வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 28, 2019

எங்கும் மனிதாபிமானம் ஓங்கட்டும்.


 مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
[سورة المائدة ، الآية 32

இரண்டு நிகழ்வுகள் இன்றைய ஜும் ஆவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன.
பாக்கிஸ்தானில் விழுந்த இந்திய போர் விமானி அபினந்தனை இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்தவாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருக்கீறார். அதற்கு இதுவரை நன்றி தெரிவிக்க கூட நம்முடைய பிரதமருக்கு நேரம் இல்லை.

நேற்றைய முன்தினம் இலங்கையில் எறவூர் என்ற இடத்தில் பள்ளிவாசலுக்கு இஷா தொழுக சென்ற முதியவர் தொழுகையின் அத்தஹிய்யாத் இருப்பில் இறந்து போனார். அவரது உடல் பக்கத்திலிருந்த இளைஞரின் தோல் மீது சாய்தது

அந்த இளைஞனும் சரி பக்கத்தில் இருந்தவர்கள் பலரும் தொழுகைக்கு இடையூறாகி விடுமோ என்ற தவிப்பில் சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டு சற்று நேரம் கழித்துத்தான் அவரை சோதிக்கிறார்கள். அவர் இறந்து விட்டார் என்று தெரிகிறது.

அந்த இளைஞனால் அடுத்த ரகாத்திற்கு எழ முடியாத நிலையில் அப்படியே உட்கார்ந்திருக்கிறாரே தவிர அந்த முதியவரை கவனிக்க அந்த இளைஞன் தொழுகையை விட்டு விட்டு எழவில்லை
இறந்து சரிந்த அந்த முதியவரை உடனடியாக கவனிக்க அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் யாரும் முன்வரவில்லை.  

இந்த இரண்டுமே மனிதாபிமானமற்ற செயல்களாகும்.
இஸ்லாம் எந்த இடத்திலும் மனிதாபிமானத்தை கடை பிடிக்க வலியுறுத்துகிறது.
மனிதாபிமானம் என்பது இஸ்லாத்தைப் பொருத்தவரை சிறப்பம்சம் அல்ல. அது இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளில்கோட்பாடுகளில் ஒரு அங்கம். இன்னும் சொல்லப் போனால் அடி நிலை அங்கம்.
 قال رسول الله صلى الله عليه وسلم: الايمان بضع وسبعون شعبة، افضلها قول: لا اله الا الله وادناها اماطة الاذى عن الطريق).

சொர்க்கத்திற்கான காரணிகளில் ஒன்று

قال رسول الله صلى الله عليه وسلم (بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق فأخره فشكر الله له فغفر له) رواه مسلم.

அன்பும் கருணையும் சூழ்ந்த ஒரு சமூகமே இஸ்லாத்தின் இலட்சியம்
وفي صحيح البخاري عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلّى الله عليه وسلّم: «إذا عطس أحدكم فليقل الحمد لله، وليقل له أخوه أو صاحبه: يرحمك الله. فإذا قال يرحمك الله، فليقل: يهديكم الله ويصلح بالكم

இது தும்மலைப் பற்றிய் ஒரு சாதாரண வழிகாட்டுதல் என்று நாம் நினைக்கிறோம். ஒரு அற்புதமான மனிதாபிமானத்தில் தோய்ந்த சமூக கட்டமைப்பு இதில் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

خدمة الخلق  ஐ சிறந்த இபாதத் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம்.
 وعن عبدالله بن عمر رضي الله عنهما أن رجلا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول أي الناس أحب إلى الله، فقال أحب الناس إلى الله أنفعهم للناس، وأحب الأعمال إلى الله سرور تدخله على مسلم تكشف عنه كربة أو تقضي له دينا أو تطرد عنه جوعا، ولأن أمشي مع أخ في حاجة أحب إلي من أن أعتكف في هذا المسجد، يعني مسجد المدينة شهرا، ومن كظم غيظه ولو شاء أن يمضيه أمضاه ملأ الله قلبه يوم القيامة رضى، ومن مشى مع أخيه في حاجة حتى يقضيها له ثبت الله قدميه يوم تزل الأقدام. رواه الأصبهانيفي الترغيب وابن أبي الدنيا وحسنه الألباني في صحيح الترغيب،
ஒரு மனிதர் பெருமானார் (ஸல் ) அவர்களின் ரவ்ழாவில் நின்று தனது கடன் சுமையை சொல்லி புலம்பினார், இஃதிகாபில் இருந்த இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அவருக்கு உதவி செய்ய பள்ளிவாசலை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். இஃதிகாபில் இருந்தீர்களே என்று உடன் வந்தவர் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் . “எனது பள்ளிவாசலில் ஒரு மாதம் இஃதிகாப் இருப்பதை விட ஒரு சகோதரனுக்கு உதவ நடப்பது சிறந்தது. என இந்த கப்ரின் சொந்தக்காரர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்றார்,
இஸ்லாமிய வாழ்வியலில் மனிதாபிமானத்தின் பங்களிப்பை மிக அழுத்தமாக பதிய வைக்கும் செய்தி இது.


இஸ்லாமின் கோல்டன் லாமனிதாபிமானத்தில் அளவு கோள் இது
عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :((لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ ـ في الإنسانيةـ مَا يُحِبُّ لِنَفْسِهِ))[رواه البخاري ، ومسلم

எவருடைய உயுரையும் உடைமையும் மானத்தையும் மரியாதையையும் நாம் பறித்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையில் வாழ்வதே மனிதாபிமானம்.

قال الرسول الكريم في حجة الوداع :إِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ إِلَى يَوْمِ تَلْقَوْنَهُ، ثُمَّ قَالَ : اسْمَعُوا مِنِّي تَعِيشُوا، أَلَا لَا تَظْلِمُوا، أَلَا لَا تَظْلِمُوا، أَلَا لَا تَظْلِمُوا، إِنَّهُ لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ 

இந்த மனிதாபிமானம் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுகிற போது கூட கவனிக்கத் தக்கது.


எறவூரில் தொழுகையில் இறந்து போன மனிதரை உடனடியாக மற்றவர்கள் கவனிக்காததன் காரணம் தொழுகை முறிந்து விடுமோ அல்லது தொழுகயை இடை முறிக்க வழி இருக்கிறதா என்பது பற்றிய தெளிவின்மையே இதற்கு காரணமாகும்.

யாரும் வேண்டுமென்றே இப்படி செய்ய மாட்டார்கள் . அல்லாஹ்வை வணங்குவதா அடியாரை கவனிப்பதா என்ற தடுமாற்றமே இதற்கு காரணமாகும். இஸ்லாம் தொழுகையிலும் மனிதாபிமானத்தை கவனிக்க நமக்கு வலியுறுத்தியிருக்கிறது. 


தொழுகையாளிக்கு குறுக்கே செல்லக் கூடாது என்று கூறீயது இஸ்லாம்.
لو يعلم المار بين يدي المصلي لكان أن يقف أربعين خير له من أن يمر بين يديه. رواه الإمام البخاري في صحيحه من حديث أبي جهم رضي الله عنه.

அதே சமயம் நாம் தொழுதுகொண்டிருக்கிற போது தேவையுடையோர் குறுக்கே செல்ல நாமே வழி ஏற்படுத்தி தர வேண்டும். என்றும் உத்தரவிட்டுள்ளது.
وقد قال النبي إذا صلى أحدكم فليصل إلى سترة، ولْيدنُ منها

தொழுகையில் கூட மனிதாபிமானம் கவனிக்கப்ப்பட வேண்டும் என்ற ஏற்பாடாகும் இது.
இப்போது நமது மக்கள் அவர்களுடைய அவசாரத்துக்கு பள்ளிவாசல்களில் எங்கு வேண்டுமானாலும் நின்று விடுகிறார்கள். சக தொழுகையாளிகளுக்கு ஏற்படுகிற அவஸ்தையை புரிந்து கொள்ளாத நடை முறை இது.
தொழுகையில் ஈடுபட்டு விட்டால் அதை முறிக்க கூடாது.
قطع العبادة الواجبة بعد الشروع فيها بلا مسوغ شرعي غير جائز باتفاق الفقهاء؛ لأن قطعها بلا مسوغ شرعي عبث يتنافى مع حرمة العبادة، وورد النهي عن إفساد العبادة، قال الله تعالى: { ولا تبطلوا أعمالكم

அந்த தொழுகையை கூட மனிதாபிமான கடமையை நிறைவேற்ற இடை முறிக்கலாம்.


أما قطعها ـ أي العبادة الواجبة بعد الشروع ـ بمسوغ شرعي فمشروع، فتقطع الصلاة لقتل حية ونحوها للأمر بقتلها، وخوف ضياع مال له قيمة، له أو لغيره، ولإغاثة ملهوف، وتنبيه غافل أو نائم قصدت إليه حية ولا يمكن تنبيهه بتسبيح 

குழந்தை கத்தியை கையில் வைத்து கொண்டிருப்பதைப் பார்த்தால்/
பார்வையற்றவர் குழியில் விழப்போவதை அறிந்தால்
ஒருவர் மயங்கி விழுந்தால்
நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனை காப்பாற்ற தொழுகையின் நேரம் தவறி விடும் என்றால் கூட தொழுகையை இடை முறித்து விடலாம்.
تقديم إنقاذ الغرقى المعصومين على أداء الصلاة لأن إنقاذ الغرقى المعصومين عند الله أفضل من أداء الصلاة، والجمع بين المصلحتين ممكن بأن ينقذ الغريق ثم يقضي الصلاة. ومعلوم أن ما فاته من مصلحة أداء الصلاة لا يقارب إنقاذ نفس مسلمة من الهلاك

உயிரைக் காப்பாற்றும் விவகாரத்தில் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர் என்ற பேதம் எதுவும் இல்லை,

எப்படி இடை முறிப்பது ? சலாம் கொடுக்க வேண்டுமா ?

தேவையில்லை. அப்படியே விட்டு விட்டு சென்று விடலாம்.
தொழுகையை நிறைவு செய்வதற்குத்தான் சலாம்.
حديث " تحريمها التكبير وتحليلها التسليم

தொழுகையாளிகள் தமது மனிதாபிமானக் கடமையை நிறைவேற்ற தொழுகை ஒரு தடையல்ல என்பதே இஸ்லாமிய வழிகாட்டுதலாகும்.
கடவுளை நினைக்கிற போது மனிதன் முக்கியமானவல்ல என்று கருத்து இஸ்லாத்தில் இல்லை.
எனவே நாம் தொழுது கொண்டிருக்கிற போது ஜடமாக இருக்க தேவையில்லை.
நடப்பவர்களுக்கு இடையூறாக இருக்கும் எனில் மூன்று அசைவுகளில் தள்ளி நின்று கொள்ளலாம்.
முந்தைய சப்பை அடைக்க  மூன்று எட்டுக்கல் முன்வைத்து நடக்கலாம்.
யாரேனும் ஒருவர் மயங்கி விழுந்து விட்டால் அல்லது சரிந்து விட்டால் உடனடியாக தொழுகையை இடை முறித்து அவருக்கு உதவலாம்.
திருட்டை தடுப்பதற்காக தொழுகைய விடலாம்.
தொழுகிறவர்கள் அதை விட்டு விடமாட்டார்கள் என்ற தைரியத்தில் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருப்பவர்கள் முன்னாள் வைத்திருக்கிற செல்போன்களை திருடுகிறவர்கள் இப்போது உருவாகியிருக்கிறார்கள்.
ஆபத்தில் சிக்கி விடக் கூடாது என்று எச்சரிப்பதற்காக தொழுகையை இடை முறிக்கலாம்.
தொழுகையில் இருந்தாலும் இந்த மனிதாபிமானக் கடமையை தவற விடக் கூடாது என்பதே இஸ்லாம் ஆகும்.
போர்க்களத்திலும் மனிதாபிமானம்
மனிதாபிமானம் மதிப்பிழந்து போகிற முக்கியமான இடம் யுத்தம்தனி நபர்களுக்காக கொள்கைகளுக்காக ஒரு சிலரின் பெருமைக்காக பல்லாயிரக்கனக்கான மக்கள் பலியாவார்கள். அதற்கு காரணமானவர்கள் அதை பொருட்படுத்தவும் மாட்டார்கள். பலியாவது பலியானவர்களின் கடமை என்று நினைப்பார்கள்.

இஸ்லாம் தன் பொருட்டு மக்கள் பலியாவதை ஏற்கவில்லை மூர்க்கத்தனமாக எதிர்ப்புக்கள் எழுகிற போது சண்டை போடுகிற நடை முறையை விட புறக்கணித்து செல்லும் நடை முறையை தான் இஸ்லாம் வரவேற்றது .

·        فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ
·        وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ
·        فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلَامٌ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ (89)
·         
எதிராளி சண்டையை நிர்பந்தித்தால் தான் சண்டை  போடுமாறு இஸ்லாம் கூறியது.
وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (190)


தப்பித்துக் கொள்வதற்காக கடைசி நேரத்தில் ஒப்புக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஜுஹைனாக்களில் ஒரு பிரிவினரான ஹுர்கா மக்களிடம் பெருமானார் எங்களை அனுப்பி வைத்தார்கள்.

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ، وَهَذَا حَدِيثُ ابْنِ أَبِي شَيْبَةَ ، قَالَ : بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ ، فَصَبَّحْنَا الْحُرَقَاتِ مِنْ جُهَيْنَةَ ، فَأَدْرَكْتُ رَجُلًا ، فَقَالَ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، فَطَعَنْتُهُ فَوَقَعَ فِي نَفْسِي مِنْ ذَلِكَ ، فَذَكَرْتُهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَقَالَ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَقَتَلْتَهُ ؟ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّمَا قَالَهَا خَوْفًا مِنَ السِّلَاحِ ، قَالَ : " أَفَلَا شَقَقْتَ عَنْ قَلْبِهِ ، حَتَّى تَعْلَمَ أَقَالَهَا أَمْ لَا ؟ " فَمَا زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي أَسْلَمْتُ يَوْمَئِذٍ ،

சண்டை சச்சரவுகளில் அக்கறை காட்டத தோழமையை பெருமானார் உருவாக்கினார்கள்.   அலி ரலி காலத்தில் முஸ்லிம்களுக்கிடையே நடை பெற்ற சகோதரச் சண்டையில் பங்கேற்ற நபித்தோழர்களின் எண்ணிக்கை 30 க்கும் குறைவானதே என்கிறார் வரலாற்று ஆய்வாளர் முஹம்மது பின் சீரீன் .
عن محمد بن سيرين قال هاجت الفتنة وأصحاب رسول الله صلى الله عليه وسلم عشرة آلاف فما حضرها منهم مائة بل لم يبلغوا ثلاثين 

உட்நாட்டு குழப்பத்திலிருது ஒதுங்கியிருந்த சஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்களிடம் ஒருவர் பூமியில் குழப்பம் நீடிக்கிறவரை சண்டையிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளதே  என்றார். அதற்கு சஃது ரலி சொன்னார். நாங்கள் குழப்பம் தீர்வதற்காக சண்டையிட்டோம் நீங்கள் குழப்பத்தை உருவாக்கவே சண்ட்டையிடுகிறீர்கள். இத்தகைய சண்டைகளில் நான் பங்கேற்க மாட்டேன்.

قَالَ : قَالَ رَجُلٌ : أَلَمْ يَقُلِ اللَّهُ وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ ، وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ ، فَقَالَ سَعْدٌ : قَدْ قَاتَلْنَا حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ ، وَأَنْتَ ، وَأَصْحَابُكَ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونُ فِتْنَةٌ .

மனிதாபிமானத்தை பேனிய வாழ்க்கைக்கு தன் தோழர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் பக்குவப்படுத்தியிருந்ததே இதற்கு காரணம்.

போர்க்காளங்களில் போரில் ஈடுபடாதவர்களின் மீது வன்மம் காட்டுவதை குர் ஆன் கடுமையாக எச்சரித்து மறுத்துள்ளது.

யூதர்களில் சிலர் பெருமானாரை இரகசியமாக கொலை செய்ய முயன்ற போது அவர்களை மொத்தமாக அழித்து விட முஸ்லிம்கள் நினைத்தனர்அதை அல்லாஹ் தடுத்தான்.

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8

قال عبد الله بن كثير: ذهب رسول الله صلى الله عليه وسلم إلى يهود يستعينهم في دية، فهمُّوا أن يقتلوه، فذلك قوله: " ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا "..

சண்டைக்களங்களில் கூட மனிதாபிமானத்தை கடைபிடிக்க பெருமானார் வலியுறுத்தினார்கள்.

சண்டை படைகளுக்கு இடையே தான் நடக்க வேண்டும். அதை தாண்டி நகரங்களுக்குள் தாக்குதல் கூடாது. போரில் சம்பந்தம் இல்லாதவர்களை துன்புறுத்தக் கூடாது. சிதரவதை செய்யக் கூடாது

أوصى رسول الله صلى الله عليه وسلم عبد الرحمن بن عوف رضي الله عنه عندما أرسله في شعبان سنة 6 هـ إلى قبيلة كلب النصرانية الواقعة بدومة الجندل؛ فقال له: "اغزوا جميعًا في سبيل الله، فقاتلوا من كفر بالله، لا تَغُلُّوا، ولا تَغْدِرُوا، ولا تُمَثِّلُوا، ولا تَقْتُلُوا وَلِيدًا، فهذا عَهْدُ اللهِ وسيرة نبيّه فيكم"

மரங்களை வெட்டக் கூடாது. தோட்டங்களை அழிக்க கூடாது. கட்டிடங்களை இடிக்க கூடாது

. ‘فقد جاء في وصية الرسول صلى الله عليه وسلم لجيش مؤتة: ".... ولا تَقْطَعَنَّ شَجَرَةٍ وَلا تَعْقِرَنَّ نَخْلًا ولا تَهْدِمُوا بَيْتًا"

தூரத்திலிருந்து துல்லியமாக தாக்கும் ஆயுதங்கள் இல்லாத காலத்தில் கரணம் தவ்றினால் மரணம் என்ற நிலை இருந்த காலத்தில் இத்தகைய மனிதாபி மானத்தை யுத்தங்களில் பேண பெருமானார் அறிவுறுத்தினார்கள். எதிரிகள் என்றாலும் அவர்களுக்கு செய்ய வேண்டிய மனிதாபிமானக் கடமைகளை செய்தார்கள்.

பத்று யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்காவின் காபிர்களின் உடல்களை அப்பபடியே போட்டு விட்டுச் செல்லாமல் அடக்கம் செய்து விட்டே களத்தை விட்டு வெளியேறினார்கள்.

அகழ் யுத்தத்தின் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் மிகவும் அச்சத்திற்கு ஆட்பட்டிருந்தார்ககள், .வாழ்வா சாவா எனும் சூழ்நிலை

 إِذْ جَآءُوكُم مِّن فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنكُمْ وَإِذْ زَاغَتِ ٱلْأَبْصَٰرُ وَبَلَغَتِ ٱلْقُلُوبُ ٱلْحَنَاجِرَ
பாதுகாப்பிற்காக தோண்டப்பட்ட அகழி எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இல்லை. சில இடங்களில் அக்கறைக்கும் இக்கறைக்கும் மிகச் சின்ன இடைவெளியே இருந்தது. ஒரு இடத்தில் 90 வயது கிழவன் ஒருவன் இந்த அகழியை நான் தாண்டிக் காட்டுகிறேன் என்று சொல்லி குதிரையில் வேகமாக பாய்ந்தான். அகழியின் நடுவே விழுந்தான். கழுத்து முறிபட்டு இறந்து போனான, அவனுடைய உடல் அகழியின் நடுவே கிடந்தது  . ஒரு குலத்தின் தலைவனான அவனுடைய உடல் அகழியில் கிடப்பது எதிரிகளின் மரியாதைக்கு சவாலாக இருந்தது, பெருமானாரிடம் ஆள் அனுப்பினார்கள்நீங்கள் கேட்கும் தொகை தருகிறோம். அவரது உடலை எடுத்துக் கொள்ள அனுமதியுங்கள் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உடலை எடுத்துச் செல்ல அனுமதித்தார்கள். பணத்தை ப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட இது போன்ற ஒரு மனுதாபிமான வெளிப்பாட்டை தான் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் நேற்று வெளிப்படுத்தியிருக்கிறார், பாக்கிஸ்தானிய மண்ணீல் விழுந்த இந்திய வீரர் அபினந்தனை பாதுகாப்பாக மீட்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்து தானே வலிய வந்து இந்தியாவிற்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக திருப்பி அனுப்புகிறார்.

பாக்கிஸ்தானுடன் நமக்கு பல மோதல்கள் இருந்தாலும் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் குழுக்கள் செயல்பட்டு வந்தாலும் கூட பாக்கிஸ்தான் பிரதமரின் நல்லெண்ணத்தை நாம் புரிந்து கொள்ள தவறவிடக் கூடாது.

பாகிஸ்தான் பணிந்து விட்டது, நமது நெருக்கடிகளுக்கு அது சரணடந்து விட்து என்றெல்லாம் மக்களை தூண்டி விடுகிற வகையில் தொலைக்காட்சிகள் தவறாக சித்தரிக்கின்றன. உண்மையில் இது விவகாரத்தை திசை திருப்பி மக்களை முட்டாளாக்கும் போக்காகும்.

ஒரு எதார்த்தம் என்ன வென்றால் பாக்கிஸ்தானிலிருந்து நமக்கு பிரச்சனை என்றால் அதை போசித்தீர்த்துக் கொள்ள நமக்கு ஒரு ஆள் வேண்டும். அங்கு தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர்களை தவிர்  அதற்கு வேறு வழி கிடையாது. பாகிஸ்தானிய இராணுவத்தோடு அல்லது தீவிரவாதத்தை தூண்டி விடுகிற குழுக்களோடு நாம் பேச முடியாது.

பேச்சுவார்த்தைக்கு வருகிறேன் என்பவரை புறக்கணிப்பது எந்த வகையிலும் அரசியல் சாதுர்யமாகாது.

நம்முடைய ஊடகங்கள் மிக மோசமாக பாக்கிஸ்தானை சித்தரித்தாலும் சமூக ஊடகங்களில் அவர் தான் இப்போது ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.
இதே போல ஒரு விமானி பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்தியாவில் வந்து விழுந்திருந்தால் அவர் விசயத்தில் நாம் இப்படி நடந்து கொண்டிருப்போமா என்று கேள்வியை கேட்டுக் கொள்வது இந்திய அரசியல்வாதிகள் ஊடகங்களின் கடமையாகும். மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் அக்லாக்கை கொலை செய்த சமூகம் நம்முடையது. 

நம்முடைய பிரதமர் இது வரை நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் மீதான தாக்குதலைப் பற்றியோ அதில் என்ன நடந்தது என்பதைப் பற்றியோ ஒரு வீரர் பாக்கிஸ்தானிடம் சிக்கிக் கொண்டது பற்றி அவரை மீட்பதற்கான யுத்தி பற்றியோ ஒரு வார்த்தை பேச வில்லை.

அவர் தனது முந்தைய பட்டியலின் படி தேர்தல் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறார். நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் எதையும் அவர் பேசவும் இல்லை, ட்வீட் செய்யவும் இல்லை.

இந்தியா,  இம்ரான் கானின் முடிவை வரவேற்றிருக்க வேண்டும் நன்றி கூட சொல்லியிருக்கலாம். அதே நேரத்தில் பாக்கிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோரை அழிக்கவும் இது போன்ற ஒத்துழைப்பை தர வேண்டும்இந்தியா ஒரு வீரரருக்காக மண்டியிட்டு விடும் என்று கருத வேண்டாம் என்று கூறியிருந்தால் கூட அது பொருத்தமான ஒரு அறிக்கையாக இருந்திருக்கும்.

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய போர் விமானங்கள் குண்டு வீசியதை நியாய்பப்டுத்திக் கொண்டே , இனியும் இந்தியாவின் தாக்குதல்கள் தொடரும் என கூறிக் கொண்டே இம்ரான் கானின் செயலுக்கு நன்றி தெரிவித்திருக்க முடியும். அத்தகைய ஒரு இராஜதந்திரம் ஏன் பர்ந்து பட்ட இந்திய தேசத்திற்கு இல்லாமல் போய்விட்டது. பெருந்தன்மையானதாக பார்க்கப் படுகிற பாகிஸ்தான் பிரதமரின் அறிக்கைகு நிகராக ஒரு அறிக்கை தர இந்திய ராஜதந்திரத்திற்கு அனுபவம் இல்லையா என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. 


நம்முடைய  தற்போதைய பிரதமர் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்படத் தெரியாதவர் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது

பிரதமர் அறிக்கை வெளிடாவிட்டால் கூட இந்திய மக்களின் சார்பில் இளைஞர் அபினந்தை கவுரமாக நடத்தியதற்காகவும் அவரை விரைவாக விடுதலை செய்ததற்காகவும் போதுமான அளவில் சமூக ஊடகங்களில் நன்றி தெரிவிக்கப் பட்டு வருகிறது.

ஒரு சிலர் மோடிவை வைத்துக் கொள்ளுங்கள் அபினந்தை விட்டு விடுங்கள் என்று கூறியிருப்பது மோடி மீது மக்களுக்கு உருவாகியுள்ள வெறுப்பை காட்டுகிறது, இந்தியாவின் எந்தப் பிரதமரும் இவ்வளவு மக்கள் வெறுப்பை சம்பாதித்திருக்க முடியாது,

எனினும் இம்ரான் கான் சொன்னது போல போர் என்பது மிக ஆபத்தானது, அதை தொடங்கிறவருக்கு அது எப்படி முடியும் என்று சொல்ல முடியாது. அல்லாஹ் நம்முடைய நாட்டையும் நாட்டு மக்களையும் நாட்டுக்காக போராடுகிற வீரர்களையும் பாதுகாப்பானாக!


இந்தியா பாக்கிஸ்தான் இரு நாடுகளும் எப்போதும் மனித நேயத்துடன் வாழ அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

2 comments:

  1. Aameen.

    அருமையான கட்டுரை. ஜஸாகல்லாஹ் ஹள்ரத்.

    ReplyDelete
  2. Aameen.
    நல்ல கட்டுரை.
    JAZAAKALLAAH Hazrath.

    ReplyDelete