வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 09, 2017

காலித் பின் வலீத் ரலி ஆக்க கர வாழ்வின் முன்னோடி

அல்லாஹ்வின் வாள்
ஹிஜ்ரீ 8 ம் ஆண்டு இதே போன்ற தொரு சபர் மாதத்தில் காலித் பின் வலீத் ரலி அவர்கள் இஸ்லாமைத் தழுவினார்கள்.
அவர் இஸ்லாமைத் தழுவியது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் ?
அவரும் அம்ருப்னுல் ஆஸ் ரலி அவர்களும் இஸ்லாமை தழுவ முடிவெடுத்து மதீனாவை நோக்கி வந்ததை அறிந்த பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் . மக்கா தனது ஈரலின் துண்டுகளை நம்மை நோக்கி தந்துவிட்டது என்றார்கள்.
قال الرسول: "إن مكة قد ألقت إلينا أفلاذ كبدها
காலித் பின் வலீத் ரலி அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தனித்துவம் பெற்ற iconic personality ஆக திகழ்ந்தார்கள்.’

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் இவரால் முஸ்லிம்கள் அடைந்த இழப்பு பெரியது.இஸ்லாத்தை ஏற்றபிறகு இவரால கிடைத்த வெற்றி பெரியது

அதனால் இஸ்லாமிய வரலாற்றின் ஹீரோக்களில் முக்கியமானவர் காலித் (ரலி)


எப்போதும் பத்தோடு பதினொன்றாக வாழ்வது என்ற வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுக்க கூடாது. தனித்துவம் பொருந்திய ஒரு வாழ்க்கைகு ஆசைப்பட வேண்டும். நான்  ஒரு ஆக்ககரமான மனிதராக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிற இளைஞர்கள் , பிரமுகர்கள்அனைவருக்கும்
காலித் ரலி அவர்கள் வீரம் மிக்க ஒரு முன்னுதாரணமாகும்
.வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என ஆசைப்படுலுக்குரிய வாழ்க்கைகு சொந்தக்காரர் அவர்.
இன்றைய முஸ்லிம் இளைஞர்களும் பொதுமக்களும் பொதுவாக கும்பல் மனப்பான்மையில் வாழ்கிறார்கள். ஒரு குழுவில் அல்லது அமைப்பில் அல்லது கட்சியில் இருப்பதை சில கூட்டங்களில் கலந்து கொள்வதை போராட்டங்களுக்கு போஸ்டர் ஒட்டுவதையே பெரிய ஜிஹாதாக கருதுகிறார்கள். நாம் எத்தகைய ஆக்ககரமான ஆள் என்று அவர்கள் தம்மை தாமே பரிசீலித்துக் கொள்வதே கிடையாது,
உண்மையில் இன்றைய இஸ்லாமிய உலகிற்கு தேவைப்படுவது தனியான சிறப்பம்சங்களை கொண்ட ஆக்ககரமான மனிதர்களே ஆவர். கூட்டத்தை காட்ட உதவுகிற - காலி இருக்கைகளை நிரப்புகிறவர்கள் அல்ல.

உலகின் மிக மரியாதை விசயம் ஆக்ககரமான மனிதர்கள்.

உமர் ரலி அவர்களின் ஆசை
 أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ لأَصْحَابِهِ : تَمَنَّوْا ، قَالَ أَحَدُهُمْ : أَتَمَنَّى أَنْ يَكُونَ مِلْءُ هَذَا الْبَيْتِ دَرَاهِمَ ، فَأُنْفِقَهَا فِي سَبِيلِ اللَّهِ ، فَقَالَ : تَمَنَّوْا فَقَالَ أَحَدُهُمْ : أَتَمَنَّى أَنْ يَكُونَ مِلْءُ هَذَا الْبَيْتِ ذَهَبًا ، فَأُنْفِقَهُ فِي سَبِيلِ اللَّهِ ، قَالَ : تَمَنَّوْا قَالَ آخَرُ : أَتَمَنَّى أَنْ يَكُونَ مِلْءُ هَذَا الْبَيْتِ جَوْهَرًا - أَوْ نَحْوَهُ - فَأُنْفِقَهُ فِي سَبِيلِ اللَّهِ . فَقَالَ عُمَرُ : تَمَنَّوْا . فَقَالَ : مَا تَمَنَّيْنَا بَعْدَ هَذَا قَالَ عُمَرُ : لَكِنِّي أَتَمَنَّى أَنْ يَكُونَ مِلْءُ هَذَا الْبَيْتِ رِجَالا ، مِثْلَ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ ، وَحُذَيْفَةَ بْنِ الْيَمَانِ ، فَأَسْتَعْمِلَهُمْ فِي طَاعَةِ اللَّهِ . قَالَ : ثُمَّ بَعَثَ بِمَالٍ إِلَى حُذَيْفَةَ قَالَ : انْظُرْ مَا يَصْنَعُ قَالَ : فَلَمَّا أَتَاهُ قَسَمَهُ ثُمَّ بَعَثَ بِمَالٍ إِلَى مُعَاذِ بْنِ جَبَلٍ . فَقَسَمَهُ ، ثُمَّ بَعَثَ بِمَالٍ - يَعْنِي إِلَى أَبِي عُبَيْدَةَ - قَالَ : انْظُرْ مَا يَصْنَعُ ، فَقَالَ عُمَرُ : قَدْ قُلْتُ لَكُمْ –

நாம் நாம் எந்த துறையில் இருக்கிறோமோ அந்த துறையில் கல்வி. பொருளாதாரம். அரசியல், சமூக நலப்பணிகள் என நாம் ஈடுபடும் துறையி ஆக்கரமான மனிதராக இருக்க வேண்டும். அதற்காக ஆசைப்படவும் முயற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டும்.

ஆக்கரமாக மனிதர் என்றால் இன்ன நல்ல காரியம் இவரால் நடந்தது என வரலாறு பேச வேண்டும். – குறைந்த பட்சம் முன்னோடியான இன்ன நல்ல காரியத்தை நான் செய்தேன் என நம்முடைய மனசாட்சி நமக்கு சான்றளிக்க வேண்டும்.

நானும் நீங்களும் அப்படி ஆக நினைத்தால் காலித் பின் வலீத் ரலி அவர்களின் முன்னோடி அம்சங்களை ஒன்று விடாமல் கவனிக்க வேண்டும்.

வரலாறு

காலித் ரலி மக்காவின் மிகவும் செல்வாக்கான பனூமக்சூம் குடும்பத்தில் முகீராவின் வம்சத்தில் பிறந்தவர்

அவரது முழுப்பெயர் أبو سليمان خالد بن الوليد بن المغيرة المخزومي என்பதாகும்.
அவரது தந்தை வலீத் மக்காவின் பெரும் செல்வந்ர் மட்டுமல்ல. மாபெரும் கொடையாளிகுறைஷிகளின் வசந்தம் எனப் போற்றப்பட்டவர். நிகரற்றவர் என்று வாழ்த்தப் பெற்றவர்

أحد أغنى أغنياء مكة في عصره حتى أنه سمّي "بالوحيد" و"بريحانة قريش"،

ஹஜ்ஜின் போதும் உக்காழ் சந்தையின் போதும்  தனது அடுப்பை தவிர வேறு யாரும் அடுப்பு மூட்டக் கூடாது என உத்தரவிட்டவர். கஃபாவுக்கு தரையிட்டவர்

·         أنه كان يرفض أن توقد نار غير ناره لإطعام الناس خاصة في مواسم الحج وسوق عكاظ،
·         أن قريش كانت تكسو الكعبة عامًا ويكسوها الوليد وحده عامًا

காலித் ரலி உடல் தோற்றம் உமர் ரலியின் தோற்றம்

காலித் ரலி நல்ல உயரம் கணத்த உடல், பெரிய தலை அடர்ந்த தாடி ஆகிய உருவத்தில் உமர் ரலி அவர்களைப் போலவே இருப்பார்கள். பார்வை குறைவுள்ளவர்கள் இருவரையும் குழப்பிக் கொள்வது அடிக்கடி நடக்கும்

شديد الشبه بعمر بن الخطاب، حتى أن ضعاف النظر كانوا يخلطون بينهما

காலித் ரலி அவர்களி மிகச் சிறந்த குதிரை ஏற்றம் செய்வதிலும் - வாள் வீசுவதில் மிகவும் வல்லவராக  பயிற்சி பெற்று கொண்டார். பித்தோழர்களில் சுபைர் ரலி அவர்களும் காலித் ரலி அவர்களும் இரு கையாளும் வாளை சுழற்றும் ஆற்றல் வாய்ந்தவர்கள என வரலாறு கூறுகிறது.

இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகிய அம்சங்கள் யுத்தக் கலையில் வல்லவராக அவரை நிலைப்படுத்தின அவரது அறிவு நுட்பம் மிக்க  நகர்வும் ஒவ்வொரு வரலாற்றில் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த  இரண்டு ம் இன்றைய இளைஞர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
·         ஒரு துறையில் தன்னை பலப்படுத்திக் கொள்வது.
·         தனது நடவடிக்கள் ஒவ்வொன்றும் விளைவுகளை ஏற்படுத்துமாறு அமைத்துக் கொள்வது.

முஹம்மது (ஸல்) அவர்களது பிரச்சார காலத்தில் காலித் ரலி அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தகவல்கள் அதிகமாக இல்லை.

பத்று யுத்தத்தில் அவர் பங்கேற்கவில்லை. அந்த நேரத்தில் அவர் சிரியாவுக்கு பயணம் சென்றிருந்தார்.

பத்று யுத்தத்தில் அவரது சகோதரர் வலீது முஸ்லிம்களிடம் கைதியாக சிக்கிய போது அவரை பணயத் தொகை கொடுத்து விடுவிப்பதற்காக மதீனாவிற்கு காலித் வந்தார். விடுவித்தார்.
அல்லாஹ்வின் நாட்டம் விடுதலை பெற்ற அவருடை சகோதரர் வலீத் மனம் மாறி இஸ்லாமை தழுவி மதீனாவிற்கே ஓடி வந்து விட்டார்.

இந்த வலீத் ரலி அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காலித் ரலி இஸ்லாமாவதற்கு அவரும் ஒரு காரணமாக இருந்தார். அதை பின்னர் அறிந்து கொள்வீர்கள்.

ஹிஜ்ரீ 3 ம் வருடத்தில் நடை பெற்ற உஹத் யுத்தத்தில் காலித் ரலி அவர்கள் காபிர்களின் தரப்பில் ஆற்றிய முதல் பங்கு அவர் யார என்பதை திரும்பி பார்க்க வைத்தது..

அவர் தான் காபிர்களின் 200 பேர் கொண்ட குதிரைப்படைக்கு தலைவராக இருந்தார். ஆரம்பத்தில் ஏற்பட்ட தோலிக்குப் பின் தோற்று ஓடிக் கொண்டிருந்த போது பெருமானார் (ஸ்ல்) அவர்கள் பாதுகாக உத்தரவிட்டிருந்த மலை முகட்டை சஹாபாக்கள் பாதுகாக்காது இறங்கிவிட்டதை ஓடிக் கொண்டே கண்டறிந்து அதன் வழியே படைகளை விரைந்து நடத்தி பின்னாலிருந்து முஸ்லிம்களை தாக்கி மூஸ்லிம்களால் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் தோல்வியை கொடுத்தவர் காலித (ரலி)

காபிர்களின் தோல்வியை வெற்றியாக மாற்றியதில் காலித் என்ற ஒற்றை மனிதரின் பங்கே பிரதானமானது. காபிராக இருந்த போது முஸ்லிம்களுக்கு பெரும் நட்டத்தை தந்தவர் என்ற பெயருக்கு அவர் ஆளான போது அவருக்கு வயது 23.

ஹிஜ்ரீ 6 வது வருடம் உம்ராவுக்கு வந்த பெருமானார் (ஸல்) அவர்களையும் ஆயிரத்து நானூறு சஹாபாக்களையும் மக்காவின் காபிர்கள் மக்காவிற்குள் நுழை விடாமல் தடுத்தனர். அப்போது முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும் இடையே ஹுதைபிய்யா எனும் இடத்தில் ஒரு ஒப்பந்தப் ஏற்பட்டது.

அப்போது மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்ததில் காலிதின் குதிரைப்படைக்கு முக்கியப் பங்கு இருந்தது. காலித் தான் மக்காவின் வாசலை அடைத்துக் கொண்டு தனது படையை நிறுத்தி இருந்தார். காலிதின் படையை முறியடித்து மக்காவிற்கு நுழைய பெருமானார் (ஸல்) அவர்கள் முயலவில்லை. பாதையை திருப்பிச் சென்று வேறு மார்க்கமாக ஹுதைபிய்யாவில் முகாமிட்டார்கள்.  அங்கு முஸ்லிம்களுக்கும் மக்காவின் காபிர்களுக்கும் உடன் படிக்கை ஏற்பட்டது.

அந்த வகையில் அந்த வருடம் மக்காவிற்குள் நுழைய விடாமல்  முஸ்லிம்களை தடுத்து நிறுத்தியதில் காலிதின் பங்கு பிரதானமானது.

ஹுதைபிய்யாவின் களத்தில் காலித் ரலி அவர்களின் மனமாற்றத்திற்கான ஒரு முதல் நிகழ்வு நடந்தது.

ஹுதைபிய்யா மைதானத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு லுஹர் தொழுகையில் ஈடுபட்டிருந்தார்கள்., காலித் எதிர் தரப்பில் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார். முஸ்லிம்கள் அனைவரும் பெருமானாருக்குப் பின்னே நின்று தொழுது கொண்டிருந்தனர். அப்போதுதான் அவருக்கு அந்த தீய எண்ணம் திடீரெனத்  தோன்றியது. “இவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது முஹம்மதை தாக்கி கொன்றிருக்கலாமே! வாய்ப்பை தவறவிட்டு விட்டோமே  “ என நினைத்தார். அடுத்து மாலை வேளையில் இவர்கள் தொழுகிற போது தமது திட்டத்தை நிறைவேற்றி விட வேண்டும் என முடிவு செய்தார்.

இதயங்களை படிக்கிற அல்லாஹ்வுக்கு இந்த திட்டத்திற்கு ஒரு மாற்றுத்திட்டத்தை அன்றைய லுஹருக்கும் அஸருக்கும் இடையில் அருளினான். அது தான் அச்சநேரத் தொழுகை.

ذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً وَلا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ كَانَ بِكُمْ أَذىً مِنْ مَطَرٍ أَوْ كُنْتُمْ مَرْضَى أَنْ تَضَعُوا أَسْلِحَتَكُمْ وَخُذُوا حِذْرَكُمْ إِنَّ اللَّهَ أَعَدَّ لِلْكَافِرِينَ عَذَاباً مُهِيناً ) النساء/102 .

யுத்த காலத்தில் பெருமானாருக்குப் பின்னே நின்று தொழுகிற போது ஒரு அணி தொழுகையில் இருக்க வேண்டும் இன்னொரு அணி பாதுகாப்பில் இருக்க வேண்டும். இரண்டு ரகஅத்திற்குப் பிறகு அவர்கள் வந்து இணைந்து கொள்ள இவர்கள் பாதுகாப்பிற்கு சென்று விட வேண்டும். பிறகு இரு அணிகளும் தனித்தனியாக தொழுகையை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கினான்.

போர்க்கலையில் வல்லவரான காலித் (ரலி )அஸர் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார், அச்சநேரத்த் தொழுகையின் முறையைப் பார்த்ததும் அவரது மனதில் ஏற்பட்ட முதல் சிந்தனை “ முஹம்மதுவுக்கு நமது திட்டம் தெரிந்து விட்டது என்பது தான்.

ஒரு வகையில் அச்சமும் இன்னொரு வகையில் பெரும் சிந்தனையும் அவரை ஆட்கொண்டது,.’

ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின் படி அடுத்த வருடம். அதாவது ஹிஜ்ரீ 7 ம் ஆண்டு உம்ராவை நிறைவேற்ற மக்காவிற்கு பெருமானாரும் முஸ்லிம்களும் வந்தனர்., மக்காவின் காபிர்கள் ஊரைக் காலி செய்து விட்டு மலைப் பகுதிகுள் சென்று விட்டனர். அங்கிருந்து கொண்டு மறைந்து நின்று முஸ்லிம்களை பார்த்துக் கொண்டு நின்றனர்.  காலித் ரலி அப்போது அங்கிருக்க விரும்பவில்லை. அவர் வெளியூருக்கு சென்று விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் காலிதின் சகோதரர் வலீத் பெருமானாருடன் இருந்தார். அப்போது அவரிடம் பெருமானார் (ஸல் ) காலித ரலி அவர்களைப் பற்றி விசாரித்தார்கள்.
அந்த விசாரணை ஒரு அற்புதமான தலைவருக்குரியது. அப்போது பெருமானார் (ஸல்) பயன்படுத்திய சொற்கள் மிகச் சிறந்த ஒரு சீர்திருத்த வாதிக்குரியது.  பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வார்த்தையில் காலித் ரலி அவர்களின் முக்கியத்துவத்தை புலப்படுத்தியது. அதே வார்த்தைகள் காலித் ரலி அவர்களின் ஈமானுக்கு காரணமானது.

ஹாபிழ் இப்னு கஸீர் சீரத்துன் னபவிய்யாவில் எழுதுகிறார் :

 ودخل الرسول صلى الله عليه وسلم مكة في عمرة القضاء فسأل الوليد عن أخيه خالد، فقال: «أَيْنَ خَالِدٌ؟» فقال الوليد: يأتي به الله.
فقال النبي صلى الله عليه وسلم: «مَا مِثْلُهُ جَهِلَ الْإِسْلَامَ، وَلَوْ كَانَ يَجَعَلَ نِكَايَتَهُ مَعَ المُسْلِمِينَ عَلَى المُشْرِكِينَ كَانَ خَيْرًا لَهُ، وَلَقَدَّمْنَاهُ عَلَى غَيْرِهِ». فخرج الوليد يبحث عن أخيه فلم يجده، فترك له رسالة قال فيها: «بسم الله الرحمن الرحيم، أمَّا بعدُ.. فإني لم أَرَ أعجب من ذهاب رأيك عن الإسلام وَعَقْلُهُ عَقْلُكَ، ومِثْلُ الإسلام يجهله أحدٌ؟! وقد سألني عنك رسول الله صلى الله عليه وسلم، فقال: «أَيْنَ خَالِدٌ؟» -وذَكَرَ قولَ النبي صلى الله عليه وسلم فيه- ثم قال له: فاستدركْ يا أخي ما فاتك فيه؛ فقد فاتتك مواطن صالحة». وقد كان خالد –رضي الله عنه- يُفَكِّر في الإسلام، فلمَّا قرأ رسالة أخيـه سُرَّ بها سرورًا كبيرًا، وأعجبه مقالة النبـي صلى الله عليه وسلم فيه، فتشجَّع وأسلـم

ஏரளமான பாடங்களை இந்தச் செய்தி உள்ளடக்கி இருக்கிறது. ‘’
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆக்ககரமான பெரு மனிதர், இன்னொரு ஆக்ககரமான மனிதர் குறித்த்து பயனபடுத்திய வார்த்தைகளூம் அதற்குள்ளிருந்த உள்ளார்ந்த ஈடுபாடும் காலித் (ரலி) அவர்களை தீனுக்குள் கொண்டு வந்து விட்டது.
தன்னை கொலை செய்ய அவர் திட்டமிட்டத்தை உஹதில் தோல்வியை கொடுத்ததை ஹுதைபிய்யாவில் மகாவிற்கு அனுமதிக்காமல் தடுத்ததை பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பொருட்டாகவே கருத வில்லை, இவரைப் போன்ற ஒருவர் தீனுக்கு கிடைத்து விட்டால் எவ்வளவு நன்மையாக இருக்கும் என்றே சிந்தித்தார்கள்.

என்னே மகத்தான சிந்தனை ? (சுப்ஹானல்லாஹ்)

வாயுக்கு வந்தவாறு பேசப்பழகி நிற்கிற முஸ்லிம் சமுதாயம் ஆழமாக யோசிக்க கடமைப் பட்டிருக்கிற செய்தி இது,.

பெருமானாரின் கடிதத்தைப் படித்து மனம் மாறிய காலித் (ரலி மதீனாவை நோக்கி பயணமானார் , அந்த விபரத்தை அவரே சொல்கிறார்.
يقول خالد عن رحلته من مكة إلى المدينة: (وددت لو أجد مَنْ أُصاحب، فلقيتُ عثمان بن طلحة، فذكرتُ له الذي أُريد فأسرع الإجابة، وخرجنا جميعًا فأدلجنا سرًّا، فلما كنا بالسهل إذا عمرو بن العاص، فقال: «مرحبًا بالقوم». قلنا: «وبك». قال: «أين مسيركم يا مجانين؟». فأخبرْنَاه، وأخبرَنَا -أيضًا- أنه يُريد النبي صلى الله عليه وسلم ليُسلم، فاصطحبنا حتى قدمنا المدينة أول يوم من صفر سنة ثمان).

இந்த செய்தியை அறிந்த போதுதான் பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்

فلما رآهم رسول الله صلى الله عليه وسلم قال لأصحابه: «رَمَتْكُمْ مَكَّةُ بِأَفْلَاذِ كَبِدِهَا (

காலித் ரலி அவர்களின் குழுவினரின் வருகையை மகிழ்சியோடு ஏற்றுக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“இனி காலித் அல்லாஹ்வின் உருவிய வாளாக இருப்பார்:

அதற்கான பெரும்  வாய்ப்பு மிக சீக்கிரத்தில் கிடைத்தது,

முஃதா யுத்தத்தில் முஸ்லிம் படைத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப் பட்ட போது நான்காவது தலைவராக காலித் ரலி பொறுப்பேற்று பெரும் அழிவிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்தார். அந்த காட்சிகளை நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்கு நேரடி வர்ணனை செய்து கொண்டிருந்தார்கள், அப்போது காலித் ரலி அவர்களை அல்லாஹ்வின் வாள் என்று குறிப்பிட்டார்கள்,

இது புகாரியில் வருகிறது.

وقال النبي صلى الله عليه وسلم عندما أخبر الصحابة بتلك الغزوة: «أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ الرَّايَةَ جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَ الرَّايَةَ ابْنُ رَوَاحَةَ فَأُصِيبَ -وعيناه صلى الله عليه وسلم تذرفان-، حَتَّى أَخَذَ الرَّايَةَ سَيْفٌ مِنْ سُيُوفِ اللهِ حَتَّى فَتَحَ اللهُ عَلَيْهِمْ

ஹிஜ்ரீ 8 ம் வருடம் மக்கா வெற்றியின் போது ஒரு பிரிவுக்கு தலைவராக காலித் இருந்தார்.
அதற்கடுத்த தவ்மத்துல் ஜந்தல் என்ற பிரதேசத்து மன்னரை கைது செய்து வரும் நடவடிக்கையை பெருமானார் (ஸல்) அவர்கள் காலித் ரலி யிடம் ஓப்படைத்தார்கள். அவரும் தனக்கிடப்பட்ட காரியத்தை கச்சிதமாக முடித்தார்.


பெருமானார் (ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பிறகு ஒரு தனி நபராக காலித் ரலி அவர்களின் பங்களிப்பு மிக பிரம்மாணடமானது.

பொய் நபி முஸைலமாவிற்கு எதிரான போரில் காலித் ரலி பெரும் பங்காற்றினார்கள்.

அதன் பிறகு இராக்கை முஸ்லிம்களுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தவர் அவரே !

அந்தப் பயண காலகட்டத்தில் காலித் ரலி அவர்களின் வீரத்தையும் விவேகத்தை வரலாறு இன்று வரை வியந்து நின்று பேசுகிறது.

ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 12 ம் நாளன்று ஈராக்கின் பள்ளத்தாக்குப் பகுதியான அப்லா வைத் தாக்கும்படி அபூபக்கர் ரலி அவர்களிடமிருந்து . காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும், அந்தப் பகுதியின் ஆட்சியாளராக ஹர்மஸ் க்கு ஒரு கடிதத்ததை அனுப்பி வைத்தார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தக் கடிதத்தில் இப்படி எழுதினார்கள்

! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்..! அல்லது இஸ்லாமிய ஆட்சியை ஏற்றுக் கொள்..! இன்னும் வரியையும் செலுத்தி விடு. இல்லையென்றால், நீ எவ்வாறு இந்த உலக வாழ்வை நேசிக்கின்றாயோ அதனை விட மரணத்தை நேசிக்கக் கூடிய கூட்டத்தை நீ சந்திப்பது தவிர்க்க இயலததாகி விடும் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

 أسلم تسلم والا جئتك برجال يصرّون على الموت كما تصرون أنتم على الحياه "

காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் படைவீரர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரமே இருந்தது.
எதிரியோ ஈரானிடமிருந்து உதவியை பெற்று பெரும் எண்ணிக்கையில் படையை திரட்டி இருந்தான்.

அந்த எண்ணிக்கை அவனுக்கு பெரும் மமதையை கொடுத்தது. அதுவே அவனது முடிவுக்கும் காரணமானது, முஸ்லிம்களின் வெற்றியை இலேசாக்கியது.

இரண்டு படைகளும் அணிவகுத்து நின்றி அந்தப் பெரும் களத்தில் தன்னோடு மோத வருமாறு எதிரி அழைத்தார்ன். போர் நீதிக்கு எதிராக  காலித் நெருங்கி வரும் போது தமது வீரர்கள் அவரை சூழ்ந்து அழித்து விட வேண்டும் என இரக்சிய உத்தரவிட்டிருந்தான்.   

இரண்டு படை வீரர்களும் கடலைப் போல பரவி நின்று இரு தளபதிகளின் சந்திப்பையும் பார்த்துக் கொண்டு நின்றார்கள் ,  காலித் ரலி அவர் எதிர் தளபதியை நெருங்கி போரிட ஆயத்தமானார்கள். அப்போது எதிரிப்படை வீரர்கள் சூழ் வதை கவனித்தார்கள். அச்சப்பட வில்லை. கவனத்தை சிதற விட வில்லை. தளபதியின் மீதே குறியாக இருந்தார்கள். அவனை அவனது குதிரையிலேயே வீழ்த்தினார்கள். இரண்டு கைகளிலும் வாள் வீசுவதில் தேர்ச்சி பெற்ற அவர்கள் அதன் பின் எதிரிப்படைகளின் கூட்டத்திலிருந்து தப்பி முஸ்லிம்களிடம் வந்து சேர்ந்தார்கள், முஸ்லிம்களின் இராக் வெற்றி உறுதிப்பட்டது.


கனீமத் - போர்ப் பொருட்களாக ஏராளமானவற்றை முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டார்கள், ஹர்மஸ் அணிந்திருந்த விலை மதிக்க முடியாத பூ வேலைப் பாடுகளுடன் கூடிய தலைக் கவசத்தையும் முஸ்லிம்கள் போர்ப் பொருளாகப் பெற்றார்கள்.ஒரு லட்சம் திர்ஹம் விலைமதிப்புள்ள அந்த தலைக் கவசததை அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்குப் பரிசாக வழங்கினார்கள்
அதை தொடர்ந்து அம்பார் யுத்தத்தில் அவரது யுத்த நுணுக்கம் பெரும் வெற்றியை தந்தது.
அன்பார் வாசிகள் பெரும் அகழி சூழ்ந்திருந்த கோட்டையில் தங்கியிருந்தார்கள். உள்ளே நுழைய வழி இருக்க வில்லை. ஒரு முறை அதை முழுவதுமாக சுற்றிப் பார்த்த காலித் ரலி அவர்கள் .எதிரிகளின் கண்களை குறிபார்த்து அம்பு வீச கட்டளையிட்டார். ஆயிரம் பேரின் கண்கள் போனது.
طاف خالد بالخندق وأنشب القتال وأوصى رماته أن يقصدوا عيون جيش العدو فرموا رشقاً واحداً ثم تابعوا فأصابوا «ألف عين» فسميت تلك الوقعة (ذات العيون)

பிறகுய் பல்வீனமான ஒட்டகைகளை அறுத்து அவற்றின் உடலை அகழியில் போட்டு அதை பாலமாக்கி கோட்டையை நெருங்கினார். எதிரி சரணடைந்தான்.

இது போல் இராக்கை வெற்றி கொள்கையிலும் சிரியாவை வெற்றி கொள்கையிலும் காலித் ரலி அவர்களின் ஆற்றலும் தீரமும் தனிப்பட்ட பங்கை ஆற்றியது.

அதனால் காலித் ரலி படையில் இருக்கிறார் என்று தெரிந்தாலே எதிரிகள் அச்சம் கொண்டனர். முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்தன.

காலித் ரலி  வந்து விட்டால் வெற்றிதான் என முஸ்லிம்கள் எண்ணத் தொடங்கினர், முஸ்லிம்களின் ஈமானை இது பாதித்து விடக் கூடும் என்று கருதிய உமர் (ரலி) அவர்கள் காலித் ரலி அவர்களை தளபதி பொறுப்பிலிருந்து நீக்கினார்கள்.

قال عمر إني لم أعزل خالدًا عن سخطة ولا خيانة، ولكن الناس فتنوا به، فخفت أن يوكلوا إليه ويُبتلوا به. فأحببت أن يعلموا أن الله هو الصانع، وألا يكونوا بعرض فتنة.

அதனால் எந்த வருத்தமும் அடையாத அவர் தொடர்ந்து முஸ்லிம்களின் வெற்றி பேரணியில் ஒருவராக கலந்து கொண்டார். டமாஸ்கஸையும் ஹிம்மஸையும் சிரியாவின் பிற நகரங்களை வெற்றி கொள்வதிலும் அவர் பெரும் பங்காற்றினார். இராக்கும் சிரியாவும் இஸ்லாமிய உலகிற்கு காலிதின் கொடைகள்  என்று சொன்னால் மிகையாகாது , (ரலியல்லாஹு அன்ஹு )

தளபதியாக இருந்து பின்னர் சாதாரண வீரராக இருப்பது உங்களுக்கு சிரமமாக இல்லையா என ஒருவர் கேட்டார்

நான் தளபதியாக இருந்த போதும் அல்லாஹ்வுக்காகவே போரிட்டேன். இப்போது சாதாரண வீரனாகவும் அல்லாஹ்வுக்காகவே போரிடுகிறேன். இதில் எனக்கு வித்தியாசம் எதுவும் இல்லை என்றார் காலித் ரலி

காலித் ரலி அவர்களின் அழுத்தமான ஈமானுக்கு இன்னொரு சாட்சி. அவர் எத்தகைய பெரும் வீர்ராக இருந்த போது தனது நம்பிக்க்கை களிலும் வீரராகவே இருந்தார்.
தனது வெற்றிக்கு பெருமானாரின் முடிகளை காரணமாக்கினார்.
قلنسوة خالد بن الوليد
كان في قلنسوة خالد رضي الله عنه التي يُقاتل بها شعر من شعر رسول الله صلى الله عليه وسلم يستنصره به وببركته، فلا يزال منصورًا، ففي حجة الوداع ولمَّا حلق الرسول صلى الله عليه وسلم رأسه أعطى خالدًا ناصيته، فكانت في مقدم قلنسوته، فلمَّا سقطت منه قلنسوته يوم اليرموك، أضنى نفسَه والناسَ في البحث عنها؛ فلمَّا عُوتب في ذلك قال: «إن فيها بعضًا من شعر ناصية رسول الله وإني أتفاءل بها وأستنصر


பெரும் போர் வீரராக இருந்த காலித் ரலி க்கு போர்க்களத்தில் மரணம் நிகழ வில்லை படுக்கையிலேயே நோயிற்றார்.
அது அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதற்காக அழுதார், புலம்பினார்

«لقد حضرتُ كذا وكذا زحفًا وما في جسدي موضع شبر إلَّا وفيه ضربة بسيف، أو رمية بسهم، أو طعنة برمح، وهأنذا أموت على فراشي حتف أنفي، كما يموت البعير، فلا نامت أعين الجبناء

ஆயினும் அல்லாஹ்வின் நாட்டம் இறுதியில் வென்றது. எந்தப் பெரிய மனிதருக்கும் அல்லாஹ்வின் நாட்டத்திற்கு கட்டுப்படுவதை தவிர வேறு வழியில்லை.
وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ إِنَّ اللَّهَ كَانَ عَلِيماً حَكِيماً
.
تُوُفِّيَ خالد بن الوليد بحمص في 18 من رمضان 21هـ، الموافق 20 من أغسطس 642م،

அவரது இழப்பு அழுவதற்குரியதே என்றார் உமர் ரலி

وحينما يسمع عمر بن الخطاب رضي الله عنه بوفاته يقول: «دع نساء بني مخزوم يبكين على أبي سليمان، فإنهن لا يكذبن، فعلى مثل أبي سليمان تبكي البواكي

ஹிம்மஸ் நகரில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். இப்போது ஹிம்மஸீல் அந்த வரலாற்று நாயகனின் நாபகார்த்தமாக ஒரு பெரிய பள்ளிவாசலும் அதைச் சுற்றி ஒரு பெரிய பூங்காவும் கட்டப்பட்டுள்ளது, அந்தப் பூங்காவில் ஒரு பெரிய பாறையில் காலித் ரலி அவர்களின் கடைசி வாசகம் பதியப்பபட்டுள்ளது.

காலித் ரலி அவர்கள் அல்லாஹ்வின் வாளாக தனது வாழ்வை நிலை நிறுத்திக் கொண்டார்.

ஆக்ககரமாக வாழும் வாழ்க்கையை நமக்கு அவர் விட்டுச் சென்றுள்ளார்.
அல்லாஹ் அந்தப் பெருமனின் வாழ்வை நமக்கு பயனுள்ளதாக ஆக்கி வைப்பானாக!                                                                                                      இன்னொன்றும் இங்கு முக்கியமாக கவனிக்கத்தக்கது,

 ஆக்ககரமான மனிதராக இருப்பதற்கு பெரிய உடல் வலிவு அல்லது பணச் செல்வாக்கு இருக்க வேண்டும் என்பது கட்டயம் கிடையாதுநல்ல சிந்தனையும் தீர்மாணம் மிக்க செயல்பாடும் இருந்தால் போதுமானாது.
உமர் ரலி அவர்கள் பெரும் பண்க்காரர்க் அல்லஅவரது வீரம் பெரிய பெரிய அளவுல் வெளிப்படவும் இல்லக்தூய சிந்தனையும் அக்கறையும் வர்லாற்றில் மகத்தான பங்கை ஆற்றியது,
1.   மதுவை பற்றி முதலில் பெருமானாரிடம் கேள்வி எழுப்பியது
2.   பர்தாவைப் பற்றி முதலில் கருத்துச் சொன்னது
3.   ரமலானில் ஒன்றாக திரண்டு தொழு ஏற்பாடு செய்தது,
4.   குர் ஆனை புத்தக வடிவில் தொகுக்க சொன்னது
ஆகிவை உமர் ரலி அவர்களின் கொடைகள்இந்தக் காரியங்களில் முன்னே நிற்பது உடல் உழைப்போ வீரமோ பணச் செலவோ தேவையில்லைநல்ல சிந்தனையும் தீர்மாணம் மிக்க செயல்பாடுகளுமே போதுமாக இருந்தது என்பதை இன்றைய முஸ்லிம் சமுதாயம் கவனமாக கவனிக்க வேண்டும்.

நாம் ஆசை வைத்தால் அல்லாஹ் கிருபை செய்வான்!  அல்லாஹ் நமது வாழ்வை பயனுள்ளதாக ஆக்குவானாக! 



















3 comments:

  1. Masha allah..
    அல்லாஹ் உங்கலை பொருந்திக்கொல்வானாக.. ஆமீன்.

    ReplyDelete
  2. Anonymous10:54 AM

    One doubt, with out mic, how can Nabi SA voice reached every one in old days...

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்

    ReplyDelete