இந்த
ஆண்டின் (ஹிஜ்ரீ 1440) புனித ஹஜ்
பயணம் தொடங்கி விட்டது.
உலகம்
முழுவதிலிருந்தும் மக்கள் திரு மக்கா மதீனா நகரங்களுக்கு வருகை தர ஆரம்பித்து விட்டனர்.
இந்தியாவிலிருந்து முதல் ஹஜ்
குழு ஜூலை 4 ம் தேதி ஜம்முவிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களும் துருக்கியிலிருந்து வருகை தந்த ஹாஜிகளும் இந்த ஆண்டின்
முதல் ஹஜ் குழுவினராக புனித மதீனா நகரின் மன்னர் அப்துல் அஜீஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்,
இந்த
ஆண்டு சுமார் 2 இலட்சம் பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் செல்ல சவூதி அரசு விசா வழங்க சம்மதித்துள்ளது.
ஒரு
இலட்சத்து 43 ஆயிரம் பேர் ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. அவர்களில் 63 ஆயிரம் பேர் ஜூலை 21 ம் தேதிக்குள் மதீனா நகரையும் 77 ஆயிரம் பேர் ஜூலை 23 ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 5 ம் தேதிக்குள் மக்கா நகரை வந்தடைவார்கள் என ஜித்தாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி
அறிவித்துள்ளார்.
அனைவருடைய
ஹஜ்ஜையும் அல்லாஹ் கபூல் செய்வானாக! அவர்களது
பயணங்களையும் அமல்களையும் அல்லாஹ் இலேசாக்குவானாக! இந்த
ஆண்டும் ஹஜ்ஜை பாதுகாப்பானாக ஹஜ்ஜாக அல்லாஹ் ஆக்கியருள்வானாக!
ஹஜ்ஜுக்கு
செல்வோரும் செல்ல விரும்புவோரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விசயத்தை நினைவு படுத்துகிறோம்.
ஹஜ்
என்பது பாவங்களுக்கு மன்னிப்பை பெற்றுத் தரக்கூடியது.
أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من أتى هذا البيت فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه
ஹஜ் என்பது சொர்க்கத்தை பெற்றுத்தரக்கூடியது.
روى البخاري ومسلم عن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: (العمرة إلى العمرة كفارة ما بينهما،
والحج المبرور ليس له جزاء إلا الجنة).
இந்த நன்மை எல்லா ஹஜ்ஜுக்கும் அல்ல.
ஹஜ் மபரூக்கு மட்டுமே !
ஹஜ் மப்ரூர் என்றால் என்ன ? ஹஜ் எப்போது மப்ரூர் ஆகும்.
லதாயிபில் ம ஆரிபில் இப்னு ரஜப் ரஹ் கூறுகிறார்
إنما يكون مبرورا بإجتماء
امرين
2 முக்கிய அம்சங்கள் இருக்கனும்.
1.
அமல்களை சரியாக செய்தல்
2.
பிறருக்கு உபகாரமாக இருத்தல்
الاتيان
فيه بأعمال البر
தற்காலத்தில்
ஹஜ்ஜுக்கு செல்வோர் பலரும் அமல்களை சரியாக செய்வது குறித்து கவலைப்படுவதில்லை. பயணத்தை எப்படியாவது முடித்து வேண்டிய பொருட்களை வாங்கி வந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
நாம் இந்த சிந்தனையிலிருந்து முற்றாக விலகி நிற்போம்.
இன்னும் இருக்கிற நாட்களில் ஹஜ்ஜின் சட்ட திட்டங்களை தெரிந்து கொள்வோம்.
ஹஜ்ஜிற்கு சட்டங்கள் மிக குறைவு.
ஹஜ்ஜின் பர்ளுகள் 2
துல் ஹஜ் 9 ம் நாள் மதியத்திலிருந்து 10 ம் நாள் அதிகாலைக்குள் கொஞ்ச நேரமாவது
அரபா மைதானத்தில் தங்கியிருப்பதும். ஹஜ்ஜுடைய தவாபான தவாபே இபாழா வை நிறைவேற்றுவதும் பர்ளூ ஆகும்.
சபா மாவாவிற்கிடையே சஃயு செய்வது, முஜ்தலிபாவில் தங்குவது, மினாவில் சைத்தானை கல்லெறிவது, குர்பானி
கொடுப்பது, முடி வெட்டிக் கொள்வது. தவாபுல் விதா செய்வது ஆகியவை ஹஜ்ஜின் வாஜிபுகளாகும்.
மினாவின்
நாட்களில் மினாவில் இரவு தங்குவது ஹஜ்ஜின் சுன்னத்தாகும்.
இவற்றை எப்படி நிறைவாக நிறைவேற்றுவது என்பதை தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கு புறப்பட வேண்டும்.
அப்படி புறப்படுவதுதான் ஹஜ்ஜுக்கு உண்மையில் தயாராவதாகும்
கருவாடு மற்றும் சோத்து வடகங்களை வாங்கி வைத்துக் கொள்வது மட்டுமல்ல்.
ஹஜ்ஜு மப்ரூக்கான இரண்டாவது நிபந்தனை
الاتيان
فيه بأعمال البر
பிறருக்கு உதவி செய்வதாகும்.
இப்னு ரஜப் ரஹ் அவர்கள் இந்த இரண்டாவது
பண்பையே முதலாவதாக குறிப்பிடுகிறார்கள்.
அருமையானவர்களே
அல்லாஹ் நமது பாவங்கலை மன்னிப்பதாக இருந்தால் இங்கேயே வைத்து மன்னித்து விடலாம். 25
இலட்சம் மக்களை ஒரே இட்த்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட கோலத்தில் ஒன்ரு திரட்டக் காரணம் “ இத்தனை மக்களக்கு இடையே நமது இயல்பு எப்படி இருக்கிறது என்பதை பரிசோதிப்பதாகும்.
யார் குறுகிற சிந்தனையோடு தனது காரியத்தை மட்டும் கவனித்துக் கொள்கிறார்களோ அவர்கள் ஹஜ் பயணம் மட்டுமே செய்கிறார்கள் யார் பிறருக்கு உதவி ஒத்தாசையாக இருக்கிறார்களோ அவர்களே ஹஜ்ஜு செய்கிறார்கள் அந்த ஹஜ்ஜு தான் மப்ரூர் ஆகும்.
பிர்ரு என்றால் எனன வென்று ஒரு
சஹாபி பெருமானாரிடம் கேட்டார். நற்குணம் என பெருமானார் விளக்கமளித்தார்கள்.
لنّواس بن سمعان -رضي الله عنه- قال: (سألتُ رسولَ
اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ عن البِرِّ والإثمِ؟ فقال: البِرُّ حُسنُ الخُلُقِ
ஹாஜி ஹஜ் பயணத்தில் நற்குணத்தை
மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.
பிர்ரு என்பதற்கு இப்னு உமர் ரலி
அவர்கள் விளக்கமளித்தார்கள்.
:
كَانَ ابْنُ
عُمَرَ ، يَقُولُ : "
الْبِرُّ شَيْءٌ هَيِّنٌ وَجْهٌ طَلِيقٌ وَكَلامٌ لَيِّنٌ " .
ووقع عند ، من حديث جابر مرفوعًا:
(الحج المبرور ليس له جزاء إلا الجنة) قيل
يا رسول الله: ما بر الحج؟ قال: (إطعام الطعام، وإفشاء السلام)،
ஸயீது பின் ஜுபைர் ரலி அவர்களிடம்
சிறந்த ஹாஜி யார் ? என்று கேட்கப்பட்டது. பசித்தோருக்கு
உனவளிப்பவரும், தனது நாவை தீமைகளிலிருந்து தடுத்துக் கொண்டவரும் என பதிலளித்தார்கள்.
من اطعم الطعام ، وكف لسانه هن الشر
காலித் பின் மிஃதான் அறிவிக்கிறார்
மூன்று குணங்கள் இல்லாத ஹஜ்ஜு அல்லாஹ்வுக்கு தேவையில்லை
1. ஹராமானவற்றிலிருந்து தடுக்கும் பேணுதல்
2. அறியாமையை அமுக்கிவைக்கும் பொறுமை
3. நன்மைக்கு தூண்டும் அழகிய தோழமை
அருமையானவர்களே! ஹஜ் என்பது வெறுமனே
ஒரு பயணம் அல்ல.
ஹஜ்ஜுக்கு செல்வதற்கு முன் நமது இதயத்தை சில காரியங்களுக்கும் சிந்தனைகளுக்கும் தயார் படுத்திக் கொள்ளனும். அப்போதுதான் ஹஜ்ஜு ஹஜ்ஜாஜும்.
திருக்குர் ஆனின் ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் 97 வது வசனம் ஹஜ்ஜை கடமையாக்குகிறது.
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ
سَبِيلًا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ (97)
آل عمران
இந்த வசனத்தை கூறும் முன் ஹஜ்ஜுக்கு
செல்லும் இடம் பற்றிய பல முக்கிய செய்திகளை சொன்ன பிறகு தான் அல்லாஹ் ஹஜ் கடமையை பற்றி
பேசுகிறான்.
அல்லாஹ் என்ன சொல்கிறான் , கவனியுங்கள்.
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا
وَهُدًى لِّلْعَالَمِينَ (96) فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ ۖ
وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا ۗ
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ
ஹாஜிகள் முதலில் கவனிக்க வேண்டியது. அவர்கள் உலகின் முதல் இறையாலயத்திற்கு செல்கிறார்கள்/
கஃபாவை மலக்குகள் முதலில் கட்டினார்கள்
அதன் பின் ஆதம் அலை கட்டினார்கள்
நூஹ் அலை காலத்து வெள்ளப் பெருக்கில் சிதிலமடைந்த கஃபாவை நபிமார்கள் தரிசித்து வந்தார்கள். அதை ஒரு கட்டத்தில் இபுறாகீம் அலை புனர் நிர்மாணம் செய்தார்கள். இன்று வரை பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து கடை பிடித்து வரும் வணக்கமாக அந்த பயணம் தொடர்கிறது.
முதலில் ஹாஜி இந்த ப் பயணத்தின் தொன்மையை அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு பாரம்பரியச் சங்கிலியில் தன்னை அவர் பிணைத்துக் கொள்கிறார்.
பாரம்பரியமாக
செய்யப்படும் காரியங்களில் எத்தகைய எச்சரிக்கையும் பக்தியுணர்வு கடை பிடிக்க படுமோ
அது ஹஜ்ஜில் கடை பிடிக்கப் பட வேண்டும்.
ஹாஜி
அதனால் தான் இப்போதும் மினாவில், அரபாவில் கூடாரத்தில் தங்குகிறார் . முஸ்தலிபாவில்
தரையில் தங்குகிறார்.
சைத்தானை
கல்லெறிவதும். கஃபாவை வலம் வருவதும். சபா மர்வாவுக்கு கிடையில் தொங்கோட்டம் ஓடுவதும்
ஒரு நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும்.
ஹாஜி
இந்த அமல்களை நிறைவேற்றும் போது இதை எண்ணிப்பார்த்துக் கொள்ள வேண்டும்.
இங்கே
கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தியும் உண்டு.
அல்லாஹ்
மக்கா என்று சொல்லாமல் பக்கா என்று கூறியுள்ளான்.
பக்கா
என்பது மக்காவின் மற்றொரு பெயராகும்.
மக்கா
என்பது ஊரின் பெயர், பக்கா என்பது கஃபா அமைந்திருக்கும் இடத்தின் பெயர் என்றும் சொல்லப்
படுவதுண்டு.
இந்த
இடத்தில் பக்கா என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தக் காரணம்
பக்கா
என்ற வார்த்தைக்கு தலைகளை தாழ்த்தும் இடம் என்று பொருளாகும்.
تبك اعناق الجبابرة
எந்த அகங்காரியின் தலையும்
அங்கு தாழ்ந்தே நின்றாக வேண்டும்.
ஹாஜி நினைவில் வைக்க வேண்டிய
மற்றொரு இயல்பை இது சுட்டிக் காட்டுகிறது.
ஹாஜி அவருடைய ஊரில் எப்படிப்பட்டவராகம்
இருக்கலாம். ஆனால் அங்கு தன்னை அல்லாஹ்வை மிக சாதாரண ஒரு அடியாராகவே கருதிக் கொள்ள
வேண்டும்.
مُبَارَكًا
ஹாஜி செல்லும் இடத்தின் இரண்டாவது பெருமை
அது பாக்கியம் மிக்க இடமாகும்.
எல்லா வகையான பரக்கத்துகளும் அங்கு உண்டு.
ஒரு உதாரணம் இத்தனை இலட்சம் பேர் கூடுகிறார்கள் ‘
அத்தனை பேருக்கும் தண்ணீர் கிடைக்கிறது.
சென்ற வருடம் மினாவில் பைப் உடைந்து சிறிது நேரம் தண்ணீர் வரவில்லை. ஒரு பதட்டமும் இல்லை. மக்கள் தண்ணீர் பாட்டில்களிலிருந்து ஒளு செய்து தொழுதார்கள். ஏராளமான தண்ணீர் அங்கு குடிப்பதற்காக பாட்டில்களில் வைக்கப் பட்டிருந்தது.
ஒவ்வொரு ஊர் காரருக்கு அவருடைய ஊரின் உணவு கிடைக்கும்.
இப்போது மட்டுமல்ல. அப்பவும்.
ஹரம பள்ளிவாசலுக்கு வெளியே வந்தால் தமிழ் நாட்டு புரோட்டாவும் பிரியாணியும் கிடைக்கும். ரசம் கிடைக்கும்.
மலாய்க்காரர்களுக்கு நாஸி லாமா கிடைக்கும்.
ஐரோப்பியர்களுக்கு பிரட் வகையராக்கள் கிடைக்கும்.
சீன பானி உணவான நூடுல்ஸ்களும் கிடைக்கும்.
எல்லா பழங்களும் கிடைக்கும். தாராளமாக.
இந்த பரக்கத் மட்டுமல்ல.
அமல்களிலும் ஏராளமான பரக்கத் அங்கு உண்டு.
மஸ்ஜிதுல் ஹரமில் தொழுதால் ஒரு நன்மைக்கு ஒரு இலட்சம் மடங்க்கு கூலி கிடைக்கும் .
மஸ்ஜிதுல் ஹரமில் ஒரு பர்ளை ஜமாத்தாக தொழுதால் 16 கோடி வரை நன்மை கிடைக்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்
இந்த பரக்கத்துக்கள் அனைத்தும் தனக்கு கிடைக்க வெண்டும். அது தன் வாழ்வு முழுவதும் தொடர வேண்டும் என்று ஹாஜி நினைக்க வேண்டும்.
முபாரக்கான ஒரு இடத்தில் இருக்கிறேன் , இந்த இடத்தின் பரக்கத் முழுவதையும் பெற முயற்சிப்பேன் என்ற சிந்தனை ஹாஜிக்கு அவசியம்.
மக்காவின்
மூன்றாவது பெறுமை : وَهُدًى
لِّلْعَالَمِينَ
அங்கு செல்வோருக்கு ஹிதாயத் கிடைக்கும்.
பெற்றோரை கவனிக்காமல் இருப்பவர்
சரியாக தொழாமல் இருப்பவர்
ஹராம ஹலாலை பேணாமல் இருப்பவர்
வாழ்வில் அதிக நன்மைகளை செய்வது குறித்து சிந்திக்காமல் இருப்பவர்
என ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையான ஹிதாயத் தேவைப்படும். அவரவருக்கு தேவையான ஹிதாயத்தை கஃபா வழங்கும்.
ஹஜ்ஜுக்கு சென்ற பல பேர் ஹஜ்ஜுக்குப் பின் பெரும் பாக்கியவானகளாக மாறியிருப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம்.
மால்கம்
எக்ஸ் என்ற அமெரிக்க கறுப்பின மக்களுக்கான போராளி ஹஜ்ஜுக்கு செல்லும் வரை வெள்ளையர்களை
தான் சைத்தானின் பிள்ளைகள் என்றே நினைத்துக் கொண்டிருந்ததாகவும் ஹஜ்ஜிற்குப் பிறகு
தான் வெள்ளையர்களை பற்றிய தன்னுடைய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.
அல்லாஹ்
மனித சிந்தனைகளுக்கும் இதயங்களுக்கும் தேவையான ஹிதாயத்தை அங்கு வழங்குகிறான்.
நமக்கு
தேவையான ஹிதாயத்தை அங்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என ஹாஜி நினைக்க வேண்டும்.
அங்குள்ள நான்காவது சிறப்பு ) فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ
إِبْرَاهِيمَ
அங்கே ஏராளமான அல்லாஹ்வின் வல்லமைக்கான சான்றுகள் இருக்கின்றன.
ஹிரா குகை இருக்கிறது. ஜிபரயீல் அலை அவர்கள் பெருமானாருக்கு முதன் முதலில் குர் ஆனை கொண்டு வந்த இடம்.
தவ்ரு குகை இருக்கிறது. ஹிஜ்ரத்தின் போது பெருமானார் (ஸல்( அவர்கள் மறைந்திருந்த இடம்.
கதீஜா அம்மாவின் கப்ரு இருக்கிறது
பெருமானாரின் வரலாற்றில் நாம் கேள்விப்பட்ட இடங்களை நேரடியாக இப்போதும் நாம் பார்க்கலாம்.
இந்த வகையில் ஒரு பேரற்புதமாக நபி இபுறாகீம் அலை அவர்களின் பாதம் பதிந்த கல்லும் மகாமே இபுறாகீம் அங்கே இருக்கிறது.
ஆதாரங்களை சுமந்து நிற்கிற இந்த இடங்களை பார்க்கீற எந்த முஃமினுக்கும் ஈமான் வலுப்பெறும்.
புனித
மக்காவின் ஐந்தாவது சிறப்பு
وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا ۗ
அங்கு
சென்றவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது , மனிதர்களுக்கு மட்டும் அல்ல. விலங்குகளுக்கும்
செடி கொடிகளுக்கும்.
இந்த
பாதுகாப்பு தலை முறை தலைமுறையாக கிடைத்து வருகிறது.
தந்தையை
கொலை செய்தவரை பார்த்தால் கூட பழி வாங்க மாட்டார்கள்.
இந்த
வசனத்திற்கு இன்னொரு அர்த்தமும் சொல்லப் படுகிறது.
மூன்று
நிபந்தனைகளோடு இந்த இடத்திற்குள் நுழைபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்.
وَمَن دَخَلَهُ
وَمَن
دَخَلَهُ كَانَ آمِنًا ۗ
1. معظما لحرمته புனிதத்தை மதித்தல்
2. عارفا لحقه – சட்டங்களை பேணுதல்
3. متقربا إلي الله அல்லாஹ்விற்காக
மட்டுமே ஹஜ் செய்தல்
كَانَ آمِنًا ۗ يوم القيامة
ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகள் இந்த கடைசி விசயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
·
புனிதங்களை சரியாக மதிக்கனும்.
·
சட்டம் அறிந்து செய்ய வேண்டிய அமல்களை செய்யனும்.
·
எல்லாவற்றையும்
அல்லாஹ்விற்காகவே செய்ய்னும்.
புனித
கஃபா ஆலயத்தின் இத்தனை சிறப்புக்களை கூறிய பிறகு தான் வசதி வாய்ப்புடைவர்களுக்கு அல்லாஹ்விற்காக
ஹஜ் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
எனவே
ஹஜ்ஜுக்கு புறப்படுகிற ஹாஜிகள் அல்லாஹ் முதலாவதாக கூறியிருக்கிற இந்த சிறப்புக்களை
நினைவில் நிறுத்தினால் மட்டுமே அது ஹஜ்ஜாகும் இல்லை எனில் அது வெறும் பயணமாகிவிடும்.
இந்த வருடம் ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளுக்கும் இனி ஹஜ்ஜுக்கு செல்ல இருக்கும் அனைவருடைய
ஹஜ்ஜையும் அல்லாஹ் மப்ருர் ஆக்குவானாக!
இந்த
வசனத்தின் இறுதியில் ஒரு கடும் எச்சரிக்கையும் இருக்கிறது.
ஹஜ்ஜு
கடைமையான பிறகும் யார் ஹஜ்ஜுக்கு செல்ல வில்லையோ அவர்களைப் பற்றி பேசுகிற போது அல்லாஹ்
பயன்படுத்துகிற வார்த்தை மிக கடுமையானது.
وَمَن
كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
من لم يحج என்று சொல்ல வேண்டிய இடத்தில்
من
كفر வார்த்தையை
அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான், இதன் பொருள் – فقد قارب الكفر என்பதாகும்.
وضع
من كفر موضع من لم يحج – فقد قارب الكفر
عن
علي قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم
يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا
எனவே ஹஜ் கடமையானவர்கள் தாமதமின்றி ஹஜ்ஜை நிறைவேற்றி விட வேண்டும்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு செல்லும் அனைவரின் ஹஜ்ஜும் மப்ரூர் ஆகட்டும்.
ஹஜ்ஜை ஆசைப்படும் அனைவருக்கும் ஹஜ் நஸீபாகட்டும்.
எப்போதும் ஹஜ் பாதுகாப்பானதாக ஆகட்டும்.
No comments:
Post a Comment