பார்வை ஒன்றே போதுமே சொர்க்ம் செல்ல
முஸ்லிம்களை திருக்குர்
ஆன் பண்படுத்தும் அம்சங்களில் ஒரு முக்கிய உத்தரவு
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ
وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا
يَصْنَعُونَ * وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ
وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ ) الآية (النور:30-31) .
பொதுவாக
ஆண்களை மட்டுமே குறிப்பிட்டு சட்டங்களை
பொதுவாக பேசும் திருக்குர் ஆன்
இந்த உத்தரவை இரு பாலரையும்
தனித்தனியாக குறிப்பிட்டு பேசுவது உத்தரவின் முக்கியத்துவத்தை
எடுத்துக் காட்டுகிறது.
இவ்வசனம் பார்வைக்கு
அடுத்ததாக கற்பொழுக்கத்தை பற்றி குறிப்பிடுகிறது. பார்வைக்கு கற்பொழுக்கத்திற்கு இடையோயுள்ள
அழுத்தமான தொடர்பை இது சுட்டிக்காட்டுகிறது. பார்வை தீமையில் விழும் எனில் கற்பொழுக்கத்தை
காப்பது சாத்தியமல்ல.
இவ்வசனம் தருகிற
முக்கிய அறிவுரை. பார்வையை கட்டுப் படுத்தினால் அல்லாஹ் நமது வாழ்வை பரிசுத்தமானதாக
ஆக்கி வைப்பான்
எனவே முஃமின்கள்
தமது பார்வையை கட்டுப்படுத்திக் கொள்ளும் விசயத்தில் தனி கவனம் செலுத்த கடமைப் பட்டிருக்கிறார்கள்.
பொதுவாக மனிதனுக்கு
அல்லாஹ் உடல் ரீதியாக நிறைந்த அருட்கொடைகளை செய்திருக்கிறான் என்றாலும் குறிப்பாக மூன்று
உறுப்புக்களை திருக்குர் ஆன் அதிகமாக கூறுகிறது.
ü وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لا تَعْلَمُونَ
شَيْئاً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ
تَشْكُرُونَ) (النحل:78) .
ü وَهُوَ الَّذِي أَنْشَأَ لَكُمُ السَّمْعَ
وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلاً مَا تَشْكُرُونَ) (المؤمنون:78)
ü ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ
وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلاً مَا
تَشْكُرُونَ) (السجدة:9)
ü قُلْ هُوَ الَّذِي أَنْشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ
السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلاً مَا تَشْكُرُونَ) (الملك:23)
இம்மூன்றில்
படைப்பில் முந்தியதாக காது இருப்பதால் காது
முதலில் கூறப்பட்டுள்ளது,
இவற்றில் நாம்
கட்டுப் படுத்தி வைக்க வேணியது என இறைவன் குறிப்படுவது கண்க்ளையேயாகும்.
கண் அல்லாஹ்வின்
மாபெரும் அருட்கொடைகளில் ஒன்று. ஐநூறு ஆண்டுகால தனித்த வணக்கம் கூட கண்ணுக்கு ஈடாகாது.
ஒரு ஹதீஸ் ஹாகிமில்
இடம் பெறுகிறது. ஜிப்ரயீல் அலை சொன்ன கதை .
ஒரு மனிதர்
மலையுச்சியில் வாழ்ந்தார். சுற்றிலும் கடல். ஒரு சிறு சுணை. ஒரே ஒரு மாதுளை மரம் இவற்றோடு
ஐநூறூ வருடங்கள் வாழ்ந்து சஜ்தாவில் மரணித்தார். அந்த ஐநூறு வருட வணக்கமும் அல்லாஹ்
கொடுத்த கண்ணுக்கு ஈடானது.
عن النبي صلى الله عليه وسلم أنه قال :
( خرج من عندي جبريل آنفا فقال : يا محمد ، إن لله عبداً عبد الله خمسمائة سنة ،
على رأس جبل ، والبحر محيط به ، وأخرج له عيناً عذبة بعرض الأصبع ، تفيض بماء عذب
، وشجرة رمان تخرج كل ليلة رمانة ، فيتغذى بها ، فإذا أمسى نزل وأصاب من الوضوء ،
ثم قام لصلاته ، فسأل ربه أن يقبضه ساجداً ، وأن لا يجعل للأرض ولا لشيء يفسده
عليه سبيلاً حتى يبعث ساجدا ، ففعل فنحن نمر به إذا هبطنا وإذا عرجنا وأنه يبعث
يوم القيامة فيوقف بين يدي الله فيقول : أدخلوه الجنة برحمتي ، فيقول : بل بعملي
يا رب ، فيقول للملائكة : قايسوا عبدي بنعمتي عليه وبعمله ، فتوزن ، فتوجد نعمة
البصر قد أحاطت بعبادة خمسمائة سنة ، وتبقى نعمة الجسد فضلا عليه ، فيقول : ادخلوه
النار ، فينادي : يا رب برحمتك ، فيقول : ردوه ، فيوقف بين يديه ، فيقول : من خلقك
ولم تك شيئا ؟ ، فيقول : أنت يا رب ، فيقول : أكان ذلك من قبلك أم برحمتي ؟ ،
فيقول : برحمتك ، فيقول : أدخلوه الجنة برحمتي ) رواه الحاكم في " المستدرك
கண் என்ற
மகத்தான் அருட்கொடைய நாம் எப்படி பயன்படுத்தினோம் என்பது விசாரணைக்குரியது.
إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ
أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْؤُولاً)(الإسراء: من الآية36) .
கண்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து பெருமானார் (ஸல்)
ü சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் வழி.! பார்வை பாதுகாத்திரு!!
قال:" اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة: اصدقوا إذا
حدثتم، وأوفوا إذا عاهدتم، وأدوا إذا ائتمنتم، واحفظوا فروجكم، وغضوا أبصاركم،
وكفوا أيديكم".
ü பார்வை கட்டுப் படுத்தினால் மட்டுமே சாலை யில் உட்காரும் அனுமதி
“إياكم والجلوس في الطرقات، فقالوا: يا رسول الله مالنا
من مجالسنا بُدٌّ نتحدث فيها. فقال: " فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق
حقه. قالوا: وما حق الطريق يا رسول الله؟ قال: غض البصر، وكف الأذى ، ورد السلام،
والأمر بالمعروف، والنهي عن المنكر”
1.
பார்வை விசம்
இபுலீஸின் விஷம் தோய்ந்த அம்பு
ü النظرة سهم من سهام إبليس ))[أخرجه الحاكم في مستدركه]
ü ((النظرة سهم مسموم))[أخرجه الطبراني في المعجم الكبير]
ஹஜ்ஜத்துல்
விதாவின் போது பெருமானாருக்கு பின்னள்
ஒட்டகத்தில் உட்கார்ந்திருந்த பழ்லு பின் அப்பாஸ்
ரலி அவர்களது பார்வை சட்டம் கேட்க
வந்த ஒரு பெண்ணின் மீது
பட்டது. இதை கண்ட பெருமானார்
(ஸல்) அவர்கள் தனது கையால்
அவரது தாடையைப் பிடித்து திருப்பி விட்டார்கள்.
ஒரு கூட்ட நெரிசலில்
என்ற போது இதை பெருமானார் ஏற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது,
இதன் முக்கியத்துவத்தை
உணர்ந்த முன்னோர்களின் நடை முறையும் அறிவுரையும்.
قول أنس رضي الله عنه: إذا مرت بك امرأة فغمض عينيك حتى تجاوزك".
பெண்களை
பார்த்துவிட்டால் குருடனைப் போல் ..
وكان الربيع بن خثيم يغض بصره فمر به نسوة فأطرق ( أي أمال رأسه إلى
صدره) فظن النسوة أنه أعمى وتعوذن بالله من العمى.
இப்னு கய்யுமுல் ஜவ்ஸீ (ரஹ்) பார்வையை கட்டுப் படுத்திக் கொண்டால் கிடைக்கும்
பல்வேறு நன்மைகளை அனுபவப்பூர்வமாக விளக்கியுள்ளார்,
இளைஞர்களும் இளைஞிகளும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்திகள் இவை
வளமான எதிர்காலத்திற்கான உறுதியான அடிப்படைகளை இவை
ذكر الإمام ابن القيم رحمه الله عدة فوائد ومنها:
பார்வை பாதுகாத்துக் கொண்டால்..
1.
கஷ்டத்திற்கும்
நஷ்டத்திற்கு ஆளாக வேண்டி வராது.
تخليص القلب من ألم الحسرة، فإن من أطلق نظره دامت حسرته.
2.
உள்ளம் கண்
முகம் வெளிச்சம் பெறும்.
أنه يورث القلب نورا وإشراقا يظهر في العين وفي الوجه وفي الجوارح، كما أن إطلاق البصر يورثه ظلمة تظهر في وجهه وجوارحه.
3.
சரியான கணிப்புகள்
கிடைக்கும்.
أنه يورث صحة الفراسة، فإنها من النور وثمراته، قال شجاع الكرماني:
من عمر ظاهره باتباع السنة، وباطنه بدوام المراقبة، وغض بصره عن المحارم، وكف نفسه
عن الشهوات، وأكل من الحلال- لم تخطئ فراسته.
4.
கல்வி பெருகும்.
சிந்தனை விரிவடையும்
أنه يفتح له طرق العلم وأبوابه، ويسهل عليه أسبابه, وذلك بسبب نور القلب، فإنه إذا استنار ظهرت فيه حقائق المعلومات، ومن أرسل بصره تكدر عليه قلبه وأظلم.
இளைஞர்களும்
இளைஜிகளும் மிக ஆழ்ந்து யோசிக்க
வேண்டிய செய்தி இது. இன்றைய
பள்ளி கல்லூரிகளின் நிலை முதலில் பார்வையை
கெடுக்கிறது, பிறகு அறிவை கெடுக்கின்றன.
காதலிக்காத
மாணவியை கல்லூரி வளாகத்திலே மாணவன் கொலை செய்கிறான் . அறிவு பெற வந்தவன் சிறையில் வாடுகிறான்.
அறிவு பெற வந்தவளோ மீளா துயரில் வீழ்கிறாள்.
பள்ளி கல்லூரிக்
காலங்களில் தமது பார்வையை கட்டுப் படுத்திக் கொள்கிறவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
தவறுகிறவர்கள் வாழ்கையை தொலைக்கிறர்கள்.
5.
வலுவான இதயமும்
உறுதியும் வீரமும் பிறக்கும்.
أنه يورث قوة القلب وثباته وشجاعته، قال بعض الشيوخ: الناس يطلبون العز بأبواب الملوك، ولا يجدونه إلا في طاعة الله.
6.
பார்வையினால்
கிடைக்கிற இன்பத்தை விட உண்மையான மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும்.
أنه يورث القلب سرورا وفرحة وانشراحا أعظم من اللذة والسرور الحاصل بالنظر، فلذة العفة أعظم من لذة الذنب.
7.
ஆசை எனும்
நரகின் வாசலை அடைக்கும்
أنه يسد عن العبد بابا من أبواب جهنم، فإن النظر باب الشهوة الحاملة على مواقعة الفاحشة، فمتى غض بصره سلم من الوقوع في الفاحشة، ومتى أطلقه كان هلاكه أقرب.
8.
கல்வியாளர்களின்
அறிவு பலம் பெறும்.
أنه يقوي العقل ويزيده ويثبته، فإن إطلاق البصر وإرساله لا يحصل إلا
من خفة العقل وطيشه وعدم ملاحظته للعواقب كما قيل:
وأعقل الناس من لم يرتكب سببا حتى يفكر ما تجني عواقبه
وأعقل الناس من لم يرتكب سببا حتى يفكر ما تجني عواقبه
கல்லூரிகளில்
பல்கலைக் கழகங்களில் பார்வையை சிதற்விடும் கல்வியாளர்கள் மதிப்பை இழக்கிறார்கள். முடிவு
மோசமாகி விடுகிறது.
9.
இதயம் பரிசுத்தமாகும்
أنه يخلص القلب من ذكر الشهوة ورقدة الغفلة، فإن إطلاق البصر يوجب استحكام الغفلة عن الله والدار والآخرة، ويوقع في سكرة العشق.
ஆசை
அலட்சியம் என்ற இரு பெரும்
ஆபத்துக்களில் இருந்து இதயம் பரிசுத்தமாகும். கண்களுக்கும்
இதயத்திற்கும் ஒரு இரகசிய வழி இருக்கிறது. ஒன்று இன்னொன்றை திசை திருப்பி விடவே செய்யும்,
இப்னு
கய்யிமுல் ஜவ்சி இந்த் ஒன்பது
பலன்களை கூறினாலும் . இதிலுள்ள 9 வது பலன் அல்லாஹ்வோடு
மனிதனை நெருக்கமாக்கி வைக்கும் அல்லாஹ்வின் மீதான நேசத்தை அது
தரும் என்பதை 10 வதாக சில அறிஞர்கள்
கூறுகிறாகள்.
பார்வையை தறிகெட விடுவது காமக் காதலில் விழ வைக்கும் என்றால் பார்வையை காத்துக் கொள்வது இறைக்காதலை தரும். எனவே சாலிஹ் என்ற நிலையை
அடைய மனிதர்கள் முதலில் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டியது பார்வையை கட்டுப் படுத்திக்
கொள்ளும் காரியத்தில் ஆகும்.
கண் ஜாடையால் செய்யப்படும் தவ்றுகளை மோசடி என்று குர் ஆன் கூறுகிறது.
يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ
திடீரென் ஏற்படும்
அல்லது தவிர்க்க முடியாமல் ஏற்படும் பார்வை குற்றமல்ல. கூர்ந்து நோக்குதலும் திரும்ப
திரும்ப பார்ததலும் தவிர்க்க ப் பட வேண்டும்.
தடை செய்யப்
பட்ட ஹராமான காரியங்களை விட்டு மட்டும் அல்ல. தவிர்க்கப் பட வேண்டிய சந்தேகத்திற்குரிய
காரியங்களிலிருந்தும் கண்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அண்ணிய பெண்களை
பார்க்க கூடாது என்பது தெளிவானது. பெண்களின் சாயலில் இருக்கிற தாடியில்லாத பருவ வயது சிறுவர்களை கூட கூர்ந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பது
புரிந்து கொள்ள வேண்டியது .
மார்க்கத்தின்
சட்டத்தை மீறியவர்களை பார்க்க விரும்பாத பெருமானார் (ஸல்) அவர்கள்
وروي أن النبي صلى الله عليه وسلم لما
دخل عليه رسولي كسرى وقد حلقا لحيتيهما : فصد عنهم ببصره ، وقال : من أمركما بذلك
؟ ، فقالاً : أمرنا ربنا – يعنيان كسرى - ، فقال النبي صلى الله عليه وسلم : أما
أنا فأمرني ربي بأن أعفي لحيتي وأحف شاربي
முன்னோர்களில்
சிலர் காபிர்களை கூட பார்க்க விரும்பியதில்லை.
ويروي بعض السلف كان إذا مرّ أمامه
نصرانياً أغمض عينيه ! ، فقيل له : لماذا تصنع ذلك ؟ فقال : لا أستطيع أن أنظر لمن
يسب الله
பிறருக்கு
அல்லாஹ் கொடுத்திருக்கிற இன்பம் தரும் பொருட்களை
கூட அதிக நேரம் பார்க்க
வேண்டாம் என குர் ஆன்
கூறுகிறது.
لا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَى مَا
مَتَّعْنَا بِهِ أَزْوَاجاً مِنْهُمْ وَلا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ
جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ) (الحجر:88
இன்றைய சோசியல் மீடியாக்கள் அதிகம் பார்க்கப் படுகிற காட்சிகளில்
ஒன்று. – பிரபலமானவர்களின் சொத்து கார் வீடு போன்றவை அடங்கிய வீடியோக்களாகும்.
முஃமின்கள் தேவையற்று அவற்றில் பார்வையை செலுத்தக் கூடாது.
குறிப்பாக பெண்கள் இத்தகைய விவரங்களில் பார்வையை செலுத்துகிற போது
அதிக பேராசைக்கு ஆளாகிறார்கள் , அதனால் அமைதி பறிபோகிறது.
மற்றவர்கள் இத்தகைய ஆடம்பரங்களை ரசிக்கிற போது எப்படியாவது அவற்றை
நாமும் அடைய வேண்டும் என்ற துடிப்பு ஏற்படுகிறது, அதுவே சகல எல்லை மீறலுக்கும் காரணமாகிறது.
தடை செய்யப் பட்ட காட்சிகளை காண்பது சைத்தானின் வலைக்குள் காலை விடுவதாகும்.
قال ابن عباس رضي الله عنهما : ( الشيطان من الرجل
في ثلاثة : في نظره وقلبه وذَكَره ، وهو من المرأة في ثلاثة : في بصرها وقلبها
وعجُزها ) .
وقال مجاهد : ( إذا أقبلت المرأة جلس الشيطان على رأسها فزَّينها لمن ينظر، فإذا أدبرت جلس على عجُزها ، فزينها لمن ينظر ) .
وقال سفيان الثوري : ( إني أرى مع كل امرأة شيطاناً ، وأرى مع الشاب الأمر بضعة عشر شيطانا ) .
وقال مجاهد : ( إذا أقبلت المرأة جلس الشيطان على رأسها فزَّينها لمن ينظر، فإذا أدبرت جلس على عجُزها ، فزينها لمن ينظر ) .
وقال سفيان الثوري : ( إني أرى مع كل امرأة شيطاناً ، وأرى مع الشاب الأمر بضعة عشر شيطانا ) .
பெண்கள் பர்தாவில் இல்லாத இடங்களில் அப்பெண்களை குறை சொலவதல்ல பார்வையை
காத்துக் கொள்வதே முஸ்லிம்களின் கடமை
قال سعيد بن أبي الحسن: قلتُ للحسن: إنّ
نساء العجم يكشفن صدورهنّ ورؤوسهنّ، قال: اصرف بصرك، يقول الله تعالى: ( قُلْ
لّلْمُؤْمِنِينَ يَغُضُّواْ مِنْ أَبْصَـٰرِهِمْ وَيَحْفَظُواْ فُرُوجَهُمْ )
பெண்களும் ஆண்களைப் பார்க்க அனுமதியில்லை என்பதே இஸ்லாம்
وقد ذهب كثير من العلماء إلى أنه لا يجوز للمرأة أن
تنظر إلى الأجانب من الرجال بشهوة ولا بغير شهوة .
சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பாடகர்கள் ஆகியோரின் புகைப்படங்களை ஸ்கிரீனில் வைத்துக் கொள்வதை முஸ்லிமான பெண்கள் தவிர்க்க வேண்டும்.
இன்று இந்த தலைப்பை கையில் எடுத்துக் கொள்ள காரணம்.
அல்லாஹ் நமக்கு வழங்கிய மிக அற்புதமான கண் – பார்வை என்ற நிஃமத்தை மிகச் சாதரானமாக
நாம் அலட்சியப் படுத்தி வருகிறோம்.
நம்முடைய பார்வை இப்போது அதிகமாக நம்மிடம் இருக்கிற செல்போனில் செலவாகிகிறது.
அதில் சில நன்மைகள் இருந்தாலும் பெருமளவில் அது தீமையான செயல்களுக்கே இட்டுச்
செல்கிறது.
அன்னியப் பெண்களின் புகைப்படங்கள். ஆபாசக் காட்சிகள். புகைப்படங்கள் மலிந்து
கிடக்கும் களமாக இன்றைய நம்முடைய செல்போன்கள் இருக்கின்றன.
பாவையை தாழ்த்துங்கள் என்று குர் ஆன் கூறுகிறது, இப்போது நம்முடைய பார்வை தாழ்ந்தே
கிடக்கிறது.
டி குடிக்க நண்பர்களோடு சேர்ந்து போய் உட்கார்ந்த பிறகு ஆளாளுக்கு தமது செல்போன்களில்
மூழ்கிவிடுகிறோம்,
நன்றாக கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ளலாம். குர் ஆன் பார்வை மூடுங்கள் என்று
சொல்கிறது.
அநாவசியமான அனைத்து காரியங்களை விட்டும் நாம் பார்வையை மூடுவோம்.
சிறுவர்கள் பெண்கள் கூட பாதிக்கப் பட்டுள்ள சமூக தீமை இது. அவர்களுக்கு இதமாக
உணர்த்துவோம்.
அல்லாஹ் நமது வாழ்வை பாதுகாப்பானாக!
பார்வையை இப்படி சிதறவிடுவது சுகம் என்று நினைக்க வேண்டாம்.
அல்லாஹ் பார்வை குறித்த வசனத்தில் இறுதியாக குறிப்பிடுகிறான்.
إِنَّ
اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். خَبِيرٌ
நாம் என்ன பார்க்கிறோம் என்பதும் அல்லாஹ்வுக்கு தெரியும், இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதும் அல்லாஹ்வுக்கு தெரியும்.
என்ன பார்க்கிறோம் என்பது நமக்கு தெரியலாம். அதனால் என்ன விளைவு ஏற்படும் என்பது நமக்கு தெரியாது.
எல்லாம் தெரிந்த அல்லாஹ் சொல்கிறான்.
நாம் பார்வையை தாழ்த்திக் கொள்வோம். இது விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்போம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment