இந்தியாவின், ஜம்மு
காஷ்மீர்
மாநிலத்தில், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய
நெடுஞ்சாலையில், மத்திய பாதுகாப்பு படையினர் (சி ஆர் பி எப் ) சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரும் உயிரிழந்தனர்.
78 பேருந்துகளில் மொத்தம் 2,547 மத்திய பாதுகாப்புப் படையினர்(சி.ஆர்.பி.எப்) ஸ்ரீநகரிலிருந்து ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலைவழியாக விடுமுறைக்குப் பின் பணியில் சேர காஷ்மீர் சென்று
கொண்டிருந்தனர். ஜம்முவிலிருந்து கிளம்பிச் செல்லும் வழியில் இந்திய நேரப்படி மதியம் 03 :15 மணியளவில்
லெத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கருகே மகேந்திரா ஸ்கார்பியோ வகை கார் ஒன்று படையினரின் பேருந்து ஒன்றில் மோதி
வெடித்தது. இந்தச் காரில் சுமார் 350 கிலோ
எடைகொண்ட வெடிபொருட்கள் இருந்ததாகவும், அதனை அதில்
அகமது தார் என்பவர் ஓட்டிவந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலை ஏற்படுத்திய அதில் அகமது தார் என்பவர் ககபோரா
பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். இத்தாக்குதலுக்குப்
பாக்கிஸ்தானிய ஆயுதக்குழுவான ஜெய்ஸே -முஹம்மது பொறுப்பேற்றுள்ளது என்றும் அதில் அகமத்தின் காணொளியில் “ஒரு
வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பின்பு
இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான்
சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று
கூறியுள்ளதாகவும் அச்செய்திகள் கூறுகின்றன.
1989 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்புப்
படையினர் மீது நிகழ்ந்த கொடூரமான தாக்குதலாக பிபிசி செய்தி நிறுவனம்
குறிப்பிட்டது
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த
பன்னிரண்டு வீரர்களும், ராஜஸ்தானைச் சேர்ந்த
ஐந்து வீரர்களும், பஞ்சாப் மாநிலத்தைச்
சேர்ந்த நான்கு வீரர்களும், தமிழ் நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஒடிசா
மற்றும் பீகார் மாநிலங்களைச்
சேர்ந்த தலா இரண்டு வீரர்களும், அஸ்ஸாம், கேரளா,
கர்நாடகா,
மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களைச்
சேர்ந்த தலா ஒரு வீரரும் இத்தாக்குதலில்
இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த
க. சுப்பிரமணியன்(28) மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த
சி. சிவசந்திரன் என்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாவார்கள்.
நாடுமுழுவதிலுமுள்ள இவ்வீரர்களின் இறப்பு
இந்திய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
எந்த ஒரு தாக்குதலிலும் முதலில் நினைவு
கூறப்பட வேண்டியது படுகொலை செய்யப் பட்டவர்களின் உறவினர்களே!
நாற்பது குடும்பங்களின் வாழ்கை
கேள்விக்குரியாகியுள்ளது.
அல்லாஹ் அவர்களுக்கு தகுந்த ஆறுதலையும்
பரிகாரங்களையும் செய்தருள்வானாக!
யுத்தங்களில் உயிரிழந்தவர்கள் நல்லடக்கம்
செய்யவும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
உஹது யுத்தத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக
அன்சாரிகள் அழுதது கண்டு பெருமானார் (ஸ்ல்) கண்கலங்கினார்கள் ஹம்சா ரலி க்காக
அழுபவர் இல்லையே என்றும் குறிப்பிட்டார்கள். சஃது ரலி யின் ஏற்பாட்டில்
பெருமானாரின் வீட்டருகே வந்து ஹம்சா ரலி அவர்களின் பேரைச் சொல்லி பெண்கள் அழுத
போது “ நான் ஆறுதல் அடைந்து விட்டேன். நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்றார்கள்.
مرَّ الرسول صلى الله عليه وسلم بدار من دُورِ
الأنصار من بني عبدالأشهل وظفر، فسمع البكاء والنوائح على قتلاهم، فذرفت عينا رسول
الله صلى الله عليه وسلم فبَكى، ثم قال: ((لكن حمزة لا بواكي له))، فلما رجع سعد
بن معاذ وأسيد بن حضير إلى دار بني عبدالأشهل أمَرَا نساءهم أن يتحزَّمنَ، ثم
يذهبن فيبكين على عم رسول الله صلى الله عليه وسلم، ولما سَمِع رسول الله بكاءهن
على حمزة، خرج عليهنَّ وهنَّ على باب مسجده يبكين عليه، فقال: ((ارجعنَ يَرحمكنَّ
الله، فقد آسيتنَّ بأنفسكن))
உஹது
யுத்தத்தில் கொல்லப் பட்டு உடல்
உறுப்புக்கள் சிதைக்கப் பட்ட அப்ப்துல்லா ரலி
அவர்களுக்காக அவரது மகன் ஜாபிர்
ரலியும் அவரது சகோதரி பாத்திமாவும்
அழுத போது அவர்களது அழுகையை
ஏற்றுக் கொண்டு ஆறுதல் கூறிய
பெருமானார் (ஸல்) . அப்துல்லாஹ்
(ரலி அவர்களின் உன்னதமான அந்தஸ்தை பெருமானார் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : أُصِيبَ أَبِي يَوْمَ أُحُدٍ ، فَجَعَلْتُ أَكْشِفُ الثَّوْبَ عَنْ وَجْهِهِ ، وَأَبْكِي وَجَعَلُوا يَنْهَوْنَنِي ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَنْهَانِي ، قَالَ : وَجَعَلَتْ فَاطِمَةُ بِنْتُ عَمْرٍو ، تَبْكِيهِ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : تَبْكِيهِ ، أَوْ لَا تَبْكِيهِ ، مَا زَالَتِ الْمَلَائِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا ، حَتَّى رَفَعْتُمُوهُ (புகாரி )
وفي رواية أن رسول الله صلى الله
عليه وسلم نظر إلى جابر وقال: ((ما لي أراك مُنكسِرًا (مهتمًّا)؟))، قال: يا رسول
الله، قُتِل أبي وترك دَينًا وعيالاً، فقال: ((ألا أخبرك؟ ما كلَّم الله أحدًا قط
إلا من وراء حجاب، وإنه كلَّم أباك كفاحًا، فقال: يا عبدي، سلني أُعطِك، قال:
أسألك أن تردني فأقتل فيك ثانية! قال: إنه قد سبق مني أنهم لا يُردُّون إليها ولا يرجعون، قال: يا
ربِّ، أبلِغ من ورائي، فأنزل الله تعالى: ﴿ وَلَا
تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ
عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ ﴾ [آل عمران: 169
யுத்தங்களில் கொல்லப் பட்ட எதிரிகளின் உறவினர்களுக்கு கூட ஆறுதல் அளிக்கும்
வகையில் நடந்து கொள்ள பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
கைபர் யுத்தத்தில் சில யூதர்கள் கொல்லப் பட்டார்கள் அவர்கள
குடும்பத்து பெண்களை அழைத்து வந்த பிலால் ரலி அவர்கள் இறந்து கிடந்த அவர்களது
உடல்கள் வழியாக அழைத்து வந்தார்கள். அது அந்தப் பெண்களை
பெருங்கவலைக்குள்ளாக்கியது. அந்த உடல்களைப் பார்த்து அப்பெண்கள் பெருங்குரலெடுத்து
அழுதார்கள் தம் தலை மீது மண்னை வாரிப் போட்டுக் கொண்டார்கள்.
பிலால் ரலி அவர்கள் அருகே வந்த போது பெருமானார் (ஸல்) அவர்கள்
கேட்டார்கள்.
أنزعت الرحمة من قلبك يا بلال
உனது
இதயத்திலிருந்து இரக்கம் எடுக்கப் பட்டுவிட்டதா என்றார்கள்.
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ لِبِلالٍ ، فِيمَا بَلَغَنِي حِينَ رَأَى مِنْ تِلْكَ الْيَهُودِيَّةِ
مَا رَأَى : " أَنُزِعَتْ مِنْكَ الرَّحْمَةُ يَا بِلالُ حَيْثُ تَمُرُّ
بِامْرَأَتَيْنِ عَلَى قَتْلَى رِجَالِهِمَا
"
அந்தப்
பெண்களை வேறு வழியாக அழைத்துச் சென்றிருக்கலாம். அவர்களது துக்கத்தை மேலும் அதிகப்
படுத்தாமல் இருக்க கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்பது பெருமானாரின் கண்டிப்பு
காரணமாக இருந்தது.
எனவே
புல்வாமா தாக்குதலில் பலியானவர்கள் நம் நாட்டுக்காக தம் இன்னுயிரை
அர்ப்பணித்திருக்கிறார்கள்.
இந்த
யுத்தத்தில் பலியான ஒரு முஸ்லிம் வீரரின் மனைவி தனது கணவனைப் பார்த்து கலங்கி ஜெய்
ஹிந்த் என்று சொன்ன வார்த்தைகள் பார்ப்போரின் இதயத்தை உருக வைத்தது.
புல்வாமா
தாக்குதலில் பலியானவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த சில இந்து இயக்கத்தவர்கள் இதை ஏதோ
இந்து முஸ்லிம் சண்டை என்பது போல சித்தரித்து நம்முடைய கோவை உட்பட பல நகரங்களிலும்
போஸ்டர் அடித்து தேசிய துக்கத்திலும் அரசியல் இலாபம் அடைய நினைக்கிறார்கள். காவல்
துறை அத்தகைய செயலை கண்டித்திருக்கிறது . இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது
தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எச்சரித்திருக்கிறது. எனவே எங்காவது இது
போன்ற பேனார்கள் வாச்கங்கள் இடம் பெற்றிருக்குமானால் காவல் துறையிடம் புகார் செய்ய
வேண்டும்.
ஆட்சித்தலைமையின்
அலட்சியமே இத்தகைய தாக்குதலுக்கு காரணம்.
காஷ்மீர்
மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு செயல்படுவதை மத்தியில் இருக்கிற் பாஜக அரசு
தடுத்து அங்கு ஆளுநர் ஆட்சியை அமுல் படுத்தியிருக்கிற நிலையில் தான் இத்தகைய கொடூர
தாக்க்தல் நடை பெற்றுள்ளது.
எனவே
இந்த தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டியது மத்தியை ஆளுகிற பஜக அரசும் அதன்
தலைமையில் இருக்கிற பிரதமர் மோடியும் ஆவார்.
அனால்
பிரதமர் மோடி இந்த கொடூர தாக்குதல் செய்தியை கேள்விப் பட்ட்ட பிறகும் விளம்பர்
சூட்டிங்கில் இருந்துள்ளா. ‘
தாக்குதல் நடைபெற்ற பிப்ரவரி 14-ம் தேதி உத்தராகண்டில் உள்ள ஜிம் கார்பெட் பூங்காவுக்குச் சென்றார் பிரதமர் மோடி. இந்த மாதத்தின் கடைசியில் வெளியாகவுள்ள ஆவணப்படம் ஒன்றில்,
இமயமலைக்குச் சென்றபோது ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார். இதற்கான ஷூட்டிங் ஜிம் கார்பெட் பூங்காவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மோடியின் புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
அங்கு ஹெலிகாப்டர் மூலம் காலை 7 மணிக்குச் சென்ற மோடி, மாலை வரை அங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. மதியம் 3.15 மணிக்கு தாக்குதல் நடை பெற்றுள்ளது. அது அந்த நிமிடமே பிரதமருக்கு தெரிவிக்கப் பட்டிருக்கும்.
எதிர்க்கட்சியினர் கூட – பிரியங்கா காந்தி உட்பட பலர் உடனடியாக தங்களது நிகழ்ச்சியை இரத்து செய்து விட்ட நிலையில் நாட்டின் பிரதமர் மாலை வரை சூட்டிங்கில் இருந்துள்ளது மிகவும் வேதனையானது. இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா,
''புல்வாமா தாக்குதல் நடைபெற்ற அன்று மதியம்,
ஒட்டுமொத்த நாடே இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது. ஆனால் பிரதமர் மோடியோ, ஜிம் கார்பெட் பூங்காவில் மாலை வரை படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இந்த உலகத்தில் இதுபோன்ற பிரதமர் எங்காவது இருப்பார்களா?
உண்மையில் எனக்கு இதுகுறித்துப் பேச வார்த்தைகளே இல்லை என்று கவலையை வெளியிட்டிருப்பது எதார்த்தமானது. .
இராணுவ
படை அணி வருகிற வழியில் 350 கிலோ வெடிமருந்து களோடு ஒரு கார் வருவதை எப்படி
பாதுகாப்பு வீரர்கள் அனுமதித்தார்கள் கேள்விக்கு இன்று வரை பதிலில்லை
ஜம்மு-காஷ்மீர் மாநில
ஆளுநர் சத்யபால் மலிக், "பெருமளவிலான வெடிபொருட்கள் நிரம்பிய வாகனம் சுற்றிக்
கொண்டிருந்து எப்படி நிர்வாகத்தின் கண்களில் இருந்து தப்பியது என்பது வருத்தப்படச்
செய்கிறது," என்று தெரிவிக்கிறார்/
இந்த தாக்குதலுக்கு
காரணமாவர் என்று கூறி இராணுவம் நடத்திய தாகுதலில் கொல்லப் பட்டவர்களின் உடல்கள்
பொதுமகக்ளுக்கு காட்டப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதற்கடுத்தாதக
இத்தாக்குதலுக்கு பதிலடியாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மேலும் பிரச்சனையை
அதிகரிக்கிற வகையிலேயே அமைந்துள்ளன்.
பாதுகாப்பு படையினருக்கு
காஷ்மீரில் முழு சுதந்திரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
இதை உணர்ச்சி வசப்பட்ட
பொறுப்பற்ற நடவடிக்கை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஏற்கெனவே காஷ்மீரில்
இராணுவத்திற்கு அதிக அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. நீதிமன்றங்கள் புறக்கணிக்கப்
பட்டு இராணுவம் யாரையும் சந்தேகிக்கலாம். யார் வீட்டையும் சோதனையிடலாம். சந்தேகப்
பட்டால் துப்பாக்கியால் சுடலாம். இராணுவத் தாக்குதலின் போது அப்பாவிகள் உயிரிழந்தால்
அதுகுறித்து விசாரண கிடையாது என பல வகையிலும் இராணுவத்தின் கடுமையான அடக்கு
முறைக்குள் காஷ்மீர் மாநிலம் சிக்கியுள்ளது.
காஷ்மீர் இளைஞர்கள் அதிலும்
குறிப்பாக படித்த இளைஞர்கள் தற்போது அதிகமாக ஆயுதமேந்திய போராட்டக் குழுக்களில்
இணைவதற்கு காரணம் அங்கு மேற்கொள்ளப் படும் இராணுவ நடவடிக்கைகளே என்பதுதான்
அப்பட்டமான உண்மையாகும் .
காஷ்மீரின் தெற்குப்
பகுதியில் கடந்த ஓராண்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர்
கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின்படி, கடந்த
ஆண்டு பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 230 பேர்
கொல்லப்பட்டனர்.
யார் கொல்லப் பட்டாலும்
உடனே அவர்களை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்து விடுவது இராணுவத்திற்கு எளிதாக
இருக்கிறது. ஏனெனில் அங்கு இராணுவத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
காஷ்மீரை சேர்ந்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான குர்ஷீத் வானி, "நான் சமீபத்தில் பார்த்த காணொளியில், இளைஞர் ஒருவர் தான் தினந்தினம் ராணுவ
முகாமுக்கு வரவழைக்கப்பட்டு,
சித்திரவதைக்கு
உட்படுத்தப்படுவதாக கூறுகிறார். அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தமும், சித்தரவதையை அனுபவிக்கும் சூழலே அவர்களை
துப்பாக்கிகளை நோக்கி திசைதிருப்புகிறது" என்று கூறுகிறார்.
காஷ்மீர் மாநிலம் ஒரு
சர்ச்சைக்குரிய பகுதி அதை நம்முடையதாக வென்றெடுப்பதில் நாம் மிகவும் அக்கறை
காட்டியாக வேண்டிய சூழலில் அங்கிருப்பது முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தினால்
அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. போராளிகள் மீது
சீக்கிரம் துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. இதே நடை முறை இந்துக்கள் அதிகமாக
இருக்கிற ஜம்முவிலோ மற்ற பகுதிகளிலோ நடை முறையில் இல்லை.
காஷ்மீரின் நிலவரம் மிகவும்
மோசமாகி வருகிறது என்று பலரும் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
இது வரை இராணுவத்திற்கு
எதிராக கல்லெறிபவர்களை பெரிய தீவிரவாதைகளைப் போல் அரசும் மீடியாக்களும்
சித்தரித்து வருகின்றன. இப்போது இளைஞர்கள் ஆயுதமேந்த தொடங்கியிருக்கிறார்கள் என்று
எச்சரிக்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்
தங்களது மாநிலத்தில்
நிலவும் பிரச்சனைகளுக்கான தீர்வை அரசியலின் மூலமாக எட்டமுடியாத சூழ்நிலை
நிலவுவதால்தான் இளைஞர்கள் கையில் துப்பாக்கிகளை ஏந்துகிறார்கள் என்று விமர்சகர்கள்
கருத்துத் தெரிவிக்கின்றனர்
"தற்போது காஷ்மீரில்
நிலவும் சூழ்நிலை புதியதல்ல. இது 1990ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் செயல்பாட்டின்
நீட்சியாகவே நான் பார்க்கிறேன். துப்பாக்கியின் மூலம்தான் தங்களது பிரச்சனைக்கு
தீர்வு காணமுடியும் என்று இருந்த போராளிகள் எண்ணம் மீண்டும் மேலெழ ஆரம்பித்துள்ளது
என்பதே உண்மை" என்று கூறுகிறார் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் அரசியல்
அறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் நூர் மொஹம்மத் பாபா.
ஆதில்
என்ற ஒரு 21 வயது காஷ்மீரி இளைஞன்
தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டு இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறான். குண்டிபாக் கிராமத்தில் நடைபெற்ற அவனின்
மரணத்திற்கான இறுதித் தொழுகையான நமாஜ்-இ-ஜனாஜா மூன்று முறை நடத்தப்பட்டது. அப்போது
அங்கு பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர். என்று கூறுகிறது பிபிசி நிறுவனம்,
இராணுவ வீரர்களின்
படுகொலைக்காக நாடே கொதிப்படைந்திருக்கிற காஷ்மீரின் ஒரு கிராமத்தில் நாம்
தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறவருக்கு இறுதித்தொழுகை நிறறவேற்ற இத்தனை மக்கள்
திரள்கிறார்கள் எனில் நாம் செல்ல வேண்டிய பாதை எது என்பது குறித்து அரசுகள்
பொறுப்புணர்வுடன் யோசிக்க வேண்டும் என்று அரசியல் ஆயவாளர்கள் கூறுகிறார்க்ள்.
மக்களின் பிரச்சனையை அறிந்துகொள்வதற்கு கூட முயற்சிகள்
எடுக்கப்படாத நிலையில், அங்கு அமைதியை மட்டும்
நிலைநாட்டுவது எப்படி சாத்தியமாகும்? காஷ்மீரில்
நிலவும் பிரச்சனையின் அடிப்படையை புரிந்துகொள்ளாதவரை இதில் எவ்வித
முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது" என்று அவர் மேலும் கூறினார். அரசியல்
விமர்சகர் குர்ஷீத் வானி
காஷ்மீர் முன்னாள்
முதலமைச்சர் பாரூக் அப்துல்லாஹ் காஷ்மீர் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காதவரை
இது போன்ற தாக்குதல்கள் இனி நடக்காது என்று கூற முடியாது என்று கூறியிருப்பது
மிகவும் கவனிக்கத் தக்கது . கவலைய அளிக்க கூடியது.
கடந்த சில மாதங்களாக
தினசரிப் பத்ரிகைகளில் பெரும்பாலும் தினசரி காஷ்மீரில் எண்கவுண்டரில் இன்று 4
தீவிரவாதிகள் பலி 2 பேர் பலி 5 பேர் பலி என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே
இருந்ததை பத்ரிகைகளை வாசிப்பவர்கள் கவனித்திருக்க முடியும்.
அரசியல் நோக்கர்கள் என்ன
கூறுகிறார்கள் என்றால்.
இப்போது 40 வீரர்கள்
கொல்லப் பட்ட போது நாம் காட்டுகிற இந்த பதற்றத்தில் சிறிதளவையாவது ஆண்டு முழுவதும்
காஷ்மீரிகள் கொல்லப்பட்டார்கள் என்ற என்று வருகிற செய்திக்க் நாம் காட்டுவோமானால்
நிச்சயம் காஷ்மீரில் அமைதி திரும்பும். காஷ்மீரின் கவலையும் தீரும் . இந்தியாவின்
கவலையும் தீரும் என்கிறார்கள்.
ஒவ்வொரு தடவையும்
காஷ்மீரில் பிரச்சனை ஏற்படுகிற போது இந்துதுத்துவ சக்திகள் அதை பாக்கிஸ்தானோடு
தொடர்பு படுத்தி பிரச்ச்னையை திசை திருப்பவே முய்றசி செய்கிறார்கள்:. இந்த
முறையும் அதுவே பிரமாதமாக நடக்கிறது.
இப்படி திசை திருப்பது நமது
அரசியல் வாதிகளுக்கு எளிதாக இருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையை கவனிப்பதை விட இது
எளிதாக இருக்கிறது.
சில காலம் நாட்டிற்குள் ஒரு
பகைமை சூடு பரவ மட்டுமே இது பயன்படும்.
பிரச்சனையை முழுவதுமாக
தீர்க்க இது பயன்படாது.
நமது அரசின் தலைவர்களுக்கு
இந்த சிந்தனை வராத வரை நாம் இறந்தவர்களுக்காக காஷ்மீரிலும் நாடு முழுவதிலும்
இரங்கற் கூட்டங்களைத் தான் நடத்திக் கொண்டிருக்க வேண்டியதாகும்.
எந்த ஒரு நாட்டுக்கும் நீதி
உணர்வு மிக்க ஆட்சியாளர்களே மழையை விட அதிகம்
தேவையுடையவர்க். ஆட்சியாளர்கள் நீதியுணர்வுள்ளவர்களாக இருந்தால் நாடு எவ்வளவு
பெரிதாக இருந்தாலும் நிம்மதியாக இருக்கும்.
உலகின் பரந்த பேரரசுகள்
ஒன்றாக இருந்தது . அப்பாஸிகளின் பேரரசு.
சுமார் ஒரு கோடியே ஐம்பது
இலட்சம் கீலோ மீட்டர் விரிவடைந்த பேரரசு அது.
அதன் அரசராக இருந்தார்.
ஹாரூன் ரஷீது.
அவரது ஆட்சிக் காலத்தில்
அவரது தலை நகரத்தில் ஒரு கிருத்துவ பெண்ணின் இடத்தை அவருக்கு இரு மடங்கு விலை
கொடுத்து விட்டு வலுக்கட்டயாமாக பறித்துக் கொண்டார் தலை நகரின் கவர்ணர். அங்கே ஒரு
பள்ளிவாசலைக் கட்டினார். சில காலம் பொருத்துக் கொண்ட அந்தப் பெண் எப்படியோ
ஜனாதிபதியை அணுகி தனது மனக் குறையை முறையிட்டார். மன்னர் கவர்ணரைக் கண்டித்தார்.
பக்தாது நகரில் அந்தப் பள்ளிவாசல் உடைக்கப் பட்டது. அந்த பெண்மணிக்கு அவரது வீடு
திரும்ப கட்டித்தரப்பட்டது. அவளுக்கு கொடுக்கப் பட்ட தொகை திரும்ப பெறப்படவில்லை.
முதல் அப்பாஸீகள் கீ பி 750
முதல் 1517 வரை அதாவது சுமார் 700 வருடங்கள் பூமியை கட்டியாண்டார்கள்.
நிலையாக ஆள்வதற்கான
தத்துவம் இது. இதைப்புரிந்து கொள்ளாதவர்கள் குறுக்குவழிகளில் மக்களிடையே பகையை
வளர்ந்து மேலாதிக்கம் செய்ய நினைக்கிறார்கள்>. நிச்சயம் அவர்கள் நீண்ட வெற்றியை
ஒரு போதும் பெற முடியாது, ஹிட்லரை ப் போல முசோலினியை போல மலை உச்சிக்கு சென்று
கீழே விழுந்து அழிவார்கள்.
அல்லாஹ் நமது நாட்டை பாதுகாப்பானாக!
நமது நாட்டின் அமைதியையும் செழிப்பையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! நாட்டை பாதுகாக்க எல்லையில் நிற்கிற வீரர்களுக்கு அவன் துணையிருப்பானாக! அவ்ர்களது உயிர்கள் அற்பமாக பலியாகாதவாறு
நடந்து கொள்ள அரசு தலைமைகளுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை தந்தருள்வானாக! மக்களுக்கும்
தீயவர்களுக்கும் வித்தியாசம் பார்க்கிற பக்குவத்தை அல்லாஹ் நமது இராணுவத்திற்கு
வழங்குவானாக!
காஷ்மீரி மக்கள் நிம்மதியாக
வாழ அல்லாஹ் தவ்பீக் செய்வானாக! இந்திய நாட்டில் சமூகங்களுக்கிடையே அமைதி நிலவவும்
நல்லிணக்கம் ஒங்கவும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment