فِطْرَةَ اللَّهِ الَّتِي
فَطَرَ النَّاسَ عَلَيْهَا
இஸ்லாம் இந்த உலகிற்கு உலகிற்கு தெளிவான உறுதியான கலாச்சார கொள்கையை வகுத்துள்ளது. இந்த கொள்கை பழைமையானது. அதே நேரத்தில் நவீனத்தின் எந்த அம்சத்திலும் குறைவில்லாதது.
ஒரு கலாச்சார நடவடிக்கை சரியா தவறா என்பதில் மக்களை இஸ்லாம் குழப்பத்திற்குள்ளாக்கவில்லை. இஸ்லாமின் வழிப்படி வாழ்கிறவர்களுக்கு கலாச்சார அம்சங்களில் தடுமாற்றத்திற்கோ சலனத்திற்கோ இடமே இல்லை
لَوْ أَنَّهُمْ
فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِ لَكَانَ خَيْرًا لَّهُمْ وَأَشَدَّ تَثْبِيتًا (66)
وَإِذًا
لَّآتَيْنَاهُم مِّن لَّدُنَّا أَجْرًا عَظِيمًا (67)
وَلَهَدَيْنَاهُمْ
صِرَاطًا مُّسْتَقِيمًا (68)
وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ
الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ
وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا (69)
ذَٰلِكَ
الْفَضْلُ مِنَ اللَّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ عَلِيمًا (70
ஆண்
பெண் இருபாலரும் கல்வி கற்க வேண்டும் என்று கூறிய இஸ்லாம் கோ எஜுகேசன் எனும் இருபாலர் ஒரே இடத்தில் அமர்ந்து கல்வி பெறும் முறை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதை
பிற்போக்குத்த்தனம்
என்றது உலகு, இன்றைய நிலை என்ன ?
இன்றைய
உலகின் அறிவாசானாக கருதப் படும் இஸ்ரேல் நாடு தனது பள்ளிக்கூடங்களை தனிப்பள்ளிகளாக மாற்றி வருகிறது.
Israeli children are increasingly being taught at
gender-segregated schools, according to figures reported by Haaretz newspaper,
which show a major increase in single-sex education.
சுமார்
40 சதவீதம் பள்ளிகளில் இந்த நடை முறை அமுலுக்கு வந்து விட்டதாகவும். இதுவே தற்போதைய இஸ்ரேலின் நடை முறையாக உள்ளது என்றும் இஸ்ரேலிய தினசரிகள் கூறுகின்றன.
இங்கிலாந்திலும் இதே
போன்ற சிந்த்தனை வலுத்துவருகிறது, கோ எஜுகேஸன் முறை காரணமாக ஆண்களின் படிப்பு தரம் குறைந்து வருகிறது என அங்கு நடத்தப் பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1818 ம் ஆண்டு இங்கிலாந்தில் ஸ்காட் லாந்தில் டாலர் அகாடமி Dollar
Academy, என்ற பெயரில் ஒரு பள்ளி தொடங்கப்பட்டது. அதில் தான் முதன் முதலாக 5 வயது முதல் 18 வயது வரையிலான ஆண் பெண் இருபாலரும் இணைந்து கல்வி கற்கத் தொடங்கினர். அதன் பிறகு தான் இது சில இஸ்லாமிய நாடுகளை தவிர முழு உலகிற்கும் பரவியது.
1833 ல் ஓபெர்லின் காலேஜ் எனும் இருபாலர் கல்லூரி இங்கிலாந்தில் தொடங்கிற்று,
அதே
இங்கிலாந்தில்
தான் தற்போது இந்த சிந்தனை மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
கோ
எஜுகேசன் பள்ளிகளில் ஆண்களின் படிப்பு திறன் குறைகிறது. என்பது மட்டுமல்ல பெண்களின் தனிப்பள்ளிகளில் பெண்கள்
தைரியமாக வளர்வதாகவும்
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
girls are likely to have more confidence in the classroom
than they would in a coeducational class. (விக்கீபீடியா)
இப்போதும்
நமது பிள்ளைகளை தனிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அது நமது கலாச்சாரம் என்ற அக்கறை நமக்கு வேண்டும். அந்தக கலாச்சாரப் பற்றுதான் எக்காலத்திற்கும் ஏற்றது.
உயர்
நிலை படிப்புக்களுக்கு தனிப்பள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லாத சூழலில் தகுந்த எச்சரிக்கைகளும் அறிவுரைகளும் அவர்களுக்கு தரப்பட வேண்டும். கல்வியின் மீதான கவனத்தை அவர்களிடம் அதிகம் வளர்க்க வேண்டும், கண்காணிக்கவும் வேண்டும்.
கத்னா செய்வது
இஸ்லாமிய கலாச்சாரம். அது பழமையானது . அதே நேரத்தில் இன்றளவும் அது வரவேற்கப்படுகிறது.
وأخرج أحمد والترمذي مرفوعا بلفظ: ” أربع من سنن
المرسلين الختان والتعطر والسواك والنكاح “
روى البخاري (6298) ومسلم (2370) عن أبي هريرة رضي الله عنه قال : قال
رسول الله صلى الله عليه وسلم : اخْتَتَنَ إِبْرَاهِيمُ عليه السلام بَعْدَ
ثَمَانِينَ سَنَةً ، وَاخْتَتَنَ بِالْقَدُومِ .
و (الْقَدُوم) هو آلة النجار . وقيل : هو مكان بالشام .
இறைத்தூதர்
இப்ராஹீம் (அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேனம் செய்து
கொண்டார்கள். அவர்கள் கதூம் (எனும் கூரிய ஆயுதத்தின் ) மூலமாக விருத்தசேனம்
செய்து கொண்டார்கள் (புகாரி 3356,6298 அஹ்மத் )
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى
الله عليه وسلم قَالَ: "الْفِطْرَةُ خَمْسٌ أَوْ خَمْسٌ مِنَ
الْفِطْرَةِ الْخِتَانُ، وَالاِسْتِحْدَادُ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَنَتْفُ
الإِبِطِ، وَقَصُّ الشَّارِبِ".
விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக்களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது. அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது. மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.(புகாரி 5889,5891,6297 .முஸ்லிம் 377,378, திர்மீதி. நஸயி,ஆபூதாவூத் , இப்னுமாஜா, அஹ்மத் ,முஅத்தா மாலிக்)
அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் டொனால்டு : “ கத்னா செய்து கொள்வதன்
மூலம் உடல் நலத்தை அதிக அளவில் பாதுகாத்துக் கொள்ள முடியும் .கத்னா செய்து கொண்டவர்களின் சிறு
நீரகப்பை ,கிட்னி
பாக்டீரியா கிருமிகளால்
பாதிக்கப்படும் அளவை விட ,கத்னா செய்து
கொள்ளாதவர்களின் சிறு நீரகப்பை , கிட்டி 15 மடங்கு அதிகமாக பாதிக்கப்படும் என்று
கூறினார் .
கனடா நாட்டின்
பிராஸ் நியூஸ் ஏஜென்ஸ் பத்திரிகையில் அகில உலக எய்ட்ஸ் ஆராய்ச்சியின் முன்னோடியான டாக்டர் ஃப்ராங் பிளம்மர் குறிப்பிடும் போது
ஆண்கள் கத்னா செய்து கொள்வதை
உலக அளவில் நடைமுறைப்படுத்தினால் எய்ட்ஸ் நோயினை அதிக அளவில் தடுக்கலாம் என்று குறிப்பிட்டார்.
பெல்ஜிய நாட்டின டாக்டர் பீட்டர் பையோர் எச்.ஐ.வி. ஆண்களுக்கு
பரவுவதில் ஆண் இன உறுப்பின் முன் தோல் பாகம் முக்கிய பங்கு
வகிக்கிறது.ஆண்களுக்கு மத்தியில் எச்.ஐ.வி பரவுவதில் இதுதான் மிக முக்கிய அபாயகரமான
காரணியாக திகழ்கிறது என்பதனை கண்டு பிடித்ததாக கூறினார்
2012 ம் ஆண்டு
ஜெர்மனியில் ஒரு விநோதம் நடந்தது. அங்குள்ள நீதிமன்றம் ஒன்று கத்னாவை தடை செய்தது.
