வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 24, 2019

வரமாய் வரட்டும் ரபீஉல் அவ்வல் !


திருக்குர் ஆனின் கருத்துக்கள் முழுவதையும் உள்ளடக்கியது சூரத்துல் பாத்திஹா. அதனால் அதற்கு உம்முல் குர் ஆன் என்றொரு பெயருண்டு.
عن أبي هريرة عن النبي قال: «من صلى صلاةً لم يقرأ فيها بأم القرآن فهي خِدَاجَ - ثلاثاً- غير تمام
முழு குர் ஆனுக்கும் முன்னுரையாக உள்ள பாத்திஹா சூராவில் அல்லாஹ் சபிக்கப்பட்டவர்கள் என யூதர்களை குறிப்பிடுகிறான்.  

أما المغضوب عليهم فقد روى عدي بن حاتم عن الرسول أن المغضوب عليهم اليهود، وكذلك قال ابن عباس: «يعني اليهود الذين غضب الله عليهم»

யூதர்கள் அல்லாஹ்வின் பேரருளை பெற்றவர்களாகவே இருந்தார்கள். வெறெவருக்கும் செய்யாத அருட்கொடைகளை அல்லாஹ் அவர்களுக்கு செய்தான்.

يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ (47)

ஆனால் அந்த அருட்கொடைகளை புரிந்து கொண்டவர்களாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை. இது வெல்லாம் அல்லாஹ் தங்களுக்குச்செய்ய கடமைப்பட்டவன் என்பது போல நடந்து கொண்டார்கள்.

மேலும் மேலும் அருளை கேட்டார்கள் . மேலும் மேலும் அல்லாஹ்வுக்கு பகிரங்கமாக மாறுசெய்தார்கள்.

அவர்களது விசமத்தனங்கள் எல்லை மீறிய போது அல்லாஹ் அவர்களை சபித்தான்,

அவர்கள் ஏன் சாபப்த்திற்குரியவர்களானார்கள் என்பதை தான் அல்லாஹ் சூரத்துல் பகராவில் பல வசனங்களில் பேசுகிறான். . பகரா என்ற வார்த்தையே யூதர்களைத் தான் குறிக்கிறது.
எப்படி சபிக்கப்பட்டார்கள்

மிக ஆச்சரியகரமாக செங்கடலை பிளந்து  பிர் அவ்னிடமிருந்து காப்பாற்றிய  அந்த ஆறு இலட்சம் யூதர்களுக்கு அக்பா வளைகுடாவில் ஜெரீகோ நகரை தருவதாக அல்லாஹ் வாக்களித்து அந்த மக்களோடு சண்டையிடுங்கள் என்றான்,  அவர்களோ,,,
சபிக்கப்பட்டார்கள்
தீஹ மைத்தானத்தில் - இன்றைய ஜோர்டானுக்கும் சாக்கடலுக்கும் இடையே இருக்கிற இஸ்வேலர்களின் பாலை வனத்தில் தவிக்க விடப்பட்டார்கள்  நாற்பது ஆண்டுகள்.

قَالُوا يَا مُوسَىٰ إِنَّا لَن نَّدْخُلَهَا أَبَدًا مَّا دَامُوا فِيهَا ۖ فَاذْهَبْ أَنتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ (24قَالَ رَبِّ إِنِّي لَا أَمْلِكُ إِلَّا نَفْسِي وَأَخِي ۖ فَافْرُقْ بَيْنَنَا وَبَيْنَ الْقَوْمِ الْفَاسِقِينَ (25قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ ۛ أَرْبَعِينَ سَنَةً ۛ يَتِيهُونَ فِي الْأَرْضِ ۚ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفَاسِقِينَ (26)

ஜெரீகோ நகருக்குள் நுழைவதற்கான ஒரு சந்தர்ப்பம் வந்த போது தலை தாழ்த்தி பனிந்து மன்னிப்பு மன்னிப்பு என்ற அர்தத்தில் ஹித்துன் ஹித்ததுன் என்று சொல்லி நுழையுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப் பட்டது. அவர்களோ நெஞ்சை நிமித்தியவர்களாக ஹிந்ததுன் ஹிந்ததுன் என்று சொல்லிச் சென்றார்கள். அல்லாஹ் அவர்களை குரங்குளாக சபித்தான்.

إِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ ۚ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ (58فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ

சனிக்கிழமைகளில் மீண் பிடிக்க கூடாது என்ற கட்டளை இருக்க அதை தந்திரமாக மீறுவதாக நினைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை வலை விரித்து வைத்தார்கள். அல்லாஹ் அவர்களை குரங்குகளாவீர் என்று சபித்தான,

وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ (65

                                                                                        தனித்தனியாக சில் சாபங்களைச் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள் தங்களுடைய தகுதிக்கு மீறியும் நன்மை தீமை எது என்பதையும் அல்லஹ்வின் அருள் எது என்பதையும் புரிந்து கொள்ளாத ஒரு சூழ்நிலைக்கு ஆட்பட்ட போது பொத்தம் பொதுவாக் சபிக்கப் பட்டார்கள்.
ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوا إِلَّا بِحَبْلٍ مِّنَ اللَّهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ۚ

இந்த வசனத்தில் அல்லாஹ் அவர்கள் ஏன் சபிக்கப் பட்டார்கள் என்பதற்கான காரண்ங்களை கூறுகிறான்,

ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ۚ ذَٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا يَعْتَدُونَ
அல்லாஹ்வின் உத்தரவுகளை கேலி செய்தார்கள் . அதற்கு மாறு செய்தார்கள்.
ஒரு கால கட்டத்தில் தங்களது விருப்பத்திற்கு எதிராக நபி இருந்தால் அவரை கொலை செய்தார்க:. தங்களுக்கு இனி நபி தேவையில்லை மூஸாவே போதும் என்று பேசினர்.
நபிமார்களை ஏற்க மறுத்த சூழலில் தவ்ராத்தை மனனம் செய்தார் என்பதற்காக  நபி உஸைர் அலை அல்லாஹ்வின் மகன் என்று சொல்லி ஷிர்க்கும் செய்தார்கள்.
இது போன்ற இன்னும் பல காரணங்கள் அவர்கள் சபிக்கப் பட்டதற்கு சொல்லப் படுவதுண்டு,
எனினும் இவற்றில் மிகப் பிரதானமான ஒரு காரணத்தை அறிஞர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
“யூதர்கள் அவர்களுக்கு அல்லாஹ் செய்த நிஃமத்துக்களை நினைவு கூரவில்லை”
அல்பகரா அத்தியாயத்தில் 22 வது வசனத்தில் 40 தில் 47 ல் 122ல் என பல இடங்களிலும் அல்லாஹ் இதை சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருள் என்று சொல்வது அவர்களுக்கு ஏராளமான நபிமார்களை அனுப்பியதாகும் . வெற்ந்த சமூகத்திற்கும் விட அதிகமான நபிமார்கள் யூத சமூகத்துக்கு அனுப்பப் பட்டார்கள்,

அந்த நபிமார்கள் தங்களுக்கு கிபடைத்த பேரருள் என்று அவர்கள் உணரவில்லை. அல்லாஹ் எனது நிக்ஃமத்தை பேசுங்கள் என்று சொன்னான். அந்த நிஃமத் என்பது நபிமார்கள் ஆவார்கள், அந்த நிஃமத்தை  பெருமைப் படுத்தி யூதர்கள் பேசவே இல்லை.

யூதர்கள் நபிமார்கள் விசயத்தில் இரண்டு தவறுகளை செய்தனர், ஒன்று அவர்களை மறுத்தனர், அல்லது தூற்றினர்,

யூதர்களின் வரலாற்றிலேயே பொற்கால வரலாறு நபி தாவூத் அலை நபி சுலைமான அலை ஆகியோரின் காலம். கீமு. 998 லிருந்து 958 வரை தாவூத் அலை அவர்களும் 958 லிருந்து 923 வரை சுலைமான் அலை அவர்களும் பேரரசு புரிந்தனர், அவர்கள் நபியாகவும் இருந்தனர்.

யூதர்கள் இவ்விருவரை நபிமார்களாகவே ஏற்றுக் கொள்ள வில்லை, கிங் டேவிட் என்றும் கிங் சாலமன் என்றும் தரம் குறைத்தனர். அது மட்டுமல்ல சுலைமான அலை அவர்களை மந்திரவாதி என்றனர், மார்க்கத்தை விட்டு விட்டவர் என்றனர்.

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ
யூதர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்

ۖ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ ۚ

ஓரிறுவரிடம் மட்டுமல்ல பல நபிமார்களிடமும் இப்படித்தான் நடந்து கொண்டனர். நபியை புகழ்வதற்கு பதில் இகழ்ந்தனர்.

யூதர்களின் வரலாற்றிலேயே அவர்களுக்கு பெரும் விமோசனம் கொடுத்த நபி – மூஸா அலை அவர்கள்.

அவரை தவ்ராத்த்தில் தவறாக எழுதிவைத்திருக்கிறார்கள்.  

கி,மு இரண்டாம் நூற்றாண்டில் கார்டிபல் என்பரின் கடும் தாக்குதளுக்கு யூதர்கள் ஆளானார்கள். அப்போது அவர்களது கைவசத்தில் இருந்த தவ்ராத் திருடப்பட்டது. எனவே அதற்கு பிறகு யூதர்கள் தங்களுக்கு தாங்களே ஒரு வேத      நூலை எழுதிக் கொண்டார்கள். அதன் பெயர் தல்மூத்.

இந்த் தல்மூதில் மூஸா அலை அவர்களையே ஒழுக்கம் கெட்டவராக சித்தரிக்க பட்டுள்ளது.. எகிப்திலிருந்து  தப்பி வந்த மூஸா மதாயினில் எரிவேல் என்பவரின் மூத்த மகளுடன் தப்பான உறவு கொண்டதாக தல்மூத் கூறுகிறது.

பாரட்டப் பட வேண்டிய நபிமார்களை பாராட்டாமல் விட்டதே யூதர்களின் பெரும் சாபத்திற்கு காரணம் என்று அறிஞர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்.

இந்த பாத்திஹா அத்தியாத்தில் முஸ்லிம்களை அல்லாஹ்வின் அருள் பெற்றவர்க என அல்லாஹ் குறிப்பிடுகிறான். \

அந்த அருள் என்பது திகுரு முஹம்மது பெருமானாரை  பேசிக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருப்பதாகும்  என விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

நபியை பற்றி பேசப்பேசத்தான் நபியின் அந்தஸ்து இதயத்தில் இறங்கும். நபியை புகழப் புகழத்தான் நபியின் நேசம் இதயத்தில் இறங்கும்,

முஹ்ம்மது நபியின் அருளை நினைவு கூருங்கள் என்ற் நம்மை பார்த்து அல்லாஹ் சொல்ல வில்லை. அப்படி சொன்னால் – அது செயல்படாத சமூகத்தை சுட்டிக் காட்டுவதாக அமைந்து விடும் , யூதர்களிடம் கூறியது போது,
அதற்கு மாற்றாக நபியை நினைவு கூற அல்லாஹ் அற்புதமாக தன்னையும் இணைத்து பெருமானாரை நினைவு கூற நம்மை தூண்டுகிறான்.

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا (56

அல்லாஹ்வின் சலவாத்துசனா புகழ்வது
மலக்குகளின் சலவாத்து துஆ

மூன்றாவதாக சொல்லப் பட்ட நாம் இந்த இரண்டையும் சேர்த்து செய்ய வேண்டும்,

சலவாத்து துஆ வும் செய்ய வேண்டும்.

சலவாத்து புகழ் மாலையும் பாட வேண்டும்,

اللهم رب هذه الدعوة التامة، والصلاة القائمة، آت محمدًا الوسيلة والفضيلة، وابعثه مقامًا محمودًا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة رواه البخاري في صحيحه، زاد البيهقي في آخرهإنك لا تخلف الميعاد بإسناد حسن.

துஆ வாக இதையும் ஓதவேண்டும்,

ஹஸ்ஸான் பின் சாபித் ரலி அவர்கள் பாடியது போல

وَأَحسَنُ مِنكَ لَم تَرَ قَطُّ عَيني

وَأَجمَلُ مِنكَ لَم تَلِدِ النِساءُ

خُلِقتَ مُبَرَّءً مِن كُلِّ عَيبٍ

كَأَنَّكَ قَد خُلِقتَ كَما تَشاءُ

இந்த துஆ வும் இந்த புகழ்ச்சியும் அல்லாஹ்வின் சாபத்திலிருந்து தப்பித்து முஹம்மது (ஸல்) அவர்களை நமது நிஃமத் வரமாக்கிக் கொள்ளும் வழி என்பதை புரிந்து கொள்வோம்.
இதோ ரபீஉல் அவ்வல் வரப்போகிறது,
அது முஸ்லிம்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வரமாக வரட்டும்,

4 comments: