வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 29, 2016

தாக்குதல்கள் தரும் பாடம்

அலம் நஸ்ரஹ் அத்தியாயத்தில் முஃமின்களுக்கு ஒரு பெரும் ஆறுதல் தரும் செயதி இருக்கிறது.
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا(5)إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا(6)
அல் உஸ்ர் மஃரிபாவாகவும் யுஸ்ரு நகிராவாகவும் கூறப்பட்டுள்ளது.
மஃரிபா திரும்பக் கூறப்படும் போது முந்தையதையே குறிக்கும். நகிரா திரும்பக் கூறப்பட்டால் அது வேறு ஒன்றைக் குறிக்கும் என்ற
அரபு இலக்கண விதிகளின் படி இதன் பொருள் ஒரு சிரமம் ஏற்பட்டால் இரண்டு நன்மை கிடைக்கும் என்பதாகும்.
உனக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அலம் நஸ்ரஹ் சூராவை நினைத்துக் கொள் மகிழ்ச்சியயடைவாய் என்ற கவிதை திருக்குர் ஆணிய விரிவுரை உலகில் புகழ் பெற்றதாகும்.
நபி (ஸல்) அவர்களிடம் மக்காவின் காபிர்கள் மூன்று விசய்ங்கள் குறித்து கேள்வி கேட்ட போது நாளைச் சொல்கிறேன் என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இன்ஷா அல்லாஹ் கூற வில்லை. அதனால் வஹி வருவது 15 நாட்கள் தாமதமானது.
தப்ஸீர் குர்துபி இதைப் பற்றி பேசுகிறது.
ذكر ابن إسحاق أن قريشا بعثوا النضر بن الحارث وعقبة بن أبي معيط إلى أحبار يهود وقالوا لهما: سلاهم عن محمد وصفا لهم صفته وأخبراهم بقوله; فإنهم أهل الكتاب الأول, وعندهم علم ليس عندنا من علم أنبياء; فخرجا حتى قدما المدينة, فسألا أحبار يهود عن رسول الله صلى الله عليه وسلم, ووصفا لهم أمره, وأخبراهم ببعض قوله, وقالا لهم: إنكم أهل التوراة وقد جئناكم لتخبرونا عن صاحبنا هذا. فقالت لهما أحبار يهود: سلوه عن ثلاث نأمركم بهن, فإن أخبركم بهن فهو نبي مرسل, وإن لم يفعل فالرجل متقول, فروا فيه رأيكم; سلوه عن فتية ذهبوا في الدهر الأول, ما كان أمرهم; فإنه قد كان لهم حديث عجب. سلوه عن رجل طواف قد بلغ مشارق الأرض ومغاربها, ما كان نبؤه. وسلوه عن الروح, ما هي; فإذا أخبركم بذلك فاتبعوه فإنه نبي, وإن لم يفعل فهو رجل متقول فاصنعوا في أمره ما بدا لكم. فأقبل النضر بن الحارث وعقبة بن أبي معيط قدما مكة على قريش فقالا: يا معشر قريش, قد جئناكم بفصل ما بينكم وبين محمد - صلى الله عليه وسلم - قد أمرنا أحبار يهود أن نسأله عن أشياء أمرونا بها, فإن أخبركم عنها فهو نبي, وإن لم يفعل فالرجل متقول, فروا فيه رأيكم. فجاءوا رسول الله صلى الله عليه وسلم فقالوا: يا محمد, أخبرنا عن فتية ذهبوا في الدهر الأول, قد كانت لهم قصة عجب, وعن رجل كان طوافا قد بلغ مشارق الأرض ومغاربها, وأخبرنا عن الروح ما هي؟ قال فقال لهم رسول الله صلى الله عليه وسلم: (أخبركم بما سألتم عنه غدا) ولم يستثن. فانصرفوا عنه, فمكث رسول الله صلى الله عليه وسلم فيما يزعمون خمس عشرة ليلة, لا يحدث الله إليه في ذلك وحيا ولا يأتيه جبريل, حتى أرجف أهل مكة وقالوا: وعدنا محمد غدا, واليوم خمس عشرة ليلة, وقد أصبحنا منها لا يخبرنا بشيء مما سألناه عنه; وحتى أحزن رسول الله صلى الله عليه وسلم مكث الوحي عنه, وشق عليه ما يتكلم به أهل مكة, ثم جاءه جبريل عليه السلام من عند الله عز وجل بسورة أصحاب الكهف فيها معاتبته إياه على حزنه عليهم, وخبر ما سألوه عنه من أمر الفتية, والرجل الطواف والروح. قال ابن إسحاق: فذكر لي أن رسول الله صلى الله عليه وسلم قال لجبريل: (لقد احتبست عني يا جبريل حتى سؤت ظنا" فقال له جبريل: "وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا" [مريم: 64].
வஹி வருவது தாமதமானது பெருமானாருக்கு ஒரு கஷ்டமாக இருந்த போதும் அதில் இரண்டு நன்மைகள் ஏற்பட்டன

முதலாவது முஹம்மது (ஸல்) தானாக எதையும் கூறுவதில்லை என்பது அழுத்தமாக நிரூபணமானது.

இரண்டாவது ஒரு சிறு குழு பெருமானாருடன் பேசிய செய்தியை அரபு தீபகற்பம் முழுக்க காபிர்கள் பரவச் செய்திருந்தனர். இதனால் தாமதமாக வஹி வந்த போது வஹீ கூறிய சத்தியச் செய்திகள் தாமாக அதிகம் பேரைச் சென்றடைந்தது.

முஃமின்களுக்கு ஏற்படும் எந்த ஒரு கஷ்டத்திற்கும் அல்லாஹ் இரண்டு நன்மைகளை தராமல் இல்லை..
கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்து முன்னணியையை சார்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கடும் பதற்றம் நிலவியது. இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்கள் 4 இடங்களில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்..சுமார் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களள சூறையாடியுள்ளனர்.. பல வாகனங்கள் சிதைக்ப்பட்டன.
18 வருடங்களுக்கு பிறகு இந்துதுத்துவ அமைப்பினரின் வன்முறையில் கோவை நகரம் திடுக்கம் அடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பல வருடங்களாக கட்டிக் காக்கப்பட்ட அமைதியும் பாதுகாப்பு உணர்வும் ஒரு நாளில் ஐந்து வருட பின்னடைவுக்கு நகர மக்களை ஆளாக்கி விட்டது. ஆயினும் பிரச்சனை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நகரின் அமைதி மீளுருவாக்கப் பட்டுள்ளது.
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு ஆபியத்தை தருவானாக! எதிரிகளின் சக்தியை பலவீனப்படுத்துவானாக!
இரண்டு விசயங்களை இது புரிய வைத்துள்ளது.
முஸ்லிம்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் அதிக  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எச்சரிக்கை என்பதற்கு எதிரிகிகளின் தாக்குதல்களையும் அவர்களை எதிரிகள் கொள்ளும் வழிகளையும் அறிந்திருப்பது அவற்றை செயல்படுத்துவது என தப்ஸீர் அல மனாரின் ஆசிரியர் கூறுகிறார்.
فلا بد من أخذ الحذر من معرفة ما بينهم من الوفاق والخلاف ، وأن تعرف الوسائل لمقاومتهم إذا هجموا ، وأن يعمل بتلك الوسائل . فهذه ثلاثة لا بد منها ، 
வியாபார கூட்டமைப்புக்களின் உதவியையும் பாதுகாப்பையும் கோருவது, பிரச்சனைக் குரிய நேரங்களில் கடைகளை அடைத்துவிடுவது, போன்ற ஆயத்தங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்திய பிக்ஹு கவுன்ஸில் அச்சத்திற்குரிய இடங்களில் கடை வைத்திருப்பவர்கள் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம் என அனுமதி கொடுத்திருப்பதையும் கவனித்திக் கொள்ளலாம்.
சிசிடிவி கேமரா பொருத்திக் கொள்வது முன்னெச்சரிக்கையில் அடங்கும்.
இந்துத்துவ அமைப்பினர் விளையாட்டுத்தனமான விசம்ச் செயல்களின் மூலம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதை மிக முக்கியமான ஒரு திட்டமாக வைத்திருப்பதை எப்போதும் கவனத்தில் வைக்க வேண்டும்.
இரண்டாவது முக்கிய அம்சம்
இந்தக் கலவர்ச் சூழலின் போது தேவை இன்றி முஸ்லிம்களை அச்சுறுத்துவம் ஆத்திரப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முஸ்லிம்கள் முறியடித்தார்கள்..
அமைதி காத்தார்கள். பெருத்துக் கொண்டார்கள். காவல்துறைக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.
ஓரிரு இடங்களில் கோபத்தை வெளிப்படுத்த முயற்சித்தார்கள் என்றாலும் முஸ்லிம் ஜமாத்துக்கள் அவர்களை கட்டுப்படுத்தி வைத்தின,