2012.ஜுன் மாதம் ஜெர்மனியின் கொலெக்னே நீதிமன்றம் இளம் வயதினருக்கு கத்னா செய்வது சட்டவிரோதமானது என தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சுமார் 50 சமூக அமைப்புக்கள் இணைந்து எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
அதற்குப் பிறகு ஜெர்மன் பாராளுமன்றத்தில் கத்னா பற்றிய விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் அதிக பொரும் பன்மையான உறுப்பினர்கள் கத்னாவுக்கு சார்பாக பேசியதால் கத்னா செய்து கொள்வதற்கு சட்ட அந்தஸ்தினை வழங்கியது
2011 ஆண்டு பி.பி.ஸி உலக சேவை வெளியிட்ட தகவல் எச் .ஐ.வி தொற்றினைத் தடுக்க கத்னா செய்யுங்கள்
உலகில் மூன்று
கோடி முப்பது லட்சத்திற்கும் அதினமானவர்கள் எச்.ஐ.வியினால் பதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
பெண்களில்
இருந்து ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்றாமல் தடுப்பதாற்காக ஆண்கள் கத்னா செய்து
கொண்டால் எயிட்ஸ் நோயினை 60 வீதத்தினால்
குறைக்க முடியும் என்பதனை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜிம்பாபே
அரசாங்கம் கத்னா செய்யும்
திட்டத்தினை அமுல்ப்படுத்தத் தொடங்கியுள்ளது 2025 ஆம் ஆண்டு பத்து லட்சம் ஆண்களுக்கு கத்னா செய்ய முடியும் என்று
ஜிம்பாபே அரசாங்கம் தெரிவித்தது.
கதனாவின் நன்மைகளை
இன்று சாதாரணமாக மருத்துவர்கள் அனைவருக்கும் அறிவுறுத்த தொடங்கிவிட்டனர். குழந்தைகளுக்கு
சிறு வயதில் ஏற்படுகிற சிறுநீரக கோளாறுகளுக்கு கத்னா சிறந்த மருந்து என அறிவுறுத்துகின்றனர்.
மேலே ஹதீஸில்
சொல்லப் பட்ட அனைத்து அம்சங்களும் அப்படித்தான். இஸ்லாமின் இந்த சிறந்த கலாச்சார அம்சங்கள்
இன்று உலகளாவிய அளவில் கவனம் பெற்று வருகின்றன.
மீசையை குறைப்பதும்
தாடி வளர்ப்பதும் தற்போதைய நாகரீகமாகி வருகிறது. உலகின் பிரபலங்கள் பலரும் இப்போது
தாடி வைத்துள்ளனர். மீசைய மழித்துக் கொள்வது பெரும்பாலானவர்களின் பழக்கமாக மாறிவருகிறது.
நகத்தை வெட்டிக்
கொள்வதுதான் இப்போதைய பேஷனாகி வருகிறது. நகம் வளர்ப்பதாக் ஏற்படக் கூடிய ஆரோக்கியத்திற்காக
அச்சுறுத்தலை மருத்துவர்களும் சுகாதார ஆய்வாளர்களும் பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
மருத்துவம் படிப்பவர்களுக்கு யூனிபார்ம் இருக்கிறதோ இல்லையோ நகம் வெட்டி இருக்கிறார்களா
என்பது கட்டாயமாக கண்காணிக்கப் படுகிறது. சிறிதளவு நகம் இருந்தாலும் பைன் போடப் படுகிறது.
நேற்றைய பத்ரிகைகளில்
ஒரு செய்தி இருந்தது. மஹாரஷ்டிர மாநிலம் புனே
நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் சிலால் என்பவர் தனது இடது கை நகங்களை 1952 லிருந்து வெட்டவில்லை.
30 அடி நீளத்திற்கு நகம் வளர்த்தவர் 66 ஆண்டுகளுக்கு பிறகு நகத்தை வெட்டினார். அவரது
நகம் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது என்று அச்செய்தி கூறியது.
இன்றைய செய்தித்தாள்களில்
அவருடைய இடது கை செயல் படாமல் போய்விட்டது என்று செய்தி வந்துள்ளது,
அதே போலவே அக்குள்
மற்றும் மறைமுக உறுப்பு பகுதியுள்ள முடிகளை சுத்தம் செய்து கொள்வதை இஸ்லாமிய கலாச்சாரம்
வலியுறுத்தி உள்ளது,
பெண்கள் சுத்தம்
செய்து கொள்ள வாய்ப்பளியுங்கள் என்ற பெருமானார் (ஸல்)
إذا قدم أحدكم ليلا ، فلا يأتين أهله طروقا حتى تستحدّ
الـمُغِيبَة ، وتمتشط الشعثة . رواه البخاري ومسلم .
இதற்கு காலம்
நிர்ணயித்த இஸ்லாம்
قال أنس رضي الله عنه : وُقِّت لنا في قص الشارب ، وتقليم
الأظفار ، ونتف الإبط ، وحلق العانة ، أن لا نترك أكثر من أربعين ليلة . رواه مسلم .
அக்குள்
முடி வெளியே தெரிவது போல
பலர் நடந்து கொள்வதுண்டு அது
இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானது.
இது விவகாரங்களில்
நம்மில் சிலர் அலட்சியமாக இருப்பதுண்டு. அது தவறு.
இளைஞர்களும்
முதியவர்களும் ஆண்களும் பெண்களும் இது விவகாரத்தில் இஸ்லாமின் வழிகாட்டுதல்களை நினைவில்
கொள்ள வேண்டும்.
இது
போல திருமணம், பிள்ளை வளர்ப்பு, சமூக உறவுகள் என அனைத்திலும் இஸ்லாம் நமக்கு கற்றுத் தந்துள்ள கலாச்சார வழிகாட்டுதல்களை கடை பிடிப்போம் எனில் நாம் நாளை மறுமையில் மட்டுமல்ல இந்த உலகிலும் உயர்ந்தே நிற்போம். சந்தேகமில்லை.
இப்படி
ஒரு உறுதியான கலாச்சர வழிகாட்டுதல் கிடைத்திருப்பதை நமக்கு அல்லாஹ் செய்த ஒரு அருளாக நினைக்க வேண்டும். சிந்தித்துப் பார்க்கிற அறிவாளிகள் இதை உணர்ந்து கொள்வார்கள் என்கிறது திருக்குர் ஆன்.
ذَٰلِكَ الْفَضْلُ
مِنَ اللَّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ عَلِيمًا (70
இந்த வழிகாட்டுதல்களை
கண்டு கொள்ளாதவர்கள், இவற்றில் உறுதி காட்டாதவர்கள் அறிவாளிகளாக இருக்க முடியாது என்பது
தான் திருக்குர் ஆனின் கருத்து.
இத்தைகயை ஒரு
அறிவீனமான செயலை நேற்றைய முன் தினம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செய்துள்ளது.
நம்முடைய நாட்டில்
2009 ம் ஆண்டு முதல் நமது நாட்டில் தன்பாலின உறவு சம்பந்தமான ஒரு சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அப்போதைய காங்கிரஸ் அரசும் சரி. கலாச்சார காவலன் வேசம் போடுகிற இப்போதைய பிஜேபி அரசும் சரி. இது விசயத்தில் தொடர்ந்து தகிடுதித்தங்கள் செய்து வருகின்றன.
உலகிலேயே கலாச்சாரப் பாரம்பரியம் மிக்க நாட்டின் ஆட்சியாளர்கள் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு தகுதிக்குறைவாக செயல் பட்டு வருகிறார்கள்/
நேற்றைய (12.7.2018) வியாழன் செய்தித்தாள்களில் ஒரு செய்தி இடம் பெற்றிருந்ததை நீங்கள் வாசித்திருக்கலாம்.
தான் பாலின் உறவு குற்றமா என்ற என்ற
ஒரு வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
2009 ம் ஆண்டு மும்பை உயர்நீதி மன்றம்
தன்பாலின உறவை குற்றமற்றது என்று கூறியிருந்தது.
அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு
செய்யப் பட்டிருந்தது.
இந்திய குற்றவியல் சட்டம் விதி எண்
377 ன் படி தன்பாலின உறவு குற்றச் செயல் என்றும் அதற்கு 10 ஆண்டு தண்டனை என்றும் கூறுகிறது.
இப்படி ஒரு சட்டம் இருக்கையில் தன்பாலின்
உறவு குற்றமல்ல என்று கூறமுடியாது என்று கூறி மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை
தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம். 377 வது குற்றப் பிரிவை நீக்கினால் இதை அனுமதிக்கலாம்
என்று கூறியது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு
தடை கூறிய போதும் கூட தன்பாலின உறவை மனித உரிமை என்று கூறினார். அதிலிருந்து தொடர்ந்து
உச்ச நீதிமன்றத்தின் சில நீதிபதிகள் இதற்கு அங்கீகாரம் வழங்கிவிடும் ஒரு முயற்சியில்
தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அங்கீகாரம் கேட்டு சில வெளிநாட்டு அமைப்புக்களின் துணையோடு
உள்நாட்டிலும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றன. அதை மனித உரிமையோடு சம்பந்தப் படுத்தி
பேசுகின்றனர். இது விவகாரம் சம்பந்தமாக மத்திய அரசின் உச்ச நீதிமன்றம் கருத்தை கேட்டிருந்தது.
பண்பாடு கலாச்சாரம் என்று வானளாவ பேசுகிற
மத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும். ?
இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் காதலர்களாக
பூங்காக்களுக்கு வருகிறவர்களை அடித்து உதைக்கிறார்கள். கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஹோட்டல்களில் நடக்கும் நடன நிகழ்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பல் இடங்களிலும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இதை பாஜக அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன.
இவ்வளவு தூரம் கலாச்சார வேஷம் போடுகிற
மத்திய அரசு நீதிமன்றத்தில் என்ன சொல்லியிருக்க வேண்டும்.
நம்முடைய குற்றவியல் சட்டமே தடுக்கிற
ஒரு செயலை. நாட்டிலுள்ள எந்த மத கலாச்சாரமும் ஏற்காத ஒரு செயலை மனித உரிமையின் பேரால்
அனுமதிக்க முடியாது என்று அல்லவா உறுதியாக கூறியிருக்க வேண்டும்.
மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர்
ஜெனரல் துஷார் மேத்தா கேலிக் கூத்தான ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
அதில் இது விவகாரத்தில் 377 ம் விதி
சட்டப் படி சரியா தவறா என்பதை நீதிமன்றமே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
முத்தலாக் விவகாரத்தில் முந்திக் கொண்டு
கருத்துக்கூறிய மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டது.
இதற்கு மேல் ஒரு பெரும் கொடுமை என்ன
வென்றால் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவான மத்திய அரசு, அதன் சார்பில் அரசு சமபளம்
பெருகிற வக்கீல் “ தன் பாலின உறவு தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது உசிதப் படி தீர்ப்பளிக்கலாம்
அதே நேரத்தில் சகோதரர் அல்லது சகோதரியை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற அளவுக்கு
போய்விடக் கூடாது. இது இந்து திருமணச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
மிக உயர்ந்த் சட்ட அறிஞர்களிடத்தில்
காணப்படும் தடுமாற்றத்தை நாம் கவனிக்க வேண்டும்.
ஷரீஅத்தை தவறவிடும் பட்சத்தில் அறிவாளிகள்
கூட கேவலமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கான உதாரணம் இது.
தன்பாலின் உறவு மனித உரிமை என்றால்
அதே அளவு கோள் சகோதரியை திருமணம் செய்து கொள்வதற்கு வராதா ? மேல் நாடுகளில் தாயுடன்
உறவு கொள்கிற மகன்கள் அதை உரிமை என்கிறார்களே! அது வெல்லாம் மனித உரிமை என்ற பேச்சுக்குள்
அடங்காதா ?
இது அல்ல . அதை விட கடுமையான வக்கிரங்கள்
எல்லாம் மனித உரிமை என்ற போர்வைக்குள் அரங்கேற்றத்திற்கு வரலாம்.
அல்லாஹ் வைத்துள்ள இயறகை அமைப்புக்கு
கட்டுப் பட்டே தீர வேண்டும் என்கிற கலாச்சார சிந்தனை உறுதிப்படாத வரை இத்தகைய தடுமாற்றங்கள்
இருந்து கொண்டே இருக்கும்.
இந்திய தண்டனைப் பிரிவு மிகச் சரியாகவே
இறுக்கிறது.
வயதுக்கு வந்த இருவர் இயற்கைக்கு மாற்றாக
அல்லது விலங்குகளுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் . இக்குற்றச் செயலுக்கு
அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கலாம்:
இந்த சட்ட விதியே இயறகையானது. இதை மீறிய
செயல் பாடு எதுவும் நெறிமுறைக்கு எதிரானது.
திருக்குர் ஆன் இக்குற்றச் செயல்களின்
விபரீதத்தை மிக அழுத்தமாக புரிய வைத்துள்ளது.
நபி லூத் அலை அவர்களது மக்கள் மிக கொடூரமாக
அழிக்கப் பட்டார்கள். அந்த ஊர் தலை கீழாக புரட்டிப் போடப்பட்டது. அவர்களை அழிக்க அனுப்பப்
பட்ட கல்மழையின் எச்சமாக இப்போதும் காட்சியளிக்கிற டெட் சீ எனும் சாக்கடல் இப்போது
ஒரு பாடமாக எஞ்சி நிற்கிறது. சுமார் 72 மைல் அளவுக்கு ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும்
இடையே பரவியுள்ள இக்கடலில் சிறு செடியும் முளைப்பதில்லை. மனிதர்கள் செத்து மிதப்பதைப்
போலவே உயிருடன் மிதக்கிறார்கள்.
(وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا
سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَ، إِنَّكُمْ لَتَأْتُونَ
الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُون)
[الأعراف: 80-81]
فلمَّا جاءَ أمرُنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارةً من سجيل منضود، مُسَوَّمةً عند ربكَ وما هي من الظالمين ببعيد) [هود: 82-83].
فلمَّا جاءَ أمرُنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارةً من سجيل منضود، مُسَوَّمةً عند ربكَ وما هي من الظالمين ببعيد) [هود: 82-83].
عن مجاهد أنه قال: أَخَذَ جبريلُ قَوْمَ لُوطٍ مِنْ سَرْحهم وَدُورِهِمْ، حَمَلَهُمْ
بِمَوَاشِيهِمْ وَأَمْتِعَتِهِمْ، وَرَفَعَهُمْ حَتَّى سَمِعَ أَهْلُ السَّمَاءِ
نُباح كِلَابِهِمْ ثُمَّ أَكْفَأَهُمْ، وَقَالَ وَكَانَ حَمَلَهُمْ عَلَى خَوَافِي
جَنَاحِهِ الْأَيْمَنِ
மனித
வரலாற்றில் இத்தகைய கண்டனத்திற்குரிய குற்றச் செயலை ஏற்றுக் கொள்ள எந்த நாகரீக மனித
மனமும் ஒப்பாது.
உச்ச
நீதிமன்றத்தின் புகழ் பெற்ற நீதிபதிகள் கூறுவதை பாருங்களேன்.
தன்பாலின்
திருமணத்தை குறித்து நாங்க இப்போது பேசப் போவது இல்லை. தன்பாலின் உறவுக்காரர்கள் பீச்சில்
கை கோர்த்து நடந்து சென்றால் அவர்களை போலீஸார் தடுக்கலாமா கூடாதா என்பதை பரிசீலிக்க
உள்ளோம் என்கிறார்கள்.
உயர்ந்த
சட்ட அறிவு பெற்றோர் மட்டத்தில் நடக்கிற இந்தக் விநோதக் கருத்துக்களுக்கு காரணம்
ஒரு
சரியான கலாச்சார பின்புலம் இல்லாததது. இருக்கிற மற்ற சமயங்களின் கலாச்சாரத்த்தின் மீது
பற்றில்லாததுமாகும் .
முஸ்லிம்களுக்கு
அல்லாஹ் சிறப்பான ஒரு கலாச்சாரத்தை வழங்கியுள்ளான்.
அது
அவர்களது வாழ்கையை சிற்ப்பாக்கி வைக்கிறது என்பது மட்டுமல்ல. அவர்களது அறிவை தடுமாற்றத்திற்குள்ளாகாமல்
காப்பாற்றுகிறது என்பதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறோம்.
அல்லாஹ்வுக்கு
நன்றி சொல்வோம்.
رضينا بالله ربا
عن أبي سعيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : ( من قال : رضيت
بالله رباً ، وبالإسلام ديناً ، وبمحمد صلى الله عليه وسلم نبياً وجبت له الجنة
நீதிமன்றங்களின் இத்தகைய போக்குகளை கண்டு தான் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க மஹல்லாக்கள் தோறும் ஷரீஅத் கவுன்சில்களை அமைப்போம் என்று முஸ்லிம் சட்ட வாரியம் அறிவித்துள்ளது.
நாம் அல்லாஹ்வின் ஷரீஅத்திற்கு கட்டுப்படுவோம். அதுவே நமக்கு மறுமையில் இங்கும் நன்மையானதாக அமையும்.
நாம் அல்லாஹ்வின் ஷரீஅத்திற்கு கட்டுப்படுவோம். அதுவே நமக்கு மறுமையில் இங்கும் நன்மையானதாக அமையும்.
அல்ஹம்து லில்லாஹ் அருமை பாதுகாக்க வேண்டிய கட்டுரை
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete