வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 28, 2019

பள்ளிவாசல்கள் மீது பயங்கரவாத தாக்குதல் ; முஸ்லிம் உலகம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன ? 2




கடந்த மார்ச் 15 ம் தேதி நியூஜிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் அந்நூர் பள்ளிவாசலிலும் , லின்வுட் இஸ்லாமிய மையத்திலும் நடை பெற்ற தாக்குதல்களில் சுமார் 50 பேர் ஷஹீதானார்கள். சுமார் ஐம்பது பேர் காயமடைந்தனர். சுமார் இருபது நபர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது

முஸ்லிம் உலகத்தைப் பேரதிச்சிக்கு உள்ளாக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலிலிருந்து முஸ்லிம் உலகம் புரிந்து கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய பாடங்களை இந்த ஜும் உரையில் பார்க்கிறோம்.

1.   பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள். இஸ்லாமின் எதிர்ப்பாளர்களுக்கு கிடைக்கிற மகிழ்ச்சி தற்காலிகமானதே  . இஸ்லாம் அதிக மரியாதையை பெறும்.


முஸ்லிம்களுக்கு சிறிய இழப்பிற்கு பிறகு பெரும் வெற்றி காத்திருக்கிறது.
மற்றவர்களுக்கு சிறிய வெற்ற்க்குப் பிறகு பெரும் தோல்வி காத்திருக்கிறது.


 الَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا وَهُم بِالْآخِرَةِ كَافِرُونَ (45

.யஜீதின் ஆட்சியை அப்துல்லாஹ் பின் ஜுபர் ரலி அவர்கள் எதிர்த்தார்கள். அவரின் கட்டுப்பாட்டில் மக்கா நகரும் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலும் இருந்தன, அவரை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஹஷீன் பின் நுமைரின் தலைமையில் ஒரு படை அனுப்பப் பட்டது. அந்தப் படை மக்காவின் பிரதான பகுதிகளை கைப்பற்றி மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசல் வரை வந்தது. அருகில்ரிந்த ஜபல அபூ குபஸ் மலை மீது கல்லெறியும் கவன் இயந்திரத்தை வைத்து நெருப்புக் கற்களை கஃபாவின் மீது எறிந்தார்கள் கஃபா தீ பிடித்து எறிந்தது. அதன் சுவர்கள் சிதிலமடைந்தனர். இதற்குள்ளாக சிரியாவில் யஜீது மவ்தாகி விட்டதாக செய்தி வந்தது,

உடனடியாக நடந்த மாற்றம் விந்தையானது.

அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்களை எதிர்த்து மின் ஜனீக கல்லெறி இயந்திரத்தை பயன்படுத்தி கஃபாவை தீக்கிரையாக்கிய படையின் தளபதி ஹஷீன் அப்துல்லாஹ் பின் ஜுபைருக்கு செய்தி அனுப்பினார். என்னை இரவில் இரக்சியமாக சந்தியுங்கள் நான் உங்களுக்கு பை அத் செய்து தருகிறேன். என்னோடு இருப்பவர்களும் உங்களுக்கு கட்டுப்ப் படுவார்கள் . வாருங்கள் சிரியாவுக்கு சென்றால் நீங்கள் தான் அடுத்த அதிபர் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரலி அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள வில்லை என்பது வரலாற்றில் நிகழ்ந்த வேடிக்கை.

فبعث الحصين لابن الزبير أن يلتقيه في ليلته، ففاوضه في الخلافة وأن ينضم الحصين بمن معه من جند الشام إلى صفوفه، ويخرجوا للشام فلا يخالفهم أحد، 

பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் தொடுத்தவர்களின் நிலை  அடுத்த நாளில் மாறியது.

ஹிஜ்ரீ 13 ம் நூற்றாண்டில் தாத்தாரியங்கள் சென்ற இடங்களிலெல்லாம் பள்ளிவாசல்களை சிதைத்தார்கள். தாத்தாரிகளுக்குப் பிறகு இஸ்லாமிற்கு இனி எதிர்காலம் இல்லை என்று கூறப்பட்டது. . ஆனால் 40 வருடங்களுக்குள் தாத்தாரியர்களின் அட்டகாசங்கள் முடிவுக்கு வந்தன. தாத்தாரிரியர்களின் சந்ததிகள் வந்த மன்னர் பரக்கத் கான் இஸ்லாமை தழுவினார். பள்ளிவாசலை இடித்தவர்களே கட்டிக் கொடுத்தார்கள்.

1917 ரஷ்யாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்ட போது பால்டிக் பகுதிகளை சார்ந்த பல இஸ்லாமிய நாடுகளை கைப்பற்றினார்கள். தஜிகிஸ்தான் உஸ்பெகிஸ்தான் துருக்கமெனிஸ்தான் என பல நாடுகள் கம்பூனிசத்தின் பிடியில் சிக்கின. அந்த நாடுகள் ஒவ்வொன்றும் இஸ்லாமின் கேந்திரங்களாய் திகழ்ந்தவை . இஸ்லாமிய அறீவுலகிற்கும் கலாச்சாரத்திற்கும் மகத்தான பங்காற்றியவை. அங்கிருந்த கமபீரமான பள்ளிவாசலக்ல அனைத்தையும் காம்ரேட்டுகள் மூடினார்கள். . அது நிலைத்ததா ?

உலக வரை படத்தையே மூடி இருந்த சோவியத் ரஷியா 1990 களில் காணாமல் போனது, தஜிகிஸ்தானில் அப்போது இரண்டே பள்ளிவாசல்கள் விட்டு வைக்கப் பட்டிருந்தன. ஆனால் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இரண்டே ஆண்டுகள் இரண்டாயிரத்து ஐநூறு பள்ளிவாசல்கள் அங்கு உருவாயின.

1990  ஆக்ஸ்ட 3 ம் தேதி இலங்கையின் கிழக்குப் பகுதியான காத்தான் குடியில் கிரவல் தெருவில் இருந்த மீரா பள்ளிவாசலிலும் ஹுசைனியா பள்ளிவாசலிலும் முஸ்லிம்கள் இஷா தொழுகையில் இருந்த போது விடுதலைப் புலிகள் தாக்கினார். இதில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் ஷஹீதானார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கம் நாசாமானது மட்டுமல்ல இலங்கையில் ஒரு நீண்ட காலம் தமிழ் மக்களின் வாழ்வும் நாசமானது.

இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் 1992 ம் ஆண்டு பாபரீ மஸ்ஜிதை தாக்கி உடைத்தனர். அதே போல ஐதராபாத் மக்கா மஸ்ஜித் போன்ற பள்ளிவாசலிலும் குண்டு வைத்து மக்களை அழித்தனர். இதே போல இலங்கையில் தம்புல்லை பகுதியிலிருந்த பள்ளிவாசலை புத்த தீவிரவாதிகள் கடுமையாக தாக்கினர். இதற்கு பின்னர் இஸ்லாம் தளர்ச்சியடைந்து விட வில்லை. பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.

இஸ்லாமின் எதிர்ப்பாளர்கள் தமது சொந்த ஆதாயத்திற்காக இஸ்லாமை எதிர்க்கிறார்களே அன்றி. இஸ்லாமின் மீது குறை இருப்பதனால் இல்லை,.

அத்தைகைய தீய சக்திகளின் எண்ணம் ஒரு போதும் வெற்றி பெறாது. சிறிது காலம் இத்தீயவர்களது கை ஓங்கியிருக்கலாம். ஆனால் இறுதியில் இஸ்லாம் வெற்றிபெறும்.

முஸ்லிம்கள் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நினைவில் வைத்திருக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது நிதானம் காக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் சில இழப்புக்களை நிச்சயம் ஏற்படுத்தும் என்றாலும் அதில் முஸ்லிம்கள் பொறுமை காப்பார்கள் என்றால் பின்னால் ஏற்படக் கூடிய விளைவுகள் அபரிமிதமாக இருக்கும்.

நேரடி யுத்தம் அல்லாத எந்த சந்தர்ப்பத்திலும் நமக்கெதிராக துப்பாகி ஏந்துகிறார்களே என்பதற்காக உடனே  நாம் துப்பாக்கி ஏந்தி விடக் கூடாது. நம்மை தீவிரவாதிகள் என்று கூறுகிறார்களே என்பதற்காக உடனே நாம் கிருத்துவர்களை தீவிரவாதிகள் என்று கூறிவிடக் கூடாது. இந்துக்களை தீவிரவாதி என்று கூறிவிடக் கூடாது, மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள கடமைப் பட்டவர்கள் நாம்.

