வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 18, 2019

நின்னை சரணடைந்தேன் இறைவா!



فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (159)

தேர்தலில் வாக்களித்து விட்டோம். தீர்வை அல்லாஹ்விடம் ஒப்படைப்போம்.

ஒரு காரியத்திற்கு முஃமின்கள் நீள நீளமாக சிந்திக்கலாம். ஆழ அகலமாக திட்டமிடலாம். திட்டங்களை எல்லாம் சிறப்பாக செய்து விட்டு வெற்றிக்கான பொறுப்பையும் காரணத்தையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட வேண்டும்.

முஃமின்களின் இறுதி நம்பிக்கை அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும்.

யுத்தங்களுக்கான மந்திராலோசனைகளைப் பற்றி பேசுகிற போதுதான் அல்லாஹ் இறுதியில் இந்த வாசகத்தை சொல்லுகிறான்.

 فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (159

ஒரு யுத்தம் எனில் அதற்கு எவ்வளவு யோசனைகள் தேவைப்படும் ? எத்தகைய நுனுக்கமான திட்டங்கள் போடப்படும். ?

ரஷ்யா ஸ்கட் ரக ஏவுகணைகளை தயாரித்தது. நீண்ட தூரம் சென்று இலக்கு தவறாமல் தாக்கும் வல்லமை கொண்டது அது. அமெரிக்கா எப்படி யோசித்தது என்றால் அதை விட வல்லமை கொண்ட ஏவுகணை களை தயாரித்து எதிரியின் இலக்கை அழித்து விடலாம் . ஆனால் ஸ்கட்டின் தாக்குதலினால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா யோசித்தது. ஸ்கட் புறப்பட்ட சிக்னல் கிடைத்த உடனே அது தன் எல்லையில் நுழைந்து விட்டதை உஷார் படுத்த ஒரு சைரனை அது உருவாக்கியது. அத்தோடு அந்த ஸ்கட் ஏவுகணை வருகிற திசையில் அதை நேருக்கு நேர் எதிர் கொண்டு வானத்திலேயே அழித்து விடக் கூடிய பேட்ரியாட் என்ற ஏவுகணை எதிர்ப்பு ஏவுகனையை அது உருவாக்கியது. ஸ்கட் ஏவுகணையின் பலவீனம் என்ன என்பதை அமெரிக்கா தெரிந்து கொண்டது. ஸ்கட் ஏவுகனை அதிக வெப்பத்தை உமிழ்ந்தது. எனவே வெப்பத்தை தேடிச் செல்கிற வகையிலான ஏவுகனையை வடிவமைத்து ஸ்கட்டை மட்டுமல்ல ரஷ்யாவையும் வெற்றி கொண்டது அமெரிக்கா

மனிதர்கள் யுத்தங்கள் என்று வருகிற போது எவ்வளவு துல்லியமாக திட்டமிடுகிறார்கள்.

ஹுதைபிய்யாவின் போது மக்காவின் எதிரிகள் பெருமானாரைப் பற்றிய செய்தியை அறிந்து கொள்ள மக்காவிலிருந்து மதீனா வரை குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக ஆட்களை நிறுத்தி வைத்து செய்தி சேகரித்தனர்.


காண்ஸ்டாண்டி நோபிளை வெற்றி கொண்ட முஹம்மது அல் பாத்திஹ் ஒரு நீண்ட தொலைவுக்கு படகுகளை தரை வழியாக கொண்டு சென்றார்; நீண்ட தொலைவுக்கு பலகைகளை வரிசையாக படுக்க வைத்து அவற்றை வழுவழுப்பாக்கி அதில் படகுகளை இழுத்துச் செல்லச் செய்து எதிர்கள் எதிர்பாராத வகையில் அவர்களது கோட்டைக்கு முன்பிருந்த பாதுகாப்பான நீர் நிலையில் இறக்கினார். 800 ஆண்டுகளாக தப்பித்து வந்த ரோமர்களின் அரசு முஹம்மது அல் பாத்திஹிடம் வீழ்ந்தது. காண்ஸ்டாண்டி நோபிள் பணிந்தது.

இது போல யுத்தங்களுக்கான யோசனைகளும் திட்டங்களும் அபரிமிதமானவையாக இருக்கும்.

இந்த வசனம் கூறுகிறது.

அத்தகைய துல்லியமான திட்டமிடுதல்களுக்கு பிறகு உன் திட்டப்படி அல்ல அல்லாஹ்வின் நாட்டப்படியே எதுவும் நடக்கும் என்று உறுதி வை

இதற்கு தவக்குல் என்று பெயர்,

தவக்குலுக்கு மிக எளிமையாக விளக்கம் சொல்வதானால் இப்படியும் சொல்லலாம்.

நாம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து விட்டு முடிவை அல்லாஹ்விடம் விடுவது.

அதாவது வியாபார நிறுவனத்தை திறந்து வைத்து தேவையான சரக்குகளை வைத்துக் கொண்டு வியாபாரத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து விட்டு இலாபம் தருவது அல்லாஹ் என்று உறுதி வைப்பது.

முஃமின்களிடம் இந்த தவக்குள் அழுத்தமாக இருக்க வேண்டும்.

وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ  [المائدة: 22]

தவக்குல் ஈமானின் அடையாளம்.

فالمؤمن الصادق في إيمانه هو الذي يتوكل على الله أبداً. أما المنافق لا يتوكل على الله بل يتوكل على نفسه وعلى غيره من المخلوقات.


தவக்குல் என்றால் என்ன ?

தவக்குல் என்பதன் பொருள் நாம் செய்ய வேண்டிய காரியங்களை செய்து விட்டு அல்லாஹ் தான் வெற்றி தோல்வியை தருகிறவன் என்று நம்புவதாகும். எதையும் செய்யாமல் இருந்து விட்டு வேதாந்தம் பேசுவதல்ல, அது ஈமானிய இயல்பல்ல.

ஒட்டகையை கட்டி வைத்து விட்டு அல்லாஹ்விடம் தவக்குல்.

قال رجل لرسول الله صلى الله عليه وسلم: أعقلها وأتوكل أم أطلقها وأتوكل قال: "بل أعقلها وتوكل ". [رواه الترمذي


நாம் செய்ய வேண்டிய காரியங்களை செய்து விட்டு

فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ  [التوبة: 129].

ஒருவருக்கு இஸ்லாமை பற்றி எடுத்துரைக்கிற போது அதை அவர் புறக்கணித்த படி சென்று விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கூறுகிற போது அல்லாஹ் இப்படி கூறுகிறான்.

அவருடைய ஹிதாயத் நான் பேசுகிற வார்த்தைகளில் இல்லை.  எனது வாத திறமையில் இல்லை. அல்லாஹ் நாடினால் மட்டுமே அவர் தீனுக்கு வருவார் என்று உறுதி கொளவ்தே தவக்குலாகும். ‘

இந்த எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள

  حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ  என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.

(நாம் ஒரு  நல்ல தீர்வை எதிர்பார்த்து வாக்களித்து விட்டோம். இந்த துஆவை ஓதிக் கொள்வோம்.)

இந்த வாசகத்தில் உள்ள وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ  என்ற சொல் அல்லாஹ்வின் மாபெரும் பேரரசை குறிப்பிடுகிறது. ஆட்சிக் கட்டிலில் அவனுடையதுதான் மிக வலிமை வாய்ந்தது என்ற சிந்தனைய நமக்கு தருகிறது.

தப்ஸீர் தப்ரீ அருமையாக விளக்குகிற்து.

لأن " العرش العظيم "، إنما يكون للملوك, فوصف نفسه بأنه " ذو العرشدون سائر خلقه، وأنه الملك العظيم دون غيره، وأن من دونه في سلطانه وملكه، جارٍ عليه حكمه وقضاؤه.

அல்லாஹ்தான் சர்வ சக்தி மிக்க சர்வதேச மத்திய அரசுக்கு சொந்தக் காரன். அவன் நினைத்தால் எந்த அரசையும் உருவாக்குவான். நிலைக்கச் செய்வான். அழித்தும் விடுவான்.

அல்லாஹ் நமக்கு நல் அரசை தரட்டும்.

ஆட்சியதிகாரம் விவாகாரத்தில் மட்டுமல்ல , அனைத்டு காரியங்களிலும் நாம் அல்லாஹ்வின் மீது முழுமையான தவக்குல் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

தவ்க்குல் எந்த அளவு ஆழமாக இருக்கிறதோ அதே அளவு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்



عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ , رَضِيَ اللَّهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ : " لَوْ أَنَّكُمْ تَتَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا " رواه أحمد 
".

அல்லாஹ்வின் மீது ஏன் தவக்குல் வைக்க வேண்டும். ?

அவனே எப்போதும் இருப்பவன்.  الْحَيِّ  அவனே எல்லம் அறிந்தவன். خَبِير

وعن أبى قدامة الرملي قالقرأ رجل هذه الآية: ﴿ وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِ وَكَفَى بِهِ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيراً [الفرقان: 58] فأقبل علىّ سليمان الخواص وقال يا أبا قدامة ما ينبغي لعبد بعد هذه الآية أن يلجأ إلى أحد بعد الله في أمره ثم قال: انظر كيف قال الله: ﴿ وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لا يَمُوتُ ﴾ فأعلمك أنه لا يموت وأن جميع الخلق يموتون ثم أمرك بعبادته فقال: ﴿ وَسَبِّحْ بِحَمْدِهِ ﴾ ثم أخبرك بأنه خبير بصير ثم قال: يا أبا قدامة: لو عامل أحد الله بحسن التوكل وصدق النية له بطاعته لاحتاجت إليه الأمراء فمن دونهم فكيف يحتاج أحد إلى أحد والموئل والملجأ إلى الغنى الحميد".


அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பவர்களை சிங்கமும் சீண்ட முடியாது.– பிரபல இஸ்லாமிய வரலறு.

சிங்கம் கடித்து குதறிவிடுமே என்று பயப்படாமல் சிங்கம் தொட்டு விட்டால் அது நஜீஸா என்று ஆய்வு செய்து கொண்டிருந்த அபுல் ஹஸன் அஜ்ஜாஹித்.

அஹ்மது பின் தூலூன் ஹிஜ்ரீ 3 ம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மாமன்னர்.

أحمد بن طولون أحد ولاة مصركان من أشد الظلمة حتى قيل: إنه قتل ثمانية عشر ألف إنسان صبراً - أي يقطع عنه الطعام والشراب حتى يموت - وهذا أشد أنواع القتل، فذهب أبو الحسن الزاهد امتثالاً لقوله عليه الصلاة والسلام: "أفضل الجهاد كلمة حق عند سلطان جائر" فدخل عليه وأخذ ينصحه في الله وقال له: إنك ظلمت الرعية وفعلت كذا وكذا وخوفه بالله فغضب ابن طولون غضباً شديداً - وأمر بأسد يجوّع ثم يطلق على أبى الحسن.

يا له من موقف رهيب.. لكن نفس أبى الحسن الممتلئة بالإيمان والثقة بالله جعلت موقفه عجيباً عندما أطلقوا الأسد عليه جعل يزأر ويتقدم ويتأخر وأبو الحسن جالس لا يتحرك ولا يبالى والناس ينظرون إلى الموقف بين باك وخائف ومشفق على هذا العالم الورعِ.. ولكن ما الذي حدث؟

تقدم الأسد وتأخر وزأر ثم سكت ثم طأطأ رأسه فاقترب من أبى الحسن فشمّه.. ثم انصرف عنه هادئاً ولم يمسسه بسوء.. وهنا تعجب الناس وكبّروا وهللوا.

ولكن في القصة ما هو أعجب: لما يئس ابن طولون وأخذته الدهشة استدعى أبا الحسن وقال له: فيما كنت تفكر والأسد عندك وأنت لا تلتفت إليه؟
قالكنت أفكر في لعاب الأسد إن مسنى أهو طاهر أم نجس؟
قال: ألم تخف من الأسد؟ قال: لا. إن الله قد كفاني ذلك.

أليس الله قد قال﴿ أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ  [الزمر: 36] أليس الله قد قال﴿ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ  [الطلاق: 3].

தவக்குலினால் கிடைக்கும் நன்மைகள்

1.       தவக்குல் அல்லாஹ்வை நன்பணாக்கும் வழி

وقال رجل لمعروف الكرخيأوصني فقال: " توكل على الله حتى يكون أنيسك وجليسك وموضع شكواك واعلم أن الناس لا ينفعونك ولا يضرونك ولا يعطونك ولا يمنعونك

2.   தவக்குல் உயர்ந்த ஈமானின் அடையாளம். அது சிறந்த இலாபத்தை தரும்.

قال عليه الصلاة والسلام: " يدخل الجنة أقوام أفئدتهم مثل الطير " [رواه مسلم].


3.   நாடியது சீக்கிரம் நடக்கும் . அதிக சிரமம் இல்லாமல்

قال  بعض السلفَتوكل تُسق إليك الأرزاق بلا تعب ولا تكلف.

வெற்றியும் பாதுகாப்பும் நிம்மதியும் ரிஜ்கும் அவர்களை தேடி வரும்.

قال صلى الله عليه وسلم: " لو أن ابن آدم هرب من رزقه كما يهرب من الموت لأدركه رزقه كما ُيدركه الموت " [رواه أبو نعيم فى الحلية

இமாம் ஷாபியின் கவிதை

توكلت في رزقي على الله خالقي  
وأيقنت أن الله لا شك رازقي  
وما يك من رزقي فليس يفوتني  
ولو كان في قاع البحار العوامق  
سيأتي به الله العظيم بفضله  
ولو لم يكن منى اللسان بناطق  
ففي أي شيء تذهب النفس حسرة  
وقد قسم الرحمن رزق الخلائق


ஹாதமுல் அஸம்மு ஹஜ்ஜுக்குப் போனார். மக்கள் யார் எங்களை காப்பாற்றுவார் என அழுதனர். அவருடைய மகள் நமக்கு ரிஜ்கு அளிப்பவன் அல்லாஹ் என்றார். அன்று மாலைக்குள் அவர்களது வீட்டிற்கு மன்னர் கொண்டு வந்து செல்வத்தை கொட்டினார். அந்த மகள் அழுதார்.
மக்லூக் கருணை காட்டினாலே இப்படி என்றால் காலிக் கருணை காட்டினால்  எப்படி இருக்கும். ?

عزم حاتم الأصم على الحج عاماًفأخبر أبناءَه فبكوا وقالوا: إلى من تكلنا؟ وكانت له ابنة مباركة قد رزقها الله تعالى نعمة الإيمان والتوكل واليقين فقالت: دعوه يذهب فليس برازق فخرج فباتوا جياعاً فجعلوا يوبخون تلك البنت فقالت: اللهم لا تُخجلنى بينهم فمر بهم أمير البلد فقال لبعض أصحابه: اطلب لي ماء. فناوله أهل حاتم كوزاً جديداً وماءاً بارداً فشرب وقال: دار من هذه؟ فقالوا: دار حاتم الأصم فرمى فيها صرة من ذهب وقال: من أحبني فليصنع مثل ما صنعت فرمى العسكر ما معهم من المال في هذه الدار. فجعلت البنت تبكى فقالت أمها: ما يبكيك وقد وسع الله علينا فقالت: لأن مخلوقاً نظر إلينا فاغتنينا فكيف لو نظر الخالق إلينا.


4.   மனவலிமை

அல்லாஹ்வின் மீது தவக்குல் இல்லாதவர்கள் தங்களுக்கு ஏற்படுகிற சிறு சிரமங்களுக்கும் தளர்ந்து போய்விடுவார்கள். தவக்குல் கொண்டவர்களோ பெரும் துன்பங்களிலும் கூட தைரியமாக இருப்பார்கள்.

யாருடைய பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வில்லையோ அவரை என்னிடம் கொண்டு வந்து விடு. – இப்ராஹீம் பின் அத்ஹம்

قال علىّ بن بكارشكا رجل إلى إبراهيم بن آدهم كثرة عياله فقال له: يا أخي انظر كل من في منزلك ليس رزقه على الله فحوّله إلى منزلي "



5.   சைத்தானிடமிருந்து பாதுகாப்பு

قال تعالى﴿ إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ  [النحل: 99].

وقال عليه الصلاة والسلام: " من قال - يعنى إذا خرج من بيته - بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله يقال له: كفيت ووقيت وهُديت وتنحى عنه الشيطان. فيقول لشيطان آخر: كيف لك برجل قد هُدِى وكُفِى وَوُقِى " [رواه الترمذى


மிக அருமையாக ஒருவர் சொன்னார் .

காசு பணம் குறைந்து விடும். அறிவு சருகி விடும். பதவி இழிவு படுத்தி விடும். அல்லாஹ்வை நம்பினால் எந்தக் குறைவும் இல்லை. சருகுதல் இல்லை. இழிவு இல்லை.

صدق من قال: "من اعتمد على ماله قل ومن اعتمد على عقله ضل ومن اعتمد على جاهه ذل ومن اعتمد على الله لا قل ولا ضل ولا ذل".

தேர்தலில் வாக்களித்து விட்டோம்.  அந்த மிஷின்களை ஒரு மாதம் அடை காக்க வேண்டுமே . இன்னும் ஒரு மாதத்திற்கு நாட்டில் தேர்தல் நடை பெற வேண்டியுள்ளது. வேறு வகையான காரணங்கள் ஏது இடையில் வந்து தீயவர்களுக்கு சாதகமாகி விடக் கூடாதே ! தேர்தலுக்குப் பிறகும் கூட அரசியல் குள்ள நரித்தனத்தில் தீயவர்கள் ஆட்சியில் தொடர்ந்து விடக் கூடாதே! என்றெல்லாம் ஏகப்பட்ட கவலைகள் நம்மிடம் இருக்கிறது.

நமது கடமையை செய்து விட்டோம். பொறுப்பை அல்லாஹ்விடம் விட்டு விடுவோம். முடிந்தவரை ஹஸ்புனல்லாஹ் சொல்லிக் கொண்டிருப்போம். அல்லாஹ் நமக்கு நல்லாட்சியை தருவான். அதையும் விரைவாக தருவான்.

தைரியமாக இருப்போம். கவலை வேண்டாம்.

எது நடந்தாலும் அது அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது.               தவக்குல் பல நிலைகளை கொண்டது.
அதன் இறுதி நிலை தப்வீழ் அல்லாஹ்வை சரணடைவது – அதாவது அல்லாஹ்வின் விதி எதையும் ஏற்றுக் கொள்வது. –
ஆன்மீக அறிஞர்கள் கூறுவார்கள்.
وصاحب التفويض يرضى بحكمه
فقال ابن القيم ذلك في مدارج السالكين أن المفوض يتبرأ من الحول والقوة ويفوض الأمر إلى صاحبه من غير أن يقيمه مقام نفسه في مصالحه، بخلاف التوكل فإن الوكالة تقتضي أن يقوم الوكيل مقام الموكل.
இப்னுல் கய்யும் கூறூகிறார்.                                          
சரணடைபவர் தனது நிலையிலிருந்து காரியங்களை அனுகாமல் அல்லாஹ் எது நன்மையோ அதை செய்கிறான் என்று பார்க்கிறார். அல்லாஹ்வின் எல்லா தீர்ப்புக்களையும் ஏற்கிறார்                              எது நடந்தாலும் அது அல்லாஹ்வின் நாட்டத்தில் நல்லதாகவே இருக்கும். என்ற மன நிலைக்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்வது அல்லாஹ்வை சரணடைவதாக் இருக்கு. ஒரு போதும் இந்த மனோபாவம் நமக்கு தீமையை தராது. அல்லாஹ் போதுமானவன. 


 





No comments:

Post a Comment