நமது
தினசரி வாழ்வு அமைதியானதாக இருப்பதற்கு நாம் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்விடம்
நீடித்த ஆபியத்தை கேட்கவேண்டும்.
اللَّهُمَّ إِنّا نَسْأَلُكَ مِنَ النِّعْمَةِ تَمامَها، وَمِنَ الرَّحْمَةِ شُمُولَها، وَمِنَ الْعَافِيَةِ دَوَامَها،
என்று துஆ கேட்பது முன்னோர்களின் வழக்கம்.
நாம் நிம்மதி குலைந்து போவதை எந்த இடத்திலும் விரும்பக் கூடாது.
நிம்மதி குலைந்து போவதற்கு பல காரணங்கள் உண்டு.
அவற்றில் பிரதானமானது பாவங்கள் .
அல்லாஹ் ரஸூலுக்கு மாற்றமான காரியங்கள் நிம்மதியை குலைத்து விடுகின்றன.
مَن يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ وَلَا
يَجِدْ لَهُ مِن دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا
பாவங்களுக்கு ஒரே முடிவு அவற்றை விட்டுவதே செய்து விட்டு பரிகாரம் தேடுவதல்ல.
தமிழகத்தில்
பிரபலமான ஒரு அரசியல் வாதி ஏரளமான இலஞ்சப் பணத்தை சேர்த்து வைத்திருப்பவர் அவருடை வீட்டுக்கு வருமானவரித்துறை வந்த போது பதறாமல் கோ பூஜை செய்தார் என்று பத்ரிகைகள் செய்தி வெளியிட்டன.
பரிகாரங்கள்
செய்து விட்டால் பாவங்களுக்கு பிராயசித்தம் தேடி விட முடியும் என்ற நம்பிக்கை வேறோடியிருப்பதன விளைவு இது.
ஒருக்காலமும்
தொடர்ந்து பாவம் செய்து கொண்டு பிராயசித்தம் தேடுவது தீர்வாகவும் முடிவாகவும் நிம்மதியை தருவதாகவும் இருக்க முடியாது.
வாழ்க்கையின் அடிப்படையான ஒரு தத்துவத்த நாம் மறந்து விடக்கூடாது.
நண்மையான காரியங்களுக்கு ஒரு விளைவு உண்டு, தீமையான காரியங்களுக்கும் ஒரு விளைவு உண்டு.
அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் ஹிஜ்ரத்தின் சமயத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் எப்போதும் வரலாம் என்ற எண்ணத்தில் பெருமானாருக்காக தனது வீட்டுக் கதவை தாளிடாமல் திறந்தே வைத்திருந்தார்கள். அதன் பயனாக மஸ்ஜிதுன்னபவியில் அவர் பெயரிலான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது.
خوخة ; சிறிய வாசல்
செயல்களுக்கான விளைவு அவர்கள் செய்த காரியங்களின் இனத்திலேயே அமையும்.
அபூலஹ்புக்கு அவன் விரல் நீட்டி செய்த நன்மையின் வழியாக ஒரு சிறு பலன் கிடைக்கிறது
.
روى البخاري (5101) من قول عروة بن الزبير رحمه الله ما يلي :
" وثُوَيْبَةُ
مَوْلَاةٌ لِأَبِي لَهَبٍ ، كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا فَأَرْضَعَتْ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، َلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ
أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ – أي بسوء حال -، قَالَ لَهُ : مَاذَا
لَقِيتَ ؟ قَالَ أَبُو لَهَبٍ : لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي
هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ "
(ஆலிம்களின் கவனத்திற்கு இது உர்வா ரஹ் அவர்களின் கூற்று.)
தண்ணீருக்கு ஈரம்
நெருப்புக்கு வெப்பம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு இயல்பி இருக்கிறது. அது போல பாவத்தின் இயல்பு பதற்றம் என அறிஞர்கள் கூறுகிறார்.
நமக்கு
கிடைக்கிறா ரிஜ்கில் பரக்கத் வேண்டும்
ஒரு
சஹாபி மலம் கழிக்கச் சென்ற இடத்தில் ஒரு எலி தனது பொந்துக்குள்ளிருந்து ஒரு தங்க நாணயத்தை வெளியே கொண்டு வந்து போட்டது. நான்கு தங்க நாணயங்கள் இவ்வாறு கிடைத்தன, அவற்றை அவர் பெருமானாரிடம் கொண்டு வந்து இவற்றை நான் தர்மாம் செய்து விட்டடுமா என்று கேட்டார், இது அல்லாஹ் உனக்கு வழங்கி மறைவான ரிஜ்கு இதை நீ வைத்துக் கொள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்,
தனக்குரியதல்லாத பணத்தை
தனதாக்கி கொள்ள விரும்பாத நபித்தோழருக்கு எலி வலைக்குள்ளிருந்து தங்க நாணயம் கொட்டியது,
பரக்கத்தான
காசு பணத்திற்கு ஆசைப்பட வேண்டும்.
ஜுனைதுல் பக்தாதி
ரஹ் அவர்களிடம் ஒரு மனிதர் ஹஜ்ஜுக்கு போவதாக கூறினார். தன்னிடமிருந்த ஒரு நாணயத்தை
கொடுத்து, செலவுக்கு இதை வைத்துக் கொள் என்றார்கள். அவர் ஊரிலிருந்து புறப்பட்டடார். வழியில் ஒரு பயணிகள்
கூட்டம் அவரை சந்தித்து நீங்கள் ஹஜ்ஜுகு செல்வதானால் எங்களிடம் ஒரு ஒட்டகை சும்மா இருக்கிறது
எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதோடு ஹஜ்ஜின் எந்தச் செலவையும் அவர் செய்ய அனுமதிக்க
வில்லை. எல்லா செலவுகளையும் அவர்களே செய்தனர். அவர் திரும்ப ஆயத்தமான போது மற்றொரு
பயணிகள் கூட்டத்தினரை அவர் சந்தித்தார். அப்போது அவர்கள் எங்களோடு வந்த ஒரு ஹாஜி மரணித்து
விட்டார். அவரது ஒட்டகையில் நீங்கள் வாருங்கள் என அழைத்து வந்து அவரது கிராமத்தில்
அவரை இறக்கி விட்டனர்.
ஜுனைதுல் பக்தாதி
ரஹ் அவர்கள் பயணம் எப்படி இருந்தது என விசாரித்தார்கள். ஒரு பைசா செலவில்லாமல் ஹஜ்ஜை
நிறைவேற்றி விட்டதாக அவர் கூறினார்.
அப்படியானால்
நான் கொடுத்த அந்த நாணயத்தை தர முடியுமா என்று அந்த நாணய்த்தை கேட்டு வாங்கிக் கொண்டார்கள்,
ஜுனைது ரஹ் அவர்கள். அந்த பரக்கத்தான பணத்தின் பரக்கத் தனக்கு தேவை என அவர்கள் கூறினார்கள்.
பணத்தில் இருப்பது
போலவே ஆரோக்கியத்தில் பரக்கத் உண்டு
ஒரு 83 வயது
கிழவி தன் வாழ்நாளில் மருந்து சாப்பிட வேண்டிய தேவை ஒரு சில தடவைகளில் தவிர ஏற்பட்டதில்லை
என்று கூறினார்.
செல்வாக்கில்
பரக்கத் உண்டு.
·
தேடாமலே கிடைக்கும்
·
இடையூறு – பொறாமை – தீய விமர்சனங்கள் இருக்காது.
·
விசுவாசமான உழியர்கள் கிடைப்பார்கள்.
அப்துல்லாஹ்
பின் முபாரக் ரஹ் அவர்களது தகப்பனார் முபாரக் ஒரு தோட்டத்தின் பணியாளராக இருந்தார்,
ஒரு மாதுழையை ருசிக்க வில்லை.
فقد كانالمبارك رقيقا فأعتقه سيده ، وعمل أجيرا
عند صاحب بستان ، وفي يوم خرج صاحب البستان
ومعه نفر من أصحابه إلى البستان وأمر المبارك أن يحضر لهم رمانا حلوا ، فجمع لهم فلما ذاقه
قال للمبارك: أنت ما تعرف الحلو من الحامض؟ فقال المبارك:لم تأذن لي ان آكل حتى أعرف الحلو
من الحامض.فظن صاحب البستان أن المبارك يخدعه ، وقال له: أنت منذ كذا وكذا سنة تحرس
البستان وتقول هذا؟ثم سأل بعض الجيران عنه فشهدوا له بالخير والصلاح وأنهم ما عرفوا أنه
أكل رمانة واحدة ، فجاءه صاحب البستان وقال له إذا أردت أن أزوج ابنتي فممن أزوجها؟ فقال
المبارك: إن اليهود يزوجون على المال ، والنصارى يزوجون على الجمال ، والمؤمنين يزوجون
على التقوى والدين فانظر من أي الناس أنت؟فقال:وهل أجد لابنتي من هو خير منك؟وعرضها
عليه فقبل المبارك وبنى بها ورزق منها أولادا كان منهم عبد الله بن المبارك رحمه الله ، فسبحان الله ، عف عن الرمان فسيق إليه البستان وصاحبته ،ومن ترك شيئا لله عوضه الله خيرا منه
ومعه نفر من أصحابه إلى البستان وأمر المبارك أن يحضر لهم رمانا حلوا ، فجمع لهم فلما ذاقه
قال للمبارك: أنت ما تعرف الحلو من الحامض؟ فقال المبارك:لم تأذن لي ان آكل حتى أعرف الحلو
من الحامض.فظن صاحب البستان أن المبارك يخدعه ، وقال له: أنت منذ كذا وكذا سنة تحرس
البستان وتقول هذا؟ثم سأل بعض الجيران عنه فشهدوا له بالخير والصلاح وأنهم ما عرفوا أنه
أكل رمانة واحدة ، فجاءه صاحب البستان وقال له إذا أردت أن أزوج ابنتي فممن أزوجها؟ فقال
المبارك: إن اليهود يزوجون على المال ، والنصارى يزوجون على الجمال ، والمؤمنين يزوجون
على التقوى والدين فانظر من أي الناس أنت؟فقال:وهل أجد لابنتي من هو خير منك؟وعرضها
عليه فقبل المبارك وبنى بها ورزق منها أولادا كان منهم عبد الله بن المبارك رحمه الله ، فسبحان الله ، عف عن الرمان فسيق إليه البستان وصاحبته ،ومن ترك شيئا لله عوضه الله خيرا منه
இப்போது
கோட்டைகளையே கொள்ளையடித்து விடுகிறார்களே.
நியாயமான
வழியில் சேர்க்கப்படாத
- பாவப்பணங்களும் ஒரு
நாள் அல்லது ஒரு நாள் வெளியே கொண்டு வந்து கொட்டப்பட வேண்டியதாகிவிடும்.
இதயத்திற்கான
நிம்மதி நன்மையான காரியங்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறது.
பாவங்களை தடுப்பதற்கு
யாரும் இல்லை என்று கருதி விட வேண்டாம்,.
அல்லாஹ் ரிஜ்கில்
, ஆரோக்கியத்தில், நேரத்தில், செல்வாக்கில் புகழில் விசுவாசமற்ற ஊழியர்களில் என ஏதாவது ஒரு வகையில் அல்லாஹ் எச்சரிக்கையை தந்து விடுகிறான் என மார்க்க
அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பப்பே உணவு
பரிமாறப்படுகிற இடங்களில் நீங்கள் கவனித்திருக்கலாம். உணவு வைத்திருக்கிற பாத்திரத்திற்கு
கீழே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அந்த விளக்கு உணவை சூடாகவே வைத்திருக்கும்
. அதே போல பாவம் என்பது ம் ஒரு HEAT SOURCE மனிதனை பதற்றத்திலேயே வைத்திருக்கும்.
இன்றைய நாட்டு
நடப்புக்களை கவனித்தால் இதன் சத்தியத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
பாவங்களுக்கு
இன்னொரு விளைவு உதவிகள் கிடைக்காமல் போகும்.
சில காரியங்களுக்கான
உதவிகள் நாம் எதிர்பாராத வகையில் கிடைக்கும் இன்னாரிடமிருந்து இன்ன திசையில் உதவி வரும்
என்று நாம் எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். அந்த உதவி நமது காரியத்தை மிக எளிதானக மாற்றி
விடும்.
·
முஹ்ம்மது நபி (ஸல்_) அவர்கள் மதீனாவிலிருந்து ஆதரவாளர்கள் கிடைப்பார்கள்
என்று எதிர்பார்த்திருக்க வில்லை.
·
அகழ் யுத்தத்தில் முஸ்லிம்க வெற்றி பெறும் சந்தர்ப்பம் மிக நெருக்கடியானதாக
வே இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத உதவி வந்தது.
அதற்கு காரணம்
, மதீனாவிற்குள் முஸ்லிம்களுடன் இருந்த பனூகுறைழா யூதர்களையும் தங்களோடு சேர்த்துக்
கொள்வதில் எதிரிகள் வெற்றி பெற்றிருந்தனர். உள்ளே இருந்து பனூகுறைழாக்கள் கலகம் செய்ய
தொடங்கினால் வெளியே பாதுகாப்பில் இருக்கிற முஸ்லிம்களின் கவனம் சிதறும் , இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி அகழியை கடந்து மதீனாவிற்குள் சென்று விடலாம் என்று எதிரிகள் கணக்கிட்டனர்.
அதற்கான சூழல் மிகச் சாதகமாகவே இருந்தது. ஒரு இரவில் மதீனாவை வீழ்த்தி விட முடியும்
என எதிரிகள் திட்டமிட்டனர். அல்லாஹ் அந்த இரவில் நுஐம் பின் மஸ்வூத் ரலி அவர்களுடைய
உள்ளத்தில் இஸ்லாமிய வெளிச்சத்தை ஏற்படுத்டினான். அககழியை இரக்சியமாக கடந்து வந்து
அவர் இஸ்லாமை தழுவினார்.
மதீனாவிற்கு
உள்ளே இருந்த பனூ குறைழா எதிரிகளுக்கும் வெள்யே இருந்த எதிரிகளுக்குமான கூட்டை தந்திரமாக
பிரித்தார். பனூகுறைழா யூதர்களிடம் சென்று வெளியே இருப்பவர்களின் பேச்சை கேட்டு யுத்ததத்தை
தொடங்கி விடாதீர்கள், யுத்தத்தில் எதுவும் நடக்க வாய்ப்புண்டு. வெளியே இருப்பவர்கள்
உங்களை தனியே விட்டு விட்டு ஓடிவிட்டால் உங்களது கதி அதோ கதி தான். ஒரு உத்தரவாதத்திற்காக
அவர்களில் சிலரை பணயமாக கேளுங்கள் என்றார்.
அதே வேகத்தோடு
வெளியே இருந்த எதிரிகளிடம் வந்து பனூகுறைழாக்கள் உங்களில் சில தலைவர்களை கைப்பற்றி
முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒப்படைந்த்து நற்பெயர் பெற திட்டமிடுகிறார்கள், உஷாராக இருங்கள்
என்றார்.
நுஐமின் திட்டப்படி
குறைழாக்கள் தலைவர்களை யணயமாக கேட்க வெளியே இருந்த எதிரிகள் அவர்களை சந்தேகப்பட போர்க்களத்தில்
உருவான அந்தக் கள்ளக் கூட்டு கானல் நீரைப் போல காணாமல் போனது.
من أشهر حوادث غزوة الأحزاب ما ذكره ابن إسحاق من
تخذيل نعيم بن
مسعود –رضي
الله عنه- للأحزاب وذلك أنه أسلم ولم يعلم قومه بذلك، وقوله للرسول -صلى الله عليه
وسلم- فمرني بما شئت، فقال رسول الله -صلى الله عليه وسلم-:
"إنما أنت فينا
رجل واحد، فخذّلْ عنا إن استطعت، فإن الحرب خدعة"، وأنه أتى بني
قريظة وخوّفهم
من انسحاب قريش وغطفان وباقي الأحزاب، وأشار عليهم أن يأخذوا رهنًا من أشراف قريش
يكونوا بأيديهم، فقالوا له لقد أشرت بالرأي، ثم ذهابه لقريش وأخبرهم أن يهود بني
قريظة قد ندموا على نقض العهد، وأنهم قد عرضوا على محمَّد -صلى الله عليه وسلم- إن
كان يُرضيه أن يأخذوا له رجالًا من أشراف قريش وغطفان حتى يضرب رقابهم. وحذرهم من
أن يسلِّموا رجلًا منهم رهينة عند يهود، ثم أتى غطفان وحذّرهم كما حذر قريشًا.
وكيف أن ذلك كان سببًا لاختلاف الأحزاب وتفرقهم
அந்த ஒற்றை
மனிதரால் அல்லாஹ் பெரும் வெற்றியை முஸ்லிம்களுக்குத் தந்தான். எதிர்பாராமல்
பாவங்கள் பெருகுகிற
போது கிடைக்க வேண்டிய உதவிகள் கூட கிடைக்காமல் போய்விடும் .
சூழ்நிலை பாவிகளுக்கு
எதிராக மாறிவிடும்
மனைவி மக்களின்
விசுவாசமற்று போய்விடுவர். புழைல் பின் இயாழ் ரஹ்)
وقال فضيل بن عياض –رحمه الله- يقول: (ما عملت ذنبا إلا وجدته في خلق
زوجتي ودابتي)، ومراده -رحمه الله- أن خلق زوجته ودابته يتغير إلى الأسوأ بسبب
الذنب الذي ارتكبه،
فقد صح عن النبي -صلى الله عليه وسلم- أنه
قال:«إياكم ومحقرات الذنوب؛ فإنهن يجتمعن على الرجل حتى
يهلكنه» رواه أحمد-
பாவங்கள் காரண்மாக
செய்த நன்மைகள் அழிந்து விடும் ஆபத்து.
وقال أحد السلف -رحمه الله-: (نسيت القرآن بذنب عملته منذ أربعين سنة
பாவங்கள் காரண்மாக
செய்த நன்மைகளுக்கான வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்
وقال رجل للحسن -رحمه الله-: يا أبا سعيد إني أبيت معافى وأحب قيام الليل
وأعد طهوري فما بالي لا أقوم فقال: (ذنوبك قيدتك)، وقال الحسن أيضا -رحمه الله-:
(إن الرجل ليذنب الذنب فيحرم به قيام الليل)،
وقال الثوري -رحمه الله-: (حرمت قيام الليل خمسة أشهر بذنب
أذنبته)،
وقال بعض السلف -رحمه الله-: (كم من أكلة- يعني
من حرام- منعت قيام ليلة، وكم من نظرة -يعني حرام- منعت قراءة سورة).
பாவ காரியங்கள்
எப்படியாவது ஒரு வகையில் வாழ்க்கையில் ரிப்லக்ட செய்யாமல் இருப்பதில்லை
பாவங்களுக்கு
மூன்று வகையான பின் விளைவுகள் இருக்கும் என்று ஆன்மீக அறிஞர்கள் கூறுகிறார்கள்
1.
விரும்பத்தகாத நிகழ்வுகள்
2.
கிடைக்க வேண்டியவை தாமதமாவது
3.
சதித்திட்டங்கள்
விரும்பத்தகாத
நிகழ்வுகள்
ஒரு. பெரும்
செல்வந்தர் . அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. அவருடைய நிலத்தில் தான் இரயில்
நிலையம் இருந்தது, மட்டுமல்ல, அடுத்த இரயில் நிலையம் வரையுண்டான நிலமும் அவருக்கு சொந்தமாக
இருந்தது. ஏழைகளைப் பார்த்தால் அவர் சொல்வார்.
நீங்கள் எப்படி
பணம் சமபாதிப்பது என்று யோசிக்கிறீர்கள், நானோ எப்படி செலவு செய்வது என யோசிக்கிறேன்
என்பார். என்னுடைய நாற்பது தலைமுறைக்கு கவலை இல்லை என்பார்.
திடீரென ஒரு
நோயில் இறந்து போனார். அவருக்கு 18 வயதில் ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் மொத்த சொத்தையும்
குடி கும்மாளத்தில் அழித்தான். அவர்கள் குடியிருந்த வீட்டையும் கூட விற்றான்.
இப்போது
அன்றாடம் நடக்கிற நிகழ்வுகளை தொடர்ந்து நாம் பார்க்கிறோம். தப்பு செய்தவர்கள் எத்த்கைய
செல்வாகுமிக்க சூழ்நிலையில் இருந்தாலும் அதற்கான பலாபலனை ஒரு சிறு அளவிளேனும் இந்த
உலகில் அனுமதிக்காமல் இருப்பதில்லை.
இதற்குமேலான
கூலி மறுமையிலும் இருக்கிறது.
அல்லாஹ் நம்மை
பாதுகாப்பானாக! மன்னிப்பானாக! நமது பாவங்களுக்கான
தண்டனையிலிருந்து இந்த உலகிலும் மறுமையில் காப்பானாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே இருக்கிற இடைவெளியை
போன்று நமக்கு பாவங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவானாக!
No comments:
Post a Comment