நியூஜிலாந்து தக்குதலுக்குப்பின் முஸ்லிம்கள் வெளிப்படுத்திய நிதானமும் கம்பீரமும் கவுரவம் மிக்கது. அதே போல நியூஜிலாந்தின் நடவடிக்கைகளும் மிகவும் பொறுப்பானவை.

உலகின் மற்ற பகுதிகளிலுள்ள பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கியிருக்கிற அமைதியான நாடு என்று பெயர் பெற்ற நியூஜிலாந்து -  நிம்மதியாக வாழ விரும்புகிற மக்கள் குடியேற விரும்புகிற நாடாகும்.

2016 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற 24 மணி நேரத்திற்குள்ளாக 7 ஆயிரம் அமெரிக்கர்கள் நியூஜிலாந்தில் குடியேற விண்ணப்ப்பித்தனர். அந்த மாத இறுதிக்குள் 17 ஆயிரம் பேர் விண்ணபித்திதிருந்தனர் என நியூஜிலாந்து குடியேற்ற அதிகாரிகள் கூறியுள்ளனர்.

It was not the first time news events have prompted an interest in moving to New Zealand, a nation of roughly five million people. In the 24 hours after the November 2016 election of President Trump, immigration officials received 7,000 registrations from Americans interested in moving to there, and 17,000 during that whole month.

பிரச்சனைகள் இல்லாத நாடு என்று அறியப்பட்ட பகுதியில் ஏற்பட்ட இம்மாபெரிய பயங்க்ரவாத தாக்குதல் பெரும் அதிர்வை சர்வதேச அளவில் ஏற்படுத்தியது.

சகித்துக் கொள்ள முடியாத இத்தாக்குதலுக்கு பிறகு நியூஜிலாது பிரதமர் ஜென்சிகா ஆர்டனும் நியூஜிலாந்தின் பொதுமக்களும் வெளிப்படுத்திய நேச உணர்வு மிகப்பெரிய தாக்குதலை நியூஜிலாந்து அரசு மிக வெற்றிகரமாக சமாளிக்க உதவியுள்ளது.

இப்போது பத்ரிகை செய்திகள் என்ன சொல்கின்றன் தெரியுமா ?

நேற்றைய நியூயார்க டைம்ஸ் (The New York Time 28.03.2019 ) கூறுகிறது.

கிறைஸ்ட் சர்ச்சில் நடை பெற்ற பயங்கரவாத தாக்குதலை நியூஜிலாந்து எதிர் கொண்ட விதத்ததைப் பார்த்து நியூஜிலாந்தில் குடியேற முன்னை விட அதிக மக்கள் ஆர்வமாக விண்ணப் பிக்கிறார்கள். பள்ளிவாசலில் நடை பெற்ற துப்பாக்கி சூட்டிற்கு முன் 4 ஆயிரம் பேர் (4,844)  பேர் நியூஜிலாந்தில் குடியேற விண்ணப்பித்தனர். துப்பாக்கி சூட்டிற்குப் பின் 10 நாட்களில் 6 ஆயிரம்  பேர் (6,457 )கிறைஸ்ட்சர்ச் நகரில் குடியேற விண்ணப் பித்துள்ளனர்.

New Zealand’s immigration agency said on Thursday that registrations of interest to live and work in New Zealand — the first step toward applying for a visa — had increased in the 10 days after the March 15 attack compared with the 10 days leading up to it.
Peter Elms, the assistant general manager of Immigration New Zealand, said in a statement that there were 6,457 registrations after the shooting, and 4,844 in the 10 days before. The largest increase came from the United States, which had 1,165 expressions of interest compared with 674 in the same period leading up to the attack.
In addition to the surge of inquiries from Americans, there was a big boost in registrations from people in predominantly Muslim countries. People from Pakistan — where nine of the victims were from — made 333 registrations after the attack, compared with 65 in the 10 days before it. People in Malaysia made 165 applications, compared with 67 in the period leading up to the attack.
இந்தச் செய்தி சொல்கிற செய்தி என்ன தெரியுமா ?

ஆபத்துகள் நேர்ந்தாலும் கூட மனிதாபிமானம் வெளிப்படுகிற இடங்களிலிலே மக்கள் வாழ விரும்புவார்கள் .

நியூஜிலாந்தின் பிர்தமர் ஜெசிகா ஆர்டனும் நியூஜிலாந்து மக்களும் பயங்கரவாதி பிராண்டனை தோறகடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிராண்டன் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த வெறுப்புணர்வை விதைக்க முயன்றாரோ அதை விட வேகமாக முஸ்லிம்கள் மீதும் இஸ்லாமின் மீதுமான நேசத்தை நியூஜிலாந்து வெளிப்படுத்தி விட்டது, நாடாளுமன்றத்தில் குர் ஆன் ஓதப்பட்டது. ஜும் வின் பாங்கும் ஜனாஸா தொழுகையும் நாடுமுழுக்க அரசு தொலைக்காட்சியில் ஓளிபரப்பப் பட்டது, ஷஹீதுகளின் ஜனாஸா நிகழ்சியில் ஆயிரக்கணக்கில் நியூஜிலாந்து மக்களும் நியூஜிலாந்து பிரதமரும் கலந்து கொண்டனர். அது தவிர நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்களிலும் நீங்கள் தொழுங்கள் நாங்கள் உங்களது பாதுகாப்பிற்காக நிற்கிறோம் என்று மக்கள் காவலுக்கு நின்றனர்.

பிரதமர் ஜெசிகா ஆர்டன், பள்ளிவாசலுக்கு ஸ்கார்பு அணிந்து சென்றதும் அங்கு பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்களை சந்தித்ததும் சர்வதேச அளவில் அவருக்கு புகழை தந்துவிட்டது என நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

Ms. Ardern has received widespread praise at home and abroad for her handling of the attack, including her decision to wear a hijab when visiting mosques and meeting the families of victims in the aftermath of the violence.

இந்தச் செய்திகள் தருகிற இன்னொரு உண்மையை இங்கு உரத்து கூற விரும்புகிறோம்.

முஸ்லிம்களை ஆதரிக்கிற யாரும் நன்மையையே பெறுவார்கள், வளர்ச்சியே அடைவார்கள். ஒரு போதும் அவர்கள் தீமையை சந்திக்க மாட்டார்கள்.

உலகத்திற்கு கொடுப்பதற்கு இஸ்லாமிடம் நன்மை தவிர வேறெதுவும் இல்லை.

மதினாவாசிகள் அதற்கோர் உதாரணம். மதீனாவாசிகள் இஸ்லாமிற்கு இடமளித்தார்கள்.
வரலாற்றில் அடையாளம் இல்லாத அந்நகரம் இன்று உலகில் அதிக மதிப்பு வாய்ந்த இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ 


வெளிநாடுகளிலிருந்து அகதிகள் வரும் போது சொந்தக் நாட்டு மக்களுக்கு ஒரு சிறிய மன நெருக்கடி ஏற்படத்தான் செய்யும். அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய மனச் சஞ்சலத்திலிருந்து யார் தப்பித்துக் கொள்கிறாறோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ  என்ற வசனம் இன்றைய நியூஜிலாந்திற்குக்ம் பொருந்துகிறது.

நியூஜிலாந்தில் இஸ்லாம் வெற்றியடைந்து விட்டது. இஸ்லாம் வரவேற்புக்குரியதாகிவிட்டது.

முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்ல இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸும் அவரது மனைவி கேதே யும் அடுத்த மாதம் கிறைஸ்ட்சர்ச் நகருக்கு வருகை தரவுள்ளனர். அப்போது பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தரவும் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று உறுதியளிக்கவும் உள்ளனர். பயங்கர வாத தாக்குதல் நடை பெற்ற போது இங்கிலாந்து இளவரசர்கள் வில்லியமும் ஹாரியும் தமது மனைவியர்கள் கதே மெகல்லனுடன் இணைந்து be strong"  என செய்தியனுப்பியதாக நியூஜிலாந்து பிரதமர் ஜெசிகா ஆர்டன் தெரிவித்தார்

அபூஜஹல்களுகும் அபூலஹப்களும் பிராண்டன்களும் உண்மையாக தோற்றுப் போகிற இடம் இது.

கிறைஸ்ட்சர்ச் தாக்குதலுக்குப்பிறகு நியூஜிலாந்தின் உடனடி விளைவாக துக்கத்தை வெளிப்படுத்த வந்த ஒரு குடும்பம் இஸ்லாமை தழுவியது. மார்ச் 27 ம் தேதி யூ டூயூப் செய்தியின் படி நியூஜிலாந்தின் ரக்பீ விளையாட்டு அணி வீரர் ஓபா டுபாங்க்ஸீ இஸ்லாமை ஏற்றார். மற்றொரு வீரரான சோனி பில் வில்லியம்ஸின் தாயாரும் இஸ்லாமை ஏற்றார். சோனி பில் 2009 ல் இஸ்லாமை தழுவிவிட்டார்.

இதை விட பெரிய வெற்றி நியூஜிலாந்து மக்கள் இஸ்லாமிற்கு ஆதரவாளர்களாக மாறியதாகும்.

முஸ்லிம்களுக்கான பெரிய பாடம் இன்றைய உலகில் நாம் ஆயுதமேந்திகளாக அறியப்படுவதை விட அறிவாயுதம் ஏந்தியவர்களாக அறியப்படுவது மிகவும் நன்மையானது. சில மிக கசப்பான இன்னல்களில் கூட தீவிரவாத செயல்களில் நாட்டம் கொள்ளாமல் அமைதியான ஆனால் கம்பீரமான வழிகளில் தீர்வுகளை யோசிப்பது இன்றைய சூழ்நிலைக்கு மிக உபயோகமானது.  

பள்ளிவாசல் தாக்குதலிலிருந்து முஸ்லிம் உலகம் பெற்றுக் கொள்ள வேண்டிய் முக்கியமான அடுத்த பாடம்
உலகில் பெருகிற வருகிற இஸ்லாமிய வெறுப்புனர்வை ( இஸ்லாமோபியா ) குறைப்பது பற்றி முஸ்லிம் சமுதாயம் உடனடியாக சிந்தித்தாக வேண்டும்.
நியூஜிலாந்து மாதிரியான நாட்டில் இப்படி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு காரணம் என்ன என்பதை அலசுகிறவர்கள்
இரண்டு காரணங்களை முக்கியமாக பேசுகிறார்கள் .

1.   அகதிகளின் வருகை அதிகரிப்பது
2.   இஸ்லாமின் வளர்ச்சி அல்லது இஸ்லாமிய மதமாற்றம்.
உண்மை காரணம் இதுவல்ல.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வெள்ளையின மேலாதிக்கம் ஓங்கி வருகிறது அது கிருத்துவ அடையாளத்தை பயன்படுத்திக் கொள்கிறது. இந்த வெள்ளையின கிருதுவ மேலாதிக்க உணர்வை வலது சாரி சிந்தனை என ஊட்கங்கள் அடையாளமிடுகின்றன. கிருத்து தீவிர வாதம் அல்லது வெள்ளை இன வாதம் என்று சொல்ல மறுக்கின்றன.
உண்மையில் இது வெள்ளையின மேலாதிக்க உணர்வேயாகும் அல்லது கிருதுவ மேலாதிக்க உணர்வேயாகும்.
ஆஸ்திரேலியாவில் வெள்ளையின மேலாண்மை சிந்தனை கொண்ட நியோ நாஸிச குழுக்கள் அதிகமாக இருக்கின்றன, ஐரோப்பா முழுவதிலும் இத்தகையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளை கிருத்துவர் அல்லாதோருக்கு எதிராக வெளிப்படையாக கருத்துக்களை பதியவும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் பலரும் தூண்டப் பட்டு வருகின்றனர். தற்போதைய அமெரிக்க அதிபரே இந்த வலது சாரி சிந்தனை கொண்டவர் தான். அவர் மட்டுமல்லாது ஐரோப்பாவில் தற்போது ஆட்சிப்பொறுப்பில் இருக்கிற பலரும் - பிரான்ஸ் ஜெர்மனி அதிபர்கள் உடபட இந்த சிந்தனை கொண்டவர்களே.  பன்முகத் தன்மை கொண்ட சமூக அமைப்பில் இத்தகையோருக்கு உடன் பாடு இல்லை. மற்றவர்கள் அனைவரும் தங்களுக்கு கீழ்பட்டே இருக்க வேண்டும் என்ற சிந்தனை இவர்களுடையது.  
அதனால் ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவை மையமாக  கொண்டு கிருத்துவ வெள்ளையின மேலாண்மை வலது சாரி தீவிரவாதக் குழுக்கள் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதை சமூக நீதிக்கான ஒரு இயக்கம் போல ஐரோப்பிய அரசுகளும் சமூக ஊடகங்களும் அடையாளப்படுத்தி ஆதரவளித்து வந்தனர்.
இதற்கு முன்னாள் 2011 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐரோப்பாவின் நார்வே நாட்டில் சுற்றுலா சென்று கொண்டிருந்த மக்கள்  77 பேரை ஆண்டர்ஸ் பிரவிக் என்பவன் சுட்டுக் கொன்றான், அவனது வளைத் தளத்தில் இஸ்லாமிற்கு எதிரான கோஷங்கள் இருந்தன. வெள்ளையர்கள் மேலானவர்கள் என்பதை தெரிவிக்கும் கருத்துக்கள் அதில் இருந்தன. ஐரோப்பாவை உலுக்கிய செய்தி அது.
வெள்ளையின் கிருத்துவ மேலாதிக்க சிந்தனை பரவக் காரணம் என்ன ?
ஐரோப்பாவில் கிருத்துவ தீவிர சிந்தனை கொண்டவர்கள் தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வருகின்றனர். அந்த பெயரிலேயே கட்சியை வைத்துக் கொண்டு ஆட்சி செலுத்தி வருகின்றனர்.
ஆனால் ஐரோப்பாவில் கிருத்துவ மதத்தின் மீதான பற்று சரிந்து கொண்டு வருகிறது. உதாரணத்திற்கு நார்வேயில் 80 சதவீததிற்கும் மேற்பட்டவர்கள் கிருத்துவர்கள் தான் , ஆனால் கிருத்துவ மதத்தை பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தை விட குறைந்து விட்டது. பெரும்பாலோர் மதமற்றவர்களாக தம்மை அறிவித்துக் கொண்டனர்.
அதே போல நியூஜிலாந்தின் மக்கள் தொகையில் 95 மேற்பட்ட சதவீதத்தில் கிருத்துவர்கள் இருந்தாலும், கிருத்துவ மதத்தை பின்பற்றுவதாக கூறுபவர்கள் 42 சதவீதம் பேர்தான். 45 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்களை மதமற்றவர்கள் என அறிவித்துக் கொண்டுள்ளனர்.
இது தங்களது அரசு அதிகாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என கிருதுவ தீவிர சிந்தனை கொண்டவர்கள் கருதுகீறார்கள். எனவே வெள்ளையின மேலாதிக்கம் என்ற பெயரிலும் கிருதுவ தூய்மை என்ற பெயரிலும் தீவிரவாதக் கருத்துக்களை பரப்பவும் அதை நிலைப்படுத்த இஸ்லாமிய எதிர்ப்பு சித்தாந்ததை உருவாக்கி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கு மத்திய கிழக்கிலுருந்து அகதிகள் வருவதையும் இஸ்லாமிய மதத்திற்கு தழுவுகிறவர்களின் எண்ணிக்கையையும் காரணமாக காட்ட முயல்கிறார்கள்.
ஐரோப்பாவில் பள்ளிவாசல்கள் பெருகுகின்ற என்று சொல்லி அச்சுறுத்துகிறார்கள் . ஆனால் அரபு நாடுகளில் – இஸ்லாமிய நாடுகளில்  சர்ச்சுகள் பெருகுவதை பற்றி பேச மறுக்கிறார்கள்.
வலது சாரிகளின் கொள்கையை வெள்ளையின பெரும்பான்மை மக்கள் ஏற்கவில்லை. மதத்தை சொல்லி தம்மை முட்டாள்களாக்கவே இவர்கள் முயல்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இந்த சூழலில் தான் வலது சாரி கருத்துக் கொண்டவர்களின் பயங்கர முகம் எப்படிப்பட்டது என்பதை நியூஜிலாந்து நிகழ்ச்சி உலகிற்கு எடுத்துக் காட்டி விட்டது.
தக்குதலில் ஈடுபட்ட பிராண்டன் ஒரு ஆஸ்திரோலியப் பிரஜை.
பிராண்டன் ஒரு தனிமனிதல்ல என்பதை அவன் துப்பாக்கியில் கிருக்கி வைத்திருந்த வாசகங்கள் உணர்த்து கின்றன.  வரலாற்றுக் காலத்தில் முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் இடையே நடை பெற்ற யுத்தங்களில் தலைமை தாங்கிய படைத்தளபதிகள் வீரர்களின் பெயரை அவன் துப்பாக்கியில் எழுதியிருந்தான். நியூஜிலாந்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி பிராண்டன் இதற்கு முன்னதாக –வியன்னாவிலிருந்து இயங்குகிற வலது சாரி அமைப்புக்கு நிதி உதவி செய்திருக்கிறான் என்ற செய்தி நேற்றைய நியூயார்க் டைம்ஸ் பத்ரிகையில் வெளியாகியுள்ளது.
வியன்னாவிலிருந்து செயல்படுகிற வலது சாரி அமைப்பின் முக்கிய உறுப்பினரான மார்டின் செல்லனர் என்பவனுக்கு பிராண்டன் 1500 யூரோக்களை இரண்டு வாரங்களுக்கு முன் அனுப்பியிருக்கிறான்.
Sellner received a 1,500 euro donation — about $1,700 — a year ago from Brenton Harrison Tarrant of Australia, who is accused of killing 50 Muslim worshipers in Christchurch, New Zealand, two weeks ago.
பிராண்டனை பற்றிய விவரங்களை படிக்கிற போது அவன் உலகம் சுற்றும் ஒரு பயணியாகவே இருந்திர்க்கிறான். பாக்கிஸ்தானுக்கும் பயனம் சென்றிருக்கிறான், அந்த நாட்டை பற்றியும் நாட்டு மக்களையும் இயற்கையின் வளத்தையும் பாராட்டியே எழ்தியிருக்கிறான். தீடீரென அவன் இப்படி வலது சாரி தீவிரவாதியாக மாறியது எப்படி என்பது இன்னும் உலைகை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இங்கு தான் யோசிக்க வேண்டியுள்ளது. பிராண்டன் ஒரு தனிமனிதனா அல்லது ஒரு ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலு வளர்ந்து வருகிற ஒரு தீவிர வாத இயக்கத்தின் கையாளா என்பதை உலகம் கண்டறிய வேண்டும்.
பயங்கரவ வாதி பிராண்டனைப் பற்றிய பற்றிய முழு உண்மைகளையும் நியூஜிலாந்து உலகிற்கு தெரிவிக்க வேண்டும்.                         பிராண்டனுக்குப் பின்னால் ஐரோப்பவிலும் மற்ற பகுதிகளிலும் இருக்கிற வலது சாரி தீவிரவாதிகள் அடையாளப் பட வேண்டும். அவர்களுடைய தாக்குதல்களிலிருந்து அப்பாவி முஸ்லிம்கள் பாதுக்காக்கப் பட வேண்டும். 
அதே போல வலது சாரிகளுக்கு ஊக்கமளிப்பதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். நியூஜிலாது தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களில் ஒன்று .
பேஸ்புக் நிறுவனம் வலது சாரி கருத்துக்கள் பரப்படுவதை நேற்று தடை செய்துள்ளது .  இதை நியூஜிலாந்து பிரதமர் வெகுவாக வர்வேற்றுள்ளார். 

முஸ்லிம் உலகம் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய செய்தி இது.
உலகில் பெருகிற வருகிற வலதுசாரி தீவிரவாதத்திற்கு வாய்ப்பு தரும் வகையில் நடந்து கொள்ளாமல் முஸ்லிம்கள் தமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இஸ்லாமை இந்த உலகிற்கு சொல்ல வேண்டும். ஆனால் அது மக்கள் விரும்பி வந்து ஏற்கும் வகையில் அமைய வேண்டும்.
இஸ்லாமிய பிரச்சாரம் தங்களது சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தலோ என மற்றவர்கள் கருதும் வகையில் அமையக் கூடாது.
நியூஜிலாந்து மக்கள் மிகப் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் போது 350 பேர் இஸ்லாமை தழுவினார்கள் என்று உண்மை அறியாமல் செய்தி பரப்புவது – அல்லது முஸ்லிமான சிலரைப் பற்றி பெரிதாக விளம்பரப்படுத்துவது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரச்சாரகர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
எனவே இஸ்லாமோபோப்பியா எனும் இஸ்லமை பற்றிய அச்சத்த்தை அகற்றும் வகையில் நடந்து கொள்வது இன்றையை நிலையில் முஸ்லிம்களின் முக்கிய கடமையாகும்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!






1 comment:

  1. இயக்கத்தில் இணைந்து செயல்படுகிற இஸ்லாமியர்கள் உணர வேண்டும்

    ReplyDelete