வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 07, 2019

பாலினச் சமன்பாடும் இஸ்லாமும்


وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيهِنَّ دَرَجَةٌ

இன்று உலகம முழுவதிலும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லப் படுகின்றன
பெண்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வூட்டப்படுகிறது.

பெண்களின் உரிமையை நிலை நாட்டி அவர்களை  உணர்வும் உரிமைகளும் கொண்ட மனுஷிகளாக உலகில் நிலை நாட்டிய பெருமை இஸ்லாமிற்கு மட்டுமே இருக்கிறது.  

பாலின் சமன்பாடு குறித்த மிகச் சரியான பார்வை இஸ்லாமினுடையது. மிக எதார்த்தமானதும் கூட .

அல்பகரா அத்தியாயத்தின் 228 வது வசனத்தில் இடம் பெறக்கூடிய

وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيهِنَّ دَرَجَةٌ

ஒரு சிறு வாசகம் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும் ஆண்களின் எல்லையை தீர்மாணிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இஸ்லாத்திற்கு முந்தைய சமூக அமைப்பில் பெண் ஒரு ஜடப் பொருளாகவே கருதப்பட்டாள். அவளை விற்கிற உரிமை அவளைச் சார்ந்த ஆண்களுக்கு இருந்தது. அரிச்சந்திரன் தனது மனைவியை விற்றான் என அரிச்சந்திர  புராணம் கூறுகிறது .
திருமணத்திலும் விபச்சாரத்திற்கும் அவள் நிர்பந்திக்கப் பட்டாள். சொத்துரிமை அவளுக்கு கிடையாது. அவளுடைய சொத்தை ஆண்கள் பறித்துக் கொண்டனர், அவள் மனிதப் பிறவி தானா ? அவளுக்கு ஆன்மா இருக்கிறதா ? அவளுக்கு சொர்க்கப் பேறு கிடைக்குமா என்றெல்லாம் விவாதங்கள் நடை பெற்றுள்ளன.

ரோம் நாட்டின் அறிஞர் சபைகளில் இது குறித்த விவாதம் நடை பெற்ற போது பெண் அசுத்தமான பிராணி.. அவளது வாய் கட்டப்பட வேண்டும். அவள் சிரிக்கவோ போசவோ கூடாது. ஏனெனில் பெண்கள் சாத்தானின் வலைகள் என ரோம் அறிஞர்கள் தீர்மாணித்தனர்.

சீனாவில் பெண்களின் கால்கள் வளர்ச்சியடையக் கூடாது என சிறுவயதிலேயே  கால்களுக்கு பூட்டுப் போட்டு விட்டனர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்து 15 வருடங்கள் கழிந்த பிறகு கீ பி 586 வருடத்தில் பிரான்ஸ் நாட்டில் நடை பெற்ற ஒரு ஆய்வில் பெண் ஒரு மனிதப் பிறவிதான் ஆனால் ஆண்களுக்கு பணி செய்யவே அவள் படைக்கப் பட்டிருக்கிறாள் என்று தீர்மாணித்திருந்தனர்.

فقرر أحد المجامع في رومية أنها حيوان نجس لا رُوح له ولا خلود، ولكن يجب عليها العبادة والخدمة، وأن يُكَم فمُها كالبعير والكلب العقور لمنعها من الضحك والكلام؛ لأنها أُحْبُولَةالشيطان!
وكان أهم إنصاف للمرأة منَحَها إياه الشعبُ الفَرنسي في أوربة بعد ميلاد محمد صلى الله عليه وسلم وقبل بعثته أنْ قرروا بعد خلاف وجدال أن المرأة إنسان إلا أنها خُلقتْ لخدمة الرجل

وُلد محمد صلى الله عليه وسلم في سنة 571 من ميلاد المسيح عليه السلام، وأصدر الفَرنسيس هذا القرار النِّسْوِيَّ في سنة 586، أي بعد مولده بخمسَ عشرةَ سنةً


தத்துவ அறிஞர்களும் ,கலாச்சார பெருமையும் மிக்க நாடுகளில் பெண்களின் நிலை இவ்வாறிருந்த சூழ்நிலையில் தான் படிப்பறிவற்ற நாடோடிச் சமூகங்களாக இருந்த அரபுச் சமூகத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெண்களின் அந்தஸ்தையும் மரியாதையையும் நிலை நாட்டினார்கள்.

பெண் குழந்தைகள் உயுரோடு புதைத்த சமுதாயம் அது. அதற்கென்றே ஒரு இடத்தை வைத்திருந்தார்கள். அந்த இடம் இப்போதும் மஸ்ஜிதுல் ஹரமுக்கு அருகே இருக்கிறது.

 قيس بن عاصم المنقري التميمي என்பவர் தான் முதன் முதலாக பெண்குழந்தைகளை உயிரோடு புத்தைத்தவர். எட்டு பெண் குழந்தைகளள அவர் புத்தைத்தார்.  அரபு குலத்தாரில் முழர் குஜா ஆ குலத்தவரிடையே இந்தப் பழக்கம் இருந்ததாகவும் பனூ தமீம்களிடம் இது அதிகமாக இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.



روي أن رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم كان لا يزال مغتما بين يدي رسول الله صلى عليه وسلم: (مالك تكون محزونا) ؟ فقال: يا رسول الله، إن أذنبت ذنبا في الجاهلية فأخاف ألا يغفره الله لي وإن أسلمت ! فقال له: (أخبرني عن ذنبك).
فقال: يا رسول الله، إن كنتُ، من الذين يقتلون بناتهم، فولدت لي بنت فتشفعت إلى امرأتي أن أتركها فتركتها حتى كبرت وأدركت، وصارت من أجمل النساء فخطبوها، فدخلتني الحمية ولم يحتمل قلبي أن أزوجها أو أتركها في البيت بغير زوج، فقلت للمرأة: إني أريد أن أذهب إلقبيلة كذا وكذا في زيارة أقربائي فابعثيها معي، فسرت بذلك وزينتها بالثياب والحلي، وأخذت علي المواثيق بألا أخونها، فذهبت بها إلى رأس بئر فنظرت في البئر ففطنت الجارية أني أريد أن ألقيها في البئر، فالتزمتني وجعلت تبكي وتقول: يا أبت ! إيش تريد أن تفعل بي ! فرحمتها، ثم نظرت في البئر فدخلت علي الحمية، ثم التزمتني وجعلت تقول: يا أبت لا تضيع أمانة أمي، فجعلت مرة أنظر في البئر ومرة أنظر إليها فأرحمها، حتى غلبني الشيطان فأخذتها وألقيتها في البئر منكوسة، وهي تنادي في البئر: يا أبت، قتلتني.
فمكثت هناك حتى انقطع صوتها فرجعت.
فبكى رسول الله صلى الله عليه وسلم وأصحابه وقال: (لو أمرت أن أعاقب أحدا بما فعل في الجاهلية لعاقبتك).

திருக்குர் ஆன் இதை கடுமையாக கண்டித்தது எச்சரித்தது.

 وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ   بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ 
இந்தப் பழக்கத்தை இஸ்லாம்  அறவே இல்லாமல் செய்தது.

இன்று வரை அரபு நாட்டில் பெண்குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் இல்லை.  

நம்முடைய நாட்டில் ஒவ்வொரு மகப்பேறு மருத்துவ மனைகளிலும் அதே போல ஸ்கேன் செண்டர்களிலும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிவிக்கப் படாது. அவ்வாறு தெரிவிப்போருக்கு 50 ஆயிரம் பைனும் பத்து ஆண்டுகளுக்கு பணி செய்ய தடையும் விதிக்கப் படும் என்ற வாசகம் ஒட்டப் பட்டிருக்கிறது.

பெண் குழந்தை என்றால் அதை கருவிலேயே அழித்துவிட முயற்சிக்கிற சூழ்நிலை நமது நாட்டில் இன்றும் இருக்கிறது என்பதால் இந்த கட்டுப்பாடு செய்யப் பட்டிருக்கிற்து.

ஒவ்வொரு மகளிர் தினத்தன்றும் நாம் வேதனை பட வேண்டிய அவலமான அறிவிப்பு இது.

பெண்களுக்கு வாழும் உரிமையை இஸ்லாம் வழங்கியது என்பது மட்டுமல்ல. மரியாதையாக வாழும் உரிமையை வழங்கியது என்பது தான் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

அந்த வகையில் தான் وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيهِنَّ دَرَجَةٌ எனும் வாசகம் அதிக முக்கியத்துவம் பெருகிறது.

இன்று வரை நமது சமூக அமைப்பில் பெண்கள் செய்ய வேண்டிய கடமைகளை பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகிறது.

அவள் வீட்டை கவனித்துக் கொள்ள வேண்டும்.  குடும்பத்தை பராமரிக்க வேண்டும். ஒழுக்கத்தை பேண வேண்டும். கட்டுப்பாடு காக்க வேண்டும் என பெண்கள் விவகாரத்தில் அவர்களது கடமைகளை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஆண் சமூகத்திற்கு அவர்களது உரிமையை பற்றி அழுத்தமாக போதித்த மிக அருமையான வாசகம் இது.

பெண்களுக்கு என்னென்ன கடமைகள் இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்களோ அதே அளவுக்கு அவர்களுக்கான உரிமைகளும் உண்டு என்று அழுத்தமாக இந்த வசனம் கூறியது.

இந்த வசனத்திற்குப்பிறகு எத்தகைய ஒரு சமூகம் உருவானது என்றால் பெண்களின் உரிமைகளில் ஏதேனும் குறை வைத்து விடுவோமோ என்று ஒவ்வொரு விசயத்திலும் அச்சப்படுகிறவர்களாக ஆண்கள் மாறினார்கள்.

عن ابن عباس قال :( إني لأحب أن أتزين للمرأة كما أحب أن تتزين لي المرأة ؛ لأن الله يقول ( وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ ) ورواه ابن جرير وابن أبي حاتم 

உமர் ரலி அவர்களிடம் தன் மனைவி அதிகம் பேசுகிறார் என முறையிட ஒருவர் வந்தார். உமர் ரலி வீட்டுக்குள்ளிருந்து அவரது மனைவி கனதத குரலில் பேசுகிற சப்தம் வந்தது. உமர் ரலி அவர்கள் அதை சமாளிக்க மென்மையாக பேசிக் கொண்டிருந்தார்கள். வந்தவர் இங்கும் இப்படியா என ஏமாற்றத்தோடு திரும்ப முயன்றார். அதை கவனித்த உமர் ரலி அவர்கள் அவரை அணுகி விசாரித்தார்கள். என் நிலையை உங்களிடம் முறையிட வந்தேன். உங்களது நிலை அதை விட மோசமாக இருக்கிறதே என்றா அவர்.  உமர் ரலி கூறினார்கள். تحملتها لحقوق لها علي
  அவளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை என்னால் முழுமையாக செய்ய முடியவில்லை அதனால் அவளது முறையீடுகளை நான் சகித்துக் கொள்கிறேன் என்றார்கள் /



وفي بعض الآثار أن رجلاً جاء  إلى عمر رضي الله عنه يشكو إليه خُلق زوجته ، فوقف ببابه ينتظره ، فسمع امرأته تستطيل عليه بلسانها ، وهو ساكت لا يرد عليها ، فانصرف الرجل قائلا : إذا كان هذا حال أمير المؤمنين عمر بن الخطاب فكيف حالي ؟ فخرج عمر فرآه موليًا فناداه : ما حاجتك يا أخي ؟ فقال : يا أمير المؤمنين جئت أشكو إليك خُلق زوجتي واستطالتها علي ، فسمعتُ زوجتك كذلك ، فرجعتُ وقلتُ : إذا كان هذا حال أمير المؤمنين مع زوجته ، فكيف حالي ؟ فقال عمر : تحملتها لحقوق لها علي ، فإنها طباخة لطعامي ، خبازة لخبزي ، غسالة لثيابي ، مرضعة لأولادي ، وليس ذلك بواجب عليها ، وسكن قلبي بها عن الحرام ، فأنا أتحملها لذلك . فقال الرجل : يا أمير المؤمنين وكذلك زوجتي . قال : فتحملها يا أخي فإنما هي مدة يسيرة "

ஒரு கணவன் தனக்கு பசிக்கிற போது தன் மனைவிக்கும் பசிக்கும் என நினைக்க வேண்டும். தனக்கு எப்படி ஆடைகள் தேவையோ அது போல மனைவிக்கும் தேவை எனக் கருத வேண்டும். தனக்கு கோபம் ஏற்படுவது போல தன் மனைவிக்கும் கோபம் ஏற்படுவது இயல்பானதே என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . இதே போல ஒவ்வொரு விசயத்திலும் .

பெண்களின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டதால் அது என்ன என்பதை அறிந்து கொண்டு அதன் படி செயல்பட நபித்தோழர்கள் நினைத்தனர்.

பெண்களுக்கான உரிமைகளைப் பற்றி நினைத்தும் பார்த்திராத சமூகம் அது.


عن حكيم بن معاوية القشيري عن أبيه قال : ( قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ! مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ ؟ قَالَ : أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ ، وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ ، أَوْ اكْتَسَبْتَ ، وَلَا تَضْرِبْ الْوَجْهَ ، وَلَا تُقَبِّحْ ، وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ ) رواه أبو داود (2142) وقال : ( ولا تُقَبِّحْ ): أن تقول : " قبحك الله ".

நீ சாப்பிடுவதை நீ அணிவதை என்ற வார்த்தைகளில் உன்னைப் போல ஒருத்தியாகவே பெண்ண நீ கருத வேண்டும் என்ற அழுத்தமான வழிகாட்டுதல் தரப்பட்டிருக்கிறது.

ஆண் என்ற அகம்பாவத்திலும் உடல் வலிமை இருக்கிறது என்ற இருமாப்பிலும்  பெண்ணை இழிவுபடுத்தும் வேலைகளை செய்யக் கூடாது என்றும் இந்த நபி மொழிகளில் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஒரு பெண்ணின் மீது ஆண் தனது பலத்தை பிரயோகிக்க அனுமதிக்கப் பட்ட ஒரே சந்தர்ப்பம் எது வெனில்

அவள் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே

அப்பொதும் கூட அவளை மோசமாக தாக்குகிற அதிகாரம் ஆணுக்கு கிடையாது.

عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال في خطبته في حجة الوداع :  ( فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ ، فَإِنَّكُم أَخَذتُمُوهُنَّ بِأَمَانَةِ اللَّهِ ، وَاستَحلَلتُم فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ ، وَلَكم عَلَيهِنَّ أَنْ لا يُوطِئْنَ فُرُشَكُم أَحَدًا تَكرَهُونَهُ ، فَإِن فَعَلنَ ذَلِكَ فَاضرِبُوهُنَّ ضَربًا غَيرَ مُبَرِّحٍ ، وَلَهُنَّ رِزقُهُنَّ وَكِسوَتُهُنَّ بِالمَعرُوفِ 

உன்னைப் போல ஒருத்தி என பெண்ணைக் கருத எல்லா நிலையிலும் ஆண்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
وكان صلى الله عليه وسلم يقول: «إِنَّمَا النِّسَاءُ شَقَائِقُ الرِّجَالِ» 

தனது சபையில் பெண்கள் முறையீடு செய்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்,

قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ (1

ஒரு கணவனை பிடிக்க வில்லை என்றால் அது குறித்து முறையிடவும் விவாக விடுதலை பெற்றுக் கொள்ளவும் பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்.

 وروى البخاري في " صحيحه " عن ابن عباس أن امرأة ثابت بن قيس أتت النبي صلى الله عليه وسلم فقالت: يا رسول الله، ثابت بن قيس ما أعتب عليه في خلق ولا دين، ولكني أكره الكفر في الإسلام. فقال رسول الله صلى الله عليه وسلم: أتردين عليه حديقته؟ قالت: نعم. قال رسول الله صلى الله عليه وسلم: اقبل الحديقة وطلقها تطليقة.

ஒரு கணவன் போதிய பணம் தரவில்லை என்றால் மனைவி தானாக எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்றார்கள் பெருமானார்

قال النبي صلى الله عليه وسلم لهند بنت عتبة لما شكت عليه تقصير زوجها أبي سفيان في الإنفاق عليها وعلى أولادها فقال لها : ( خذي ما يكفيك وولدك بالمعروف


ஆண்களைப் போலவே திருமணத்தில் விருப்பம் தெரிவிக்க பெண்னுக்கு உரிமை உண்டு.
ஆண்களைப் போலவே மறுமணம் செய்து கொள்ள பெண்களுக்கும் உரிமை உண்டு.

ஆண்களைப் போலவே சொத்து வைத்துக் கொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு.

ஆண்களைப் போலவே குழந்தைகள் விசயத்தில் உரிமை கோர பெண்களுக்கு உரிமை உண்டு/

ஆண்களைப் போலவே விவாக விலக்கு கோரும் உரிமை பெண்களுக்கு உண்டு.

ஆண்களைப் போலவே தாம்த்ய சுகத்தை அனுபவிப்பதிலும் பெண்களுக்கு உரிமை உண்டும்.

ஆண்களைப் போலவே பொதுக்காரியத்தில் ஈடுபட பெண்களுக்கும் உரிமை உண்டும்.

குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் கூட ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை ஊண்டு .  وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ

ஆண்களைப் போலவே என்று இது போல பட்டியலிட்டாலும் அதற்கும் ஒரு எல்லையை இஸ்லாம் வகுத்திருக்கிறது.


அல்பகரா அத்தியாயத்தின் 228 வசனம் பெண்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசுகிற போது மிக கவனமாக ஒரு வார்த்தையை பயன்படுத்தியது.

وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ 
பெண்களுக்கு நியாயமான உரிமைகள் உண்டு.

நியாயமான என்ற வார்த்தைக்கு بِالْمَعْرُوفِ  ஒவொரு காலத்திலும் அந்தந்தப் பகுதிகளில் அறியப்பட்ட ஷரீஅத் அங்கீகரித்த நியாயமான உரிமைகள் உண்டு என்பது பொருளாகும்.

இந்தக் காலத்தில் திருமணமான ஒரு பெண் தான் மேலும் படிக்க வேண்டும் என்று விரும்பினால் . அதை கணவனிடம் கேட்கிற உரிமை அவளுக்குண்டு. அதை நியாயமாக அவன் பரிசீலிக்க வேண்டும். அதே நேரத்தில் வேறு எவனுடனோ மோட்டார் சைக்களில் வந்து அவள் இறங்கினால் அது நியாயமற்றதாகும்.

இந்த உலகில் ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் கட்டுப்பாடுகள், நியாயமான எல்லைகள் உண்டு, அந்தக் கட்டுப்பாடுகளை கடந்த சிந்தனைகளை உரிமைகள் என்று கோர முடியாது.

என் உடல் என் உரிமை என்று இன்றை பெண்ணியவாதிகள் பெருமையாக பேசுகின்றனர்.

உண்மையில் இது பழைய ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனையாகும். என் பொருள் என் உரிமை என்று அன்றைய ஆண்கள் பெருமை கொண்டு அலைந்ததை தான் இன்றையை பெண்கள் என் உடல் என் உரிமை என்கின்றனர்.  முந்தைய ஆணாதிக்க மனோபாவம் தவறானது என்றால் இந்த பெண்ணிய வாதமும் தவறானது தான்.

உரிமைகள் விசயத்தில் ஆண் பெண் இருபாலினத்தவருக்கும் நியாயமான உரிமைகள் மட்டுமே உண்டு என்பதை திருக்குர் ஆன் உறுதிப்படுத்துகிறது.

திருக்குர் ஆனின் மிக அழுத்தமான பார்வை ஒன்றை இங்கே கவனியுங்கள்.

பெண்களின் உரிமைகளை பற்றி பேசி முடித்த அதே வேகத்தில் திருக்குர் ஆன் இன்னொரு உண்மையையும் வெளிச்சமாக பேசி விடுகிறது.

وَلِلرِّجَالِ عَلَيهِنَّ دَرَجَةٌ

ஆண்களுக்கு பெண்கள் மீது ஓரளவு அதிகாரம் இருக்கிறது.

இந்த வார்த்தையின் பெருமை சொல்லி மாளாது.

தரஜத் என்ற வார்த்தை நகிராவாக சொல்லப் பட்டிருப்பதில்  ஓரளவு என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது.

இது ஆண்களின் அதிகார வரம்பை ஒரு எல்லைக்குள் கொண்டு வருகிறது.  ஜாஹிலிய்யா சமூகத்திலிருந்த ஆண்களுக்கான வரையற்ற அதிகாரத்தை இது மறுக்கிறது.
அனால் ஆண்களின் நியாயமான அதிகாரத்தை ஒப்புக்கொள்ளுமாறு பெண்களுக்கு இந்த வசனம் மிக எதார்த்தமான அறிவுறுத்தலை தருகிறது.

எங்கு வசிக்க வேண்டும் என்பதை கணவன் தீர்மாணிப்பான். ஆனால் என்ன சாப்பிடவேண்டும் எப்போது சாப்பிட வேண்டும் என்பது மனைவியின் உரிமை சார்ந்தாகும்.

உண்மையில் இந்த நியாமான அளவு அதிகாரத்தை ஒப்புக் கொண்டால் தான் சமூகம் சிறப்பக இருக்கும்.

மேற்கத்திய நாடுகளில் இந்த நியாயமான அதிகாரத்தை ஒப்புக் கொள்ள மறுத்ததால் பெண்களுக்கு சிரமங்கள் அதிகரித்திருக்கின்றன என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

சொந்தகுழந்தைக்கும் மனைவிக்கும் செலவுக்கு பணம் தருவதை கணவன்கள் சுமை என்று கருதுகிறார்கள். குடும்பத்திற்காக உழைப்பதை மனைவியின் மீது கட்டாயப்படுத்துகிறார்கள்.

அடுத்ததாக இறைவன் உடல் ரீதியாக ஆணையும் பெண்ணையும் சம வலிமையில் படைக்காத காரணத்தால் ஆணுடைய எதார்த்தான அதிகாரத்தை  பெண்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிற போது பெண் தாக்கப் படுகிறாள். உட்ச பட்சமாக கொலை செய்யப் படுகிறாள்.

அமெரிக்காவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கு ஒரு பெண் கணவன் அல்லது காதலனால் தாக்கப் படுகிறாள் என்று ஆய்வுகள் கூறுகின்றன,

எனவே ஆண்களின் நியாயமான அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதே பெண்களுக்கு சிறப்பானதாகும்’
பெண்களின் உரிமைகளை ஒப்புக்கொள்வதே ஆணகளுக்கு சிறப்பாகும்.

இதுவே இஸ்லாம் வழங்கும் பாலின சமத்துவம் குறித்த கோட்பாடாகும்.






1 comment: