வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 29, 2017

ரமலானுக்குப் பின்னே ! பாவங்கள்!! கவனம்!!!

ரமலானில் பல நல் அமல்களை செய்தோம்.
அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியவர்களாக – அவனுக்கு  நெருக்கமானவர்களாக இருந்தோம்.
அல்லாஹ்விற்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய காரியங்களிலிருந்து விலகி இருந்தோம். சைத்தானை தூரத்தில் நிறுத்தி இருந்தோம்.  
இதோ ரமலான் விடை பெற்று விட்டது.
வாசமற்ற மலராக , சுவையற்ற உணவாக நமது ரமலான் ஆகிவிடக்கூடாது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
ரம்லானில் நாம் செய்த அமல்களுக்கான அல்லாஹ் கூலியை நிச்சயம் தருவான்.
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا

நன்மைகள் விசயத்தில் நமக்கு இரண்டு வகையான கவனங்கள் அவசியம்.
நாம் செய்யும் நற்செயல்களுக்கான கூலி நமது தலைமுறைகளுக்கும் சென்று சேருகிற வகையில் அமையுமா என்பதை கவனிக்க வேண்டும். அதே போல நமது மரணத்திற்குப்பின்னரும் நற்கூலிகள் நம்மை வந்து சேர்ந்து கொண்டிருக்குமா என்பதையும் கவனித்து செயல்பட வேண்டும்.
மதீனாவில் மஸ்ஜிதுன் னபவீ பள்ளிவாசல் இபோது 24 மணி நேரம் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. எத்தனை ஓளி விளக்குகள் ? அலங்கார விளக்குகள் ? எண்ணிப் பார்ப்பதே கூட சிரமாமனது.
ஆனால்
மதீனா பள்ளிவாசலில் முதன் முதலாக வெளிச்சம் தரும் விளக்குகளை மாட்டியவர். சிரியாவிலிருந்து இஸ்லாமை தழுவிய நபித்தோழர் தமீமுத்தாரி ரலி.
أن النبي الكريم دخل للمسجد مرة رأى قناديل جميلة جداً مضاءة قال: من فعل هذا قالوا: تميم الداري كان في الشام وجاء للمدينة فاشترى فوانيس وربطها بحبال وأشعلها وقت الصلاة فلما جاء النبي قال: نور الله قلبك يا تميم لقد نورت الإسلام !

அவரது நன்மையின் பாரம்பரியம் எத்தகையது என்று யோசித்துப் பாருங்கள்!
இதைப் போல நாம் செய்கிற நன்மைகள் நிலைத்த பலனை தரக்கூடிய வகையில் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக கவனம் செலுத்த வேண்டியது.
நாம் நிலையாக நன்மை செய்ய வேண்டும். தஹஜ்ஜுத்
·         திலாவத்
·         நபிலான நோன்புகள்

போன்ற நல்ல அமல்கள் ரமலானோடு நின்று விடக் கூடாது.
அமல்கள் குறைவாக இருந்தாலும் கூட நிலையாக இருப்பதே அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது.
ஆயிஷா அம்மாவிடம் அப்படி ஒரு வழக்கம் இருந்தது என முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸ் தெரிவிக்கிறது..
عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله تعالى أدومها وإن قل قال وكانت عائشة إذا عملت العمل لزمته

பெருமானாரின் பழக்கமும் அப்படியே இருந்தது.

حِينَ سُئِلَت عَائِشَةُ - رَضِيَ اللهُ عَنهَا - عَن عَمَلِهِ قَالَت: كَانَ عَمَلُهُ دِيمَةً. رَوَاهُ البُخَارِيُّ

ஈஸா நபியின் கூற்றை அல்லாஹ் குர் ஆனில் பாராட்டுகிறான்.

﴿ وَأَوصَاني بِالصَّلاةِ وَالزَّكَاةِ مَا دُمتُ حَيًّا 

நிலையான நன்மைகளுக்கு கணக்கற்ற கூலி கிடைக்கும் என திருக்குர் ஆன் கூறுகிறது.
إِنَّمَا يُوَفىَّ الصَّابِرُونَ أَجرَهُم بِغَيرِ حِسَابٍ

ரமலானுக்கு அடுத்த நாட்களில் நாம் கவனத்தில் வைக்க வேண்டிய மிக முக்கியமான விசய்ம்.
ரமலான் அன்றையாட வாழ்வில் இடம் பெற்று வந்த பல்வேறு தவறுகளிலிருந்து நம்மை பாதுகாத்தது.
சிகரெட், டி விசினிமா, பொய், தீய பேச்சுக்கள் போல இன்னும் பல. 

தீமைகளிலிருந்து விலகி நிற்கும் பழக்கம் தொடர வேண்டும்.

புனிதம் மிக்க மாதம் முடிந்து விட்டது என்ற தைரியத்தில் தீமைகளுக்கான வாசலை நாம் திறந்து வைத்து விடக் கூடாது.

அது பெரும் நஷ்டத்தை தேடிக் கொள்ளும் அணுகுமுறையாகும் . அல்லாஹ்வின் எச்சரிக்கை ஒன்றை கவனிப்போம்.

أَيَوَدُّ أَحَدُكُم أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِن نَخِيلٍ وَأَعنَابٍ تَجرِي مِن تَحتِهَا الأَنهَارُ لَهُ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعصَارٌ فِيهِ نَارٌ فَاحتَرَقَت كَذَلِكَ يُبَيِّنُ اللهُ لَكُمُ الآيَاتِ لَعَلَّكُم تَتَفَكَّرُونَ

நன்மைகளுக்குப் பிறகு நஷ்டம் ஏற்பட நாம் அனுமதிக்கலாமா ?

நல்லடியார்கள் வழக்கமாக இப்படி அறிவுறுத்துவார்கள்

لا يَكُنْ مِنكُم - عِبَادَ اللهِ - إِتبَاعٌ لِصَالِحِ الأَعمَالِ في رَمَضَانَ بِأَعمَالٍ سَيِّئَةٍ، فَيَحتَرِقَ بُستَانُ الحَسَنَاتِ وَتَذهَبَ نُضرَتُهُ وَبَهَاؤُهُ، اِتَّقُوا اللهَ!


பாவங்களை மூன்று வகையாக பிரிக்கப்படும்.
1.  சைத்தானிய தூண்டுதலால் ஏற்படும் பாவங்கள்
பொறாமை, அக்கிரமம். தற்பெருமை, ஷிர்க், மோசடி, சதி, ஏமாற்றுதல்
இவை அனைத்தும் சைத்தானின் தூண்டுதலால் ஏற்படுவதால் இவற்றை ஷைத்தானிய பாவங்கள் துனூபு சைத்தானி என்றழைக்கபடுகிறது.

2.  விலங்குப் பாவங்கள்

சிங்கம் மானை வேட்டையாடுகிறது. எலியை பூனை கவ்வுகிறது. அவை என்ன பாவம் செய்தன. அது போல பிற மனிதர்களுக்கு அநீதி இழைக்கிற காரியங்கள் கொடிய மிருகப்பாவங்கள் எனப்படுகின்றன. (ذنوب سبعية)

3.       மிருகத்தனமாக பாவங்களை

வயிற்றின் தேவை , காம இச்சையினால் விளையும் பாவங்கள் மிருகப்பாவங்கள் .

மிருகங்களுக்கு சாப்பிடுவதையும் உறவு கொள்வதையும் தவிர வேறு வேலை இல்லை என்பதால் இப்படி நடந்து கொள்வதை ذنوب بهيمية   எனபடுகின்றன.

இந்த பாவங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான பின்விளைவுகள் உண்டு

முதல் வகை பாவங்களின் இறுதி எல்லை ஷிர்க்கில் கொண்டு போய்ச் சேர்க்கும்.

இரண்டாவது பாவ்ங்களின் இறுதி எல்லை கொலை போன்ற கொடிய செயல்களில் கொண்டு போய்ச் சேர்க்கும்.

மூன்றாவது வகைப் பாவங்களின் எல்லை விபச்சாரம் கற்பழிப்பு பெண்களை மான பங்கப் படுத்துதலில் கொண்டு போய்ச் சேர்க்கும்.

இந்த மூன்று விளைகளையும் ஒனறாக திருக்குர் ஆனின் புர்கான் அத்தியாயத்தின்  வசனம் ஒன்றாக குறிப்பிடுகிறது.


وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًا (68)
 இவை தவிர 70 க்கும் மேற்பட்ட பின் விளைவுகள் பாவங்களால் ஏற்படும் என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் .

அவற்றில் சிலதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம் . இந்தப் பின் விளைவுகள் ஒவ்வொன்றையும் விளக்கி ப் பேசுவதானால் ஒவ்வொன்றும் ஒரு தனி தலைப்பிற்குரியவை. இதன் கனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


1.     فساد القلب وظلمته
2.     قلة التوفيق
இதுவே பெரிய சோதனை , தொழுவத்ற்கு மனம் வராது, குர் ஆன் ஓத மனம் வராது. து ஆ கேட்க மனம் வராது. இது போல இன்னும் பல

3.     حرمان العلم والرزق وبركة العمر
4.     تعسير أموره  وعدم قضاء حاجاته
5.     وهن قلبه وبدنه
6.     سقوط من عين ربه
7.      العودة علي المعاصي
8.      ذهاب الحياء
9.      صاحب المعاصي يدخل تحت لعنة رسول الله
10.  تضعف في القلب تعظيم الرب


முஹம்மது பின் சீரீன் ரஹ் அவர்கள் ஒரு முறை கடனில் சிக்கினார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் இவ்வாறுகூறினார்கள்

‘ني لاعرق هذا الغم بذنب اصبته منذ أربعين سنة

பாவங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பின் விளைவு உண்டு.
எனவே ரமலானிய உணர்வுகளை அதற்கு பின்னரும் கடை பிடிப்போம்.
நிறைய நன்மை செய்ய முடியாவிட்டாலும்
உண்மையில், தவறு செய்யாமலிருப்பதே ஒரு வணக்கமாகும்.
عَنْ أَبِي ذَرٍّ أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ قَالَ أَوَ لَيْسَ قَدْ جَعَلَ اللَّهُ لَكُمْ مَا تَصَّدَّقُونَ إِنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ قَالَ أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرًا  - مسلم

عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال : { على كل مسلم صدقة قيل : أرأيت إن لم يجد ؟ قال : يعتمل بيديه فينفع نفسه ويتصدق قال : أرأيت إن لم يستطع ؟ قال : يعين ذا الحاجة الملهوف قال : قيل له : أرأيت إن لم يستطع ؟ قال : يأمر بالمعروف أو الخير قال : أرأيت ؟ إن لم يفعل قال : يمسك عن الشر فإنها صدقة } . 

ரமலானை தொடர்ந்து வருகிற இன்றை ஜும் ஆவில் புதிய சபதங்களுக்கு உறுதியேற்போம்.


அல்லாஹ் நன்மைகள் அனைத்திற்கும் தவ்பீக் செய்வானாக!

No comments:

Post a Comment