وَضَرَبَ اللَّهُ مَثَلاً
قَرْيَةً كَانَتْ آَمِنَةً مُطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَداً مِنْ كُلِّ
مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ
وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُون
முஹர்ரம் மாதத்தின் 10 ம் நாளுக்கு ஆஷூரா என்று
பெய்ர். 10 ம் நாள் என்பதால் அந்தப் பெயர் வந்தது என்று பிரபலமாக கூறப்படுகிறது.
பத்து நபிமார்கள் பத்து விதமான அற்புதங்கள்
வழங்கப்பட்டது அதனால் இது ஆசூரா மரியாதைக்குரிய 10 ம் நாள் என அழைக்கப்பட்டது என்றும்
ஒரு கூற்று உண்டு,
புகாரியின் விரிவுரை உம்தத்துல் காரியில் இது
பற்றிய ஒரு செய்தி உண்டு.
وقيل لأن الله تعالى أكرم فيه عشرة من الأنبياء عليهم الصلاة والسلام
بعشر كرامات
الأول موسى عليه السلام
فإنه نصر فيه وفلق البحر له وغرق فرعون وجنوده
الثاني نوح عليه السلام استوت سفينته على الجودي فيه
الثالث يونس عليه السلام أنجي فيه من بطن الحوت
الرابع فيه تاب الله على آدم عليه السلام قاله عكرمة
الخامس يوسف عليه السلام فإنه أخرج من الجب فيه
السادس عيسى عليه السلام فإنه ولد فيه وفيه رفع
السابع داود عليه السلام فيه تاب الله عليه
الثامن إبراهيم عليه السلام ولد فيه
التاسع يعقوب عليه السلام فيه رد بصره
العاشر نبينا محمد - صلى الله عليه وسلم - فيه غفر له ما تقدم من ذنبه
وما تأخر
நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் 10 நாளில் நோன்பு
வைக்க கூறியதற்கு காரணம் அன்றைய தினம் மூஸா அலை அவர்களும் அவர்களுக்கு கட்டுப்பட்ட
சுமார் ஆறு இலட்சம் யூதர்களும் எகிப்தின் கொடுமைக்கார அரசன் பிர் அவ்னிடமிருந்து அற்புதமான
முறையில் பாதுகாக்கப்பட்டார்கள் என்பதாகும்.
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ
تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا
يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى
قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ
செங்கடல் பிளந்து 12 பாதைகளாக வழி விட 12 குடும்பங்களாக
இருந்த யூதர்கள் அதன் வழியே பாதுகாக்கப்பட்டார்கள்ز அது மட்டுமல்ல யூதர்கள் பாதுகாக்கப்பட்ட அதே கடல் வழியில் அக்கிரமக்கார
பிர் அவ்னும் அவனுடைய ஆட்களும் மூழ்கடித்து அழிக்கப்பட்டார்கள் இரண்டு அற்புதங்களை
ஒரு சேர ஒரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
وَإِذْ
فَرَقْنَا بِكُمْ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ
تَنظُرُونَ(50
சத்தியத்திற்கும்
அசத்தியத்திற்கும் மிடையேயான போராட்டம் மிகத் தொன்மையானது, அதில்
அசத்தியம் சில காலம் ஆதிக்கம்
செய்தாலும் சத்தியமே இறுதியில் மகத்தான வெற்றி பெரும்
அசத்தியம் மாபெரும் தோல்வியைச் சந்திக்கும் என்ற பாடத்தை போதிப்பதில்
செங்கடல் பிளந்து வழி விட்ட
இந்த நிகழ்ச்சியில் இருப்பது கனமும் அழுத்தமும் வேறு
எந்த நிகழ்விலும் இல்லை.
அல்லாஹ் மனித
சமுதாயத்திற்கு செய்த இந்த மாபெரும் அருளை நேரிட்டு அனுபவிக்கும் வாய்ப்பை பெற்றவர்கள்
யூதர்கள்.
இதில் மேலும்
ஒரு அற்புதம் என்னவென்றால்
யூதர்கள்
80 நபர்களுக்கும் குறைவாக யாகூப் நபியின் காலத்தில் எகிப்துக்குள் நுழைந்தார்கள்,
யாகூப் அலை
எகிப்திற்குள் நுழைந்ததும் ஒரு ஆசூரா தினத்தில் தான்,
لَمَّا دَخَلُوا عَلَى يُوسُفَ آوَى إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ
ادْخُلُوا مِصْرَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ (99)
தந்தை யாகூப்
அலை தன்னை தேடி வருவதை அறிந்த் யூசுப் அலை கெய்ரோ நகரிற்கு வெளியே 4000 குதிரைப்படை
வீரர்களுடன் சென்று வரவேற்றார்கள்.
(ஊருக்கு வெளியே
அவர்கள் யூசுப் அலை அவர்களின் கூடாரத்திற்குள் நுழைந்ததை لَمَّا دَخَلُوا عَلَى يُوسُفَ என்றும் கெய்ரோ
நகருக்குள் நுழையுமாறு யூசுப் நபி அவர்களை
அழைத்ததை وَقَالَ ادْخُلُوا مِصْرَ என்றும்
அல்லாஹ் மிக அழகாக தனித்துவப்
படுத்தி எடுத்துக் கூறுகிறான்
என்பதை ஆலிம்கள் கவனிக்கவும்),
அன்றைய
தினம் எகிப்தில் திருவிழா நாளாக இருந்தது,
காரணம்
எகிப்து பட்டணத்திற்கும் நபியாக இருந்த இபுறாகீம்
நபி யின் பிறந்த நாளை
அவ்வூர்க்காரர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்,
இபுறாகீம்
அலை அவர்கள் ஆசூரா நாளில்
பிறந்தவர் தாம்.
இபுறாகீம் நபியின்
பேரர் யாகூப் நபி எகிப்துப் பட்டணத்திற்கு நுழைந்த அதே ஆசூரா நாளில் தான் பிற்காலத்தில்
யூதர்கள் ஆறு இலட்சம் பேராக பெருகி இருந்த போது எகிப்திலிருந்து அவர்கள் பாதுகாப்பாக
வெளியேற்றப்பட்டார்கள்.
இதன் மூலம்
அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளை அனுபவிக்கும் வாய்ப்பு யூத சமுதாயத்திற்கு கிட்டியது.
இதனால் பாத்திஹா
அத்தியாயத்தில் வரும் أنعمت عليهم என்ற வசனம் யூதர்களை சுட்டி நிற்கிறது.
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ
عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ (47
என்று
ஒரு வசனம் கூறுகிற போது
பாத்திஹா வசனமு குறிப்பிடு கிற
அருள் பெற்றவர்கள் எனும் சொல் யூதர்களையும்
குறிக்கிறது என்றே எடுத்துக் கொள்ள
வேண்டும்.
ஆணால் ஒரு துரதிஷ்டம்
பாத்திஹாவில்
இடம் பெற்றுள்ள غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (7)
என்ற
இரு பிரிவும் யூதர்களையே குறிக்கிறது. தவ்ராத்திற்கு மாறு செய்த செய்த
யூதர்களை غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ என்ற
வசனமும் இன்ஞீலின் அடிப்படைகளுக்கு தவற விட்ட யூதர்களை وَلَا الضَّالِّينَ என்ற
வசனமும் குறிப்பிடுகின்றன
அந்த வகையில்
பாத்திஹா அத்தியாயத்தின் கடைசி வசனம் மொத்தமும் யூதர்களையே சுட்டி நிற்கிறது.
அல்பகரா அத்தியாத்திலும்
பல வசனங்களில் அல்லாஹ் யூதர்களுக்கு தான் செய்த அருட்கொடைகளை அடிக்கடி நினைவூட்டிக்
காட்டுகிறான்.
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ
عَلَيْكُمْ
யூத
சமுதாயம் அல்லாஹ்வின் ஏராளமான மகத்தான அற்புதங்களை
நேரடியாக அனுபவித்தது.
·
செங்கடல் பிளந்து
வழி விட்டது,’
·
எதிரிகள் அவர்கள்
கண் பார்க்கவே அழிக்கப்பட்டார்கள்
·
பாறையிலிருந்து 12 நீரூற்றுகள்
கிடைத்தன
·
பாலைவனத்தின் தீஹ்
மைதானத்தில் மன்னு சல்வா எனும்
உணவுகள் கட்டணம் இன்றியும் கஷ்டம்
இன்றியும் கிடைத்தன
இது மட்டுமல்லாது
இன்னும் ஏராளம் உண்டு,
இந்த அருட்கொடைகளுக்கு
அவர்கள் தகுதியான பக்தியாளர்களாக இருந்தார்கள் என்பது இதன் பொருள் அல்ல,
அல்லாஹ் தன்னுடைய
கிருபையாலும் நபி மர்களின் பரக்கத்தாலும் இந்த அருட்கொடைகளை வழங்கினான்.
ஆனால் அல்லாஹ்வின்
இந்த மகத்தான் அருடகொடைகளை அனுபவித்து அதற்கு நன்றி கூறியவர்கள் இருக்கவே செய்தனர். அவர்களை தான் அன் அம்த அலைஹிம்
என்ற வார்த்தை குறிப்பிடுகிறது.
ஆனால் அத்தைகையோ
சொற்பமாகவே இருந்தனர்,
அத்தனை நிஃமத்துக்களையும்
அனுபவித்து விட்டு அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கு மாறு செய்தவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கு
ஆளாகினர்.
வாக்களிப்பட்ட
நிலத்திற்குள் நுழையும் போது (ஹித்துன் என்று சொல்லிச்
செல்லுமாறு அல்லாஹ் கூறிய போது அவர்கள் குரும்புத்தனமாக ஹின் ததுன் என்று சொல்லி சென்றனர்.
அவர்கள் காலரா நோயால் அழிக்கப்பட்டனர்.
அதே போல் சனிக்கிழமை மீன்பிடிக்க கூடாது என்ற
உத்தரவை வெள்ளிக்கிழமையே வலையை விரித்து வைத்து மீன்பிடிப்பதன் மூலம அல்லாஹ்வை ஏமாற்ற
நினைத்தனர் அவர்களை அல்லாஹ் குரங்குகளாக உருமாற்றினான்,
அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்து
அதற்கு நன்றி செலுத்தியதன் மூலம் முன்னுதாரனம் மிக்க மனிதர்களை கொண்டிருந்த யூத சமுதாயமே
இறை கோபத்திற்கும் வழிதவறுதலுக்கும் ஆளான சமுதாயமாக மாறியது என்பதையும் ஆஷீரா நாள்
சுட்டிக்காட்டுகிறது.
மனித சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அனைத்து
சமூகங்களுக்கும் இதில் மக்த்தான பாடம் இருக்கிறது,
நம்மில் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும்
அல்லாஹ் அவனது நிஃமத்துக்களை கணக்கின்றி பொழிந்து கொண்டே இருக்கிறான் ,
அதில் எதுவும் நமது தகுதியினால் நமக்கு கிடைக்கவில்லை
செல்வந்தவர்கள் எவருக்கும் அவருடைய தகுதியால்
செல்வம் கிடைப்பதில்லை.
கல்வியாளர்களுக்கும் பதவியில் இருப்பவர்களுக்கும்
இப்படித்தான்.
அல்லாஹ் தன்னுடைய தனிப்பட்ட அருளினாலும் அதிகாரத்தினாலும்
பல்வேறு அருட்கொடைகளை வழங்குகிறான்,
இதை நாம் சரியாக புரிந்து கொண்டு அவனுக்கு நன்றி
செலுத்த வேண்டும்
செல்வத்தை பெற்றதற்கேற்ப அமைதியை நிம்மதியை
குழந்தைப் பாக்கியத்தை அந்தஸ்த்துக்களை பெற்றதற்கேற்ப நாம் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல
வேண்டும்.
அதற்கேற்ப பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும்
நடந்து கொள்ளனும். அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கு அதற்கேற்ப செவி சாய்க்கனும்.
அப்படி செவி சாய்த்தால் அல்லாஹ் நிஃமத்துக்களை
நிரதரமாக்குவான்.
எறும்பின் மொழியை
அறிந்து கொள்ளும் வாய்ப்பு தன்க்கு கிடைத்திருப்பதை உணர்ந்ததும் அல்லாஹ்வை நோக்கியே
அவரது சிந்தனை திரும்பியது. அவனுக்கு இதற்கேற்ப நன்றி செலுத்த வேண்டுமே என்றை கவலையே
அவரை மிகைத்ததது,
وَحُشِرَ
لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا
أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ
وَهُمْ لَا يَشْعُرُونَ فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ
أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ
أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
இன்னொரு சந்தர்ப்பத்தை பாருங்கள்
قَالَ الَّذِي عِندَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ
قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِندَهُ
قَالَ هَذَا مِن فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ وَمَن
شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ
كَرِيمٌ
அல்லாஹ்வின்
அருளைப் பெற்று அதற்கு நன்றி
செலுத்திய யூதர்களுக்கு சிறந்த உதாரணம் சுலைமான
அலை அவர்கள்.
அல்லாஹ் அவருக்கு
செய்த அருட்கொடைகளை மேலும் மேலும் அதிகப்படுத்தினான்.
ஒரு கட்டத்தில்
காற்றை அல்லாஹ் அவருக்கு வாகனமாக்கினான்.
காற்றில் பறக்கும் வாய்ப்புப் பெற்ற போதும்
சுலைமான் (அலை) அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுபவராக
இருந்தார்கள்
சுலைமான் அவர்களுக்கு
கிடைத்த எந்த நிஃமத்தும் அவர்களை தற்பெருமைக் காரராக அல்லாஹ்வின் உத்தரவுகளை மீறுகிறவராக
மாற்றவில்லை.
ஆனால் அல்லாஹ்வின்
அருட்கொடைகளை தங்களது தகுதிக்கு கிடைத்தத்தாக் தப்பாக அர்த்தப்படுத்திக் கொண்டாலோ அல்லது
சட்டத்தையும் வரையரைகளை மீறுவதற்கு அக்ம்பாவம் கொள்வதற்கும் அக்கிரமம் செய்வதற்கும்
ஒரு வாய்ப்பாக ஆக்கிக் கொண்டாலோ அவர்கள் சாபத்திற்குகுரியவர்களாகவும் வழி தவ்றியவர்களாகவும்
ஆகிவிடுவார்கள்.
யூதர்களிலேயே
அதற்கு ஒரு உதாரணமாக காரூன் எனும் ஒருவன் இருந்தான்.
إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ
وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ
أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا
يُحِبُّ الْفَرِحِينَ (76) وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ
وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ
إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ
الْمُفْسِدِينَ (77) قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي أَوَلَمْ
يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِنْ قَبْلِهِ مِنَ الْقُرُونِ مَنْ هُوَ
أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَنْ ذُنُوبِهِمُ
الْمُجْرِمُونَ (78)
தனக்கு
கிடைத்த அருட்கொடைகளுக்கு தன்னுடைய கல்வித் தகுதியை காரணமாக
நினைத்தான். அழிவுக்கு ஆளானான்,
துல் கர்ணைன்
இரும்பையும் செம்பையும் உருக்கி இரும்பாலேயே ஒரு அணையை கட்டி எழுப்பிய போதும் தன்னுடைய்
சக்தி என்ன அல்லாஹ்வின் சக்தி என்ன என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் அவருடைய வார்த்தைதகள்
மிகப் பக்குவமாக அமைந்தன. குர் ஆனில் இடம் பெற்றன.
قَالَ هَذَا رَحْمَةٌ مِنْ رَبِّي فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي
جَعَلَهُ دَكَّاءَ وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا (98)
மனிதர்கள்
புரிந்து கொள்ள
வேண்டிய மிக அழுத்தமான எதார்த்தமான்
வாழ்வியல் பாடத்தை ஆஷூரா கற்பிக்கிறது.
அல்லாஹ்வின்
அருளை பெற்றவர்கள் எவரும் எந்த சமூகமும்
அதற்கு நன்றி செலுத்தி பொறுப்புடைய
சமுதாயமாக இருந்தால் அந்த அருட்கொடைகள் நிலைக்கும்.
நன்றி செலுத்தும் அளவுக்கு அவர்கள் பின்வரும் சமுதாயத்திற்கு
வழிகாட்டியாக இருப்பார்கள்.
அல்லாஹ்வின்
அருட்கொடைகளை பெற்று நன்றி கெட்ட
விதமாகவும் பொறுப்புணர்வு இல்லாமலும் நடந்து கொள்வோர் வழி
தவ்றுதலுக்கும் இறை கோபத்திற்குள் ஆளாவார்கள்,
அல்லாஹ்
நம்மை அருளைப் பெற்று நன்றி
செலுத்துபவர்களாக பொருப்புள்ளவர்களாக ஆக்குவானாக!
Super bayan
ReplyDeleteMasha allah
ReplyDelete