வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 19, 2018

இந்தியாவின் கருப்பு நாட்கள்



இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் மக்காவின் மக்கள், சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களுக்கு கொடூரமான தொல்லைகளை கொடுத்தனர். அவற்றை பொருமையோடு தாங்கிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள். தடுத்து தாக்க எவருக்கும் அனுமதியளிக்க வில்லை.
وكان ياسر حليفاً لبني مخزوم فكانوا يخرجون عماراً وأباه وأمه إلى الأبطح إذا حميت الرمضاء يعذبونهم بحر الرمضاء فمرّ بهم النبي صلى الله عليه وسلم فقال: «صبراً آل ياسر فإن موعدكم الجنة»، فمات ياسر في العذاب وأغلظت امرأته سمية القول لأبي جهل فطعنها في فرجها بحربة فماتت وهي أول شهيدة في الإسلام،
பொய்க் கடவுள்களை புகழுமாறும், பெருமானாரை இகழுமாறும் அம்மார் (ரலி) நிர்பந்திக்கப் பட்டார்.

وشددوا العذاب على عمار بالحر تارة وبوضع الصخر في شدة الحر على صدره تارة أخرى، فقالوا: لا نتركك حتى تسب محمداً وتقول في اللات والعزى خيراً، ففعل فتركوه فأتى النبي صلى الله عليه وسلم يبكي فقال: «ما وراءك؟» فقال: شر يا رسول الله كان الأمر كذا وكذا، فقال: «فكيف تجد قلبك؟» قال: أجده مطمئناً بالإيمان، فقال: «يا عمار إن عادوا فعد»، فأنزل الله تعالى: {إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَنِ} (النحل: 106).
எத்தகைய நிர்பந்த்த்திலும் பொய்க்கடவுள்களை மறுத்த கப்பாப் ரலி மென்மேலும் துன்புறுத்தப் பட்டார்/
خبَّاب بن الأرت وكان إسلامه قديماً، قيل: سادس ستة قبل دخول رسول الله دار الأرقم  فأخذه الكفار وعذبوه عذاباً شديداً فكانوا يعرّونه ويلصقون ظهره بالرمضاء ثم بالرَّضْف وهي الحجارة المحماة بالنار ولووا رأسه فلم يجبهم إلى شيء مما أرادوا،
துன்பம் தாங்காது ஒரு நாள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார். இறைத்தூதரே இந்த மக்களை ஏன் நீங்கள் சபிக்க கூடாது.

عَنْ خَبَّابِ بْنِ الْأَرَتِّ ، قَالَ : شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً لَهُ فِي ظِلِّ الْكَعْبَةِ ، فَقُلْنَا : " أَلَا تَسْتَنْصِرُ لَنَا ، أَلَا تَدْعُو لَنَا ؟ ، فَقَالَ : قَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ يُؤْخَذُ الرَّجُلُ فَيُحْفَرُ لَهُ فِي الْأَرْضِ ، فَيُجْعَلُ فِيهَا ، فَيُجَاءُ بِالْمِنْشَارِ فَيُوضَعُ عَلَى رَأْسِهِ ، فَيُجْعَلُ نِصْفَيْنِ ، وَيُمْشَطُ بِأَمْشَاطِ الْحَدِيدِ مَا دُونَ لَحْمِهِ وَعَظْمِهِ ، فَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ ، وَاللَّهِ لَيَتِمَّنَّ هَذَا الْأَمْرُ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ لَا يَخَافُ إِلَّا اللَّهَ ، وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ ، وَلَكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ
ஒரு மனிதன் அச்சமின்றி நடமாடும்  சூழல் தான் ஒரு மதிப்பான முதாயத்தின் அடையாளம் என்று அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதையே இன்னும் விரிவுபடுத்திய காந்தியடிகள்
எப்போது இந்த நாட்டில் நள்ளிரவில் ஒரு பெண் ஆபரணம் அணிந்து  தனியே செல்ல முடிகிறதோ அப்ப்து தான் இந்த நாடு சுதந்திரம் பெற்ற நாடு என்று நான் கூறுவேன் என்றார்.

தற்போதைய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் பெண் சுந்தந்திரம் குறிப்பாகவும் மனித சுதந்திரம் பொதுவாகவும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பிரதமர் மோடி பெண் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழிய பேசுகிற அதே நேரத்தில் அவரது கட்சிக் காரர்கள் கட்சி காப்பற்றும் என்ற திமிரில் அபலை பெண்களை தொடர்ந்து சூரையாடி வருகிறார்கள்.

பாரதீய ஜனதா என்பது பாலியல் ஜனதா வாக மாறிவருகிறது.

ஆர் எஸ் எஸ் காரரான தமிழக கவர்னர் கடந்த செவ்வாய்க் கிழமை அவரிடம் கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தை தடவினார்..

அருப்புக்கோட்டையை சேரந்த ஒரு பெண் கல்லூரி விரிவுரையாளர்  4 மாணவிகளை தவறான வழிக்கு தூண்டியது பற்றிய வழக்கில் ஆளுநர் மாளிகையை சார்ந்த உயர் மட்ட அதிகாரிகளை தொடர்புள்ளதாக செய்தி வெளியானது. ஆளுநர் கூட சந்தேகத்தின் நிழலில் இடம் பெற்றார். இந்த விவகாரத்தில் ஆளுதர் தனது தரப்பு வாதத்தை பத்ரிகையாளர்களிடம் எடுத்துக் கூறிய நிகழ்ச்சியிலேயே இத்தகைய அமங்கலம் அரங்கேறியிருப்பது எத்தகை தைரியத்தோடு பாஜக் ஜனநாயகத்துடன் விளையாடுகிறது என்பதை காட்டுகிறது.

இது தமிழலகத்தில் நடந்திருக்கிறது என்பது தமிழ் கலாச்சாரத்திற்கு நேர்ந்த பெருத்த அவமானமாகும்.

இதைக் கண்டித்து சென்னையில் பதிரிகையாளர்கள் பேரணி நடத்தி கொடுத்துள்ள மனுவில் அவர்கள் கூறிருப்பது மிகவும் கவனிக்கத் தக்கவ்து.

கவர்னர் எந்த நோக்கத்தில் கண்ணத்தில் தடவினார் என்பது அல்ல, ஒரு நிருபரின் வாயை அடைக்க அவர் தவறான வழியை கையாண்டு நிருபரின் உரிமையை கவர்னரே பறித்தார் என்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்று கூறியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பைஅத் பெறும் போது கூட பெண்களை கைகளை தொட மாட்டார்கள் என ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்.

  
உத்தர பிரதேசத்தில்

உபி மாநிலத்தில் உன்னாவ் என்ற பகுதியைச் சார்ந்த  17 வயது மாணவி ஒருவரை பாஜக எம் எல் ஏ செங்கர் மற்றும் அவரது சகோதர்ர் உள்ளிட்ட  நண்பர்கள் கூட்டு பாலியல் வன்முறை செய்தனர். இதுகுறித்து அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ என்பதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
இது நடந்த்து 2017 ஜூன் 4 தேதி. . வேலைவாய்ப்புக்கு உதவி கேட்டுச் சென்ற பெண்ணை எம் எம் ஏ மற்றும் அவரது குழுவினர் கூட்டாக கற்பழித்துள்ளனர்.
இந்த நிலையில் தனது மகளுக்கு நடந்த கொடுமைக்கு நீதிவேண்டும் என்று  வலியுறுத்தி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு முன் மாணவியின் தந்தை தற்கொலை செய்ய முயன்றார். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு வந்த அப்பெண்ணின் தந்தையை பொது அமைதிக்கு பங்கம் விள்வித்த்தாக கூறி  உபி போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். .இது நடந்த்து. 2018 ஏபரல் 5 ம் தேதி.
அப்போது மாணவியை பாலியல் வன்முறை செய்த பாஜக எம்.எல்.ஏவின் ஆட்கள் காவல்நிலையத்திற்குள் புகுந்து மாணவியின் தந்தையை தாக்கினர். இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.. இது ந்டந்த்து  ஏப்ரல் 9 ம் தேதி.  இதனையடுத்து இந்த விஷயம் சூடுபிடிக்கவே வேறு வழியின்றி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் ஐகோர்ட், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏவை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது. இதனையடுத்து இன்று அதிகாலைபுகாருக்குள்ளான பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் கைது செய்யப்பட்டார். 

17 வயது இளம் பெண் ஒரு எம் எல் ஏ மற்றும் அவருடைய உறவினார்களால் கூட்டு கற்பழிப்புக்கு ஆளாக்கப் பட்டார் என்பதை விட பெரும் கொடுமை அத்தகை குற்றச் செயலில் ஈடுபடும் பாஜகவினரை கண்டிப்பவர்கள் கொலை செய்யப் படுவார்கள் என்ற எச்சரிக்கையை ஆளும் அரசாங்கத்தின் ஆதரவோடு பாஜக செய்து வருகிறது.

கைது நடவடிக்கை என்பது கூட நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பின்னர் – மீடியாக்களில் விவகாரம் பெரிதாகிய பின்னரே நடைபெற்றுள்ளது.
இந்தக் கைதுகளுக்குப் பின் பாஜக வினருக்கு சிறைக் கூடங்களில் வழங்கப்படுகிற வசதிகளும் இந்துத்துவ அரங்குகளில் தரப்படுகிற மரியாதையும் கொடுமையிலும் கொடுமையானவை. நரமாமிசம் தின்கிற கலாச்சாரத்தில் வாழ்கிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்பக் கூடியவை
இத்தகைய கொடும் செயல்களுக்கு பொது அரங்கில் வெட்கமின்றி வக்காலத்து வாங்கிப் பேசுவதற்கென்றே பாஜகா இழி பிறவிகளைக் கொண்ட ஒரு குழுவை வைத்துள்ளது. அந்தக் குழுவினர் எத்தகைய முட்டாள்தனமான அவதூறையும் அச்சமின்றி பொது வெளியில் முன் வைத்து கவனத்த திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்.

செங்கர் கைதை கண்டித்துள்ள மற்றொரு பாஜக எம் எல் ஏ சுரேந்திர சிங் 3 குழந்தை பெற்றவரை எப்படி கற்பழிக்க முடியும் என்று 17 வயது பெண்ணைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்கள் கற்பழிக்கப் படுவது மட்டுமல்ல. சாதராணமாக கொலை செய்யப் படுகிறார்கள். கடத்தப் படுகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் கல்புர்க்கி என்ற பெண் எழுத்தாளர் பாஜக வின் மதவாதப் போக்கை கண்டித்து பத்ரிகையில் எழுதினார் என்பதற்காக படுகொலை செய்யப் பட்டார்.

நாட்டிலேயே வளர்ச்சிக்கு முன்மாதிரி மாநிலமாக பாஜகாவின் வளர்ச்சிக்கு உதாரணமாக காட்டப்படுகிற குஜராத் மாநிலத்தைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகிறது.

Analysis of data of National Crime Records Bureau (NCRB), Gujarat Police and the state government, the state recorded 493 rape cases and 2,514 cases of kidnappings or abduction – which roughly translates to nine rapes and 48 kidnappings per week. This is almost double the number of rapes of minor girls recorded in 2016. The first two months of 2018 too have recorded nearly 10 cases of rapes and 57 cases of kidnappings.

While age-wise break-up of the rape survivors in 2017 and 2018 was not available, as per NCRB data for 2016, there were 10 survivors below the age of six years, 23 between six and 12 years, 175 between 12 and 16 years and 319 below 16 and 18 years.

ஒருவாரத்தில் ஒன்பது கற்பழிப்புக்களும் 2514 கடத்தல் குற்றங்களும் குஜராத்தில் நடை பெருகிறது,

இந்தக் குற்றச் செயல்களில் பெரும் பாலானவை ஏதேச்சையாக நடை பெற்றவை அல்ல. திட்டமிட்டு அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு சமூகம் அல்லது இனத்தை குறி வைத்து நடத்தப்படுகிற அரசியல் குற்றங்கள் என்பது தான் இங்கு கவனிக்கப் படவேண்டியது.

தற்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிற சிறுமி ஆசிபா படுகொலையும் பாஜவினரின் அரசியல் படுகொலைகளில் ஒன்றேயாகும்.

ஆர் எஸ் எஸ் அமைப்பு இத்தகை கற்பழிப்பு கொலை நடவடிக்கைகளுக்கு அதனுடைய தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

திட்டமிட்டு சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சி செயகிறது.

இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிற கஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்ட்த்தின் அமைதியான  ரஸானா கிராமத்தைச் சார்ந்த 8 வயது ஆசிபா தனது குடும்பத்தினரின் குதிரைகள மேய்ப்பதற்காக மதியம் வெளியே சென்றாள். 2 மணியளவில் அவளை மற்றவர்கள் பார்த்துள்ளனர். 4 மணிக்கு அவளை காணவில்லை; குதிரைகள் வீடு திரும்பின. அவள் வரவில்லை. 2018 ஜனவரி 10 ம் தேதி அவளுடைய தந்தை முஹம்மது யூசுப் ஹீரா நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  

சிறுமியை காணோம் என ஜம்மு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் சென்ற போது 8 வயது சிறுமி என்றும் பாராமல் அவள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள் என்றார்களாம் காவல்துறையினர்


குற்றவாளிகளுல் இருவர் சிறுமியின் குதிரைகளை காட்டுக்குள் விரட்டியுள்ளனர். பிறகு அவளுக்கு காணாமல் போன குதிரைகளை பிடித்து தருவதாக கூறி காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.


ஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்ட சிறுமியை, காட்டில்வைத்து வன்புணர்வு செய்த பதின்வயதுக் குற்றவாளி, பின்னர் தன் நண்பன் பர்வேஷுடன் இணைந்து அவளை ஒரு கோயிலுக்குத் தூக்கிச் சென்றான். அது, ராம் பாதுகாவலராக இருக்கும் ஒரு கோயில். பதின்வயதுக் குற்றவாளி, கல்லூரி மாணவன் விஷாலுக்கு போனில் தகவலைத் தெரிவிக்க, நகரத்தில் செமஸ்டர் பரிட்சை எழுதிக்கொண்டிருந்த அவன், ஊர் திரும்புகிறான். ஆசிஃபாவுக்குத் வீரியமான மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. தொடர்ந்த நாள்களில், கல்லூரி மாணவன் விஷால், பதின்வயதுக் குற்றவாளி, காவல்துறை அதிகாரி தீபக் என அவள் மாறி மாறி வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள். ஜனவரி 14ம் தேதி, அவள் காட்டுக்குத் தூக்கிச் செல்லப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, தலை பெரும் கல்லால் சேதப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டாள்

பதின்ம வயது சிறுவன் ஒருவன் முதல் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி காவல் துறை அதிகாரி வரை அச்சிறுமியை கற்பழித்துள்ளனர். ஒரு சிறுமியிடம் தங்களது ஆண்மையை காட்டிய அந்த மனித மிருகங்கள் இறுதியில் அவளை கொலை செய்து வெளியே வீசியுள்ளனர்.
. 
ஜனவரி 17, 2018 அன்று ஆசிபாவின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்ட்து. தலை சிதைக்கப் பட்ட நிலையில் அவளுடைய உடல் கிடந்தது. பல்வேறு முறைகளில் அவளை கொலை செய்ய மேற்கொள்ளப் பட்ட்தற்கான அடையாளங்கள் அவளுடைய பிஞ்ச உடலில் இருந்தன.


மகளின் உடலைப் பார்த்துக் கதறிய தாய் “ எனது மகளின் உதடு கருத்திருந்த்து. அவளது கண்கள் பிடுங்கப் பட்டிருந்தன. இத்தகைய் ஒரு கோலத்தில் எனது மகளை ப் பார்க்க நேர்ந்த்தே என்று கதறியதாக அல்ஜஸீரா கூறுகிறது.

இதுதொடர்பாக  எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலையைத் திட்டமிட்டதாக வழக்கில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான சஞ்சி ராம், அவர் மகன், கல்லூரி மாணவர் விஷால் குமார், காவல்துறை அதிகாரி தீபக் கஜுரிய, ராமின் உறவினரான பதின்வயதுப் பையன் ஒருவன், அவனுடைய நண்பன் பர்வேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் .
பெண்ணை காணவில்லை என்ற புகாரை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியும் குற்றுயிராக கிடந்த சிறுமியை கற்பழித்திருக்கிறார்.

சிறுமியின் கொலைக்குப் பிறகு நடந்தவை கொடூரமானவை .

பிணக்கூறாய்வில் அச்சிறுமியின் உயிரற்ற உடலில் குளோனாசிபம் (Clonazepam) இருந்தது கண்டறியப்பட்டது.[ வன்புணர்வுக்கும் கொலை செய்யப்படுவதற்கும் முன்னர் அச்சிறுமிக்கு மயக்க மருந்து தரப்பட்டிருந்தது கூறாய்வு செய்த மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரால் பல நாட்களாக அச்சிறுமி ஒரு வழிபாட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தக்கலாமென தடயவியற்சான்றுகள் பரிந்துரைக்கின்றன. வழிபாட்டிடத்தில் கண்டெடுக்கப்பட்ட முடிக்கற்றைகள் அப்பெண்ணின் முடியோடு ஒத்துள்ளதும் கண்டறியப்பட்டது] ஆசிபா பலமுறை பல்வேறு நபர்களால் வன்புணரப் பட்டிருப்பதாகவும் சாகும்வரை கழுத்து நெறிக்கபட்டிருப்பதாகவும், தலையில் கனமான கல்லால் அடிக்கப்பட்டிருப்பதாகவும் தடயவியற்சான்றுகள் கூறுகின்றன

தடயங்களை அழிக்க, காவல்துறை அதிகாரிகளே அவளது ஆடைகளை அலசியிருக்கிறார்கள். வழக்கு க்ரைம் பிரான்ச்சுக்கு மாற்றப்படுவதற்கு முன், அவளது பிறப்புறுப்பின் காயங்கள் உள்ளிட்ட பல தடய அறிக்கைகளை அழிக்கிறார்கள்.
ராம், இதற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு நான்கு லட்சம் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. 




குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட பின்னர், அவர்களுக்கு `இந்து' கவசங்கள் மாட்டப்படுகின்றன. `வழக்கின் விசாரணையில் நியாயமில்லை; ஒருதலைபட்சமாக, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இது மேற்கொள்ளப்படுகிறது' என்று போராட்டங்கள் வெடிக்கின்றன.
பிடிபி - பிஜேபி கூட்டணி அரசு ஆளும் ஜம்மு அரசின் இரண்டு பிஜேபி அமைச்சர்கள், இந்து அமைப்பின் பேரில் நடத்தப்படும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டனர்.

குற்றவாளிகளில் ஒருவனின் தாய் உள்பட, நான்கு பெண்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்ட்தை நட்த்தினார்கள்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீஸார் நீதிமன்றத்தில் நுழைவதை கதுவா மாவட்ட  வழக்கறிஞர்களே தடுக்க முயற்சி செய்தனர்,
உச்சகட்டமாக, இந்தப் போராட்டங்களில் தேசியக்கொடி ஏந்திச் சென்றனர்,

ஆனால் சிறுமியின் படுகொலை விவகாரம் நான்கு மாதங்களுக்குப் பிறகு வெளியுலகிற்கு வந்த பிறகு உலகம் விழித்துக் கொண்ட்து. உலகளாவிய அளவில் சிறுமி கொல்லப் பட்ட்தற்கான கண்டன்ங்களும் இதற்கு பின்னாள் இருக்கிற பாஜக கட்சியினரின் மீதான் விமர்சன்ங்களும் பெருகி உள்ளன.

நாடு சர்வதேச் அரங்கின் முன் தலை குனிந்து நிற்கிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைவர்கள் அழுகிறார்கள் மீடியாக்களில் பிரபலங்கள் செய்தியை வாசிக்கிற போதே அழுகிறார்கள். இது மன்னிக்கப்பட முடியாத குற்றம் என அனைவரும் எழுதவும் பேசவும் செய்கிறார்கள்.

இந்த கோடூர கற்பழிப்புக்கும் படுகொலைக்கும் காரணம் என்ன யார் என்பது விரிவாக அலசப்பட்டு வருகிறது.
காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நிலையில், ஜம்முவில் கால்நடைகள் மேய்க்கும் பக்கர்வால் எனப்படும் முஸ்லிம் நாடோடிச் சமூகத்துக்கும், ஜம்மு இந்துகளுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்தது. காரணம், பொது நிலங்களிலும், காடுகளிலும் பக்கர்வால் சமூகத்தினர் தங்கள் கால்நடைகளை மேய்க்கின்றனர். எனவே, பக்கர்வால் சமூகத்தை அச்சுறுத்தி, ஜம்முவைவிட்டு வெளியேற வைக்கவேண்டும் என்று ஊருக்குள் அவ்வப்போது ஆலோசனைகள் நடைபெறுகின்றன. கடந்த ஜனவரி மாதம், சிலரால் அதற்காகத் திட்டமும் தீட்டப்படுகிறது. அதற்கு பலியாக்கப்பட்டவள்தான், இந்தச் சிறுமி. 
ஜம்முவிலிருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள ரசானா கிராமத்தில் தனது குடும்பத்தினரின் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்தவளை கிராமத்து கோயில் வைத்து கற்பழித்து கொலை செய்யும் துணிச்சல் இந்த அடிப்படையிலேயே இந்தக் குழுவினருக்கு ஏற்பட்ட்து என்று சாதாரணமாக இந்தப் படுகொலைக் கான காரணத்தை பேசி விட்டு பலரும் நகர்ந்து விடுகின்றனர்
அப்படியானால் இந்தப் படுகொலை ஒரு சில காம வெறி பிடித்தவர்களால நடை பெற்ற அக்கிரம்ம் அல்ல.

திட்ட மிட்டு ஜம்மு பிராந்த்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் ஒரு பெரும் திட்ட்த்தின் ஒரு அங்கமே இது.
இந்த திட்ட்த்தை வகுத்தவர்கள் ஒரு சிலரோ ஒரு கிராமத்தினரோ அல்ல,
இந்த திட்ட்த்தை வகுத்துக் கொடுத்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பு. அதனை அரசியல் பிரிவான பாஜக் கட்சி.
அதனால் தான் அக்கட்சியை சேர்ந்த இரு எம் எல் ஏ க்கள் கற்பழித்தவர்களுக்கு ஆதரவாக தேசியக் கொடியின் பின்னணியோடு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்;

எனவே இக்குற்றத்திற்கு காரணமானவர்கள் இந்த 8 பேர் மட்டுமல்ல. ஆர் எஸ் எஸ் , பாஜக அது முன்னெடுத்துச் செல்லும் இந்துத்துவா சித்தாந்தம் இம்மூன்றுமே இத்தகைய கொடுமைக்கு காரணமாகும்.

இந்துச் சித்தாந்த வாதிகளுக்கு இப்படுகொலை ஒரு பொருட்டாக தெரியவில்லை என்பதை நடப்புகள் காட்டுவதை நாம் கவனிக்க வேண்டும்,
ஒரு செய்தியை கவனியுங்கள்

ஆசிபா படுகொலை குறித்துக் கேரளத்தின் பலரிவட்டம் கோட்டக் மகிந்திரா வங்கிக் கிளையில் பணியாற்றிய விஷ்ணு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், அவளைக் கொன்றது நல்லது, இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான மனித வெடிகுண்டாக மாறியிருப்பாள் எனப் பதிவிட்டுள்ளார்.
மனிதத் தன்மையற்ற இந்தக் கருத்துக்கு நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்புத் தெரிவித்த்தன காரணமாக அவரைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வங்கி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்த்தால் கோட்டக் மகிந்திரா வங்கி. விஷ்ணுவைப் பணியில் இருந்து நீக்கியுள்ளனர் என்ற போதும் இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் ஒரு சித்தாந்தம் நாடு முழுவதும் பரப்பட்டுள்லது என்பதை கவனிக்க வேண்டும்.

எனவே ஆசிபா வழக்கை ஆராயும் நீதிமன்றங்கள் இந்தப் பின்னணி குறீத்து தெளிவாக ஆராய்ந்து மக்களை அச்சுறுத்தி ஆட்சி செய்ய நினைக்கும் சக்திகள் விசயத்தில் ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.

இல்லை எனில் இந்திய நரமாமிசப் பேர்வழிகள் தேசம் என்ற பழிச் செல் நிலைத்து விடும்

8 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் “தாம் மட்டும் போலீசாக இருந்திருந்தால் சிறுமி ஆசிபா கொலைக் குற்றவாளிகளை சுட்டுத் தள்ளியிருப்பேன் என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் குற்றங்களுக்கு சவுதியில் வழங்குவதைப் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இஸ்லாம் இத்தகைய குற்றவாளிகள் கல்லால் எறிந்து கொல்லப் பட வேண்டும் என்பது மட்டுமல்ல்ல அவர்கள் செய்த குற்ற்ச் செயல்களின் அளவுக்கு அந்தக் கொலை தண்டனையை கூட கடுமையாக வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

உரைனா குற்றவாளிகளை நபி நாயகம் (ஸல்) அவர்கள் மாறு கால் மாறு கை வாங்கி கண்களை தோண்டி கொலை செய்யுமாறு உத்தரவிட்டார்கள்.
இந்திய தேசத்ம் பெண்களைப் பாதுகாப்பதற்காக பலியானவர்களின் வரலாறுகளை ஏராளாம கொண்ட தேசம்

புதுக்கோட்டைக்கு அருகே காட்டுபாவா என்ற பெயரில் ஒரு தர்கா உள்ளது,  அங்கு அடங்கியிருப்பவர் ஒரு சமூகப் போராளி முஸ்லிம் பெரியவர்.
அப்போதைய அரசனின் மகன் காமுகன், பெண்களை வேட்டையாடுபவனாக இருந்தான். ஒரு முறை ஒரு பெண்ணை கெடுக்க முயர்சித்த போது அரசனின் மகன் என்றும் பாராமல் அவனை எதிர்த்து அப்பெரியவர் போரிட்டார். அதில் அவர் கொல்லப் பட்டார். இப்போதும் அங்கு அவருடைய இரத்தம் காயாமல் இருக்கிறது என இந்துக்களே நம்புகிறார்கள்.

அதே போல வள்ளியூருக்கு பக்கத்தில் ஆத்தங்கரை செல்லும் வழியில் ஆள் யார் என அறியப்படாத ஒரு கப்ரு இருக்கிறது, அதை இந்துக்கள் அல்லாஹ் சாமி என்று அழைக்கீறார்கள். அவரும் அங்கிருந்த ஒரு காமுகனிடம் இருந்து இந்துப் பெண்களை காப்பாற்றுகிற சண்டையில் பலியானவர் என்று வரலாறு சொல்கிறார்கள்.

அஜ்மீரில் அடங்கியிருக்கிற காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி ரஹ் அவர்கள் ராஜபுத்திர இளரவரசரின் மனைவியை சதிக் கொடுமையிலிருந்து காப்பாற்றினார் என்ற வரலாறு பிரசித்தி பெற்றது,

இத்ந்திய இத்தகைய பெண்ணினப் பாதுகாவலர்களின் தேசம்.

அது இப்படி மத்த்தின் பெயரால் மக்களைப் பிளக்க மாபாதக செயல்களில் ஈடுபடுவோரின் தேசமாக மாறிப் போனது நம் காலத்தில் நாம் சந்திக்க நேர்ந்த பெரும் அவலம்.

வல்ல நாயன் இந்தச் சீரழிவுகளிலிருந்து நாட்டு மக்களை விரைவாக காப்பாற்றுவானாக!

இந்திய ஜனாதிபதி ஆசிபாவின் படுகொலை காட்டுமிராண்டித்தனமானது என்று கூறியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் தேசத்தின் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று கூறீயிருக்கிறார்

இருவரும் பதவி என்கிற முகமூடிக்குள் அமர்ந்து இந்த  வார்த்தைகளை சொல்லக் கூடாது , மனிதர்களாக தமது கடமையை நிறைவேற்ற முழு மனதோடு முன்வரவ் வேண்டும்.

இந்தக் குற்றவாளிகளை மட்டுமல்ல அதற்கு பின்னே இருந்த சித்தாந்த்த்தையும் சித்தாத வாதிகளையும் சட்ட்த்தின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.














No comments:

Post a Comment