அனைவருக்கும்
இனிய ஈதுல் பித்ரு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
நம் இல்லத்திலும்
உள்ளத்திலும் நல்ல விதமான அனைத்து மகிழ்ச்சிகளும் என்றென்றும் நிறைவாக தங்கட்டும்.
முஸ்லிம்
சமுதயாம் நிம்மதியிலும் செழிப்பிலும் தழைத்தோங்கட்டும்.
ஒரு மாதமாக
கடைபிடித்த வணக்கமயமான பொழுதுகளின் நிறைவில் இந்தப் பெருநாள் நமக்கு கிடைத்திருக்கிறது.
நமது பெருநாட்கள்
நன்மைகளுக்கானவை.
சதகதுல் பித்ரு,
தக்பீர், தொழுகை, சகோதர்ர்களுடனான நல்லுறவு, என் நமது பெருநாட்கள் அர்த்தமுடையவை. அர்த்தமற்ற
சடங்குகளோ, தேவையற்ற பொருட் செலவுகளோ நம்முடைய பெருநாட்களில் இல்லை.
இது ஈந்துவக்கும்
பெருநாள் அத நாள் ஈகைத் திருநாள்
நாம் செய்யக்
கூடிய நன்மைகளுக்கு பெரும் கூலியை அல்லாஹ் வைத்திருக்கிறான்.
قد افلح من تزكي وذكر اسم ربه فصلي
சதகதுல் பித்ரை நிறைவேற்றி அல்லாஹ்வை திக்ரு செய்து தொழுதவர்
வெற்றியடைந்து விட்டார்.
முப்தீ முஹம்மது ஷபீ சாஹிப் அவர்கள் ம ஆரிபுல் குர் ஆனில்
கூறுகிறார்
பலாஹ் என்றால் நாம் நினைத்த்தெல்லாம் கை கூடும் வெற்றி
அல்லாஹ் நமக்கும் முஸ்லிம் உம்மத்திற்கும் பலாஹ் ஐ தரட்டும்.
சகோதர்ர்களே , நமது பெருநாட்களில் நாம் முதலில் தொழுகிறோம்
. பிறகு குத்பா ஓதுகிறோம்.
பெருநாளின் சிறப்பம்சம் இது
காரணம் தொழுகை தான் உலகின் பிரதான மான மனிதச் செயல்பாடு.
அது குறைந்த நேரமேயாக இருந்தாலும்.
ஒரு உண்மை தெரியுமா ?
இந்த உலகில் கட்டிடமாக முதலில் கட்டப்பட்டது. இறை ஆலயமே!
கிரேக்க
வரலாற்றாசிரியர் புலூடாக் மனித இயல்பை இவ்வாறு விளக்ககின்றார். “வரலாற்றில் கோட்டைகள், பாடசாலைகள், மாடமாளிகைகள் அற்ற நகரங்கள் காணப்பட்டன. ஆனால் மத வழிபாட்டுத் தளங்கள் இல்லாத நகரங்கள் ஒரு போதும் இருக்கவில்லை”.
எனவே இறைவழிபாடுதான் உலகின் ஆகத் தொன்மையான நாகரீகச் செயல்பாடு.
அந்த வழிபாட்டை முதலில் நிறைவேற்றி விட்டு பிறகு குத்பா
எனும் சொற்பொழிவிற்கு நேரம் ஒதுக்கப் பட்டிருக்கிறது.
குத்பா எதற்காக என்றால் – வழி பாடு மட்டுமே மனித வாழ்வை
செம்மைப் படுத்தி விட முடியாது. வழிபாட்டுக்கு
அப்பால் உள்ள வாழ்கை முறை எப்படி இருக்க வேண்டு என்பதும் முக்கியம்.
தொழுது விட்டு திருடப்போனால், தொழுது விட்டு அப்பாவி மக்களை
கொல்லப் போனால், தொழுது விட்டு பிறர் பொருளை அபகரிக்கப் போனால் அந்த தொழுகை வீனானதே!
தொழுகை அழகிய வாழ்கையால்யால் அழகு பெறுகிறது.
அந்த அழகிய வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கத்தான் குத்பா
நடைபெறுகிறது.
இன்றைய குத்பாவில்
நமது வாழ்கையை வெற்றி பெற்றதாக ஆக்கிக் கொள்ளும் ஒரு த்த்துவம்
குறித்து நாம் சிந்திக்கிறோம்.
சகோதர்ர்களே ! நாம் எப்படி வாழ வேண்டும் என்ற தீர்மாணம்
நமக்கு இருக்கிறதா ?
பணக்காரனகாக.
செல்வாக்குள்ளவனாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்ற அளவில் மட்டுமே நமது இலக்கு
இருக்கிறது.
நமது வாஅழ்வு எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு தெளிவை
திருக்குர் ஆன் சுட்டிக்காட்டுகிறது.
فلنحيينه حياة طيبة
இந்த உலகில் மணம் மிக்க வாழ்க்கை வாழ வேண்டும்.
حياة
طيبة என்பதற்கு
நல்ல வாழ்கை, மகிழ்ச்சியான வாழ்கை, புகழ் மிக்க வாழ்க்கை என்ற சிறப்பு அம்சங்கள் அனைத்தும் உள்ளடக்கிய வாழ்கை
என்று அர்த்தமாகும்.
கலிமா தய்யிபாவை சொன்ன நாம் ஹயாத்துன் தய்யிபா வாழ்கை
வாழ வேண்டும்.
அப்படி வாழ வேண்டும் என்று நினைத்தால் தான் அத்தகைய வாழ்கை
கிடைக்கும்.
நினைக்கலாமா ?
பிலால் ரலி என்கிற சாதாரண அடிமை – தனது தூய் வாழ்வினால்
எத்தகை மணம் மிக்க வாழ்வை பெற்றார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
பிலாலே மிஃராஜின் போது உங்களது காலடிச் சதத்த்தை நான்
கேட்டேன்.
கறுப்பினத்தவராக – எவராலும் கண்டு கொள்ளப் படாதவராக –
ஒடுக்கப்பட்ட இனமாக இருந்த பிலால் ரலி அவர்களைப் பற்றி சொர்க்கத்துச் செய்தியை பெருமானார்
(ஸல்) அவர்கள் சொன்னது. வெறும் ஒரு புகழ்ச்சி அல்ல.
குலம் கோத்திரத்தால்
தலை கனத்துப் போயிருந்த அன்றைய அரபுச் சமூகத்திற்கும், இன்று வரை அற்பமான காரணங்களால் தம்மை பெரியவர்களாக
கருதிக் கொள்ளும் அகம்பாவிகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகும்.
சாதாரண கருப்பரான பிலாலின் காலடிச் சத்த்த்தை பெருமானார்
(ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் கேட்டார்கள்.
ஹயாத்துன் தய்யிபா விற்கான விளைவு இது.
நீங்கள் உருவத்தால் செல்வாக்கால் யார் என்பதல்ல , நீங்கள்
உங்களது செயலில் யார் என்பதே முக்கியம்.
நாம் நமது செய்ல்களால் வாழ்கையை ஹயாத்துன் தய்யிபாவாக
ஆக்கிக் கொள்வோம்.
இன்னொரு உதாரணம் மிகச் சிறப்பானது.
இஸ்லாமிய வரலாற்றில் வித்தியாசமான பெயரோடு ஒரு நபித்தோழர்
அறிய்ப்படுகிறார்.
அவர் எந்த அளவு முக்கியமானவர் என்றால் ?
உமர் ரலி அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அவரிடம் “ உங்களை அபூபக்கர் ரலி சுட்டிக் காட்டியது போல நீங்கள் ஒருவரை எங்களுக்கு சுட்டிக் காட்டுங்கள் என சஹாபாக்கள் கேட்ட போது உமர் ரலி கூறினார்.
சாலிம் இருந்திருந்தால் அவரை கூறியிருப்பேன்.
அந்த சாலிம்
யார் தெரியுமா ?
அடிமைச்
சந்தையில் விலை போகாத ஒரு மனிதர் ! தந்தை பெயர்
இன்னெதன்று அறிய முடியாத அடிமை வாழ்விற்குரியவர்.
சிரியாவின் ஒரு அடிமைச் சந்தையில் பார்ப்பதற்கு மிக விகாரமான ஒரு அடிமையை இருந்தார். அந்த அடிமையை யாரும் வாங்க முன் வரவில்லை. மதினாவிலிருந்து சென்ற ஒருவர் மலிவாக கிடைத்த்தால் அவரை வாங்கி மதீனாவில் சந்தையில் ஏலமிட்டார். அடிமையின் தோற்றத்தை பார்த்த யாரும் விலக்கு வாங்கவில்லை,
நேரம் கடந்து செல்ல செல்ல முதலாளியின் பொறுமை எல்லை கடந்தது. அடிமையை சந்தையில் தனியே விட்டு விட்டு “ யாராவது உன்னை விலை பேசினால் நீயே உன்னை விற்றுக் கொள்! எனக்கு காசை கொண்டு வந்து சேர்த்து விடு என்று சொல்லி விட்டு சென்று விட்டார். அந்த அடிமை மதினாவின் சந்தையில் தன்னை தானே கூவி விற்ற்க் கொண்டிருந்தார்.
ஆச்சரியம் தான்.
ثبيتة
بنت يعار الأنصارية (ரலி ) என்ற சீமாட்டி அந்த அடிமையின் அவல நிலை கண்டு இரக்கப் பட்டு அவரை விலைக்கு வாங்கினார். அவரை தனது கணவரான அபூஹுதைபா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்.
அபூஹுதைபா ரலி அவர்கள அவரை உரிமை விட்டு வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டார்கள். சாலிம் பின் அபீஹுதைபா என அவர் அழைக்கப் பட்டார்.
பிறகாலத்தில் வளர்ப்பு மகன்களுக்கு புதிய சட்டம் அருளப் பட்ட போது சாலிமின் தந்தை பெயர் தெரியவில்லை. சாலிம் மவ்லா அபூஹுதைபா என அழைக்கப் பட்டார்.
كان سالم عبدًا فارسيًا
اعتقت ثبيتة سالمًا، فوالى سالم زوجها أبي
حذيفة بن عتبة الذي أحبّه وتبنّاه،
ادْعُوهُمْ لِآَبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ
اللَّهِ فَإِنْ لَمْ تَعْلَمُوا آَبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ
وَمَوَالِيكُمْ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ
مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
அந்த சாலிம் குர் ஆனை மிகச் சிறப்பாக ஓதுகிறவர்களில்ஒருவராக இருந்தார்.
அவரிடமிருந்து குர் ஆனை ஓதக் கற்று கொள்ளுங்கள் என பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
قال النبي محمد: «استقرئوا القرآن من أربعة، ابن مسعود، وسالمًا مولى أبي حذيفة، وأبي بن
كعب، ومعاذ بن
جبل»
அவர் குர் ஆனை ஓதும் அழகில் மயங்கி நின்ற ஆயிஷா அம்மையார். அதைக்
கேட்டு பெருமானாரும் தேடிச் சென்று அவர் ஓதுவதை கேட்டு மகிழ்ந்து இப்படி ஒருவரை
கொடுத்தற்காக பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள் .
عن عائشة قالت : استبطأني رسول الله ذات ليلة ، فقال : " ما
حبسك ؟ قلت : إن في المسجد لأحسن من سمعت صوتا بالقرآن ، فأخذ رداءه ، وخرج يسمعه
، فإذا هو سالم مولى أبي حذيفة ، فقال : الحمد لله الذي جعل في
أمتي مثلك "
தன்
மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சிறந்த மனிதரை வள்ளுவன் புகழுவான். நபியே வாழ்த்தும் ஒரு பெருமைக்குரிய வாழ்கையை என்ன வென்பது ?
அவர் தனது வளர்ப்புத் தந்தையோரு அனைத்து யுத்தங்களிலும் பங்கேற்றார், இறுதியில் பொய்யன்முஸைலமாவை எதிர்த்த யமாமா யுத்த்த்தில் அவரும்அவருடைய முதலாளி அபுஹுதைபாவும் ஷஹீதாக்கப்பட்டார்கள். ஒருவருடை கால் மற்றவரின் முகத்தில் இருந்த்து.
وقد وُجد سالم يومها هو ومولاه أبو حذيفة صرعى، رأس
أحدهما عند رجلي الآخر
சந்தையில் விலை போகாத ஒரு அடிமை எத்தகைய் பெருவாழ்விற்கு
சொந்தக் கார்ராக இருக்கிறார்.
என்ன அருமையான வாழ்கை. ?
எல்லா வகையான பின்னடைவிலும் கூட மக்கள் தமது தரத்தால் எப்படி உயர்வை அடைந்து கொள்ள முடியும் என்பதற்கு எத்தகைய சிறந்த முன்னுதாரணம் இது
இத்தகைய ஒரு பரிசுத்தமான வாழ்கை வாழ் வேண்டும் என வலுறுத்துகிற இறைவன் அதற்கான வழி முறைகளை சொல்லியும்
தருகிறான். .
مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ
فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ
مَا كَانُوا يَعْمَلُونَ
சரியான ஈமானோடு முடிந்த வரை நற்செயல்களை செய்து கொண்டிருக்க
வேண்டும்.
ஒரு நெருக்கடியான கால கடட்த்தை கடந்து செல்கையில் நற்செயல்களால் தான் நாம் வெற்றிபெற
முடியும்.
நாம் ஏனோ தானோ என்று வாழ்ந்து விடக் கூடாது.
ஹயாதுன் தய்யிபா எனும் இலக்கை நோக்கி பயனிக்க வேண்டும்.
அந்த வாழ்கையில்
வீண் தர்க்கங்களுக்கு இடமிருக்காது.
விபரீதமான சிந்தனைகளுக்கு இடமிருக்காது.
பாவத்திற்கும் பக்கமைக்கும் இடமிருக்காது.
ஆத்திரத்திற்கும் அவசரத்திற்கும் இடமிருக்காது.
வெற்று கோஷங்களுக்கும் சுய நலத்திற்கும் இடமிருக்காது.
எது பயனுள்ளதோ அந்த பேச்சு, அத்தகைய செயல், அதற்கேற்ற
சிந்தனைகளுக்கு மட்டுமே இடமிருக்கும்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஈதுல் பித்ர் பெருநாள்
நல்வாழ்த்துக்க்ள்.
ஈத் முபாரக்!!!
Jazakallah
ReplyDelete