வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 28, 2019

மரமும் மனித வாழ்வும்


ومثل كلمة طيبة كشجرة طيبة
திருக்குர் ஆனில் – ஈமானின் உயிர் நாடியான கலிமா தய்யிபாவை பற்றி சொல்கிற போது அது நல்ல மரத்தை போல என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் ஒரு உவமையை கூறூகிறான் என்றால் அது நிச்சயம் சாமாணியமானதாக இருக்க முடியாது.
எனவே இஸ்லாமிய முன்னோடிகள் ஈமானிய வாழ்விற்கு  மரத்திடம் ஏராளமான பாடங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள்.
நமது வாழ்க்கைய சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள மரம் தருகிற பாடங்கள் சிலவற்றை இந்த ஜும் ஆவிலே பார்க்கிறோம்.
அல்லாஹ் படிப்பினைகளை தந்தருள்வானாக!

மரம் மண்ணிலேயே வளர்கிறது, தங்கத் தட்டிலோ வெள்ளித் தட்டிலோ முளைக்காது,
மனிதன் வெற்றிக்ரமாக வாழ வேண்டுமானால் அவன் வாழும் சூழலை நல்லதாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்,
நபி (ஸல்) கூறிய கதை ஊரை மாற்று,
مسلم في صحيحه عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( كان فيمن كان قبلكم رجل قتل تسعة وتسعين نفسا ، فسأل عن أعلم أهل الأرض ، فدُلَّ على راهب ، فأتاه فقال : إنه قتل تسعة وتسعين نفسا ، فهل له من توبة ، فقال : لا ، فقتله فكمل به مائة ، ثم سأل عن أعلم أهل الأرض ، فدُلَّ على رجل عالم ، فقال : إنه قتل مائة نفس ، فهل له من توبة،  فقال : نعم ، ومن يحول بينه وبين التوبة ، انطلق إلى أرض كذا وكذا ، فإن بها أناسا يعبدون الله ، فاعبد الله معهم ، ولا ترجع إلى أرضك ، فإنها أرض سوء ، فانطلق حتى إذا نصَفَ الطريق أتاه الموت ، فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب ، فقالت ملائكة الرحمة : جاء تائبا مقبلا بقلبه إلى الله ، وقالت ملائكة العذاب : إنه لم يعمل خيرا قط ، فأتاهم ملَكٌ في صورة آدمي ، فجعلوه بينهم ، فقال : قيسوا ما بين الأرضين ، فإلى أيتهما كان أدنى فهو له ، فقاسوه فوجدوه أدنى إلى الأرض التي أراد ، فقبضته ملائكة الرحمة . قال قتادة : فقال الحسن : ذُكِرَ لنا أنه لما أتاه الموت نأى بصدره ).

இன்று நாம் எத்தகைய சூழலை தேர்ந்தெடுக்கிறோம், என்பதில் கவனமாக இருக்கிறோமா > அது என்ன மாற்றத்தை தரும் என்று யோசிக்கிறோமா ?
ஒரு காலத்தில் பாங்கு சப்தம் கேட்கும் எல்லைக்குள் வீட்டை தேடினார்கள்
தனி வீடுகளாக அபார்ட்மெண்டுகளில் அதுவும் லக்ஷுரி அபார்ட்மெண்டுகளில் வாழ நினைக்கிறோம்,
உறவுக்காரர்கள் நெருங்க முடியாத இடத்தில் வாழ நினைக்க்றோம்.
இது நிச்சயம் நமது வாழ்வை பொருத்தமற்ற இடத்தில் விதைப்பதற்கு சமமானதே!
நாம் அதிகம் நன்மை செயவத்ற்கேற்ற் சூழலை நாம் தேடிக் கொள்ள வேண்டும்,.
நமது பிள்ளைகள் நல்லவர்களாக வாழ்வதற்கேற்ற கல்விக் கூடங்கள் – நண்பர்களை உருவாக்கித் தர வேண்டும்.
ஹலாலான வியாபாரத்திற்கு ஏற்ற சூழலில் வியாபாரம் செய்ய முயற்சிக்கனும்.
தங்கத் தட்டு எத்தனை தான் விலை மதிப்புள்ளாதாக இருந்தாலும் அதில் போடப்படுகிற விதை நூறு வருடங்களானானும் நாற்றாக மாறாது,
மரத்தின் 2 ம் பலன்
மனிதனிடமிருக்கிற மிகப் பெரிய பலவீனம் நான் என்ற நினைப்பு. தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் இயல்பி.
சில பேர் கல்யாண வீட்டிலும் கபர்ஸ்தானிலும் செல்பி எடுத்த்க் கொள்கிறார்கள்.
கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் மைத் வீட்டில் ஜனாஸாகவாகவும் காட்டிக் கொள்கிறார்கள்.
மரம் சொல்கிறது உன்னை மறைத்துக் கொள் வளர்வாய்.
தன்னைப் புதைத்துக் கொள்கிற விதையே முளைக்கீறது,
தான் என்ற அகந்தையை அழித்துக் கொள்கிற மனிதன் வளர்வான்
கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நான் – என்னுடையது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. எல்லாம் இரவலே!
உலகில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
இந்தியாவில் பல மாநிலங்களில் தனது தந்திரத்தால் ஆட்சியை பிடித்த பாஜக மஹாராஷ்டிராவிலும் அதே போல ஒரு நாடகத்தை நடத்தியது. அதிகாரத்தின் அகந்தையில் பேரிடி விழுந்த்தே.
இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் இருமாப்புக் காட்டுகீறார்கள்
أئمة الأنانية في القرآن الكريم:

 قارون: ﴿ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي [القص: 78].
 فرعون: ﴿ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى [النازعات: 24].
 النمروذ: ﴿ أَنَا أُحْيِي وَأُمِيتُ [البقرة: 258].
 إبليس: ﴿ أَنَا خَيْرٌ مِنْهُ [الأعراف: 12].



மரம் தரும் 3  ம் பாடம்
சில மணம் தரும் மரங்கங்கள் பெருமரங்களின் நிழல்களில் வளர்கின்றன.
ஏலக்காய் செடி – குறி மிளகு போல
நாம் சிறப்பாக வாழ நல்ல மனிதர்களின் நிழில் வளரனும்
பெரியவர்களின் துணையை பெற்றுக் கொள்ளாதவர்கள் அலைகடலில் வீழ்ந்து தத்தளிப்பவர்களை போல. அதை பெற்றுக் கொண்டவர்கள் கரை சேர ஒரு மரக்கிளையை பிடித்துக் கொண்டவர்களைப் போல.
இஸ்லாமிய வரலாற்றை பாருங்கள் மிகச் சிறப்பான மனிதர்கள் மிகச் சிறப்பான மனிதர்களின் நிழலில் வளர்ந்தார்கள்
இமாம் அபூஹனீபா – இமாம் மாலிக் – இமாம் ஷாபி – இமாம் அஹ்மது (ரஹ்) அனைவரும் வாழையடி வாழை என பெரு நிழலில் வளர்ந்தார்கள்,
இதே போல ஹதீஸ் கலை அறிஞர்களும்.

மரம் தரும் 4 ம் பாடம்
வாழ்கையில் வெற்றி படிப்படியாக அமையனும். திடீரென்று கிடைக்கும் வெற்றிக்கும் செல்வத்திற்கும் ஆசைப்படக் கூடாது, அது சீக்கிரம் தவறிப் போகலாம்,
மெது மெதுவா வளர்கிற மரம் நூறு நூற்றைம்பது வயது வாழ்கிறது, .
சீக்கிரமாக வளர்கிற மாடு 20 வயதுக்கு மேல் இருப்பதில்லை.
அடையாறில் ஒரு ஆலமரம் இருக்கிறது, பல நூறு ஆண்டுகளாக.
அதே போல கலிபோர்னியாவில் பல நூற்றாண்டுகளாக வளர்ந்து கொண்டே இருக்கிற ஒரு மரம் இருக்கிறது. அதன் மத்தியில் சுரங்கம் வெட்டி பஸ் போகுமளவு பாதை அமைத்திருக்கீறார்கள்..

மரம் தரும் 5  ம் பாடம்
மரம் கீழே வேர் விடும் அளவு வளர்ச்சி பெரிதாக இருக்கும்.
மனிதர்கள் தனிமையில்  எவ்வளவு அமல் செய்கிறார்களோ அந்த அளவு வாழ்கையில் வெளிச்சம் பெறுவார்கள்.
عَنْ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ -رضي الله عنه-، قَالَ: قَالَ رَسُولُ اللهِ -صلى الله عليه وسلم-: “مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَكُونَ لَهُ خَبْءٌ مِنْ عَمَلٍ صَالِحٍ فَلْيَفْعَلْ”… أَيْ: طاعة مخبوءة وعمل صالحٌ مُدَّخَر في السر.

மரம் தரும் 6  ம் பாடம்
ஒருவர் மரத்தை மேலே மட்டும் அறுத்து விட்டு வேரை அழிக்காமல் வீடு கட்டினார். கொஞ்ச நாளில் தரையை பெயர்த்துக் கொண்டு மரம் வெளியே தலை நீட்டியது.
நமக்குள் திறமை இருந்தால் எந்த எதிர்ப்பையும் மீறி வளராலாம்,  
மரம் தரும் 7   ம் பாடம்
மரம் பூமியிலிருந்து நைட்ரஜன், கால்ஷியம், பாஸ்பரஸ், தண்ணீரை பெற்றுக் கொள்கிறது, சூரியனிடமிருந்து சக்தியை பெற்றுக் கொள்கிறது, காற்றிடமிருந்து ஆக்சிஜனை பெற்றுக் கொள்கிறது.
ஆனால் அதை விட அதிகமாக தருகிறது,
மனிதன் நல்லதையே தரணும்,
قصة عن الإمام الشبلي قدس الله سره:
يُروى أن رجلاً عارف بالله, أتعبه من حوله, فخرج من بغداد هائماً على وجهه, اسمه الشبلي, جلس في ظل شجرة, -:, قالت له: "يا شبلي, كن مثلي, قال: وكيف؟ قال: يرميني الناس بالحجارة, وأرميهم بالثمار, , قال: فما بالك إلى النار في النهاية؟ قالت: لأني أميل مع الهوى حيث يميل


இன்றைய இளைஞர்கள் பெற்றோர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு பிறகு அவர்களுக்கு தருவதற்கு யோசிக்கிறார்கள்,
மரம் தரும் 8   ம் பாடம்
பனிப்பிரதேசங்களில் பனிப் பொழுதுகளில் மரம் எல்லாவற்றை இழந்தாலும் நம்பிக்கையை இழப்பதில்லை,
அது தனக்கான ஒரு காலத்திற்காக காத்திருக்கிறது,
மனிதர்களும் சோதனைகள் சூழ்ந்தாலும் தனக்கான ஒரு நேரத்திற்காக நம்பிக்கையோடு காத்திருக்கனும்,
தவறான முடிவுகளுக்கு போகக் கூடாது.
சென்னை ஐ ஐ டி யில் படித்த மாணவி பாத்திமா லத்தீபா தற்கொலை முடிவுக்கு சென்றது சோகமயமானது.
நாமும் நமது சந்த்திகளும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை ஒரு போதும் இழக்க கூடாது.  
மரம் தரும் 9   ம் பாடம்
ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு சிறப்பு.  மாமரம், தேக்கு மரம், யூகலிப்ட்ஸ் . ஒன்று பெரிதாக இருக்கிறது, மற்றது ஒல்லியாக இருக்கிறது.
மனிதர்கள் இதை புரிந்து கொள்ளனும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மரியாதை இருக்கிறது, அதை நாம் குறைத்து விடாது வாழனும், அப்ப்டி நடந்து கொண்டால் எங்கும் சண்டை இருக்காது.
عن عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رضي الله عنهما قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ –صلى الله عليه وسلم- يَطُوفُ بِالْكَعْبَةِ وَيَقُولُ: (مَا أَطْيَبَكِ وَأَطْيَبَ رِيحَكِ، مَا أَعْظَمَكِ وَأَعْظَمَ حُرْمَتَكِ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَحُرْمَةُ الْمُؤْمِنِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ حُرْمَةً مِنْكِ، مَالِهِ وَدَمِهِ، وَأَنْ نَظُنَّ بِهِ إِلاَّ خَيْرًا)
رواه ابن ماجه.
மழை மரத்தின் உயிர்
அறிவு மனிதனின் உயிர்.
عن أبي أمامة ، قال : قال - صلى الله عليه وسلم - : " إن لقمان قال لابنه : يا بني عليك بمجالسة العلماء ، واسمع كلام الحكماء ، فإن الله ليحيي القلب الميت بنور الحكمة ، كما يحيي الأرض الميتة بوابل المطر " ، 

மரத்திடம் ஒரு பலவீனம் இருக்கிறது, அது நெருப்புக்கு இரையாகி விடுகிறது
அதிலும் மனிதர்களுக்கு ஒர் பாடம் உண்டு,
நெருப்பு மரத்தை அழித்து விடுவது போல
குப்ரு மனிதனுக்கு அழித்துவிடும்,
எல்லா இடத்திலும் எச்சரிக்கை அவசியம்.
சிறு நெருப்பு பொறியும் பெரு மரத்தை சாம்பலாக்கி விடும்.  
காழி சனாவுல்லாஹ் பானீபத்தி ரஹ் கூறுகிறார்கள்.
ஒருவர் ஷரீஅத்தை பற்றி பேசிக் கொண்டிடுக்கும் போது அதை மறுக்கும் வகையில் யாராவது ஒருவன் போதும் நிறுத்து என்று சொன்னால் அது குப்ராகிவிடும்.
ஷஅத்தை நிறுத்து. என்றால் குப்ரு

வாழ்கையை சிறப்பானதாக்கிக் கொள்ளும் இந்தக் கருத்துக்களை நினைவில் நிறுத்தி வாழ அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

1 comment: