வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 27, 2019

கும்பல் தாக்குதல்களும் குளிர்காயும் மத்திய அரசும்.


இஸ்லாம் தனது பெருந்தன்மையையும் நல்லுறவு குணத்தையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது.
لَا إِكْرَاهَ فِي الدِّينِ

பெருமானார் காலத்தில் தங்களது சொந்தக் குழந்தைகளைக் கூட நிர்பந்திக்க முஸ்லிம்களை மார்க்கம் அனுமதிக்க வில்லை.

இந்த வசனத்தின் பின்னணிக் காரணம்

இஸ்லாத்திற்கு முன் மதினத்து மக்களில்  குழந்தை பிறக்காத பெண்கள் இப்படி நேர்ச்சை செய்வார்கள்.
இறைவா ! எங்கள் வயிற்றில் ஒரு குழந்தை கொடு! அதை நாங்கள் யூதக் குழந்தையாக்கி விடுகிறோம்.
அந்த நேர்ச்சைக்கு பிறகு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை அருகிலிருந்த யூதக் குடும்பத்தில் ஒப்படைத்து விடுவார்கள்.
அப்படி பல மதீனத்து சிறுவர்களும் இளைஞர்களும் யூதர்களோடு வசித்து வந்தார்கள்.
ஹிஜ்ரீ 4 ம் வருடம் பனுன்னுழைர் யூதர்களை நபி (ஸல்) அவர்கள் மதீனாவை விட்டு வெளியேற்றிய போது அன்சாரிகள் பெருமானாரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே எங்களது பிள்ளைகள் யூதர்களுடன் செல்கிறார்களே! நாங்கள் அவர்களை தடுக்கட்டுமா என்று கேட்டார்கள் . அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் . அப்போது இந்த வசனம் அருளப்பட்டது. அவரவர் விருப்பப் படி வாழும் உரிமம மக்களுக்கு உண்டு என்பது பறைசாற்றப் பற்றது.
இப்னு கஸீரில் இந்தச் செய்தி வருகிறது.

ن ابن عباس قال : كانت المرأة تكون مقلاتا فتجعل على نفسها إن عاش لها ولد أن تهوده ، فلما أجليت بنو النضير كان فيهم من أبناء الأنصار فقالوا : لا ندع أبناءنا فأنزل الله عز وجل( لا إكراه في الدين قد تبين الرشد من الغي )

ஹழரத் உமர் ரலி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் தெருவில் சென்று கொண்டிருந்த  ஒரு வயதான பெண்மணியிடம் இஸ்லாமை எடுத்துச் சொன்னார்கள். அப்பெண்மணி என்னை விட்டு விடுங்கள்!
أنا عجوز كبيرة والموت إلي قريب
என்று சொன்னார்.
உடனே உமர் ரலி அவர்கள் َا إِكْرَاهَ فِي الدِّينِ என்ற வசனத்தை ஒதிய படி அந்தப் பெண்மணியை விட்டு நகர்ந்த நகர்ந்தார்கள்.
இந்த மார்க்த்தை ஏற்குமாறு யாரையும் எந்த கணத்திலும் இஸ்லாம் நிர்பந்திக்க வில்லை.

மக்கா வெற்றியின் போது மக்காவின் காபிர்களாக இருந்தவர்களை முஸ்லிமாகுமாறு பெருமானார் நிர்பந்திக்க வில்லை.

இந்த சிறப்பு இஸ்லாமிற்கு மட்டுமே உறுதியாக இருக்கிறது. யாரையும் அது நிர்பந்திப்பது இல்லை. நிர்பந்திக்க வேண்டிய தேவையும் இல்லை.

காரணம்.  அது சத்தியமானது, தானே நிலை பெற்று நிற்கும் திறனும் தகுதியும் படைத்தது.

யாரிடத்தில் சத்தியம் இல்லையோ , யார் போலியானவர்களோ அவர்களே வரலாறு நெடுகிலும் தமது கருத்தை அடுத்தவர்கள் மீது திணிக்கவும் நிர்பந்திக்கவும் அதற்காக வன்முறையில் ஈடுபடவும் செய்கிறார்கள்.

அந்த வகையில் தான்.

ஜார்கண்ட் மாநிலத்தின் சராய்கேலா மாவட்டத்தில் உள்ள கதம்டீஹா கிராமத்தை சேர்ந்தவர் தப்ரேஜ் அன்ஸாரி. வயது 24. அவருக்கு திருமணமாகி சில மாதங்கள் தான் ஆகின்றன.
தப்ரேஸ், ஜூன் 17 ம் தேதி இரவு வேலையை முடித்துக்கொண்டு ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது கத்கி டீஹ் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்து, அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். திருட்டுப் பழியை சுமத்தி இரவு முழுவதும் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்திருக்கிறார்கள். ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர் அப்படி சொல்ல மறுத்ததற்கு மோசமாக அடித்தார்கள். காலையானதும் அவரை சராய்கேலா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எதையுமே எடுக்காத போலீசார் அவரை  திருடன் என்று முத்திரைக் குத்தி சிறைக்கு அனுப்பி விட்டார்கள். அவருக்கு உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதை அவர்கள் கண்டு கொள்ள வே இல்லை. கடும் காயங்களுடன் அவர் 7 நாள் சிறைக்கூடத்தில் வைக்கப் பட்டிருக்கிறார். பிறகு அவரை ஜம்ஷேபூரில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படி கொண்டு வருகிற போது மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டிருந்த அவரை வீல் சேரிலோ அல்லது ஸ்டெச்சரிலோ எடுத்துக் கொண்டு வராமல் தப்ரேஜுடைய காலரைப் பிடித்து காவலர்கள் தள்ளிக் கொண்டு வருவதை மருத்துவமனையில் உள்ள சிச்டி வி காட்சிகள் காட்டுகின்றன. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சானல் அந்த சந்தர்ப்பத்தில் அருகில் ஒரு ஸ்டெரெச்சர் காலியாக கிடப்பதை காட்டியது,
சிகிட்சை பலனின்றி தப்ரேஸ் அன்சாரி உயிரிழந்தார். அவரை கிராமத்தில் மின் கம்பத்தில் கட்டி அடித்த இந்துத்துவாவினர் அவரிடம் ஜெய்ஸ்ரீராம் என்று ஜெய் ஹனுமான் என்றும் கோஷமிடுமிடுமாறு கட்டாயப்படுத்துகிற வீடியோ சமூக வளைத்தளங்களில் பிரபல மடைந்ததால் வேறு வழியின்றி ஜார்கண்ட் அரசு இது விசயத்தில் சிலரை கைது செய்துள்ளது. கைது செய்யப் பட்டுள்ளவர்களில் இரண்டு போலீஸ்கார்களும் அடக்கம்.                                                                
மத்தியில் இரண்டாம் முறையாக பாஜக அரசு அருதிப்பெரும்பான்மையுடன் பொறுப்பேற்றவுடன் நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மற்றும் தாழ்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்துத்துவ தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன,                                   
ஒவ்வொரு முறையும் அத்தகைய தாக்குதல்களுக்கு பசுப்பாதுகாப்பு என்பது போல ஏதேவாது ஒரு முழக்கம் பின்னணியாக இருக்கும். இந்த முறை இந்துத்துவா கோஷம் போட வைப்பதை தாக்குதலுக்கு காரணமாக வைத்திருக்கிறார்கள்.                                                           
இந்துத்துவ கோசஷமிடுமாறு நிர்பந்திக்கப் பட்டு ஒரு முஸ்லிம் இளைஞன் கடுமையாக தாக்கப்படும் வீடியோ நாட்டிலுள்ள அனைவரையும் உலுக்கி எடுத்திருக்கிற நிலையில் மத்திய அரசு நீண்ட மொளனம் சாதித்தது.                                                             
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கொதித்தெழுந்த பிறகுதான் பிரதமர் இது விசயத்தில் வாய் திறந்தார்.                                                 
குறிப்பாக ,மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான குலாம்நபி ஆஸாத் இது போன்ற புதிய இந்தியாவை நீங்கள் வைத்துக் கொண்டு அன்பும் சமூக நல்லிணக்கமும் நிறைந்திருந்த பழைய இந்தியாவை எங்களுக்கு திருப்பி தந்துவிடுங்கள் என்றார். அத்தோடு ஜார்கண்ட மாநிலத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து கும்பல் தாக்குதல்களின் ஆலையாக மாறிய்ள்ளது என்று குற்றம் சாட்டினார்.                                           
மஜ்லிஸ் கட்சியின் அஸதுத்தீன் உவைஸி , இது போன்ற தாக்குதல்தல் இப்போதும் இந்துத்துவா கையாளும் ஒரு உத்தி. நாட்டின் எங்காவது ஒரு இடத்தில் ஒரு கோஷத்தை சொல்லி ஒரு முஸ்லிமை கொலை செய்து விடுவது. பிறகு நாடு முழுவதும் அதை எதிரொலிக்கச் செய்வது. பசு இறைச்சி என்ற பெயரில் முதலில் முஹம்மது அக்லாக்கை கொலை செய்தார்கள். பிறகு நாடுமுழுவதிலும் பாசுப்பாதுகாப்பு என்ற பெயரில் குண்டாயிசம் செய்தார்கள். அதே போல இப்போது இந்துத்துவ கோசத்தின் பெயரைச் சொல்லி ஒருவரை கொலை செய்திருக்கிறார்கள். இனி நாடு முழுவதிலும் இந்த செயல் தொடரும் என்று பேசினார்.                              
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் பட்ட இந்த வாதங்களால் மத்திய அரசு தலை குனிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்ற போதும் மத்திய அரசு இத்தகைய தாக்குதல்களுக்கு மொளன சாட்சியாக வே இருக்கிறது.           
ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் கும்பலால் அடித்து கொலைச் செய்யப்படும் இது போன்ற  சம்பவங்கள் ஏராளமாக நடந்து வருகின்றன. . ஜார்கண்ட் பொதுமக்கள் உரிமை இயக்கத்தின் அறிக்கையின்படி, தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் குறைந்தது 12 பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.அதில் இரண்டு பேர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், எஞ்சிய பத்து பேரும் முஸ்லிம்கள்.
குலாம் நபி ஆசாத்தின் நியாயமான கவலையை ஏற்றுக்கொள்ள வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் ஜார்கண்ட மாநிலத்திற்கு ஆதரவாக பேசினார்.
ஏன் ஒரு மாநிலத்தை இழிவு படுத்துகிறீர்கள் ? ஒரு மாநிலத்தை இழிவு படுத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது என்கிறார்.
பிரதமரின் இந்தப் பேச்சுக்கு உண்மையில் குற்றவாளிகளுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
பிரதமரும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் இது போன்ற நாடக வேளைகளை செய்வதன் மூலம் நாட்டில் தொடர்ந்து முஸ்லிம்கள் மற்றுமுள்ள சிறுபான்மையினர்கள் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களை ஒருவகையில் நியாயப்படுத்தியே வருகின்றனர்.
ஜார்கண்டில் ராம்கட்டில் அலீமுதீன் அன்ஸாரி  என்ற 48 வயதுக்காரர் கும்பலால் அடித்து கொல்லப்பட்ட பிறகு, குற்றவாளிகள் என கூறப்பட்டவர்களுக்கு, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தபோது நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களில் ஒருவரான ஜெயந்த் சின்ஹா அவர்களுக்கு மலர்மாலை போட்டு வரவேற்ற்றார்.
இதன் பிறகும், பிபிசியிடம் பேசியபோது அவர் சொன்ன மற்றொரு விஷயம் தான் இன்னும் அதிர்ச்சியளிக்க கூடியது.  அது என்ன தெரியுமா? கும்பல் படுகொலை செய்த குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு நடத்துவதற்காக அவர் நிதியுதவியும் செய்திருக்கிறார் என்பது.

தற்போதைய ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது இந்துதுதுவ சித்தாந்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக இத்தகைய படுகொலைகளை ஒரு அஜண்டாவாகவே வைத்திருக்கிறார்கள் என்பதை தான் நடப்புக்கள் காட்டுகின்றன.
அஸதுத்த்தீன் உவை ஸீ சொன்னது நிஜம் என்பதை நிரூபிப்பது போல ஜார்கண்ட மாநிலத்த்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் ஒரு மதரஸா உஸ்தாத் ஜெய்ஸ்ரீராம் கோஷமிடுமாறு நிர்பந்திக்கப் பட்டு தாக்கப் பட்டிருக்கிறார். ஓடும் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டிருக்கிறார்.                                                                                                                                   ஜூன் 20-ம் தேதி கொல்கத்தாவின் ஹூக்ளியில் உள்ள மதராசாவில் அரபி ஆசிரியராக உள்ள 23 வயதான ஹபீஸ் முகமது ஷாருக் ஹால்தர். கானிங்-ல் உள்ள தனது வீட்டிலிருந்து ஹுக்ளிக்கு வழக்கமாக ரயிலில் சென்றுவந்து கொண்டிருக்கிறார்., வரை  இந்து சம்ஹாதி என்ற அமைப்பைச் சேர்ந்த கும்பல் ஒன்று குறி வைத்திருக்கிறது.
தலையில் தொப்பியும் குர்தாவும் அணிந்திருந்த காரணத்துக்காக ஹபீஸை துன்புறுத்திய அந்தக் கும்பல், வலது கண்ணில் பலமாகத் தாக்கியுள்ளது. மட்டுமல்லாமல், ‘ஜெய் ஸ்ரீ ராம்என முழக்கமிடவும் வற்புறுத்தியிருக்கிறது.
ரயில் பார்க் சர்க்கஸ் நிலையத்தை அடையும்போது, வர்கள் திடீரென அவரை ரயிலிலிருந்து தள்ளி விட்டனர். அப்போது அங்கிருந்த   எவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 
இந்த படுகொலைகள் மற்றும் தாக்க்தல் குறித்து ஆய்வு செய்த பிபிசி தொலைக்காட்சி ஒரு கருத்தை கூறுகிறது.
முஸ்லிம்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது (பாஜக) அரசியலின் அத்தியவசியமான தேவை போலும். இந்துக்களை ஒன்றிணைத்து அரசியல் சக்தியாக மாற்றுவதற்கு அவர்களிடம் வேறு எந்த தந்திரமும் இல்லை. இந்துக்கள் மற்றும் இந்தியாவின் எதிரிகள் என முஸ்லிம்களின் பெரும் பகுதியினரை அடையாளம் காட்டுதில் அவர்கள் வெற்றியடையாவிட்டால், சாதி சண்டைகளால் தங்களுக்குள்ளே பிரிந்து கிடக்கும் இந்து சமுதாயத்தை எப்படி விரைவாக இணைக்கமுடியும்?
இந்த சூழலில் 2019-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரத்துக்கான அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை (21-06-2019) அன்று அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதில் ஆளும் பாஜக-வைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை பேசியதாக அந்த அறிக்கை வெளிப்படையா குற்றம் சாட்டியுள்ளாது.
மத சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் வன்முறையைத் தூண்டிவிடும் தீவரவாத சக்திகளுக்கு, ஆளும் அரசு சலுகைகளும் ஊக்கமும் அளிப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறது அமெரிக்காவின் அறிக்கை..கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்களை தண்டனையிலிருந்து அதிகாரிகள் தப்பவிடுகின்றனர். வன்முறை பிரச்சாரத்தின் பகுதியாக துன்புறுத்தல், மிரட்டல் போன்றவை இந்து அல்லாதவர்கள் மீதும் கீழ்சாதி இந்து சிறுபான்மையினர் மீதும் நிகழ்த்தப்படுவதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவின் அரசியலமைப்பு மத சுதந்திரத்துக்கான உரிமையை வழங்கியுள்ள நிலையில், மத சுதந்திரத்துக்கான வரலாற்றில் கரும்புள்ளியாக தீவிரவாதத் தன்மையுடைய சக்திகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை சொல்கிறது.
 “இந்திய நகரங்களில் உள்ள முசுலீம் பெயர்களுக்கு மறுபெயர் வைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. அலகாபாத்துக்கு பிரயாக்ராஜ் என பெயர் சூட்டியதைச் சொல்லலாம். இந்திய வரலாற்றில் முசுலீம்களின் பங்களிப்புகளை அழிக்கும் வகையில் இத்தகைய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இது வகுப்புவாத பதட்டத்தை உருவாக்குவதாகவும் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கவின் அறிக்கை இனி வரும் காலங்களில் நமது நாட்டில்  முஸ்லிம்களுக்கு எதிரான பல முனைத்தாக்குதல்கள் நடை பெற வாய்ப்புள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இந்தச் சூழலில் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டிய இரு முக்கிய செய்தி என்ன வெனில் ? .
தமிழ் நாடு, கேரளா ஆந்திராவை தவிர இந்தியாவின் பிற பிரதேசங்கள் அனைத்திலும் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றது அது உருவாக்கி வைத்திருக்கீற இந்துத்துவ உணர்வினால் தான்.
நாட்டில் இந்துத்துவ உணர்வுக்கு தீணி போடக் கூடியவை.இத்தகைய தாக்குதல்கள் தான்.
ஒரு காலத்த்தில் பெரும் கலவரங்களை ஏற்படுத்தி இந்துத்துவா வை வளர்த்தார்கள். தற்போது அவர்களே ஆட்சியில் இருக்கிற நிலையில் கலவரங்கள் வெடித்தால் பெயர் கெட்டுப் போய்விடும் என்பதால் இத்தகைய கும்பல் தாக்குதல்கள் மற்றும்
Ø  முத்தலாக தடை சட்டம்.
Ø  காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நீடிப்பு,
Ø  ஐஎன் அமைப்பு மூலம் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் கைது.
Ø  அசாம் மாநிலத்தில் அமுல் படுத்தப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவு.
Ø  பொது இடங்களில் இந்துத்துவாவின் கோஷங்களை முஸ்லிம்களிடம் திணிப்பது.
போன்றவை மூலம் இந்துத்துவாவை மலர்ச்சியாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். .
இது ஒரு சோதனைக்கால கட்டமே!  இந்திய சிறுபான்மையினரான நமக்கு மட்டுமல்ல. இந்திய மக்கள் அனைவருக்குமே இந்து ஒரு சோதனை தான். இதில் முதல் பலியாவது வேண்டுமானால் முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால் இந்துத்துவாவின் தீய அஜண்டால்விற்கு முழுப்பலியாக இருப்பது அமைதியான இந்தியச் சமூகமாகும்.
இத்தகைய சூழலில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்  என்பதை ஆய்வு செய்வது முஸ்லிம் உம்மத்தின் கடமையாகும்.
ஒவ்வொரு மஹல்லா அளவிலும் கூட நாம் ஒருங்கிணந்து சிந்தித்து செயலாற்ற கடமைப் பட்டிருக்கிறோம்.
ஒவ்வொறு மஹல்லாவிற்கும் வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படும். அதற்கேற்ப நமக்கான உத்திகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு அளவுகோல்கள் இப்போது நமக்கு அவசியம்.
1.       நமது உரிமைகளையும் கொள்கையை வழியையும் எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க கூடாது.
2.       அதே நேரத்தில் மிக எச்சரிக்கையாக இழப்புக்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது நடை முறைகளை கவனித்தால் இந்த இரண்டு அணுகுமுறைகளை நிறையப் பார்க்கலாம்.

தப்ரேஸ் நிர்பந்திக்கப் பட்டது போன்ற சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வது சஹாபாக்களில் அதற்கு முன்னுதாரனம் இருக்கிறது.

மரணம் எனினும் கொள்கை விட மாட்டேன் என்ற பிலால் ரலி

كما كان بلال رضي الله عنه يأبى عليهم ذلك ، وهم يفعلون به الأفاعيل ، حتى إنهم ليضعون الصخرة العظيمة على صدره في شدَّة الحر ، ويأمرونه أن يشرك بالله فيأبى عليهم وهو يقول : " أحَد ، أحَد " ، ويقول : والله لو أعلم كلمة هي أغيظ لكم منها لقلته ، رضي الله عنه وأرضاه ." تفسير ابن كثير " ( 4 / 606 ) .

உள்ளத்திற்கு தொடர்பில்லாத சொற்களால் ஈமானுக்கு இழப்பில்லை என்று நினைத்த அம்மார் ரலி

أَخَذَ الْمُشْرِكُونَ عَمَّارَ بْنَ يَاسِرٍ فَلَمْ يَتْرُكُوهُ حَتَّى سَبَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَذَكَرَ آلِهَتَهُمْ بِخَيْرٍ ، ثُمَّ تَرَكُوهُ . فَلَمَّا أَتَى رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَمَا وَرَاءَكَ؟ . قَالَ : شَرٌّ يَا رَسُولَ اللَّهِ ؛ مَا تُرِكْتُ حَتَّى نِلْتُ مِنْكَ ، وَذَكَرْتُ آلِهَتَهُمْ بِخَيْرٍ ؟! قَالَ كَيْفَ تَجِدُ قَلْبَكَ ؟  . قَالَ : مُطْمَئِنًا بِالإِيمَانِ . قَالَ إِنْ عَادُوا فَعُدْ . ٍرواه الحاكم في " المستدرك 

இந்த இரண்டு வழிமுறைகளில் எது சிறப்பானது என்று கூறுகிற போது அறிஞர்கள் கூறுவார்கள்

கொள்கையை நிலை நாட்டும் ஒரு இடம் என்றால் அப்போது உயிரை விடத் தயாராவாது சிறப்பு. அதன் மூலம் கொள்கையை நிலை நாட்டுவது சிறப்பு.

அப்படியில்லாமல் உயிரைக்காப்பாற்றிக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் என்றால் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே நலம்.

عند الشافعية أوجه :
أحدها : الأفضل الإتيان بكلمة الكفر صيانة لنفسه .
والثاني : إن كان من العلماء المقتدى بهم : فالأفضل الثبوت .
والثالث : إن كان يتوقع منه الإنكاء – أي : في العدو - والقيام بأحكام الشرع : فالأفضل أن ينطق بها لمصلحة بقائه ، وإلا فالأفضل الثبوت .

தற்போதைய சூழலில் இந்துத்துவ சக்திகளிடம் தனியாக நிராதவராக சிக்கிக் கொள்வோர் – இத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் எனில் ஈமானை உறுதியாக மனதில் வைத்துக் கொண்டு – இத்தகைய வாசகங்களை கூறி தப்பித்துக்கொள்வதே உசிதமானது.

கவனிக்கவும். : உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் மட்டுமே இதற்கு அனுமதி உண்டு. 
தனிப்பட்ட ரீதியில் மார்க்கத்தின் இந்த வழிகாட்டுதல்களை பயன்படுத்திக் கொண்டாலும்

சமூக ரீதியில் இந்த குற்றச் செயலை ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது இதற்குரிய கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஜன நாயக ரீதியிலும் அறிவார்த்த ரீதியிலும் நாம் தெரிவித்தாக வேண்டும்.

தப்ரேஸ் என்ற ஒரு இளைஞனின் படுகொலையை நாட்டின் ஒரு முக்கிய துக்கமாக மாற்றுவதில் முஸ்லிம்கள் விரைந்து செயல்பட்டிருக்கிறார்கள்.
1.   நாட்டின் பல பகுதியிலும் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றிருக்கின்றன.
2.   நாடாளுமன்றத்தில் பேசப்பட்டிருக்கிறது. பிரதமர் பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
3.   தேவை எனில் நாடு முழுக்க அல்லாஹு அக்பர், ஜெய் ஹிந்த், எனும் ஒரு கோஷம் எழுப்பும் போராட்டத்தில் நாம் ஈடுபடலாம்.
4.   இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் அந்த போராட்டத்தில் சகோதர சமூகத்தவரையும் பங்கேற்க செய்யலாம். நியூஜிலாந்தில் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக தொழுகை ஜும்ஆ ஒளிபரப்பப் பட்டதும், நாடாளுமன்றத்தில் திருக்குர் ஆன் ஓதப்பட்டதும் நினைவிருக்கலாம். இது தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு பதிலடி நடவடிகை ஆகும்.
நம்முடைய தமிழ் நாட்டில் அல்லாஹ்வின் கிருபையால் மக்களிடையேயான நல்லுறவு நீடித்து வருகிறது.
அதைக் காப்பாற்றிக் கொள்ள தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும்.
குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களை சமுதாயத்தின் சார்பானவர்களாக நாம் கருதக் கூடாது.
மதம் மாறி திருமணம் செய்து கொள்கிறவர்களால் சமூகப் பிளவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தூய இஸ்லாம் என்ற பெயரில் – அல்லது தாவா என்ற பெயரில் பிற மதங்களைப் பற்றி தாழ்வாக பேசுவோரை – அல்லது பீற மதத்தவர்களைப் பற்றி தாழ்வாக பேசுவோரை நாம் அனுமதிக்க கூடாது,
இது போல இன்னும் பல சூழ்நிலைக்கு தேவையான திட்டங்களையும் நடை முறைகளையும் நாம் வகுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் நமது அத்தியவசிய தேவைகளில் இதுவும் ஒன்று.

அல்லாஹ் உலகெங்கிலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கண்ணியத்தை தந்தருள்வானாக!














No comments:

Post a Comment