வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 20, 2018

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு – செலவுகளில் நிதானம்



وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَاما 
]
கியாமத் நாள் நெருங்கும் போது ஏற்படும் குழப்பங்களை நபி ஸ்(ஸல்) அவர்கள் வகை வகையாக பட்டியலிட்டுள்ளார்கள்.
அவற்றில் முக்கியமான இரண்டு குழப்பங்கள்
·        செல்வத்தால் குழப்பங்கள் ஏற்படும்
மக்களிடம் ஏராளமான செல்வ வளம் இருக்கும் . எல்லோருமே செல்வந்தர்களாகி விடுவார்கள்.

عن أبي هريرة رضي الله عنه، أن النبي -صلى الله عليه وسلم- قال: (لا تقوم الساعة  يَكْثُرَ فِيكُمُ الْمَالُ، فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِى يَعْرِضُهُ عَلَيْهِ لاَ أَرَبَ لِى بِهِرواه البخاري

அது தீனை கடைபிடிக்க பெரும் சவாலாக அமையும்

روى الترمذي (2464) عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ رضي الله عنه قَالَ : ( ابْتُلِينَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالضَّرَّاءِ فَصَبَرْنَا ، ثُمَّ ابْتُلِينَا بِالسَّرَّاءِ بَعْدَهُ فَلَمْ نَصْبِرْ )

செல்வம் நம்மை கெடுத்து விடும் வாய்ப்பு அதிகம். நம்மை அறியாமலே நம்மை அது பாதாளத்தில் தள்ளிவிடும்.

நபித்தோழர் ثعلبة ரலியின் உதாரணம் ஒன்று போதும்.   பணம் வந்த பிறகு அவரால் பள்ளிவாசலுக்கு பக்கத்தில் கூட இருக்க முடியவில்லை.  அது மட்டுமல்ல நபி (ஸல்) அவர்கள் ஜகாத் கேட்டு கடிதம் அனுப்பியும் கூட அவர் கொடுக்க வில்லை என்பது மாத்திரம் அல்ல. இதென்ன ஜிஸிய்யா போல இருக்கிறதே என்றும் கூறினார்.  ما هذه إلا أخت الجزية 

அரபுலகிற்கும் மற்ற பகுதிகளுக்கும் கிடைத்த செல்வம் மார்க்கத்திலிருந்து வெகுதூரம் விலகிச் செல்லும் சூழலை ஏற்படுத்தியது.  இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
பணம் பணம் என்று ஓடுகிறோம். நமது இரத்த ஓட்டம் முழுவதும் பணத்தை சம்பாதிக்கும் சிந்தனையிலேயே நகர்கிறது.
பணம் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது தான்.
ஆனால் பணமே வாழ்க்கை அல்ல.
பணம் நமக்கு நல்ல வாழ்க்கையை தர வேண்டும்.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!  நமக்கு கிடைக்கிற செல்வம் நம்மை மார்க்கத்தோடு நெருக்கமாக்கி வைக்கிற செல்வமாக இருக்கட்டும்.
இது பற்றிய விழிப்புணர்வையும் அச்சத்தையும் வசதி படைத்தவர்கள் தமது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் சகோதர்ரகளிடம் ஏற்படுடுத்த மறந்து விடக் கூடாது.
அபூஹுரைரா ரலி அவர்கள் ஒரு காலத்தில் பரம் ஏழையாக – ஒரு வேளை உணவுக்கு கூட வசதியற்றவராக இருந்தார்கள்.
புஸ்ரா பின் து கஸ்வான் என்ற பெண்ணிடம் வேலைக்காரராக இருந்தார்கள், வேலை ஒன்றும் பெரிதல்ல. அந்தப் பெண்மணியின் ஒட்டக கூட்டம் வெளியே செல்கிற போது அதன் பின்னே ஓடிச் செல்வார். அவர்கள் எங்காவது தங்கினால் அவர்களுக்கு விறகுச் சுள்ளிகளை பெருக்கி கொண்டு வந்து கொடுப்பார். அதற்காக அவர்கள் சில ரொட்டித் துண்டுகளை கொடுப்பார்கள்.
அவர் இஸ்லாமை தழுவிய பிறகும் வருமையில் வாடினார்.
தரையோடு சேர்ந்து அழுத்தி படுத்துக் கொள்வார். வயிற்றில் கல்லைக் கட்டிக் கொள்வார்.
يقول أبو هريرة  : ان كنت لأعتمد على الأرض من الجوع وإن كنت لأشد الحجر على بطني من الجوع
அது முஸ்லிம்கள் சிரமப் பட்ட காலமல்ல. ஹிஜ்ரி 7 ம் ஆண்டு தான் அபூஹுரைரா ரலி அவர்கள் முஸ்லிமாகி மதீனாவிற்கு வந்தார்கள்.  அது முஸ்லிம்களுக்கு வசதி வாய்ப்புக்கள் குவிந்து விட்ட காலம் தான்.  ஆனாலும் கல்விப் பணியில் ஈடுபட்டதால் பொருள் தேடச் செல்ல முடியவில்லை,  
பின்னாட்களில் அவர் பெரும் செல்வந்தரானார். பஹ்ரைன் ஆளுநரானார்.  முஸ்லிம்களின் கஜானாவுக்கு அதுவரை கிட்டாத செல்வங்களை கொண்டு வந்து சேர்த்தார். அவர் முன்னர் வேலை பார்த்த அந்த சீமாட்டியையே திருமணம் செய்து தனது மனைவியாக்கிக் கொண்டார்.

ஆனால் எப்போதும் தனது பழைய நிலையை அவர் மறந்ததில்லை.

அடிக்கடி தனக்குள் அவர் சொல்லிக் கொள்வார்.

அபூஹுரைரா! ஒரு சில ரொட்டித் துண்டுகளுக்காக ஒட்டக கூட்டத்தின் பின் ஓடிச் சென்றவன் தான் நீ ! அல்லாஹ் இந்த தீனைக் கொண்டு உனக்கு வாழ்வளித்திருக்கிறான். உன்னை முஃமின்களின் தலைவனாக்கியிருக்கிறான்  

 تزوج من سيدة كان يعمل عندها أجيرًا قبل إسلامه، وفي هذا يقول: نشأتُ يتيمًا، وهاجرت مسكينًا، وكنت أجيرًا عندبسرة بنت غزوان بطعام بطني، فكنت أخدم إذا نزلوا، وأحدوا إذا ركبوا (أي أمشى أجر ركائبهم)، فزوجنيها الله، فالحمد لله الذي جعل الدين قوامًا، وجعل أبا هريرة إمامًا

அல்லாஹ்வின் அருளை நினைவு படுத்திக் கொண்டது  செல்வத்தால் அவரது தலை கணக்கச் செய்யதவாறு பார்த்துக் கொண்டது.  இது வே மிக முக்கியமான வாழ்கை தத்துவமாகும்.

நமக்கு கிடைத்திருக்கிற வசதி வாய்ப்புக்கள் தீனின் நற்போதையில் நடை போட நம்மைத் தூண்ட வேண்டும். அப்போதுதான் அது நல்ல காசு.
نِعْمَ الْمَالُ الصَّالِحُ لِلرَّجُلِ الصَّالِحِ

தீனின் வழியிலிருந்து விலகவோ அல்லது தீனிலேயே அகம்பாவம் கொள்ளவோ அது காரணம் ஆகும் எனில் அது தான் செல்வத்தால் ஏற்படும் குழப்பமாகும்.
பெரிய பெரிய பிரம்மாண்டமான பள்ளிவாசல்கள் கட்டுகிற போதும், பளபளக்கிற வசதி வாய்ப்புக்களை அதில் செய்கிற போதும். பிரம்மாண்டமான இஸ்லாமிய மாநாடுகள் பொதுக் கூட்டங்கள் நட்த்துகிற போது கூட இது செல்வத்தால் விளையும் குழப்பமா என ஒரு கணம் எடை போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும் ?
இது போன்ற நற்காரியங்களிலேயே இத்தகைய சுயபரிசோதனை அவசியம் என்றால் நமது சொந்தக் காரியங்களில்  செல்வத்தின் செம்மையில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை யோசிக்கனும்.
அல்லாஹ் நம்மை நல்லவர்களாக்கும் செல்வத்தை நமக்கு வழங்குவானாக!
பண வசதியால் ஏற்படும் குழப்பங்களுக்கு அடுத்த படியாக
·        பொருளாதார நெருக்கடிகளால் குழப்பங்கள் ஏற்படும்
சமீப காலத்தில் உலகம் முழுவதிலும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியில் ஏராளமான வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா, உலகின் பணக்கார நாடுகளிடம் காசு பெற்றுக் கொண்டு அவை சொல்லும் இடங்களுக்கு தனது போர் வீர்ர்களை வாடைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது,
தனி மனிதர்கள் திவாலாவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.  கிரீஸ் என்ற  நாடே  திவாலாகும் நிலைக்குச் சென்றதை கடந்த வருடங்களில் கண்டோம்.
நம்முடைய நாட்டில் மக்கள் வாழ்வாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்து வருகிறது.
பொருளாதார நெருக்கடி என்றால்
1.      வருமானம் குறைந்து போவது
2.      விலை வாசி திடீரென அதிகமாக உயர்வது
3.      திடீர் சிக்கல்களாக மூலதனம் குறைவது
4.      வேலை வாய்ப்புக்களை இழப்பது
5.      வியாபாரம் தொழிலில் போட்டிகள் அதிகரிப்பது அதனால் குறைந்த வருமானத்திற்கே அதிகமாக உழைக்க வேண்டியிருப்பது.
6.      வியாபாரம் தொழில் செய்ய முடியாத சூழல்கள் உருவாவது
7.      அரசாங்கம் அதிகப்படியான வரிவகைகளை மக்கள் மீது திணிப்பது.
இத்தகைய எந்த நெருக்கடியும் சிரம்ம் தரக்கூடியது தான்.
நமது நாட்டில் இவை எல்லாம் மொத்தமாக ஏற்பட்டிருக்கிறது.
யாரிடம் கேட்டாலும் நல்ல பதில் இல்லை. வியாபாரம் சரியில்லை. விவசாயம் செய்ய வழியில்லை.  இட்டிலிக்கும் தோசைக்கும் கூட பல மடங்கு காசு கொடுக்க வேண்டியிருக்கிறது.
அரசோ அரசின் சார்பிலான அமைப்புக்களோ எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலும் இதில் நம்மை எந்த அளவு சுரண்டப் போகிறார்களோ என்ற பயத்துடன் தான் மக்கள் அதை எதிர்கொள்கிறார்கள்.
பல வழிகளில் சப்தமே இல்லாமல் அரசுகள் மக்களை வஞ்சித்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் சொத்து வரியை 50 சதவீதம் அளவிற்கு மாநில அரசு உயர்த்தியிருக்கிறது.
நீங்கள் பார்க்கும் சேனல்களுக்கு பணம் கட்டினால் போதும் என்று அரசு எல்லா தொலைக் காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறது. அட டா மக்களின் செட்டப் பாக்ஸ் கட்டணத்தை அரசு குறைத்து விட்டது என்று நினைத்து விடாதீர்கள். 200 ரூபாயாக இருந்த செட்டப் பாக்ஸ் சேனல்களின் கட்டணம் 300 ரூபாயாக டிராய் வழி செய்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது 100 இலவச சாணல்களை பார்ப்பதற்கு நீங்கள் 130 ரூபாய் கட்டியே ஆகவேண்டும். அதற்கு அடுத்த படியாக கட்டண சேனல்களை பார்ப்பதற்கு அவை நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்த வேண்டும்.  சன் டி வி க்கான கட்டணம் மாத்த்திற்கு 19 ரூபாய் என்றால் 149 ரூபாயும் 18 சதவீத வரி 25 ரூபாயும் சேர்த்துக் கட்டினால் தான் அந்த சானலை பார்க்க முடிய்ம்.
வெளியே தரப்படும் கவர்ச்சிகரமான திட்டங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஈரச் சாக்கை போட்டு கோழியைப் பிடிப்பது என்ற இலாவகமாக பறீக்கும் திட்டம் தான் அரசின் அனைத்து திட்டங்களிலும் இருக்கிறது.
இதனால் திருவாளர்பொதுஜனம் அதீத பணச் சுமைக்கு ஆளாகிவருகிறார்.  
நொடிந்து கொண்டிருக்கிற மக்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு மேலும் சுரண்டிக் கொண்டிருக்கிறது
கடந்த 15 ம் தேதி பிரதமர் மோடி பாஜக கட்சிக்கார்ர்களுடன் விடியோ கான்பரன்ஸிங்க் மூலம் போசிய போது அவரது கட்சிக்காரர்  நிர்மல் குமார் என்பவரே இது பற்றி அவரிடம் கேட்டிருக்கிறார்;
புதுச்சேரியில் நிர்மல் குமார் ஜெயின் என்பவர் மோடியுடன் இந்தியில் பேசினார். "இந்தியா வல்லரசாக நீங்கள் எடுக்கும் முயற்சி நன்மைக்குரியது. அதே நேரத்தில் நடுத்தர வர்க்க மக்களிடம் வரியை மட்டுமே வசூல் செய்கிறீர்கள். வங்கிக் கணக்கு பரிமாற்றம் உட்பட அனைத்து விஷயத்திலும் நாங்கள் வரி, கட்டணம் செலுத்துவோராகவே இருக்கிறோம். வரியை வசூலிப்ப தில் காட்டும் அக்கறையை போல் நடுத்தர வர்க்கத்தினர், கட்சி தொண் டர்கள் இதிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கவும் நடவ டிக்கை எடுங்கள்
நாட்டு மக்கள் அரசின் மக்கள் விரோதப் போக்கினால் எவ்வளவு பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதின் நிதர்சன வெளிப்பாடு இது.

கேள்விக்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லை, கேள்வி கேட்டவரை கைது செய்ய தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கியாமத் நாளின் நெருக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி நேரும் என்று பெருமானார் எச்சரித்தார்கள்.

எந்த அளவுக்கு என்றால் அது தீர்வது போல் தெரியும் ஆனால் தீராது என்றார்கள் .

فَإِذَا قِيلَ انْقَضَتْ تَمَادَتْ

ஒரு ஆள் தனது மகளை அவளது எடையளவு கோதுமைக்காக சந்தையில் விற்பார் என்றார்கள் நபி  (ஸல்)

حتي يأتي الرجل بجاريته الحسناء إلي السوق فيقول من يشتريها بوزنها طعاما


இதன் பொருள் குறைந்த மஹருக்கு பெண்கள் திருமணம் செய்து கொடுக்கப் படுவார்கள் என்பதாகவும் இருக்கலாம்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!
பெருளாதார நெருக்கடி என்பது பல்வேறு கற்பனை செய்ய முடியாத பல்வேறு சீர்கேடுகளுக்கு கொண்டு சேர்க்க கூடியது.
கஃபாவை பார்த்ததும் கேட்கிற துஆ
இறைவா என்னை ஏழ்மையிலிருந்து காப்பாயாக!
وعن عطاء أنه عليه السلام كان يقول إذا لقي البيت: «أعوذ برب البيت من الكفر والفقرومن ضيق الصدر وعذاب القبر

இத்தகைய நெருக்கடியான சந்தர்பத்தில் புத்திசாலித்தனமாகவும் எச்சரிக்கையுடனும்  நடந்து கொண்டால் தப்பிக்கலாம் என்ற நம்பிக்கையை குர் ஆன் தருகிறது.
ஏழாண்டு பஞ்ச காலத்தை நபி யூசுப் அலை அவர்கள் சமாளித்தார்கள் என்கிற பாடம் அதற்கு உதாரணம்
 قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدتُّمْ فَذَرُوهُ فِي سُنبُلِهِ إِلَّا قَلِيلًا مِّمَّا تَأْكُلُونَ (47ثُمَّ يَأْتِي مِن بَعْدِ ذَٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِّمَّا تُحْصِنُونَ (48

யூசுப் அலை அவர்கள் கூறும் உத்தியானது.
கையில் இருப்பில் இருக்கிற அனைத்தையும் கரைத்து விடாமல் அதை மிச்சப் படுத்துவது . செலவையும் தேவைகளையும் குறைத்துக் கொள்வது என்பதாகும்.

இனி வரும் காலத்தில் நிம்மதியான வாழ்வு தேவை எனில் இந்த வழிமுறையை நாம் கண்டிப்பாக கடை பிடித்தாக வேண்டும்.


இன்றைய நமது சந்தை அமைப்பு தேவை இருக்கிறதோ இல்லையோ புதிது புதிதாக பொருட்களை வாங்க தூண்டுகிறது.

புதிய போன்
புதிய டி வீ
புதிய கார்
புதிய புதிய ஆடைகள்

நாம் உபயோகிக்கும் பொருள் ஒவ்வொன்றும் நம்மை ஊதாரிகளாக்கி வருகின்றன.   போன் கார் பைக்  வீடு திருமணம், விழாக்கள்.

பொழுது போக்கிற்காக பூங்காக்களுக்கு செல்லும் நிலை மாறி ஷாப்பிங்க் மால்களுக்கு செல்லும் கலாச்சாரம் வளர்ச்சியடைந்துள்ளது.

இதனால் விண்டோ ஷாப்பிங்க் என்ற பெயரில் மார்க்கெட்டில் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கிற கண்ணில் கண்ட பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம்.

மிக எச்சரிக்கையாக இந்த ஊதாரித்தனத்தை நாம்  நிறுத்தயாக வேண்டும்.

ஊதாரித்தனத்திற்கு அடுத்தபடியாக இருப்பது தேவையற்ற ஆடம்பரம்.

ஒரு காலத்தில் மக்கள் உணவிற்காக தாராளமாக செலவழித்தார்கள்

இந்த காலம் மக்கள் ஆடம்பரத்திற்காக அதிகம் செலவழிக்கிறார்கள்.

20 ரூபாயுக்கு கிடைக்கும் தோசையை 200 ரூபாயுக்கு விற்கும் இடத்தில் சாப்பிடுகிறார்கள்.

தரம் கவனிக்கப் படாமல் பிராண்ட் மட்டுமே கவனிக்கப் படுகிறது 500 ரூபாயுக்கு கிடைக்கிற ஷர்ட் 2000 ஆயிரத்திற்கு வாங்கினால் தான் அந்தஸ்து என்று நினைக்கிறோம்.

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிப்பது. அதே போல தேவையானவற்றில் ஆடம்பரம் செய்வது  இந்த இரண்டும் பொருளாதார நெருக்கடிகளின் காலத்தில் உடனடியாக தவிர்க்கப் பட வேண்டும்.

செலவழிப்பதற்கான இஸ்லாமின் வழிகாட்டுதல் எப்போதும் நமது நினைவில் இருக்க வேண்டும்

وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَاما 

மிக அருமையாக இப்னு அப்பாஸ் ரலி இந்த வசனத்திற்கு விளக்கம் சொன்னார்கள். இதுவும் கருத்தில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும்

عن ابن عباس, قوله(وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا ) قال: هم المؤمنون لا يسرفون فينفقون في معصية الله, ولا يُقترون فيمنعون حقوق الله تعالى.

பாவமான காரியங்களுக்கு செலவழிப்பது சொத்துக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்

عن مجاهد, قال: لو أنفقت مثل أبي قبيس ذهبا في طاعة الله ما كان سرفا, ولو أنفقت صاعا فى معصية الله كان سرفا.

அதே போல உரியவர்களுக்கு தரப்பட வேண்டியவற்றை மறுப்பதும் சொத்துக்களிப் பாதிப்பை ஏற்படுத்தும் .

அதே போல தேவையற்ற பொருட்களை வாங்குவதும் ஆடம்பரம் செய்வதும் இஸ்ராப் ஆகும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மிக எளிமையாக வாழ வழிகாட்டினார்கள். அவர்களும் அவ்வாறு வாழ்ந்தார்கள்.

مَا عَلى أحَدِكُمْ لَوْ اتَّخَذَ ثَوْبَيْنِ: ثَوْبًا لِمِهْنَتِهِ, وَثَوْبًا لجُمْعَتِهِ وَعِيدِه

ஆனால் அதே நேரத்தில் மக்கள் தமது அந்தஸ்திற்கு ஏற்ப நடந்து கொள்வதை ஆதரித்தார்கள்

إذَا أنْعَمَ اللهُ عَلَى عبْدٍ نِعْمَةً أَحَبَّ أَنْ يَرَى أَثَرَهَا عَلَيْهِ
 பின்னது எதார்த்த வாழ்வு முந்தையது சித்தாந்த வாழ்வு

இவை இரண்டிற்கும் அனுமதியுண்டு , ஆனால்  இஸ்ராபிற்கு அனுமதி கிடையாது.

பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக் கூடாது எனில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

قيل لسفيان الثوري: أيكون ذو المال زاهدًا؟ قال: نعم إن كان إذا زيد في ماله شكر، وإن نقص شكر وصبر. ولهذا كان الصحابة أزهد الأمة مع ما بأيديهم من الأموال.


நன்றி செலுத்துதலின் பலன்

1.      அல்லாஹ்வின் பொருத்தம்கிடைக்கும்.
a.   وإن تشكروا يرضه لكم} [الزمر: 7].
2.      அல்லாஹ்வின் சோதனைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم} [النساء: 147.
3.      செல்வம் அதிகரிக்கும்
وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم} [إبراهيم: 7].

4.      செல்வம் பறிபோகாது
وسنجزي الشاكرين} [آل عمران: 145].



பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள இன்னொரு முக்கிய வழி

·        தான தர்மங்களை நிறைவாக செய்வது.

நெருக்கடிகள் வரும் போது நாம் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ள தயாராக இருப்பதில்லை . ஆனால் தான தர்மங்களை குறைத்து விட நினைக்கிறோம்.
இது பொருளாதாரம் குறித்து இஸ்லாம் வழங்கும் சித்தாந்தந்திற்கு எதிரானது.
وفي الحديث: (ما نَقصت صدقةٌ من مال
فما من يوم إلا ويصبح فيه ملكان يكون من دعاء أحدهما اللهم أعط منفقاً خلفاً، ويقول الآخر اللهم أعط ممسكا تلفً


சிரமங்களின் போதும் தர்மங்கள் தொடரட்டும்.
காலம் செல்லச் செல்ல சிரமங்கள் நீங்கி விடும்
ஆனால் தர்மத்தை தவற விட்ட காலம் திரும்ப வராது.
நிறைவாக நினைவு படுத்துகிறோம். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள
நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.
·        செலவுகளை குறைத்துக் கொள்வதும்
·        தேவைகளை சுருக்கிக் கொள்வதுமாகும்,

நெருக்கடியில் சிக்கியிருப்போரும் சிக்கி விடலாம் என்ற அச்சமிருப்போரும் நெருக்கடிகளின் கால கட்ட்த்தில் வாழ்வோரும் இதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

கிரடிட் கார்டுகள், வட்டியில்லா தவனை முறைகள் அல்லது கூறைந்த வட்டியிலான தவனை முறைகள் அனைத்தும் நம்மை நெருக்கடிக்குள் தள்ளிவிடவே காத்திருக்கின்றன என்பதை விழிப்புணர்வோடு புரிந்து கொண்டு மிக எச்சரிக்கையாக நடந்து கொண்டால் – நமது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இதை புரிய வைத்தால் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற நிம்மதியை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!





No comments:

Post a Comment