வெள்ளிக்கிழமை தோறும் கஹ்பு அத்தியாயத்தை ஓதிவர பெருமானார்
(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
عن أبي سعيد ، عن النبي صلى الله عليه وسلم أنه
قال : " من
قرأ سورة الكهف في يوم الجمعة ، أضاء له من النور ما بينه وبين الجمعتين " ஹாகிம்
அல்லாமா அபுல்ஹஸன் அலி நத்வீ அவர்கள் : தான் எட்டு வயது முதல்
வெள்ளிக்கிழமைகளில் கஹ்பு ஓதிவருவதாகவும் திடீரென ஒரு நாள் ஏன் இப்படி ஓதச் சொன்ன காரணம்
என்ன ? சூரத்துல் கஹ்பின் சிறப்பு என்ன ? என்று ஆராயத் தொடங்கியதாகவும் கூறி இந்த அத்தியாயத்தின்
சிறப்பில் மிக அற்புதமான ஒரு நூலை எழுதியுள்ளார்கள்.
الصراع بين
الايمان والمادية
என்ற நூல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளாது. இஸ்லாம்
& உலகாயதம் என்ற தலைப்பில் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
இன்றைய நவீன வாழ்கைப் போங்கில் திருக்குர் ஆனின் வழிகாட்டுதல்கள் நமது அன்றாட
வாழ்விற்கு எவ்வளவு அத்தியாவசியமாக இருக்கின்றன என்பதை அந்நூல் தெளிவுபடுத்துகிறது.
“மனிதனை குழப்பத்தில் தள்ளுவதற்கு பல
காரியங்களும் காத்துக் கிடக்கின்றன அவன் தன்னை நிலைப்படுத்தி வைத்திருந்தால் தவிர அவனால்
வெற்றி பெற முடியாது “
என்ற தலைப்பில் இன்றைய வாழ்விற்கு தேவையான பிரதானமான பல தத்துவங்களை அல்கஹ்பு அத்தியாயம் போதிக்கிறது.
சூரத்துல் கஹ்பு அத்தியாயத்தில் சிறப்பு தொடர்பாக பெருமானார் (ஸல்) அவர்கள்
கூறிய சில ஹதீஸ்கள் இந்த உண்மைய சுமந்து நிற்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்
عن أبي الدرداء ، عن النبي صلى الله عليه وسلم قال : " من
حفظ عشر آيات من أول سورة الكهف ، عصم من الدجال " . مسلم
عن ثوبان عن رسول الله صلى الله عليه وسلم أنه قال : " من قرأ العشر الأواخر من سورة الكهف ، فإنه عصمة له من الدجال " .
عن ثوبان عن رسول الله صلى الله عليه وسلم أنه قال : " من قرأ العشر الأواخر من سورة الكهف ، فإنه عصمة له من الدجال " .
தஜ்ஜாலின் குழப்பம் என்பது இறுதி நாளின் குழப்பம் மட்டும் அல்ல. ஒவ்வொரு கால
கட்டத்திலும் ஈமானிய வாழ்விற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய எதுவும் அந்தக் காலத்திய
தஜ்ஜாலே ஆகும்.
நம் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்வதற்கு சூரத்துல் கஹ்பு அத்தியாயம் கூறும்
செய்திகளை இன்றைய ஜும் ஆவில் நாம் பார்க்கிறோம்.
கஹ்பு அத்தியாயத்தில் பிரதானமாக நான்கு விசயங்கள் பேசப்படுகின்றன.
قصة أهل الكهف، وقصة موسى
والخضر، وقصة صاحب الجنّتين، وقصة ذي القرنين،
ومن ميّزة هذه السّورة
والقصص التي فيها أنّها تجمع معظم الفتن الأربعة في الدّنيا، فتنة العلم وهي قصّة
موسى والخضر، وفتنة المال وهي قصّة صاحب الجنّتين، وفتنة السّلطة وهي قصّة ذو
القرنين، وفتنة الدّين وهي قصة صاحب الجنّتين،
وهذه الفتن من أعظم الفتن التي يسعى إليها الشّيطان للخراب بين النّاس
وهذه الفتن من أعظم الفتن التي يسعى إليها الشّيطان للخراب بين النّاس
கஹ்பு அத்தியாயத்தில் பேசப்படுகிற செய்திகளுக்கு ஒரு முக்கியச் சிறப்பு உண்டு. என்ன வெனில் ?
இந்த அத்தியாயத்தில் பேசப்படும் செய்திக திருக்குர் ஆனில் வேறு எங்கும் பேசப்படுவதில்லை.
ஒரே
ஒரு செய்தி மட்டுமே மற்ற இடங்களில் பேசப்பட்ட செய்தி.
அது
ஆதம் அலை அவர்களுக்கும் சைத்தானுக்கும் இடையிலான பகையைப் பற்றிய செய்தியாகும்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا
لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ
رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ
عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا (50)
சைத்தான்
மக்களை சோதனைக்குள் தள்ளும் நான்கு விசயங்கள்
பிரதானமானவை இது.
முதல் சோதனை கொள்கையில்
ஏற்படும் சோதனை
ஒவ்வொரு காலத்திலும்
இறை நம்பிக்கையாளர்களுக்கு வெவ்வேறு விதமான தத்துவங்களின் தாக்குதல் ஏற்படும்.
பெரும் பாலும்
இணை வைப்பாளர்களால் முஃமின்களுக்கு சோதனைகள் ஏற்பட்டதுண்டு.
இப்ராஹீம் அலை
அவர்களுக்கு இணை வைப்பாளர்களால் சோதனைகள் ஏற்பட்டது.
இப்போதும் கூட
இணை வைப்பாளர்கள் ஜெய் ஸ்ரீராம் – வந்தே மாதரம் கோசங்களை போடச் சொல்லி முஸ்லிம்களை
வற்புறுத்துகிறார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தில்
புதிய எம் பிக் களாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐதராபாத நாடாளுமன்ற உறுப்பினர்
அசததுத்தீன் உவைஸி அவர்களும் பதவி ஏற்க வந்த போது இந்துத்துவ உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம்
– வந்தே மாதரம் பாரத்மாதா கீ ஜே என்றெல்லாம் தொடர்ந்து கோசங்களை எழுப்பியதை நாம் பார்த்தோம்.
இவர்கள் இனி மற்றவர்களை நிர்பந்திக்கிற அளவிற்கு கூட செல்லாம்.
இத்தகைய சோதனைகள்
ஏற்படுகிற போது முஃமின்கள் அல்லாஹ்வும் இறைத்தூதர்களும்
வேதங்களும் காட்டிய வழியில் நிலைத்திருக்க வேண்டும். அப்படி நிலைத்து நிற்பதற்காக ஊரை
நாட்டை துறந்து செல்ல வேண்டும் என்ற நிர்ந்பந்தம் ஏற்பட்டாலும் அதற்கு தயாராக இருக்க
வேண்டும். அப்படி நடந்தால் அல்லாஹ் கை விட்டு விட மாட்டான்,
இந்த சத்தையத்தை
எடுத்துக் காட்டும் சக்தி வாய்ந்த உதாரணம் தான் அஸ்ஹாபுல் கஃஹ்பு எனும் குகைத் தோழர்களின்
வரலாறு.
குகைத் தோழர்களின்
வரலாறு யூதம் கிருத்துவம் இஸ்லாம் என மூன்று மதங்களிலும் பேசப்பட்டிருக்கிறது.
Seven Sleepers என பைபிள் குறிப்பிடுகிறது.
இந்த குகை ஜோர்டானின்
தலை நகர் உம்மானிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் ரஜீப் கிராமத்தில் இப்போதும் இருக்கிறது.
ஈஸா அலை அவர்களுக்குப்
பிறகு அவருடைய தோழரகளால் ஆங்காங்கே ஏகத்துவ பிரச்சாரம் கிழக்கு ரோமர்களின் பிரதேசங்களில்
நடை பெற்று வந்தது. இதில் அப்ஸூஸ் என்ற ஊரில் சில இளைஞர்கள் ஈஸா அலை அவர்களின் சீடர்
மாத்தேயுவால் மன மாற்றம் பெற்றிருந்தனர். அவர்கள் ஏழு பேர்களாக இருக்கலாம் என்று திருக்குர்
ஆனுடைய அறிஞர்கள் கூறுகிறார்கள். எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் அல்லர். இந்த
செய்தி அந்த ஊரின் தலைவனாக இருந்த திக்யானூஸ் என்பவனுக்கு தெரிந்தது. அவன் அவர்களை
அழைத்து இப்போது நான் வெளியூர் போகிறேன். நான் திரும்பி வருவதற்குள் நீங்கள் மனம் மாறி
நமது சிலைகளை வணங்கத் தொடங்கிவிட வேண்டும் இல்லை எனில் கொல்லப்படுவீர்கள் என்று எச்சரித்து
விட்டுச் சென்றான். இந்த் நிலையில் அந்த ஊர்மக்கள் சிலைகளை கொண்டாடும் ஒரு திருவிழா
நாள் வந்த போது அதில் பங்கேற்க விரும்பாத அந்த இளைஞர்கள் அந்த ஊரூக்கு வெளியே ஒரு மரத்தடியில்
இணைந்தார்கள். ஒருவரை ஒருவர் விசாரித்ஹ்டுக் கொண்டனர். பிறகு தங்களுடைய தீனைக் காப்பாற்றிக்
கொள்வதற்காக அந்த ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அப்போது ஒரு நாயும் அவர்களோடு
சேர்ந்து வந்தது. அவர்கள் வெகு தூரம் நடந்து ரகீம் என்ற இடத்தில் ஒரு குகையில் ஒய்வெடுப்பதற்காக
தங்கினார்கள். அவர்களுடைய நாய் குகைக்கு வெளியே படுத்துக் கொண்டது. அவர்களை அப்படியே
அல்லாஹ் முன்னூறு வருடங்கள் தூங்க வைத்தான்.
இதற்குகிடையே முன்னூறு
வருடங்களுக்குப் பிறகு ரோமில் கிருத்துவ சமயம வளர்ச்சியடைந்தது. அதே அப்ஸூஸ் நகரின்
தலைவராக இரண்டாம் தீயோடஸஸ் என்பவர் பொறுப்பேற்றிருந்தார். அந்த கால மக்கள் இறைவனை நம்பினாலும்
மறுமையில் எழுப்பப் படுதல் குறித்து சந்தேக மனப்பான்மை கொண்டிருந்தனர். இதையறிந்த மன்னர்
அல்லாஹ்விடம் இந்த சந்தேக குணத்தை போக்க துணை செய்யுமாறு வேண்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அல்லாஹ் 300 வருடங்கள் கழித்து குகைத் தோழர்களை விழிக்கச் செய்தான்.
அவர்கள் மூலம்
அல்லாஹ்வின் சக்தி அந்த நகருக்கு வெளிப்பட்டது. மக்கள் நேர்வழி பெற்றனர். மக்கள் குகைத்
தோழர்களை கொண்டாடினர். ஆனால் அந்த குகைத் தோழர்களோ தங்களை அந்த குகைகயிலேயே விட்டு
விடுமாறு அரசனை கேட்டுக் கொண்டனர். அந்த குகையிலேயே அவர்கள் அனைவரும் இறந்து போயினர்.
அங்கே அவர்களுக்கான கல்லறைகள் கட்டப்பட்டன, அருகே ஒரு பள்ளிவாசலும் கட்டப்பட்டது.
அல்லாஹ் கஹ்பு
அத்தியாயத்தில் அற்புதமாக இதை சொல்கிறான்.
أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ
وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا (9) إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا
مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا (10) فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا (11) ثُمَّ بَعَثْنَاهُمْ لِنَعْلَمَ أَيُّ الْحِزْبَيْنِ أَحْصَى لِمَا
لَبِثُوا أَمَدًا (12) نَحْنُ نَقُصُّ عَلَيْكَ
نَبَأَهُمْ بِالْحَقِّ إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ
هُدًى (13)
وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا
فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَنْ نَدْعُوَ مِنْ دُونِهِ
إِلَهًا لَقَدْ قُلْنَا إِذًا شَطَطًا (14) هَؤُلَاءِ قَوْمُنَا اتَّخَذُوا مِنْ دُونِهِ آلِهَةً لَوْلَا
يَأْتُونَ عَلَيْهِمْ بِسُلْطَانٍ بَيِّنٍ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى
اللَّهِ كَذِبًا (15) وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ
وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنْشُرْ لَكُمْ
رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا (16) وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ
الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ
مِنْهُ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ
يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا (17) وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ
الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ
لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ
رُعْبًا (18)
وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا
بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا
أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا
أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى
طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ
بِكُمْ أَحَدًا (19)
إِنَّهُمْ إِنْ يَظْهَرُوا عَلَيْكُمْ
يَرْجُمُوكُمْ أَوْ يُعِيدُوكُمْ فِي مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوا إِذًا أَبَدًا
(20) وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ
اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا إِذْ يَتَنَازَعُونَ
بَيْنَهُمْ أَمْرَهُمْ فَقَالُوا ابْنُوا عَلَيْهِمْ بُنْيَانًا رَبُّهُمْ
أَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِينَ غَلَبُوا عَلَى أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ
عَلَيْهِمْ مَسْجِدًا (21) سَيَقُولُونَ ثَلَاثَةٌ رَابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ
خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًا بِالْغَيْبِ وَيَقُولُونَ سَبْعَةٌ
وَثَامِنُهُمْ كَلْبُهُمْ قُلْ رَبِّي أَعْلَمُ بِعِدَّتِهِمْ مَا يَعْلَمُهُمْ
إِلَّا قَلِيلٌ فَلَا تُمَارِ فِيهِمْ إِلَّا مِرَاءً ظَاهِرًا وَلَا تَسْتَفْتِ
فِيهِمْ مِنْهُمْ أَحَدًا
கொள்கை வழியில்
சோதனைகள் வரும் போது விவாதங்களில் ஈடுபடாமல் சத்திய வழியில் அதை கடந்து சென்று விடுகிறவர்கள்
வெற்றியடைவார்கள் என்ற செய்தி தருகிற இந்த
வரலாறு அந்த வழியில் நடக்க ந்ம்மை தூண்டுகிற ஒரு அற்புத வரலாறாகும்.
இன்னொன்றும் இங்கு
கவனிக்கத தக்கது. இந்த குகைத்தோழர்களைப் பற்றி பேசுகிற போது அவர்களை இளைஞர்கள் என்று
அல்லாஹ் அறிமுகப் படுத்துகிறார்கள். ஒரு புர்டசிப் பயணத்திற்கு இளைஞர்கள்தான் ஆரம்பமாக
தயாராவார்கள் என்பதை இது குறிப்பிடுவதோடு அவர்களே இத்தகை சோதனைகளுக்கு முதல் பலியாவார்கள்
என்பதையும் இது புலப்படுத்துகிறது.
மனித வாழ்வின்
அடுத்த பெரும் சோதனை அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறீவு,
அந்த அறிவு அவனை
எப்படியும் பேச வைக்கும்.
ஆணும் ஆணும் சேர்ந்து
குடும்பம் நடத்தினால் தப்பில்லை என்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகிறார்கள்.
‘
18 வயதுக்கு மேற்பட்டுள்ளோர்களுக்கு
உடலுறவு சுதந்திரம் இருக்கிறது என்று தீர்ப்பளிக்கிறார்கள்.
ஒரு கொள்கை வழியின்
கட்டுப்பாட்டு வரம்பிற்குள் வராமல் தமது அறிவையே கடைசி தீர்வென்று கருதுகீறவர்களுக்கு
ஒரு பேரிடையாக மூஸா அலை ஹிழ்ரு அலை அவர்களின் வரலாற்றை மிக அற்புதமாக அல்லாஹ் கூறுகிறான்.
“மனிதன் தனது அறிவால் அடைய முடிந்ததை மட்டுமே உண்மை என்று நினைக்கிறான். ஆனால்
அவனுடைய அறிவுக்கு அப்பாலும் இந்த உலகில் ஏராளமான உண்மைகள் புதைந்து கிடக்கின்றன. என்பதை
அந்த வரலாறு முகத்தில் அடித்தார் போல் எடுத்துரைக்கிறது.
மூஸா அலை அவர்கள் தன் அறிவுக்குப் பட்டதை இறுதி என்று நினைத்தார்கள். அல்லாஹ்வுக்கு
அதற்கு மேலும் அறிய வேண்டிய உண்மைகள் இருக்கின்றன என்பதை கிழ்ரு அலை அவர்கள் புரிய
வைத்தார்கள்.
وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ
الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا (60) فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا
نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا (61) فَلَمَّا
جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا
نَصَبًا (62) قَالَ
أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا
أَنْسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي
الْبَحْرِ عَجَبًا (63)
قَالَ ذَلِكَ مَا كُنَّا نَبْغِ فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا
قَصَصًا (64) فَوَجَدَا
عَبْدًا مِنْ عِبَادِنَا آتَيْنَاهُ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَعَلَّمْنَاهُ مِنْ
لَدُنَّا عِلْمًا (65)
قَالَ لَهُ مُوسَى هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِ مِمَّا
عُلِّمْتَ رُشْدًا (66)
قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا (67) وَكَيْفَ
تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا (68) قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ
صَابِرًا وَلَا أَعْصِي لَكَ أَمْرًا (69) قَالَ فَإِنِ اتَّبَعْتَنِي فَلَا
تَسْأَلْنِي عَنْ شَيْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا (70) فَانْطَلَقَا
حَتَّى إِذَا رَكِبَا فِي السَّفِينَةِ خَرَقَهَا قَالَ أَخَرَقْتَهَا لِتُغْرِقَ
أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا (71) قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ
تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا (72) قَالَ لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلَا
تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا (73) فَانْطَلَقَا حَتَّى إِذَا لَقِيَا غُلَامًا
فَقَتَلَهُ قَالَ أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ
شَيْئًا نُكْرًا (74)
قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا
(75) قَالَ
إِنْ سَأَلْتُكَ عَنْ شَيْءٍ بَعْدَهَا فَلَا تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ مِنْ
لَدُنِّي عُذْرًا (76)
فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا
أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ
يَنْقَضَّ فَأَقَامَهُ قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا (77) قَالَ
هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ
عَلَيْهِ صَبْرًا (78)
أَمَّا السَّفِينَةُ فَكَانَتْ لِمَسَاكِينَ يَعْمَلُونَ فِي
الْبَحْرِ فَأَرَدْتُ أَنْ أَعِيبَهَا وَكَانَ وَرَاءَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ
سَفِينَةٍ غَصْبًا (79)
وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا
أَنْ يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا (80) فَأَرَدْنَا أَنْ يُبْدِلَهُمَا رَبُّهُمَا
خَيْرًا مِنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا (81) وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ
يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا
صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَنْ يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا
كَنْزَهُمَا رَحْمَةً مِنْ رَبِّكَ وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِي ذَلِكَ
تَأْوِيلُ مَا لَمْ تَسْطِعْ عَلَيْهِ صَبْرًا (82)
மனித வாழ்வின் அடுத்த பெரும் சோதனை செல்வம்.
செல்வம் கொழிக்கும் போது மனிதன் தடுமாறுகிறான்.
இந்த பலம் எப்போதும் நிலைக்கும் என்று நம்புகிறான். பாவம் அடுத்த நாள் பொழுது புலர்வதற்குள்
என்ன வெல்லாம் நடக்க கூடும் என்று அவன் நினைத்துப் பார்ப்பதில்லை.
இரண்டு தோட்டங்களின் உரிமையாளரின் கதை
وَاضْرِبْ لَهُمْ مَثَلًا رَجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا
جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا
زَرْعًا (32) كِلْتَا الْجَنَّتَيْنِ آتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِمْ مِنْهُ
شَيْئًا وَفَجَّرْنَا خِلَالَهُمَا نَهَرًا (33) وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ لِصَاحِبِهِ
وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنْكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا (34) وَدَخَلَ
جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَنْ تَبِيدَ هَذِهِ
أَبَدًا (35) وَمَا
أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا
مِنْهَا مُنْقَلَبًا (36)
قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي
خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا (37) لَكِنَّا
هُوَ اللَّهُ رَبِّي وَلَا أُشْرِكُ بِرَبِّي أَحَدًا (38) وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ
مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ إِنْ تَرَنِ أَنَا أَقَلَّ مِنْكَ
مَالًا وَوَلَدًا (39)
فَعَسَى رَبِّي أَنْ يُؤْتِيَنِ خَيْرًا مِنْ جَنَّتِكَ وَيُرْسِلَ
عَلَيْهَا حُسْبَانًا مِنَ السَّمَاءِ فَتُصْبِحَ صَعِيدًا زَلَقًا (40) أَوْ
يُصْبِحَ مَاؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِيعَ لَهُ طَلَبًا (41) وَأُحِيطَ بِثَمَرِهِ فَأَصْبَحَ يُقَلِّبُ
كَفَّيْهِ عَلَى مَا أَنْفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا وَيَقُولُ
يَا لَيْتَنِي لَمْ أُشْرِكْ بِرَبِّي أَحَدًا (42) وَلَمْ تَكُنْ لَهُ فِئَةٌ يَنْصُرُونَهُ
مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مُنْتَصِرًا (43) هُنَالِكَ الْوَلَايَةُ لِلَّهِ الْحَقِّ
هُوَ خَيْرٌ ثَوَابًا وَخَيْرٌ عُقْبًا (44)
செல்வம் என்பது தன்னுடைய பாரம்பரிய தகுதி அல்ல. அது அல்லாஹ் கொடுத்தது என்ற சிந்தனையோடு வாழ்கிறவர்கள் மட்டுமே நிலைக்க முடியும்.
மனித வாழ்வின் அடுத்த பெரும் சோதனை அதிகாரம்.
அதிகாரம் கிடைக்கிற போது அதை மக்களுக்கு நன்மை செய்வதற்கான ஒரு வழியாக பயன்படுத்தாமல் மக்களை ஆதிக்கம் செய்யவும் துன்புறுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தோற்றுப் போவார்கள். மக்களுக்கு நன்மை செய்பவர்களாகவும் மக்களில் தீமை செய்வோரை மட்டுமே தண்டிப்பவர்களாகவும் இருப்பவர்களே முஃமின்கள் என்பதை துல் கர்ணனின் வரலாறு உணர்த்துகிறது.
وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ
مِنْهُ ذِكْرًا (83) إِنَّا
مَكَّنَّا لَهُ فِي الْأَرْضِ وَآتَيْنَاهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا (84) فَأَتْبَعَ
سَبَبًا (85) حَتَّى
إِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِي عَيْنٍ حَمِئَةٍ وَوَجَدَ
عِنْدَهَا قَوْمًا قُلْنَا يَا ذَا الْقَرْنَيْنِ إِمَّا أَنْ تُعَذِّبَ وَإِمَّا
أَنْ تَتَّخِذَ فِيهِمْ حُسْنًا (86) قَالَ أَمَّا مَنْ ظَلَمَ فَسَوْفَ
نُعَذِّبُهُ ثُمَّ يُرَدُّ إِلَى رَبِّهِ فَيُعَذِّبُهُ عَذَابًا نُكْرًا (87) وَأَمَّا
مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَى وَسَنَقُولُ لَهُ مِنْ
أَمْرِنَا يُسْرًا (88)
ثُمَّ أَتْبَعَ سَبَبًا (89) حَتَّى إِذَا بَلَغَ مَطْلِعَ الشَّمْسِ
وَجَدَهَا تَطْلُعُ عَلَى قَوْمٍ لَمْ نَجْعَلْ لَهُمْ مِنْ دُونِهَا سِتْرًا (90) كَذَلِكَ
وَقَدْ أَحَطْنَا بِمَا لَدَيْهِ خُبْرًا (91) ثُمَّ أَتْبَعَ سَبَبًا (92) حَتَّى
إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُونِهِمَا قَوْمًا لَا يَكَادُونَ
يَفْقَهُونَ قَوْلًا (93)
قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ
مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَى أَنْ تَجْعَلَ
بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا (94) قَالَ مَا مَكَّنِّي فِيهِ رَبِّي خَيْرٌ
فَأَعِينُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا (95) آتُونِي
زُبَرَ الْحَدِيدِ حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوا
حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا (96) فَمَا
اسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا (97) قَالَ هَذَا
رَحْمَةٌ مِنْ رَبِّي فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ وَكَانَ
وَعْدُ رَبِّي حَقًّا (98)
துல் கர்ணைன் மன்னனின் காலம் சூழல் பற்றிய மற்ற
விபரங்கள் தெரியவில்லை. சிலர் இவரை கிரேக்கத்தின் மஹா அலக்ஸாண்டர் என்று சொல்வதுண்டு.
ஆனால் திருக்குர் ஆனிய அறீஞர்கள் அதை மறுக்கிறார்கள். காரணம் கிரேக்க மன்னன் அலக்ஸாண்டர்
குதிரைகளை வைத்து யாகம் நடத்தினார் என்று வரலாறு வருகிறது. துல் கர்ணைன் ஒரு முஃமின்.
எனவே அவர் இவர் அல்ல என்பதே அறிஞர்களின் கருத்து. குர் ஆன் தனது வழக்கப் படி செய்திக்கு
மட்டுமே முன்னுரிமை அளித்து பேசுகீறது, காலத்தையோ இடத்தை பற்றி பேச வில்லை. எனவெ பொதுவாக
உலகை கட்டி ஆண்ட ஒரு பெரு மன்னர் துல்கர்ணைன் என்ற பெயரில் இருந்தார் என்ற அளவில் மட்டுமே
இந்த வரலாற்றை நாம் அனுக வேண்டும்.
உலகின் மகா சக்தி வாயந்த அந்த மன்னர் தனது குடிமக்களில்
தீயோரை மட்டுமே தண்டிப்பேன் என்கிறார். மக்களிடமிருந்து காசு பறிக்காமல் அவர்களுக்கு
அணை கட்டித் தருகிறார். பிரம்மாண்ட அணையை கட்டி விட்டு هَذَا رَحْمَةٌ مِنْ رَبِّي فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ
دَكَّاءَ
என்கிறார்.
முழு ஈமானிய வாழ்விற்கான அடையாளங்களை இந்த நான்கு
வரலாறுகளும் உணர்த்து கின்றன.
எனவே தான் வெள்ளிக்கிழமை தோறும் இந்த அத்தியாயத்தை
ஓதி னால் அது அடுத்த வெள்ளிக்கிழமை வரை நம்மை தடம் புரளாமல் பாதுகாக்கும் ஒரு ஒளியாக
இருக்கும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
நாமும் வெள்ளிக்கிழமைகளில் கஹ்பு சூரா ஓதும் பழக்கத்தை
கைகொள்வோம். அதன் தத்துவங்களை நினைவில் வைப்போம்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!
Alhamthulillah.barakallah
ReplyDeleteAlhamthulillah.barakallah
ReplyDeleteமாஷா அல்லாஹ்...
ReplyDeleteاللهم عافه وطول حيوته وانفعنا من علمه