நமது நாட்டில்
17 வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடை பெற உள்ளது.
அதற்கான பிரச்சாரம்
சூடுபிடித்திருக்கிறது.
உலகில் நடை
பெறுகிற பெரும் காரியங்களில் இந்திய தேர்தலும் ஒன்று.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி, இத்தேர்தலில் 814.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றதால் இது உலகின் மிகப் பெரிய தேர்தல் ஆகவும் கணிக்கப்படுகிறது.
இந்த வாக்குப்
பதிவு வெறும் நிலப்பரப்பில் மட்டுமல்ல வடக்கே உயர்ந்த இமாலய மலைப்பகுதிகளிலும், மேற்கே
தார் பாலைவனப் பகுதிகளிலும் ,கிழக்கே மாங்குரோவ் காடுகளுக்கு இடையிலும் ,தெற்கே இந்தியப்
பெருங்கடல் பகுதியிலும் நடைபெறுகிற பணியாகும்.
தற்போது 26 லட்சம் அழியாத மை பாட்டில்களை தலைமை தேர்தல் ஆணையம் வாங்கியுள்ளது. கடந்த தேர்தலை விட 4.5 லட்சம் மை பாட்டில்கள் அதிகமாகும். இந்த மை பாட்டில்கள் வாங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ரூ.33 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அதற்காக வேலை செய்யும் ஊழியர்களுக்கான செலவுகள் , போக்குவரத்துச் செலவுகள், மின்சாரத் தேவைகள், தேர்தல் பணியாளர்களுக்கான சம்பளங்கள் என ஏகப்பட்ட செலவிழுக்கும் சமாச்சாரம் அது.
வேட்பாளர்கள் செலவழிக்கும் தொகையையும் சேர்த்து பொதுத் தேர்தலுக்கு ரூ.50,000 (7 பில்லியன் அமெரிக்க டாலர்) கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் ஆகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவே உலகின் ஆகச் செலவுமிக்க பொதுத் தேர்தலை நடத்தும் நாடு என்ற பெருமையையும் பெறுகிறது
இது அமெரிக்க டாலர் மதிப்பில் 7 பில்லியன் டாலர்களாகும். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 6.5 பில்லியன் டாலர் செலவிடப்படுகிறது. சென்ற தேர்தலை விட இந்த தேர்தலின் செலவு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகின் இந்த பிரம்மாண்ட திருவிழா 130 கோடி மக்களின் வாழ்க்கையை தீர்மாணிக்க கூடியது.
இந்திய அரசு
தேர்தலுக்காக 200 கோடி ரூபாய்களை ஒதுக்குகிறது. இதில் இதில் மலைப்பகுதிக்கு வாக்குப்பதிவு
இயந்திரங்களை யானைகள் மீதும் கழுதைகள் மீதும் ஏற்றிச் செல்லவும் படகு மூலம் ஆற்றைக்
கடந்து செல்லவும் செய்யப்படுகிற தொகையும் அடங்கும்.
வேட்பாளர்கள் செலவழிக்கும் தொகையையும் சேர்த்து பொதுத் தேர்தலுக்கு ரூ.50,000 (7 பில்லியன் அமெரிக்க டாலர்) கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் ஆகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவே உலகின் ஆகச் செலவுமிக்க பொதுத் தேர்தலை நடத்தும் நாடு என்ற பெருமையையும் பெறுகிறது
இது அமெரிக்க டாலர் மதிப்பில் 7 பில்லியன் டாலர்களாகும். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 6.5 பில்லியன் டாலர் செலவிடப்படுகிறது. சென்ற தேர்தலை விட இந்த தேர்தலின் செலவு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகின் இந்த பிரம்மாண்ட திருவிழா 130 கோடி மக்களின் வாழ்க்கையை தீர்மாணிக்க கூடியது.
மக்களிடம்
பரவி வருகிற இரு குணங்கள் இந்த பிரம்மாணட முயற்சியை வீணடித்து விடக் கூடும் . இன்றைய
ஜும் ஆவில் தேர்தலை தோற்கடிக்கும் அம்சங்களை பாற்றி பார்க்க இருக்கிறோம்.
இந்த தேர்தலில்
அல்லாஹ் நம் நாட்டுக்கு நல்ல விடிவை தர வேண்டும்.
இதில் குடிமக்களாகிய
நமக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
ஆட்சி அல்லாஹ்வுடையது அவன் நாடியவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்கிறான்.
قُلْ
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ
الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ
بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ263;
அல்லாஹ் தான் மாலிகுல் முல்க் அவன்விரும்புகிறவர்களுக்குத் தான் அரசு.
இந்த சத்தியக் கோட்பாடு வரலாற்றில் பல வகையிலும் நிரூபணமாகியுள்ளது,
· மக்காவிலிருந்து பதுங்கிப் பதுங்கி வெளியேறியமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் எட்டுவருடத்தில்இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அரசரானார்கள்.
· “ஓட்டகை மேய்க்க கூட தகுதியற்றவர்” என்றுதந்தை கத்தாபினால் ஏசப்பட்ட உமர் (ரலி)இருபத்திரண்ட்ரை இலட்சம் சதுர மைல்களைகட்டியாண்டார்கள்.
· வியாபாரியான உஸ்மான் (ரலி) அவர்களும்சாமாணிய கூலித் தொழிலாளியான அலி ரலிஅவர்களும் அதிபர்கள் ஆனார்கள்.
திருக்குர் ஆன் சில பழைய வரலாறுகளை சுட்டிக்காட்டுகிறது.
· கன்ஆன் தேசத்தில் பிறந்து சகோதரர்களால்கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் (அலை) எங்கோஇருக்கிற எகிப்தின் அரியனையைஅலங்கரித்தார்கள்.
· ஜாலூத்தின் (கோலியத்) படையில் சாதரண கவன்அடிக்கும் வீர்ரான தாவூத் (அலை) டேவிட் –இஸ்ரவேலர்களின் அரசரானார்.
இந்த வகைக்கான உதாரணங்களாக இந்திய அரசியலில் இன்னும் பலரையும் சுட்டிக்காட்ட முடியும்.
·
லால்பகதூர் சாஸ்திரி ,
·
வி.பி. சிங் ,
·
தேவகவுடா
·
சரண்சிங் –
·
சந்திரசேகர்
·
மன்மோகன் சிங்
போன்றோர் எதிர்பாராமல் திடீரென பிரதமரானார்கள்.
அவ்வாறு ஆட்சியதிகாரம் தரப்படுகிற எல்லோரும் நல்லவர்களாகவும் வல்லவர்களாக இருப்பதில்லை. இருக்கு வேண்டும் என அல்லாஹ் தீர்மாணிப்பதும் இல்லை,
ஒரு சமூகத்திற்கு நன்மையை நாடுகிற போது அல்லாஹ்சிறந்த ஆட்சியாளர்களை கொடுக்கிறான்,
நல்ல ஆட்சியாளரால்
மக்கள் மட்டுமல்ல விலங்குகளும் தாவரங்களும் பூமியும் நலனடையும். பரக்கத் பொழியும்.
கியாமத்
நாளின் நெருக்கத்தில் ஈஸா அலை அவர்களது தலைமையின் கீழ் மக்கள் ஒன்று திரட்டப் பட்டு
நீதியான ஒரு அரசு நடை பெறும் போது ஒரு மாதுளம் பழம் ஒரு கூட்டத்திற்கு போதுமானதாக இருக்கும்.
அதன் தோளில் மக்கள் நிழல் பெறுவார்கள். ஒரு ஒட்டகையின் பால் ஒரு மக்கள் கூட்டத்திற்கு
போதுமானதாக இருக்கும்.
قيل للأرض: أخرجي بركاتك. فيأكل من الرمانة الفئام
من الناس، ويستظلون بقحفها، ويكفي لبن اللقحة الجماعة من الناس. وما ذاك إلا ببركة
تنفيذ شريعة رسول الله صلى الله عليه وسلم، فكلما أقيم العدل كثرت البركات والخير;
ஒரு சமூகத்திற்கு வேதனையை கொடுக்கநினைத்தால் அல்லது அவர்களை சோதிக்க நினைத்தால் அவர்கள் மீது தீய ஆட்சியாளர்களை அல்லாஹ் ஏவீ டுகிறான் என திருக்குர் ஆனியஅறிஞர்கள் கூறுகிறார்கள்
قُلْ
هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ
مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ
بَعْضٍ انظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ(65(6:
மேலெயிருந்து வருகிற தண்டன் என்றால் அது புயற்காற்று,கல்மழை பொழிவது ஆகியவை போல தீய ஆட்சியையும் குறிக்கும்
அதே போல கீழிருந்து ஏற்படுகிற தண்டனை என்பது பூகம்பம் நிலச்சரிவுபோல விசுவாசமற்ற வேலைக்காரர்களையும் குறிக்கும்
தப்ஸீர் இபுனு கஸீரில் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாகஇத்தகவல் இடம் பெற்றுள்ளது.
إن
ابن عباس كان يقول في هذه الآية "قل هو القادر على أن يبعث عليكم عذابا من
فوقكم" فأئمة السوء "أو من تحت أرجلكم" فخدم السوء -
அதாவது ஒரு மக்களுக்கு தண்டனையாக அல்லாஹ் தீயஆட்சியாளர்களை தருகிறான். தலைவர்களுக்கு தண்டனையாக தீய தொண்டர்களை தருகிறான்
ஆட்சியாளர்கள் இருப்பவர்கள் தீயவர்களாக இருந்து விட்டால் மக்களுக்கு
மட்டுமல்ல பூமியில் உள்ள அனைத்திற்குமே துயரம் தான். ஒரு ஹதீஸ் இந்த கருத்தை சுற்றி நிற்கிறது.
ثبت في الصحيح: «إن الفاجر إذا مات تستريح
منه العباد والبلاد، والشجر والدواب».
அல்லாஹ் நமக்கு வைக்கிற சோதனைகளுக்கு பெரும் பாலும் நமது சொந்த
தவறுகளே காரணமாகும்.
ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا
كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ
يَرْجِعُونَ﴿41﴾
நாம் என்ன
தவறு செய்கிறோம் ?
இரண்டு
பிரதான தவறுகள் நம்முடையது.
ஒன்று
குறுகிய
கண்ணோட்ட்த்தில் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து வாக்களிப்பது.
·
பணம் பெற்றுக்
கொள்வது
·
ஜாதிப்பாகுபாடு பார்ப்பது,
·
மத இன
தீவிரவாதச் சிந்தனைகளுக்கு ஆட்படுவது.
இந்த தேர்தலில் குஜராத் மாநிலம் ஆனந்த் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மிடேஷ் படேல் (54) என்பவர் போட்டியிடுகிறார். தொழிலதிபரான இவர் மீது 2002-ம் ஆண்டு கோத்ராவில் நடந்த கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு உள்ளது.
இது போல பல நூறு வேட்பாளர்கள் குற்றப் பின்னணியுடையவர்கள்
தேர்தலில் போட்டியிடுகிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய குற்றப்பின்னணியே
அவர்களுக்கு பிரபலத்தையும் எளிதான வெற்றியையும் தந்து விடுகிறது.
நாம் போடுகிற ஒரு வாக்கு நமது எம்பி யார் என்பதை
மட்டும் தீர்மாணிப்பதில்லை நாம் யார் என்பதையும் தீர்மாணிக்கிறது. மரியாதையுள்ள குடிமக்கள்
இதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே வாக்களிப்பதற்கு முன் சிந்தித்து வாக்களிக்க
வேண்டும்.
கத்தர் பல்கலைகழகத்தின் ஷரீஆ துறை தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான யூசுப் அல்கர்ழாவியும் தேர்தல் முறையை ஒருவகை பரிந்துறையே என்றும் அது நீதிமன்றத்தின் முன் சாட்சியம்அளிப்பதை ஒத்தது என்றும் கூறுகிறார். திருக்குர்ஆன் கூறுகிறது
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ
شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ
إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا
الْهَوَى أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ
بِمَا تَعْمَلُونَ خَبِيرًا(135)
مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ
يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى
كُلِّ شَيْءٍ مُقِيتًا
நாம் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்தால் அவர் செய்கிற நன்மைகள் ஒவ்வொன்றிலும் நமக்கும் ஒரு பங்கு கிடைக்கிறது,தீயவரை தேர்வு செய்தால்..?
தேர்தலில் ஜெயித்த பிற்கு அவர்கள் மாறிப்போனால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
மந்தை தனமாக இல்லாமல் சிந்தித்து வாக்களித்தால், யாருக்கு வாக்களித்தாலும் அது நல்ல வாக்கு தான்.
அரபியில் تحري தஹர்ரீ என்ற ஒரு சொல் உண்டு. தேடித்தெரிதல் என்பது அதன் பொருள்.
ஒரு புது ஊருக்கு செல்பவர் யோசிக்காமல் ஏதாவது ஒருதிசையைப் பார்த்து தொழுவிட்டார். பின்னர் கிப்லா வேறு என்று தெரிந்தால்அவர் திருப்பி தொழ வேண்டும்.
அதே நபர் விசாரித்து அல்லது தேடிப்பார்த்து ஒரு திசையைப் நோக்கி தொழுதார். பிறகு அவருக்கு கிப்லா வேறு என்று தெரிந்தால் அவர் திருப்பி தொழ வேண்டியதில்லை என்று இஸ்லாமிய சட்டம் சொல்கிறது.
إذا شك ولا يتحري – أن صلوته علي الفساد وإذا شك وتحري ان
الصلوة علي الجواز ولو تبين الخطأء- حاشية القدوري
சிந்தித்து, ஒன்றை நல்லதென உணர்ந்து செயல்படுவதற்கும் சிந்திக்காமல் செயல்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
முஸ்லிம் வாக்களர் சிந்தித்து வாக்களித்தால் அவரது வாக்கு நாட்டுக்கு நன்மையாய் அமையும். அவருக்கும் நன்மையை தேடித்தரும்.
சாட்சியை நிறைவேற்ற எப்படி கூலி வாங்கக் கூடாதோ அது போல ஓட்டுக்கு காசு பொருள் ஆகியவற்றை பெறக் கூடாது.
இன்று
மக்களின் அதிகாரத்தை அற்ப பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என்று பெரும்பாலான
அரசியல் வாதிகள் நினைக்கிறார்கள். கோடிக்கணக்கில்
பணம் பறிமுதல் செய்யப் பட்டாலும் பண மழை பொழிந்து கொண்டு தான் இருக்கிறது.
ஒவ்வொரு
வாக்காளரும் தனது தன்மானத்திற்கு விடப்படுகிற சவாலா இதை நினைக்க வேண்டும். ஒட்டுப் போடுகிறேன். காசு வேண்டாம் நாட்டுக்கு நல்லது
செய்யுங்கள் என்று கூறவேண்டும்.
முஸ்லிம்
அரசியல் கட்சியின் தொண்டர்கள் முஸ்லிம்களை இந்தப் பழக்கத்திற்குள் இழுத்து விடாமல்
இருக்க வேண்டுமாய அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அதே போல
குறுகிய இன மத உணர்வுக்கு ஆட்பட்டு வாக்களிப்பதும்
கூடாது.
தங்களுடையவர் என்பதற்காக தப்பானவர்களை ஆதரிப்பது இனவெறி என்று மார்க்கம் கூறுகிறது. அது அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் மார்க்கம் எச்சரிக்கிறது.
عَبْدِ اللَّهِ بْنِ
مَسْعُودٍ ِ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ
الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ - ابوداوود -4453
அசத்தியமான ஒரு காரியத்திற்காக தன்னுடைய சமுதாயத்திற்கு உதவுகிறவர்ன் கிணற்றில் விழுப் போகிற் ஒட்டகை அதன் வாலைப் பிடித்து இழுப்பவனை போலிருகிறான்.
عَنْ
عَبَّادِ بْنِ كَثِيرٍ الشَّامِيِّ عَنْ امْرَأَةٍ مِنْهُمْ يُقَالُ لَهَا
فُسَيْلَةُ قَالَتْ سَمِعْتُ أَبِي يَقُولُ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ
يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ قَالَ لَا وَلَكِنْ مِنْ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ
الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ- إبن ماجة 3939
ஒரு எதார்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் நம்முடையவர் என்று பார்ப்பது நமக்கு சரியாக இருக்கும் எனில்
மற்றவர்கள் தங்களுடையவர் என்று கருதி ஒருவரை ஆதரிப்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
எனவே நமது சிந்தனையில் ஒரு மாற்றம் அவசியம் ஏற்பட்டாக வேண்டும்.
நாட்டுக்கு நன்மையானவர் என்று நாம் வேட்பாளைர்களை தேர்ந்தெடுக்க
வேண்டுமே அன்றி என் வீட்டுக்கு நன்மையானது என்று சிந்திக்க கூடாது.
நாம்
செய்யக் கூடிய இரண்டாவது பிரதான தவறு
வாக்களிக்காமல்
இருப்பது.
فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ
أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ ۗ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ۚ وَمَن
يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ (283)
சிலர் “என் ஒரு ஓட்டினால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்கின்றனர்.
· கள்ள ஓட்டுப் போடுபவர்களுக்கு இந்த எண்ணம் தான் வாய்ப்பளிக்கிறது.
· நூறு பேர் இப்படி நினைத்தால் ஒரு நல்ல வேட்பாளர் தோற்றுப் போய்விடுவார்.
வாக்களிப்பது என்பது சாட்சியமளிப்பது
போன்றது என்றாகிற போது வாக்களிக்காமல் இருப்பது சாட்சியை மறைத்த குற்றமாகிறது.
அதுமட்டுமல்ல தங்களது தேர்தல் கடமையை (வாஜிபல் இன்திகாபி) நிறைவேற்றாத முஸ்லிம்கள் தீயவர்கள் ஆட்சிக்கு வர அனுமதிக்கிறார்கள் என்றேஅர்த்தம் என யூசுப் அல்கர்ழாவி கூறுகிறார்.
பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى
يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ بِعِقَابٍ
مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ
يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا ثُمَّ لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ
يَعُمَّهُمْ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ - أَبُو دَاوُد 3775
மக்கள் அநியாயக்காரனை பார்த்து விட்டு அவன் கையையைப்பிடித்து தடுக்காவிட்டால் அதற்கான தண்டனையை அல்லாஹ் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் தருவான்.
பாவங்கள் ஒரு சமூகத்தில் அதிகரித்து , அதை மாற்றும் ச்கதி அவர்களிடம் இருந்தும் அவர்கள் அதை மாற்றாவிட்டால் அல்லாஹ்வின் த்ண்டனை அவர்களை மொத்தமாக வந்தடையும் .
தற்காலத்தில் தேர்தலைப் பற்றி ஒரு அவநம்பிக்கை பரவிவருகிறது.யாருக்கு ஓட்டு போட்டு என்ன பயன் ? எல்லோரும் திருட்டுப் பயல்கள் ஒருத்தனும் நமக்கு நல்லத் பன்றதில்லை என்ற விரக்தி பலரிடமும் இருக்கிறது.
இது
தவறு. நமது கடமையை செய்யாமல் இருக்க இந்த வரட்டு தத்துவம் ஆதாரமாகாது.
உலகம்
கெட்டுக்கிடக்கிறது என்று சொல்லி நாம் சாப்பிடாமலும் நீர் அருந்தாமலும் இருப்பதில்லை.
எது
எப்படி இருந்தாலும் நமது தேவைகளை நாம் எப்படி நிறைவேற்றிக் கொள்கிறோமோ அதே போல நமது
கடமைகளை நாம் செய்து விட வேண்டும்.
சிந்தித்துப்
பார்த்து யாரேனும் வெற்றி பெற்க்க்கூடியவர்களில் வாய்ப்புள்ள ஒருவருக்கு வாக்களித்து
விட வேண்டும்.
இதற்காக
விடுமுறை எடுப்பது ம் கியூவில் காத்திருப்பது, வெயிலைப் பொறுத்துக்கொள்வது அனைத்தும்
நன்மையான காரியமாகும்.
மக்கள்
கையில் அதிகாரத்தை வழங்க தேர்தல் கமிஷன் நிறைய முயற்சி செய்கிறது. மக்களில் சிலரோ வெகு
அலட்சியமாக அதை தூக்கி எறிந்து விட்டு செல்கின்றனர்.
கோவை
தொகுதியில் வேட்பாளராக நிற்கும் ஒருவர் கூறுகிறார். இங்கு ஒண்ணரை இலட்சம் வாக்குகள்
புதிதாக சேர்க்க பட்டிருக்கிறது. ஆளும் கட்சிக்கு சார்பாக இருப்பார்கள் என்பதற்காக
வடநாட்டு வேலைக்கார்ர்கள் பலருக்கும் இங்கு ஓட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில்
ஒரு பெரிய சதித்திட்டம் உள்ளது. இதை எதிர் கொள்ள முஸ்லிம்கள் அனைவரும் வாக்களிக்க்
வேண்டும். ஏனெனில் இது வரை உண்டான கணக்கின் படி முஸ்லிம் பகுதியில் 52 லிருந்து 58
சதவீத வாக்குகள் தான் பதிவாகின்றன். வேலைக்கு சென்று விடுகிறோம். உறவினர் வீட்டுக்
கல்யாணம் என்று சொல்லி பலர் தேர்தலில் வாக்களிக்க செல்லாமல் இருந்து விடுகிறார்கள்>. இந்த அளவு கனிசமான வாக்காளர்கள் வாக்களிக்காமல்
போகிற போது திட்டமிட்டு இன ரீதியாக மத ரீதியாக வாக்குக்ளை திரட்டுகிறவர்கள் வெற்றி
பெற்று விடுகிறார்கள்.
எனவே
தீயவர்கள் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்றால் முஸ்லிம்கள் நூறு சதவீதம் தங்களது
ஜனநாயக கடமை நிறைவேற்ற வேண்டும்.
ஒரு தேர்தலில் ஒருவர் வெற்றியடைவார். மற்றவர்கள் தோற்றுப் போகிறார்கள். இது வரவேற்பிற்குரியதே!
தேர்தலைக் கண்டு கொள்ளாத அலட்சியமும்
, குறுகிய கண்ணோட்ட்த்தில் வாக்களிப்பதும் தேர்தலையே தோல்வியடைச் செய்கின்றன. இது மிகவும்
வருத் த்திற்குரியது.
அல்லாஹ்
இந்த தேர்தலை நம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையானதாக் ஆக்கியருள்வானாக!
No comments:
Post a Comment