வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 26, 2018

பள்ளிவாசல்களின் பரிசுத்த்ம்



புனித ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகள் வியந்து போற்றும் அம்சங்களில் ஒன்று.
ஹரம் பள்ளிவாசலிலின் சுத்தம்.
அல்லாஹ் இபுறாகீம் அலை அவர்களுக்கும் இஸ்லாமீயில் அலை அவர்களுக்கும் சொன்ன உத்தரவு
وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ (125)

கட்டுவது மட்டுமல்ல. கட்டிட்த்தின் சுத்த்த்தை பராமரிப்பது இரு நபிமார்களுக்கும் உத்தரவிடப் பட்டிருந்த்து.

இன்று பல இலட்சக்கணக்கான மக்கள் கூடுகிற அந்த இடத்தில் இந்த உத்தரவின் அவசியத்தை அதிகம் புரிந்து கொள்ள முடியும்.

அன்றிலிருந்து இன்று வரை கஃபாவும் மஸ்ஜிதும் ஹராமும் மிக சுத்தமாகவே பராமரிக்கப்படுகிறது. சபா மர்வாவும் ஹாஜிகள் தண்ணீர் அருந்தும் இடங்களும் ஒளூ செய்யும் இடங்களும் கழ்வறைகளும் கூட மிக சுத்தமாக பராமரிக்கப் படுகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் இடை வெளியின்றி பயன்படுத்தும் கழிவறைகளில் முகம் சுளிக்க வேண்டியிருக்காது என்பது நிச்சய்ம் ஒரு அதிசயமே! தடை இன்றி தண்ணீரும் கிடைக்கிறது.

மஸ்ஜிதுல் ஹரமில் உள்ள பாத்ரூம் களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

14 ஆயிரம் !

Bathrooms (washrooms) that reach up to 14,000 in number are cleaned 4 times daily. Despite of the crowd, the cleaning process continues thoroughly and does not affect the people over there.

இந்த பாத்ரூம்கள் தினசரி நான்கு முறை சுத்தம் செய்யப் படுகின்றன. உபயோகிப்பாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையில்

மஸ்ஜிதுல் ஹரமைசு சுற்றி
18 இலட்சம் சதுரை மீட்டர்கள் அன்றாடம் தொடர்ந்து சுத்தம் செய்யப் படுகின்றன. சுத்தம் செய்யப் படும் விதமும் வேகமும் கவனிக்கத் தக்கது.

அரை மணி நேரட்த்தில் மதாப் எனப்படும் தவாப் நடை பெறும் தளம் சுத்தம் செய்யப் பட்டு விடுகிறது.


இப்போதும் கூட இலட்சக்கணகான மக்கள் பல ஊர்களிலிருந்து வந்துஅ பல நாட்களாக குழுமி இடைவெளி இல்லாது அமல் செய்து கொண்டிருக்கிறார்கள். மதாபில் நடக்கிறார்கள். ஆனால் அங்கேயே தொழுகை நடை பெறுகிற்து எந்த வித முகச்சுளிப்பிற்கும் இடமிருப்பதில்லை.  அவ்வளவு சுத்தமாக இருக்கிறது.


மஸ்ஜிதுல் ஹரமில் 30 ஆயிரம் பச்சை நிற  தொழுகை விரிப்புக்கள் விரிக்கப் பட்டுள்ளன, அவை ஒவ்வொன்றும் நவீன தொழில் நுட்பத்தில் நாளொன்றுக்கு மூன்று முறை சுத்தப் படுத்தப் பட்டு சக்தி வாய்ந்த உலர் இயந்திரத்தின் மூலம் உலர வைக்கப் படுகின்றன. அதில் தையல் விட்டுப் போன இடங்கள் மீண்டும் தைக்கப் படுகின்றன,

The Holy Mosque is covered in almost 30,000 deluxe green rugs that is purified and cleaned 3 times a day. A modern dry cleaner has been established solely for those rugs in order to clean them using the latest technologies. The rugs under go a 5 step cleaning process that starts with dusting them, washing them, drying them, putting them in sunlight and finally re-stitching them.

