வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 14, 2019

அன்பை வெளிப்படுத்தும் அழகான வழி முறைகள்



உலகம் முழுவதும் நேற்று வாலண்டைன் டே கொண்டாடப் பட்டது.
கிருத்துவ மதத்திற்காக உயிர் துறந்த ரோம் நாட்டைச் சார்ந்த ஒரு பாதிரியின் பெயர் வாலண்டைன் என்பது. அவர் கொல்லப் பட்டதை அன்பின் வெளிப்பாடாக கருதும் பழக்கமும் வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்ளும் வழக்கமும் கிருத்துவர்களிடம் உருவானது. இது வாழ்த்து அட்டைகள் விற்கும் கம்பெணிக்காரர்களின் முயற்சியால் உலகம் முழுவதிலும் பிரபரலம். அடைந்தது. கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளுக்கு அடுத்தபடியாக மேற்குலகில் வாலண்டைன் தின வாழ்த்து அட்டைகள் தான அதிகமாக விற்பனயாகின்றன.
இளம் ஆண்களும் பெண்களும் தமது காதலை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக இந்நாளை பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்த போது அதில் பல்வேறு ஒழுக்ககேடான – பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளுதல் – தனிமையில் சந்தித்தல் போன்ற நடவடிக்கைகள் ஏற்படவும் வழிவகுத்தது.
அன்பின் அடிப்படையில் பரிசுகளை வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வரவேற்கத் தக்கதே என்றாலும் இந்த நாள் ஒழுக்க கேடான நடவடிக்கைகளுக்கு அதிகம் துணை போவதால் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இப்படி ஒரு நாளை கொண்டாடுவதை இஸ்லாமிய வழிமுறை அல்ல என பல்வேறு இஸ்லாமி அறிஞர்களும் அறிவித்தனர்.
சவுதி அரேபியாவில், 2001 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில், வாலண்டைன் தின பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடை செய்யப் பட்டது. வாழ்த்துக்களை அல்லது அன்பை பரிமாறிக் கொள்ளுதல் என்னும் பெயரில் ஒழுக்க வரையறைகள் பெருமளவில் மீறப்பட்டதே இதற்கு காரணம்
அன்பே ஆதாரம்.
இந்த உலகில் அன்பை தரவும் பெறவுமே பிறதோம்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:80
என்கிறார் வள்ளுவர்.

எனவே அன்பு செலுத்துதல் என்பது வாழ்கையின் ஆதாரம்.
நம்மீது அன்பு செலுத்தக் கூடியவர்கள் அல்லது நாம் அன்பு செலுத்தக் கூடிய ஒருவர் இல்லை என்றால் வாழ்கையில் எதுவுமே இல்லை.
அன்பு செலுத்தவும் அன்பை பெறுவதற்குமான ஒரு சூழலை நம்மைச் சுற்றி உருவாக்கிக் கொள்ளவேண்டியது நமது கடமை.
ஒரு காரியத்தினால் சிலரின் வெறுப்பை சம்பாதித்துக்  கொள்ள வேண்டியது வரும் எனில் அல்லாஹ்விற்காக என்றிருந்தால் அன்றி அத்தகைய வெறுப்பை உருவாக்கும் காரியங்களில் இருந்து விலகிக் கொள்ள வேண்டியதும் நமது பொறுப்புணர்வாகும்.
அன்பே பிரதானம் என்பதை உணர்த்தும் வகையில் தான் பிஸ்மில்லாஹ்வில் ரஹ்மான் ரஹீம் என்ற இருவார்த்தகள் இடம் பெற்றிருக்கின்றன.
இரண்டும் ஒரே மூலத்திலிருந்து பீறந்த வார்த்தைகள் தான்.
தனது மார்க்கத்தை யாரேனும் நிராகரித்தால் அதற்கு பதிலாக தன்னை நேசிக்கிற ஒரு கூட்டத்தை தன்னால் கொண்டு வர முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான். அந்த நேசத்தால் அம்மக்கள் அல்லாஹ்விற்காக எதையும் செய்வார்கள் என்று மேலும் கூறுகிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (54)

அன்பே பிரதானம் என்பதை இந்த வசனம் மையப் படுத்துகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை ரஹ்மத் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் .
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
ரஹ்மத் என்பது அன்பின் உச்ச பட்ச நிலையாகும்.

அல்லாஹ் பேரன்பாளன் என்பது பல வகையில் நமக்கு உண்ர்த்தப் பட்டிருக்கிறது.
·        عن أبي هريرة، قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((لما قضى الله الخلق كتب كتابًا، فهو عنده فوق عرشه، إن رحمتي سبقت غضبي))؛ متفق علي

·        عن أبي هريرة  ، قال: سمعت رسول الله - صلَّى الله عليه وسلَّم - يقول: ((جعل الله الرحمة مائة جزء؛ فأمسك عنده تسعة وتسعين جزءًا، وأنزل في الأرض جزءًا واحدًا، فمن ذلك الجزء يتراحم الخلق، حتى ترفع الفرس حافرها عن ولدها؛ خشية أن تصيبه))؛ أخرجه البخاري

·        عبدالله بن أبي أوفى الأسلمي: قال خرجت فإذا رسول الله - صلَّى الله عليه وسلَّم - وأبو بكر وعمر قعودًا، وإذا غلام صغير يبكي، فقال رسول الله - صلَّى الله عليه وسلَّم – لعمر: ((ضمَّ الصبيَّ إليك؛ فإنه ضالٌّ))، فضمَّه عمر إليه، فبينا نحن قعود إذ أمٌّ له تُوَلْوِل - أظنُّه قال: - وتقول: وابنيَّاه! وتبكي، فقال رسول الله - صلَّى الله عليه وسلَّم - لعمر: ((نادِ المرأة فإنها أمُّ الصبي))، وهي كاشفة عن رأسها ليس على رأسها خمار جزعًا على ابنها، فجاءت حتى قبضت الصبي من حجر عمر، وهي تبكي والصبي في حجرها، فالتفتتْ فلمَّا رأتْ رسول الله - صلَّى الله عليه وسلَّم - قالت: واحرباه ألا أرى رسول الله - صلَّى الله عليه وسلَّم - فقال رسول الله - صلَّى الله عليه وسلَّم - عند ذلك: ((أترون هذه رحيمة بولدها؟))، فقال أصحابه: بلى يا رسول الله، كفى بالمؤمن رحمة، فقال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((والذي نفس محمد بيده، الله أرحم بالمؤمن من هذه بولدها)).

முஹ்மமது ரஸூல் (ஸல்) அவர்களை அல்லாஹ் உம்மத்தின் மீது பேரன்பு கொண்டவர் என்கிறான் அல்லாஹ்
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ (128

இன்று உலகில் ஒரு மனிதரை வாழ்த்துகிற புரட்சித்தலைவர் , எழுச்சித்தமிழர். போர்ப்படைத் தளபதி, வழிகாட்டி. சிந்தனைச் சிற்பி என்றெல்லாம் எத்தனையோ வகையில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அல்லாஹ் தன்னையும் தனது நபியையும் ரஹ்மத் என்ற வார்த்தைகளில் அறிமுகப்படுத்துகிறான் என்பது அன்பே இந்த உலகில் பிரதானமானது என்பதை உணர்த்துகிறது மற்றெதையும் விட.
அன்பு காதல் என்ற உடனே ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிப்பது தான் என்று நாம் நினைத்து விடுகிறோம்.
நாம் அன்பு செலுத்துவதற்கு இது மிகச் சின்ன எல்லையாகும். அன்பின் எல்லைகள் விசாலமானவை
இஸ்லாம் முதலில் அல்லாஹ்வை நேசிக்கச் சொல்கிறது. அவனே படைத்தவன் பரிபாலிப்பவன். ஒன்றின் மீது நாம் அன்பு செலுத்த ஒரு காரணம் இருக்கும் என்றால் அல்லாஹ்வின் மீது அன்பு செலுத்த நூறு காரணம் இருக்கிறது. அந்த காரணங்களை புரிந்து கொள்ளும் முஃமின்கள் அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்களாக இருப்பார்கள்.
وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَاداً يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آَمَنُوا أَشَدُّ حُبّاً لِلَّهِ
اول ما يطلب من الإنسان المسلم أن يحب الله –عز وجل-، هذا هو أعلى أنواع الحب، 

இறைநேசப் பெண்மணிகளில் முக்கியமானவர் ராபியத்துல் பஸ்ரிய்யா அம்மையார். அவர் ஜெரூசலத்திற்கு வந்து ஜைத்தூன் மலையில் தனித்திருந்த போது , ஜெரூசலத்தின் அரசன் அவரிடம் திருமணம் பேசினார்.  நீங்கள் வேறு எந்தப் பணியும் எனக்காக செய்ய வேண்டியதில்லை நான் ஒரு சாலிஹான பெண்ணின் கணவர் என்ற் பெருமை கிடைத்தால் போதும் நாளை மறுமையில் நான் தப்பித்து விடுவேன்.என்றார்.
அதை மறுத்த ராபியா அம்மா உங்களுக்கு நான் எதையும் செய்ய வேண்டாமா ? ஒரு மனைவி தன்னுடைய கணவரை நேசிப்பது முதன்மை கடமை அல்லவா ? என்று கேட்டார் .

وعلي الزوجة ان تحب زوجها

 பிறகு ராபியா அம்மா கூறினார்கள்>

ولا بد لي أن احب غيرا إلا الله  

 அல்லாஹ்வை அவனது தன்மைகளை மனமார உணர்ந்திருக்கிறவர்களின் முதல் தேர்வு அல்லாஹ்வாககவே இருக்கும். .

كان النبي -عليه الصلاة والسلام- في دبر كل صلاة يقول: اللهم ربنا، ورب كل شيء ومليكه، أنا شهيد أنك الله وحدك لا شريك لك، اللهم ربنا ورب كل شيء ومليكه أنا شهيد أن محمداً عبدك ورسولك، اللهم ربنا ورب كل شيء ومليكه أنا شهيد أن العباد كلهم إخوة. الإخوة بين العباد، والأخوة تتضمن معنى المحبة.
அல்லாஹ் நிகழ்த்தும் காரியங்கள் அனைத்துமே நன்மையானது தான். அதனால் எந்த நிலையிலும் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும்.

ஒரு சுவையான தகவல் . ஒ ரு ஆள் தனது இரண்டு மகள்களில் ஒருத்தியை விவசாயிக்கும் மற்றொருத்தியை மண்பாண்டம் செய்பவருக்கும் திருமணம் செய்து கொடுத்தார், பிறகு அவ்விருவரையும் பார்க்கச் சென்றார். முதலாமவள் சொன்னாள் மழை பெய்தால் வாழ்கை மற்றொருத்தி சொன்னாள் வெயிலடித்தால் வாழ்கை . வீடு திரும்பிய அந்த மனிதர் தன் மனைவியிடம் சொன்னார், மழை பெய்தாலும் நீ அல்லாஹ்வுக்க் நன்றி சொல் மழை பெய்யாவிட்டாலும் நீ அல்லாஹ்வுக்கு நன்றி சொல்!

رجل زوج إبنتيه واحدة بفلاح والثانية بصاحب مصنع فخار .سافر الرجل بعد عام ليزور إبنتيه  فقصد أولا إبنته زوجة الفلاح  التي إستقبلته بفرح وحفاوة وسرور  وعندما سألها عن أحوالها قالت :{ إستأجر زوجي أرضا وإستدان ثمن البذور وزرعها فان أمطرت الدنيا فنحن بخير
وإن لم تمطر فاننا سنتعرض لمصيبة !!! }

ترك الرجل إبنته الأولي وذهب لزيارة إبنته الثانية زوجة صاحب الفخار  التي إستقبلته بفرح وسرور  وفي جوابها عن سؤاله التقليدي عن الحال والأحوال  قالت : { إشترى زوجي تراب بالدين وحوله إلى فخار وتركه تحت الشمس ليجف فأن لم تمطر الدنيا فنحن بألف خير
وإن أمطرت الدنيا فأن الفخار سيذوب وسنتعرض لمصيبة

ولما عاد الرجل إلى زوجته أم البنات سألته عن أحوال بناتها فقال لها :{ إن أمطرت فاحمدي الله وإن لم تمطر فاحمدي الله
[
الحمد لله على كل حال ]

அல்லாஹ்வுக்கு அடுத்து நாம் அதிகம் நேசிக்க வேண்டியது முஹம்மது நபி (ஸல்) அவர்களை

جاءه رجل وقال: يا رسول الله، متى الساعة؟ فقال: وماذا أعددت لها؟ قال: والله ما أعددت لها كثير صلاة، ولا صيام غير أني أحب الله ورسوله، فقال: أبشر أنت مع من أحببت، قال أنس: فما فرح الصحابة بشيء فرحهم بهذا الحديث.
நமக்கு கிடைத்திருக்கிற வாழ்கையை நாம் நேசிக்க வேண்டும்.  எவ்வளவு இன்பங்களை அனுபவிக்கிற வாய்ப்பு

நல்ல உணவு, ஓய்வு. அம்மா அத்தா மனைவி, பிள்ளளகள் வீடு வியாபாரம் அதிகாரம் செல்வாக்கு. குர் ஆன் கஃபா என்று நமக்கு கிடைத்திருக்கிற ஒவ்வொன்றையும் என்னிப் பார்த்து இந்த வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதையும் இதில் நன்மைகளை செய்வதற்கான வாய்ப்புக்களையும் உணர்ந்து இந்த வாழ்கையை நாம் நேசிக்க வேண்டும்.

கீ. பீ மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மானி என்ற பாரசீக தத்துவ ஞானி இந்த உலகம் கெட்டது உலக வாழ்கை கெட்டது . இதிலிருந்து சீக்கிரம் விடுபட்டு விட வேண்டும். என்றான். அது தவறானது. உலகம் நல்லது .உலக வாழ்கை நல்லது என நாம் நினைக்க வேண்டும் அதை நேசிக்க வேண்டும்.


(مانى) الفيلسوف الفارسي القديم، كان يعتبر الحياة شراً والعالم شراً،ويجب التخلص من هذا الشر بالتعجيل بفناء العالم، بعدم الزواج، بعدم الاستمتاع بالحياة، لينتهي الناس من شر الحياة. لا، المسلم يرى العالم خيراً، ويرى أن كل يوم يعيشه هو لن يزيد المؤمن عمره إلا خيراً.
பெற்றோர்களின் மீது நேசம்

நமது அடுத்த நேசத்திற்குரியவர்கள் நமது பெற்றோர்களே!’
அல்லாஹ் தன்னோடு இணைத்து பல இடங்களிலும் குறிப்பிடுவது பெற்றோர்களை

أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ [لقمان:14]

பெற்றோர்களால் நமக்கு கிடைத்த அன்பும் பரிவும் உபகாரமும் எந்த நிலையிலும் மறந்து விடக் கூடாது.

ஒன்றை யோசித்தால் போது மானது. நெருக்கடிகள் ஏற்படும் எனில் பிள்ளைகள் தங்களுடைய நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெற்றோர் நலனை விட்டுவிடுவார்கள். அதே நேரத்தில் பெற்றோர்களோ நெருக்கடிகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தங்களுடைய நலனை விட்டுக் கொடுத்து பிள்ளைகளுடைய நலனை பேணுவார்கள்.

மனைவியை நேசிக்க வேண்டும்.

காதலிக்கிற ஒரு பெண்ணுக்கு எந்த முக்கியத்துவம் தரப்படுகிறது.
அவள் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
அவள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அவள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம். கேட்க மாட்டாளா என்று ஏங்கி நிற்கிறோம்.
அவள் முகம் சுளித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

மஜ்னூ லைலாவின் வீட்டுச் சுவற்றுக்கு முத்தமிட்டான் .’ இந்த வீட்டிற்குள் தானே அவள் வசிக்கிறாள் என்றான்.

மஜ்னு வின் தெரு வழியாக நடந்து வந்த நாயின் பாதங்களுக்கு முத்த மிட்டான்.

தொழுகையாளிக்கு முன்னாள் நடந்து சென்றான். என் லைலாவின் நினைவினால் உன்னை கவனிக்க வில்லை என்றான்.

காதலர்கள் தம் காதலிக்காக என்னவெல்லாம் செய்வார்களோ அதை திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கு செய்ய வேண்டும்.

மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்திய அற்புதமான திருக்குர் ஆண் வசனம் இது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا النِّسَاءَ كَرْهًا ۖ وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا (19)

மனைவி அன்பு செலுத்தப் பட வேண்டியவள். அதிகாரம் செய்யப் பட வேண்டியவள் அல்ல.
அவளிடம் நல்ல முறையில் நடந்த கொள்ள வேண்டும். தீய முறையில் அல்ல.
அவளை சகித்துக் கொள்ள வேண்டும்.  ஒதுக்கி விடக் கூடாது என்ற
இந்த அறிவுரைகள் அன்பை வெளிப்படுத்டும் அற்புதமான வழிமுறைகளாகும்.

பெக்கே கொடுப்பது , கீ செயின் கொடுப்பது, சாரி அல்லது நகை வாங்கிக் கொடுப்பது. அல்லது நல்லதொரு ரெஸ்ட்டாரெண்டில் உணவு வாங்கிக் கொடுப்பதை விட இந்த இயல்புகளை கடைபிடிப்பது அன்பை வெளிப்படுதுதும் அற்புதமான வழிகளாகும்.

நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்ததும் பல் துலக்குவார்கள்.
எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரிப்பார்கள்
மனைவிய சந்தோசப்படுத்தக் கூடிய வார்த்தைகளை பேசுவார்கள்.
தினசரி அஸர் தொழுகைக்குப் பின் அனைத்து மனைவியரையும் ஒரு தடவை பார்த்து விடுவார்கள்.
அவர்களது  உறக்கத்திற்கு மதிப்பளிப்பார்கள்.
அவர்களது வயிற்றுப் பசியை கவனத்தில் வைத்திருப்பார்கள்.
மனைவிக்கும் தனக்கும் இடையே பிறர் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். ஒரு முறை ஆயிஷா ரலி அவர்கள் பெருமானாரிடம் குரல் உயர்த்திப் பேசிக்கொண்டிருப்பதை அறிந்து அபூபக்கர் ரலி அவர்கள் ஆயிஷா அம்மாவை அடிக்க முயன்றார்கள் .அவர்களுக்கு நடுவே வந்து நின்று கொண்ட பெருமானார் தனது மனைவியை அபூபக்கர் ரலி அடிப்பதை தடுத்தார்கள் என்பது மட்டுமல்ல. எப்படி நான் காப்பாற்றினேன் பார்த்தாயா என்று மனைவியிடம் இனிமையாக பேசவும் செய்தார்கள்

திருமணம் முடிக்காத முஸ்லி  ஆண்கள் அண்ணியப் பெண்களை விரும்புவார்கள் என்றால் அந்த விருப்பத்தை உரிய மரியாதையான முறையில் வெளிப்படுத்தி அந்தப் பெண்களை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுவே காதலிக்க சிறந்த வழியாகும்.

قال رسول الله صلى الله وعلية وسلم (ما رأيت للمتحابين خيرا من النكاح

திருமணத்திற்கு முந்தைய தனியான சந்திப்புக்கள் உரையாடல்கள் அனைத்தையும் மார்க்கம் வன்மையாக தடை செய்திருக்கிறது.

திருமணம் நிச்சயமான நிலையில் போனில் பேசிக் கொள்ள அனுமதிப்பது பெற்றோர் மீது குற்றமாகும்.

சமீபத்தில் நமது கோவையில் திருமணம் நிச்சயம் பெரிய அளவில் நடந்து மாப்பிள்ளையும் பெண்ணூம் பேசிக் கொள்ள அனுமதிக்கப் பட்ட நிலையில் பெண் வெளியிட்ட ஒரு ரகசியத்தால் திருமணம் நின்று போனது.

இளைஞர்களுக்கு மிக முக்கிய அறிவுரை

·         காதலிக்கும் சிந்தனை இல்லாத பெண்களை திசை திருப்பாதீர்கள்
·         காதலிக்க மறுக்கும் பெண்களை வற்புறுத்தாதீர்கள்
·         பெண்களை காதலிப்பது மட்டுமே இளமையின் அடையாளம் என்று நினைத்து விடாதீர்கள்.
·         வாழ்கையில் சாதிப்பதற்கு பல வழிகள் உண்டு . சாதியுங்கள் எல்லாம் உங்களை தேடி வரும்.


காதலியிடம் மட்டுமே அன்பு செலுத்துவது . காத்லியை மற்றுமே போற்றுவது என்று மாய்ந்து கொண்டிருக்கிற இன்ற உலகிற்கு நபி நாயகம் (ஸ்ல்) அவர்கள் வழிகாட்டுகீறார்கள்.

மனிதன் தன்னை சுற்றியிருக்கிற மலை மட்டைகள் பிராணிகளைக் கூட நேசிக்க வேண்டு. அவற்றின் மீதும அன்பு செலுத்த வேண்டும்.

 إن النبي -عليه الصلاة والسلام- حينما جاء من إحدى الغزوات، وظهر جبل أحد، قال لهم (هذا أحد، جبل يحبنا ونحبه) يعني شوف إذا.. هذه العبارة الرقيقة مع أنه قد وقعت بجواره معركة، وخسر فيها المسلمون، إنما جبل يحبنا

அன்பை வெளிப்படுத்துவதில் இஸ்லாம் ஒரு அளவு கோலைச் சொல்லிக் கொடுக்கிறது. யாரை எதை நேசித்தாலும் அது அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுக்கு பிரியமானதாக இருக்கட்டும்.

இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த ஒரு செய்தியை நாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும் காதலில் ஏற்படும் அனைத்து தீமைகளூம் விலகி விடும்.

அது அந்த நேசத்திற்கு அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும்.  

جاء في صحيح مسلم "أن رجلاً أراد أن يزور رجلاً، فأرصد الله له على مدرجته ملكاً في الطريق في صورة رجل، وسأله: أين تذهب؟ قال: أريد أن أزور أخي فلاناً، قال: ألقرابة بينك وبينه؟ قال: لا،قال: أفبنعمة له عندك؟ يعني قدم لك خدمة فأنت رايح يعني تكافئه خدمة بخدمة وإحساناً بإحسان، قال: لا، قال: فما الذي..؟ قال:أحبه لله، قال: أبشر فإن الذي تحبه من أجله بعثنى لأبشرك بأنه يحبك لحبك إياه)
மஹ்ஷரில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் பெறும் ஏழு பேரில் ஒருபிரிவு .
: "رجلان تحابا في الله -عز وجل- اجتمعا عليه، وتفرقا عليه"
ஒருவரை நேசிக்கிற போது அது எந்த அடிப்படடயில் அமைய வேண்டும் என்பதை விளக்கிய இஸ்லாம்

நேசத்தை வெளிப்படுத்தவும் அதை நெருக்கமாக்கிக் கொள்ளவும் வழி வகுத்தது.

நேசத்தை வெளிப்படுத்து மாறு பெருமானார் கூறினார்கள். அவர்களே வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள்
عن معاذ بن جبل رضي الله عنه، أنَّ رسول الله صلى عليه وسلم أخذ بيده، وقال((يا معاذ، واللَّه إنِّي لأُحبُّك، واللَّه إنِّي لأُحبُّك، فقال: أوصيك يا معاذ، لا تدعنَّ في دبر كلِّ صلاة تقول: اللَّهمَّ أعنِّي على ذكرك، وشكرك، وحسن عبادتك
உன்னை நேசிக்கிறேன். உங்களை எனக்குப் பிடிக்கும் நான் உங்களது ரசிகன் என்ற வார்த்தைகளை சொல்லி விட வேண்டும்.
அன்பளிப்புக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். அன்பளிப்பு ஒரு தரப்பிலிருந்து மட்டுமே இருக்க கூடாது.  குறைந்த பட்சம் சலாமை அதிகமாக பரிமாறிக் கொள்ள வேண்டும். ஒரு போன் செய்து சலாம் சொல்லிக் கொள்வது கூட அன்பை அதிகரிக்கும்.

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم((لا تدخلون الجنَّة حتَّى تؤمنوا، ولا تؤمنوا حتَّى تحابُّوا، أولا أدلُّكم على شيء إذا فعلتموه تحاببتم؟ أفشوا السَّلام بينكم

நாம் நேசிக்கிறவர்களை பற்றி தப்பெண்ணம் பொறாமை கொள்ளக் கூடாது. கோள் புறம் பேசக் கூடாது. அவர்களுக்கு தீமை செய்யக் கூடாது.  

أقل المراتب هي سلامة الصدر من الحقد والغل والحسد كما قال الله -تعالى- (ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلاً للذين آمنوا)
دب إليكم داء الأمم من قبلكم الحسد والبغضاء والبغضاء هي الحالقة لا أقول تحلق الشعر ولكن تحلق الدين"…
நேசிப்பவர்கள் மீது காட்டுகீற வன்மம் இன்றைய கால கட்டத்தில் பெரும் குற்றங்களுக்கு காரணமாகி வருகிறது.

அல்லாஹ்விலிருந்து மலை செடி கொடிகள் வரை அனைத்தையும் நேசித்து வாழ்வோம்.
நேசமே வாழ்கை.
அல்லாஹ் சிறந்த நேசத்திற்கு தவ்பீக் செய்வானாக!

No comments:

Post a Comment