வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 28, 2018

வாழ்வை வளப்படுத்தும் எளிய நற்காரியங்கள்

أُولَٰئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ (61وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَلَدَيْنَا كِتَابٌ يَنطِقُ بِالْحَقِّ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ
இந்த ஆண்டு பெருநாளுக்கு முந்திய இஷாவில் ஒரு இளைஞன் தனியே சந்தித்துக் கேட்டான்.
ஹஜ்ரத் ! எனக்கு ஸதக்கத்துல் பித்ரு கொடுக்க வசதியில்ல. அதனால பெருநாள் தொழுகைக்கு வர்ரதுக்கு முன்னாடி என்னால் ஸதகத்துல் பித்ர் கொடுக்க முடியாது. என்னுடைய தொழுகை செல்லுமா ?
சத்கத்துல் பித்ரை பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு முன்னாள் கொடுத்து விட்டு வந்து விடுங்கள் என்று பயானில் அழுத்தமாக கூறியதால் வந்த விளைவு இது என்று புரிந்து கொண்டேன்.
கண்களில் திரண்ட கண்ணீரை ஒரு புறம் மறைத்துக் கொண்டு அந்த இளைஞனிடம் கூறினேன்.
வசதியிருந்தால் தான் பித்ரு சதகா கொடுக்கனும், இல்லை எனில் கவலைப் பட தேவையே இல்லை. உங்களது பெருநாளை தக்பீரால் அழகு படுத்துங்கள். அடுத்த வருடம் பித்ரா கொடுக்க வேண்டும் என அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று கூறினேன்.
ஏழைகள் தமது வாழ்வை நன்மையால் நிறைத்துக் கொள்வதற்கு மார்க்கம் ஏராளமான வழிகளை கூறியிருக்கிறது.
ஏழைகள் மட்டுமல்ல. மக்கள் அனைவரும் சாதாரணமாக நன்மைகளை சேர்த்துக் கொள்ள முடியும். எளிமையாக செயல் படுத்த முடிந்த அந்த நற்காரியாங்கள் பெரும் பலனை தரக் கூடியவை.
நபி (ஸல்) அவர்கள் இப்படி துஆ கேட்பார்கள்.
اللهم اجعل الحياة زيادة لنا في كل خير


இது  துஆ மட்டுமல்ல.
நம்முடைய வாழ்க்கை எந்த திசையில் அமைய வேண்டும் எனபதைக் கற்றுத் தருகிற பாடமும் ஆகும்.
நமது நாளைய பொழுதுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனை நம்மிடம் இருக்கிறதா ?
இதோ இந்த துஆ அந்த இலக்கை கற்றுத் தருகிறது.
நமது நாளைய பொழுதுகள் நன்மைகள் மிகைத்ததாக இருக்க வேண்டும்.
பெரியோர்களே! இளைஞர்களே!
அப்படி ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொள்வோம்.
சிந்தித்துப் பாருங்கள்அவ்வாறு நிர்ணயம் செய்து கொண்டால் நம்முடைய வாழ்வு குறித்து நாமே பெருமைப்பட முடியுமா இல்லையா ? நம்முடைய வாழ்கைக்கு ஒரு புது அர்த்தம் கிடைத்துவிடுமல்லவா ?
சபதமேற்போம். நமது நாளைய பொழுதுகள் நன்மைகள் நிறைந்ததாக இருக்கட்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வான்.
அல்லாஹ் தவ்பீக் செய்தால் மட்டுமே நன்மைகளைச் செய்கிற எண்ணம் தோன்றும் . உடல் ஒத்துழைக்கும் , சூழ்நிலைகள் அமையும்.
நன்மைகளில் ஆர்வம் கொள்கிற யாரும் இந்த அடிப்படை தத்துவத்தை மறந்து விடக்கூடாது.
لا قوة الا بالله
நாம் வீடுகளில் மாட்டி வைத்திருக்கிற படங்களில் இந்த வாசகம் இருக்கிறது. அது தருகிற அழுத்தமான செய்தி. நமக்கான எந்த நன்மையும் அல்லாஹ் நாடினாலே தவிர சாத்தியப் படாது.
எனவே நன்மைகள் நிறையச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை வந்து விட்டால் இந்த துஆ வை அதிகம் கேட்போம். குறிப்பாக பஜ்ரு தொழுகைக்குப் பின் கேட்போம்.
அடுத்த்தாக மார்க்கம் கற்பித்திருக்கிற எளிமையான நற்செயல்களின் பட்டியலை தெரிந்து கொள்வோம். அதில் எது நம்மைக் கடந்து சென்றாலும் நாம் அதனால் இலாபம் அடையாமல இருந்து விடக் கூடாது.
உன்னதமான உதாரணம் ஹழரத் அபூபக்கர் சித்தீக் ரலி  .சொர்க்கத்தின் எல்லா வாசல்களும் அவரை அழைக்கும்.
சித்தீக் ரலி அவர்கள் எந்த நன்மையையும் விட வில்லை
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: "قال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةً؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ مَرِيضًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ»" (رواه مسلم).

எனவே சொர்க்கத்தின் ஒவ்வொரு வாசலும் அவரை அழைக்கும்.  

قال رسول الله صلى الله عليه وسلم : ( من أنفق زوجين في سبيل الله من ماله دعي من أبواب الجنة ، وللجنة ثمانية أبواب فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ، ومن كان من أهل الصيام دعي من باب الصيام . فقال أبو بكر : والله ما على أحد من ضرر دعي من أيها دعي ، فهل يدعى منها كلها أحد يا رسول الله ؟ قال : نعم ,وأرجو أن تكون منهم



இந்த உலகில் எந்த நிகழ்சிக்கு செல்லுகிற போதும் நமக்கு ஒரு விஜபி மரியாதை கிடைத்தால் நலமாக இருக்கும் என்று ஆசைப்படாதவர் நம்மில் ஒருவர் கூட இருக்க முடியாது. ஏன் மறுமை விசயத்தில் அத்தகைய ஆசை இருக்க கூடாது,

எளிய நற்காரியங்கள் பலவற்றை பெரும் நன்மைக்குரியதாக பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஆழ்ந்து கவனம் செலுத்தினால் சொர்க்க வாசல்களில் ஏதாவது ஒன்றுக்கு நாம் தகுதி பெறக் கூடும். ஒரு வேளை பல வழிகளில் நமக்கான அழைப்புக்கள் வரக் கூடும்.
ஒரு கல்யாண வீட்டில் மாப்பிள்ளை வீடும் மணம்கள் வீடும் நம்மை அழைத்திருக்கும் எனில் அங்கு நாம் செல்கையில் ஒரு பெருமிதம் இருக்கும் தானே ?
முயசி செய்வோம். அல்லாஹ் கிருபை செய்வானாக!
சொர்க்கம் செல்ல எளிய வழிகள்
பொதுவாக நற்குணங்களோடு வாழ்வது சொர்க்கத்தை சொந்தமாக்கும்,

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ فَقَالَ الْفَمُ وَالْفَرْجُ .

திக்ரு ஷஹாதத்தை விடச் சிறந்தது ஆனால் மிக எளிமையானத்.
عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ , قَالَ : سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ , يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٍ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالْوَرِقِ وَخَيْرٍ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ ، ذِكْرُ اللَّهِ 

எப்போது அல்லாஹ்வின் பெயர் நாவில் இருந்து கொண்டே இருக்கப் பழகுவோம்.
சுப்ஹானல்லா. அல்ஹம்துல் லில்லாஹ் மாஷா அல்லாஹ் என்பது நமது உணர்வாக மாறட்டும்.
عن سهل بن معاذ بن أنس الجهني عن أبيه رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن رجلا سأله فقال أي المجاهدين أعظم أجرا يا رسول الله؟ قال أكثرهم لله تعالى ذكرا قال فأي الصائمين أكثر أجرا؟ قال صلى الله عليه وسلم أكثرهم لله عز وجل ذكرا ثم ذكر الصلاة والزكاة والحج والصدقة كل ذلك يقول رسول الله صلى الله عليه وسلم أكثرهم لله ذكرا

فعن أبي موسى الأشعري – رضي الله عنه – قال : قال رسول الله صلى الله عليه وسلم : «مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت» (رواه البخاري ومسلم) .

பொதுவாக காலையில் அல்லது மாலையில் அல்லது இரவில் திக்ருகளை ஓதுகிற பழக்கத்தை தொடர்ச்சியாக கடை பிடிப்பது ஏராளமான நன்மைகளை தரக் கூடியது.

சுருக்கமாக சிலவற்றை பட்டியலிடுகிறேன்.

1.        كفى بالذكر فضلاً أنه من أسباب اطمئنان القلب . أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ" [الرعد: 28

2.        أن يكون العبد في معية الله تعالى : فعن أبي هريرة – رضي الله عنه – قال : قال رسول الله صلى الله عليه وسلم : «قال الله تعالى أنا عند ظن عبدي بي، وأنا معه إذا ذكرني، فإن ذكرني في نفسه ذكرته في نفسي، وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه، وإن تقرب إلي شبرًا تقربت إليه ذراعًا، وإن تقرب إلي ذراعًا تقربت منه باعًا»(رواه البخاري ومسلم وابن ماجة واللفظ للبخاري.
இந்த் ஒன்றே போதும் திக்ரில் பேராசை கொள்வதற்கு
3.        الذكر حرز للعبد من الشيطان كما في حديث الحارث الأشعري -  أن النبي صلى الله عليه وسلم قال... و آمرُكم أن تذكروا اللهَ ، فإنَّ مثلَ ذلك كمثلِ رجلٍ خرج العدوُّ في إثرِه سراعًا ، حتى إذا أتى على حِصنٍ حصينٍ فأحرزَ نفسَه منهم ، كذلك العبدُ ، لا يُحرزُ نفسَه من الشيطانِ إلا بذكرِ اللهِ»( صحيح الترغيب.
உங்களை சத்தியமிடச் சொன்ன காரணம் என்ன தெரியுமா ?
4.        أن الله – عز وجل – يباهي بالذاكرين ملائكته فعن أبي سعيد الخدري – رضي الله عنه – قال : خرج معاوية على حلقة في المسجد، فقال إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه، فقال : «ما أجلسكم ؟ قالوا : جلسنا نذكر الله ونحمده على ما هدانا للإسلام ومنَّ به علينا، قال : آلله ما أجلسكم إلا ذلك ؟ قالوا : آلله ما أجلسنا إلا ذلك ، قال : أما إني لم أستحلفكم تهمة لكم، ولكنه أتاني جبريل، فأخبرني أن الله عز وجل يباهي بكم الملائكة» (رواه مسلم والترمذي والنسائي.
5.        أنه يضع عن الإنسان الأثقال يوم القيامة ، فعن أبي هريرة – رضي الله عنه – قال : كان رسول الله صلى الله عليه وسلم يسير في طريق مكة، فمرَّ على جبل يقال له جُمْدان، فقال : «سيروا هذا جُمْدان، سبق المفَرِّدون، قالوا : وما المفردون يا رسول الله ؟ قالالذاكرون الله كثيرًا والذاكرات)  يضع الذكر عنهم أثقالهم فيأتون يوم القيامة خفافًا» (رواه مسلم والترمذي.

நோயாளிகளை சந்தித்தல்
தற்காலத்தில் இது மிகவும் குறைந்து விட்டது.

ஒருவர் நோயுற்றிருப்பதை அறிந்தால் அவரை சந்தித்து ஆறுதல் கூறுவது மனிதாபி மானம் மட்டும் அல்ல. பெரும் நன்மைக்குரிய காரியமும் ஆகும்.

وعن على رضي الله عنه قال سمعت رسول الله  يقول (ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه سبعون ألف ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه سبعون ألف ملك حتى يصبح وكان له خريف في الجنة) رواه الترمذي وقال حديث حسن.

الخريف: التمر المخروف أي المجتني.

நோயாளியை சந்திப்பதை இயாதத் என்று ஹதீஸ் குறிப்பிடுகிறது. அது ஜியாரத் அல்ல. அதாவது சும்மா பார்த்து விட்டு திரும்புவது அல்ல.
நோயாளியை பார்த்து ஆறுதல் கூறி – உதவிகள் ஏதும் செய்ய முடியும் எனில் உதவிகளை செய்து விட்டு வருவதாகும். அவரது சிரமங்களை காது தாழ்த்தி கேட்பதுமாகும். தேவைப் பட்டால் மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன் என்று தேற்றுவதுமாகும்.

عن أبي هلال قال: دخلنا على بكر بن عبد الله في مرضه، نعوده وهو مريض، فجعلوا يدخلون ويخرجون، فجعل ذلك يعجبه؛ فقال: إن المريض يعاد ولا يزار؛ وقال عفان: إن المريض يعاد، والصحيح: يزار

عن بشر قال: كان سفيان الثوري إذا عاد رجلاً، قال: عافاك الله من النار

அவர் அறிவுரை ஏதும் சொல்வார் எனில் அதற்கும் செவி சாய்க்க வேண்டும்.

عن مبارك ـ ابن فضالة ـ قال: دخلت على ثابت البناني في مرضه، وهو في علو له، وكان لا يزال يذكر أصحابه؛ فلما دخلنا عليه، قال: يا إخوتاه، لم أقدر أن أصلي البارحة كما كنت أصلي، ولم أقدر أن أصوم كما كنت أصوم، ولم أقدر أن أنزل إلى أصحابي، فأذكر الله عز وجل كما كنت أذكره معهم؛ ثم قال: اللهم، إذ حبستني عن ثلاث، فلا تدعني في الدنيا ساعة ـ أو قال: إذا حبستني أن أصلي كما أريد، وأصوم كما أريد، وأذكرك كما أريد، فلا تدعني في الدنيا ساعة ـ فمات من وقته رحمه الله.


நோயாளிக்கு மகிழ்ச்சியளிக்கும் நல்ல வார்த்தைகளை கூற வேண்டும்

என் பெற்றோரின் விசாரணையை விட அல்லாஹ்வின் விசாரானையை தேர்ந்தெடுப்பேன்.

عاد حماد بن سلمة سفيان الثوري، فقال سفيان: يا أبا سلمة، أترى يغفر الله لمثلي؟ فقال حماد: والله، لو خيرت بين محاسبة الله إياي، وبين محاسبة أبوي، لاخترت محاسبة الله على محاسبة أبوي؛ وذلك: أن الله تعالى أرحم بي من أبوي

பொருத்தமற்ற நேரங்களையும் அதிகமாக நேரத்தை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

عن الشعبي قال: عيادة حمقاء القراء على أهل المريض، أشد من مرض صاحبهم؛ يجيئون في غير حينهم، ويجلسون إلى غير وقتهم.

நாம் மருத்துவ மனையின் விதிகளை அலட்சியப்படுத்துகிறோம். அது சரியல்ல. நமது பெருமை தான் முன்னிலையில் இருக்கிறது. நோயாளிகளைப் பற்றிய  அக்கறை அல்ல. இத்தகைய சந்திப்புக்கள் அறிவார்த்தமானவை அல்ல. அத்தகையோரைத் தான் முட்டாள்கள் என்கிறார் சுஃபீ (ரஹ்)

பிறரின் குறைகளை மறைத்தல். எளிய ஆனால் மிகச் சிறந்த காரியம்.

ஒரு மனிதரிடம் ஒரு குறையை கண்டால் அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் தான் நமக்கு தூக்கமே வருகிறது.
சோஷியல் மீடியாக்கள் இது விவகாரத்தில் நம்மை எளிதில் பாவியாக்கி விடுகின்றன.
ஒரு பார்வோர்டில் ஆயிரமாயிரம் பேருக்கு ஒரு குறையை அம்பலப் படுத்தி விடுகிறோம்.
எச்சரிக்கை !
தனி நபரின் மரியாதையோடு தொடர்புடைய விசயத்தில் களத்தில் இறங்குகிற போது “ இது தேவையா ? இதில் நன்மையுண்டா என்று ஒரே ஒரு தடவை யோசிப்போம். அப்படிச் செய்தால் தவறுகளை தவிர்த்து விடலாம் என்பது மட்டுமல்ல. சொர்க்கத்தையும் சொந்தமாக்கலாம்.

قال النبي صلى الله عليه وسلم: "من ستر أخاه المسلم في الدنيا ستره الله يوم القيامة". صحيح الجامع الصغير

கோபத்தை கட்டுப் படுத்திக் கொள்ளுதல் சொர்க்கம் செல்லும் வழி

 وعن معاذ بن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال :" من كظم غيظاً وهو قادر على أن ينفذه دعاه الله سبحانه وتعالى على رؤوس الخلائق يوم القيامة حتى يخيره من الحور العين ما شاءرواه أبو داود والترمذي وقال حديث حسن

உண்மை பேசுதல் - நன்மைகளின் ராஜபாட்டைக்கான ஒரு எளிய வழி

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(( عَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صِدِّيقًا، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ، وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا 

வாயையும் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்தல்

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنُ لَهُ الْجَنَّةَ " . هَذَا حَدِيثٌ صَحِيحٌ 

மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை களைதல்

أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال: ((لقد رأيت رجلاً يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق، كانت تؤذي المسلمين))(]) رواه مسلم،

சுன்னத்தான தொழுகைகள், சுன்னத்தான நோன்புகள் , சுன்னத்தான துஆக்கள், வாழ்வை நன்மை மயமாக மாற்றக் கூடியவை. அவை ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்து பெரும் நன்மைகளை பெற்றுத்தரும்.

·        أبي هريرة رضي الله عنه قال :( ما من عبد مسلم يصلي في يوم ثنتي عشرة ركعة تطوعا إلا بني له بيت في الجنة )رواه أحمد

·        أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : " من صام رمضان وأتبعه ستا من شوال كان كصيام الدهر . " رواه مسلم 
·        قال رسول الله صلى الله عليم وسلم : ( من توضأ فأحسن الوضوء ، ثم رفع بصره إلى السماء فقال :أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ، وأشهد أن محمدا عبده ورسوله ، فتحت له أبواب الجنة الثمانية ، يدخل من أيها شاء 

மிக எளிமையான இந்தக் காரியங்கள் மகத்தான் கூலிகளை பெற்றுத்தருகின்றன என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனி வரும் நாட்களில் இத்தகைய நன்மையான காரியங்களால் நமது வாழ்வு மதிப்புடையதாக வேண்டும். என் உறுதியேற்போம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

1 comment:

  1. Assalamu Alaikum. Masha Allah. wonderful messages. Continuously I am updating your posts.Picking points from your message and utilizing in my jummah bhayaan. Jazakkallah khairan.
    A request... In your Hadees references please give us the translation or at least Hadees no.Hope you consider my request.

    ReplyDelete