வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 27, 2018

தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி வளர்ந்த இஸ்லாம்


நாட்டில் ஏராளமான பிரச்சனைகள் காத்திருக்கையில் மத்திய அரசு முத்தலாக் பிரச்சனையை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு
 கொண்டு வந்து தனது மனோ விகாரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன் இதே முத்தலாக் தடை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட போது அதை சட்டமாக்க முடியவில்லை.   மாநிலங்களவையில் இதற்கு போதுமான ஆதரவு கிட்ட வில்லை.
அதனால் அரசு முத்தலாக் தடை சட்ட்த்தை கடந்த செப்டம்பர் 19 ம்தேதி  அவசர சட்டமாக இயற்றியது, அதற்க் ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார்.
அவசர சட்டங்களின் காலம் ஆறுமாதம் தான்,
அது இன்னும் ஓரிரு மாத்த்தில் முடிவடைய இருக்கிறது.
இந்த நிலையில் மத்திய பஜக அரசு நாடாளுமன்றத்தின் இந்த குளிர்கால கூட்ட த் தொடரிலும் இந்தப் பிரச்சனையை எழுப்பி யுள்ளது.
இந்த முறையும் இந்த மசோதா மாநிலங்களவையில் ஏற்கப்படுவதற்கான வாய்ப்பில்லை என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும் நாட்டிலுள்ள மற்ற பிரச்சனைகளில் மக்களை திசை திருப்பும் நோக்கில் மீண்டும் இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து நாடாளுமன்றத்தை கேலிக் கூத்தாக்கி – அதன் நேரத்தை வீன் விரயம் செய்வகிறது, அத்தோடு  திட்டமிட்டு முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிற்கும் எதிரான மனோ உணர்வை உருவாக்குவதன் மீலம் அரசியல் இலாபம தேட மத்திய பஜக அரசு முயற்சிக்கிறது.
இது இந்திய பெண்களின் மரியாதை மற்றும் சம உரிமை சம்பந்தப் பட்ட்து எந்த மத்த்திற்கு எதிரானது அல்ல என்று ஒரு அமைச்சராக இருந்து கொண்டு வஞ்சகமாக பேசுகிறார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
இவரைப் போன்றவர்கள் அமைச்சர்களானது இந்திய நாடாளுமன்றத்திற்கு நேர்ந்த அவமானம்.
இதற்கு முன் இந்த சட்ட மசோதா தாக்கலானதற்கும் இப்போது தாக்கலாவதற்கும் இடையே ஒரு பெரும் வித்தியாசம் இருக்கிறது,
இந்திய உச்ச நீதிமன்றம் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். தடுக்க கூடாது. கோயிலுக்கு வரும் பெண்களுக்கு அரசு பாதுகாப்புத் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிற நிலையில் அதற்கு எதிராக மத்திய அரசு நிற்கிறது.
இவர்கள் பெண்களின் உரிமையையும் மரியாதையும் பற்றி பேசுகீறார்கள்.
அல்லாஹ் வஞ்சகர்களை உலக அரங்கிற்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டான்.
إِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ (30)

(உங்களை கட்டிப்போட காபிர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் )

உன்மையில் இந்த சட்டத்தை  நிறைவேற்றுகையில் உலக அரசங்கில் அதன் முகம் தொங்கித்தான் போய் இருக்கிறது. அதனுடைய இரட்டை வேடமும் வஞ்சக இயல்பும் மக்களிடையே பிரவினையையும் பிரச்சனைகளையும் உண்டாக்குகிற இயல்பும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

மும்பையில் பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசினார். அப்போது சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், மாதவிடாய் காலங்களில் பெண்கள் தாங்கள் பயன்படுத்திய நாப்கினுடன் தோழியின் வீட்டுக்கு செல்வோமா என கேள்வி எழுப்பினார்.அதேபோல் புனிதமிக்க கடவுளின் இருப்பிடத்துக்கு அப்படி செல்வதை எவ்வாறு நினைத்து பார்க்க முடியும்?

சபரிமலை விவகாரத்தில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும். புனித தலமான அதன் பாரம்பரியம், பண்பாடு காக்கப்பட வேண்டும் என மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறினார்.

கேரள அமைச்சர் விஎஸ் சுனில் பேசுகையில், “சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இரட்டை வேடம் போடுகிறது. பா.ஜனதாவுடன் தொடர்புடைய 5 வழக்கறிஞர்கள் ஒருபுறம் சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மறுபுறம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி பிரச்சனை செய்ய முயற்சிக்கிறது. பா.ஜனதா பிரச்சனையை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையாக்க விரும்புகிறது,” என்று கூறியுள்ளார். 

இந்திய அளவிலான விவாகரத்து வழக்குகளில் முஸ்லிம்களுடைய வழக்குகள் ஒரு சதவீத்த்திற்கு குறைவானதாகவே இருக்கிறது என்பதை 2011 ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ள நிலையில் மத்திய சட்ட அமைச்சர் நாட்டில் அன்றாட உயரும் விலை வாசி போல முத்தலாக விவகாரம் உயர்ந்து கொண்டிருப்பது போல நாடக மாடுகிறார்.
இன்று உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது, நேற்று ஒடிசாவில் நடந்துள்ளது என்கிறார். ‘

விவசாயிகள் மணிக்கு ஒருவராக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை திரும்பியும் பார்ப்பதற் பஜக அரசிற்கு நேரமில்லை.

தமிழகத்தில் கடலோரப் பகுதியை சார்ந்த 7 மாவட்டங்களைச் சார்ந்த மக்கள்  வரலாறு காணாத பாதிப்பால் இரண்டு மாதங்களாகியும் மீள முடியாமல் தவிக்கிறார்கள் . நம்முடைய பிரதமருக்கு இப்படி ஒரு செய்தி நடந்துள்ளதா என்பது கூட தெரியவில்லை. டிவிட்டரில் கூட ஒரு இரங்கற் செய்தி அவர் வெளியிட வில்லை.

ஆனால் நாடாளுமன்றத்தில் முத்தலாக்கிறகு எதிராக மணிக்கணக்கில் விவாதம் செய்கிறார்கள்.

இது பாஜக அரசின் சிறுபான்யின் முஸ்லிம்களுக்கு எதிரான மக்கள் விரோதப் போக்கு என்பது மீண்டும் நிருபணமாகியிருக்கிறது.

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது.

ஷரீஅத்திற்கு எதிரான எந்தச் சட்டமும் எங்களை எந்த வகையிலும் கட்டுப் படுத்தாது என்று உலக மக்களுக்கு உறுதி பட தெரிவித்து விட்டு அதன் அடியில் நிலைத்து நின்றால் போதுமானது.

 முஸ்லிம்கள் கவலை கொள்ளவோ பதட்டப் படவோ தேவையில்லை.

இதை விட கடுமையான சூழ்நிலைகளை கடந்து தான் இஸ்லாம் வெற்றி பெற்று வந்திருக்கிறது. 

ஆட்சியாளர்களால முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி என்பது மாற்றுமத்த்தை சார்ந்தவர்களால் அல்ல

சொந்த சமயத்தை சார்ந்தவர்களாலே கூட நிகழ்ந்திருக்கிறது

துருக்கியை நவீனப் படுத்தப்  போவதாக சொல்லிக் கொண்டு எழுச்சி பெற்ற் கமால் அத்தா துர்க்  ஷரீஆ வை தூர எறிவதுதான் தனது முதல் வேலை என்று செயல்பட்டார்.

தாடி வைக்க கூடாது என்றார்.

பெண்கள் பர்தா அணியக் கூடாது என்றார்
முஸ்லிம்கள் பைப் பிடிக்க வேண்டும். இங்கிளீஷ் கார்ர்களை போல ஹட் தொப்பி அணிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இராணுவத்தில் பணியாற்றுகிறவர்கள் தொழக் கூடாது என்று உத்தரவிட்டார்.

தாடி வைத்தவரின் சகோதர்ருக்கு அரசு வேலை கிடையாது என்றார்.

ஒரு குடும்பத்தில் மார்க்கப் பற்றுள்ளவர் யாரும் இருப்பின் அவரது குடும்பத்திற்கே அரசு வேலை வாய்ப்புக்கள் எதுவும் கிடைக்காது என்றார்;

1926 ல் துருக்கியில் ஷரீஅத் நீதிமன்றங்கள் இழுத்துப் பூட்டப் பட்டன,

அரபி எழுத்து வடிவத்தை மாற்றி லத்தீன எழுத்து வடிவத்தை அரசு எழுத்துவடிவமாக ஆக்கினார்.

பள்ளிவாசல்களில் சப்தமாக பாங்கு சொல்ல தடை விதித்தார்.

இவ்வளவு நெருக்கடிகளையும் இஸ்லாம் வெகு சீக்கிரம் கடந்து வந்து விட்டது.

இதே போலத்தான் ரஷ்யாவிலும் நடந்த்து.

வரலாறு விசித்திரமான மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது என்பதை நாம் அழுத்தமாக நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

  
முஆவிய (ரலி) அவர்கள் அரும்பாடு பட்டு போராடி உமய்யா அரச வம்சத்தின் ஆட்சியை நிறுவினார்கள். அவரது மகன் யஜீது, ஒரு கோடி கிலோ மீட்டர்களுக்கு மேல் பரந்து விரிந்திருந்த  இஸ்லாமிய சாம்ராஜ்ஜயத்தை  ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தில் கர்பலா – ஹர்ரா சம்பவங்கள் நிகழ்ந்தன. முஸ்லிம் உம்மாவை காலந்தோறும் கலக்கமுற வைக்கிற அந்நிகழ்வுகளின் வழியே கட்டமைக்கப் பட்ட உமய்யா சாம்ராஜ்யத்தின் அடுத்த பேர்ரசராக இரண்டாம் முஆவியா பொறுப்பேற்றார்.
அவர் ஆட்சிப் பொறுபேற்ற சில மாதங்களில் - இருபத்தி ஒன்றே வயதில்  - எனக்கு ஆட்சி வேண்டாம் என்று பள்ளிவாசலில் பறையறிவித்து விட்டு அரண்மனைக்குள் சென்று விட்டார். 
3 மாதங்களில் உடல் நலிவுற்ற அவரிடம் அடுத்த அரசரை அறிவித்து விட்டு விடை பெறுங்கள் என்று உமய்யா குடும்பத்தின் தலைவர்கள் கேட்டுக் கொண்ட போது “  சாம்ராஜ்யதிகாரத்தின் இன்பத்தை துளியும் ருசித்துப் பார்க்க விருமாத நான் அதன் பெரும் பழியை சுமக்க்க் தயாராக இல்லை. மக்கள் அவர்கள் விரும்பியரை தேர்ந்தெடுக்கட்டும் என்றார்.
இரண்டாம் முஆவியாவின் தாய் “ மகனே உனது  அறிவிப்பை கண்டு நான் மனம் கலங்குகிறேன்.  உனது நிலைப்பாட்டால் உனது தாயாகிய நான் மாதவிலக்கை துடைக்கும் துணியாக இருந்து விடக் கூடாதா என என்னை உணர்கிறேன் என்று கடுமையாக பேசினார்.
இருபத்தியோரு வயதுடைய அந்த இளைஞன் அம்மாவிடம் பேசிய வார்த்தைகள்  எல்லாம் வல்ல என்ற பெருமையை இறைவனுக்கு தரக் கூடியவை
அம்மா!  தகுதியற்ற ஒருவரை நான் இந்தப் பதவிக்கு உரைப்பதை விட மாதவிலக்கை துடைக்கும் அந்த துணியாக நான் இருந்து விடக் கூடாதா  என நான் நினைக்கிறேன். உமைய்யாக்கள், சாம்ராஜ்யத்தின் இனிமையை  ருசிக்க நான் அதன் பாவ அழுக்கை சுமக்க வேண்டுமா ? ஒரு போதும் முடியாது. என்றார்.
ولما حضرته الوفاة اجتمعت إليه بنو أمية فقالوا له: اعْهَدْ إلى من رأيت من أهل بيتك، فقال: واللّه ما ذُقْتُ حلاوة خلافتكم فكيف أتقلّد وزرَهَا. وتتعجلون أنتم حلاوتها، وأتعجل مرارتها، اللهم إني بريء منها متخل عنها، اللهم إني لا أجد نفراً كأهل الشورى فأجعلها إليهم ينصبون لها من يرونه أهلاً لها، فقالت له أمه: ليت إني خرقة حيضة ولم أسمع منك هذا الكلام، فقال لها: وليتني يا أماه خرقة حيض ولم أتقلد هذا الأمر، أتفوز بنو أمية بحلاوتها وأبوءُ بوزرها وَمَنْعِها أهْلَها؟ كلا! إني لبريء منها
இன்னொரு செய்தி ! இன்னும் அதிர்ச்சிகரமானது!!
இரண்டாம் முஆவியா சீக்கிரமே இறந்து விட அவரது ஜனாஸாவிற்கு தொழுவைக்கும் வாய்ப்பை தேடி வாங்கிக் கொண்டார். முஆவியா ரலி அவர்களின் சகோதரர் உத்பாவின் மகன் வலீது . அதன் மூலம் மக்கள் அடுத்த ஆட்சியாளராக தன்னை தேர்வு செய்வார்கள் என்று நம்பினார் . தொழுகை நடந்து ஆரம்பித்தார்.  அவர் இரண்டாவது தக்பீர் சொல்லிக் கொண்டிருத போது எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு ஈட்டி வலீதை கொன்றது.
அவர் தூக்கிச் செல்லப் பட  உத்பாவின் மற்றொரு மகன் உஸ்மான் ஜனாஸா தொழ வைத்தார். மக்கள் அவரை அடுத்த அரசராகுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர் தன்னால் முஸ்லிம்களோடு சண்டையிட முடியாது என்று கூறி விட்டு மக்காவிற்கு வந்து விட்டார். அங்கு உமய்யாக்களின் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
என்னென்ன மாற்றங்கள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இத்தகைய மாற்றங்கள் எதிலும் இஸ்லாம் வீழ்ந்து விடாமல் தொடர்ந்து எழுச்சி பெற்றே வந்துள்ளது,


உண்மையில் தற்போது 
 மத்திய அரசு இறங்கியிருப்பது இஸ்லாமிற்கு எதிரான போரிலாகும்
 .  
நிச்சயமாக ஒரு போதும் அது வெற்றிபெற முடியாது.

பாஜாக என்பது இஸ்லாமிய எதிர்ப்பில் எந்த வகையான ஆழமும் அற்றது.
அதன் சொந்தக் குழப்பங்களே அதனுடைய திட்டங்களை தவிடு பொடியாக்கி விடும்.
நான்கு வருடங்களுக்கு முன் வெகு மெஜாரிட்டியோடு அவர்களை ஆட்சியில் அமர்த்திய மக்கள் இப்போது என்ன நினைக்கிறார்கள் ?
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இது போல மக்களை துன்புறுத்திய ஒரு அரசாங்கத்தை பார்த்த்தில்லை என்கிறார்.
யார் சொல்கிறார்கள் ?
இந்த அரசை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர்கள் கூறுகிறார்கள்.
 وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ 

சொராப் தீன் போலி எண்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 22 பேரையும் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என விடுவித்த நீதிபதி சர்மா  கொல்லப் பட்டர்வக்ளுக்காக நான் வருத்தப் படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
கொல்லப் பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பது நிரூபணமாகிவிட்ட்து. அல்ஹம்து லில்ல.
அரசியல் செல்வாக்கால் விடுதலையானவர்கள் குற்றவாளிகளே என்று சொல்ல் ஒரு நீதிபதி நிச்சயம் வருவார்,
அது வரை சமுதாயம் நீதிக்காக காத்திருந்துதான் தீர வேண்டும் .நம்பிக்கையோடு.


No comments:

Post a Comment