நகரின் அமைதியை கட்டிக்காப்பது முக்கியம் என்ற பொறுப்புணர்வு அலாதியாக அவர்களிடம் வெளிப்பட்டது.
அதன் பயனாக மிக நல்ல பின்விளைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
முதலாவதாக பொது அமைப்புக்கள் வன் முறைக்கு எதிராக களம் இறங்கியுள்ளன,
நகரின் அமைதியை பாதுகாப்பதில் இந்துக்களுக்கும் பங்கிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது.
இது முந்தைய காலங்களில் பார்க்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
இரண்டாவதாக இந்து முன்னணி அமைப்பின் உண்மை முகம் வெளிப்பட்டிருக்கிறது, கலவரக் காரளாக விசமிகளாக அவர்களது செயல்கள் சமூக வளைத்தளங்கள் மூலமாக அனைத்து மக்களையும் சென்றடைந்திருக்கிறது. 
இதில் முக்கிய விசயம் படிக்கிற அல்லது வேலைக்குச் செல்கிற அப்பாவி இளைஞர்களை இந்து முன்னணி போன்ற அமைப்புக்கள் எப்படி தரங்கெட்ட சமூக குற்றவாளிகளாக உருவாக்கியிருக்கிறது என்பது இந்து சமூகத்தை கவலை கொள்ள வைத்திருக்கிறது,
இந்தச் செய்தியை அதிகமாக இந்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.
அமைதியின் மீதான நாட்டம் , இழப்புக்களை முடிந்த அளவில் சகித்துக் கொள்ளுதல் அமைதியாக காரியம் ஆற்றல் இவற்றுக்கான நன்மை அலாதியானது என்பது இஸ்லாம் முஸ்லிம்களை பக்குவப்படுத்தும் மிக முக்கிய வழி முறையாகும்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை முஸ்லிம்களுக்கு கற்றுத்தருகிற மிக முக்கியமான வாழ்வியல் பாடம் இது.
ஹுதைபிய்யாவின் போது முஸ்லிம்கள் மிக அநீதியான முறையில் மக்காவிற்குள் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டார்கள்.  அப்படி தடுப்பது மக்காவின் பழக்கமல்ல. அவ்வாறு தடுக்க மக்காவாசிகளுக்கு உரிமையும் இல்லை.
அந்த நேரத்திலேயே மக்காவை கைப்பற்றும் அளவுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் பலமும் இருந்தது.
ஹுதைபிய்யாவின் பள்ளத்தாக்கில் தனது கஸ்வா ஒட்டகை படுத்துக் கொண்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “ மக்கா வாசிகள் உறைவை பராமரிக்கும் விததில் எதைக் கேட்டாலும் நான் கொடுப்பேன்”
حتى وصل إلى الحديبية علي طرف حدود أراضي مكة، وهناك بركت ناقته فقال الناس خلأت الناقة فقال النبي : ما خلأت وما هو لها بخلق ولكن حبسها حابس الفيل عن مكة لا تدعوني قريش اليوم إلى خطة يسألونني فيها صلة الرحم ألا أعطيتهم إياها


அமைதியின் நோக்கோடு ஹுதைப்பியாவில் தங்கியிருந்த முஸ்லிம்களை மக்காவின் காபிர்கள் பல வகையிலும் சீண்டிப் பார்த்தார்கள். முஸ்லிம்களை அல்லாஹ் பொருமையாக இருக்கச் செய்தான்
تمادت قريش في عنادها وأرسلت أربعين رجلا منهم أو خمسين رجلا وأمروهم أن يطيفوا بعسكر رسول الله صلى الله عليه و سلم ليصيبوا لهم من أصحابه أحداً فأمسك المسلمون بهم جميعاً وأتي بهم إلى رسول الله فعفا عنهم وخلى سبيلهم وقد كانوا رموا في عسكر رسول الله بالحجارة والنبل
وفي فظاظة قريش وسماحة المسلمين وحلم الرسول نزل قوله عن وجل{ إِذْ جَعَلَ الَّذِينَ كَفَرُوا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ فَأَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوَى وَكَانُوا أَحَقَّ بِهَا وَأَهْلَهَا وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيماً}سورة الفتح ـ آية 26
  
இறுதியில் மக்காவாசிகளின் மிக மோசமான நிபந்தனையாக மக்காவாசிகள் மதீனாவிற்கு வந்தால் திருப்பி அனுப்ப பட வேண்டும்  என்ற உடன்படிக்கைக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
من أتى محمداً من قريش بغير إذن وليه رده عليهم ومن جاء قريشاً ممن مع محمد لم يردوه عليه

அமைதியின் மீதான் இந்த விழைவுக்கு அல்லாஹ் உடனடியாக பரிசாக ஒரு செய்தி சொன்னான்,
மக்காவிலிருந்து மதீனாவிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் அல் பதஹ் அத்தியாயத்தின் மொத்த வசனங்களும் அருளப்பட்டன,
அதில் அல்லாஹ் முதன் முதலாக சொன்னான்,
இன்னா பதஹ்னா லக பத்ஹன் முபீனா
முஸ்லிம்களுக்கான பெரும் வாழ்வியல் பாடம் இது.
ஆக்ரோஷம், ஆவேசம் கோபம் குரூரம் ஆகியவற்றை விட இத்தகைய அநீதிகளுகுகு எதிராக அமைதியை நாடும் சிந்தனைக்கு அல்லாஹ் மிகப்பெரும் வெற்றியை தருவான்.
தற்போது கோவையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான அநீதியான தாக்குதல்களை அமைதியாக சகித்துக் கொண்டு முறையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட முஸ்லிம்கள் இரண்டு நன்மையை கண்டார்கள்.
ஒன்று மாற்றுச் சமூகம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது
இரண்டாவது இந்துத்துவ அமைப்பினரின் வெறியாட்டம் எத்தகையது என்பதை உலகிற்கு வெளிச்சமாகியுள்ளது.
இதை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டியதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் முஸ்லிம்களின் கடமையாகும்.
நம்மை ஆத்திரப்படுத்தி அதன் மூலம் இலாபம் அடைய முயற்சிக்கும் சக்திகளை நாம் அடையாளம் கண்டு கொள்வோம். அந்த சதித்திட்டங்களுக்கு நாம் இரையாகி விட வேண்டாம்.
இன்று கூட கோவை போத்தனூர் பகுதியில் மேட்டூர் பள்ளிவாசலின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக செய்தி வந்துள்ளது (திஹிந்து)
நமது பொருமையை வெளிப்படுத்துவதற்கான தக்க தருணம் இது . இதற்கான முறையான நடவடிக்கைகளுக்கு நாம் முயற்சி செய்வோம். ஆத்திரத்திற்கு ஆளாகிவிடக் கூடாது.
சாராய பாட்டிலுக்கும், மலிவான தூண்டுதலுக்கும் ஆளான விசமிகளின் விளையாட்டு இது. இதில் நமது மரியாதைக்குரிய உழைப்பும் ஈடுபாடும் வீணாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்போம்.
இனி கோவையில் பள்ளிவாசல்கள் அதிகரிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை உயரும் என்று உறுதியாக நம்புவோம்.
உரிய புகார்களை செய்து விட்டு நமது வேலைகளை கவனிப்போம். அதே நேரத்தில் எச்சரிக்கையாக இருப்போம்.
அல்லாஹ் சரியான வழியில் நம்மை எப்போதும் செலுத்துவானாக! நம்மையும் நமது சொத்துக்ளையும் மானம் மரியாதையையும் பாதுகாப்பானாக! 
அமைதியையும் பெருமையையும் நமக்கு அணிகளண்களாக்குவானாக! சோதனைகளிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் பாதுகாப்பானாக!
நமக்கும் நம் நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் அமைதியை ஆபியத்தை தந்தருள்வானாக!
இந்திய இரணுவ முகாமின் மீது யூரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலாக பாகிஸ்தானின் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன,
அதை பெரும்பாலான நாட்டு மக்கள் வரவேற்றுள்ளார்கள்.
எனினும் இந்த தாக்குதல்களை அல்லாஹ் இத்தோடு நிறுத்தி உலகில் அமைதியை நிலவச் செய்வானாக!
வன்முறைத் தாக்குதல்கள், வரன்முறை அற்ற தாக்குதல்கள், சதிச் செயல்கள், அமைதியை குலைக்கும் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் அல்லாஹ் நம்மையும் நமது நாட்டையும் பாதுகாப்பானாக!


1 comment: