வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 04, 2016

கபூலிய்யத்

கபூலிய்யத்
முஃமின்கள் எந்த ஒரு காரியம் செய்கிற போதும் அதில் கபூலிய்யத் என்ற அல்லாஹ்வின் அங்கீகாரத்தை பெறுவதற்கே முக்கியத்துவம் தர வேண்டும்.
ஒரு பள்ளிவாசலைக் கட்டித் கொடுத்தாலும் சரி, பத்து பேருக்கு உணவளித்தாலும். நாலு குமர்களுக்கு திருமணம் செய்து வைத்தாலும். கல்விக்கூடம் கட்டினாலும். மருத்துவமனை எழுப்பினாலும் பத்துரூபாய் தர்மம் செய்தாலும், 
கல்யாணம் செய்து வாழ்கிற இல்லறத்திலும். இலாபத்திற்காக செய்கிற வியாபாரத்திலும், மக்களுக்காக பணியாற்றுகிற பொதுக் காரியங்களிலும்-  அனைத்திலும் அல்லாஹ் அதை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட வேண்டும்.
ஒரு ரமாலான் முடிந்து பெருநாள் தொடங்கிய போது அலி (ரலி) புலம்பிய வாசகம் ஈமானிய வாழ்வில் மிக முக்கியமானது,
ليت شعري، من المقبول فنهنيه، ومن المحروم فنعزيه
யார் மக்பூல் என்று எப்படி அறிவது ? அறிந்தால் வாழ்த்தலாம். மக்பூப் இல்லை என்றால் இரங்கல் சொல்லாம்.
தொழுகை நோன்பு ஹஜ்ஜு உம்ரா என்ற எந்த வணக்கத்திற்கு பின்னும் இது கபூல் ஆகிவிட்டதா என்ற சிந்தனை முஃமின்களுக்கு அவசியம்.
ஆதம் அலை அவர்களின் மகன்கள் ஹாபீல் காபீலிடையே சொந்த விருப்பத்தில் பிரச்சனை எழுந்த போது யாருடைய விருப்பம் சரி என்பதை அறிந்து கொள்ள அல்லாஹ்வுக்கு ஒரு குர்பானி கொடுக்குமாறு இருவரையும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஹாபீல், அவர் விவாயம் செய்திருந்த தானியங்களில் உயர்ந்ததை கொண்டு வந்து வைத்தார். கால் நடை பராமரிப்வரான காபீல் அவரிடமிருந்து மிக நோஞசான் ஆடு ஒன்றை கொண்டு வைத்து வைத்தார். அன்றைய ஷரீஅத்தின் வழக்கப்படி வானத்திலிருந்து வந்த நெருப்பு ஹாபீலின் குர்பானியை கரித்து விட்டது. அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். ஹாபீலின் வாதமே அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது உணர்த்தப்பட்டது.
மனிதர்களின் ஒரு தீர்வை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா என்பதை இந்த உலகிலேயே அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்ட ஒரே சந்தர்ப்பம் இது,  ஆனால் ஒரு பெரும் துரதிஷ்டம். அந்த வாய்ப்பு கிடைத்த பிறகும் மனித சமூகம் அதற்கேற்ப நடந்து கொள்ளவில்லை.
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آَدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآَخَرِ
அல்லாஹ்வின் அங்கீகாரத்தை முன்னிறுத்திய ஒரு வாழ்க்கைக்கு மனித சமூகம் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஒரு முதல் ஏற்பாடு அது.
நமது தனிப்பட்ட நடவடிக்கைகள்-
அவை இரகசியமானவையாக இருந்தாலும், பகிரங்கமானவையாக இருந்தாலும்.  
அதே போல நமது பொதுவான நடவடிக்கைகள் அவை வணக்க வழிபாடாக இருந்தாலும் மற்ற வாழ்வியல் நிகழ்வுகளாக இருந்தாலும் அனைத்திலும் இதை அல்லாஹ் ஏற்க வேண்டும் என்ற சிந்தனை நமக்கு இருப்பது அவசியம்.
நுஃமான் பின் பஷீர் (ரலி) கூறுகிறார்.  எனது தந்தை அவருடை மகன்களில் எனக்கு மட்டும் ஒரு அடிமையை அன்பளிப்பாக வழங்கினார். இதைப் பற்றி அவர் என் அம்மா (பின்து ரவாஹா) ரவாஹாவின் மகளிடம் கூறிய போது அவர் பெருமானார் (ஸல்) அவர்கள் இதை ஏற்றுக்கொண்டால் ஒழிய தான் ஏற்க மாட்டேன் என்று கூறினார். எனது தந்தை என்னை அழைத்துக் கொண்டு பெருமானாரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே எனது இந்த மகனுக்கு நான் ஒரு அன்பளிப்பை செய்தேன் என்றார். உனது மற்ற மகன்களுக்கு இது போல செய்தீரா என பெருமானார் கேட்க இல்லை என என் தந்தை பதிலளித்தார். அப்படியானால் நீங்கள் செய்த அநீதிக்கு என்னை சாட்சியாக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
عن النعمان بن بشير رضي الله عنهما ، أن أمه بنت رواحة  قالت : لا أرضى حتى تُشهد رسول الله صلى الله عليه وسلم على ما وهبت لابني ، فأخذ أبي بيدي ، وأنا غلام فأتى رسول الله صلى الله عليه وسلم ، فقال يا رسول الله إن أم هذا ، بنت رواحة أعجبها أن أشهدك على الذي وهبت لابنها ، فقال رسول الله صلى الله عليه وسلم : يا بشير ألك ولد سوى هذا ؟ قال : نعم ، فقال : " أكلهم وهبت له مثل هذا ؟ قال : لا ، قال : " فلا تشهدني إذاً ، فإني لا أشهد على جور " [ أخرجه مسلم 
தமது சொந்த பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குகிற விசயத்திலும் அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்க்க வேண்டும் என்ற உன்னத வாழ்வியலுக்கு சிறந்த உதாரணம் இது .

உமர் (ரலி) அவர்கள்  இப்னு லுஃலு ஆ என்பனால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கட்டத்தில் தனக்கு என்ன ஆகுமோ என அதிகம் பரிதவித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன் அமீரூல் முஃமினீன் ! உங்களுக்கென்ன நீங்கள் என்ன வெல்லாம் செய்திருக்கிறீர்கள் என உமர் (ரலி) அவர்களின் நற்செயல்களை பட்டியலிட்டார்.  அதை கேட்டு உமர் ரலி கூறினார் : இளைஞரே! நீர் சொல்லும் இந்தச் செயல்கள் எனக்கு பாதகாம ஆகாமால் இருந்தால் அதுவே எனக்கு போது எனக் கூறினார்கள்.

وَجَاءَ رَجُلٌ شَابٌّ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدَمٍ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ ثُمَّ شَهَادَةٌ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لَا عَلَيَّ وَلَا لِي (البخاري -3700)

மக்கள் பணிக்காகவும் மார்க்கப் பணிக்காகவும் ஓயாது உழைத்த அந்தப் பெருந்தகை தனது பணிகளை அல்லாஹ் ஏற்க வேண்டுமே என்று பரிதவித்ததை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

பொதுப்பணிகளாக இருந்தாலும் அதை அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டும் என்ற சிந்தனையே நமக்குள் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்த இதை விடச்சிறந்த உதாரணம் வேறு எதுவும் இல்லை.

உமர் (ரலி) அவர்களை விட  சிறப்பான தொண்டூழியத்தை மார்க்கத்திற்கோ மக்களுக்கோ நாம் யாரும் செய்து விட முடியாது. நாம் செய்தவற்றை அல்லாஹ் நன்மையாக ஏற்றுக் கொண்டானா இல்லையா என்பதைப் பற்றிய  இந்தப் பரிதவிப்பும் எதிர்பார்ப்பும் நம்மிடம் எந்த அளவு இருக்கிறது என்பதை நாம் அளவிட்டுக் கொள்ள வேண்டும்.
சின்ன்ச் சின்னக் காரியங்களை செய்து விட்டு நான் இன்னது இன்னது செய்திருக்கிறேன் என்று கூறிக்கொள்வது, அல்லது “இதற்காக நான் எவ்வளவு சிரமப்பட்டேன்  தெரியுமா” என பெருமைப் பட்டுக் கொள்ளும் நம்முடைய வாடிக்கைகளை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தொழுகை நோன்பு ஹஜ் போன்ற எந்த வணக்கமாகம் இருந்தாலும் உதவி செய்தல் நற்காரியங்களை நிறைவேற்றுதல் ஒத்தாசையாக இருத்தல் என எத்தகைய சேவை செய்தாலும் அதை செய்த பின் இதை அல்லாஹ் ஏற்க வேண்டுமே என்ற சிந்தனைதான் நமக்குள் மேலோங்கியிருக்க வேண்டும்.

அது சின்னக் காரியமாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும்

காரியம் சிறியது என்று அலட்சியமாக நினைக்க வேண்டியதில்லை. அதில் கபூலிய்யத்தை எதிர் பார்க்கும் எண்ணம் நமக்கு இருக்குமானால் அது பெரிய நன்மை தான்,

ولقد قال عليّ رضي الله عنه: (لا تهتمّوا لقِلّة العمل، واهتمّوا للقَبول)، ألم تسمعوا الله عز وجل يقول : ) إِنَّمَا يَتَقَبَّلُ اللّهُ مِنَ الْمُتَّقِينَ (( المائدة:27)
முஃமின்கள் பலரும் வணக்க வழிபாடுகளை  நிறைவேற்றுகிறார்கள் ஏராளமான பொதுச் சேவைகளை செய்கிறார்கள். சமுதாயத்திற்காக என்று உழைக்கிறார்கள். ஆனால் இதை அல்லாஹ் அங்கீகரிப்பானா என்ற கவலையும் அது பற்றிய ஆர்வமும் அவர்களிடம் இருப்பதில்லை.

நாம் அப்படி ஆகி விடக் கூடாது.

அல்லாஹ் நிறைய நன்மைகளை செய்வதற்கு நமக்கு தவ்பீக் செய்ய வேண்டும். அத்தோடு அந்த நன்மைகளின் கபூலிய்யத் குறித்து சிந்திக்கிற தவ்பீக்கையும் தர வேண்டும்

ஏனெனில் நன்மை செய்வது அல்லாஹ்வின் ஒரு நிஃமத் என்றால் கபூலிய்யத் குறித்து சிந்திப்பது இன்னொரு நிஃமத்தாகும்.

நாம் செய்கிற காரியம் நல்லதாக இருப்பதாலேயே அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

அந்த நன்மைகளை அல்லாஹ் நமது முகத்தை நோக்கி திருப்பி அடித்து விடக் கூடும் (அல்லாஹ் பாதுகாப்பானக!)

நரகின் முதல் எரிகொல்லிகள்

قَالَ أَبُو هُرَيْرَةَ حَدَّثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ يَنْزِلُ إِلَى الْعِبَادِ لِيَقْضِيَ بَيْنَهُمْ وَكُلُّ أُمَّةٍ جَاثِيَةٌ فَأَوَّلُ مَنْ يَدْعُو بِهِ رَجُلٌ جَمَعَ الْقُرْآنَ وَرَجُلٌ يَقْتَتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَرَجُلٌ كَثِيرُ الْمَالِ فَيَقُولُ اللَّهُ لِلْقَارِئِ أَلَمْ أُعَلِّمْكَ مَا أَنْزَلْتُ عَلَى رَسُولِي قَالَ بَلَى يَا رَبِّ قَالَ فَمَاذَا عَمِلْتَ فِيمَا عُلِّمْتَ قَالَ كُنْتُ أَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ فَيَقُولُ اللَّهُ لَهُ كَذَبْتَ وَتَقُولُ لَهُ الْمَلَائِكَةُ كَذَبْتَ وَيَقُولُ اللَّهُ بَلْ أَرَدْتَ أَنْ يُقَالَ إِنَّ فُلَانًا قَارِئٌ فَقَدْ قِيلَ ذَاكَ وَيُؤْتَى بِصَاحِبِ الْمَالِ فَيَقُولُ اللَّهُ لَهُ أَلَمْ أُوَسِّعْ عَلَيْكَ حَتَّى لَمْ أَدَعْكَ تَحْتَاجُ إِلَى أَحَدٍ قَالَ بَلَى يَا رَبِّ قَالَ فَمَاذَا عَمِلْتَ فِيمَا آتَيْتُكَ قَالَ كُنْتُ أَصِلُ الرَّحِمَ وَأَتَصَدَّقُ فَيَقُولُ اللَّهُ لَهُ كَذَبْتَ وَتَقُولُ لَهُ الْمَلَائِكَةُ كَذَبْتَ وَيَقُولُ اللَّهُ تَعَالَى بَلْ أَرَدْتَ أَنْ يُقَالَ فُلَانٌ جَوَادٌ فَقَدْ قِيلَ ذَاكَ وَيُؤْتَى بِالَّذِي قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقُولُ اللَّهُ لَهُ فِي مَاذَا قُتِلْتَ فَيَقُولُ أُمِرْتُ بِالْجِهَادِ فِي سَبِيلِكَ فَقَاتَلْتُ حَتَّى قُتِلْتُ فَيَقُولُ اللَّهُ تَعَالَى لَهُ كَذَبْتَ وَتَقُولُ لَهُ الْمَلَائِكَةُ كَذَبْتَ وَيَقُولُ اللَّهُ بَلْ أَرَدْتَ أَنْ يُقَالَ فُلَانٌ جَرِيءٌ فَقَدْ قِيلَ ذَاكَ ثُمَّ ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رُكْبَتِي فَقَالَ يَا أَبَا هُرَيْرَةَ أُولَئِكَ الثَّلَاثَةُ أَوَّلُ خَلْقِ اللَّهِ تُسَعَّرُ بِهِمْ النَّارُ يَوْمَ الْقِيَامَةِ -  الترمذي 2304

நமது அமல்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனில் சில சின்ன சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்தினால் போதும்

மனிதர்கள் ஒரு செயலை அங்கீகரிக்க அதிக நிபந்தனைகள் விதிப்பார்கள்
மிக உன்னிப்பாக கவனிப்பார்கள்
ஏதாவது ஒரு அற்ப் காரணத்தைச் சொல்லி தட்டிக் கழிக்க முயற்சி செய்வார்கள்.
அப்படியே அங்கீகரித்தாலும் மிக குறைந்த மதிப்பீடுகளை தருவார்கள்.

அல்லாஹ் மகா கருணையாளன்
அவன் ஒரு காரியத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள மிகச் சாதாரணமான எதார்த்தமான ஷரத்துக்களையே வைத்திருக்கிறான்.
எளிமையான அந்த நிபந்தனைகளை கைகொண்டால் போதுமானது. நமது அமல்களை ஏற்றுக் கொண்டு அதற்கு மகத்தான கூலியை அவன் தருவதற்கு காத்திருக்கிறான்.
நமது செயல்களில் இருக்கிற சின்னச் சின்ன குறைகளை அவன் பொருட்படுத்துவதே இல்லை.

அமல்களை அங்கீகரிக்க அல்லாஹ்வின் நிபந்தனைகள்

1.   பரிசுத்தமான நிய்யத்

இந்த உலகில் ஒரு நற்காரியம் செய்தால் இன்ன நற்காரியத்தை இவர் செய்தார் என்பது மட்டுமே வெளியே தெரியும். அதுவே கல்வெட்டாக பேனராக வைக்கப்பட்டிருக்கும்.
தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு  நூறு பேருக்கு தையல் மிஷின் வழங்கினார் என்று போட்டோ பத்ரிகைகளில் வரும்.
ஆனால் மறுமையில் அந்த அமல் ஊர்வலம் வருகிற போது போட்டோவுடன் சேர்த்து எந்த நிய்யத்தில் வழங்கினார் என்பதும் சேர்ந்தே தலைப்பில்
எழுதப்பட்டிருக்கும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يُبْعَثُ النَّاسُ عَلَى نِيَّاتِهِمْ – إبن ماجة 4219

இன்கம் டாக்ஸிலிருந்து தப்பிப்பதற்காக  தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு  நூறு பேருக்கு தையல் மிஷின் வழங்கினார் என்று ஒரு வாசகம் அதில் சேர்க்கப்பட்டிருக்கும்.
பொய்யான பெருமையும் மறுமையில் நிலை கொள்ள முடியாது,

முகஸ்துதி அல்லது தற்பெருமை அல்லது ஊருக்காக செய்ய வேண்டிய நிர்பந்தம் போன்ற காரணங்களால் செய்யப்படும் எந்த அமலையும் அல்லாஹ் ஏற்பதில்லை அது மலையளவு பெரிதாக இருந்தாலும்

2.    அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டும் என்ற பயம் அவசியம்

நமது எந்த வணக்கத்திலும் நிய்யத்தை சுத்த்ப்படுத்துவதோடு அதை அல்லாஹ் அங்கீகரிக்கனும் என்ற பயப்படனும்.

فعن عائشة ـ رضي الله عنها ـ قالت: سألت رسول الله - صلى الله عليه وسلم - عن هذه الآية: (وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ) [المؤمنون: 60 (أهم الذين يشربون الخمر ويسرقون؟!  قال: (لا يا ابنة الصديق! ولكنهم الذين يصومون ويصلّون ويتصدقون، وهم يخافون أن لا يقبل منهم، أولئك الذين يسارعون في الخيرات

மனிதர்களிடமிருந்து கிடைக்கிற அற்பமான பெருமைகளுக்காக அல்லாஹ்வின் கபூலிய்யத்தை அதன் உயர்ந்த பலனையும் நாம் இழந்து விடக் கூடாது.
மனிதர்களிடமிருந்து கிடைக்கிற எந்த பெருமையும் நிலையில்லை. இன்று புகழ்கிறவர்கள் நாளை இகழ்வார்கள். ,முகத்துக்கு நேரே புகழ்கிறவர்கள் முதுகுப்பின் இகழ்வார்கள்

3.  பாவங்களை திரும்ப செய்யக் கூடாது
திருடிய பணத்தை கொண்டு தர்மம் செய்வது போல
பாவங்களை செய்து கொண்டே அல்லாஹ் அங்கீகரிக்கா வேண்டும் என்று
 நினைப்பது பாவமாகும்.

எந்த அமலும் முழு அங்கீகாரத்தை பெற இனி என்வாழ்வில் பாவங்கள் இருக்காது என்ற தவ்பா அவசியம்

அத்னால் தான் ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகள் இப்படி தவ்பா செய்ய வேண்டும் என முன்னோர்கள் கற்றுக் கொடுத்தார்கள்

اللهم إني اتوب إليك لا ارجع إليها أبدا اللهم مغفرتك اوسع من ذنبي ورحمتك ارجي عندي من عملي

4.   அமல்களை சிறிதாக கருத வேண்டும்
அல்லாஹ் எச்சரிக்கிறான்

يا أيها المدثر. قم فأنذر. وربك فكبر. وثيابك فطهر. والرجز فاهجر. ولاتمنن تستكثر

நாம் செய்யும் நன்மைகளை நாம் பெரிதாக கருதிக் கொள்வதே பெரும்பாலும் நம்மிடம் தற்பெருமை வருவதற்கு காரணமாகும்.

அல்லாஹ் நமக்கு செய்திருக்கிற நிஃமத்துக்களின் மரியாதையை ஒரு கணம் எண்ணிப்பார்த்தால் நமது செயல் எவ்வளவு சிறியது என்று புரிந்து விடும்.
ஐம்பதாயிரம் செலவழித்து வாங்கும் ஏசியில் இருந்து வரும் குளிர் காற்றை விட ஒரு ஆலமரம் அசைந்து வெளிப்படுத்தும் குளுமை எவ்வளவு இதமானது என்று ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

5.   அல்லாஹ்விடம் நிறைய கூலியை எதிர்பார்க்க வேண்டும் அதற்காக துஆ செய்ய வேண்டும்

وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم)( البقرة:127).

6.       நல்லவர்களை நேசிக்கவும் பாவிகளை விட்டு விலகி நிற்கவும் வேண்டும்

عن البراء بن عازب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ((إن أوثق عرى الإيمان أن تحب في الله وتبغض في الله)).
அதாவுல்லாஹ் சிக்கந்தரி : அல்லாஹ்விடம் உனது அந்தஸ்து என்ன என்பதை அறிந்து கொள்ள அவன் யாருடன் எங்கு உன்னை அமர வைத்திருக்கிறான் என்பதை பார்த்து தெரிந்து கொள்!

قال  عطاء الله السكندري  إذا أردت أن تعرف مقامك عند الله فانظر أين أقامك

7.   நல் அமல்களை தொடர்ந்து செய்வது

فعن عائشة- رضي الله عنها - قالت:  كان رسول الله صلى الله عليه وسلم إذا عمل عملاً أثبته-  مسلم.

 قال رسول الله صلى الله عليه وسلم : أحب الأعمال إلى الله أدومها وإن قل . متفق عليه

அமலே இல்லை என்றாலு அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.

قال رسول الله صلى الله عليه وسلم : ( إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيماً صحيحاً) رواه البخاري

وقال صلى الله عليه وسلم :( ما من امرئ تكون له صلاة بليل فغلبه عليها نوم إلا كتب الله له أجر صلاته، وكان نومه صدقة عليه). أخرجه النسائي.

அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டும் என்ற கவலையோடும் அக்கறையோடும் அதற்குரிய எளிமையான நிபந்தனைகளை பேணி அமல் செய்யும் தவ்பீக்கை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!







   


  

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். அருமையான பதிவு. தங்களின் வெள்ளிமேடை பதிவுகளையெல்லாம் புத்தகமாக வெளியிடலாமே ஹஜ்ரத்.

    ReplyDelete