வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 12, 2019

இரண்டு டைனோசர்களின் குடியரசு



يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ}(13)سورة الحجرات.
وقال الرسول صلى الله عليه وسلم في حديث صحيح: (الناس سواسية كأسنان المشط الواحد. لا فضل لعربي على عجمي إلا بالتقوى]]
ஒரு மனிதருக்கு அல்லாஹ் அதிகாரத்தை தருவது அவருக்கு நன்மையாகவும் அமையலாம். அவரை சோதித்து தண்டிப்பதற்காகவும் அமையலாம்.
அதிகாரத்திற்கு வந்த பிறகு யார் பெருந்தன்மையாளர்களாக மாறிவிடுகிறார்களோ அவர்களுக்கு அதிகாரம் நன்மையானது. யார் குரூரமானவர்களாக மாறிவிடுகிறார்களோ அவர்களுக்கு அதிகாரம் ஒரு சாபமே.
இது வரலாற்றுச் சத்தியம்.
அதனால்தான் அதிகாரப் பொறுப்பிற்கு வருகிறவர்கள் அதற்கு முன்னர் எப்படி இருந்தாலும் தாங்கள் நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ள நான் அனைவருக்கும் பொதுவானவராக நடந்து கொள்வேன் என்று கூறுவதை நாம் பார்த்திருக்கலாம்.
சமீபத்தில் இலங்கை தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று ஜனாதிபதியாக ஆனபோது. எனக்கு முஸ்லிம்களும் தமிழ் மக்களும் வாக்களிக்கவில்லை. ஆயினும் நான் அவர்களுக்கும் பொதுவானவனாவே நடந்து கொள்வேன் என்று கூறினார் .
அப்படி கூறினால் தான் அவர் ஜனாதிபதி பதவிக்கு பொருந்தமானவர் என்று உலகம் சொல்லும்.
அவர் பொறுப்பிற்கு வந்த பிறகு சொன்னபடி நடந்தால் அவரை நல்லவர் என்று வரலாறு போற்றும்.
அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் தனக்குப்பிறகு இஸ்லாமிய அரசுக்கு பொறுப்பேற்க உமர் ரலி அவர்களின் பெயரை அறிவித்தார்கள்.
வரலாறு அந்த சூழலை பேசுகிறது.
في شهر جمادى الآخرة سنة 13هـ، مرض الخليفة أبو بكر واشتد به المرض،][ فلما ثقل واستبان له من نفسه، جمع الناس إليه فقال: «إنه قد نزل بي ما قد ترون، ولا أظنني إلا ميتاً لما بي، وقد أطلق الله أيمانكم من بيعتي وحل عنكم عقدتي، ورد عليكم أمركم، فأمِّروا عليكم من أحببتم، فإنكم إن أمَّرتم في حياة مني كان أجدر أن لا تختلفوا بعدي»، فتشاور الصحابة، ثم رجعوا إلى أبي بكر فقالوا: «رأيُنا يا خليفة رسول الله رأيُك»، قال: «فأمهلوني حتى أنظر لله ولدينه ولعباده»، ثم وقع اختيار أبي بكر بعد أن استشار بعض الصحابة على عمر بن الخطاب
உமர் ரலி அவர்களின் தேர்வை உஸ்மான் ரலி அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி உஸைது பின் ஹுழைர் ரலி போன்றாவர்களிடம் கூறி அது பற்றி கருத்து கூறுமாறு அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் கேட்ட போது அனைவரும் அவருடைய புறவாழ்வை விட அகவாழ்வு சிறந்த்து எனவே உங்களுடைய தேர்வு சரியே என்றனர்.
ஆனால் தல்ஹா பின் உபைதில்லாஹ் ரலி அவர்கள் மட்டும் தனது பயத்தை வெளிப்படையாக கூறினார். உமர் கடுமையானவராயிற்றே !
உலகின் மகா தீர்க்க சிந்தனையாளர்களில் ஒருவரான அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் கூறினார்கள்
நான் இருக்கையில் உங்களுக்கு அவர் கடுமையானவராக தோன்றுகீறார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்பாரானால் மென்மையானவராக மாறிவிடுவார் என்று கூறினார்.
فقد قال طلحة بن عبيد الله رضي الله عنه لأبي بكر الصديق: ما أنت قائل لربك إذا سألك عن استخلافك عمر علينا وقد ترى غلظته؟ فقال أبو بكر: أجلسوني، أبا الله تخوفونني؟ خاب من تزود من أمركم بظلم، أقول: اللهم استخلفت عليهم خيرَ أهلك. وبيَّن لمن نبهه إلى غلظة عمر وشدته فقال: ذلك لأنه يراني رقيقًا، ولو أفضى الأمر إليه لترك كثيرًا مما هو عليه[


வரலாறு என்ன காட்டுகிறது

உமர் ரலி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாகா நிதானத்துடன் மென்மையாக மக்கள் மீது பேரன்பும் பெரும் கருணையும் கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்

ஆட்சிப் பொறுப்பென்பது நல்லவர்களை மேலும் நல்வழிப்படுத்தும் மோசாமானவர்களை மேலும் கொடூராமாக்கி விடும்.

நம்முடைய மத்திய அரசை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களின் பழைய வரலாறு நல்லதாக இல்லை. பல்லாயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த குற்றச் சாட்டுக்கு ஆளானவர்கள். அவ்வாறு மக்கள் கொல்லைப்பட்டத்தை காருக்கு முன்னாள் விழுந்து சாகும் மிருகங்களுக்கு நான் பொறுப்பேறக முடியாது என்று கூறியவர்கள்.

முதலில் அவர்களிடம் சிறிய அதிகாரம் இருந்தது. சிறிய அளவில் அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள். இப்போது அவர்களிடம்  நாட்டின் மைய அதிகாரம் இருக்கிறது. அதற்கேற்ப இன்னும் பெரிய அளவில் அதிகார மிருகத்தனத்துடன் நடந்து கொள்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் அவர்கள் பேசுகிற வார்த்தைகளிலும் அவர்கள் வெளிப்படுத்துகிற உடல்மொழிகளிலும் கீழ்த்தர மனிதர்கள் பெரும் பொறுப்புக்களில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த  குடியுரிமை சட்ட திருத்த மசோதா (Citizenship Amendment Bill)  இந்த ஆட்சியாளர்களின் மனிதாபிமானமற்ற இயல்புக்கு வெளிப்படையான சாட்சியாகும்.

அந்த சட்ட திருத்தம் என்ன சொல்கிறது.

ஏற்கெனவே இருக்கிற சட்டம் என்ன சொல்கிறது.

அரசியலமைப்புச்சட்டம் 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதில் குடியுரைமை பற்றிய தெளிவான விளக்கங்கள் இருக்க வில்லை. நாடு பிரிவினைக்கு ஆளான போது ஏராளமான மக்கள் இடம் பெயர்ந்தனர். அதனால் 1955 ம் ஆண்டு குடியுரிமை சட்டம் இயற்றப் பட்டது அதில் குடியுரிமைக்கு மூன்று தகுதிகள் கூறப்பட்டிருந்தன.

1.   1950 ஜனவரி 26 ம் தேதியில் இந்தியாவை இருப்பிடமாகக் கொண்டவர்கள். பெற்றோர்களில் ஒருவர் இந்தியாராக இருந்து 5 வருடமாக இந்தியாவில் தங்கியிருப்பவர்.

2.    பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் 

3.   பொற்றோரில் ஒருவரி இந்தியராக இருக்கும் நிலையில் குடியுரிமை கோரி மனுச்செய்பவர்

.
இந்த ஆரம்ப கால சட்ட விதிகளில் துளியும் மதக் கலப்பு இருக்கவில்லை.

இம்மசோதா தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அஸதுத்தீன் உவைசி கூறினார்.

இந்திய அரசியல் சாசனம் தொகுக்கப் பட்ட போது அது பகவானின் பெயராலோ அல்லது குதாவின் பெயராலோ ஆரம்பிக்கப் படக் கூடாது என்னும் அளவுக்கு அன்றைய தலைவர்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்தார்கள்.

இப்போது பாஜ அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் என்ன சொல்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோரில், 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.

