மக்கள் தமது
அன்றாட வாழ்வில் இன்றைய தேவைகளைப் பற்றியே அதிகம் சிந்திக்கின்றனர்.
டுடேஸ் ஸ்பெஷல்,
டுடேஸ் ஆபர் , டுடேஸ் பிரமோன் டுடேஸ் அரைவல்
ஆகியவை நமது அதிக முக்கியத்துவத்திற்குரியதாக
இருக்கின்றன.
முஃமின்களுக்கு
திருக்குர் ஆன் டுமாரோ எனும் நாளைய நிலையைப் பற்றியும் உறுதியாக சிந்திக்கச் சொல்கிறது.
وَهُم
بِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ (4)
நாம் இன்றைய
புதிய மாடல் போன் அல்லது பிரிட்ஜ் வாங்கினாலும் அதனுடைய புயூச்சர் நாளைய வசதிகள் என்ன
என்பதைப் பார்க்கிறோம் இல்லையார் அது போல்
முஃமின்கள் இன்றைய வாழ்கை வாழ்ந்தாலும் நாளைய வாழ்கையப் பற்றிய சிந்தனை உறுதியாக அவர்களிடம்
இருக்க வேண்டும்.
ஈமானிய
வாழ்கையில் எந்த நிலையிலும் மறுமையைப் பற்றிய சிந்தனை மிக முக்கியமானது.
நாம் தொழுகிறோம்.
நோன்பு வைக்கிறோம். எல்லாம் சரி!
நமது சிந்தனையில்
மறுமையைப் பற்றிய சிந்தனை எந்த அளவு உறுதியாக இருக்கிறது. பெரும்பாலும் நமது நடவடிக்கையில் மறுமையைப் பற்றிய
சிந்தனை குறைந்து வருகிறது.
நாளை ஒரு
நாள் வரும். அது தான் நமது ஒரிஜினல் வாழ்கை.
நீண்ட வாழ்கை . அங்கு நாம் புதிதாக சம்பாதிக்க முடியாது. அது மட்டுமல்ல இன்று நாம்
செய்பவை இன்றோடு முடிந்து விடாது . நாளை அதன் விளைவுகள் பின் தொடரும் என்ற உணர்வு நம்மிடம்
உறுதியாக இருக்கிறதா ? என்பது ஆராயப் பட வேண்டும்.
ஒரு முஃமினாக
இஸ்லாம் நம்மை அப்படித்தான் பக்குவப்படுத்துகிறது.
ஒரு நபித்தோழர்
பெருமானாரிடம் என் வேலைக்கார்ர்கள் என்னிடம் விசுவாசமாக நடப்பதில்லை . அதனால் சில வேளைகளில்
நான் அவர்களை கடுமையாக ஏசி விடுகிறேன் என்றார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
மறுமையில் அவர்களது குற்றமும் உங்கள ஏச்சுக்களும் மிஸானில் நிறுத்துப் பார்க்கப் படும்.
உங்களது ஏச்சு அதிகமாக இருக்கும் எனில் உங்களது நன்மைகளிலிருந்து உரிய பங்கு எடுக்கப்
பட்டு அவர்களுக்கு தரப்படும் என்றார்கள். அதற்கு பிறகு அந்த நபித்தோழர் தனது அடிமைகள்
அனைவரையும் விடுதலை செய்து விட்டார்.
உமர் ரலி
அவர்களின் ஆட்சிகாலத்தில் அரசிற்கு சொந்தமான ஒரு ஒட்டகை காணமால் போய்விட்ட்து என்று
சொல்லப் பட்ட்து . கலீபாவே அதை தேடிப் புறப்பட்டார். ஒரு வேளைக் கார்ரை ஏவக் கூடாது
என்று சிலர் கேட்டர். அந்த ஒட்டகை குறித்து என்னிடம் தான் விசாரிக்கப் படும் என் வேலைக்காரனிடம்
அல்ல என்றார் உமர் ரலி
ஒரு யுத்த்த்தில்
போரிட்டுக் கொண்டிருந்த எதிரி கடைசி நேரத்தில் கொல்லப் படுவோம் என பயந்து லாயிலாக இல்ல்ல்லாஹ்
என்று கலிமா சொன்னார். அவரை உஸாமா ரலி கொலை செய்து விட்டார்கள். செய்தி அறிந்து பெருமானார் (ஸல்_ அவர்கள் கேட்டார்கள்.
அவரது கலிமா நாளை உன்னிடம் வாதிட வரும் போது என்ன பதில் சொல்லுவாய் ?
وعن جُنْدبِ بنِ عبداللَّه t: أَنَّ رسولَ اللَّه ﷺ بعثَ بَعْثًا مِنَ
المُسْلِمِينَ إِلى قَوْمٍ مِنَ المُشْرِكِينَ، وَأَنَّهُم الْتَقَوْا، فَكَانَ
رَجُلٌ مِنَ المُشْرِكِينَ إِذا شَاءَ أَنْ يَقْصِدَ إِلى رَجُلٍ مِنَ
المُسْلِمِينَ قَصَدَ لَهُ فَقَتَلَهُ، وَأَنَّ رَجُلًا مِنَ المُسْلِمِينَ قَصَدَ
غفلَتَه، وَكُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ أُسَامَةُ بْنُ زَيْدٍ، فَلمَّا رَفَعَ
السَّيْفَ قَالَ: لا إِله إِلَّا اللَّهُ، فقَتَلَهُ، فَجَاءَ الْبَشِيرُ إِلى
رَسُول اللَّه ﷺ فَسَأَلَهُ، وأَخْبَرَهُ، حَتَّى أَخْبَرَهُ خَبَر الرَّجُلِ
كَيْفَ صنَعَ، فَدَعَاهُ فَسَأَلَهُ، فَقَالَ:لِمَ قَتَلْتَهُ؟ فَقَالَ: يَا رسولَ اللَّهِ! أَوْجَعَ في
المُسْلِمِينَ، وقَتلَ فُلانًا وفُلانًا - وسَمَّى لَهُ نَفرًا - وإِنِّي حَمَلْتُ
عَلَيْهِ، فَلَمَّا رَأَى السَّيْفَ قَالَ: لا إِله إِلَّا اللَّهُ، قَالَ رسولُ
اللَّه ﷺ: أَقَتَلْتَهُ؟ قَالَ: نَعمْ، قَالَ: فَكيْفَ تَصْنَعُ بلا إِله إِلَّا اللَّهُ إِذا جاءَت يوْمَ
القيامَةِ؟! قَال: يَا رسولَ اللَّه! اسْتَغْفِرْ لِي، قَالَ: وكَيف تَصْنَعُ بِلا إِله إِلَّا اللَّهُ إِذا جاءَت يَوْمَ
القِيامَةِ؟! فَجَعَلَ لا يَزيدُ عَلى أَنْ يَقُولَ: كيفَ تَصْنَعُ بِلا إِلهَ إِلَّا اللَّهُ إِذَا جاءَتْ يَوْمَ
القِيامَةِ؟! رواه مسلم.
இன்று
நமது பிரார்த்தனைகளில் கூட மறுமைக்காக கேட்பது குறைந்து விட்ட்து. ஏன் அறவே இல்லை என்று
சொன்னால் கூட மிகையில்லை.
துஆ அங்கீகரிக்கப்
படுகிற இடங்களில் மார்க்கம் கற்றுக் கொடுக்கிற துஆக்கள் பெரும்பாலும் மறுமையைப் பற்றியவை.
ஆனால் நம்மில் பெரும்பாலோர் அந்த இடங்களை பயன்படுத்திக் கொள்வது உலகியல் தேவைகளுக்காக
மட்டுமே இருக்கிறது.
மக்காவில்
ஹஜ்ர்ருல் அஸ்வதிற்கும் கஃபாவின் வாசலுக்கும் இடையே உள்ள இட்த்திற்கு முல்தஸீம் என்று
பெயர். அங்கு முகத்தையும் நெஞ்சையும் பதித்து துஆ கேட்டார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.
ஹரமில்
துஆ அங்கீகரிக்கப் படுகிற இடங்களில் முதன்மையாக கூறப்படுவது முல்தஸிம்.
وعن عمرو بن شعيب عن أبيه قال : طفت مع عبد الله
فلما جئنا دبر الكعبة قلت : ألا تتعوذ ؟ قال : نعوذ بالله من النار ، ثم مضى حتى
استلم الحجر ، وأقام بين الركن والباب ، فوضع صدره ووجهه وذراعيه وكفيه هكذا
وبسطهما بسطا ، ثم قال : هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله . رواه أبو
داود ( 1899 ) وابن ماجه ( 2962 )
: سَمِعْتُ عَمْرَو
بْنَ دِينَارٍ ، قَالَ : سَمِعْتُ ابْنَ
عَبَّاسٍ ، يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : " مَا دَعَا أَحَدٌ بِشَيْءٍ فِي هَذَا الْمُلْتَزَمِ إِلَّا اسْتُجِيبَ
لَهُ " .
அந்த இட்த்தில்
என்ன துஆ கேட்க வேண்டும் ?
ஹஜ்ஜுக்கு
போகிற ஹாஜிகள் அல்லாஹ்விடம் கேட்பதற்கு நிறைய துஆக்களை பட்டியலிட்டு வைத்திருப்பார்கள்
? அந்த துஆக்கள் பெரும்பாலும் உலகியல் தேவை குறித்த்த்தாக இருக்கும். கேட்கலாம் தப்பில்லை.
ஆனால் அந்த இட்த்தின் மரியாதைக்கு உரிய துஆ எது ?
இந்த இட்த்தில்
கேட்பதற்குரிய துஆ வை மார்க்க முன்னோடிகள் கற்றுத்தந்தார்கள்.
இறைவா
! என்னையும் என் பெற்றோர்களையும் முன்னோர்களையும் குடும்பத்தார்களையும் நரகத்திலிருந்து
விடுதலை செய்வாயாக!
ருக்னே
யமானி துஆ அங்கீகரிக்கப் படுகிற இடங்களில் ஒன்று அங்கே என்ன கேட்க வேண்டும். என்ன கேட்கிறார்கள்.
என்ன கேட்டார்கள்
?
ஹிஜாஸின்
ஆட்சி வேண்டும் என்று ஒருவர் கேட்டார். இராக்கின் ஆட்சி வேண்டும் என்று மற்றொருவர்
கேட்டார். இஸ்லாமியப் பேர்ரசின் ஜனாதிபதியாக வேண்டும் என்று ஒருவர் கேட்டார். சொர்க்கம்
வேண்டும் என்று இப்னு உமர் ரலி கேட்டார்கள்.
عَنِ الشَّعْبِيِّ ، قَالَ : " لَقَدْ رَأَيْتُ
عَجَبًا ، كُنَّا بِفِنَاءِ الْكَعْبَةِ أَنَا ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ،
وَعَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ ، وَمُصْعَبُ بْنُ الزُّبَيْرِ ، وَعَبْدُ
الْمَلِكِ بْنُ مَرْوَانَ ، فَقَالَ الْقَوْمُ بَعْدَ أَنْ فَرَغُوا مِنْ
حَدِيثِهِمْ : لِيَقُمْ كُلُّ رَجُلٍ مِنْكُمْ
فَلْيَأْخُذْ بِالرُّكْنِ الْيَمَانِيِّ ، وَيَسْأَلُ اللَّهَ حَاجَتَهُ ،
فَإِنَّهُ يُعْطَى مِنْ سَاعَتِهِ ، قُمْ يَا عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ، فَإِنَّكَ
أَوَّلُ مَوْلُودٍ وُلِدَ فِي الْهِجْرَةِ ، فَقَامَ فَأَخَذَ بِالرُّكْنِ ، ثُمَّ
قَالَ : " اللَّهُمَّ إِنَّكَ عَظِيمٌ ، تُرْجَى لِكُلِّ عَظِيمٍ ،
أَسْأَلُكَ بِحُرْمَةِ وَجْهِكَ ، وَحُرْمَةِ عَرْشِكَ ، وَحُرْمَةِ نَبِيِّكَ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَلا تُمِيتَنِي مِنَ الدُّنْيَا حَتَّى
تُوَلِّيَنِي الْحِجَازَ ، وَيُسَلَّمَ عَلَيَّ بِالْخِلافَةِ " ، وَجَاءَ
حَتَّى جَلَسَ فَقَالُوا : قُمْ يَا مُصْعَبُ بْنَ الزُّبَيْرِ ، فَقَامَ حَتَّى
أَخَذَ بِالرُّكْنِ الْيَمَانِيِّ ، فَقَالَ : " اللَّهُمَّ إِنَّكَ رَبُّ
كُلِّ شَيْءٍ ، وَإِلَيْكَ مَصِيرُ كُلِّ شَيْءٍ ، أَسْأَلُكَ بِقُدْرَتِكَ عَلَى
كُلِّ شَيْءٍ ، أَلَّا تُمِيتَنِي مِنَ الدُّنْيَا حَتَّى تُوَلِّيَنِي الْعِرَاقَ
، وَتُزَوِّجْنِي سُكَيْنَةَ بِنْتَ الْحُسَيْنِ " ، وَجَاءَ حَتَّى جَلَسَ
فَقَالُوا : قُمْ يَا عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ ، فَقَامَ حَتَّى أَخَذَ
بِالرُّكْنِ الْيَمَانِيِّ ، فَقَالَ : " اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ
السَّبْعِ ، وَرَبَّ الأَرَضِينَ ذَاتِ النَّبْتِ بَعْدَ الْقَفْرِ ، أَسْأَلُكَ
بِمَا سَأَلَكَ عِبَادُكَ الْمُطِيعُونَ لأَمْرِكَ ، وَأَسْأَلُكَ بِحُرْمَةِ
وَجْهِكَ ، وَأَسْأَلُكَ بِحَقِّكَ عَلَى جَمِيعِ خَلْقِكَ ، وَبِحَقِّ
الطَّائِفِينَ حَوْلَ بَيْتِكَ ، أَلَّا تُمِيتَنِي مِنَ الدُّنْيَا حَتَّى
تُوَلِّيَنِي شَرْقَ الدُّنْيَا وَغَرْبَهَا ، وَلا يُنَازِعَنِي أَحَدٌ إِلا
أَتَيْتُ بِرَأْسِهِ " . ثُمَّ جَاءَ حَتَّى جَلَسَ ، فَقَالُوا : قُمْ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ، فَقَامَ حَتَّى
أَخَذَ الرُّكْنَ الْيَمَانِيَّ ، ثُمَّ قَالَ : " اللَّهُمَّ إِنَّكَ
رَحْمَنٌ رَحِيمٌ ، أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي سَبَقَتْ غَضَبَكَ ،
وَأَسْأَلُكَ بِقُدْرَتِكَ عَلَى جَمِيعِ خَلْقِكَ ، أَلَّا تُمِيتَنِي مِنَ
الدُّنْيَا حَتَّى تُوجِبَ لِي الْجَنَّةَ " . قَالَ الشَّعْبِيُّ : " فَمَا
ذَهَبَتْ عَيْنَايَ مِنَ الدُّنْيَا حَتَّى رَأَيْتُ كُلَّ رَجُلٍ مِنْهُمْ قَدْ
أُعْطِيَ مَا سَأَلَ ، وَبُشِّرَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بِالْجَنَّةِ ،
وَزُيِّنَتْ لَهُ .
ஜம் ஜம்
தண்ணீர்
ஜம் தண்னீரை
பிஸ்மி சொல்லி மூன்று மிடரில் குடித்து விட்டு பிறகு துஆ கேட்டால் அது ஏற்கப்படும்.
ن جابر بن عبد الله يقول سمعت رسول الله -صلى الله
عليه وسلم- يقول:"ماء زمزم لما شرب له" -سنن ابن ماجه
ஜம்
ஜம் தண்ணீரைக் குடித்து விட்டு ஓதும் ஒரு துஆ வை இப்னு அப்பாஸ் ரலி கூறினார்கள்>
وروي عن ابن عباس : أنه إذا شرب من ماء زمزم قال :
اللهم إني أسألك علماً نافعاً ، ورزقاً واسعاً وشفاء من كل داء .
ஜம் ஜமை குடித்து விட்டு கேட்கப் பட்ட பல துஆக்கள் அங்கீகரிக்கப்
பட்ட்தற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ஒரு மனிதர் இதை சோதித்துப் பார்த்தார்.
حكى الدينوري عن الحميدي قال : كنا عند سفيان بن
عيينة فحدثنا بحديث ماء زمزم لما شُرب له ، فقام رجل من المجلس ثم عاد فقال : يا
أبا محمد : أليس الحديث الذي حدثتنا في ماء زمزم صحيحاً ؟ قال : نعم . قال الرجل :
فإني شربت الآن دلواً من زمزم على أنك تحدثني بمائة حديث ، فقال سفيان : اقعد فقعد
، فحدّثه بمائة حديث .
قول ابن القيم رحمه الله معلقاً: 'وقد جربت أنا
وغيري من الاستشفاء بماء زمزم أموراً عجيبة، واستشفيت به من عدة أمراض فبرأت بإذن
الله،
'حُكي عن شيخ
الإسلام أبي الفضل بن حجر رحمه الله أنه قال: 'شربت ماء زمزم لأصل إلى مرتبة
الذهبي في الحفظ' قال: فبلغها، وزاد عليها
قال ابن عساكر رحمه الله: أن الخطيب البغدادي ذكر أنه لما حجَّ شرب من
ماء زمزم ثلاث شربات، وسأل الله ثلاث حاجات:
فالحاجة الأولى: أن يحدِّث بتاريخ بغداد بها.
الثانية: أن يملي الحديث بجامع المنصور.
الثالثة: أن يدفن عند بشر الحافي, فقضى الله له ذلك
மற்றவர்கள் பல நனமைகளை கேட்டார்கள். கேட்ட்தெல்லாம் கிடைத்த்து
. ஆனால் உமர் ரலி அவர்கள் என்ன கேட்டார்கள் தெரியுமா ?
وقال
ابن عيينة: 'قال عمر بن الخطاب رضي الله عنه: اللهم إني أشربه لظمأ يوم القيامة
மறுமையில் தாகம் எடுக்க கூடாது என்று கேட்டார்கள்.
இந்த ச்சிந்தனை மூஃமின்களில் மிக முக்கிய அடையாளமாகவும்.
வாழ்கையின் ஒவ்வொரு விசயத்திலும் மறுமையை பற்றிய உறுதியான நம்பிக்கை
அவசியம்.
நமது துஆக்களிலும் மறுமைப் பற்றிய கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம்
அளிக்க வேண்டும்.
மக்காவின் காபிர்கள் ஹஜ்ஜை முடித்து விட்டு உலகத்தை மட்டுமே கேட்டார்கள்.
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுத்தான்.
فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي
الْآخِرَةِ مِنْ خَلَاقٍ (200) وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا
فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (201
இது ஹஜ்ஜு குறித்து பேசுகிற வசனமாகும்.
நமக்கு மிகவும் பிரபலமாக தெரிந்த இந்த துஆ நமக்கு கற்பிக்கிற மிக அத்தியாவசியமான இயல்பு இது தான்
நாம் உலகத்தை பற்றிய அக்கறை எடுத்துக் கொள்வது சரிதான். எனினும் அதற்கு சரி பாதி மறுமை சிந்தனைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் இனி வரும் நாட்களில் நாம் அனைத்து விவகாரங்களிலும் மறுமைச் சிந்தனைக்கு சரிபாதி இடமளிப்போம். குறிப்பாக பிரார்த்தனைகளில் அதுவும் குறிப்பாக பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிற இடங்களில் மறுமை வாழ்கை குறித்து அதிக்கம் கேட்போம். துஆ வையும் துஆ கேட்கப் படுகிற இட்த்தையும் மேன்மைப் படுத்துகிற விசயம் அது.
அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித தளங்களி பிரார்த்தனைகள் கேட்கிற தவ்பீக்கை தந்தருள்வானாக! நமது நல்ல துஆக்களை ஏற்று கொண்டருள்வானாக
புனித
மக்கா முகர்ரமாவிலிருந்து …
அப்துல்
அஜீஸ் பாகவி.
Enter your comment...
ReplyDeletemasha allah
அருமை
துஆ செய்ங்க ஹஜ்ரத்
جزاكم الله خيرا في الدارين
ReplyDeleteஉஸ்தாத் நீங்கள் எனக்கும் என் சம்பந்தப்பட்ட எல்லா நபர்களுக்கும் அல்லாஹ்வின் பொருத்தமும் இன்னும் அன்பியாகள் அவ்லியாகளின் நெருக்கமும் தொடர்பும் கிடைப்பதற்க்கு முல்தஸுமில் நின்று துஆ செய்யுங்கள் انساءالله
ReplyDeleteJazakallah kairan
ReplyDelete