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
غَزْوًا فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ
فَقَالَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا
قَالَ ثُمَّ أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا ثَانِيًا
فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ قَالَ
اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا قَالَ
ثُمَّ أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا ثَالِثًا
فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَتَيْتُكَ تَتْرَى مَرَّتَيْنِ أَسْأَلُكَ
أَنْ تَدْعُوَ اللَّهَ لِي بِالشَّهَادَةِ فَقُلْتَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ
يَا رَسُولَ اللَّهِ فَادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ فَقَالَ اللَّهُمَّ سَلِّمْهُمْ
وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا ثُمَّ أَتَيْتُهُ بَعْدَ
ذَلِكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِعَمَلٍ آخُذُهُ عَنْكَ يَنْفَعُنِي
اللَّهُ بِهِ قَالَ عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لَا مِثْلَ لَهُ قَالَ فَكَانَ
أَبُو أُمَامَةَ وَامْرَأَتُهُ وَخَادِمُهُ لَا يُلْفَوْنَ إِلَّا صِيَامًا فَإِذَا
رَأَوْا نَارًا أَوْ دُخَانًا بِالنَّهَارِ فِي مَنْزِلِهِمْ عَرَفُوا أَنَّهُمْ اعْتَرَاهُمْ
ضَيْفٌ قَالَ ثُمَّ أَتَيْتُهُ بَعْدُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ قَدْ أَمَرْتَنِي
بِأَمْرٍ وَأَرْجُو أَنْ يَكُونَ اللَّهُ عَزَّ وَجَلَّ قَدْ نَفَعَنِي بِهِ فَمُرْنِي
بِأَمْرٍ آخَرَ يَنْفَعُنِي اللَّهُ بِهِ قَالَ اعْلَمْ أَنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ
سَجْدَةً إِلَّا رَفَعَ اللَّهُ لَكَ بِهَا دَرَجَةً أَوْ حَطَّ أَوْ قَالَ وَحَطَّ
شَكَّ مَهْدِيٌّ عَنْكَ بِهَا خَطِيئَةً- احمد 21171
நோன்பு குறித்து இன்னொரு ஹதீஸ் மிகப்
பிரபலமானது.
இது தான் நாம் இன்றைய கவனத்திற்கு
எடுத்துக் கொள்ளும் செய்தி,
நோன்பு எனக்குரியது என்கிறான்
அல்லாஹ்.
عَنْ
أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ
أَمْثَالِهَا إِلَى سَبْعمِائَة ضِعْفٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَّا
الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ
أَجْلِي لِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ
لِقَاءِ رَبِّهِ وَلَخُلُوفُ فِيهِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ- مشلم -1945
عَنْ أَبِي سَعِيدٍ عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ
اللَّهِ مِنْ فَيْحِ الْمِسْكِ قَالَ صَامَ هَذَا مِنْ أَجْلِي وَتَرَكَ شَهْوَتَهُ
عَنْ الطَّعَامِ وَالشَّرَابِ مِنْ أَجْلِي فَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ- احمد
எல்லா வணக்கங்களும்
அல்லாஹ்விற்குரியவை என்றாலும். நோன்பின் போது மனிதன் இரகசிய சந்தர்பத்திலும் அல்லாஹ்வின்
கட்டளையை இழைபிசகாது கடைபிடிக்கிறான்.
·
தனிமையில் இறை உத்தரவை மீறுவதில்லை
·
ஆத்திரத்தில் உணர்ச்சி மேலீட்டில் இறையுத்தரவை மீறுவதில்லை.
·
எந்த அதிகப்படியான இன்பத்திற்காகவும் இறையுத்தரவை மீறுவதில்லை.
இந்த மூன்று சந்தர்ப்பங்களும்
மனிதனை தடுமாறச் செய்யும் சந்தர்ப்பங்களாகும். இம்மூன்று சந்தர்ப்பங்களிலும் நோன்பு
நோற்கிற முஃமினான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் இந்த இரக்சியக் காப்பு உறுதியை
கடைபிடிக்கிறார்கள்.
மிகவும் சிரத்தையோடு!
காரல் எச்சியை விழுங்குவதில்லை. பேஸ்டின் சுவையை விழுங்குவதில்லை.
அல்லாஹ்வுக்காக
ஒரு சமூகம் கட்டுப்பாடு காக்கிற மகத்துவம் நோன்பில் வெளிப்படுவது போல மற்ற எதிலும்
இல்லை.
இன்னொன்று ஒருவர்
உண்மையில் நோன்பாளியா என்பதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.
எனவே தான் அல்லாஹ்
நோன்பை தன்னோடு இணைத்து நோன்பு எனக்குரியது என்கிறான்,
நோன்பு ஒரு இரக்சிய
வணக்கம் என்றால் நோன்பிற்கு ஒரு இரக்சியம் இருக்கிறது.
அதுவே அல்லாஹ்வின்
நினைவு.
நோன்பாளியாக இருக்கிற
மனிதன் நோன்பின் ஒவ்வொரு நிமிடத்திலும் அல்லாஹ்வின் நினைவில் இருக்கிறான்.
அந்த நினைவு தான்
தனிமையிலும் கோபத்திலும் இலாபத்திற்காகவும் நோன்பை துறக்காமல் காக்கிறது.
அரசியல் வாதிகளின்
உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்னே உணவுக் கூடங்கள் செயல்படுகின்றன,
அவர்கள் அருந்தும்
குளிர்பானங்களில் விட்டமின் சத்து கலவைகள் கலக்கப்படுகின்றன,
இத்தகைய எந்த குறுக்கு
வட்டுச் சிந்தனைகளும் நடைமுறைகளும் இல்லாமல் முஸ்லிம்களின் நோன்பு பாதுகாப்பாக இருக்கிறது.
காரணம் . எங்கும்
எப்போதும் அல்லாஹ் இருக்கிறான் என்ற சிந்தனையே!
இதுவே நோன்பின்
உண்மையான இரக்சியம்,
அல்லாஹ் எங்கும்
எப்போதும் நம்மோடு இருக்கிறான் என்ற சிந்தனையை விழிப்புணர்வோடு உணர்வுப் பூர்வமாக நமது
இதயம் பெற்றுக் கொள்வோமானால் அது வே இறைநேசத்தின்
உன்னத நிலையாகும்.
தவ்ரு குகையில்
எதிரிகள் கண் முன் தோன்றிய உயிர் அச்சத்திலிருந்த நிலையில்
ما ظنك يا أبا بكر بإثنين
والله ثالثهما
என்று கூற அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு தோன்றியது
அல்லாஹ்வைப் பற்றிய் திக்ரின் விழிப்பு நிலையாகும்.
இந்த நிலையில் வாழ்கிற மனிதர்கள் வாழ்வின் மிக
உன்னதமான அந்தஸ்தை பெறுவார்கள். அவர்களது ஒவ்வொரு அசைவையும் அல்லாஹ் பிறகால சந்ததியினருக்கு
பாடமாக வைப்பான்.
இறைத் தூதர் இபுறாகீம் அலை அவர்கள் ஹாஜரா அம்மையாரையும்
அவரது அன்பு மகன் இஸ்மாயீல் அலை அவர்களையும் மக்காவின் பாலை வனப் பிரதேசத்தில் இறக்கி
விட்டு புறப்பட்டார்கள். அவர்கள் இறங்கவில்லை.
ஒரு பையில் பேரீத்தம் பழமும் ஒரு தோல் பை நிறைய
தண்ணீரும் கொடுத்தார்கள்.
ஹாஜரா அம்மையாரின் வயது 20
ஒன்றும் பேசாமல் கீழே இறக்கி விட்டுப் புறப்படுகிற
கணவரின் வாகனத்திற்கு முன்னே சென்று أبهذا أمرت என்று கேட்டார். ஆம் என்று
இபுறாகீம் (அலை) தலை அசைக்கவே அவருக்கு வழியை விட்டு விலகி திரும்பிச் சென்றார்.
அந்தப் பாலைவனப் பொட்டல் வெளியில் பச்சைக் குழந்தையை
கையில் வைத்துக் கொண்டு தனியேயிருக்க ஹாஜரா அம்மா தயாரானார் என்றால் அல்லாஹ் வைப் பற்றிய
எத்தகைய அழுத்தமான சிந்தனை அவருக்கு இருந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
قال
ابن عباس (جاء بها إبراهيم وبابنها إسماعيل وهي ترضعه حتى وضعهما عند البيت عند
دوحة فوق زمزم في أعلى المسجد وليس بمكة يومئذ أحد وليس بها ماء فوضعهما هنالك
ووضع عندهما جرابا فيه تمر وسقاء فيه ماء ثم قفى إبراهيم منطلقا فتبعته أم إسماعيل
فقالت يا إبراهيم أين تذهب وتتركنا بهذا الوادي الذي ليس فيه إنس ولا شيء فقالت له
ذلك مرارا وجعل لا يلتفت إليها فقالت له أالله الذي أمرك بهذا قال نعم قالت إذن لا
يضيعنا ثم رجعت فانطلق إبراهيم
இத்தகைய
அழுத்தமான இறைச் சிந்தனையின் காரணமாகத்தான்
மூன்று நாட்களுக்குப் பிறகு தண்ணீரைத் தேடி
அவர் ஓடிய ஓட்டத்தை மனித
குலத்தின் ஒரு வணக்கமாக அல்லாஹ்
ஆக்கினான்.
ஸஃயு ஹஜ்ஜின் பிரதான கடமைகளில்
ஒன்றாகும். ஷாபி மத்ஹபில் அது
ருக்னுகளில் ஒன்று.
இங்கே இன்னொன்றும்
கவனிக்கத்தக்கது,
ஹாஜரா அம்மையார்
ஓடியது உக்ரவிய்யான மறுமைக் காரணத்திற்காக அல்ல. அல்லாஹை வணங்கும் வழியாக அல்ல.
தண்ணீரைத் தேடி
ஓடினார்.
ஒரு துனய்விய்யான
காரணத்திற்காக அவர் செய்த காரியத்தை அவர் அல்லாஹ்வை உரிய முறையில் நினைப்பவராக (தாகிரத்)
ஆக இருந்ததால் அவருடைய துன்யவிய்யான நடவடிக்கையை உக்ரவிய்யுக்கான அந்தஸ்தை அல்லாஹ்
வழங்கினான்.
மற்ற மனிதர்களின்
வணக்கமாக – உக்ரவிய்யான நடவடிக்கையாக ஆக்கினான்.
இதே போலவே ஆதம்
அலை அவர்களும் ஹவ்வா அம்மையாரும் சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்ட போது வெவ்வேறு இடத்தில்
இறக்கப்பட்டார்கள், ஆதம் அலை இந்தியாவிலும் ஹவ்வா அம்மா ஜித்தாவிலும் இறக்கப்பட்டார்கள்.
இரண்டு மலக்குகள்
இவ்விருவரையும் சொர்க்கத்திலிருந்து அழைத்து வந்ததாக முஜாஹித் கூறுகிறார்.
ஆதம் அலை ஹவ்வா
அம்மாவை தேடி இறுதியில் அரபாவில் கண்டு கொண்டார்,
கண்டு கொண்ட நேரம்
துல் ஹஜ் 9 ம் நாள் மதியம்.
கணவன் மனைவியை
கண்டு கொண்ட நேரத்தை ஹஜ்ஜின் பிரதான வணக்கமாக மக்களுக்கு அல்லாஹ் கடமையாக்கினான்.
ஹஜ்ஜின் பிரதான்
நாள் துல் ஹஜ் 9 . பிரதான நேரம் மதியத்திற்கு பிந்தைய நேரமாகும்.
ஒரு கண்வன் மனைவி
சந்தித்து தாம்பத்தியத்தில் இறங்கிய நேரத்தை வணக்கமாக இறைவன் அங்கீகரிக்க காரணம்,
அவ்விருவரும் அல்லாஹ்வை
நினைப்பவர்களாக இருந்தார்கள், ரப்பனா ழலம்னாவின் பிரார்த்தனையில் இருந்தார்கள் என்பதாகும்.
அல்லாஹ்வை தவிர
வேறு எந்தச் சிந்தனையும் அவர்களுக்கு இருக்க வில்லை.
அதே போல் இன்றை
தவாபு நடைமுறைக்கு காரணம் இபுறாகீம் அலை,
தவாபு செய்து அவர்
நடந்த கால் பாதத்தை கல்லில் பதிவு செய்த இறைவன், அந்த கல்லை மக்கள் தவாபை முடித்து
விட்டு தொழுகைக்கு முன்னோக்கும் திசையாக அல்லாஹ் ஆக்கினான். அப்போது தான் மக்களின்
தவாபு நிறைவடைகிறது.
அல்லாஹ்வை தங்கள்
நினைவில் விழிப்புணர்வோடு நிலை நிறுத்தியவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்து இது.
நோன்பு அல்லாஹ்வின்
நினைவை நமக்குள் மலரச் செய்கிறது. அதை இன்னும் விழிப்புணர்வோடு எப்போது ஞாபகத்தில்
வைத்துக் கொள்வோம் என்றால்
அந்த நினைவு நம்மையும்
புனிதப்படுத்து.
அத்தை தான் அல்லாஹ்
சொல்கிறான்.
لعلكم تتقون
கவனம் , நீங்கள் முத்தகீ ஆவீர்கள் என்றல்ல ஆகக் கூடும் என்கிறான் அல்லாஹ்.
அப்படி ஆவது நோன்பின் இரக்சியத்தை நாம் முழுமையாக புரிந்து கொண்டு நடப்பதில்
இருக்கிறது.
அல்லாஹ் தவ்பீக செய்வானாக!
No comments:
Post a Comment