ஒருவகையில் பார்த்தால் இந்தச் சட்ட திருத்தம் மிக வேடிக்கையானதாக தோன்றும்

ஏனெனில்

பாஜக அரசு அக்கம் பக்கத்திலுள்ள நேபாளம் பூட்டான் மியான்மர் ஆகிய மூன்று நாடுகளை விட்டு விட்டு மற்ற மூன்று நாடுகளை மட்டும் குறிப்பிடுவதற்கு - முஸ்லிம் வெறுப்பு அல்லது இஸ்லாத்தின் மீது அவதூறு கூறுதல் என்பதை தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.

பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் கூட பிரிட்டிஷ் காலத்தில் ஒன்று பட்ட இந்தியாவில் இருந்தவை என்று கூறலாம். ஆப்கானிஸ்தான் ஒரு போதும் பிரிட்டிஷின் ஒன்று பட்ட இந்தியாவில் இருக்கவில்லை.

பக்கத்திலுள்ள இந்த நாடுகளில் சிறுபான்மையினர் மதரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பாஜக அரசு சொல்வது உண்மையாக இருக்குமானால் (இன்றைய தி ஹிந்து தமிழ் ) கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போல ) இந்தியாவின் அண்டை நாடும், சமயச்சார்பான அரசுமான பூடானின் அதிகாரபூர்வ மதமாக வஜ்ராயன பௌத்தம் ஏன் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டது? பூடானைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் வீட்டுக்குள் தனிப்பட்ட அளவிலேயே பிரார்த்தனை செய்ய முடியும். எல்லைப் பிராந்தியங்களில் உள்ள பல பூட்டானிய கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் வழிபடுவதற்காக இந்தியாவுக்குப் பயணிக்கும் நிலை உள்ளது. ஆனால், குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவில் அவர்கள் பலனாளிகளாக இல்லை. 

மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது இனப்படுகொலை ஏவப்பட்டு, நிறைய பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த நிலையில் அவர்கள் ஏன் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை

அவர்களை அரசியல் அகதிகள் என்கிறார் உள்துறை அமைச்சர். பொளத்த மதவாத துன்புறுத்தல் என்று உலகிற்கே தெரிந்த ஒரு உண்மையை பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்கிறார்.

உண்மையில் உலகின் மிக மோசமான அகதிகள் என்று ஐநா சபை பட்டியலிட்டிருக்கிற ரோகிங்கியா அகதிகளே  இன்றைய நிலையின் உலகின் அதி தீவிர கருணைக்கு உரியவர்கள்,

அவர்களை புறக்கணிக்கிற ஒரு சட்ட மசோதாவை இந்தியப் பிரதமர் மோடி கருணையின் அடையாளம் என்கிறார்,

அதே போல பொளத்த மதவாத தாக்குதலுக்கு ஆளாகி இலட்சக்கணக்கான தழிழ் அகதிகள் இந்தியாவில் குடியேறியுள்ளனர். அவர்களையும் அரசியல் அகதிகள் என  கூறி இந்த சட்ட மசோதா ஏற்க மறுக்கிறது.

உண்மையில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் அடைக்கலாமாகியுள்ளோர் என்று எடுத்துக் கொள்ளப் படுமானால் ரோகிங்கியா அகதிகளும். இலங்கை தமிழ் அகதிகளுமே இதில் இந்தியக் குடியுரிமை பெற முதல் தகுதி படைத்தவர்கள். இவர்களுக்கு இந்திய மரபுத் தொடர்பும் உள்ளது

இன்னொரு எதார்த்தம் என்ன வென்றால், மக்களுக்கு நன்மையாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் குடியுரிமைச் சட்ட திருத்தத்தில்
இவர்கள் உள்ளடக்க்ப் பட்டிருந்தால் இன்று நாடுமுழுவதும் பெரும் மகிழ்சி அலை உருவாகியிருக்கும்.

காரணம் அரசு கொண்டு வந்துள்ள மசோதாவினால் நன்மை அடைந்த இலட்சக்கணக்கான மக்கள் இதை கொண்டாடியிருப்பார்கள்.

தமிழகத்தின் மக்கிழ்ச்சிக்கும் அளவே இருந்திருக்காது. அகதி முகாம்களில் வாழ்கிற மக்களின் வாழ்விம் பெரும் சந்தோசம் பார்ந்திருக்கும்.

தற்போதுள்ள பெரிய கேள்வி என்ன வென்றால் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள மசோதாவினால் நன்மை அடையப் போவது எத்தனை போர் ?

ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான். பங்களாதேஷிலிருந்து மதரீதியாக துன்புறுத்தப் பட்டு 2014 டிஸம்பர் 31 ம் தேதிக்குள்ளாக இந்தியாவிற்குள் குடிபெயர்ந்தோர் எத்தனை பேர் என்ற கேள்விக்கு அரசு இதுவரை பதில் சொல்ல வில்லை.

அப்படியானால் இந்தச் சட்ட்த்தால் யார் நன்மைய அடைகிறார்கள் ?

அசாம் மாநிலத்தில் கொண்டு வரப்பட்ட குடிமக்கள் பதிவேற்ற சட்ட்த்தால் சுமார் 19 இலட்சம் மக்கள் இந்தியர்கள் அல்ல என்று அறிவிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்கிறவர்கள். சரியான சான்று அளிக்க முடியாதவர்கள்.

இந்தப் 19 இலட்சம் பேர்களில் சுமார் 5 இலட்சம் பேர் பங்களாதேஷி இந்துக்கள். மற்ற 14 இலட்சம் பேர் பங்காளி முஸ்லிம்கள்.

அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்ட்த்தின் மூலம் பங்காளி இந்துக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவார்கள். பங்காளி முஸ்லிம்கள் நிலமற்றவர்களாகி விடுவார்கள்.

தேவையே இன்றி பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாவின் மூலம் உடனடியாக ஏற்படக் கூடிய ஒரே நிகழ்வு இந்த 5 இலட்சம் பங்காளி இந்துக்களை இந்தியர்களாக்குவதுதான்.

இந்த அப்பட்டமான மதப் பாகுபாட்டை இது இந்திய அரசியல் சாசனத்தின் பன்பிற்கு எதிரானது என்று எவ்வளவுதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதறிக் கதறி பேசிய போதும் இந்திய உள்துறை அமைச்சர் மிக தந்திரமான வார்த்தைகளில் இந்தியாவின் சட்ட பூர்வ முஸ்லிம்களை இந்தச் சட்டம் 01 சதவீதம் கூட பாதிக்காது என்கிறார்.

ஆனால் தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் மிக சரியாக இந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

முன்னாள் உள்துறை அமைச்சர் ப சிதம்பரம், அரசியல் சாசனத்தின் அடிப்படை பன்பை பாதுகாப்பது தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை. இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிந்தும் இந்துத்துவாவை அமுல் படுத்தும் நோக்கில் இந்தச் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஒரு துக்க நாள் என்றார்.

பாஜாக அரசு நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்குகிறது என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் , இந்த மசோதாவின் மூலம் நாட்டை மதரீதியாக பாஜக பிளவு படுத்துகிறது. பாஜகவினர் ஒரு சமூகத்தின் பேரைக் குறிப்பிடாமல் அவர்களை குறிவைக்கின்றனர். 18 லிருந்து 20 கோடி மக்களின் நம்பிக்கையை நாம் இழக்க நேரிடும். இந்தியாவின் பாரம்பரியம் பற்றி தெரியாத உங்களால் இந்தியாவை பாதுகாக்க முடியாது. தயவை செய்து இந்தியக் குடியரசை இரு ஜுராஸீக்களின் குடியரசாக மாற்றி விடாதீர்கள் ( don’t covert this Indian republic into a juracik republic என்று கபில் சிபல் அவர்கள் உணர்ச்சி பொங்க கூறினார்.

இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட பலரும் இந்தச் சட்ட திருத்த்த்தின் அநீதியான அம்சம் குறித்து மிகுந்த கவலை கொண்டு பேசிய போதும் பாஜக அரசு தனது மிருக பலத்தால் இம்மசோதாவை வெற்றி பெறச் செய்துள்ளது. இதற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்கவும் கூடும். நீதிமன்றங்கள் கூட இன்றுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கிற்கு பணிந்து போக்க கூடும்.

இந்திய மக்களாகிய நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால்
தி ஹிந்து தமிழ் நாளிதழ் தெளிவாக நாம் சுட்டிக்காட்டுகிறது.

அரசமைப்புரீதியான எந்தத் தர்க்கத்துக்குள்ளும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா வரவில்லை. ஆனால், குதர்க்கமான அரசியல் தர்க்கம் அதில் இருக்கவே செய்கிறது. சட்டத்தின்படி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்குவதற்கான முதல் முயற்சி இது . இது அரசமைப்புக்கு ஒவ்வாத சட்டம் என்று நீதித் துறை வலியுறுத்திக் கூற வேண்டும். அப்படிச் செய்யாமல்போனால், இது முடிவாக அல்ல; இதுபோன்ற சட்டரீதியான நகர்வுகளுக்கு இது தொடக்கமாகவே அமையும். காலப்போக்கில் நாம் அறிந்த அரசமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.

எனவே இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், இந்த நாட்டின் பன்முகத் தன்மையை நேசிக்கிறவர்கள், இந்த நாட்டின் மதச்சார்பின்மையை நம்புகிறவர்கள், குறிப்பாக சிறுபான்மையினத்தை சார்ந்தவர்கள் இந்தச் சட்ட திருத்த்திற்கு எதிரான தங்களது கண்டனத்தை பதிவு செய்தாக வேண்டும்.

தமிழ நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை இம்மசோதாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதே போல பல பல அரசியல் கட்சிகளும் ஜனநாயக அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்திருகின்றன,

நமது ஊரில் அத்தகைய கண்டனக் கூட்டம் நடை பெறும் போது மக்கள் திரளாக பங்கேக வேண்டும்.

பாஜக அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்.

ஆட்சியிலிருப்பவர்களுக்கு இஸ்லாத்தின் சார்பில் ஒன்று சொல்லிக் கொள்வோம்.

அதிகாரத்தை மக்களின் நன்மைக்கு பயன்படுத்தினால் வரலாற்றில் வாழ்வீர்கள்.

இது காந்தியின் தேசம்.

யாருக்கெல்லாம் சொந்த மாக ஒரு நாடு இல்லையே அவர்கள் எல்லோரும் இங்கு வரலாம். இந்தியா அவர்களுக்கு தாய் வீடு என்றார் காந்தியடிகள்.

காந்தி இறந்து பல்லாண்டுகளாகி விட்ட போதும் இந்தியாவின் அடையாளமாக இருக்கிறார்.

அவரது தேசத்தை ஆளும் வாய்ப்பை பெற்ற நீங்கள் ஹிட்லர்களாகிவிடாதீர்கள்.

வரலாறு நல்லவர்களுக்கானது.  நல்லோர்கள் காலம் கடந்து வாழ்வார்கள்.

சிலுவைப்படையினர் பைத்துல் முகத்தஸை கைப்பற்றிய போது அங்கிருந்த முஸ்லிம்களை ஈவு இரக்க மின்றி கொன்று குவித்தனர். அங்கிருந்த குப்பத்துஸ் ஸஹ்ரா என்ற பாறையின் முன்பகுதியில் முழங்கால் அளவு இரத்தம் தேங்கியிருந்த்தாக வரலாறு கூறிகிறது.

அதே பைத்துல் முகத்தஸை சுல்தான் சலாஹுத்தின் மீட்ட போது அங்கிருந்தவர்கள் தமது உடமைகளுடன் வெளியேற அனுமதித்தார். அதற்கு 10 திர்ஹம் அவர்கள் செலுத்தினால் போதுமானது என்றார், அப்படி 10 திர்ஹம் செலுத்த முடியாதவர்களுக்கு தனது சொந்த பணத்திலிருந்து செலுத்தினார். தனது சகோதர்ர்களுக்கும் அவ்வாறு செய்ய உத்தரவிட்டார், அங்கிருந்து வெளியே கிருத்துவர்களுக்கு அடைக்கலம் தர அக்கம் பக்கத்திலிருந்த கிருத்துவ அரசுகள் முன் வரவில்லை. அப்போது சலாஹீத்தீன் அய்யூபி தனது நிலப்பரப்பிலிருந்தே ஒரு பகுதியை ஒதுக்கி அங்கே அவர்கள் தங்கிக் கொள்ள அனுமதித்தார்.

இதுதான் வரலாற்றில் வாழ்வதற்கான வழி.

தற்போது பாஜக அரசு முன்னெடுத்துச் செல்கிற திட்டங்கள் இந்திய தேசத்தை மட்டும் அல்ல பாஜகவையும் பெரும் சீரழிவுக்கும் இழிவுக்கும் தள்ளிவிடும் என்று எச்சரிக்கிறோம்.

இந்திய தேசத்தை டைனோஸர்களின் குடியரசாக இல்லாமல் சுல்தான் சலாஹுத்தீன்களின் குடியரசாக அல்லாஹ் ஆக்குவானக!












3 comments:

  1. as received @ WhatsApp msg in a group

    ஜும்ஆ மேடையில்..
    இந்த அநீதிகளை இப்பகூட பேசவில்லை என்றால், பிறகு எப்பதான் பேசுவது..?

    தேசத்தை சீரழிக்க, தேசிய குடியுரிமை மசோதா என ஒன்றை கொண்டுவந்து விட்டனர்..

    அனைவருக்கும் சமமான சட்டத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் விரோதமாக செயல்படுத்தி, முஸ்லிம்களை இந்நாட்டை விட்டே வெளியேற்ற துடிக்கின்றனர்.

    ஒருசில ஆலிம்களை தவிர பெரும்பாலான பள்ளிகளில் இதுகுறித்து வாய்திறக்க கூட இல்லை.

    அங்கு நம் சகோதரர்கள் வாழ இடம் இல்லாமல் தவிக்கின்றனர், இங்கு வலிமார்கள் சிறப்பு என பயான் செய்து கொண்டுள்ளனர்.

    ஜும்ஆ மேடை என்பதே நமது வாழ்க்கைக்கான வழியை காட்டுவது தானே? இவ்வளவு பெரிய பிரச்சினை வந்துள்ளது, இந்த அநீதிகளை இப்பகூட பேசவில்லை என்றால், பிறகு எப்பதான் பேசுவது..?

    சில பள்ளி நிர்வாகிகள் அரசியல் பேசக்கூடாது என தடைபோடுகின்றனர்.
    இந்த மார்க்கம் ஃபாத்திஹா ஓத மட்டுமல்ல, உலகை ஆளவும் சொல்லிக் கொடுத்த மார்க்கம்! என்பதை முதலில் அவர்களுக்கு தான் சொல்லி புரியவைக்க வேண்டும்.

    தன் இனத்தவர் மட்டுமே தம் மண்ணில் இருக்க வேண்டும், வங்காள இனத்தை சேர்ந்த யாரும் எங்கள் மண்ணில் இருக்கக்கூடாது! என அஸ்ஸாம் மக்கள் இந்த மசோதாவை எதிர்த்து உயிரை கொடுத்து போராடுகின்றனர்.

    இனத்திற்காக போராடுபவனுக்கு இருக்கும் அக்கறை கூட, அல்லாஹ்வை ஏற்ற இறை நம்பிக்கையாளர்களின் விஷயத்தில் நமக்கு இல்லாமல் ஆகிவிட்டது என்பதே வேதனை.

    YouTube மதன்கௌரி பேசுவதை கூட, மார்க்கம் அறிந்த ஆலிம்கள் பேச மறுக்கின்றனரே, எனும்போது தான் வருத்தம் வதைக்கிறது.

    இந்திய சுதந்திர போராட்டம் உட்பட இந்த சமூகத்திற்கான அனைத்து காரியங்களையும் முன்நின்று நடத்தி வெற்றி கண்டவர்கள் உலமா பெருமக்கள்.

    அந்த வரலாறு திரும்ப வேண்டும்..!

    உலமாக்கள் களம் இறங்கினால் மட்டுமே உலகம் சீர்படும்..!

    பாரூக் சைதாப்பேட்டை

    ReplyDelete
  2. Anonymous3:15 AM

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

    ReplyDelete