இஸ்லாமிய பண்பாடுகளை
பொறுத்தவரை நீதியும் சமத்துவமும் மிக முக்கியமான வாழ்வியலாகும், அதிலும் நீதி முதன்மையானது.
அதுவே முதலில்
உபதேசிக்கப் படக் கூடியது.
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ
وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ
وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴾
[النحل: 90]
நீதி விசயத்தில் பரிந்து பேசப்பட்ட
போது மிக கடுமையாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பேசினார்கள். உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டான
பேச்சு அது,
أن امرأةً مخزوميَّة شريفة
سرَقَتْ في عهد النبي صلى الله عليه وسلم، فأراد أسامة بن زيد رضي الله تعالى عنه
أن يَشفَعَ فيها، فغَضِب النبي صلى الله عليه وسلم، وقال: ((أتشفَعُ في حدٍّ من
حدود الله! إنما أهلك الذين من قبلكم أنهم كانوا إذا سرَق فيهم الغنيُّ تركوه،
وإذا سرق فيهم الوضيعُ أقاموا عليه الحدَّ، وايمُ اللهِ لو أن فاطمةَ بنتَ محمدٍ
سرقت، لقطعت يدها))؛ (البخاري).
நீதி அனைத்து தரப்பு மக்களுக்கு பொதுவானது,
وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ
تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ
كَانَ سَمِيعًا بَصِيرًا ﴾ [النساء: 58].
நீதியை நிலை நாட்ட வேண்டிய முதன்மையான
பொறுப்பில் இருப்பவர்கள் நீதிபதிகள்.
நீதிபதிகள் மூன்று
வகை என நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்,
عَنْ بُرَيْدَةَt قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: الْقُضَاةُ ثَلَاثَةٌ: اثْنَانِ فِي النَّارِ،
وَوَاحِدٌ فِي الْجَنَّةِ: رَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ، فَهُوَ فِي
الْجَنَّةِ، وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَلَمْ يَقْضِ بِهِ، وَجَارَ فِي الْحُكْمِ،
فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ لَمْ يَعْرِفِ الْحَقَّ، فَقَضَى لِلنَّاسِ عَلَى
جَهْلٍ، فَهُوَ فِي النَّارِ
நீதி வழங்கும் பொறுப்பி இருப்பவர்கள் வலியவன், எளியவன்,
பணக்காரன், ஏழை உறவுக்கார்ர் என்று பேதம் பார்க்க கூடாது. தனக்கெதிராகவே இருந்தாலும்
நீதி வழுவாவல் நடந்து கொள்ள் வேண்டும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ
شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ
وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا
فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا
فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا ﴾ [النساء: 135]
யார்
மீதும் வெறுப்போ கோபமோ கொண்டு அல்லது
யாருக்கும் அஞ்சியோ தீர்ப்பு சொல்லக்
கூடாது.
وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا
اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ
بِمَا تَعْمَلُونَ ﴾ [المائدة: 8].
