வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 13, 2018

ஆசையே நேசத்தின் அடிப்படை

முஃமின்கள் அல்லாஹ்வை அச்சப்படவும் வேண்டும். அவனை நேசித்து அவனில் ஆசைப்படவும் வேண்டும்.
திருக்குர்ஆன் பழம் பெரும் சமூக மக்களுக்கு ஏற்பட்ட சோதனைகளை எடுத்துக் கூறி நம்மை அல்லாஹ் விசயத்தில் எச்சரிக்கிறது.
فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ [العنكبوت:

·        நூஹ் நபியி மக்கள் பெரு வெள்ளத்தால் அழிக்கப் பட்டார்கள்.
மேலிருந்தும் கீழிருந்தும் வெள்ளம் சூழ்ந்த்து. திடீரென சுழ்ந்த வெள்ளம் கடல் அலை போல எழுந்தது.
وَقَوْمَ نُوحٍ لَمَّا كَذَّبُوا الرُّسُلَ أَغْرَقْنَاهُمْ وَجَعَلْنَاهُمْ لِلنَّاسِ آيَةً وَأَعْتَدْنَا لِلظَّالِمِينَ عَذَابًا أَلِيمًا [الفرقان: 37

ஆதுகளின் அழிவு

தமது கைகளாலே மலைகளை குடைகிற அளவு வலிமை வாய்ந்த
ஆது சமூக மக்களின் அழிவு  

துல்லியமாக ஏழு இரவுகளும் எட்டு பகலும் நின்று விளையாடிய சூறைக் காற்று – மற்றும்  பெரும் சப்த்த்தால் அழிக்கப் பட்டார்கள்.  

فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ [فصلت: 15].

وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ 

عَاتِيَةٍ கடும் குளிர் காற்று ;  

அது மழை இல்லாத மலட்டுக் காற்று

وَفِي عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ [الذاريات: 41].

﴿ فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَقِّ فَجَعَلْنَاهُمْ غُثَاءً فَبُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ [المؤمنون: 41].



காற்றும் சரி, நீரும் சரி . பூமிக்கு  அளந்தே அனுப்பப் படுகிற இரண்டு சந்தர்ப்பத்தில் அல்லாஹ் அவற்றை கட்டவிழ்த்து விட்டான். நூஹ் நபியின் மக்களை அழித்த போதும். ஹூத் நபியின் சமூகத்தை அழித்த போதும்

عن عليّ بن أبي طالب كرّم الله وجهه، قال: " لم تنـزل قطرة من ماء إلا بكيل على يدي مَلك؛ فلما كان يوم نوح أذن للماء دون الخُزَّان، فطغى الماء على الجبال فخرج، فذلك قول الله: إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ ولم ينـزل من الريح شيء إلا بكيل على يدي مَلك إلا يوم عاد، فإنه أذن لها دون الخزّان، فخرجت، وذلك قول الله: ( بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ ): عتت على الخزّان.

சமூதுகள் பெரும் பூகம்பத்தால் அழிக்கப் பட்டார்கள்.

وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ [هود: 67].
فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ [الأعراف: 78].


லூத் அலை அவர்களது சமூக மக்களின் அழிவு

தொடர்ச்சியான சூறாவளிக் காற்று , ஒவ்வொரு வருக்கும் அடையாளமிடப்பட்ட கல் மழை,  பூகம்பம்

إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّا آلَ لُوطٍ نَجَّيْنَاهُمْ بِسَحَرٍ [القمر: 34].
فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ مَنْضُودٍ [هود: 82].

பிர் அவ்னுடைய ஆட்கள் தண்ணீர் இருந்த இட்த்திற்கு அழைத்து வரப் பட்டு மூழ்கடிக்கப் பட்டார்கள்

அல்லாஹ் விதவிதமாக மக்களை சோதிக்கிறான்.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ * الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ * أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ ) البقرة/ 155 – 157

அவ்வப்போது அந்த சோதனைகளின் கடுமையை நாம் கண்டுதான் வருகிறோம்.
கஜா புயல் பாதித்த பகுதிகளை ஜமாஅத்துல் உலமாவின் சார்பில் நிவாரணங்கள் வழங்குவதற்காக கண்டு வந்தோம்.
புயல் வீசியது என்னவோ இரண்டு மணிநேரம் தான்
ஆனால் அதன் பாதிப்பு சொல்லும் தரமற்றது. வேதாரண்யம் திருத்துறைப் பூண்டி பகுதிகளில் பாதிக்கப் படாதோர் எவரும் இல்லை.
நேற்று வரை மின்சார விநியோகம் சீரடையவில்லை
பல பகுதிகளுக்கும் இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது.
கஜா புயலால் பாதிக்கப் பட்டு நிவாரணம் தேவையுடையோர் இங்கே வசிக்கிறார்கள் என்ற போர்டுகள் பிரதான சாலையிலிருந்து கிளைச் சாலைகள் செல்லும் இடம் தோறும் மாட்டப் பட்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் சரிந்து கிடக்கிற மரங்கள்
அறுந்து கிடக்கிற மின் கம்பங்கள்
பறந்து போன கூரைகள்
இடிந்து கிடக்கிற வீடுகள்
உடைந்து போன காம்பவுண்ட் சுவருகள்.
விழுந்து கிடக்கிற குடிசைகள்
ஒரு கிலோ மீட்டர் இரண்டு கிலோ மீட்டரில் அல்ல. சுமார் மூன்று மணி நேரப் பயணத்தில் செல்லும் இடமெங்கும் இதே காட்சிகள்.
ஒரு இமாம் பள்ளிக்கு அருகே வசிக்கிறார். அவருடைய வீட்டுக்கு மேல் போடப் பட்டிருந்த இரும்புத் தகட்டுக் கூரை எங்கோ போய் விழுகிறது.  பலவீனமான அந்தக் கட்டிடத்தின் ஆர் சி கூரை ஒழுகுகிறது. எங்கோ அது விழுந்து விடுமோ என்ற அச்சம் இன்னொரு புரம் கீழே தண்ணீர் தேங்கி நிற்கிறது வெளியே யும் செல்ல முடியாமல் உள்ளேயும் நிற்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நானும் என் வயதான தாயும் உட்கார்ந்திருந்தோம் என்று அவர் கூறினார். பாதிப்புக்குள்ளான் இடத்தை பார்க்கவே பயமாக இருந்தது.
இன்னொரு ஊரில் ஒரு பெரிய பள்ளிவாசல் ஆனால் இமாமுக்கு ஓட்டு வீடு. ஓடுகள் பறந்து போய் விழுந்தன. சுழன்றடிக்கிற காற்று ஒருபுரம்,  நடுங்க வைக்கிற மழை மறுபுரமாக  மூன்று குழந்தைகளோடு எப்படியோ பள்ளிவாசலுக்கு வந்து விட்டார், அங்கும் மரங்கள் முறிந்து உள்ளே செல்ல முடியாத சூழல் யாரையும் உதவிக்கு அழைக்க முடியாத நிலையில் அந்த இரவு முழுவதும் தன் குடும்பத்தோடு பள்ளிவாசலின் முற்றத்தில் நிற்னு கொண்டிருந்த்தாக ஒரு இமாம் கூறினார்.
கணவரில்லாத ஒரு தாய் இரண்டு மகள்களோடு ஒரு குடிசையில் வசிக்கிறார். குடுசையின் கூரை அப்படியே வீட்டுக் குள் விழுந்து விட்டது.  
இந்து சகோதர்ர்கள் மாதவிலக்கான ஒரு பெண்ணை வீட்டுக்கு வெளியே ஒரு ஓலைக் கூரைக்கு கீழே தங்க வைத்திருக்கிறார்கள். அதன் மீது ஒரு மரம் விழுந்த்தது. அந்தப் பெண்மணியின் கூக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. கதறியபடியே அவள் இறந்து போனாள்.
இவை மிகச்சில காட்சிகள். கஜா புயலின் பாதிப்புக்க்குள்ளான ஏழு மாவட்டங்களில் இது போன்ற கண்ணீர் காட்சிகள் ஏராளம்.
ஒருவரின் தென்னந்தோப்பில் 1800 மரங்கள் வீழுந்து விட்டன.
ஒரு பள்ளிவாசலுக்கு வருவாய் தந்து கொண்டிருந்த்து, அவர்களுடைய கப்ருஸ்தானிலிருந்த தென்னமரங்கள், அனைத்தும் இப்போது விழுந்து விட்டன. இனி வரும் காலத்தில் இமாமிற்கு சம்பளம் கொடுக்க என்ன செய்வோம் என்று அம் மக்கள் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பல பள்ளிவாசல்களிலும் பந்தலாக போடப் பட்ட தகர செட்டுக்கள் எங்கே சென்றன் என்றே கண்டு பிடிக்க முடியாத அளவு பறந்து போயுள்ளன, ‘
பல பள்ளிவாசல்களிலும்  காம்பவுண்ட் சுவர்கள், கண்ணாடிக் கதவுகள் உடைந்து போயிருக்கின்றன,
தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சேதமடைந்த பள்ளிவாசல்களை கணக்கெடுத்து அவற்றிற்கான தன்னால் இயன்ற உதவிகளை செய்து கொண்டிருக்கிறது.
பாதிப்புக்கள் ஒரு புரம் என்றால் அவற்றை சீரமைப்பதும் பெரிதுவம் சவாலாக இருக்கிறது,
விவசாய நிலங்களில் காம்பவுண்ட் சுவர்கள் நிற்பதில்லை. மூன்று சுவர்களை உடைத்து வீட்டுக்குள் உலவிச் சென்றிருந்க்கிறது காற்று.
ஒவ்வொரு காட்சியும் அல்லாஹ்வை அச்சப் பட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றன.
முஃமின்கள் அல்லாஹ்வை அச்சப் பட  வேண்டும்.
وهذا عمر بن الخطاب قرأ سورة الطور إلى أن بلغ : إن عذاب ربك لواقع [ سورة الطور : 77 ] فبكى واشتد بكاؤه حتى مرض وعادوه .

وقال لابنه وهو في الموت : ويحك ضع خدي على الأرض عساه أن يرحمني ، ثم قال : ويل أمي ، إن لم يغفر لي ( ثلاثا ) ، ثم قضي .

وهذا عثمان بن عفان - رضي الله عنه - كان إذا وقف على القبر يبكي حتى تبل لحيته ، وقال : لو أنني بين الجنة والنار لا أدري إلى أيتهما يؤمر بي ، لاخترت أن أكون رمادا قبل أن أعلم إلى أيتهما أصير .

وهذا أبو الدرداء كان يقول : إن أشد ما أخاف على نفسي يوم القيامة أن يقال لي : يا أبا الدرداء ، قد علمت ، فكيف عملت فيما علمت ؟ وكان يقول : لو تعلمون ما أنتم لاقون بعد الموت لما أكلتم طعاما على شهوة ، ولا شربتم شرابا على شهوة ، ولا دخلتم بيتا تستظلون فيه ، ولخرجتم إلى الصعدات تضربون صدوركم ، وتبكون على أنفسكم ، ولوددت أني شجرة تعضد ثم تؤكل .

وكان عبد الله بن عباس أسفل عينيه مثل الشراك البالي من الدموع .

قال يزيد بن حوشب -رحمه الله-:
«
ما رأيت أخوف من الحسن وعمر بن عبد العزيز كأنّ النّار لم تخلق إلّا لهما»

قَالَ بعض أَصْحَاب الْحسن -رحمه الله-:
كُنَّا ندخل على الْحسن فَمَا هُوَ إِلَّا النَّار وَالْقِيَامَة وَالْآخِرَة وَذكر الْمَوْت

முஃமின்கள் அல்லாஹ்வை அச்சப்பட வேண்டும் என்பது அடிப்படை கடமை

அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அவனது கருணையையே ஆதரவு வைக்க வேண்டும்.

·         إِنَّا إِلَى رَبِّنَا رَاغِبُونَ

قال سيّدنا عمر: والله لو علمْتُ أنّ الله معذِّبٌ واحدًا لَخِفْتُ أن أكون أنا، ولو علمْتُ أنّ الله راحمًا واحدًا لرجَوْتُ أن أكون أنا

قَالَ الحَسَنُ البَصْرِيُّ -رَحِمَهُ اللهُ-:
خَرَجَ هَرِمٌ وَعَبْدُ اللهِ بنُ عَامِرِ بنِ كُرَيْزٍ, فَبَيْنَمَا رَوَاحِلُهُمَا تَرْعَى, إِذْ قَالَ هَرِمٌ: أَيَسُرُّكَ أَنَّكَ كُنْتَ هَذِهِ الشَّجَرَةَ.؟ قَالَ: لاَ وَاللهِ, لَقَدْ رَزَقَنِي اللهُ الإِسْلاَمَ, وَإِنِّي لأَرْجُو مِنْ رَحْمَةِ اللهِ مَا هُوَ أَوْسَعُ مِنْ ذَلِكَ 

ஒருவரை நாம் நேசிப்போம் எனில் அவர் நம் கண் முன்னாலேயே இருப்பார்.

அது போல் அல்லா ஹ் நம் கண் முன்னேயே இருக்க வேண்டும். இது தான் இஹ்ஸானுடைய நிலை என்பது.

مقام الإحسان: أن تعبد الله كأنَّك تراه, فإن لم تكن تراه فإنّه يراك.
அனைத்து வழிபாடுகளையும் அல்லாஹ்வை நேசித்து செய்ய வேண்டும்
இது தான் இறைநேசர்களின் நிலையாகும்.

الراغبون في الله:
-      يقول أنس بن مالك رضي الله عنه: غاب عمي أنس بن النضر عن قتال بدر ، فقال: يا رسول الله .. غبتُ عن أول قتال قاتلته المشركين ، لئن أشهدني الله قتال المشركين لَيَرَيَنَّ الله مني ما أصنع

عندما أراد مشركوا مكة قتل خبيب بن عدي رضي الله عنه طلب منهم أن يتركوه ليركع ركعتين ، فوافقوا . فركع ركعتين أتمهما وأحسنهما ، ثم أقبل على القوم فقال: أما والله ، لولا أن تظنوا أني إنما طوَّلت جزعًا من القتل لاستكثرت من الصلاة . ثم رفعوه على خشبة ، فلما أوثقوه قال: اللهم إنَّا قد بلغنا رسالة رسولك .

அன்னை ராபியத்துல் அதவிய்யா மிக ஆச்சரியமான இறைநேசப் பெண்மணி. இறை நெருக்கத்தின் உச்சத்தை தொட்டவர். அவரது அறிவுரைகளும் கருத்துக்களும் பெரும் இறைநேசர்களை திகைப்பிலாழ்தியவை
وقال سفيان الثوري يوما أمامها: "واحزناه"! فقالت: "لا تكذب، بل قل: وا قلة حزناه، لو كنت محزونا ما تهيأ لك أن تتنفس

يروي أن سفيان الثوري قال عندها: "اللهم ارض عني" فقالت له: "أما تستحي أن تطلب رضا من لست عنه براض

அல்லாஹ்வின் மீதான நேசமே வாழ்வின் அடிப்படை என்பதை மிக உறுதியாக இந்த உலகிற்கு உரைத்த பெரும்களில் ஒருவர் அன்னை ராபியத்துல் அதவிய்யா அவர்கள்.
كانت تقول  رابعة العدوية
"ما عبدته خوفا من ناره، ولا حبا في جنته، فأكون كالأجير السوء، إن خاف عمل، بل عبدته حبا له وشوقا إليه
ويروي أنها كانت تقول في مناجاتها: "إلهي أتحرق بالنار قلبا يحبك!"، فهتف بها هاتف: "ما كنا نفعل هذا، فلا تظني بنا ظن السوء"
அல்லாஹ் நினைத்தால் தான் உன் வாழ்வில் எல்லாம் நடக்கும் என்பதை அறிந்து அல்லாஹ்வை நேசி என அறிவுறுத்தினார்,
ஒரு மனிதர் வந்து ராபியா அம்மாவிடம் எனக்கு தவ்பா கிடைக்குமா என்று கேட்டார்.
 وقد قال رجل لرابعة: إني أكثرت من الذنوب والمعاصي، فهل يتوب علي إن أنا تبت؟ قالت: لا بل لو تاب عليك لتبت
அல்லாஹ் நினைத்தால் தான் நி தவ்பா கேட்பாய் என்றார்.

இறை நேசர்கள் அனைவரும் அல்லாஹ்வை நேசிப்பதையே பிரதானமாக கருதினார்கள்.

كان يحيى بن معاذ يقول
مثقال خردلة من الحب ، أحب إلي الله من عبادة سبعين ألف سنة بلا حب


நமக்கு அனைத்துமான் அல்லாஹ்வை நாம் நேசிக்க வேணும். ஆசைப் பட வேண்டும்.

அதற்கான சில வழிகள் உண்டு. ‘

·        إخلاص العبادة لله وحده.
·        تلاوة القرآن الكريم والتدبر في معانيه.
·        الإكثار من ذكر الله.
·        الالتزام بالصلوات الخمس.
·        الصدقة في مرضاته.
·        حضور مجالس الإيمان وحلقات العلم.
·        الابتعاد عن الفاسقين، وملازمة الصالحين.
·        الإحسان إلى الآخرين.
·        الصبر والرضا بالقدر.
·        التعرّف على صفات الله، وأسمائه الحسنى

அல்லாஹ்வின் நேசத்தை தடுக்கிற சில காரியங்கள் உண்டு


·         إرادة الدنيا في عمل الآخرة.
·         الجفاء من كلام الله تعالى، وهجره.
·         التهاون في عمل الفرائض، وإضاعتها.
·         نسيان ذكر الله.
·         الشح وعدم التصدق لمساعدة المحتاجين.
·         عمل المعاصي، والانشغال بالملاهي.
·         ملازمة أهل الفساد والغفلة
·          ترك النصح للخلق، وحب النفس
·         التضجر من المصائب،والتسخط من الرزايا.புலம்புதல் 

அல்லாஹ்வை நேசிக்கிற வழிகளை கவனமாக கைகொள்வோம். நேசத்தை தடுக்கும் அம்சங்களை எச்சரிக்கையாக தவிர்த்திடுவோம்.



No comments:

Post a Comment