வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 31, 2019

குழந்தைகளும் பெருமானார் (ஸல்) அவர்களும்


திருச்சி மணப்பாறைக்கு அருகே ஒரு கிராமத்தில் சுர்ஜித் என்ற  சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி மீட்க முடியாமல் இறந்து போனதில் கடந்த வாரம் முழுவதும் மக்கள் பெரிதும் கவலைக்குள்ளானார்கள். இதில் யார் பக்கம் தவறு என்ற விவாதங்களை தாண்டி, குழந்தைகளைப் பற்றிய அக்கறை குறித்து கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது,
புனித ரபீஉல் அவ்வல் மாதம் தொடங்கியிருக்கிற இந்த வாரத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குழந்தைகள் சிறுவர்கள் –சிறுமிகள் விசயத்தில் மனித சமுதாயத்திற்கு காட்டிச் சென்ற அற்புதமான வழிமுறைகளை நாம் எண்ணிப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும்,.
ஏனெனில் வாழ்வில் எல்லா விவகாரங்களுக்கும் முன்னோடியான பெருமானார் (ஸல்) குழந்தைகள் சிறுவர்களுடனான பரிமாற்றத்திற்கும் அற்புதமான முன்னோடியாக திகழ்கிறார்கள்.
لقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا}[الأحزاب:21

பொதுவாக பெரிய மனிதர்கள் சிறுவர்களை பொருட்படுத்த மாட்டார்கள்.  நாமே கூட அப்படித்தான். சிறுவர்கள் விசயத்தி ஒரு அலட்சியமும் கடுகடுப்பும் இல்லாதவர் நம்மில் யாரும் இல்லை.

சிறுவர்களை கண்டாலே சிலருக்கு பிடிக்காது, கோப்ப்டுவர். அதட்டுவர். விரட்டுவர். நாம் ஒரு பெரிய மனிதராக இருந்து ஒரு விருந்து வீட்டுக்கு சென்றால் அங்கிருக்கிற சிறுவர்களை பொருட்படுத்த மாட்டோம். ஒரு வேளை பொருட்படுத்தினால் கூட அவர்களைப் பார்த்து விசாரிக்கிற போது என்ன நல்லா படிக்கிறயா ? என கர்ஜித்த படியே கேட்போம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குழந்தைகள் விசயத்தில் நமது முதல் பார்வையையே மாற்றுகிறார்கள்.

مرو بن شعيب عن أبيه عن جده t قال: قال رسول الله ﷺليس منا من لم يرحم صغيرنا، ويعرف شرف كبيرنا[1]. حديث صحيح رواه أبو داود والترمذي، وقال الترمذي: حديث حسن صحيح.


பெரியவர்களை கண்ணியப்படுத்துவது என்பது எல்லா சமூகத்திலும் சந்தர்ப்பத்திலும் உபதேசிக்கப் படுவதுண்டு. அதிகம் வலியுறுத்தப் படுவதுண்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதற்கு நிகராக சிறுவர்களிடம் அன்புகாட்டுவதை வலியுறுத்துகிறார்கள்

எந்தச் சிறுவரைப் பார்க்கிற போது முதலில் நம்மிடம் வெளிப்பட வேண்டியது கருணைப் பார்வை.

சிறுவர்கள் எப்படி இருந்தாலும் சரி.

பல சந்தர்ப்பத்திலும் சிறுவர்களின் குறும்புத்தனம் அல்லது அவர்களது இருப்பே பெரியவர்களுக்கு கோபத்தை தூண்டும். அது தகாது.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தெருவில் நடந்து சென்றார்கள், அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பெருமானாரைக் கண்டதும் விலகி நின்றார்கள், அபூ மஹ்தூரா என்ற சிறுவர் விலக வில்லை, அப்படியே நின்று கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் கோபப்படவில்லை. சில சிறுவர்கள் இப்படியும் இருப்பார்கள் என்று நினைத்தபடி அபூமஹ்தூராவிற்கு அருகே சென்று அவருடைய தலையை தடவி விட்டுச் சென்றார்கள்.
அவ்வளவு தான் அபூமஹ்தூரா நெகிழ்ந்து போனார். அதன் பிறகு பெருமானார் தடவிய தன் தலைமுடியை அவர் மழிக்கவே இல்லை. அவர் மரணித்த போது பெரிய ஜடை முடியுடன் அவர் அடக்கம் செய்யப் பட்டார்.

பெருமானார் காட்டிய ஒரு சிறு கருணை ஒரு சிறுவரின் இதயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

இது எல்லா இட்த்திலும் ஏற்படக் கூடியதே!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குழந்தைகள் சிறுவர்களை நோக்கிய தனது கருணைப் பார்வையால் குழந்தைகளையும் கூட தன் பால் ஈர்த்திருந்தார்கள்.

அல்லாஹ் திருக்குர் ஆனில் பெருமானாரை

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ)

என்று பாராட்டுகிறான், இதற்கு பல பொருட்கள் உண்டு, அவற்றில் ஒன்று பெருமானார் (ஸ்ல) அவர்கள் பெரியவர்களை மட்டுமல்ல சிறியவர்களையு தனது குணத்தால் வசீகரித்திருந்தார்கள் என்பதும் ஒன்றாகும்

முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் வாழ்ந்த சமூகம் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் மதிப்பளிக்கும் சமூகமாக இருக்க வில்லை . குழந்தைகள் மீது அன்பு காட்ட வேண்டும் என்பதை கூட அந்தச் சமூகம் அறிந்திருக்க வில்லை.

பெருமானாரின் மகன் இபுறாகீம் ரலி அவர்கள் இறந்த போது அழுத பெருமானாரை பார்த்து என்ன  நீங்கள் அழுகிறீர்களே என்று கேட்டார்கள்

ن أنس بن مالك رضي الله عنه قال: دخلنا مع رسول الله صلى الله عليه وسلم، على أبي سيف القَيْن، وكان ظِئْرًا لإبراهيم عليه السلام، فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم، فقَبَّله وشمه، ثم دخلنا عليه بعد ذلك وإبراهيم يجود بنفسه، فجعلت عينا رسول الله صلى الله عليه وسلم تذرفان، فقال له عبد الرحمن بن عوف رضي الله عنه: وأنت يا رسول الله ؟! فقال: «يا ابن عوف إنها رحمة ثم أتبعها بأخرى، فقال ـ صلى الله عليه وسلم ـ : «إن العين تدمع، والقلب يحزن، ولا نقول إلا ما يرضى ربنا، وإنا بفراقك يا إبراهيم لمحزونون» (رواه البخاري [1303]، ومسلم [2315])

குழந்தைகளை முத்தமிடத் தெரியாத சமூகம்

وعن أبى هريرة رضي الله عنه، أن الأقرع بن حابس أبصر النبي صلى الله عليه وسلم يُقَبِّل الحسن، فقال: إن لي عشرة من الولد ما قبَّلت واحدًا منهم، فقال رسول الله صلى الله عليه وسلم: «إنه من لا يَرحم لا يُرْحم» (رواه البخاري [5997]).

பெருமானார் (ஸல்) அந்த சமூகத்திற்கு தனது ஒவ்வொரு அசைவிலும் குழந்தைகளின் முக்கியத்தை வாழ்வியல் பாடமாக போதித்தார்கள். பெருமானாரைப் இப்படிப் பார்த்த சமூகம் குழந்தைகளைப் பற்றிய தனது பார்வையை மாற்றிக் கொண்ட்து.

தனது பேத்தியை தொழுகையில் கூட தூக்கி வைத்துக் கொண்டார்கள்

عن أبي قتادة الأنصاري رضي الله عنه: "أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهو حاملٌ أُمَامَة بنت زينب بنت رسول الله صلى الله عليه وسلم، ولأبي العاص ابن الربيع بن عبد شمس، فإذا سجد وضعها، وإذا قام حملها" (رواه البخاري [516]، ومسلم [542]).


ஸ்ஜ்தாவை தாமதப்படுத்தினார்கள்

عن عبد الله بن شداد، عن أبيه قال: خرج علينا رسول الله صلى الله عليه وسلم في إحدى صلاتي العشي، الظهر أو العصر، وهو حامل الحسن أوالحسين، فتقدم النبي صلى الله عليه وسلم فوضعه، ثم كبَّر للصلاة، فصلى فسجد بين ظهري صلاته سجدة أطالها، قال: إني رفعت رأسي، فإذا الصبي على ظهر رسول الله صلى الله عليه وسلم وهو ساجد، فرجعت في سجودي، فلما قضى رسول الله صلى الله عليه وسلم الصلاة، قال الناس: يا رسول الله، إنك سجدت بين ظهري الصلاة سجدة أطلتها، حتى ظننا أنه قد حدث أمرٌ، أو أنه يُوحى إليك، قال: «كل ذلك لم يكن، ولكن ابني ارتحلني -ركب على ظهري-، فكرهت أن أعجله حتى يقضي حاجته» ( رواه النسائي [1140]).

வெளியே சென்று வந்தவுடன் குழந்தையை தேடினார்கள். அன்பை பொழிந்தார்கள். நேசத்தை வெளிப்படுத்தினார்கள்.

وعن أبي هريرة رضي الله عنه قال: خرج النبي صلى الله عليه وسلم في طائفة النهار لا يكلمني ولا أكلمه، حتى أتى سوق بني قينقاع، فجلس بفناء بيت فاطمة، فقال: «أثَمَّ لُكَع، أَثَمَّ لُكَع -أين الحسن-؟!»، فحبسته شيئًا -أخَّرته-، فظننتُ أنها تلبسه سخابًا -قلادة- أو تُغسِّله، فجاء يشتد حتى عانقه وقَبَّله، وقال: «اللهم أحبه وأحب من يحبه» (رواه البخاري [2122]، ومسلم [2421]).

குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்

عن سهل بن سعد رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم أُتِيَ بشراب، فشرب منه، وعن يمينه غلام، وعن يساره أشياخ، فقال للغلام:«أتأذن لي أن أعطي هؤلاء؟»، فقال الغلام: لا، والله لا أوثر بنصيبي منك أحدًا، قال: فتلَّه -وضعه في يده- رسولُ الله صلى الله عليه وسلم».(رواه البخاري [2605]، ومسلم [2030]).

குழந்தைகளுக்கு பிடித்த விசயங்களை அவர்களது பாசையில் பேசினார்கள்.

عن أنس رضي الله عنه قال: كان لي أخ يقال له أبو عمير، كان إذا جاءنا رسول الله صلى الله عليه وسلم قال: «يا أبا عمير، ما فعل النُغير-طائر صغير» (رواه البخاري [6203]، ومسلم [2150]).


 ஒரு அன்பளிப்பு வந்த போது அது தோழர்களில் யாருடைய மகளுக்கு அழகாக இருக்கும் என்று தெரிந்து அதை அக்குழந்தை அணிவித்து அழகு பார்த்தார்கள்

عن أم خالد بنت خالد رضي الله عنها قالت: أُتِيَ النبي صلى الله عليه وسلم بثيابٍ فيها خميصة سوداء صغيرة، فقال: «من ترون أن نكسو هذه؟»، فسكت القوم، فقال: «ائتوني بأم خالد»، فأُتي بها تُحْمل، فأخذ الخميصة بيده فألبسها، وقال: «أَبْلِي وأَخْلِقِي»، وكان فيها عَلَمٌ أخضر أو أصفر، فقال:«يا أم خالد هذا سناه -حسن-» (رواه البخاري [5845]).

பெருமானார் (ஸல்) சிறுவர்களிடம் சிடுசிடுப்பவராக அவர்களை குற்றம் சாட்டுகிறவராக இருக்கவில்லை.
عن أنس بن مالك رضي الله عنه قال خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ، فَمَا قَالَ لِي: أُفٍّ! وَلاَ: لِمَ صَنَعْتَ؟ وَلاَ: أَلاَ صَنَعْتَ؟ وَلاَ عَابَ عَلَيَّ شَيْئاً قَطُّ، وَأَنَا غُلاَمٌ، وَلَيْسَ أَمْرِي كَمَا يَشْتَهِي صَاحِبِي أَنْ أَكُونَ عَلَيْهِ)[2].

وقال أيضاً(كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهِ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقاً، فَأَرْسَلَنِي يَوْماً لِحَاجَةٍ، فَقُلْتُ: وَاللهِ لاَ أَذْهَبُ! وَفِي نَفْسِي أَنْ أَذْهَبَ لِمَا أَمَرَنِي بِهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجْتُ حَتَّى أَمُرَّ عَلَى صِبْيَانٍ وَهُمْ يَلْعَبُونَ فِي السُّوقِ، فَإِذَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَبَضَ بِقَفَايَ مِنْ وَرَائِي، قَالَ: فَنَظَرْتُ إِلَيْهِ وَهُوَ يَضْحَكُ، فَقَالَ: (يَا أُنَيْسُ! أَذَهَبْتَ حَيْثُ أَمَرْتُكَ؟)؛ قُلْتُ: نَعَمْ! أَنَا أَذْهَبُ يَا رَسُولَ اللَّهِِ  - முஸ்லிம்

 சிறுவர்களுக்கு அன்பொழுக கற்றுக் கொடுத்தார்கள்
قال عمرُ بن أبي سلمة]، ربيبُ النبي صلى الله عليه وسلم: (كُنْتُ غُلاماً فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَا غُلامُ! سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ). قَالَ: فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ).

சிறுவர்கள் என்பதாக் அலட்சியப் படுத்தாமல் மிக அடிப்படையான பெரும் செய்தியை கூட பக்குவமாக கற்றுக் கொடுத்தார்கள்.

قد أردفَ النبيُّ صلى الله عليه وسلم عبدَ الله ابن عباس رضي الله عنهما يوماً خلفَه، وقال له: (يَا غُلاَمُ! إِنِّي مُعَلِّمُكُ كَلِمَاتٍ، فَاحْفَظْهُنَّ: احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، وَإِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ، وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَنْفَعُوكَ لِمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ، وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ لَمْ يَضُرُّوكَ إلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللهُ عَلَيْكَ، رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ)

அப்படி சொல்லிக் கொடுத்த்து வீண் போக வில்லை, இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் பெருமானாரின் இரவுத்தொழுகையை கண்காணித்து பின் தொடர்ந்தார்.

فهذا ابن عباس رضي الله عنهما يقول: (بِتُّ عِنْدَ خَالَتِي - وهي مَيْمُونَةَ أم المؤمنين - فَقَامَ النَّبِيُّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ أُصَلِّي مَعَهُ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ).

சிறுவர்களின் திறன் அறிந்து அவர்களை சமூகத்தில்  முன்னிலைப் படுத்தினார்கள்.

اختياره للغلام عمرو بن سلمة الجرمي إماماً على قومه، وكان أصغرهم سناً، إلّا أنّه كان أكثرهم حفظاً وعلماً بكتاب الله،


யுத்தங்களின் போது சிறுவர்களை பாதுகாக்க உத்தரவிட்டார்கள்

عبد الله بن عمر رضي الله عنهما: (إن امرأة وُجِدت في بعض مغازي النبي صلى الله عليه وسلم مقتولة، فأنكر رسول الله صلى الله عليه وسلم قتل النساء والصبيان) [البخاري رقم الحديث 3014،

பெருமானார் (ஸல்) அவர்களின் எந்த யுத்த்த்திலும் அது போல வேறு எந்த சந்தர்ப்பத்திலும் சிறுவர்கள் துன்புறுத்தப் பட்ட்தாக ஒரு சிறு செய்தி கூட கிடையாது, ஆனால் இன்றைய நவீன யுகத்தில் உலகில் நடை பெறுகிற சண்டைகளில் சிறுவர்கள் தான் முதல் களப்பலியாகிறார்கள்.

குழந்தைகளும் சிறுவர்களும் – எந்தக் குழந்தையாக இருந்தாலும் - கருணைப் பார்வைக்குரியவர்கள் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் இயல்பு எத்த்கைய மிகப் பெரும் நேசத்தை பெருமானாருக்குப் பெற்றுத் தந்தது என்றால் அன்றைய முஸ்லிம் சமூகத்தில் பெரியவர்கள் எந்த அளவு பெருமானாரை நேசித்தார்களோ அதே அளவு குழந்தைகளும் சிறுவர்களும் கூட பெருமானாரை நேசித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வளர்ப்பு உண்டு. அவரது பெயர் ஜைது பின் ஹாரிதா (ரலி)
அவர் பெருமானாரின் வளர்ப்பு மகனானது மட்டும் அல்ல பெருமானாரின் பேரன்பிற்குரியவராகவும் இருந்தார்.
அதற்கான காரணம் மிக அருமையானது.
சுஃதி பின் து சஃலபா என்ற் பெண் தன் குழந்தை ஜைது பின் ஹாரிதா வோரு தனது தாய்வீடு இருந்த அரபு கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்போது அந்த கிராமத்தை கொள்ளையர்கள் சுழ்ந்தனர். கிடைத்த பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் சிறுவராக இருந்த ஜைது பின் ஹாரிதாவையும் தூக்கிச் சென்று சந்தையில் விற்றனர், அந்த சிறுவரை கதீஜா அம்மா ரலி விலைக்கு வாங்கி தனது கணவர் முஹம்மது நபி (ஸ்ல) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்.
பெருமானார் (ஸ்ல்) அவர்கள் அவரை அடிமையாக வைத்துக் கொள்ளாமல் வளர்ப்பு மகனாக வைத்துக் கொண்டார்கள்.
தங்களது குழந்தை மக்காவில் முஹம்மது (ஸல்) அவர்களிடம் இருக்கிறது என்பதை அறிந்த ஹாரிதாவும் அவரது சகோதர்ரும் குழந்தையை மீட்டுச் செல்ல பெருமானாரை வந்து சந்தித்தனர். குழந்தையை தந்து விடுமாறும் கேட்கிற தொகை தருவதாகவும் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  பணம் தேவை இல்லை. அவர் உங்களோடு வரச் சம்மதித்தால் அழைத்துச் செல்லுங்கள். வர வில்லை என்று சொன்னால் விட்டு விட வேண்டும் என்றார்கள்
ஹாரிதா சொன்னார் . நாங்கள் உங்களிடம் சிறு உதவியை தான் எதிர்பார்த்தோம் நீங்களோ பெருங்கருணையோடு நடந்து கொண்டீர்கள், நல்லது எங்களது மகனை அழையுங்கள் கேட்போம் என்று கூறினார்கள்.
ஜைது பின் ஹாரிதா ரலி அவர்களை அழைத்த பெருமானார் (ஸ்ல) இவர்கள் இவர்களை. தெரியுமா என்று கேட்டார்கள், அவர் சொன்னார் தெரியும் இவர் என் தந்தை ஹாரிதா இவர் எனது சிறிய தந்தை என்றார்.
இவர்கள் உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள் என்று பெருமானார் (ஸ்ல) கூறினார்கள்.
உடனே ஜைது (ரல்) நான் செல்ல மாட்டேன். நான் முஹம்மதையே தேர்ந்தெடுப்பேன் என்று கூறினார்.
அவரது பெற்றோருக்கு கோபம் கொப்பளித்த்த்து. அடிமை வாழ்கையிலிருந்து சுதந்திர வாழ்க்கைக்கு வர உனக்கு விருப்ப மில்லையா என்று கடிந்து கொண்டனர்.
அப்போது ஜைது பின் ஹாரிதா (ரலி ) கூறினார்கள், நான் முஹ்ம்மது (ஸ்ல்) அவர்களிடம் கண்ட நன்மையை வேறு யாரிடமும் காணவில்லை.
பெற்றோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்,
நபி (ஸல்) அப்போதே ஜைது ரலி அவர்களின் கையைப் பிடித்து கஃபாவுக்கு அழைத்துச் சென்று அதன் முற்றத்தில் நிறுத்தி ஒரு பிரகடனம் செய்தார்கள். இனி இவர் எனது மகனாவார். இவருக்கு நான் வாரிசு. இவர் எனக்கு வாரிசு என்றார்கள்.
ஜைது பின் ஹாரிதா ரலி அவர்கள் இறுதி வரை பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்கள்.
நபியே நீங்கள் பிரம்மாண்ட குணமுடையவர் என்று அல்லாஹ் போற்றுவதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவர்களை சிறுவர்களை கூட கவர்ந்திருந்தார்கள் என்பதுமாகும்.

பெருமானாரின் பிறந்த நாள் பொழுதில் நாமும் சபதம் ஏற்போம்.
நமது குழந்தைகள் நமது சிறுவர்களிடம் மட்டுமல்ல அனைத்து குழந்தைகளையும் அன்பொழுக கருணை ததும்ப பார்ப்போம். – அவர்களை அலட்சியப் படுத்தாமல் அக்கறையோடு கவனிப்பொம். கற்றுக் கொடுப்போம், பண்பாக உருவாக்குவோம், பாதுகாப்போம்,
அல்லாஹ் கிருபை செய்வானாக!
  



2 comments:

  1. Masha Allah
    குழந்தைகளைப் பற்றிய அருமையான தகவல்கள்

    ReplyDelete