வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 10, 2018

மஹாதீரின் வருகையும் ரமலானின் வருகையும் மகிழ்ச்சியளிக்கின்றன.

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْ ءٍ قَدِيرٌ (26)

சர்வதேச அரசியல் அரங்கில் வியக்கத்தக்க ஒரு மாற்றம் நேற்று நடந்துள்ளது.
மலேஷியா நாடாளுமன்றத் தேர்தலில் டாக்டர் மகாதிர் முஹம்மது வெற்றி பெற்றுள்ளார்.
மகாதீர் முஹம்மது இஸ்லாமிய உலகில் முக்கிய ஆளுமையாக இன்று வரை இருந்து வருகிறார்.
மஹாதீர் 22 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். தானாக ஓய்வு பெற்றார் .நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு மீண்டும் அரசியலுக்கு வந்தார். தன்னை பிரதம்ராக்கிய கட்சிக்கு எதிராகவே போட்டியிட்டு 92 வயதில் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். ஒரு நாடகம் போல தெரியும் இந்த நிகழ்வில்  முஸ்லிம்களுக்கு உலக அரசியலுக்கும் மிக முக்கியப் பாடம் இருக்கிறது.
ஒரு தனி நபரின் செல்வாக்கு 57 ஆண்டு கால மரபை மாற்றி விட்டது.
மஹாதீர் இந்திய வமிசாவளியைச் சேர்ந்தவர் அவரது தந்தை முஹம்மது பின் இஸ்கந்தர் பினாங்கு மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் கூட அவருடைய முன்னோர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு மலாய் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். மஹாதீரின் தந்தை ஒரு ஒரு ஆங்கிலப் பள்ளியின் முதல் மலாய் தலைமை ஆசிரியர் என்ற சிறப்பை பெற்றிருந்தார், மஹாதீர் அலோஸ்டார் மாநிலத்தில் கெடாபகுதியில்  மலாய் மக்களின் பூர்வீக மர வீட்டில் 1925 ஜூலை 10 ம் தேதி பிறந்தார்.
சரளமாக ஆங்கிலம் பேசுகிற திறன் அவரிடமிருந்தது  அதன் காரணமாக ஆங்கில உயர் நிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  
இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானுடைய கட்டுப்பாட்டில் மலேஷியா இருந்தது. அப்போது அவருடைய பள்ளிக் கூடம் மூடப்பட்டது. அந்த நேரத்தில் மஹாதீர் காபி , பொறித்த பழம் மற்றும் பலகாரங்கள் விற்பனை செய்தார். யுத்தம் முடிந்த பிறகு படிப்படை  தொடர்ந்தார். சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவரானார்.
மஹாதீர் கடும் உழைப்பாளி, அந்த குணமே சாமாணிய குடும்பத்தில் பிறந்தவரை மருத்துவராக உயர்த்தியது,
மஹாதீர் கல்லூரிக் காலத்தில் சத்தித்த சித்தி அஸ்மாவை திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு மருத்துவரே!
முதல் மலாய் மருத்துவர் என்ற சிறப்பு அலோஸ்டார் மாநிலத்தில் மஹாதிருக்கு நிறைய வாய்ப்புக்களை வழங்கியது, சாமாணிய பெருளாதாரத்தில் வாழ்ந்தவர் பல தொழில்களில் முதலீடு செய்யுமளவு வசதி பெற்றார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1957 ல் மலேஷியா
