வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 25, 2019

இஸ்லாம் சகிப்புத் தன்மை அற்ற மார்க்கமா ?


 إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا ۖ وَكَانُوا لَنَا خَاشِعِينَ (90)

கடந்த ஞாயிற்ற்குக்கிழமை இலங்கையில் நடை பெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் கடுமையாக காயம் அடைந்தனர்.
கடந்த அரை நூற்றாண்டுகாலமாக சண்டைக்களமாக இருந்த இலங்கையில் இது போன்ற ஒரு துயரம் நிகழ்ந்த்தில்லை. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு நடை பெற்ற பெரிய தீவிர வாத தாக்குதல் இது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பண்டிகை நாளில் மகிழ்ச்சியோடு தேவாலயங்களில் கூடியிருந்த பல நூறு பேரின் குடும்பங்கள் சொல்லணா துயருக்கு ஆளாகி நிற்கின்றன.
மிருகத்தனமான இந்த தாக்குதல் கண்டிக்கத்த்து. மனித இதயமுள்ளவர்கள் எவரும் இத்தகைய அப்பாவி பொதுமக்களை கொடூரமாக கொல்வதை  நினைத்தும் கூட பார்க்க மாட்டார்கள்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் தகுந்த ஆறுதலை தந்தருள்வானாக!  காயமுற்றோர் பரிபூரணமாக விரைவாக நலம் பெற அல்லாஹ் கிருபை செய்வானாக!
இந்தப் படு பாதகத்தை செய்த்து யார் என்பதை இலங்கை அரசு இன்று வரை உறுதிப்படுத்தவில்லை. இலங்கையில் உள்ள நேசனல் தவ்ஹீத் என்ற அமைப்பு இதில் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது என்றும் யூகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசு உண்மை குற்றவாளிகளை உலகிற்கு அடையாளப்படுத்த வேண்டும். அவர்கள் உலகத்தின் முன்னிலையில் கடும் தண்டனை தரப்பட வேண்டும். இத்தகைய பாதகத்தில் ஈடுபட்டோரை அதற்கு துணை நின்றோறை ஒரு போதும் மன்னிக்க முடியாது.
இந்த பாதகம் அரங்கேறிய உடன் நேசனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை உடனடியாக தொடர்பு படுத்தப் பட்ட்தற்கு காரணம் அவ்வமைப்பின் தலைவராக இருந்த முஹ்ம்மது ஜஹ்ரான் என்பவரின் பேச்சுக்களாக்கும். காபிர்கள் அனைவரும் கொல்லப் பட வேண்டியவர்கள். அவர்களை விட்டு எல்லா நிலையிலும் விலகி நிற்க வேண்டும் என்ற அவரது பேச்சு இந்த க் குற்றத்தில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது. இப்போது விசாரணையும் இதே திசையில் தான் நடை பெறுகிறது.
ஒரு வேளை இந்த சிந்தனை இஸ்லாமோடு தொடர்பு படுத்தப் படுமானால் அதை விட இஸ்லாத்திற்கு கேவலம் வேறு எதுவும் இல்லை.
இஸ்லாம் முஸ்லிம் அல்லாத  மற்ற மனிதர்களை சகித்துக் கொள்வதில்லை என்று அதன் கருத்து அமையும்.
காபிர்களை இஸ்லாம் சகித்துக் கொள்ளவில்லை என்ற கருத்தை சில  இளைஞர்கள் பல நாடுகளிலும் தீர்க்க மாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.  காபிராக இருந்தால் இன்று ஜிஸ்யா கொடு அல்லது கொல்லப்படுவாய் என்ற திக்கில் அவர்கள் பேசுகிறார்கள்.
அத்தகையோர் உலகிற்கு ஆபத்தானவர்களாகவும் உருவாகிவருகிறார்கள்.
முஸ்லிம்கள் எச்சரிக்கை அடைய வேண்டும்.
தீவிர முஸ்லிம்களாக காட்டிக் கொண்டு இத்தகை வாதங்களைச் செய்வோர் வரலாறு நெடுகிலும் பெரும் துயரங்களையு இழைத்திருக்கின்றனர்.
இஸ்லாமிய வரலாற்றில் வெளிப்ப்பட்ட முதல் கொள்கை பிளவு காரிஜியாக்கள். அவர்களை போல அழுது அழுது குர் ஆன் ஓதியவர்கள் இல்லை என்கிறது வரலாறு, தீனில் தங்களது அக்கறையை வெளிப்படுத்திக் கொள்ள அவர்கள் எந்த அளவுக்கு சென்றார்கள் என்றால் பாவம் செய்தவன் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டான் என்றனர். இவ்வளவு தூரம் தூய்மை பேசிய அவர்கள் தான் அலி ரலி அவர்களை கொலை செய்தனர்.
மன்னர் யஜீது மது அருந்து கிறார் அவர் எங்களோடு தொழுகைக்கு வரவில்லை என்று சொல்லி மதீனா நகரில் இருந்த சிலர் மன்னருக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அவர்களது வாத்த்திற்கு எந்த ஆதாரமும் இருக்க வில்லை. தங்களை மிகச் சுத்தமானவர்களாக காட்டிக் கொண்ட அந்த சிலர் மூத்த  சஹாபாக்களின் ஆலோசனையை கூட மதிக்காமல் அரசருக்கு எதிராக திரண்டனர். மதீனாவின் ஆளுநரை சிறைவைத்தனர்.  மதீனா மிகப்பெரிய தாக்குதலுக்கு ஆளானது. கணக்கற்றோர் ஷஹீதனார்கள். மதீனா நகரம் சூறையாடப் பட்டது. யவ்முல் ஹர்ரா என்ற தலைப்பில் அமைந்த அந்தப் பெருந்துயரம் இன்று வரை வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகவே இருக்கிறது.
எனவே இத்தகைய சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் வெகு தூரம் விலகி நிற்க வேண்டும். இத்தகையோரின் தாக்கம் நமது பிள்ளைகளுக்கு  ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இஸ்லாம் தன்னை அமைதி கருணையின் மார்க்கம் என்று அடையாளப்படுத்திக் கொண்ட மார்க்கமாகும்.
பிஸ்மில்லாவில் கூறப்பட்ட அல்லாஹ்வின் இரண்டு இயல்புகளும் ரஹ்மத் என்ற சொல்லிலிருந்து பிறந்த்தாகும்.
இஸ்லாமின் கருணை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. மற்றவர்களுக்கும் தான்.
அர்ரஹ்மான் என்ற வார்த்தைக்கு தமிழில் எப்படி பொருள் சொல்வோம் ? .
இந்த உலகில் நல்லவர் தீயோர் அனைவருக்கும் அருள்பாலிப்பவன்.
அல்லாஹ்வே காபிர்களுக்கும் அருள்பாலிப்பவனாக இருக்கிற போது நாம் என்ன தடை போடுவது.
அல்லாஹ்வின் ஏராளமான அஸ்மாவுல் ஹுஸ்னாவிலிருந்து  ரஹ்மான் எனும் பன்புதான் பிஸ்மில்லாவில் முதலில் கூறப்பட்டுள்ளது என்பது சகல மக்களிடமும் கருணை என்ற இந்த தீனின் இதயத்துடிப்பை வெளிப்படுத்துகிறது.
ஹிஜ்ரீ 9ம் வருடத்தை  عام الوفود   என்பார்கள்.  உலகின் பல பாகங்களிலிருந்து புதிய இஸ்லாமிய அரசோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக தூத்துகுழ்வினர் அந்த ஆண்டில் அதிகமாக வந்தனர். அப்போதுதான் நஜ்ரான் பகுதியிலிருந்து கிருத்துவ பாதிரிகளின் ஒரு குழுவும் மதீனாவிற்கு வந்து பெருமானாரைச் சந்தித்தது. அது பெருமானாரின் அதிகாரம் உச்சத்தை அடைந்த நேரம் . கிருத்துவர்களின் உரையாடல்களில் மரியாதையோ மென்மையோ இருக்க வில்லை.   அஸர் நேரம் வந்த போது திடீரென அவர்கள் தமது பிரார்த்தனைகளை செய்யத் தொடங்கினர். ஒரு மரியாதைக்கு கூட அவர்கள் பெருமானாரிடம் அனுமதி கேட்கவில்லை. மஸ்ஜிதுன்னபவில் கிருத்துவர்களின் பிரார்த்தனை நடை பெற்றது. அதை தடுக்க முற்பட்ட சஹாபாக்களுக்கு பெருமானார் ஸல்) அவர்கள் கூறினார்கள்.  دعوهم
இதை அடிப்படையாக வைத்து இப்போதும் கூட ஒரு நன்மைக்கான தேவை ஏற்படும் எனில் கிருத்துவர்களை பள்ளிவாசல்களில் அவர்களின் பிரார்த்தனைக்கு அனுமதிக்கலாம் என்று இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்
பெருமானாரின் காலத்தில் மஜுஸீகள் வாழ்ந்தனர். அவர்கள் நெருப்பு வணங்கிகள். அவர்களிடம் சொந்த சகோதரிகளை திருமணம் செய்கிற இயல்பு இருந்த்து, அவர்களது கொள்கைப்படி அவர்கள் வாழ அனுமதிக்கப் பட்டார்கள்.
ஒரு நாகரீகமான அரசு என்பது இந்தப் பக்குவத்தை கொண்ட்தாக தான் இருக்க முடியும்
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மாற்றுமத்த்தவரிமிருந்து ஜிஸ்யா பெறப்பட்ட்து என்றாலும் அவர்களுக்கு முழு மத  உரிமைகளும் வழங்கப்பட்டன,
காபிர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று இஸ்லாம் கருதியிருக்குமானால் அற்பமான காசை ப் பெற்றுக் கொண்டு அவர்களை முழு சுதந்திரத்தோடு வாழ அனுமதித்திருக்குமா ?
இஸ்லாம் பண்ப்பைத்தியம் கொண்ட மார்க்கமா ?
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்
யுத்தங்களின் போது பெண்கள் சிறுவர்கள் ஆல்யங்களில் அடைக்கலாகியிருப்போர் சண்டைக்கு வராத முதியவர்களை கொல்லக் கூடாது என்று இஸ்லாமிய யுத்த மரபு கூறுகிறது.

காபிர்கள் அனைவரும் கொல்லப் பட வேண்டியவர்கள் என்று இஸ்லாம் நினைத்திருக்குமானால் இப்படி ஒரு உத்தரவை செய்திருக்குமா ?
இஸ்லாம் ஆகி விடு!  அல்லது ஜிஸ்யா கொடு! அல்லது கொல்லப் பட தயாராக இரு! என்று மூன்று விருப்ப வாய்ப்புக்களை மட்டுமே இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுத்திருப்பதாக இலங்கைய சேர்ந்த ஜஹ்ரான் என்பவர் பேசியிருக்கிறார் .
எவ்வளவு ஆபத்தான பேச்சு அது.
இது இஸ்லாம் யுத்த முனையில் வைக்கிற நிபந்தனையாகும்.
كان النبيُّ - صلَّى الله عليْه وسلَّم - إذا بعث جيشًا أوْصاه بتقوى الله وعدم الاعتداء؛ فعنْ سُليمانَ بْنِ بُريدةَ عَن أبيه - رضي الله عنهما - قالَ: كانَ رَسُولُ اللَّهِ - صلَّى الله عليْه وسلَّم - إذا بَعَثَ أميرًا على جَيْشٍ أوْصَاهُ في خاصَّةِ نَفْسِه بِتَقْوَى اللَّه، ومَنْ مَعهُ مِنَ المُسْلمينَ خَيْرًا، وقالَ: ((اغْزوا بِاسمِ اللَّهِ، وفي سَبِيلِ اللَّهِ قاتِلُوا مَنْ كَفَرَ باللَّه، ولا تَغُلُّوا ولا تَغْدِرُوا ولا تُمَثِّلُوا، ولا تَقْتُلوا وَليدًا، فإذا لَقِيتَ عَدُوَّكَ مِنَ المُشْركِينَ فادْعُهُمْ إلى إحْدى ثَلاثِ خِصالٍ - أو خِلالٍ - أيَّتَها أجابُوكَ فاقْبَلْ مِنْهُم وكُفَّ عنهُم: ادْعُهُم إلى الإسْلامِ والتَّحَوُّلِ مِن دارِهِم إلى دارِ المُهاجِرِين، وأخْبِرْهُم إنْ فعَلُوا ذلك فإنَّ لَهُم ما للمُهاجِرِينَ وعَليْهم ما على المُهاجِرينَ، وإنْ أبوا أنْ يتحوَّلوا فأخْبِرْهُم أنَّهُم يَكونوا كأعْرابِ المُسْلمينَ يَجْري عليْهم ما يَجْري على الأعْرابِ، لَيْسَ لَهُم في الغنِيمَة والفَيْءِ شَيْءٌ إلاَّ أنْ يُجاهِدُوا، فإنْ أبَوْا فاسْتَعِنْ بِاللَّهِ عَلَيْهِم وقاتِلْهُم، وإذا حَاصَرْتَ حِصْنًا فأرادوكَ أنْ تَجْعَلَ لَهُم ذِمَّةَ اللَّهِ وذِمَّةَ نَبِيِّه، فلا تَجْعَل لهُم ذِمَّةَ اللَّهِ وَلا ذِمَّةَ نَبِيِّه واجْعَلْ لَهُم ذِمَّتَك وذِمَمَ أصْحَابِك؛ لأنَّكُمْ إنْ تُخْفِروا ذِمَّتَكُم وذِمَمَ أصْحَابِكُمْ خَيْرٌ مِنْ أنْ تُخْفِرُوا ذِمَّةَ اللَّهِ وذِمَّةَ رَسُولِه، وإذَا حَاصَرْتَ أهْلَ حِصْنٍ فأرادُوكَ أنْ تُنْزِلَهُمْ على حُكْمِ اللَّهِ فلا تُنْزِلُوهُمْ ولكِنْ أنْزِلْهُم على حُكْمِكَ؛ فإنَّكَ لا تَدْري أتُصِيبُ حُكْم اللَّه فِيهِم أمْ لا؟ أو نحو هذا))

திர்மிதி
யுத்த முனையில் இப்படி மூன்று வாய்ப்புக்களை வழங்கியது கருணையின் அடையாளமாகும்.
பல பகுதிகளிலும் எதிரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதே இல்லை. பிடி பட்ட வுடன் கொல்லப் படுவார்கள். 
முஸ்லிம்கள் ஸ்பெயினிலிருந்து விரட்டப் பட்ட போது அவர்களுக்கு இரண்டு சாய்கள் தரப்பட்டன. ஒன்று கிருத்துவராகி விடு!  அல்லது உயிருடன் எரிந்து போ
இஸ்லாம் மக்களை பாதுகாக்க மூன்றாவது ஒரு வாய்ப்பை வைத்த்து. எங்களது ஆட்சிக்கு கட்டுப்படுவதன் அடையாளமாக ஒரு சிறு தொகை கொடுத்துவிட்டால் எனக்குரிய உரிமைகள் அனைத்தும் இந்த நாட்டில் உனக்கும் உண்டு என்று இஸ்லாம் கூறுகிறது.
எனவே இஸ்லாமின் மூன்று வாய்ப்பு என்பது மக்களை கொல்வதற்காக உருவாக்கப் பட்ட வாய்ப்பல் மனித சமூகத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப் பட்ட வார்த்தை.
அதை தவறாக பயன்படுத்துகிறார்கள் தீய சக்திகள்
முஸ்லிம்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். தம்மை சார்ந்திருப்பவர்களுடன் ஒரு வெளிப்படையான விவாத்த்திற்கு இஸ்லாமிய இளைஞர்கள் தயாராக வேண்டும்.
மக்களுக்கு வாழ்வையும் பாதுகாப்பையும் அளிப்பதற்கு ஜிஸிய்யா என்ற ஒரு வாய்ப்பை இஸ்லாம் பயன்படுத்திக் கொண்டது  என்ற காரணத்தால் தான் முஸ்லிம் நாடுகளில் வாழ்ந்த மாற்றுமத்த்தைச் சார்ந்தவர்கள் அதை வரவேற்றனர்.
ஜெரூசலத்தை கைப்பற்றிய அபூ உபைதா ரலி அவர்கள் வேறு ஒரு வேலை காரணமாக அங்கிருந்து புறப்பட்ட போது கிருத்துவர்கள் தமது தேவாலய்னக்களுக்கு சென்று முஸ்லிம்கள் தங்களது ஊருக்க் திரும்பி வர வேண்டும் என பிரார்த்தித்தார்களாம். திரும்பி  வாருங்கள் ஜிஸியா தர எங்களுக்கு பரிபூரண சம்மத ம் என்று கூறினார்கள் என வரலாறு கூறுகிறது.
وعندما ذهب عمر بن الخطاب رضي الله عنه إلى مدينة القدس وذهب أبو عبيدة بن الجراح رضي الله عنه إلى الشام استقبلوا بكل مودة إلى درجة أن المسلمين عندما اضطروا للانسحاب من مدينة دمشق لجأ النصارى ورهبانهم إلى الكنائس داعين من الله جل جلاله برجوع المسلمين إليهم، وقالوا للمسلمين: "ندعوا الله أن ترجعوا إلنا، نحن راضون بأداء الجزية والبقاء في حمايتكم"

மக்களை வாழ வைப்பதற்கான ஒரு திட்டமே ஜிஸிய்யா என்பது
இத்தகை நடை முறை கொண்ட ஒரு மார்க்கத்தை பிறமத்த்தவர்களை சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்று அடையாளப்படுத்துவது எவ்வளவு துரதிஷ்டமானது.
எவ்வளவு தான் எதிரியாக இருந்தாலும் அவனிடம் இஸ்லாமை எடுத்துச் சொல்லாமல் சண்டைக்கு தயாராக கூடாது.
இது அல்லாஹ்வுடைய சுன்னத்
مَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّى نَبْعَثَ رَسُولاً
முஹம்மது  நபி ஸ்ல் அவர்களும் யுத்த்த்திற்கு வருகிறவர்களுக்கு முதலில் இஸ்லாத்தை எடுத்துரைப்பதையே முதல் கடமையாக்கினார்கள். இஸ்லாமை எடுத்துச் சொல்லாமல் சண்டையிடுவது கூடாது.
பிறகு தற்கொலை தாக்குதலை இஸ்லாம் எப்படி ஏற்கும்.
முஸ்லிம் நாடல்லாத பகுதிகளில் வசிக்கிற மக்களின் முதல் கடமை மற்றவர்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்வது இரண்டாவது அந்த நாடுகளில் வாழ்கிறவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதற்காக தொல்லை கொடுக்காமல் அவர்களது உடைமை சேதப்படுத்தாமல் அவர்களது மரியாதை பங்க்ப்படுத்தாமல் இருப்பது என்று இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.  மற்றவர்களோடு சமூக காரியங்களில் இணைந்து பணியாற்றலாம் என்றும் அனுமதியளித்துள்ளார்கள்.
கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் பிற சமய மக்களோடு நடபுறவு  பாராட்டி வாழ்வதே இஸ்லாமாகும்.
இஸ்லாமின் யுத்த கோட்பாட்டை பொதுவான இஸ்லாமின் கோட்பாடாக சித்தரித்து குழப்பத்தை ஏற்படுத்துவோரிடமிருந்து நம்மையும் நமது பிள்ளைச் செல்வங்களையும் பாதுகாப்பது இன்றைய மிக முக்கிய தேவை
முஸ்லிம்கள் நல்ல காரியங்களை  செய்யவே விரவார்கள் என்று குர் ஆன் கூறுகிறது. தீய காரியங்களை செய்ய தீவிரம் காட்டுவோர் ஒரு போதும் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள அருகதை உடையோர் அல்ல.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!


No comments:

Post a Comment