இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடகாவில் நடை பெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் இலாபம் அடைகிற நோக்கத்தில் மத்தியை ஆளும் பாரதீய ஜனதா அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. இதனால் கோபமுற்ற தம்ழக மக்கள் நேற்றைய தினம் தமிழகம் வந்த பிரதமருக்கு தமிழ் நாடு முழுவதிலும் எதிர்ப்பு தெரிவிக்கத்தனர்
. கருப்பு புறாக்களை பறக்க விட்டனர். கருப்பு பலூண்களைய உயரவிட்டனர், கருப்புச் சட்டைகளும் பட்டைகளுமாக தமிழகம் முழுக்க அல்லோகலமாகியது,
இது வரை இந்திய நாட்டின் எந்தப் பிரதமருக்கு தெரிவிக்கப் படாத அளவில் கண்டனமும் வெறுப்பும் தெரிவிக்கப் பட்டது. தற்காலத்தில் இணைய தளத்தில் எதிர்ப்புத் தெரிவிப்பது பரவலாகி வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ''கோ பேக் மோடி''
(#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது.
தமிழக மக்களின் இந்தக் கோபம் நியாயமானது.
தமிழக மக்களின் இந்தக் கோபம் நியாயமானது.
தமிழகத்தின்
விவசய உற்பத்திகு மிகவும் அத்தியவசியமானது காவிரி ஆறு. இந்த ஆற்றுக்கு நடுவே கார்நாடக அரசு கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, ஹேரங்கி கபினி அணைகளில் தண்ணீரை தேக்கி வைப்பதால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் தொடர்ந்து
பல தலைமுறையாக கிடைப்பதில்லை.
காவிரி கர்நாடகத்தில் உற்பத்தி ஆனாலும் தமிழகம் தான் அதை பயன்படுத்தி அதிக
அளவில் விவசாயம் செய்கிற மாநிலம். இதில் தமிழத்திற்கு 2000 ஆயிரம் ஆண்டு கால
பாரம்பரியம் உண்டு. ஆண்டுக்கு முப்போகம் விளைந்து கொண்டிருந்த தஞசைப் பகுதிகள்
அணைகள் கட்டப் பட்ட பிறகு ஒரு மகசூலை சரியாக பார்ப்பதற்குள் தவித்துப் போகின்றன. தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை ஜூன் 12 ம் தேதி
திறக்கப் பட்டடால் தான் கரூர் திருச்சி தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் பகுதிகளில்
உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும். தண்ணீர் திறக்கப் படுவது தாமதமாகிற
பட்சத்தில் விவசாயிகளின் முயற்சி பயனற்றுப் போகும்.
ஆனால் தொடர்ந்து பல் ஆண்டுகளாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை
தராத காரணத்தால் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப் படுவதில்லை. அதனால் தமிழகத்தில்
விவ்சாயமும் விவசாயிகளின் வாழ்வும் மிகப் பெரிய நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
தமிழக விவசாயிகளின் பிரச்சினையை கவனிக்க கோரி தமிழக விவசாயிகள் தில்லியில்
விநோதமான பல போராட்டங்களை நடத்திய பிற்கும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. கர்நாடாகாவை
கட்டுப்படுத்த மத்தியில் இருந்த எந்த அரசாலும் முடியவில்லை.
தண்ணீர்ப்பிரச்சனை எழுந்தவுடன் அதை மொழிப்பிரச்சினையாக மாற்றி பிரச்சினைய திசை
திருப்பி மக்களிடையே பதற்றததையும் வெறுப்பையும் உண்டு பண்ணிவிடுகிறது கர்நாடகா!
1983 ல் காவிரி டெல்டா விவசாயிகள் வழக்குத் தொடுத்தனர். 1990 ல் காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கப் பட்டது. 17 ஆண்டுகள், 568 அமர்வுகளுக்குப் பிறகு 2007 பிப்ரவரி 5-ல் இறுதித் தீர்ப்பை வழங்கியது. தமிழகத்துக்கு 419 டி.எம்.சி.,
கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. கேரளத்துக்கு 30
டி.எம்.சி.,
புதுவைக்கு 7
டி.எம்.சி. என்று ஒதுக்கியது. தமிழகத்துக்கு உரிய 419 டி.எம்.சி.யில் மழைப் பொழிவின் மூலம் கிடைக்கும் அளவு கழிக்கப்பட்டு, 192 டி.எம்.சி தண்ணீரை கர்நாடாக திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடாக
உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த
கடந்த பிப்ரவி 4 ம் தேதி உச்சநீதிமன்றம்
இறுதித் தீர்ப்பை வழங்கியது. அப்போது தமிழகத்திற்கு நிர்ணயிக்கப் பட்ட 192 டி.எம்.சி தண்ணீரை 177.25 டி.எம்.சி.யாகக் குறைத்தது.
என்றாலும் தீர்ப்பு அமுல்படுத்தப்படுவதை கர்நாடாக அரசின்
கையில் கொடுக்காமல் ஒரு 10 பேர் கொண்ட ஒரு மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள்
அமைக்குமாறு மத்திய அரசுக்க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நடுவர்
மன்றம் கூறிய 197 டிஎம்ஸி தண்ணீர் 177 டி எம் சி ஆக குறைக்கப் பட்ட போதும் கூட தண்ணீர்
கிடைப்பதை உறுதி செய்யும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்ப பட வேண்டும் என்ற உத்தரவு
தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆறுதலை தந்தது.
உணமையில்
இத்தகைய சக்தி மிக்க இத்தகைய ஒரு ஆணையம் அமைவது நல்லது. மாநிலங்களுக்கு இடையே தண்ணீர்
பிரச்சனை எழுவதையும் இது தடுக்கும். இதனால் பல மாநில மக்களுக்கு இடையே ஏற்படும் மோதலையும்
இது தடுக்கும்.
எட்டு அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம்
காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகத்தில் உள்ள கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, ஹேரங்கி கபினி, தமிழகத்தில் உள்ள மேட்டூர், அமராவதி, பவானிசாகர், கேரளாவில் உள்ள பானசுரசாகர் அணை
ஆகிய எட்டு அணைகளின் நீர் நிர்வாகமும் காவிரி மேலாண்மை வாரியத்தில்
கட்டுப்பாட்டில் வந்துவிடும். அணைகளில் தண்ணீர் திறந்துவிடுவதும், நிறுத்துவதும் மேலாண்மை வாரியத்தில்
உத்தரவுப்படியே நடக்கும்.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி தண்ணீரைப்
பகிர்ந்து தர வேண்டியது காவிரி மேலாண்மை வாரியத்தின் பொறுப்பு. 10 உறுப்பினர்களைக்
கொண்டு செயல்படும் இந்த வாரியம், சட்டப்படி தமிழகத்துக்கு உரிய
தண்ணீரைப் பகிர்ந்தளிக்கும். பருவமழை குறைவாகப் பெய்யும் காலங்களில் இருக்கும்
தண்ணீரை, விகிதாச்சார அடிப்படையில் பகிந்துக்கொடுப்பார்கள். இதனால் ஒரு நதி பாயும் மாநிலத்து மக்கள் அனைவரும் கிடைக்கிற
தண்ணீரை சம் அளவில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். மக்களிடையே
கொந்தளிப்பு ஏற்படாமல் தவிர்க்கப் படும். இந்தியா ஒரு நாடு இந்திய மக்கள் ஒரு தாய்
மக்கள் என்ற தேசீயப் பற்று மேலோங்க வாய்ப்பு ஏற்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் சிறப்பாக
செயல்படுமானால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய பலமாக முன்னோடி திட்டமாக அமையும்,
ஏனெனில் இந்திய தேசியத்திற்கு அச்சுறுத்தலாக
மாநிலங்களிடையே கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிற ஒரு அம்சம் இந்த நதி
நீர்ப் பங்கீப்பிரச்சனை.
இந்தியாவில் பதினான்கு மகாநதிகள் உள்ளன. அவை ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. 44 நடுத்தர ஆறுகளுள் ஒன்பது ஆறுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற ஆற்று நீரைப் பங்கீடு செய்வதில் வரும் சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கெனப் பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர்ப் பங்கீடு பற்றிய சிக்கல் எழுந்தால் அதை நாடாளுமன்றம் தலையிட்டுத் தீர்த்துவைக்க வேண்டும் என அந்தப் பிரிவு கூறுகிறது.
ஆனால் நாடாளுமன்றம் இது வரை எந்தப்
பிரச்சனையையும் தீர்த்து வைத்தத்தில்லை.
காரணம் தண்ணீர்ப் பிரச்சினையில் மத்தியை
ஆளும் கட்சிகள் அரசியல் நடத்துவதே ஆகும்.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து
ஆட்சியில் இருந்து வருகின்றன.
கர்நாடகாவில் காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகள்
ஆட்சியை மாறி மாறி கைப்பற்றி வருகின்றன. கர்நாடகாவில் தங்களது அரசியல் செல்வாக்கை
இழக்கத் தயாராக இல்லாத இந்த கட்சிகள் மத்தியை ஆட்சி செய்கிற போது நீதி தவறி நடந்து
கொள்கின்றன, இதனால் தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழக்கப் பட்டு வந்தது.
காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு
இந்தியாவின் உச்ச அதிகாரம் பெற்ற உச்சநீதிமன்ற உத்தரவிட்ட பிறகும் கர்நாடகா
தொடர்ந்து அதை மீறி வருகிறது. அதற்கு இந்த இரண்டு அரசியல் கட்சிகளின் அரசியல்
விளையாட்டே காரணமாகும்.
2007 ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம்
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 192 டி எம் ஸி தண்ணீரை தர வேண்டு என்றூ உத்தரவிட்ட
போது அதை அரசின் கெஜட்டில் அரசாணையில் வெளியிடுவதை மத்திய அரசு தாமதம் செய்தது,
மாநில அரசு அதற்காகவும் உச்சநீதிமன்றத்தில் போராடி அரசிதழில் வெளியிட வைத்தது.
இந்த நிலையில் 6 வாரத்திற்குள் மேலாண்மை
வாரியத்தை அமைக்க வேண்டும் என்று காலம் குறிப்பிட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட
பிறகும் கூட தற்போது மத்தியில் ஆட்சி செய்கிற பாஜக அரசு அடுத்த மாதம் நடை பெறவுள்ள
கர்நாடக சட்ட மன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் ஸ்கீம் தயாரிக்கா வேண்டும் என்ற வார்த்தை
தான் இருக்கிறது, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று
கூறவில்லை என்று வார்த்தை விளையாட்டி ல் ஈடுபட்டு 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை பகிரங்கமாக
மீறி வருகிறது.
இது தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்கிற அப்பட்டமான துரோகம்.
கடந்த இரண்டு தலைமுறையாக தொடர்ந்து கடும் பாதிப்பை சந்தித்து வருகிற காவிரி டெல்டா
விவசாயிகுக்கு இழைக்கப்படுகிற அப்பட்டமான அநீதியாகும். இந்திய மாநிலங்களில் ஓரளவு
வசதி பெற்ற மாநிலமாக இருக்கிற தமிழகத்தை வறட்சி மாநிலமாக்கி பின்னுக்குத் தள்ளி
விடும் திட்டம் என்று தழிழ்த் தேசிய வாதிகள் குற்றம் சுமத்துவதை நியாப்படுத்து
அம்சமாகும்.
தண்ணீர் பிரச்சனை தான் அடுத்த மூன்றாம் உலக யுத்தத்திற்கு காரணமாக
அமையப் போகிறது என்று ஐ நா சபை கூறியிருக்கிற நிலையில் மாநிலங்களுக்கிடையேயான
தண்ணீர்ப் பிரச்சனையை அரசியலாக்கமால தீர்த்து விட வேண்டிய நாட்டை ஒன்றாக
வைத்திருக்க ஆசைப்படுகிற கட்சிகளின் முதல் கடமை . அது மட்டுமல்ல. அது மனிதாபி
நடவடிக்கையின் முதல் அம்சம்.
தாகித்தவருக்கு தண்ணீர் தருவது பேர்க்களங்களில் கூட கருணை
காட்டப்படுகிற அம்சமாகும்.
யமாமா யுத்தத்தில் குற்றுயிறாக கிடந்த நபித்தோழார்கள் தங்களுடைய
உயிர் தண்ணீரைக் கூட அடுத்துதவர்களுக்க் வழங்கினர்.
யமாமா யுத்தம் முஸ்லிம்கள் வரலாற்றில்
மிக முக்கிய யுத்தம் . பெருமானாருக்குப் பின் நபி என்று வாதிட்ட முஸைலமத் துல்
கத்தாபையும் அவருடையா ஆதரவாளர்களையும் அழித்தொழித்த யுத்தம் இஸ்லாத்தின் வரலாறு
அதன் உள் கூட்டில் தளர்ச்சியடையாமல் காத்ததில் முக்கிய பங்கு வகித்த யுத்தம்
சஹாபாக்கள் மிகுந்த எழுச்சியோடு இந்த
யுத்தத்தில் பங்கேற்றார்கள் . காலித் பின் வலீத் ரலி அவர்கள் போர்த்தலைமையில்
இருந்தார்கள்.
இக்ரிமா ரலி தாகித்தவன் தண்ணிரை
நோக்கிப் பாய்வது போல எதிரிப் படையை நோக்கிப் பாய்ந்தார் என வரலாறு கூறுகிறது.
படைத் தலைவர் காலித் ரலி அவர்களே கூட எச்சரித்தார்கள். இக்ரிமா ரலி கூறினார் “
பெருமானாருக்கு எதிராக நான் தீவிரம் காட்டிய போது சும்மா இருந்தீர்கள். இப்போது
அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்குமாக போராடுகிற போது எனது உயிரை காப்பாற்ற முயற்சிக்
கிறீர்கள் என்றார்.
فبادر إليه خالد
بن الوليد فقال له
“لاتفعل يا بن العم فإن قتلك سيكون على المسلمين شديد”، فما كان من عكرمة إلا ان
قال “تنحى عنى يا خالد جاهدت بنفسى ضد رسول الله ! أفأستبقيها الآن عن الله
ورسوله!” ثم نادى في المسلمين من يبايع على الموت؟ فبايعه عمه الحارث بن هشام بن المغيرة وضرار
بن الأزور في أربعمائة من
المسلمين، فقاتلوا دون فسطاط خالد
போர்க்களத்தில் அவரும் ஹாரிஸும் குற்றுயிராக கொண்டுவரப்பட்டு
காலித் ரலி அவர்களின் தொடையிலும் காலிலுமாக படுக்க வைக்கப் பட்டிருந்த நிலையில்
ஹாரிஸ் தனக்கு தண்ணீர் வேண்டும் எனக் கேட்டார். அது கொண்டு வரப்பட்ட போது இக்ரிமா
ரலி அதைப் பார்ப்பதை கண்டார். அந்த தண்ணீரை இகிரிமாவுக்கு கொடுக்கச் சொன்னார்.
இக்ரிமா அதை ஹாரிஸுக்கு திருப்பி அனுப்பினார். அதற்குள் ஹாரிஸ் ரலி அவர்களும் அது
திரும்பி வருவதற்குள் இக்ரிமா ரலி அவர்களும் ஷஹீதாகி இருந்தார்கள்.
ولقد أصيب عكرمة والحارث فدعا الحارث بماء ليشربه
فلما قدم له نظر إليه عكرمة فقال ادفعوه إليه ثم قضى نحبه
பத்றுப் போர்க்களத்தில் தண்ணீர் மொத்தமும் முஸ்லிம்களிடம்
இருந்தது. எதிரிகள் அந்த தண்ணீர் தொட்டிகளை நோக்கி வந்தனர். அவர்கள் தண்ணீர்
அருந்திக் கொள்ளட்டும் என பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்.
தண்ணீர் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது.
هُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاء مَاء لَّكُم
مِّنْهُ شَرَابٌ وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ . يُنبِتُ لَكُم بِهِ الزَّرْعَ
وَالزَّيْتُونَ وَالنَّخِيلَ وَالأَعْنَابَ وَمِن كُلِّ الثَّمَرَاتِ إِنَّ فِي
ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُون
ஆறுகளில் நீர் ஓடுவதும் குளம் குட்டைகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டதும் கூட அல்லாஹ்வின் ஏற்பாடே!
وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به
لقادرون
மக்களுக்கு தண்ணீர் தருவது அல்லாஹ்வே என்பதை திருக்குர் ஆனில்
வித்தியான ஒரு முறையில் அல்லாஹ் வலியுறுத்தி உள்ளான்.
அல் ஹிஜ்ர் அத்தியாயத்தின் 22 வது வசனத்தில் மக்களுக்கு தண்ணீர் கொடுத்ததை فأسقيناكموه என்று அல்லாஹ் கூறிகிறான்.
وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ
فَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنتُمْ لَهُ
بِخَازِنِينَ (22)
فأسقيناكموه எனும் வார்த்தை தான் குர் ஆனில் உள்ள பெரிய வார்த்தையாகும்.
பதினோரு எழுத்துக்களை கொண்ட இந்த வார்த்தையில் அலிப் ஒன்றை தவிர மற்ற எந்த
எழுத்தும் இரு முறை இடம் பெற வில்லை. 28
எழுத்துக்களை கொண்ட அரபு எழுத்துக்களில் பத்து எழுத்துக்கள் இந்த வார்த்தையில்
உள்ளன. சில அத்தியாங்களின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ள ஹுரூப் முகத்த ஆ எனும் தனி
எழுத்துக்களில் ஒன்பது எழுத்துக்கள் இந்த வார்த்தையில் உள்ளன் என்பதை
சுட்டிக்காட்டுகிற திருக்குர் ஆன் விரிவுரையாளர்கள் மக்களுக்கான தண்ணீர் என்பது
முழுக்க அல்லாஹ்வின் உரிமை சார்ந்தது, மக்கள் இதில் எதையும் தமக்குச் சொந்தமானதாக
கருத முடியாது என்கின்றனர்.
வானத்தில் இருந்து பொழியும் நீரூக்கு உத்தரவாதம் இல்லாத போது அதை
சொந்தமாக்கிக் கொள்வதையும் எவரும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த வசனத்தில் இறிதியில் இடம் பெற்றுள்ள وَمَا
أَنتُمْ لَهُ بِخَازِنِينَ என்ற
வாசகமும் ஆழ்ந்த கவனத்திற்குரியது.
கிடைக்கிற தண்ணீரை முழுமையாக சேகரித்துக்
கொள்ள - பாதுகாத்துக் கொள்ள மனிதர்களால் முடியாது என அல்லாஹ் கூறுகிறான் .
அணைகள் குறித்த ஒரு பலத்த சிந்தனையை அது
தருகிறது.
அணைகளை கட்டு தண்ணீரை தேக்கி வைத்து
விடுவதாக பெருமையாக நினைக்கிற மக்களுக்கு இது அல்லாஹ்வின் மிகப் பெரிய
எச்சரிக்கையாகும். அணைகளை பெரிய பலம்
என்று நினைக்கிறீர்கள். ஆனால் அதனால் எல்லாம் தண்ணீரை பாதுகாத்து வைத்து
விடுவது சாத்தியமாகாது என அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.
உலக நீர்மேலாண்மை அமைப்பின் நிர்வாகி மேடம்
சாண்டர் போஸ்டல் இலண்டன் வானொலிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.
1990 வது ஆண்டின் கணக்கெடுக்கின் படி
உலகில் 38 ஆயிரம் அணைகள் இருக்கின்றன. அந்த அணைகளில் தடுத்து வைக்கப் படுகிற
தண்ணீர் மொத்த தண்ணீரில் 15 சதவீதம் தான் .
மீதி தண்ணீர் முழுக்க அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
மனிதர்கள் தண்ணீரை அணை கட்டி தடுத்து வைத்துக் கொள்வது கூட பல
சந்தர்பத்திலும் பல வகையிலும் மக்களுக்கு எதிராகவே அமைந்து விடுகிறது என்று
போஸ்தல் மேலும் கூறினார்.
அணைகளின் அடிவாரத்தில் தேங்கி நிற்கிற மணற்பரப்பு அணைகளுக்கு பெரும்
அச்சுறுத்தலாகும். அதே போல பூகம்பங்கள் ஏற்படுவதற்கும் அணைகள் பெரும் காரணியாகும்.
பூகம்பங்களின் போது அணைகள் உடையுமானால் ஏற்படுகிற பாதிப்புக்கள் மிக
கடுமையானவையாகும்.
போஸ்தல் அணைகளால் ஏற்படுகிற இன்னொரு பாதிப்பை கூறுகிறார். யுத்தங்களின்
போது அணைகள் தாக்கப் படுகின்றன. அது மிகபெரிய பாதிப்பை சற்று நேரத்தில் ஏற்படுத்தி
விடுகிறது.
இரண்டாம் உலக யுத்ததின் போது பிரிட்டன் விமானப் படை, ஜெர்மனி நாட்டின்
மூன்று அணைகளை தாக்கி அழித்தது. அதில் ரோஹர் ஆற்றுப் படுகையில் இருந்த பல தொழில்
நகரங்கள் அழிந்து போயின. அதே போல அமெரிக்க போர் விமானங்கள் இரண்டாம் உலக யுத்ததில்
1944 ம் ஆண்டு இத்தாலியுல்ல ஒரு அணையை தகர்ந்தது. இதில் ஏராளமான ஜெர்மனிய வீரர்கள்
இறந்தனர்.
அணைகளால் ஏற்படுகிற இத்தகைய பிரச்சனைகள் ஒரு பக்கம் என்றால் இவற்றை விட
பெரிய பிரச்சனை அணைக்கு இப்புறமும் அப்புறமும் இருக்கிற மக்களுக்கு இடையே உருவாகிற
பகையுணர்வும் பதற்றமும் ஆகும்.
அந்த ஆபட்து தொடர் ஆபத்தாக கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
இதுவரை காவிரி நீர் பங்கீடு பிரச்சனையில் பல கலவரங்கள் ஏற்பட்டு இரண்டு
மாநிலத்தில் ஏராளமான பொதுமகல் பலியாகி உள்ளனர். பல்லாயிரம் கோடி சொத்துக்கள்
சேதப்படுத்தப் படுத்தப் பட்டுள்ளது.
அருகருகே இருக்கிற இரு மாநில மக்கள் இதன் காரணமாகவே நல்லுறவற்றவர்களாக
தலைமுறைகளாக இருந்து வருகின்றனர்
சமீபத்தில் ஒரு தமிழரின் போஸ்டர் ஒட்டப்பட்டதற்காக கர்நாடாக பெரும் சர்ச்சை
எழுந்தது.
இந்த பெரும் சர்ச்சைக்கு தீர்வை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக
கூறி ஆயிரம் வருடங்கள் கடந்து விட்டன. மனித சமூகம் இன்னும் முழுமையாக அதை
கவனிக்காமல் இருக்கிற்து.
அணைகளை எழுப்புகிற போதே பெருமானாரின் இந்த அறிவுரையை சட்டமாக மக்கள் ஏற்பார்கள் எணில் அணைகளால் ஏற்படுகிற மானுடபாதிப்பை குறைக்க முடியும்.
சிறு அளவுக்கு மேல் தண்ணீரை தேக்க கூடாது. அப்படி தேக்கப் படுமானால் கீழே இருப்பவர்களின் தேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மஹ்சூர் ஓடையில் வருகிற தண்ணீரை மேலே இருப்பவர்கள் தடுத்து விடுவதாக ஒரு நபித்தோழர்
புகார் கொண்டு வந்தார். பெருமானாரின் அருமையான தீர்ப்பு.
أَنَّ
رَجُلًا مِنْ قُرَيْشٍ كَانَ لَهُ سَهْمٌ فِي بَنِي قُرَيْظَةَ فَخَاصَمَ إِلَى
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَهْزُورٍ يَعْنِي
السَّيْلَ الَّذِي يَقْتَسِمُونَ مَاءَهُ فَقَضَى بَيْنَهُمْ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْمَاءَ إِلَى الْكَعْبَيْنِ لَا
يَحْبِسُ الْأَعْلَى عَلَى الْأَسْفَلِ
இந்த தீர்ப்பு தண்ணீரை தடுத்து வைத்துக் கொள்ளும் உரிமையின் அளவை பற்றி சரியாக பேசுகிற அதே நேரத்தில் கீழே இருப்பவரின் உரிமையை நிலை நாட்டுவதில் ஒரு மத்தியஸ்தர் எவ்வளவு நீதியாகவும் உறுதியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டுகிறது.
தற்போதை மத்திய அரசு இந்த நீதியை பின்பற்றாத காரணத்தால் தான் தமிழகம் இப்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
மக்களின் போராட்டம் சட்டத்தின் அடிப்படையில் தொடருமானால் நிச்சயமாக ஒரு நாள் அதற்கான சரியான தீர்வு கிடைக்கும்
ஆட்சிப் பொருப்பில் இருப்பவர்கள் மக்களது நியாயமான போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்களானால் நிச்சயமாக் தமிழக மக்களுக்கு தீர்வு கிடைக்கும்.
ஆனால் தற்போதைய அரசு நல்ல கோரிக்கைக்காக போராடிய மாணவர்களை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கைது செய்து வழக்கப் படி விடுதலை செய்யாமல் பல நாட்கள் நீதிமன்ற காவலில் சிறை வைத்துள்ளது. இது தேர்ந்தெடுத மக்களுக்கு ஒரு அர்சு செய்யும் அநீதியாகும்.
தமிழகத்தை பணந்திண்ணிகள் ஆட்சி செய்கிறார்கள் என்ற அவலத்தை இது ஏற்படுத்தி விட்டது.
மக்கள் நேர்மையாக தமது போராட்டத்தை உறுதியாக தொடர்வார்கள் எனில் நிச்சயமாக
அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் . எதிர்பாராத வகையில்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மார்க்கப் பிரச்சாரத்தை தொடங்கிய போது
அது ஒரு தொடர் போராட்டமாகவே இருந்தது.
மக்காவின் மக்கள் பெருமானாரை பல வகையிலும் தடை செய்தார்கள். ஆதரவாளர்களை
அடித்து துவைத்து கொலை செய்தார்கள்,
ஹிஜ்ரீ 7 ம் ஆண்டு சமூகப் பகிஷ்கரிப்புச் செய்தார்கள். உணவு கிடைக்காமல் இலை தழைகளை சாப்பிடும்
நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் ஒதுக்கி வைக்கப் பட்ட
திசையிலிருந்து உணவுக்கு அழும் குழந்தைகளின் கதறல் கஃபா வரை கேட்கும் என்ற
நிலையிலும் கூட மக்கா வாசிகள் மனம் இரங்கவில்லை. எனினும் பெருமானார் (ஸல்) அவர்கள்
தன்னுடைய சத்திய பேராட்டத்தை நிறுத்த வில்லை
ஹிஜிரி 10 ஆண்டு அந்த பகிஷ்கரிப்பு முடிவுற்ற நிலையில் தாயிப் நோக்கி
பயணமானார்கள். அங்கும் பெருமானாரின் வாழ்கை போராட்டமானது, கல்வீச்சுக்களுக்கு
நடுவே காயத்தோடு தப்பித்து வந்தார்கள்.
பேராட்டத்திற்கான களங்கள் இனி முடிந்து விட்டதாக பெருமானார் (ஸள்) அவர்கள்
நினைத்த சந்தர்ப்பத்தில் தான் அல்லாஹ் அவர்களை மிஃராஜுக்கு அழைத்துச் சென்றான்.
போராட்டத்தை தொடர்ந்து இன்னும் வலுவாக
நடத்தும் உத்வேகத்தை அது தந்தது. அந்த போராட்டத்தை தொழுகை என்ற அடையாளத்தை
வைத்து தொடர அல்லாஹ் உத்தரவிட்டான், முஹம்மது நபி (ஸல்) அந்த வழியே பயணித்து அதன்
பின் மிக அழுத்தமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.
தாயிப் பயணத்திற்கு பிறகு முடிந்து விட்டது என்ற நிலையிலிருந்த
பெருமானாரின் போராட்டம் மிஃராஜின் இரவிலிருந்தே மீண்டும் தொடங்கியது.
மிஃராஜின் அனுபவத்திற்கு பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் சற்றும் தாமதிக்க
வில்லை.
வரலாறு அந்த நிகழ்வை பேசுகிறது.
ويُروى أنه صلى الله عليه وسلم لما رجع إلى مكة من ليلته
أخبر بمسراه أم هانىء بنت أبي طالب أخت علي رضي الله عنه وأنه يريد أن يخرج إلى
قومه ويخبرهم بذلك لأنه ما أحب أن يكتم قدرة الله وما هو دليل على علو مقامه صلى
الله عليه وسلم فتعلقت بردائه أم هانىء وقالت: أنشدك الله يا ابن عم ألا تحدث بها
قريشاً فيكذبك من صدقك فضرب بيده على ردائه فانتزعه منها، قالت: وسطع نور عند
فؤاده كاد يخطف بصري فخررت ساجدة فلما رفعت رأسي فإذا هو قد خرج، قال: فقلت
لجاريتي نبعة وكانت حبشية: اتبعيه وانظري ماذا يقول، فلما رجعت أخبرتني أن رسول
الله صلى الله عليه وسلم انتهى إلى نفر من قريش في الحطيم وفيهم مطعم بن عدي وأبو
جهل بن هشام فأخبرهم بمسراه
மிஃராஜ் போராட்ட வாழ்விற்கான ஒரு உந்து சக்தியாக அமைந்தது.
நீதிக்காக போராடுகிற யாருக்கும் அல்லாஹ் ஒரு பாதுகாப்பை வைத்திருக்கிறான்.
அதே போல ஒரு தீர்வை வைத்திருக்கிறான். தொடர்ந்து போராடினால் நிச்சயமாக அந்த நல்ல
தீர்வு விரைவாக கிடைக்கும்
அல்லாஹ் தமிழக மக்களின் தண்ணீர் தேவைக்கான இந்த போராட்டங்களுக்கு நல்ல
சிறப்பான அமைதியான தீர்வை தந்தருளட்டும்.
.
நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு, பத்தாம் ஆண்டு என்பதற்கு பதிலாக தவறுதலாக ஹிஜ்ரி என்று இடம் பெற்றுள்ளது.
ReplyDelete