இஸ்லாம்
அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ் குறைகளற்றவன், நிறைவானனவன். அல்லாஹ்வின் மார்க்கமும் நிறைவானதே!
இன்றும்
இஸ்லாமிய சட்டங்கள் விரும்பி வரவேற்கப்படுகின்றன். கியாம நாள் வரை இது தொடரும்.
சமீபத்தில்
பொள்ளாச்சியில்
சபரி ராஜன் என்ற இன்ஜினியர் பேஸ்புக் மூலம் அறிமுகமான 19 வயது இளம் பெண்ணை ஊஞ்சவேலம் பட்டியில் உள்ள திருநாவுக்கரசு என்பவரது வீட்டிற்கு தனியே வரவழைத்துள்ளார். அங்கே சபரிராஜனுடைய நண்பர்களான சதீஷ் வசந்த குமார் ஆகிய இருவர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை அடித்து சித்ரவதை செய்து பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு அதை படமாக எடுத்துக் கொண்டுள்ளனர். பிறகு அதை காட்ட்டியே அந்தப் பெண்ணை பிளாக் மெயில் செய்து மேலும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தார் பலத்த போராட்டத்திற்குப் பிறகு இது பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். புகார் அளிக்கப் பட்டு ஒருவாரத்திற்குப்பிறகு காவல் துறை நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
குற்றவாளிகளுக்குள்ள அரசியல்
தொடர்புகள் காரணமாக இது விவாகாரத்தில் காவல் துறையின் நடவடிக்கை கடும் கணடனத்திற்குள்ளாகி இருக்கிறது.
தற்போது
பூதாகரமாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. . இது போல சுமார் 200 பெண்களை இக்குழுவினர் சீரழித்துள்ளனர்.
பத்ரிகை
செய்தி என்ன சொல்கிறது . கவனமாக கேளுங்கள்!
கோவை
மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண் மருத்துவர், குடும்ப பெண்கள், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் முகநூலில் பழகி காதலிப்பதாக கூறி, காரில் அழைத்துச் சென்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம்
பறிக்கும் செயலில் ஒரு கும்பல் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளது.
இந்தச்
செய்தியில் இருக்கிற அம்சங்களை கவனித்துப் பாருங்கள்.
·
பாதிப்புக்குள்ளான் பெண்கள் அனைவரும் படித்தவர்கள். சிலர் மருத்துவர்கள். சிலர் பேராசியைகள்.
·
இவர்களுடைய பழக்கம் செல்போன் வழியே நடை பெற்றிருக்கிறது.
·
செல்போன் தொடர்புகள் மூலம் இந்தப் பெண்களுக்கு ஏமாற்றி வலை வீசப்பட்டிருக்கிறது.
·
ஒரு தொடர்பை படமாக்கி வைத்து அதன் மூலம் தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.
·
வீட்டில் செல்லமாக வளர்க்கப் படுகிற பெண்கள் வெளியே எவனோ ஒரு அயோக்கியனால் அடித்து கொடுமை பாடுத்தப்பட்டுள்ளனர். ‘
·
இந்த கொடூரம் கடந்த 8 ஆண்டுகளாக நடை பெற்றுள்ளது.
உள்ளத்தை
பதற் வைக்கிற வீடியோக்கள் பரவலான போது “இஸ்லாமிய சட்டப்படி இக்காமக் கொடூரன்களுக்கு தண்டனை வழங்கப் பட வேண்டும். என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை வைத்தனர்,
ஈரானில்
4 நாட்களில் சவூதியில் 7 நாட்களில் அது போல ஐக்கிய அரபுநாடுகளிலும் மற்ற சில இஸ்லாமிய நாடுகளிலும் மிக விரைவாக பொதுமக்கள் முன்னிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப் படுகிற என்பதை புள்ளிவிவரங்களோடு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
இதே
தொலைக்காட்சிகள்
தான் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் துன்புறுத்தப் படுவதாக அவ்வப்போது முதலைக் கண்ணீர்க் விடுகின்றன.
தற்போது
பாதிப்புக்குள்ளான
இளம் பெண்களின் ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்த்து கொதிப்படைந்துள்ள மக்களின் உணர்வுகள் இஸ்லாமின் தண்டனைகளை தேடுகின்றன.
நம்முடை
முதல் கோரிக்கை என்ன வென்றால்
·
இந்த கோடூர குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
·
தேர்தல் நெருங்குகிற நேரத்தில் இந்த கோடூரத்தை அரசியலாக்க எந்த தரப்பும் முயலக் கூடாது. அதைவிட மனசாட்சியற்ற செயல் வேறெதுவும் இருக்க முடியாது.
·
பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு காவல் துறையும் பொதுமக்களும் எச்சரிக்கையாக நடந்த கொள்ள வேண்டும்.
·
இந்த வழக்கு சிபிசிஐடி பிறகு சிபிஐ என வெகுவேகமாக கை மாற்றப் பட்டிருக்கீறது. சமீபத்தில் சிபிஐ அமைப்பே கேலிக்கூத்தாகியிருக்கிற நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப் படுவது ஒரு வேடிக்க்கையான நடவடிக்கையாகவே அமையும். எனவே இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தது போல உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் தனியாக விசாரணை நடை பெற வேண்டும்.
ஆனால் உயர் நீதிமன்றம் இந்த எதார்த்தமான கோரிக்கையை வேகமாக தள்ளுபடி செய்திருப்பதே கூட இந்த வழக்கில் அரசியல் தலையீடுகள் அழுத்தமாக இருக்கின்ற என்பதை புலப்படுத்துகிறது.
காவல் துறை அதிகாரி குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்காமலே இதில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என்கிறார்.
4 வீடியோக்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்று குற்றத்தின் தன்மையை மென்மையாக்க முயற்சிக்கிறார் என பொள்ளாச்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். . 4 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையிலும்,
சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள வீடியோ மூலமும் தெள்ளத் தெளிவாக தெரியவந்தும், கூட்டு பாலியல் பலாத்காரம் குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யாமல் தவிர்த்து இருப்பது குற்றவாளிகளின் மீது போலீஸார் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதை தெளிவாக காட்டுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இது போல மனிதாபிமானத்திற்கு நேர்கிற அவமானம் வேறெதுவும் இல்லை.
இதுவிசயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் நான் ஒரு அரசியல் வாதியாக அல்ல. இரு பெண்க குழந்தைகளின் தந்தையாக கேட்டுக் கொள்கிறேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கேட்டுக் கொண்டிருக்கிறார்; இது அவர் ஒருவருடை குரல் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலுமாகும்.
இந்த பாதிப்புக்கு இன்று சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது இப்போது சிலது மட்டும் வெளியே தெரிந்திருக்கலாம். ஏராளமானது இன்னும் வெளியே தெரியாமல் இருக்கலாம். ஆனால் இனி இது போன்ற கொடுமைக்கு யாரும் துணியாத அளவில் மிக கடுமையான தண்டனை இக்குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
இஸ்லாம் குற்றங்ங்களுக்கான தண்டனைகளுக்கு ஒரு கோட்பாடுவைத்திருக்கிறது, தண்டனைகள் குற்றவாளிகளுக்கான தண்டனையாக மட்டும் இருக்க கூடாது, அது மற்றவர்களுக்கான படிப்பினையாக மற்றவர்களை அச்சப் பட வைப்பதாகவும் இருக்க வேண்டும்.
وَالسَّارِقُ
وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ
اللَّهِ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ (38)
نَكَالًا பிறருக்கு எச்சரிக்கையாகவும் என்பது பொருள்.
குற்றவாளிகள் விசயத்தில் கடுமைய காட்டப்பட
வேண்டும். மென்மை கூடாது.
وكان عمر بن الخطاب يقول: " اشتدُّوا على السُّرَّاق، فاقطعوهم يدًا يدًا، ورجلا رجلا ".
சமீபத்தில் ஒரு திருமண மண்டபத்தில் ஒரு பெண்மணி வைத்திருந்த கைபையை அங்கு வேலை
செய்யும் ஒரு பெண் திருடி விட்டாள். அது கேமராவில் தெரிந்து விட்டது, அந்தப் பையில்
ஆயிரக்கணக்கில் பணம். செல்போன் மற்றும் வீட்டுச் சாவிகள் இருந்தன. பையை பறி கொடுத்த
பெண் காசு போன் போனா பரவாயில்லை. என் வீட்டுச் சாவிகள் இல்லைன்னா மிகவும் சிரமமாகி
விடுமே என்று பதறினாள். திருடிய பெண் பிடிபட்டாள். அவளை அங்கிருந்தோர் அடித்துவிட்டனர்.