ஆண்டுக்கு இரு முறை கஃபாவின் உட்புறம் சுத்தம் செய்யப் படுகிறது. 2 மணி நேரம் நடை பெறுகிற  இந்தப் பணியில் அரசுத்த தலைவர்கள் உலக முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அரசு அனுமதிக்க சாமாணியரும் கலந்து கொள்கிறார்கள். ஒரு நாளுக்கு முன்னதாக ஜம் ஜம் தண்னீரில்  ரோஜா நறுமணமும் ஊத் அத்தரும் கலந்து வைக்கப் படுகிறது. இதற்கான பிரத்தியேக பாத்திரங்கள் காப்பரில் தயார் செய்யப் பட்டுள்ளன.

அல்லாஹ் கஃபாவை சிலை வணக்கம் , தீய செயல்கள், தீய எண்ணங்களிலிருந்து கஃபாவையும் மஸ்ஜிதுல் ஹரமையும் பாதுகாத்து வைத்துள்ளான் எனினும் அதன் புறச் சுத்த்த்தை பாதுகாக்க மக்களுக்கு உத்தரவிட்ட்தின் அடிப்படையில் மிகச் சிறப்பாக சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

கியாமத் நாள் வரை அல்லாஹ் கஃபாரவை  மஸ்கிதுல் ஹரமையும் பரிசுத்தமானதாக ஆக்கி வைப்பானாக!  அதன் கண்ணியத்தை பாதுகாப்பானாக!

கஃபாவை பார்த்த்தும் நாம் ஓத வேண்டிய துஆ இது

عَنْ حُذَيْفَةَ بْنِ أُسَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا نَظَرَ إِلَى الْبَيْتِ ، قَالَ : " اللَّهُمَّ زِدْ بَيْتَكَ هَذَا تَشْرِيفًا وَتَعْظِيمًا وَتَكْرِيمًا ، وَبِرًّا وَمَهَابَةً ، وَزِدْ مِنْ شَرَّفَهُ وَعَظَّمَهُ مِمَّنْ حَجَّهُ وَاعْتَمَرَهُ تَعْظِيمًا وَتَشْرِيفًا وَبِرًّا وَمَهَابَةً "

நம் அனைவருக்கும் கஃபாவை மீண்டும் மீண்டும் பாக்கியத்தை அல்லாஹ் வணங்குவானாக!

இன்றைய நமது உரையின் நோக்கம் கஃபாவை வின் சுத்த்த்த மட்டும் கூறுவதல்ல.

மஸ்ஜிதுல் ஹரமைப் போலவே நமது அனைத்து பள்ளிவாசல்களின் சுத்த்த்த்தை நாம் பராமரிக்க வேண்டும் என்பதாகும்.

பள்ளிவாசலை சுத்தமாக வைத்திருக்க இஸ்லாம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. முன்னோர்கள் அதில் அதிக அக்கறை செலுத்தி இருக்கிறார்கள்.
فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالآصَالِ * رِجَالٌ لا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْماً تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالأَبْصَارُ ) النور/36-37 .
قال السيوطي : في هذه الآية الأمر بتعظيم المساجد وتنزيهها عن اللغو والقاذورات

وقد كان الصحابة يحافظون على نظافة المسجد، ويطيبونه، فقد كان عبد الله يجمر المسجد (أي يعطره) إذا قعد عمر على المنبر

عن أبي سعيد الخدري - رضي الله عنه – قال: بينما رسول الله - صلى الله عليه وسلم – يصلي بأصحابه، إذ خلع نعليه، فرضعها عن يساره، فلما رأى ذلك القوم ألقوا نعالهم، فلما قضى رسول الله - صلى الله عليه وسلم – صلاته قال: (ما حملكم على إلقائكم نعالكم؟ قالوا: رأيناك ألقيت نعليك، فألقينا نعالنا، فقال رسول الله - صلى الله عليه وسلم -: إن جبريل أتاني، فأخبرني أن فيهما قذراً أو قال: أذى- وقال: إذا جاء أحدكم المسجد فلينظر، فإن رأى في نعليه قذراً فليسمحهما، وليصل فيهما

உமர் ரலி அவர்கள் குத்பா ஓத மிமபரி ஏறும் போது அவர்களது அப்துல்லாஹ் ரலி அகில் புகை போடுவார்.

மஸ்ஜித்துன்னபவியை சுத்தம் செய்ய பணியாளர் நியமிக்கப் பட்டிருந்தார்.

أن رجلاً أسود أو امرأة سوداء كان يقم المسجد فمات فسأل النبي صلى الله عليه وسلم عنه فقالوا مات قال أفلا كنتم آذنتموني به ؟ دلوني على قبره أو قال قبرها فأتى قبرها فصلى عليها" رواه البخاري 458 ، ومسلم 956

பள்ளிவாசல் அசுத்தப் படுத்தப் பட்ட்தை கண்டு பெருமானார் (ஸ்ல்) கோபப் பட்டார்கள்

وروى النسائي  وابن ماجة  عن أنس أن النبي صلى الله عليه وسلم رأى نخامة في قبلة المسجد فغضب حتى احمر وجهه ، فجاءته امرأة من الأنصار فحكتها وجعلت مكانها خلوقا فقال رسول الله صلى الله عليه وسلم " ما أحسن هذا

வீட்டில் இருக்கிற தொழும் இட்த்தையும் சுத்தமாக வைக்க பெருமானார் உத்தரவிட்டார்கள்

عن عائشة - رضي الله عنها – أن النبي - صلى الله عليه وسلم – أمر ببناء المساجد في الدور وأمر بها أن تنظف وتطيب..

வெங்காயத்தின் கெட்ட வாடை கூட வேண்டாம் என்றார்கள் பெருமானார் (ஸல்)
عن جابر - رضي الله عنهما- أن النبي - صلى الله عليه وسلمقال: (من أكل الثوم أو البصل والكراث فلا يقربن مسجدنا فإن الملائكة تتأذى مما يتأذى منه بنو آدم).

வாடை வரக்கூடிய தொழில் ஈடுபடுகிறவர்கள். தம்மை சுத்தப் படுத்திக் கொண்ட பிறகே பள்ளிக்கு வர வேண்டும்.

தெரியாமல் பள்ளிவாசலில் சிறு நீர் கழித்த சஹாபிக்கு பெருமானார் (ஸல்) சொன்ன அற்வுரை முழு உம்மத்திற்கும் பொருந்தும்.

روى مسلم في صحيحه أن النبي - صلى الله عليه وسلم – قال: إن هذه المساجد لا تصلح لشيء من هذا البول ولا القذر، إنما هي لذكر الله وقراءة القرآن..

பள்ளிவாசலை அசிங்கப் படுத்தக் கூடாது.

ولقد رأى النبي - صلى الله عليه وسلم – في جدار المسجد نخامة فتناول حصاة فحكه2 وعدها خطيئة وقال: (البزاق في المسجد خطيئة، وكفارتها دفنها).

 وفي حديث أبي ذر عند مسلم قال: قال النبي - صلى الله عليه وسلم -: (ووجدت في مساوئ أعمال أمتي النخاعة تكون في المسجد لا تدفن


பள்ளிவாசலின் குப்பையை வெளியே எடுத்துப் போட்டால் நன்மை

وعن أنس قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: (عرضت عليَّ أجور أمتي حتى القذاة يخرجها الرجل من المسجد)

பள்ளிவாசலை சுத்தப் படுத்தும் பொறுப்பு வேலைக் கார்ர்களுடைய என்று முஸ்லிம்கள் நினைக்க கூடாது. அது தமது கடமை என்பதை அனைவரும் உணரனும்.

·         நாம்  பள்ளிவாலை மணக்க செய்ய வேண்டும்.
·         நல்ல ஆடைகளை அணிந்து வர வேண்டும்.
·         இறுக்கமான உடலை அசைவுகளை காட்டக் கூடிய ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
·         வீட்டில் ஓய்வுக்காக போடுகிற ஆடைகளை தவிர்க்க வேண்டும்
·         படங்கள் – பிறரை கவர்ந்திழுக்கும் வாசகங்களை கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
·          ஹவ்லூ , பாய்கள் ,  கம்பளங்களை பராமரிக்க உதவ வேண்டும்.
·         அவற்றை அசுத்தப்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அசுத்தப் படுத்தி விட்டால் அது தவறு என்பதை புரிந்து நாமே சுத்தப் படுத்தி விட வேண்டும்
·         டீ கொட்டுவது, பேரீத்தம் பழக் கொட்டைகளை அப்படியே போட்டு விட்டு செல்வது போன்ற பழக்கங்களை எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும்.
·         பள்ளிவாசலின் பாத்ரூம்களை தொழுகையாளிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
·         சமுதாயத்திற்கு பொதுவானது என்று கட்டப் பட்டிருந்தால் மட்டுமே பள்ளிவாசல்களின் பாத்ரூம்களை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதி உண்டு.
·         பாத்ரூம்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
·         மற்றவர்கள் அசுத்தப் படுத்தி இருந்தால் கூட அதை சுத்தப் படுத்தி விடுவதை நன்மைக்குரியதாக கருத வேண்டும்.
·         பள்ளிவாசல்களின் ஜன்னல்கள் , மேற்கூரைகள், வராண்டாக்கள், ஒளூ செய்யும் பகுதி ,  செருப்பு வைக்கும் பகுதி ஆகியவற்றின் சுத்த்த்தைப் பராமரிக்க பள்ளிவாசல் நிரிவாகிகளும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இது முஅத்தினுக்கோ அல்லது துப்புரவு பணியாளருக்கோ சம்பளத்திற்கு செய்கிற வேலையாக இருக்கலாம் நிர்வாகிகளுக்கு இது பொருப்பு கடமை என்பதை நிரிவாகிகள் கவனத்தில் வைக்க  வேண்டும். கஃபதுல்லாஹ்வை கட்டிய இபுராகீம் நபிக்கும் இஸ்மாயீல் நபிக்கும் தான் அல்லாஹ் சுத்தமாக வைக்க உத்தரவிட்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
وثبت أن النبي صلى الله عليه وسلم أزال ذلك بنفسه كما في الصحيحين من حديث عائشة قالت "رأى في جدار القبلة مخاطا أو بصاقا أو نخامة فحكها " رواه البخاري 407 ومسلم 549 .

நம்முடைய பல பள்ளிவாசல்களும் பெரிதாக கம்பீரமாக பெரும் பொருட் செலவில் கட்டப் பட்டுள்ளன, ஆனால் அவற்றை பராமரிக்க போதிய அக்கறை செலுத்தப் படுவதில்லை.

சிங்கப் பூரைப் பற்றி சொல்வார்கள் . அங்கு ஒரு கட்டிடம் கட்ட எவ்வளவு பணம் செலவளிக்கப் படுகிறதோ. அதில் பாதி பராமரிக்க செலவிடப்படுகிறது.

பள்ளிவாசாலை நிர்வகிப்போர் கவனிக்க வேண்டிய செய்தி இது.  உயர்ந்தோங்கி கட்டப் படும் பள்ளிவாசல்களில் ஒட்டை அடையவும் குப்பை தேங்கவும் அனுமதிப்பது பொருத்தமல்ல.

நிறைவாக ஒரு செய்தி பள்ளிவாசலை கட்டுவதற்கு சொல்லப் பட்ட நற்கூலியை அதன் சுத்த்த்தை பரமாரிப்பதற்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
  من أخرج أذى من المسجد بنى الله له بيتا في الجنة- ابن ماجة
அல்லாஹ் மிக எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் கூறுகிறான்.
وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ
பள்ளிவாசல்களின் பரிசுத்த்த்தை பேணி வாழ நம் அனைவருக்கும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக
பரிசுத்தமான கஃபாவை காணும் வாய்ப்பை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக!
குறிப்பாக தமிழகத்தில் இமாம்களால மக்தப் மதரஸாக்கள் அரபுக்கல்லூரிகளின் ஆசிரியர்களாக பணியாற்றுகிற அனைத்து ஆலிம்களுக்கும் அல்லாஹ் புனித ஹஜ் உம்ராவின் பாக்கியத்தையும் முஹம்மது ரஸூல் ஸல் அவர்களின் ஜியாரத்தின் பாக்கியத்தையும் அல்லாஹ் வழங்குவானாக!
மக்கா முகர்ரமாவிலிர்ந்து .
அப்துல் அஜீஸ் பாக்கவி
27.07.2018




3 comments:

  1. Alhamthulilah அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் அல்லாஹ் தங்களின் இந்த சேவையை கபூல் செய்வானாக...மிக அருமையான தலைப்பு .வெள்ளிமேடையின் தனி சிறப்பே உலமாக்களின் எண்ணஓட்டங்களில் என்ன தலைப்பபு இருக்குமோ அதுவே தலைப்பாக வருவது தான்
    பாரக்கல்லாஹு துஆ செய்யுங்க ஹஜ்ரத்

    ReplyDelete
  2. جزاكم الله خيرا كثيرا في الدارين
    تقبل الله منا ومنكم غفر الله لنا ولكم
    وسهل الله اموركم

    لا تنساني في دعاءكم

    محي الدين عبد القادر مصلحي
    رامنادبرم

    ReplyDelete
  3. உரையை டைப் செய்து விட்டு சரி பார்த்த பின் வெளியிடவும் சில இடத்தில் தவறு உள்ளது.

    ReplyDelete