மிகச்
சரியாக தீர்ப்பு வழங்கிய போதும் பெருமானார் (ஸல்) அச்சப்படுவார்கள்
فعن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت:
(كان رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يَقسِمُ فيَعدِلُ، ويقولُ: اللَّهمَّ
هذا قَسْمي فيما أملِكُ ف
لا تلُمْني فيما تملِكُ ولا أملِكُ)
பேதம் பாராட்டால் , சரியாக நீதி வழங்கும் நீதிபதிகளை பெருமானார்
(ஸல்) அவர்கள் பாராட்டினார்கள். அத்தைகையோருக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்
فقد قال النبي الكريم صلى الله عليه وسلم: (إن
المقسطينَ، عند اللِه، على منابرَ من نورٍ عن يمينِ الرحمنِ عز وجل. وكلتَا يديهِ
يمينٌ؛ الذين يعدلونَ في حُكمهِم وأهليهِم وما وُلّوا) (صحيح مسلم 1827
فقد قال النبي الكريم سبعةٌ يُظِلُّهمُ اللهُ في ظِلِّه يومَ لا ظِلَّ إلا ظِلُّه
الإمامُ العادلُ،
فعن عياض بن حمار رضي الله تعالى عنه أن رسول الله
صلى الله عليه وسلم قال: (... وأهلُ الجنةَ ثلاثةٌ: ذو سلطانٍ مقسطٍ متصدقٍ
موفَّقٍ. ورجلٌ رحيمٌ رقيقُ القلبِ لكل ذي قربى، ومسلمٌ. وعفيفٌ متعففٌ ذو
عيالٍ...) (صحيح مسلم 2856)،
وقال
النبي الكريم صلى الله عليه وسلم:
(... فعن أنس بن مالكٍ رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
(ثلاثٌ مُنجِياتٌ: خَشيةُ اللهِ تعالَى في السِّرِّ والعلانِيَةِ، والعدلُ في
الرِّضا والغضَبِ، والقصْدُ في الفقْرِ والغِنَى، وثلاثٌ مُهلِكاتٌ: هوًى
مُتَّبَعٌ، وشُحٌّ مُطاعٌ، وإِعجابُ المرْءِ بنفْسِهِ )
இஸ்லாமின் வழிகாட்டலில் உலகில் உன்னதமான நீதியின் காவலர்கள்
உருவானார்கள்.
மஸ்ஜிதுன்னபவியின் விஸ்தீரணத்திற்காக வீட்டை விட்டுத்தர மறுத்த அப்பாஸ் ரலி அவர்களும் – அதை ஏற்றுக் கொண்ட உமர் ரலி அவர்களும்
عن زيد بن أسلم قال: [كان للعباس بن عبد المطلب رضي
الله عنه دارٌ إلى جنب مسجد المدينة فقال له عمر رضي الله عنه: بعنيها، فأراد عمر
أن يزيدها في المسجد فأبى العباس أن يبيعها إياه فقال عمر: فهبها لي فأبى فقال:
فوسعها أنت في المسجد فأبى، فقال عمر: لا بد لك من إحداهن فأبى عليه، فقال: خذ
بيني وبينك رجلاً فأخذ أبي بن كعب رضي الله عنه فاختصما إليه فقال أبيٌّ لعمر: ما
أرى أن تخرجه من داره حتى ترضيه فقال له عمر: أرأيت قضاءك هذا في كتاب الله وجدته
أم سنةٌ من رسول الله صلى الله عليه وسلم؟ فقال أبي: بل سنة من رسول الله صلى الله
عليه وسلم فقال عمر: وما ذاك قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "
إن سليمان بن داود عليهما الصلاة والسلام لما بنى بيت المقدس جعل كلما بنى حائطاً
أصبح منهدماً، فأوحى الله إليه أن لا تبني في حق رجلٍ حتى ترضيه "، فتركه عمر
فوسعها العباس بعد ذلك في المسجد] (محمد بن يوسف الكاندهلوي / حياة الصحابة
பள்ளிவாசல் வாசலி யாசகம் கேட்டுக் கொண்டிருந்த திம்மிக்கு
பைத்துல் மாலில் இருந்து மானியம் வழங்க உத்தரவிட்ட உமர் ரலி யின் நீதி.
وعند أبي عبيد والعقيلي عن عمر رضي الله عنه أنه مر
بشيخ من أهل الذمة يسأل على أبواب المساجد فقال: ما أنصفناك، كنا أخذنا منك الجزية
في شبيبتك ثم ضيعناك في كبرك ثم أجرى عليه من بيت المال ما يصلحه] (حياة الصحابة
சாலையில் சரியாக நட என்று சொல்வதற்காக தன் கையில் எப்போதும் வைத்திருக்கிற சிறு சவுக்கால் இயாஸ் பின் சலமாவை தட்டிய உமர் ரலி அதற்காக 600 திர்ஹம்கள் கொடுத்து விட்டு இதை நான் மறக்க வில்லை என்றார்கள்
مر عمر بن الخطاب رضي الله عنه في السوق ومعه الدرة
فخفقني بها خفقة فأصاب رَفَّ ثوبي فقال: أَمِطْ عن الطريق، فلما كان في العام
المقبل لقيني فقال: يا سلمة تريد الحج؟ فقلت نعم فاخذ بيدي فانطلق بي إلى منزله
فأعطاني ستمائةَ درهم وقال: استعن بها على حجك واعلم أنها بالخفقة التي خفقتك،
فقلت: يا أمير المؤمنين ما ذكرتها، فقال: وأن ما نسيتها
இஸ்லாமிய வரலாற்றில் புகழ்மிக்க நீதிபதிகளில் ஒருவர் காழி ஷுரைஹ் . உம்ர – உஸ்மான் அலி முஆ (ரலி) ஆகியோர் காலத்தில் கூபாவின் நீதிபதியாக சுமார் 60 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தவர் வழுவாத நீதிக்கு பெயர் பெற்றவர். அரசருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கியவர்,
تنازع أمير المؤمنين
الخليفة الراشد علي بن أبي طالب رضي الله عنه مع رجلٍ نصرانيٍّ على درع،
فاحتكما إلى القاضي شريح، ولمَّا جلسا عند شريح، قال علي رضي الله عنه:
"يا شريح هذا الدرع درعي، لم أبع، ولم أهب".
-
فقال شريح للنصراني: "ما تقول فيما يقول أمير المؤمنين؟".
- فقال النصراني: ما الدرع إلا
درعي، وما أمير المؤمنين عندي بكاذب.
- فالتفت شريح إلى سيدنا علي رضي الله عنه وقال: "يا أمير المؤمنين، هل من بينة؟".
- فقال عليٌّ رضي الله عنه: "ما لي بينة"، فحكم شريح القاضي بالدرع للنصراني.
- فقال النصراني متعجِّبًا:
"أمير المؤمنين قدَّمني إلى قاضيه، وقاضيه يقضي عليه!".
- فأسلم وقال: "أشهد أن لا
إله إلا الله، وأشهد أّنَّ محمدًا عبده ورسوله، الدرع والله درعك يا أمير
المؤمنين" [23].
இத்தகைய வரலாறுகள் ஏராளம் உண்டு.
யாருக்காகவும் நீதி வளைக்கப் படாத வரலாறுகள் அவை.
நீதிபதிகள் சட்டப்படி தீர்ப்பு வழங்க வேண்டும்.
அதே நேரத்தில் சில நேரங்களில் சமூக நல்லிணக்கம் கருதி சமரசத்தீர்வின்
அடிப்படையிலும் தீர்ப்பு வழங்கலாம். இதையும் இஸ்லாம் ஏற்கிறது.
நபி தாவூத் அலை அவர்கள் வழங்கிய சட்டப்படியான தீர்ப்பை நபி சுலைமான
அலை அவர்கள் இருசாராரின் நன்மை கருதி மாற்றியதை அல்லாஹ் ஞானம் என்று அங்கீகரிக்கிறான்.
وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي
الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ الْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ
தற்போது பாபரீ மஸ்ஜித வழங்கப் பட்டுள்ள தீர்ப்பை இந்த வகையில் இந்தியா
நாட்டின் சமூக அமைதி கருதி வழங்கப் பட்டுள்ள ஒரு சமரச தீர்ப்பாகவே (திருமாவளவன் கூறியது போல ) நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இன்றைய கால சூழ்நிலையில்
,, வேறு மாதிரி தீர்ப்பு வழங்கினால் அதை தற்போது ஆட்சியில் இருக்கிற அரசும் ஏற்றுக்
கொள்ளாது ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிற இந்துத்துவ சக்திகளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அதனால் நாட்டில் அமைதிக் குலைவு ஏற்படும் என்பதை புரிந்து கொண்ட நீதிமன்றம் நீதியை
பெரிதாக கருத்தில் கொள்ளாமல் சமூக அமைதியை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனவே எந்த தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லை என்று சொல்லப்
பட்டாலும் முஸ்லிம் தரப்பிற்கான நியாயம் வழங்கப் பட வில்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.
உச்சநீதிமன்றத்த்தின் தீர்ப்பு எது நீதி என்பதை தெரிந்து கொண்டு அதற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு
என்பதை இப்போது நாட்டில் விவரமுள்ள அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தீர்ப்பு குறித்து அனைத்து
முஸ்லீம் சட்டவாரிய அமைப்பின் பிரதிநிதி சன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் சஃபரியாஃப் ஜிலானி , உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு
திருப்தியில்லை. “
இதுதான் இந்திய முஸ்லிம்கள் அனைவரின் மனோ நிலையுமாகும்,
தீர்ப்பு முஸ்லிம்களின் தரப்புக்கு எதிராக
இருந்தாலும் கூட இதில் சில உண்மைகளை நீதிபதிகள் உறுதியாக வெளிப்படுத்தியிருப்பது ஆறுதல்
அளிக்கிறது.
பாபர் மஸ்ஜித் மஸ்ஜிதாக த்தான் இருந்த்து,
அது மீர் பாக்கியால் கட்டப்பட்ட்து.
அது கட்டப் பட்ட இட்த்திற்கு கீழ் வேறு ஒரு
கட்டிட்ட்த்தின் இடிபாடு இருந்தாலும் அதை கோயில் என்று உறுதிப்படுத்த முடியவில்லை.
முஸ்லிம்கள் அங்கு தொழுகை நடத்தினர்.
அந்தப் பள்ளிவாசல் கோயில் வடிவத்தில் இருக்க
வில்லை பள்ளிவாசலாகத்தான் இருந்த்து.
1992 பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட்து தவறு.
இத்தனை ஆண்டுகளாக இந்திய நாட்டில் இந்துத்துவ
சக்திகள் செய்து வந்த பொய்ப்பிரச்சாரத்தின் முகத்தில் தீர்ப்பு கரியை பூசியுள்ளது.
இந்திய முஸ்லிம்களின் ஒரு பெரிய வருத்தம் என்ன
வெனில்
இந்துக்களின் மனோ உணர்வை சந்தேகத்திற்கு இடமின்றி
ஒப்புக் கொண்ட நீதிமன்றம்,
இத்த்தனை ஆண்டுகளாக் தொடர்ந்து இந்துத்துவ
சக்திகளால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செய்யப்பட்ட அச்சமூட்டும் நடவடிக்கைகளை கவனத்தில்
கொண்டு அதற்கு ஒரு முடிவு கட்டியிருக்க வேண்டும்.
இனி இந்தியாவில் வேறு எந்த பள்ளிவாசல் விசய்த்திலும்
சர்ச்சைகள் செய்ய்ப்படக் கூடாது . அதன் மூலம் நாட்டின் அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தக்
கூடாது, நாடு சுதந்திரம் பெற்ற சமயத்தில் எந்த ஆலயம் எவர் வசம் இருந்த்தோ அவருக்கு
அது உரியது என்பதையும் நாட்டு நலன் கருதி உச்சநீத்மன்ற நீதிபதிகள் மொழிந்திருப்பார்கள்
எனில் இந்த தீர்ப்பை நபி சுலைமான் அலை அவர்களின் சம்ரசம் திட்டம் போல ஒன்றாக பார்க்க
வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
அதனாலேயேயும் இந்த தீர்ப்பு அதிருப்தியளிக்கும்
தீர்ப்பாக அமைந்து விட்டது.
ஆயினும் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்
என்று முஸ்லிம் தலைவர்கள் அறிவித்த்தையும் அமைதிகாத்த்தையும் சமூக பார்வையாளர்கள் அனைவரும்
பாராட்டுகீறார்கள் என்பதை முஸ்லிம் சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படுமானால்
அதை உடைக்க பட்ட பாபரீமஸ்ஜித் விசயத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் தரப்பிலான நீதியை நிலை நாட்டும் ஒரு சான்றாக முஸ்லிம்கள் ஆக்கிக்
கொள்ள வேண்டும் .
அல்லாஹ் இந்தியாவில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும்
இஜ்ஜத்தை தந்தருள்வானாக!
No comments:
Post a Comment