இது கண்டு பதறிப்போன கைப்பைக்கு சொந்தக் காரப் பெண்மணீ அந்த திருடியை அழைத்து ஆறுதல்
சொல்லி 3 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தாள். இதை கருணை என்று அந்தப் பெண் கருதினாள்.
இது விசயம் எனது கவனத்திற்கு வந்த போது நான் கூறினேன். குற்றவாளிகள் விசயத்தில் உங்களுக்கு
இரக்கம் வந்து விட வேண்டாம் என்று குர் ஆன் எச்சரிக்கிறது, இதே பையில் உங்களுடையவும் உங்களுடை குடும்பத்தினருடைய
பாஸ் போர்ட் இருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் உங்களுடைய மகனுடைய திருமண நடைபெற இருக்கிற
நேரத்தில் இப்படி கைப்பை பாஸ்போர்ட்டுடன் திருட்டு போயிருந்தால் உங்களது நிலை என்ன
என்று கேட்டேன் ஐயோ என தலைப் பிடித்துக் கொண்டு அந்தப் பெண் உட்கார்ந்து விட்டார்.
பேருந்து நிலையங்களில் பைலை திருடிச் செல்கிறவர்கள் அதில் இருக்கிற சர்ட்பிகேட் களை
சாதாரணமாக சாக்கடையில் வீசி விட்டு சென்று விடுவார்கள். அதை பறிகொடுத்தவர்களின் நிலை
எவ்வளவு மோசமாகிவிடும்,
எனவே தான் குற்றவாளிகளிக்கு கடும் தண்டனை வழங்குவதில் இரக்கமே கூடாது என திருக்குர்
ஆன் வலியுறுத்துகிறது.
இப்போது பொள்ளாச்சியில் பாலியல் தொல்லைகளை அனுபவித்த பெண்களின் அச்சத்தை எண்ணிப்
பாருங்கள்! அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் எவ்வளவு தூரம் அயோக்கியர்களால அச்சுறுத்தப்பட்டிருப்பார்கள்
என்பதை எண்ணிப்பாருங்கள். இத்தகையோருக்கு எத்தகை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற வெறி
வரும்.
பாலியல் குற்றவாளிகளை வெறுமனே சிறையில் தள்ளுவது இஸ்லாமிய நடை முறை அல்ல. அத்தகையோர்
பொதுமக்கள் முன்னிலையில் உடல்ரீதியான தண்டனைகள்
வழங்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பாலியல் குற்றம் நிரூபிக்கப்படுமானால், குற்றவாளிகள்
கல் எறிந்து கொல்லப் பட வேண்டும். அல்லது சவுக்கடை தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இப்போதும் கூட சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரம்படி தண்டனை வழங்கப்படுகிறது. குற்றவாளிகள்
எதற்கு பயப்படுகிறார்களோ இல்லையோ பிரம்படிக்கு பயப்படுகிறார்கள்.
அதே போல தண்டனைகள் பொது மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்ப் அட வேண்டும். அப்போதுதான்
மற்றவர்களுக்கும் ஒரு பயம் வரும்.
நம்முடை வேண்டுகோளும் கோரிக்கையும் என்ன வென்றால் இஸ்லாம் தண்டனைகளில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. குற்றங்கள் உருவாகாமல் தடுப்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குற்றங்களுக்கு
தண்டனை கொடுத்துவிடுவதால் என்ன பயன்
இஸ்லாம் ஒரு அமைதியான
சமூகத்தை அனைத்து மக்களுடைய உரிமைகளும் மரியாதையும் பேனப்படுகிற ஒரு சமூகத்தை உருவாக்க
நினைக்கிறது,
அதனால் குற்றங்களை
தண்டிப்பதில் அல்ல குற்றங்களை தடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது
பொள்ளாச்சியை போன்ற
பெண்கள் துன்புறுத்தப்படுகிற நிகழ்வுகள் தடுக்கப் பட வேண்டுமானால் ஆண்களுக்கு தண்டனை
வழங்கினால் மட்டும் போதாது.
பெண்கள் பர்தா
நடை முறையை பேணவேண்டும்.,
பர்தா என்பது முஸ்லிம்
பெண்களின் அடையாள ஆடை அல்ல, அது பெண்னினத்தை காமக் கொடூரர்களிடமிருந்து பாதுகாக்கும்
வழிமுறையாகும்.
يَا
أَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ
يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلا
يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُوراً رَحِيماً ) الأحزاب/59
எனவே பெண்கள் தமது
உடல் தமது உரிமை என்று நினைப்பார்களானால் அந்த உரிமையை அடுத்தவர்கள் களவாட அவர்கள்
அனுமதிக்க கூடாது என்பதே இஸ்லாமின் கோட்பாடாகும்.
பர்தா என்பது உடலை
மூடிக் கொள்கிற ஒரு ஆடைக்கு மட்டுமான பெயரல்ல. அன்னிய ஆண்களை தம்பால் ஈர்த்துக் கொள்ளாமல்
இருப்பதாகும்
وَلا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا
يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعاً أَيُّهَا
الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ) النور/31
பெண்கள் நயந்து குலைந்து பேசுவதே கூட தவறானது.
يَا
نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ
فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ
قَوْلًا مَّعْرُوفًا (32)
பெண்கள் பேசுகிற
போது கம்பீரமாகவே பேச வேண்டும். பெண்களின் குலைவான கொஞ்சலான பேச்சே அவர்களுக்கு ஆபத்தாக
முடியும்.
பெண்கள் தேவையில்லாமல்
வெளியிடங்களுக்கு செல்வதே கூட தவறு தான்
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا
تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ
பொள்ளாச்சி விவகாரத்தில் மட்டுமல்ல சமீபத்தில் பெண்கள் பாதிப்புக்குள்ளான பல விவகாரங்களிலும்
பெண்களுக்கான ஆபத்து அவர்கள் இருந்த இடத்தை தேடி வந்ததல்ல. ஆபத்தான இடங்களுக்கு பெண்களை
தேடிச் சென்றதேயாகும்.
சமூகம் தந்திருக்கிற சுதந்திரம். சட்டபூர்வ
உரிமை. கல்விகற்ற சூழல். வேலை வாய்ப்பு உரிமை என்ற எந்த மாய்மால வார்த்தையிலும் பெண்
தன்னுடைய உடல் ரீதியான பலவீனமான நிலையை மறந்து விடக் கூடாது.
சமீபத்தில் பிரதமர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில்
ஒரு மாநில அமைச்சர் இன்னொரு பெண் அமைச்சரின் இடுப்பில் கை வைத்ததை உலகமே பார்த்தது.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் எந்த
நிலையிலும் குறையவில்லை. மேலும் அமைச்சர்கள் அளவிலும் கூட அது அதிகரித்தே இருக்கிறது
என்பதற்கு ஒரு உதாரணம் இது.
இதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை புரிந்து நடப்பதை தான் இஸ்லாம் பர்தா நடை
முறை என்கிறது.
وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ
الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ
என்ற வசனத்திற்கு முற்கால அறிஞர்கள் பெண்கள்
வாசனை பொருட்களை பூசிக்கொண்டு நடப்பது. தளுக்கி மினுக்கி ஆண்களை கவர்கிற வகையில் நடப்பது
என்று விளக்கம் கூறுனார்கள்.
இக்காலத்திலும் அது பெருந்தும் அதிகமாக தன்னை
அலங்கரித்து கொண்டு – அல்லது ஆபசமாக ஆடை அணிந்து கொண்டு வெளியே செல்கிற ஒவ்வொரு பெண்ணும்
ஆபத்தை துணைக்கு வைத்துக் கொண்டே செல்கிறாள்.
விஜய் தொலைக்காசியியில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியில்
மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி என்பவர் அதிகப் படியாக மேக்கப் போட்டுக் கொண்டு வெளியே
செல்கிற எந்தப் பெண்ணும் ஐ யம் அவைலபுள் “ நான் ரெடி என்று சொல்கிறாள் என்றே அர்த்தம்
என்று கூறினார்.
وَلَا
تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ என்ற வார்த்தைக்கு
இக்காலத்தில் பெண்கள் அறியாமையில் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் அனைத்து வழிகளுக்கும்
கூட பொருந்தும்.
பர்தாவின் நடைமுறையில் பெண்கள் தேவைப்பட்டால்
முகத்தையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
وعن عائشة رضي الله عنها قالت : كان
الركبان يمرون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم مُحْرِمات ، فإذا حاذوا
بنا أسدلت إحدانا جلبابها من رأسها على وجهها ، فإذا جاوزونا كشفناه . رواه أبو
داود ( 1833
வயதான் பெண்களுக்கும் கூட இது நல்லது.
وعن عاصم الأحول قال : كنا ندخل على
حفصة بنت سيرين وقد جعلت الجلباب هكذا : وتنقبت به ، فنقول لها : رَحِمَكِ الله
قال الله تعالى : ( وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاءِ اللاَّتِي لاَ يَرْجُونَ
نِكَاحاً فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَن يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ
مُتَبَرِّجَاتٍ بِزِينَةٍ ) ، قال : فتقول لنا : أي شئ بعد ذلك ؟ فنقول : ( وَأَن
يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ ) فتقول : هو إثبات الحجاب . رواه البيهقي ( 7 / 93 )
முகம்
தான் அழகின் மையப்புள்ளி . அதுதான்
ஆபத்துக்களின் ஆரம்பம். அது அழகு மட்டுமல்ல.
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி.
அந்த முகத்தை
அடையாளமாக கொண்டு தான் பேஸ் புக் உருவாக்கப் பட்டுள்ளது
பேஸ்புக் தான்
இன்றைய பெண்களின் பெரும் பிரச்சனை என்று கூறி சமீபத்தில் மாலை முரசு நாளிதழ் ஒரு கட்டுரை
வெளியிட்டிருந்தது.
அதன் ஆபத்திலிருந்து
எப்படி பாதுகாத்துக் கொள்வது என்ற வழிமுறைகளையும் அது கூறியிருந்தது.
உண்மையில் பேஸ்புக்கில்
கணக்கு வைத்துக் கொள்ளும் பெண்கள் ஆண்களின் வலையில் எளிதாகவே சிக்கிக் கொள்கிறார்கள்.
பொள்ளாச்சி
விவகாரத்தில் சீரழிந்த பெண்கள் அனைவரும் பேஸ்புக் வழியாகவே காமகொடூரர்களிடம் சிக்கி
இருக்கிறார்கள்.
பேஸ்புக்கில்
ஏதாவது ஒரு செய்திக்கு லைக் போடுவதன் மூலம் அல்லது ஒரு நடிகள் அல்லது அரசியல் தலைவர்
அல்லது பிடித்தமான பொழுது போக்கு அம்சங்களை ஸப்ஸ்கிரப் செய்வதன் மூலம் ஒரு பெண் தன்னுடைய
புகைப்படம் மற்றும் தன் விவரங்களை பல்லாயிரம் பேருக்கு பந்தி வைக்கிறாள்.
முகத்தில் எப்படி
ஒரு ஆளின் உணர்வுகளை தெரிந்து கொள்கிறோமோ அதே போல பேஸ்புக் பக்கத்திலும் ஒரு ஆளின்
உணர்வுகளை தெரிந்து கொள்ள முடியும்.
மனித விருப்பங்களை
படிக்கிற ஆற்றல் எதிரில் இருக்கிற மனிதர்களிடம் இருக்கிறதோ இல்லையோ பேஸ்புக் யூ டுயீப்
கூகுள் போன்ற ஆப் களுக்கு இருக்கிறது. ஒரு விசயத்தை ஒரு தடவை நீங்கள் தேடி அல்லது விரும்பி
பார்ப்பீர்கள் எனில் அது சம்பந்தமான தகவலைகளை படங்களை குறிப்புக்களை அந்த ஆப்கள் தேடி
உங்களது பக்கத்தை நிரப்பி விடும்.
உங்கள பக்கத்தை
பார்வையிடு கிற எவருக்கும் நீங்கள் எப்படி என்பது தெரிந்து விடும்.
இதை வைத்துத்தான்
பொள்ளாச்சியில் பெண்கள் சிக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள்
சிக்கியவர்களில்
இளம் பெண்கள் மட்டுமல்ல. மருத்துவர்கள். கல்லூரி பேராசிசையகள் உட்பட பலர் அடக்கம்
\
பெண்கள் அப்பாவித்தனமாக
தான் பேஸ்புக்கிற்குள் நுழைகிறார்கள்’ சமையல் குறிப்புக்கள் படிப்பதற்கு. அல்லது தான்
சமைத்தததை பிறருக்கு சொல்வதற்கு. அல்லது வீட்டுக் குறிப்புக்கள் சொல்ல என்று தான் இதில்
இறங்குகிறார்கள். அதற்கு கிடைக்கிற லைக்கு களில் மயங்குகிறார்கள்.
அந்த
(like) களில் தான் காமுகர்கள் அவர்களது (Life ) ஐ பறித்து விடுகிறார்கள் என்பதை அவர்கள்
உணர்வதில்லை.
தற்போது பெண்களிடம்
அதிகரித்து வருகிற டிக் டாக் செயலியும் இப்படித்தான் பெண்களுக்கு பெரும் ஆபத்தாக மாறிவருகிறது.
தங்களது வீடுகளில்
ஒரு ஜாலிக்காக நடித்துக் காட்டுகிற பெண்களின் வீடியோக்கள் போன் கைமாறு கிற போது காமுகர்களின்
கைகளுக்கு சிக்கி விடுகிறது.
தற்போது பெரும்
ஆபத்தாக உருவெடுத்திருக்கிற டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என்று மாநில அமைச்சரே கூறியிருப்பதிலிருந்து
இதன் தீமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவை எல்லாமே
தபர்ருஜுல் ஜாஹிலிய்யாவில் அடங்கும். அறியாது ஆபத்தில் சிக்கிக் கொள்வதில் அடங்கும்.
புகைப்படங்களை
பேஸ்புக்கில் அல்லது டிக் டாக்கில் பதிவேற்றுவது அல்லது வாட்ஸப்பிப் பகிர்ந்து கொள்வாது
பெரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில்
ஒரு நிச்சயம் நடந்தது. பெண்னின் புகைப்படத்தை எவனோ ஒருவன் அழகாக இருக்கீறது என்பதால்
தன்னுடைய செய்தியை சொல்ல வந்த இடத்தில் அந்த போட்டோவை பதிவிட்டிருக்க்றான். அது வெவ்வேறு
தளங்களுக்கு சென்று கடைசியில் ஒரு மோசமான தளத்திற்கு சென்று விட்டது. துபையில் அதை
பார்த்த மாப்பிள்ளை தனக்கு அந்த பெண் வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
சமீபத்தில்
எனக்கு வேதனையளித்த ஒரு முக்கிய்ச் செய்தி ஒரு பெண்ண இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட
ஒரு ஆண் அந்தப் பெண் வேறு ஒரு ஆணுடன் முன்பு தோளில் கை போட்டுக் கொண்டிருந்த புகைப்படத்தை
பார்த்து மனம் வெறுத்து அவளை விட்டு விலகிவிட்டான்.
பெண்கள் தங்களது
புகைப்படங்கள் வீடியோக்கள் எந்த வகையில் ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று தெரியாததால்
அவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொதுவாக் திருக்குர்
ஆன் பெருமானாருக்கு உத்தரவு களை சொல்லுகிற
குல் என்று
சமூகத்தை பொதுவாக சுட்டிக்காட்டித்தான் பேசும்.,
பர்தாவின் வசனத்தில்
அல்லாஹ் நபிக்கு அவர்களது மனைவி மக்களை சுட்டுக்காட்டி உத்தரவிட்டுள்ளான் என்பதை கவனிக்க
வேண்டும்
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ وَبَنَاتِكَ
நம்மில் ஒவ்வொருவரும் நமது பெண்களின் பாதுகாப்பான
வாழ்கைகான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
((كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤول عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْؤولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ ومَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ، -قَالَ: وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ: وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ- وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْؤولٌ عَنْ رَعِيَّتِهِ))
ஒரு வேளை பெண்கள் ஏதாவது தீய சக்திகளின் பாதிப்புக்கு
ஆளாக நேர்ந்தால் எந்த வித தயக்கமுன் இன்றி நம்மிடம் தெரிவித்து விடுவதற்கேற்ற தோழமையை
அவர்களிடம் நாம் உருவாகக் வேண்டும். நம்பிக்கை அளிக்க வேண்டும்.
இஸ்லாமிய சட்டங்களை விரும்புகிற மக்கள் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை
எடுத்து கொள்வர்கள் எனில் பொள்ளாச்சியில் நடை
பெற்றது போன்ற நிகழ்வுகள் இனி உலகில் எங்கும் நடை பெறாமல் தவிர்த்து விடலாம்.
அல்லாஹ் கிருபைசெய்வானாக!
No comments:
Post a Comment