சுதந்திரம் பெற்றது, அப்போது மலேஷியாவின் பெரும் செல்வாக்கு மிக்க தலைவரான துங்கு அப்துரர்ரஹ்மானின் தலைமையிலான அம்னோ கட்சியில் இணைந்து மஹாதீர் அரசியல் நடவடிக்கையில் இறங்கினார். அவரது சொந்த ஊரான கெடா பகுதியின் கட்சியில் சேர்மானாக இருந்தார்.
அ1959 ல் நடை பெற்ற தேர்தலில் அவர் போட்டியிட வில்லை, எனினும் 1964 ல் நடை பெற்ற தேர்தலில் கெடா மாநிலத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
மலாய் மக்களின் பின்னடைவு மஹாதீருக்கு பெரும் உறுத்தலாக இருந்தது, அதனால் அவர் மலாய்க் காரர்களின் தனிப்பட்ட உரிமைகளுக்காக அதிகம் குரல் கொடுத்தார். இது மற்ற வர்களிடம்  அவர் மீதான் அதிருப்தியை உருவாக்கியது என்றாலும் மலாய் மக்களை அவர் நெருங்க  அது முக்கிய காரணமாக இருந்தது.
மஹாதீரின் இந்த இயல்பே துங்கு அபதுர் ரஹ்மானுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. ஒரு கட்டத்தில் அதன் காரணமாக அவர் அம்னோ கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்.
இந்தக கால கட்டத்தில் மலாய் மக்களின் பின்னடைவுகளுக்கான தீர்வு குறித்து அவர் மலேய் டைலமா என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகம் சீனர்களின் ஆதிக்கத்தை அவர்களது சுரண்டலையும் கடுமையாக சாடியது.  அது தடை செய்யப் பட்டது. அவர் பிரதம்ராக பொறூப்பேற்ற பிறகே அது வெளிவந்தது.
1970 ல் துங்கு அப்துர் ரஹ்மான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு பொறுப்பேற்ற அப்துர் ரஜ்ஜாக் ஹுசைன் மஹாதிரை மீண்டும் கட்சிக்கு அழைத்தார். 1973 ல் மஹாதிர் கல்வியமைச்சராக பொறுப்பேற்றார்.
கல்வியமச்சராக இருந்த காலகட்டத்தில் மலாய் யுனிவர்சிடியை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் அரசின் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தார். மாணவர்கள் அரசியலில் தலையிடுவதை பெருமளவில் கட்டுப் படுத்தினார். அரசியலில் ஈடுபடாத மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கினார்.
1978ல் மஹாதிர் தொழில் துறை அமைச்சரானார். அதன் பிறகு மலேஷியாவில் நீண்ட கால நோக்கில் உற்பத்தி துறைகளை உருவாக்கினார், ஏராளமான வெளிநாடுகளுக்குச் சென்று பொருளாதார வளத்தை பெருக்கினார்; மலேசியா உலக அரங்கில் வெளிப்படக் காரணமானார்.
1981 ல் மஹாதிர் தனது 66 வயதில்  பிரதமராக பொறூப்பேற்றார். தொடர்ந்து சுமார் 22 ஆண்டுகள் மலேசியாவின் தனிச்சிற்ப்பு மிக்க பிரதமராக அவர் பொறுப்பேற்றார். மலேஷியாவை ஆசிய நாடுகளில் வளர்ந்த நாடாக உருவாக்கினார். பொருளாதாரத்தை மேம்படுத்தினார். உலக நாடுகள் வியக்கும் வண்ணம் மலேசியாவை தொழில் வளத்திலும் கட்டமைப்பிலும் உயர்ந்து நிற்கச் செய்தார். மலேஷியா உலகின் சுற்றுலா மையங்களில் ஒன்றாக மாறியது. மலேசியா அடிப்படைகளை அதிகம் விட்டுக் கொடுக்காமல் நவீனப் படுத்தப் பட்டது.
அதே நேரத்தில் 2001 ல் மலேஷியா இயறகையாகவே இஸ்லாமிய நாடு என்றும் அறிவித்தார்.
மலேஷியாவின் தற்போதையை அந்தஸ்து மொதத்ததிற்கும் மஹாதிரே காரணமாவார்.
அவரது சொல்வாக்கு மலேஷியாவில் பிரம்மாண்டமாக உயர்ந்தது. 1990 களில் மஹாதீர் மகுடம் அணியாத மன்னராக இருந்தார் என அரசியல் விமர்சகர் வைன் குறிப்பிடுகிறார்.
Wain writes that by the mid-1990s Mahathir had become the country's "uncrowned king"
அவருடைய கொள்கை திட்டங்கள் சில வற்றில் பலருக்கு ம் கருத்து வேறு பாடு இருந்தது என்ற போதும் அரசியலுக்கு வந்த ஆரம்பத்தில் துங்கு அப்துர் ரஹ்மானின் கொள்கைகளில் எதிர்த்து வந்தது  முதல் கடைசி வரை தனக்கு எத்தகைய எதிர்ப்பு வந்த போதும் மஹாதிர் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்தார்.
மேற்கத்திய நாடுகளுடன் நல்ல தொடர்பில் இருந்தாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை மிக வன்மையாக மறுப்பவராக இருந்தார்.
இதனால் இஸ்லாமிய நாடுகளுக்கு மஹாதிர் மிக முக்கியமான முன்னுதாரணமானார். பல முஸ்லிம் நாடுகள் மஹாதிரின் மாதிரியை பின்பற்றின.
இந்த நூற்றாண்டில் முஸ்லிம் உலகில் மஹாதிர் அதிகம் கவனிக்க் படக் கூடிய மனிதரானார்.
2002ம் ஆண்டு அம்னோ பார்ட்டியின் பொதுக்குழுவில் பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். நாடு கண்ணீர் விட்டது. எனினும் தீர்மாணாமாக எந்த வித சச்சரவும் இல்லாமல் 2003 அக்டோபரில் அஹ்மது அப்துல்லா படாவிக்கு பிரதமர் பதவியை மாற்றி கொடுத்தார்.
மலேசியாவின் நீண்ட கால பிரதமர் என்ற அந்தஸ்தோடு உலக அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு நீண்ட காலம் பிரதமராக பணியாற்றி தானாக ஓய்வி பெற்றவர் என்ற சிறப்போடு மஹாதிர் ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு அரசின் எந்த பொறுப்பையும் வகிக்காமல் ஓய்வில் இருந்தார். அவரது பெறுமை மற்றூம் அவருக்கு அடுத்து வந்த படாவியின் பெருமை காரணமாக அதற்கு  2004ல் நடை பெற்ற தேர்தலில் அம்னோ கட்சி முன்பு எப்போதையும் விட அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 219 இடங்களில் 199 இடங்களை வென்றது,.
ஆனால் அப்துல்லாஹ் படாவியினால் முன்பிருந்த மஹாதிருக்கு நிகராக பணியாற்ற முடியவில்லை. அரசு பலவீனம் அடைந்தது. அதனால் 2008 ல் நடைபெற்ற தேர்தலில் அம்னோ கட்சி நாடாளும்ன்றத்தில் வெற்றி பெற்றாலும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி என்ற பெருமையை இழந்தது. இந்த கால கட்டத்தில் அம்னோ கட்சிக்குள் மஹாதிரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப் பட வில்லை எனவே மஹாதிர் அம்னோ கட்சியிலிருந்து விலகினார்.
அப்துல்லாஹ் படாவிக்குப் பிறகு நஜீப் ரஜாக் பொருப்பேற்றார். மலேஷியா ஒரு வலிமையான தலைமை இல்லாமல் தவித்தது. நஜீப் ஆடம்பர விரும்பியாகவும் பெரும் ஊழலுக்கு இடமளிப்பவராகவும் திக்ழந்தார். ஒரு பெரிய நாட்டின் அதிபராக இருந்தவர் தமிழகத்தின் சென்னைக்கு வந்த போது ரஜினிகாந்தை அவருடை வீட்டில் சென்று சந்தித்ததே நஜீபின் தரத்துக்கு ஒரு சாட்சி.
மஹாதிரின் வலிமையுடன் ஒப்பிடுகையில் ஒரு கைக்குழந்தையின் அள்வுக்கு கூட நஜீப் தரமானவராக இருக்கவில்லை.
மலேஷியாவிற்குள் ஒரு ஒட்ட மொத்தக் கொந்தளிப்பு இருந்தது.
மலேசியா சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆட்சியிலிருந்த அம்னோ கட்சியின் மீது பலத்த் அதிருப்தி இருந்தாலும் அதை முற்றிலுமாக ஒதுக்க முடியாத ஒரு அடிப்படை மலாய் மக்களின் பலம் அதற்கு இருந்தது.
இந்தச் சூழலில் முழு ஓய்வில் இருந்த மஹாதிர் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். அவருடைய வயது 90 ஐ கடந்திருந்தது.
நஜீப் ரஜாக் இராஜினாமா செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பினார். அவரும் அவரது மனைவியும் மக்கள் திரண்ட இராஜினாமா கோரும் பெர்சியா 4 பேரணியில் பேரணியில் பங்கேற்றனர்.
2016 ல் மஹாதீர் பி.பி, பி எம் என்ற பெயரில் தனிக் கட்சி ஒன்றை தொடங்கினார். அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெற்ற மஹாதீர் தன்னால் கட்டமைக்கப் பட்ட தேசம் தனது கண் முன்னால் சீர் குலைந்து விடக் கூடாது என்பதற்காகவே தொர்ந்த் அரசியல் பயணம் என்றே இதைச் சொல்ல வேண்டும்.
இன்று மலேஷியாவின் அடையாளமாக இருக்கிற பல பெருமைகளும் மஹாதீரின் கனவுத் திட்டங்களாகும், பினாங்கு பாலம். புத்ரஜயா என்ற தலைமையக நகரம் சைபர் ஜெயா என்ற தொழில் நகரம் ,கே எல்/ டவர். உலகின் மிகப்பெரிய பெட்ரோனஸ் டவர், உலகின் மிகப்பெரிய கே எல் விமான நிலையம். நார்த் சவுத் எக்ஸ்பிரஸ் வே போன்ற பலவும் மஹாதீரை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் காரியங்களாகும்.
இத்தனை பெருமைகளாக் உருவாக்கப் பட்ட நாடு  பாதுகாப்பு விசயத்திப் பிரச்சனை இருந்தாலும் அங்குள்ள மக்கள் அமைதியாக செழிப்பாக வாழ்ந்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும் கூட வாழ்க்கை செலவு குறைவாக இருப்ப்பதால் மக்கள் நிம்மதியாகவே இருந்தனர். இந்திய வமிசாவழியினர் ஏராளமாக மலேஷியாவில் இங்கு கிடைக்காத வசதிகளோடு அங்கு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.  
ஊழல் கரை படிந்தவர்களால் சீரழிக்கப் பட்டு விடக் கூடாது என்ற கவலையில் களம் இறங்கிய மஹாதிர் தனியாக ஒரு கட்சியை உருவாக்கி இருந்தாலும் கூட முதன் முதலில் அதை தனியாக தேர்தலில் பங்கேற்க வைப்பதில் இருந்த சிரமத்தை கருதி அவருடைய அரசிய எதிரியாக இருந்த – அவருடைய துனைப்பிரதமராக இருந்து அவராலேயே வெளியேற்றப் பட்டு கைது செய்யப் பட்டு பல்லாண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிற அன்வர் இபுறாகீமின் கட்சியோடும் மற்றும் சில கட்சிகளோடும் இனைந்து பகடான் ஹரப்பான் என்ற கூட்டணியை உருவாக்கி கடந்த் 9ம் தேதி நடை பெற்ற தேர்தலில் களம் இறங்கினார்.
இந்த தேர்தலில் மஹாதீரின் செல்வாக்கு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காக கட்சி விளம்பரங்களில் மஹாதிரின் போட்டோ வை பயன்படுத்தக் கூடாது என்றும் கூட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த தேர்தலில் அம்னோ கட்சி கடும் சோதனையை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. எனினும் 57 ஆண்டுகளாக ஒரு கட்சிக்கு வாக்களித்துப் பழக்கப்பட்ட மக்கள்  - மலாய் மக்களை பிரத்நிதித்துவப் படுத்தும் அம்னோவை கை விட்டு விட மாட்டார்கள் என்றே கருதப் பட்டது. குறிப்பாக மகாதீரின் முயற்சி இந்த அளவு பெரும்பான்மைக்குரிய வெற்றியை தரும் என யாரும் எதிர்பார்க்க வில்லை.
ஆனால் யாரும் எதிர் பாராத வகையில் 1957ல் இருந்து ஆட்சியில் இருந்து வருகிற அம்னோ கட்சியை மக்கள் இந்த தேர்தலில் மண்ணை கவ்வ வைத்து விட்டனர்.
மாஹாதீரை பிரதமராக முன்னிருத்திய பகடாத் ஹரப்பான் கூட்டணி 122 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 112 இடங்கள் கிடைத்தாலே ஆட்சியை அமைத்து விட  முடியும்.
அல்லாஹ் தான் நினைப்பவரை ஆட்சியில் அமர்த்துகிறான் என்ற திருக்குர் ஆனின் சத்தியக் கூற்று நிஜமாகிவிட்டது.
மஹாதீரின் தனிப் பட்ட செல்வாக்கும் வியூகமும் ஓய்வு பெற்ற ஒருவரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் 92 வயதில் அமர்த்தியிருக்கிறது.  உலகின்  முதிய பிரதராக 7 வது முறையாக நேற்று மஹாதீர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் நடை பெற்றுள்ள இந்த மாற்றம் ஜனநாயகத்தை நேசிக்க கூடிய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக் கூடியது.
பல செய்திகள் இதில் உலக அரசியலுக்கும் ஆசிய அரசியலுக்கும் இந்த நிகழ்வு தருகிறது.
·         தனிப்பட்ட ஒரு நபரின் நாட்டின் மீதான அக்கறை
·         ஒரு நாட்டின் அடையாளத்தை உருவாக்கும் தனிப்பட்ட நபரின் செயலபாடுகள்
·         மஹாதீரின் சிறு பிள்ளை பருவத்திலிருந்து தொடரும் விடா முயற்சி
·         அரசியலில் வியூகத்திற்கும் மதியூகத்திற்கும் இருக்கிற சக்தி
·         நாட்டின் நலனை கவனிக்காமல் நடப்போர் எத்தகைய வலிமையான நிலையிலும் தோல்வியை சந்திக்க நேரும் பரிதாபம்.
·         அக்கறையானோர் எந்த வயதிலிருந்தாலும் மக்கள் ஏற்பார்கள் என்ற உண்மை.
·         தொடர்ர்ச்சியாக செய்யப்படும் மக்கள் போராட்டங்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும்/
aஅத்தோடு மிக முக்கியமாக 
ஜி எஸ் டி பிரச்சனையால் தொழில் முனைவோர் சிறு வியாபாரிகள் மிகப்பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
நான் பிரதமரானால்  100 நாட்களில் ஜி எஸ் டி மாற்றுவேன் என மஹாதீர் வாக்களித்தார்.
நாடு திவாலாகிவிடும் என ஆளும் கட்சியினர் எச்சரித்தனர்.
அரசாங்கத்தின் ஆடம்பர செலவை கட்டுப்படுத்தினால் அந்த விபரீதம் நடக்காது என மஹாதீர் சொன்னார்.

இது இந்தியாவுக்கு தற்போதைய பெரும் பாடமாகும்.
என பல  பாடங்கள் இந்த நிகழ்வின் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கிறது.
முஸ்லிம்களும் இந்தியர்களும் கனிசமாக மகிழ்ச்சியாக வாழ்கிற அந்த நாட்டை அல்லாஹ் இனி நம்பிக்கை மற்றும் வளர்ச்சியின் பாதையில் செலுத்தட்டும்
தீய பார்வைகள், சத்திகளின் இடையூறுகளில் இருந்து அல்லாஹ் பாதுகாக்கட்டும்
உலகின் அரசியல் தலைவர்களும் மக்களும் பாடம் பெற அல்லாஹ் இதை காரணமாக்கட்டும்.

 இன்னும் சில நாட்களில் ரமலான் வர இருக்கிறது.

شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون(185)


عن سلمان الفارسي رضي الله عنه أنه قال : ( خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال : أيها الناس قد أظلكم شهر عظيم مبارك ، شهر فيه ليلة خير من ألف شهر ، جعل الله صيامه فريضة ، وقيام ليله تطوعاً ، من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدّى سبعين فريضة فيما سواه ، وهو شهر أوله رحمة وأوسطه مغفرة ، وآخره عتق من النار رواه ابن خزيمة
மே 16   ம் தேதி சந்தேகத்திற்குரிய நாள். அன்றைய தினம்நோன்பு வைப்ப்பது   கூடாது.
عن طلحة بن عبيد الله أن رجلين قدما على رسول الله صلى الله عليه وسلم وكان إسلامهما جميعا وكان أحدهما أشد اجتهادا من صاحبه فغزا المجتهد منهما فاستشهد ثم مكث الآخر بعده سنة ثم توفي قال طلحة فرأيت فيما يرى النائم كأني عند باب الجنة إذا أنا بهما وقد خرج خارج من الجنة فأذن للذي توفي الآخر منهما ثم خرج فأذن للذي استشهد ثم رجعا إلي فقالا لي ارجع فإنه لم يأن لك بعد فأصبح طلحة يحدث به الناس فعجبوا لذلك فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال من أي ذلك تعجبون قالوا يا رسول الله هذا كان أشد اجتهادا ثم استشهد في سبيل الله ودخل هذا الجنة قبله فقال أليس قد مكث هذا بعده سنة قالوا بلى وأدرك رمضان فصامه قالوا بلى وصلى كذا وكذا سجدة في السنة قالوا بلى قال رسول الله فلما بينهما أبعد ما بين السماء والأرض  - احمد
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردة الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة
ரமலானை பயன்படுத்தாவர்களாக ஆகி விடக் கூடாது.அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்றுவானாக!

روى ابن حبان في صحيحه  بسنده إلى رسول الله {صلى الله عليه وسلم} قال: ((صَعِدَ رَسُولُ اللَّهِ {صلى الله عليه وسلم} الْمِنْبَرَ فَلَمَّا رَقِيَ عَتَبَةً قَالَ آمِينَ ثُمَّ رَقِيَ عَتَبَةً أُخْرَى فقَالَ آمِينَ ثُمَّ رَقِيَ عَتَبَةً ثَالِثَةً فقَالَ آمِينَ ثُمَّ قَالَ أَتَانِي جِبْرِيلُ فقَالَ يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْتُ آمِينَ قَالَ وَمَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْتُ آمِينَ فقَالَ وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْ آمِينَ فَقُلْتُ آمِين )) (رواه الحكم في مستدركه وابن حبان في صحيحه).
மே 16 அன்று பிறை தென்பட்டதாக காஜி அறிவிப்பார் எனில் அன்றிலிருந்து ரலமானை அனுபவிப்போம்.
அதை நன்மைகளால் நிறப்ப உறுதி ஏற்போம்.
எந்த ஒரு நன்மையும் ரமலானில் அளவிடற்கரிய கூலியை தரக்கூடியது,.
 كان للطاعة فيه فضل عظيم ومضاعفة كثيرة ، وكان إثم المعاصي فيه أشد وأكبر من إثمها في غيره ، فالمسلم عليه أن يغتنم هذا الشهر المبارك بالطاعات والأعمال الصالحات والإقلاع عن السيئات

ü     لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ 
ü     عُمْرَة فِي رَمَضَانَ تَقْضِي [أي تعدل] حَجَّةً أَوْ حَجَّةً مَعِي ) رواه البخاري 
ü     من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه، ومن أدى فيه فريضة كان كمن أدى سبعين فريضة فيما سواه )
ü     عن الزهري قال : " تسبيحة في رمضان أفضل من ألف تسبيحة في غيره " انتهى .
ü     وقال النخعي رحمه الله : " صوم يوم من رمضان أفضل من ألف يوم ، وتسبيحة فيه أفضل من ألف تسبيحة ، وركعة فيه أفضل من ألف ركعة " انتهى من " لطائف المعارف "
நண்மைகளுக்கு அதிகம் பரிசளிக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உள்ள தூயமையுடன் தயாராவோம். சர்ச்சைகளை தவிர்ப்போம்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!

   




No comments:

Post a Comment