வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 02, 2019

ரமலானை கண்ணியப்படுத்த வேண்டும்.


இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் புனிதமிகு ரமலான் மாதம் நம்மை வந்தடைய இருக்கிறது. துஆ)

நாம் வாழ்கிற இன்றைய காலம் எதையும் அலட்சியமாக கருதுகிற காலம். . சமய நம்பிக்கைகளையும் மரியாதைகளையும் முட்டாள்தனமாக நினைக்கிற காலம்.
நம்மில் எத்தனை பேர் பராஅத்துடைய இரவை சட்டையே செய்யவில்லை ? அது அல்லாஹ் துஆக்களை அங்கீகரிக்கிற இரவு என்று தெரிந்தும் அதை பொருட்படுத்தவே இல்லை என்றால் அதன் அர்த்தம் என்ன ?
நல்ல நாட்கள், நல்ல நேரங்கள், நல்ல நிகழ்வுகள், நல்ல விசயங்கள் , நல்லவர் அனைவரையும் ஒரு ஓர விழிப்பார்வையில் ஒதுக்கி தள்ளி விட்டு நகர்ந்து விடுகிறது இன்றைய இளைய சமுதாயம் .லயீப் என்ற ஒரு வார்த்தை அதன் அனைத்து அலட்சியங்களுக்கு கேடயமாக இருக்கிறது.
இந்தச் சூழலில் முஃமின்களாக வாழ ஆசைப்படுவோர் மிக அழுத்தமாக நினைவில் வைக்க வேண்டிய ஒரு செய்தியை இந்த ஜும் வில் கூறுகிறேன்.
எந்த ஒரு புனிதத்தையும் கண்ணியப்படுத்துதல் அதனை பயன்படுத்துவதை விட முதன்மையானது.
தஃழீம் உள்ளார்த்த இறையச்சத்தத்தின் அடையாளம் என்று திருக்குர் ஆன் கூறுகிறது.
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ (32
இந்த வசனம் ஹஜ்ஜின் போது அறுப்பதற்காக கொண்டு செல்லப்படுகிற பிராணிகளை குறிப்பிடுகிறது.
அந்தப் பிராணிகளை கூட மதிக்க வேண்டும்.
அதாவது ஏனேதானோ என்று பிராணிகளை வாங்கிவிடாமல் கொளுத்த நல்ல ஆரோக்கியமான பிராணிகளை வாங்க வேண்டும் .
இந்த தஃழீமில் சபா மர்வா அரபா மினா முஜ்தலிபா மற்ற ஹஜ்ஜின் இடங்களை மதிப்பதும் உள்ளடங்கும் என்கின்றனர் முபஸ்ஸிர்கள்
قال ابن زيد, في قوله: ( وَمَنْ يُعَظِّمْ شَعائِرَ اللهِقال: الشعائر: الجمار, والصفا والمروة من شعائر الله, والمَشْعَر الحرام والمزدلفة,
இந்த இடங்கள் மட்டுமல்லாது அல்லாஹ் சிறப்பித்த அனைத்தும் – அல்லாஹ்வை நினைவு கூறும் அனைத்தும் அல்லாஹ்வின் அடையாளங்களில் சேரும். அந்த அடையாளங்கள் அனைத்தையும் மதிக்க வேண்டும். அது வே இதயத்தில் இறையச்சம் இருக்கிறது என்பதன் அடையாளம்.
எனவே
தஃழீம் இல்லாத ஈமானோ, இபாதத்தோ, உயிரற்ற கூடு போன்றது.
குர் ஆன் ஓதுவதை விட அதை கண்ணியப்படுத்துவது முதன்மையானது
கஃபாவை சுற்றுவதை விட அதை கண்ணியமாக கருதுவது முதன்மையானது.
பெருமானாரை பின்பற்றுவதை விட பெருமானாரை கண்ணியப்படுத்துவது முதன்மையானது.
இமாம் மாலிக் ரஹ் அவர்கள் மதீனாவில் வாழும் காலம் வரை செருப்பு அணியவில்லை. குதிரையில் சவாரி செய்யவில்லை
மதீனாவில் பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய ஒரு வில் இருந்தது, இமாம் மாலிக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் அது பெருமானார் ஸல்) அவர்கள் பயன்படுத்திய வில் என்று நான் அறிந்த நாள் முதல் அதை ஒளுவின்றி நான் தொட்டதில்லை.
இமாம் அஹ்மது பின் ஹன்பல் ரஹ் அவர்கள் தனது ஆசிர்யர் இமாம் ஷாபியிக்காக ஒவ்வொரு தொழுகையிலும் துஆ செய்வார்கள்.
ஷாஹ் வலியுல்லாஹ் தஹ்லவி அவர்கள் கிதாபுகளின் ஹாஷியாக்களை ஓரக்குறிப்புக்களை பார்ப்பதற்காக கிதாபுகளை திருப்ப மாட்டார்கள்.. தானே திரும்பிக் கொள்வார்கள்.
ஒரு உஸ்தாது அவருக்கு அவருடைய உஸ்தாதின் போன் வரும் என்றால் எழுந்து நின்று விடுவார்கள். ஏதாவது துணியை எடுத்து தலையை மறைத்துக் கொள்வார்கள்.
கதீஜா ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் குணங்களை கண்ணியப்படுத்தவே அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள்.
உமர் ரலி அவர்கள் மழைத்தொழுகைகளின் போது பெருமானாரின் சிறிய தந்தை அப்பாஸ் ரலி அவர்களை முன்னிலைப் படுத்தி இறைவா இவர் பொருட்டு மழையை தருவாயாக எனப் பிரார்த்திப்பார்கள்.
أنس بن مالك رضي الله عنه أن عمر رضي الله عنه كان إذا قحطوا استسقى بالعباس بن عبد المطلب وقال : (اللهم إنا كنا نستسقي إليك بنبينا فتسقينا ، وإنا نتوسل إليك بعم نبينا فاسقنا ، فيسقون)

முந்தை நபிமார்கள் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பெற்று வைத்திருப்பது தான் தாலூத் அரசர் என்பதற்கான அடையாளம் என்று அல்லாஹ் சொன்னான்
وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا ۚ قَالُوا أَنَّىٰ يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ ۚ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ ۖ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (247)وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَن يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ آلُ مُوسَىٰ وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ

அந்தப் பொட்டியில் மூஸா அலை அவர்களது குச்சியும் செருப்பும் ஹாரூன் அலை அவர்களது ஆடையும் தவ்ராத் தரப்பட்ட சில உடைந்த பலகை துண்டுகளும் போன்றவைகள் பாதுகாக்கப் பட்டிருந்ததாக விரிவுரயாளர்கள் கூறுகிறார்கள்.

ரமலானை பற்றி கூறுகிற போது கூட அல்லாஹ் அது குர் ஆன் அருளப்பட்ட மாதம் என்கிறான். அதாவது கண்ணியமானதை கொண்டு வந்த்தால் கண்ணியம் பெற்றது

இந்தச் செய்திகள் அனைத்தும் புனிதமானவற்றை கண்ணியப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அடையாளங்களாகும்
இத்தகைய கண்ணியப் படுத்துதுதலே ஈமானிய வாழ்வின் இலட்சணமாகும்.
ரமலானும் அல்லாஹ்வின் அடையாளமாகும் .
அது அல்லாஹ்வின் மன்னிப்பு – கருணை – நரக விடுதலை – ஆகியவை பொங்கிப் பிரவாகமெடுக்கிற மாதமாகும். மட்டுமல்ல குர் ஆன் இறங்கிய மாதமும் ஆகும்.  
இந்த ரமலானை நாம் சிறப்பாக வரவேற்கிறோம் சந்தேகமில்லை
பள்ளிவாசலை அலங்கரிக்கிறோம். வீட்டை சுத்தம் செய்கிறோம். தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். புதிய துணி மணிகள் எடுக்கிறோம்.
இன்னும் சொல்வதானால் நம்மில் பல பேருக்கு ரமலான் என்றால் பெருநாள் துணி எடுக்கிற மகிழ்ச்சிதான் முதலில் நினைவுக்கு வரும். சிலருக்கு அது மட்டுமே ரமலானை பெற்றுக் கொள்வதாக இருக்கும்.
அல்லாஹ் காப்பாற்றட்டும்.
நாம் ரமலானை இப்படி வரவேற்க கூடாது, இப்படி கழித்து விடக் கூடாது.
ரமலானை கண்ணியப்படுத்த வேண்டும். அதுவே இதயத்தில் இறையச்சம் இருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.
ரமலானை கண்ணியப்படுத்துதல் என்றால் ?
ஒரு மரியாதைக்குரிய விருந்தினர் நம்து வீட்டிற்கு வருகிறார் என்றால் எப்படி முழுமையாக அதற்காக
நம்மை நாம் ஒதுக்கி கொண்டுவிடுமோ –
நமது சூழ்நிலைகளை அலங்கரித்து விடுமோ
தேவையான தயாரிப்புக்களை செய்து கொள்வோமோ ?
விருந்தினருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தும் காரியங்களை விலக்கி விடுவோமோ
அவர் வந்து செல்லுவது வரை எப்படி முழு கவனத்தையும் அவரது வருகையிலேயே வைத்திருப்போமோ
அதே போன்றதொரு  அக்கறையையும் கவனத்தையும் ரமலான் மாதம் முழுவதிலும் ரமலானின் அனைத்து அம்சங்களிலும் வைத்திருக்க வேண்டும்.
இது மன்னிப்பை தருகிற மாதம்
இது நன்மைகளுக்கான கூலியை பன் மடங்காக தருகிற முபாரக்கான மாதம்
இது குர் ஆன் அருளப்பட்ட மாதம்
இது உறவுகளை பராமரிப்பதற்கான மாதம்
என்ற சிந்தனையில் ரமலானின் ஒவ்வொரு பொழுதையும்  இரவையும் பகலையும் நாம் மதிக்க வேண்டும்.
ரமலானில் இபாதத் செய்வதை விட இந்த கண்ணியம் தான் மிக முக்கியமானது.
ரமலானை கண்ணியப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை வந்து விடுமானால் அதை தூங்கியே கழித்து விட மாட்டோம்.
அரட்டையிலே பொழுதை போக்கிவிட மாட்டோம்.
வீண் விளையாட்டுக்களுக்காக நன்பர்களோடு கூடியிருப்பதிலேயே செலவழித்து விட மாட்டோம்
கடை வீதிகளில் சுற்றித் திரிவதில் காசு பணத்தை தீர்த்து விடுவதை போல ரமலானையும் தீர்த்து விட மாட்டோம்.
பகல் காலங்களில் நோன்பு வைப்பது ரமலானை மதிப்பதாகும் அந்த நோனபில் பார்வை நாக்கு உடல் உறுப்புக்களின் தீமைகளிலிருந்து பாதுகாப்பாதே நோன்பை கண்ணியப்படுத்துவதாகும்.
ஜாபிர் ரலி அவர்கள் தன்னைச் சுற்றியிருப்போருக்கு இந்த கண்ணியப்படுத்துதலை உபதேசித்துக் கொண்டே இருப்பார்கள்
إذا صمت فليصم سمعك وبصرك ولسانك عن الكذب والمآثم ودع أذى الخادم وليكن عليك وقار وسكينة يوم صيامك ولا تجعل يوم فطرك ويوم صيامك سواء « فكان جابر كثيرا ما يستحضر هذا الحديث ويقوله لكل من يلتقيه ثم ينصرف عنه ساكتا .

தள்ளாத முதுமையிலும் நோன்பை கடைபிடித்த முன்னோர்கள்
قيل للأحنف بن قيس رحمه الله -عندما كبر في السن-: (إنك شيخ كبير وإن الصيام يضعفك).. فقال(إني أعده لسفر طويل، والصبر على طاعة الله سبحانه أهون من الصبر على عذابه).

இரவு நேரங்களில் நபில் வணக்கங்களில் ஈடுபடுவது ரமலானை மதிப்பதாகும்.
فعن أبي هريرة رضي الله عنه قال: (كان رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ يُرغِّبُ في قيامِ رمضانَ من غيرِ أن يأمرَهم فيه بعزيمةٍ . فيقول : من قام رمضانَ إيمانًا واحتسابًا ، غُفِرَ له ما تقدَّم من ذنبِه

அபூதர் ரலி அவர்கள் அறிவிக்கிற ஒரு அறிவிப்பில் நாங்கள் சில நாள் பெருமானாருக்குப் பின்னால் நின்று ரமலானில் தொழுதோம். அப்போது நபி (ஸ்ல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்
இமாமோடு தொழுதால் இரவு முழுவதும் தொழுதது போல

ومن صلّى قيام رمضان خلفَ الإمام، وبَقيَ معه إلى أن ينصرفَ، كان كمن صلّى ليلة بأكملها


சஹருக்கு சற்று முன் எழுந்து தஹஜ்ஜுத் தொழுவதில் அக்கறை செலுத்துகிறவர் ரமலானை கண்ணியப் படுத்துகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
முன்னோர்கள் ரமலானை எப்படி தொழுது கண்ணியப்படுத்தினர்  ?
ஹிஜ்ரீ 427 ல் பக்தாதில் மக்களுக்கு தராவீஹ் தொழவைத்த இமாம் அபூமுஹம்மது லுப்பான் அவர் பஜ்ர் வரை தொழு கொண்டிருப்பார். 70 குர் ஆன் ஓதுவார்.
ذكر الحافظ الذهبي عن أبي محمد اللبان أنه: "أدرك رمضان سنة سبع وعشرين وأربعمائة ببغداد فصلّى بالناس التراويح في جميع الشهر فكان إذا فرغها لا يزال يصلي في المسجد إلى الفجر، فإذا صلى درّس أصحابه. وكان يقول: لم أضع جنبي للنوم في هذا الشهر ليلاً ولا نهاراً. وكان ورده لنفسه سبعا مرتلاً"

நீண்ட நேர தொழுகை
عن السائب بن يزيد قال: أمر عمر بن الخطاب - رضي الله عنه - أبي بن كعب وتميما الداري - رضي الله عنهما - أن يقوما للناس في رمضان فكان القارئ يقرأ بالمئين حتى كنا نعتمد على العصي من طول القيام وما كنا ننصرف إلاّ في فروع الفجر. [أخرجه البيهقي].

وعن مالك عن عبد الله بن أبي بكر قال: سمعت أبي يقول: كنا ننصرف في رمضان من القيام فيستعجل الخدم بالطعام مخافة الفجر [أخرجه مالك في الموطأ].

இரவு நேரத்திலும் பகலிலும் அத்கமாக குர்ஆன் ஓதுவது தஸ்பீஹ்களை செய்வது ரமலானை கண்ணியப்படுத்துவதாகும்.
இமாம் புகாரி ஒரு நாளில் ஒரு குர் ஆன் ஓதிவிடுவார்.
فهذا الإمام البخاري - رحمه الله - كان إذا كان أول ليلة من شهر رمضان، يجتمع إليه أصحابه فيصلي بهم ويقرأ في كل ركعة عشرين آية، وكذلك إلى أن يختم القرآن. وكان يقرأ في السحر ما بين النصف إلى الثلث من القرآن، فيختم عند الإفطار كل ليلة ويقول: عند كل الختم، دعوة مستجابة. [صفة الصفوة:4/170].

இமாம் ஷாபி ரமலானில் 60 கத்தம்

قال الربيع: "كان الشافعي يختم كل شهر ثلاثين ختمة، وفي رمضان ستين ختمة سوى ما يقرأ في الصلاة". [صفة الصفوة:2/255]. 


மார்க்க அறிவை தேடிக் கொள்ள பயான் கேட்பது புத்தகங்கள் படிப்பது ரமலானை கண்ணியப்படுத்துவதாகும். ‘
பிறரை  சந்தோஷப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுவது- ஜகாத் – சதகத்துப் பித்ர் தர்மம் செய்வது – கஞ்சி வழங்குவது – இப்தார் சஹர் ஏற்பாடுகளை செய்வது ரமலானை கண்ணியப்படுத்தும் கரியங்களாகும்.
عن ابن عباس - رضي الله عنهما - قال: «كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في شهر رمضان إنّ جبريل عليه السلام كان يلقاه في كل سنة في رمضان حتى ينسلخ فيعرض عليه رسول الله صلى الله عليه وسلم القرآن فإذا لقيه جبريل كان رسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة» [متفق عليه].

وقال ابن رجب: قال الشافعي رضي الله عنه: أحب للرجل الزيادة بالجود في شهر رمضان اقتداء برسول الله - صلى الله عليه وسلم - ولحاجة الناس فيه إلى مصالحهم ولتشاغل كثير منهم بالصّوم والصلاة عن مكاسبهم.
தனது பங்கை ஏழைக்கு கொடுத்து விடும் இப்னு உமர் ரலி
وكان ابن عمر - رضي لله عنهما - يصوم ولا يفطر إلاّ مع المساكين. وكان إذا جاءه سائل وهو على طعامه أخذ نصيبه من الطعام وقام فأعطاه السائل.

ரமலானின் கண்ணியத்தை காக்க முன்னோர்கள் ஒன்று பள்ளியில் அல்லது வீட்டில் இருந்து விடுவார்கள்


قال أبو ذر رضي الله عنه: إذا صمت فتحفظ ما استطعت، وكان طلق إذا كان يوم صومه دخل فلم يخرج إلاّ لصلاة [أخرجه ابن أبي شيبة].

முன்னோர்கள் ரமலானின் ஒவ்வொரு நிமிடத்தையும் கண்ணியப்படுத்துவதற்காக அதில் அல்லாஹ்விற்கு பொருத்தமான காரியங்களை மட்டுமே செய்வார்கள்.

பாவகரமான – பயனில்லாத காரியங்களை ரமலானில் அறவே தவிர்த்துக் கொள்வார்கள்.

நமது ரமலானை நான் கழித்து விடுகிறோமா ? கண்ணியப்படுத்துகிறோமா என்பதை ரமலானின் ஒவ்வொரு நாளிலும் நாம் சிந்திக்க வேண்டும்.

இல்லை எனில் கஞ்சி குடித்ததையும் சஹர் உணவு சாப்பிட்டதையும் தவிர நமது ரமலானுக்கு வேறு அடையாளம் இருக்காது.
அல்லாஹ் பாதுகாப்பானாக!

ரமலானை வரவேற்போம். அதை கண்ணியப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை உறுதியாக நினைவில் நிறுத்துவோம்.
நம்முடைய குடும்பத்தாருக்கும் இந்த கண்ணியப்படுத்துதலை நினைவூட்டுவோம்.

அவர்கள் சமைப்பது புதிய துணி மணிகளை வாங்குவதுதான் ரமலான் என்று நினைத்துக் கொண்டிருக்க கூடும்.

அவர்களுக்கும் ரமலானை கண்ணியப்படுத்துவதுதான் இறையச்சமுள்ள வாழ்வு என்று நாம் நினைவூட்டும் போது

டி வி பார்ப்பதில்
பேஸ்புக் பார்ப்பதில்
வாட்ஸப் இண்ஸ்டாகிராம். யூட்யூப் ஐபி எல் மேட்ச் ஆகிய எதிலும் ரமலானின் கண்ணீயம் பறிபோகாமல் பார்த்துக் கொள்வோம்.

ரமலான் மாதம் வந்து விட்டால் உமர் ரலி அவர்கள்
يقول عمر بن الخطاب رضي الله عنه: (مرحبا بمطهرنا من الذنوب).

அதே போல நாடகத்தனமான இப்தார் நிகழ்சிகள் சஹர் நிகழ்ச்சிகளை தவிர்த்துக் கொள்வோம்.

பிற சமூகத்தவர்களோடு எதார்த்தமாகவும் உண்மையாகவும் நேசத்தோடும் பழகிடுவோம்.

நமது குடும்பங்களில் உள்ள ஏழைகளை ஆதரிப்போம். அரவணைப்போம்.

அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியதாக நமது ரமலானின் ஒவ்வொரு பொழுதும் நகரட்டும்.  

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!                                            
(புனித மிகு ரமலானில் எனக்காககும் எனது குடும்பத்தினருக்காகவும் நிறைய துஆ செய்யுமாறு அன்பு ஆலிம்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.அப்துல் அஜீஸ் பாகவி - )

1 comment:

  1. இன்ஷா அல்லாஹ்,ஹஜ்ரத்.அல்லாஹ் எல்லா விதமான நலவுகளையும் உங்களுக்கும்,குடும்பதார்களுக்கும் வழங்கிடுவானாக.ஆமீன்

    ReplyDelete