வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Sunday, June 25, 2017

தீனில் நிலைத்திருப்போம்.


முஸ்லிம் சமூகத்திற்கெதிரான திட்டங்கள் கொடூரமாக திட்டமிடப்படுகிற சூழலில் இந்த பெருநாளை சந்திக்கிறோம்,
நமது தவக்குல் அல்லாஹ்வின் மீது.
அல்லாஹ் அந்த சதிகாரர்களின் சபையிலும் இருக்கிறான்.
நம்முடைய வக்கீலாக.
நமக்கு வேதனைகள் பல ஏற்பட்டாலும் நம்பிக்கை இழக்க தேவையில்
அந்த வக்கீல் நமது விவகாரம் பெரிதாகி விடாமல் பாதுகாத்து விடுவான்.
மக்காவின் முஷ்ரிக்குகள் முஸ்லிம்களுக்கு எதிராக வெல்ல முடியாத பெரும் படையை தயாரித்து வருவதாக முனாபிக்குள் ஒரு வதந்தியை பரப்பினர். முஸ்லிம்களை கிலி கொள்ளச் செய்வதற்காக.

 அந்தச் செய்திகளால் முஸ்லிம்கள் கோழைகளாகி விடவில்லை. அவர்கள் ஈமான அதிகரிக்கவே செய்தது.

 الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ . الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ . فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ لَمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ ) آل عمران/172-174. 

இந்த உம்மத் சோதனைகளை ஏராளமாக சந்திக்கும் என்ற எச்சரிக்கையை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்கெனவே கூறியிருக்கிறார்கள்.

 بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنْ الدُّنْيَا . رواه مسلم

ஈமானில் நிலைத்து நின்று அவற்றை சகித்துக் கொள்ளும் போது அதற்கு கிடைக்கிற நன்மை அதிகம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.    ஒரு விதத்தில் சஹாபாக்களின் கூலியை விட அது அதிகமாக இருக்கும் என்றார்கள் . அவர்களில் ஒருவர் உங்களில் ஐம்பது பேருக்கு சமமாவார் என்றார்கள்.
எங்களில் ஐம்பது பேரா ? அவர்களில் ஐம்பது பேரா  என சஹாபாக்கள் கேட்க உங்களில் ஐம்பது பேரை விட அதிகமாக கூலி பெறுவார்கள் என பெருமானார் (ஸல்) கூறீனார்கள்.

روى الترمذي وأبوداود وابن ماجه أن رسول الله صلى الله عليه وسلم قال: ..فإن من ورائكم أياما الصبر فيهن مثل القبض على الجمر، للعامل فيهن مثل أجر خمسين رجلا يعملون مثل عملكم. وفي رواية: قيل يا رسول الله أجر خمسين منا أو منهم؟ قال: بل أجر خمسين منكم

அல்லாஹ்வின் கலீல் இபுறாகீம் அலை அவர்களே சோதனைகளிலிருந்து  தப்பிக்கவில்லை எனும் போது நாம் எம்மாத்திரம் ?  அவருக்கு எதிரான எதிரிகளின் திட்டம் எவ்வளவு கடுமையாக இருந்தது ?

 قال إبراهيم التيمي رحمه الله -من سادات التابعين- لما تلا هذه الآية قال: ومن يأمن البلاءَ بعد إبراهيم. 

நமக்கேற்படும் சிரமங்களை அல்லாஹ் நம்மை பலப்படுத்த மேற்கொள்ளும் சோதனைகளாக கருதி அல்லாஹ்வின் மீது அலாதி யான நம்பிக்கை வைப்பது முஃமின்களின் இயல்பாக இருக்க வேண்டும்,

 قال رسول الله "إذا أحب الله قومًا ابتلاهم، فمن صبر فله الصبر ومن جزع فله الجزع" [رواه أحمد



நமக்கேற்படும் தற்போதைய சோதனைகளுக்குப் பின்னால் நமது நாட்டில் அல்லஹ் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் உம்மத்திற்கும் வளப்பான ஒரு எதிர்காலத்தை வைத்திருப்பான். நிச்சயமாக!

وقال رسول الله "مَنْ يُرِد الله به خيرًا يُصِبْ منه" [صحيح البخاري

இந்த கால கட்டத்தில் நாம் அதிகம் செய்ய வேண்டியது,

1.   அல்லாஹ்வின் மீதான் தவக்குலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.;

، وقال وهب بن منبه: (غايةُ المؤمن القصوى التوكل)،
 وقال الحسن: (معنى توكل العبد على الله أن يعلم العبد أنَّ الله هو ثقتهُ).
وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

திருக்குர் ஆனில் 7 இடத்தில் இந்த ஆயத்தை அல்லஹ் கூறுகிறான்.

فقد ذُكرت في سورة آل عمران في موضعين، وفي سورة المائدة، والتوبة، وإبراهيم، والمجادلة، والتغابن.


திரும்ப திரும்ப சொல்லப்படுகிற இந்த அறிவுரை வெறும் தத்துவமாக நினைக்க வேண்டாம். இன்றை கடும் பிரச்சனைகளுக்கு இது வெல்லாம் போதாது என்று கருத வேண்டாம். முஃமின்களின் அடிப்படையான பேராயுதம் இது.

அல்லாஹ் நமக்கு போதுமானவன் என்ற தவக்குலை உறுதிப்படுத்திக் கொள்வோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பான். நமக்கு பரக்கத் செய்வான்.

தவக்குலின் அடையாளமாக அல்லாஹ்வின் திக்ரை அதிகப்படுத்துவோம்.

எதிரிகளின் சூழ்ச்சிகளை எதிர் கொள்ள திருக்குர் ஆன் கற்பிக்கிற ஆயுதம் இது

பத்று யுத்ததில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் சொன்ன அறிவுரை இது

பத்று யுத்தம் நடந்த அன்றைய பகலில் இறங்கிய வசனம் இது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ (45)

கான்ஸ்டாண்டி நோபிளை சுப்னாஹல்லா சொன்னவர்களாக முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 فإذا جاؤوها نزلوا فلم يقاتلوا بسلاح ولم يرموا بسهم، قالوا: لا إله إلا الله والله أكبر فيسقط أحد جانبيها


2.   மார்க்கத்தை முன்னிருத்தி அதன் பெரு நிழலில் நிலத்திருப்போம் என்ற உறுதிப்பாட்டை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

الثبات في الدين   சோதனைகளில் வெற்றியை தரும் முக்கிய வழியாகும்.
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَن ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا (28)

ரமலானில் ஏராளமான நல் அமல்களை செய்தோம்  அல்லாஹ் அவற்றை அங்கீகரிக்கட்டும்.

ரமலானுக்கு பின்னுள்ள காலத்தில் மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.

மார்க்க விவாகரத்தில் தற்பெருமை கொண்டு நடந்து கொள்வது தீனில் நிலைத்திருக்க விடாமல் செய்து விடும்

கஸ்ஸான்களின் அரசன் முஸ்லிமானார் ஒரு சின்ன தற்பெருமை அவரிடமிருது தீனைப் பறிந்து விட்டது.

جبلة بن الأيهم بن جبلة بن الحارث بن أبي شمر، واسمه المنذر بن الحارث، وهو آخر ملوك الغساسنة في الشام. حكم ما بين عامي 632 و638 ميلادية. وكان بذلك الملك السادس والثلاثين في سلالة الغساسنة الذين كانوا متحالفين مع الروم قبل الإسلام، وهم من النصارى العرب.
ولما خاف على حكمه من الزوال لما كان عليه من حروب مع البيزنطة أسلم ثم كتب إلى الخليفة عمر بن الخطاب رضي الله عنه يستأذنه في القدوم عليه، ثم قدم إلى المدينة ولما دخل على عمر رضي الله عنه رحب به وادنى مجلسه! ثم خرج في موسم الحج مع  عمر رضي الله عنه فبينما هو يطوف بالبيت إذ وطىء على ازاره رجل فقير من بني فزارة فالتفت اليه جبلة مغضبا فلطمه فهشم انفه فغضب الفزاري واشتكاه إلى عمر بن الخطاب رضي الله عنه فبعث اليه فقال: ما دعاك يا جبلة إلى ان لطمت اخاك في الطواف فهشمت انفه! فقال:انه وطىء إزاري ولولا حرمة البيت لضربت عنقه. فقال له عمر:اما الان فقد اقررت فاما ان ترضيه والا اقتص منك بلطمك على وجهك.
قال: يقتص مني وانا ملك وهو سوقة! قال عمر رضي الله عنه:يا جبلة ان الإسلام قد ساوى بينك وبينه، فما تفضله بشيء الا التقوى. قال جبلة:اذن أتنصر... قال عمر رضي الله عنه: من بدل دينه فاقتلوه.
وحدثت منازعة بين بني جبلة وبني فزارة كادت تؤدي إلى حرب دامية وبعدها اجلت الحرب إلى غد وحينها لما كان الليل خرج جبلة واصحابه من مكة وسار إلى القسطنطينية فتنصر، ثم ما زال على نصرانيته حتى مات.
ஜபலா மதீனாவை விட்டு ஓடிய பிறகு அவருக்கு நேர்வழி காட்ட ஒரு தூதரை உமர் ரலி அனுப்பி வைத்தார்கள். தூதர் ச் என்ற போது அவர் மது அருந்திக் கொண்டிருந்தார். தூதர் அவரிடம் உமர் ரலி அவர்கள் மிகுந்த கருணையோடு அவரை திரும்ப அழைத்து வரச் சொன்னதை சொன்னார். ஜபலாவின் கண் கலங்கியது. எனக்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்பை நான் தவற விட்டு விட்டேன். என்று அழுதார். ஆனால் திரும்பி வரவில்லை.
தூதர் திரும்பி வந்து உமர் ரலியிடம் விவரத்தை கூறினார்கள். அவர் அழுததை கண்டு ஆதங்கப்பட்ட உமர் ரலி அவர்கள் அவர் குடிக்கிறாரா எனக் கேட்டார்கள் . ஆம், என தூதர் பதில் கூறினார். அப்படியானால் இனி அவர் திருந்த வழியில்லை. அவர் நேர்வழியிலிருந்து தூரமாகி விட்டார் என்றார்கள்.
அப்படியே அவர் கிருத்துவராக மரணித்தார்.

மார்க்கத்தில் நமது உறுதிப்பாட்டை நாம் நிலை நாட்ட தவறினால் நமது சொந்த வாழ்க்கையும் ஆபத்திற்குள்ளாகும். சமுதாய வாழ்வும் சரிவு காணும்.

எனவே சோதனையான கால கட்டத்தில் மக்கள் தமது சன்மார்க்க ஈடுபாட்டை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சிக்கல்களுக்கான உலகளாவிய வழி முறைகளையும் சாதுர்யமான நடவடிக்கைகளை சிந்திக்க வேண்டும்.

·         அரசியல் ரீதியாக ஒன்று படுவது
·         சச்சரவுகளை ஏற்படுத்தாதவாறு நடந்து கொள்வது
·         சமுதாய ரீதியாக அதிக பிரச்சனைகளை உருவாக்காமல் இருப்பது
·         நற்குணம் கொண்டவர்களாக அனைத்து துறைகளிலும் நடந்து கொள்வது
இத்தனைக்கும் பிறகு

துணிந்து நிதானமாக எதிர்ப்புக்களையும் தாக்குதல்களையும் எதிர்கொள்வது நமக்கு வெற்றி யை நிச்சயமாகும்.

அல்லாஹ் இந்த ரமலானை நமக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமலாக அங்கீகரிப்பானாக!
உம்மத்தின் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் ஈமானுடன் நிலைத்திருக்க அல்லாஹ் கிருபை செய்வானாக!


No comments:

Post a Comment