வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 19, 2019

அக்கிரமக்காரர்களை தடுக்காவிட்டால் …



والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر


மானுட நாகரீகம் காப்பற்றப்படுவதற்கு முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்பித்த முக முக்கியமானதொரு அறிவுரை
عن أبي سعيدٍ الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ((من رأى منكم منكرًا، فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان))؛ رواه مسلم.

கண்ணுக்கு முன்னால் நடை பெறுகிற எந்த அக்கிரமத்தையும் எனக்கென்ன என்று அலட்சியமாக இதுக்கி விட்டு செல்கிறவனுக்கு ஈமானே இல்லை என்கிறது இந்நபி மொழி.
இது இஸ்லாத்தின் மிக பிரதான் கோட்பாடு என்கிறார் இமாம் நவ்வி (ரஹ்)
قال النووي رحمه الله: هو مِن أعظم قواعد الإسلام
ஒரு சமூகத்தை நாகரீகத்தின் வழி செலுத்துவதில் இந்தப் பண்பு மிக முக்கியமானது.
சத்தியமும் அசத்தியமும் நிலைப்பது மட்டுமல்ல்ல வாழ்வும் தாழ்வுமே கூட இதில் அடங்கியிருக்கிறது.
கப்பலின் கீழ் தளத்தில் ஓட்டை இடப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தால்
عن النعمان بن بشير رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم، قال: «مَثَلُ الْقَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالْوَاقِعِ فِيهَا؛ كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ, فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلَاهَا, وَبَعْضُهُمْ أَسْفَلَهَا, فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِن الْمَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ, فَقَالُوا: لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا, فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا, وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا» (رواه البخاري)

துஆ ஏற்கப்படுவது இதில் அடங்கியுள்ளது,
عائشة رضي الله عنها فقد قال" مرو بالمعروف وانهوا عن المنكر قبل أن تدعوا فلا يستجاب لكم" حديث حسن
அது மட்டுமல்ல அல்லாஹ்வின் கோபப் பார்வையும் இதில் சம்பந்தப் படுகிறது.
عن أبي بكر الصديق أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه أوشك أن يعمهم الله بعقاب منه .رواه الترمذي
எனவே இதில் விசயத்தில் எதை கண்டும் அஞ்சக் கூடாது,

قال صلى الله عليه وسلم: "لا يمنعن رجلاً هيبة الناس أن يقول بحق اذا علمه" صحيح.

அத்தகையோர் உயிர் வாழும் பிணங்கள்

سئل حذيفة رضي الله عنه عن ميت الأحياء قال : "من لا ينكر المنكر بيده ولا بلسانه ولا بقلبه "

முன்னோர்களின் துணிச்சல்
பெருநாள் தொழுகையில் முதலில் தொழுகை பிறகு குத்பா என்பதுதான் நடை முறை மர்வான் பின் ஹகம் உமய்யா சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக இருந்த போது முதலி குத்பா நிகழ்த்த மின்பர் படி ஏறினார் அவரை அபூஸஈத் அல் குத்ரீ ரலி கையை பிடித்து இழுத்தார்கள் அதற்குள் மற்றொரு மனிதர் எழுந்து அதே போல தடுத்தார்.
عن طارق بن شهاب قال: أول من بدأ بالخطبة يوم العيد قبل الصلاة مروان - ابن الحكم - فقام إليه رجل فقال: الصلاة قبل الخطبة، فقال: قد تُرك ما هناك، فقال أبو سعيد: أما هذا فقد قضى ما عليه، سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ((من رأى منكم منكرًا فليغيره))..

சமயமானாலும் சமூகமானாலும் அரசியலானாலும் அக்கிரம் நடை பெறூகிற போது அதை கண்டிக்க தவறினால் மனித சமூகம் மதிப்பிழந்து விடும்.  
நம்முடைய நாட்டில் மிகப்பெரிய அக்கிரம்ம் ஒன்று அரங்கேறியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமுல்படுத்தப் பட்டுள்ளது.
இந்தச் சட்டம் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழி செய்கிறது.
இது அப்பட்டமாக இந்திய அரசியல் சாசணத்தின் பண்பாட்டிற்கு எதிரான சட்டமாகும்.
மத்தியை ஆட்சி செய்கிற பாஜக தன்னுடைய அருதிப் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி இந்தச் சட்டத்தை அமுல் படுத்தியுள்ளாது.
இந்தச் சட்டம் இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு எந்த வகையிலும் தீங்கானது அல்ல என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார்.
இப்போது அவருக்கு ஒத்து ஊதுவது போல உச்ச நீதிமன்றமும் இது விசயத்தை மக்களுக்கு  விளக்க ஒலி ஒளி வடிவ பிரச்சாரம் செய்யுமாறு கூறுகிறது.
இந்தச் சட்டத்தின் உடனடி விளைவு எதில் தெரியும் என்றால்
அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பதிவுச் சட்டத்தின் மூலம் சுமார்  19 இலட்சம் பேர் நாடற்றவர்களாக தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளார்கள். இவர்களில் இராணுவ வீர்ர்கள் மாநில அமைச்சர்கள் உடப்ட பலரும் உண்டு. இதில் சுமார் 14 இலட்சம் பேர் முஸ்லிம்கள். 5 இலட்சம் பேர் பங்காளி இந்துக்க்கள். இந்தச் சட்ட்த்தின் உடனடி விளைவாக அந்த பாங்கி இந்துக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவார்கள். முஸ்லிம்கள் நாடற்றவர்கள் என்ற அதே நிலையில் தொடருவார்கள்.
இது எத்தகைய அக்கிரமம்.
இந்துக்களுக்கு ஒரு நீதி ; முஸ்லிம்களுக்கு ஒரு நீதியா ?
தார்மீக நியதிக்கு எதிராக செயல்பட எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது.
இந்த அக்கிரமத்தை கண்டித்து நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியோடு போராடுகிறார்கள்,
குறுகிய கால இடைவெளியில் நாடு முழுவதும் மக்கள் திரள்கிறார்கள் எனில் இது சட்ட்த்திற்கு எதிரான் பொதுமக்களின் எழுச்சி என்று மத்திய அரசு புரிந்து கொள்ள மறுக்கிறது.
முஸ்லிம்கள் தவறுதலாக தூண்டி விடப் படுகிறார்கள் என்று அப்பட்டமாக நா கூசாமல் பொய் சொல்கிறது மத்திய அரசு.
அதுமட்டுமல்ல . அமித்ஷா முஸ்லிம்கள் பயப்பட்த் தேவை இல்லை என்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் கூட இந்திய முஸ்லிம்களுக்குத் தான் எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு வாக்குறுதி அளித்து விட்டதே பிறகு எதற்கு போராட்டங்கள் என்று கேட்கிறார்கள் ?
ஒரு எதார்த்தம் என்ன வென்றால் மூன்று முஸ்லிம் நாடுகளை மட்டும் குறிப்பிட்டு அங்குள்ள முஸ்லிம் அல்லாத சில மதத்தவர்களை மட்டும் குறிப்பிட்டு அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்ற சட்டமானது அப்பட்டமக இந்தியா வை இந்துநாடு என்ற மாற்றத்தை நோக்கி நகர்த்துவதாகும்.
இந்துக்களோடு சேர்த்து பார்சி புத்தர் சீக்கியர் கிருத்துவர் என வேறு சில மத்த்தவர்களை இணைத்திருப்பது ஒரு கண்துடைப்பு வேலையாகும்.  
மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள், அல்லது பாஜக அரசுக்கு ஆதரவாக பேசுகிறவர்கள் பசுந்தோள் போர்த்திய புலிகளாகவே நடந்து கொள்கிறார்கள்.  அவர்களது பேச்சு வெள்ளாட்டு தோள் போர்த்திய ஓநாய்களின் பேச்சாகும்.
நம்மை ஆளுகிற அரசுக்கு மத வெறி பிடித்துள்ளது – இது என்ன வெல்லாம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை அறிந்த காரணத்தால் தான் நாடு முழுவதும் மக்கள் போராடுகிறார்கள்.
இன்றைய தி ஹி ந்து நாளிதழில் முன்னாள் உள்துறை அமைச்சர் ப,சிதம்பரம் அவர்களின் விரிவான பேட்டி வெளியாகி யுள்ளது அதில் அவர் கூறுகிறார்.
Citizenship (Amendment) Bill is a clear signal, a blunt signal to Muslims
listen you are not equal. You are in India but you are not equal’. This is the Golwalkar-Savarkar theory: you can live in India, you can eke out a livelihood in India, but you will not be entitled to the rights and privileges of an Indian citizen. NRC and CAB are Siamese twins. If NRC comes first, all the alleged illegal immigrants will be taken out and the CAB will bring back the six communities, leaving the Muslims high and dry. If the CAB is implemented first, CAB will include the six communities and NRC cannot exclude them thereafter. Therefore, clearly the object of CAB and NRC is to exclude only the Muslims.
நீங்கள் இந்தியாவில் வாழலாம் ஆனால் இந்தியர்களுக்கான உரிமை எதையும் பெற முடியாது என்ற கோல்வார்கள் சவார்கரின் கொள்கையை இந்தச் சட்டம் முஸ்லிம்களைப் பார்த்து வெளிப்படையாக கூறுகிறது. சி ஏ ஏ வந்த பிறகு என் ஆர் சி வரும் எனில் இந்த நாட்டில் போதிய ஆவணம் வைத்திராத இந்துக்கள் குடிமக்களாக தொடர்ந்து இருப்பார்கள். முஸ்லிம்கள் நாடற்றவர்களாக இருப்பார்கள்,
முஸ்லிம் சமூகத்தை குறிப்பிட்டு குறி வைக்கும் இந்தச் சட்டம் ஒரு அக்கிரமச் சட்டம் – அரசியல் சாசணத்திற்கு எதிரான சட்டம் என்கிற காரணத்தால் நாடு முழுவதிலும் மக்கள் போராடினால் அந்தப் போராட்டத்தை கூட மத ரீதியாக அடக்குவதற்கு பாஜக அரசு முயற்சி செய்கிறது.
எல்லா மாணவர்களும் தான் போராடுகிறார்கள். பனாரஸ் இந்து பல்கலை கழக மாணவர்கள் போராடுகிறார்கள். வெளிநாட்டு பல்கலை கழகங்களிலிரிந்து இந்தியாவின் அனைத்து மாநில கல்லூரிகள் பல்கலை கழக மாணவர்கள் தெருவில் இறங்கி வந்து இந்தச் சட்டம் நீதிக்கு எதிரானது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது . இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்தக் கூடியது என்று போராடுகிறார்கள்.  
அதே போல தில்லியில் ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்க்களும் போராடினார்கள் . ஆனால் அந்தப் போராட்ட்த்தை மிக மோசமான போலீஸ் அடக்குமுறையை பயண்படுத்தி அடக்க முயற்சி செய்தது..
ஒரு மாணவன் சலாம் என்று கோஷம் போடுகிறான். காவல் துறையினர் இஸ் முல்லே கட்டேக்கூ பஹ்லே பக்டோயாசலாம் சலாம் கர்ரஹேஹே என்று கூறீய படி அவரை அடிக்கிறார்கள்.
ஜாமியாவின் பள்ளிவாசலுக்குள் நுழைந்த காவல்துறைமுல்லே கட்டேக்கு பாஹர் நிகாலோ என்று சப்தமிடுகிறார்கள். பிறகு இமாமை வெளியேற்றி அவரை அடிக்கிறார்கள்.
ஹோலி பேமிலி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி யிருந்த முஸ்தபா என்ற மாணவனை அங்கிருந்து வெளியேற்றிகாவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்
சார் எனக்கு மருத்துவம் செய்ய அனுமதியுங்கள் என்று அவர் கெஞ்சுகிறார்
ஒரு காவலர் சொல்கிறார். லெட் தெம் டைதீன் ஜார் மரே தோஹி அகல் யேகீ
விடுங்கள் அவர்கள் சாகட்டும். மூனு நாலு பேர் செத்தா தான் இவர்களுக்கு புத்தி வரும்.
தில்லி காவல் துறை வெளிப்படுத்திய இந்தப் பேச்சு தான் மத்திய அரசின் பொதுவான மனோ நிலையாகும்.
நாம் நினைப்பதை செய்யலாம், போராடுவார்கள் சிலரை துப்பாக்கிச் சூட்டில் கொன்று விட்டால் கப்சிப் என்று அடங்கிவிடுவார்கள்
என்ற மனோ நிலையில் தான் மத்திய் அரசு இப்போது மதம் பிடித்து ஆடுகிறது.
இந்த நெருக்கடியான சூழலை மிக எச்சரிக்கையாக அதே நேரம் மிகத் துணிச்சலாக அணுக வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும்.
நம்பிக்கை இழந்து விடக் கூடாது.
(وَلَا تَيْئَسُوا مِنْ رَوْحِ اللهِ إِنَّهُ لَا يَيْئَسُ مِنْ رَوْحِ اللهِ إِلَّا القَوْمُ الكَافِرُونَ){يوسف:87} .
முஸ்லிம் சமுதாயம் தனது வரலாற்றின் வழியில் இவர்களை போல பல அபூஜஹ்ல்களை சந்தித்து வந்துள்ளது. அத்தகையோரை வரலாற்றின் நாற்றமடிக்கிற படுகுழிக்குள் புதைத்துள்ளது.
எனவே அச்சம் தேவையில்லை

ஆனால்அக்கிரமக் கார்ர்களுக்கு எதிரான உறுதியாக எதிர்ப்பை பதிவு செய்யனும்.

பிர் அவனின் சபையில் நீதிக்கு குரல் கொடுத்தார் ஒருவர்
மந்திரவாதிகளின் தோல்விக்கு பிறகு இரகசிய கூட்டம் நடத்தி தன்னுடைய தோல்வியை மறைக்க முயற்சி செய்த பிர் அவ்ன் அந்த மக்கள் மத்தியில் என்னை தவிர உங்களுக்கு வேறு கடவுள்ள இல்லை என்றே நான் கருதுகிறேன். இதோ மூஸாவை நான் கொன்று விடப் போகிறேன் என்றான் . அப்போது அந்த இரகசிய சபையில் இருந்த ஒருவர் பேசினார்

وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ مِّنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُم بِالْبَيِّنَاتِ

எனவே மத்திய அரசு எவ்வளவு தான் அரக்க குணத்தோடு இருந்தாலும் மக்கள் அஞ்சி நடுங்கி சும்மா இருந்து விடக்கூடாது. பிறகு மூச்சு விடுவதற்கு கூட பயப்பட வேண்டிய சூழல் உருவாகி விடும்.
எனவே அரசாங்கத்தின் அக்கிரமச் சட்ட்த்திற்கு எதிரான கடும் கண்டனத்தை நாம் பதிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் ஜமாத் அமைப்புக்களும் ஏற்பாடு செய்திருக்கிற கண்டன பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் நாம் திரளாக கலந்து கொள்வோம்.
ஒரு அக்கிரமக்கார அரசை அதனுடைய மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை அதன் கையை பிடித்து தடுக்கும் முயற்சியாக இதை கருதனும்.
அதே நேரத்தில் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் எந்த முயற்சியிலும் இறங்க கூடாது. எத்தகை வன் செயல்களுக்கும் இடமளித்து விடக் கூடாது.
அரசே பல இடங்களில் வன் செயல்களை செய்து அதை ஆர்ப்பாட்டக் கார்ர்கள் மீது பழி போட்டு போராட்ட்த்தினை திசை திருப்ப முயலக் கூடும். எனவே மிக எச்சரிக்கையாக இந்த போராட்டங்களை ஆர்ர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்தப் ஆர்ப்பாட்டங்களில் முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அடுத்த்த்தாக அரசுக்கு புரிய வைக்க வேண்டிய ஒரு செய்தி இருக்கிறது
என்னவென்றால்
மத்திய அரசின் போக்கு மாறாவிட்டால்
இந்தப் போராட்டம் இனி வரும் காலங்களில் தொடரலாம். இன்னொரு சுதந்திர போராட்டமாக கூட அது அமையலாம். நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.  
அக்கிரமத்தை தடுக்கும் வரை நீதிக்கான போராட்டங்கள் தொடர வேண்டும்.
அப்போதுதான் மனித நாகரீகம் செழிக்கும்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!






No comments:

Post a Comment