வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 06, 2019

சீனா சென்றேனும்


ஷவ்வாலின் 6 நோன்பு நோற்றிருப்பவர்கள் பாக்கியசாலிகள்
அல்லாஹ் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை வழங்குவானாக!
ஜூன் மாத்த்தில் கல்விக் கூடங்கள் திறக்கின்றன.
கல்வியை தேடி -  மக்கள் பள்ளிக் கூடம் பள்ளிக் கூடமாய் அலைகிறார்கள்.
நமது பிள்ளைகளுக்கு கிடைக்கும் கல்வி பயனுள்ளதாக இருக்க வேண்டும். அவருக்கும் நமக்கும் சமூகத்திற்கும் 
இந்த துஆ வோடுதான் நாம் நமது பிள்ளைகளுக்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
பிள்ளைகளுக்கு கல்வியை தருவதில் நமது தற்பெறுமைக்கு துளியும் இடமிருக்க கூடாது.
திருக்குர் ஆனில் சொல்லப் பட்ட்து போல அல்லாஹ் நமது பிள்ளைகளை கல்வியின் மூலம் சிறப்பாக்கி வைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

(‏‏يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ) [المجادلة:11]،

 அத்தோடு கல்வி  விசயத்தில் நமது முழு அர்ப்பணிப்பும் வேண்டும். பணம் கட்டி விட்டால் போதும் என்ற மனப்பான்மை கூடாது.
 நாம் எத்தகைய பள்ளியில் படிக்கிறோம் என்பதல்ல எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம் என்று நமது பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
நாம் நல்லெண்ணத்தோடு நமது பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்காக உலகிலுள்ள அனைத்து படைப்புக்களையும் அல்லாஹ் துஆ செய்ய வைக்கிறான்
ويقول صلى الله عليه وسلم: (إنّ الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جحرها وحتى الحوت في جوف البحر يصلون على معلم الناس الخير) (الترمذي

அல்லாஹ் நமது இளவல்களுக்கு பயனுள்ள கல்வியை தந்தருள்வானாக!
இஸ்லாமிய வாழ்வியலில் கல்வி மிக முக்கிய இடம் வகிக்கிறது.
முஸ்லிம் கல்வி பெற்றவராக இருக்க வேண்டும்.
அதிலும் சிறப்பான பெரும் கல்வி பெற வேண்டும்.
இறைவா எனக்கு அதிகமாக கல்வியை கொடு  என்று கேட்குமாறு அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு உத்தவிடுகிறான்.
وقل ربي زدني علما
திருக்குர் ஆனில் இல்மு கல்வி எனும் பொருள் சார்ந்த சொற்கள் 779 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. சற்றேறக்குறை ஒவ்வொரு அத்தியாயத்திலும் 7 தடவை இச்சொல் கையாளப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல கல்வி கற்றோரே உயர்ந்தவர் என்பதை மிக அற்புதமாக திருக்குர் ஆன் வெளிப்படுத்துகிறது.
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ [الزمر: 9]،

சீனா சென்றேனும் கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சீனா அப்போது கல்விக்கேந்திரமாக இருந்த்து என்று அதற்கு பொருளல்ல. சீனாவிற்கு செல்வது மிகச் சிரம்மான காரியமாக இருந்த்து.
கஷ்டப்பட்டாவது கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என்பதே இதன் பொருள்
கல்வியை தேடும் பணியில் என்ன உன்னதமான பாரம்பரியம் நம்முடையது ?  
ن قيس بن كثيرٍ، قال: قدم رجلٌ مِن المدينة على أبي الدرداء رضي الله عنه، وهو بدمشق، فقال: ما أقدمك يا أخي؟ فقال: حديثٌ بلغني أنك تحدِّثه عن رسول الله صلى الله عليه وسلم، قال: أما جئتَ لحاجةٍ؟ قال: لا، قال: أما قدِمتَ لتجارةٍ؟ قال: لا، قال: ما جئتَ إلا في طلب هذا الحديث؟ قال: فإني سمعتُ رسول الله صلى الله عليه وسلم يقول: ((مَن سلك طريقًا يبتغي فيه علمًا سلك الله به طريقًا إلى الجنة، وإن الملائكة لتضع أجنحتها رضاءً لطالب العلم، وإن العالم ليستغفر له مَن في السموات ومن في الأرض، حتى الحيتان في الماء، وفضلُ العالم على العابد، كفضل القمر على سائر الكواكب، إن العلماء ورثة الأنبياء، إن الأنبياء لم يورِّثوا دينارًا ولا درهمًا، إنما ورَّثوا العلم، فمَن أخذ به أخذ بحظ وافرٍ)).
கல்விக்காக தன்னுடை ஒரு நாள் வேலையை விட்டு விட்டு பள்ளிவாசலில் தங்கியிருப்பார் உமர் ரலி அவர்கள்.
அவர் வேலைக்கு செல்கிற நாட்களில் பெருமானாரிமிருந்து கிடைக்கிற செய்திகளை கேட்டுச் சொல்வதற்காக இன்னொரு அன்சாரி தோழருடன் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்.
பாபு அத்தனாவுபு பில் இல்மு என்ற – கல்விக்காக பிரதிநிதியை வைத்துக் கொள்ளுதல் என்ற தலைப்பில் இந்த ஹதீஸை பதிவு செய்திருக்கிறார்.
நமது மார்க்க முன்னோடிகள் கல்வியை தேடும் பணியில் உணர்ச்சிகரமான ஏராளமான அர்ப்பணிப்புக்களை செய்திருக்கிறார்கள்.
வடநாட்டைச் சார்ந்த அப்துர் ரஹீம் ராய்ப்பூரி ரஹ் அவர்கள் தேவ்பந்த் அரபுக்கல்லூரியில் மாணவராக சேர விண்ணப்பித்தார்கள். இறுதியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை . கல்லூரி முதல்வரிடம் சென்று மிகவும் அழுதார். மனம் இறங்கிய கல்லூரி முதல்வர் படிக்க அனுமதி தருகிறேன். ஆனால் கல்லூரியில் கிடைக்கிற உணவு வசதி உனக்கு தர முடியாது என்றார்.  அப்படியானால் பின்னிரவின் சிறிது நேரம் நான் கல்விக்கூட்த்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்குமாறு கூறினார். முதல்வர் அனுமதித்தார்.
அங்கு பழக்கடைகள் அதிகம் . அங்கு இரவு நேரத்தில் தூக்கி வீசப்படுகிற பழங்களை பொறுக்கி எடுத்து வந்து அவற்றை உண்டு கல்வி கற்றார்.
இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் தெரு விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்றவர் என்று வரலாறு சொல்கிறது.
அலீ பின் சீனா, நீண்ட காலமாக தனக்கு புரியாமல் இருந்த  அரிஸ்டாட்டிலின் ஒரு தத்துவம் புரிந்த போது தன் சட்டைப் பையில் உள்ள காசுகளை அனைத்தையும் தர்மம் செய்தார்.
அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீத்  தன்னுடைய ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட ஒவ்வொரு நூலுக்கும் எடைக்கு எடை தங்கம் வழங்கினார். இதனால் பல வெலிநாடுகளிலிருந்து அறிஞர்கள் பக்தாதை தேடி வந்தனர் என்று வரலாறு சொல்கிறது.
அந்தப் பாரம்பரியத்தில் நாமும் நமது பிள்ளைகளும் கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் நாம் நமது பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப வேண்டும்.
இஸ்லாமிய கல்வி என்ற பெயரில் பல பள்ளிக் கூடங்கள் புதிதாக முளைக்கின்றன. பெரும்பாலும் அவை வஹாபிஸ்த்தை பிரபலப்படுத்தவே தொடங்கப்பட்டுள்ளன. இத்தகைய பள்ளிக் கூடங்களை தவிர்ப்பது இன்றை மிக முக்கிய எச்சரிக்கையாகும்.
இத்தகைய பள்ளிக் கூடங்களில் படிக்க வைத்த்தற்காக பிறகு நாம் வருத்தப் பட வேண்டியது வரும்.
இதே போல  இந்துத்துவ சார்பு பள்ளிக்கூடங்களும் தவிர்க்கப்பட வேண்டும்.  வித்யா பீடம் என்று சொல்லிக் கொண்டு மக்களுக்கிடையே பிளவையும் வெறுப்பையும் அவை உண்டு பண்ணி வருகின்றன.
கல்வி கற்போருக்கு தேவைப்படும் நான்கு அம்சங்களை நமது மார்க்க அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள்.
அவற்றில் நாமும் கவனம் செலுத்துவோம் . நமது பிள்ளைகளையும் கவனம் செலுத்துவோம்.
ஸ்கூல் பேக். நோட்டுப்புத்தகங்கள் போன்ற கல்விக்கூட்த்திற்கான சாதங்களை வாங்கும் முயற்சிகளுக்கு இடையே அடிப்படையில் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய இந்த அம்சங்களையும் நாம் நினை வு படுத்துவோம்.

الأمر الأول‏:‏ إخلاص النية لله - عز وجل
الأمر الثاني‏:‏ رفع الجهل عن نفسه وعن غيره
لأمر الثالث‏:‏ الدفاع عن الشريعة
لأمر الرابع‏:‏ رحابة الصدر في مسائل الخلاف

முஃமின்கள் எதையும் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும். கல்வி
;கற்பதையும் அல்லாஹ்வுக்காகவே கற்க வேண்டும்.
அல்லாஹ்வுக்காக என்றால்
1.       அல்லாஹ் கல்வி கற்குமாறு கூறியுள்ளான்.
2.       இந்தக் கல்வியின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை பெற வேண்டும்.
 இரண்டாவது அறியாமை அகல வேண்டும் அறியாமையை அகற்ற வேண்டும்.
சரியான நிய்யத் இருந்தால் கல்விக்கு நிகர் வேறெதுவுமில்லை என்ற இமாம் அஹ்மது அவர்கள் நிய்யத்திற்கு இப்படி விளக்கம் சொன்னார்கள்.
قال الإمام أحمد - رحمه الله تعالى -‏:‏ ‏(‏العلم لا يعدله شيء لمن صحت نيته‏)‏‏.‏ قالوا‏:‏ كيف ذلك‏؟‏ ‏(‏ينوي رفع الجهل عن نفسه وعن غيره‏)‏؛
 முஃமின்கள் கல்வி கற்பதன் மூன்றாவது நோக்கம் ஷரீஅத்தை காக்க வேண்டும்.
ஆலிமாக மட்டுமல்ல, மருத்துவராக வக்கீலாக கலைத்துறை வல்லுனர்களாக இருப்பதோடு  அந்த துறை சார்ந்து ஷரீஅத்தின் பாதுகாவலர்களாகவும் இருக்க வேண்டும்.
கட்டிடப் பொறியாளராக இருந்து கொண்டு வாஸ்து முறைப்படி இப்படி இருக்க வேண்டும் என்று பேசக் கூடாது.
மருத்துவராக இருந்து கொண்டு போதைப் பொருட்களை பயன்படுத்தினால் தான் நோய் நிவாரணம் கிடைக்கும் என்று கருதக் கூடாது.
ஷரீஅத்தை பாதுகாக்க கல்வி கற்க வேண்டும் என்கிற போது ஷரீஅத்த் கோட்பாட்டின் படி கல்வி கற்க வேண்டும் என்பது நிர்பந்தமாகிறது.
குட்டைப்பாவாடை பள்ளிக் கூடங்கள், கேலிக்கைக்காகவே இயங்குகிற பள்ளிக் கூடங்கள் தவிர்க்கப் பட வேண்டும்.
ஒழுக்கம் பண்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அது போன்ற பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இது போல இன்ன பிற விசயங்களிலும்.
நம்முடைய பிள்ளைகளை தொழுகை – குர் ஆன் ஓதுதல் தான தர்மங்கள் செய்தல் ஆகியவற்றில் அக்கறை காட்ட நாம் தூண்ட வேண்டும்.
நான்காவது விசயம் மிகவு முக்கியமானது.
படித்து விட்டு தர்க்கம் செய்வதையே வாடிக்கையாக கொள்ளக் கூடாது.
சிலர் படித்து விட்டோம் என்பதை காட்ட எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்து கொண்டிருப்பார்கள்.

رواه ابن ماجه من قوله صلى الله عليه وسلم: ((لا تتعلموا العلم لتباهوا به العلماء، ولتماروا به السفهاء، ولتصرفوا به وجوه الناس إليكم، فمَن فعل ذلك فهو في النار)).

இன்றைய நம்முடைய பேஸ்புக வாட்ஸப் கலாச்சாரத்தில் தர்க்கம் செய்வதன் வடிவமும் கால நேரமும் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது.
நேரடியாக ஒருவரிடம் தர்க்கம் செய்யமுடியாத துணிச்சலை தனிமையில் கமெண்ட் பண்ணுகிற சுதந்திரம் நமக்கு தந்து விடுகிறது.
நாம் ஒன்று சொல்ல அதை மறுத்துப் பிறர் பேச , எந்த விசயத்திற்கு என்றில்லாமல் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் மனப்போக்கில் எங்கும் தர்க்கம் வியாபித்திருக்கிறது.
நியூஜிலாந்து பள்ளிவாசலில் சுட்டுக் கொள்ளப்பட்டவர்களை பலர் ஷஹீதுகள் என்று குறிப்பிட ஒருவர் அதெப்படி ஷஹீத் என்று சொல்ல்லாம் போருக்கு போனார்களா ? காயம் பட்டார்களா ? என்று விவாதம் செய்ய தொடங்கி விட்டார்.
வெளியிலிருந்து பார்க்கிற எவரும் என்ன நினைப்பார்கள் ?
இதென்னடா சமுதாயம் துக்கத்தில் கூட தர்க்கத்தை விட வில்லையே என்று நினைக்க மாட்டார்களா ?
அறிவாளியாக இருப்பவர் எதையும் தர்கித்துக் கொண்டிருக்க கூடாது. குறைந்த பட்சம் தன்னுடைய தர்க்க வாத்த்தால் சமுதாயம் பிளவு பட காரணமாக்க் கூடாது.
உஸ்மான் ரலி அவர்கள் மினாவில் லுஹர் அஸர் தொழுகைகளை நான்கு ரகாஅத்துகளாக தொழ வைத்தார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி அவர்கள் இரண்டு ரக அத்தாக த்தான் தொழ வேண்டும் என்று கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தொழுகைகானநேரம் வந்தவுடன் உஸ்மான் ரலி அவர்களுடன் சேர்ந்து 4  ரக் அத்துகளாக தொழுதார்கள்.
இமாம் ஷாபி ரஹ் அவர்கள் இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களை ஜியாரத் செய்யச் சென்ற இடத்தில் வித்ரு தொழுகையை மூன்று ரகாத்துகளாக தொழுதார்கள் என்ற் ஒரு செய்தி வழக்கில் உண்டு.
அறிவு என்பது கருத்து போராட்ட்த்திற்காக அல்ல. கருத்து உருவாக்கத்திற்காக.
நம்மிட்த்தில் கல்விக்கான நிய்யத் தெளிவாக இருக்க வேண்டியது இன்றைய தேவை
அது இல்லாமல் போகிற போது கல்வி வியாபாரிகள் பெருகிறார்கள். கற்றவர்கள் அதிகம் குற்றவாளிகளாகிவிடுகிறார்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!  நமது பிள்ளைகளுக்கு அல்லாஹ் பயனுள்ள கல்வியை தருவானாக!  அந்தப் பிள்ளைகளை நமக்கு கண் குளிர்ச்சியானவர்களாக ஆக்கி வைப்பானாக!  நமது பெண் குழந்தைகள் கல்வி கற்செல்கிற இடங்களில் அல்லாஹ் பாதுகாப்பானாக!



No comments:

Post a Comment