வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, December 26, 2019

மக்கள் குரலுக்கு செவி சாய்க்காவிட்டால்



أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا" (الحج: من الآية46).

"فَبَشِّرْ عِبَادِ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ" (الزمر: 17، 18).

أُولَٰئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ ۖ وَأُولَٰئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ (18)

முற்காலத்தில் மன்னர்கள் தமது அரண்மணைகளுக்கு முன் பெரிய மணிகளை கட்டி வைத்திருந்தனர். சிலர் முரசுகள் வைத்திருந்தினர் .
பாதிக்கப் பட்டவர்கள் அரசரிடம் உடனடியாக புகார் தெரிவிக்கவும் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர்.
இந்தியாவை ஆண்ட மாமன்னர் இல்துமிஷ் தனது ஆட்சிப்பகுதிக்குள் எந்த ஒருவருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதற்கென சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

மக்கள் அரசரை சந்திக்க தாமதமாகக்கூடும் என்று கருதிய அவர் அநீதிக்குள்ளானவர்கள் முறையிட ஒரு புதுவகையான ஏற்பாட்டை செய்தார், அக்காலத்து  மக்கள் வெண்மையான ஆடைகளை அணிவதே வழக்கமாக இருந்தது. அதனால் அநீதிக்குள்ளானவர்கள் ஜாமியா பள்ளிவாசலுக்குமுன் தொழுகைக்குப் பின் வண்ணமயமான ஒரு ஆடை அணிந்து வந்தால் போதுமானது அவர் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்து   அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று அறிவிப்புச் செய்தார்.

தனது வீட்டுக்கு வெளியே வெண்பளிங்குக் கற்களால் இரண்டு சிங்கங்களை செய்து அவற்றின் கழுத்தில் நீண்ட சங்கிலியில் மணியை கட்டிவைத்து அநீதியிழைக்கப்பட்டோர் மணியோசையை எழுப்பி தனது உறக்கத்தை கலைக்கலாம் என்றும் அறிவிப்புச் செய்தார். துன்பப் பட்டோர் இரவில் வருவார்கள். சங்கிலியை இழுப்பார்கள். மணி அடிக்கும். மண்ணர் வெளியே வந்து நல்ல தீர்ப்பு வழங்குவார்.

அம்மாமன்னர் 25 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் இருந்தார்.

மக்கள் குரலுக்கு செவிசாய்ப்பதே ஆட்சியாளர்களின் நேர்மைக்கும் புனித்த்திற்கும் அடையாளம்.

உமர் ரலி அவர்கள் மஹர் விசயத்தில் ஒரு அளவு நிர்ணயிக்க முயற்சி செய்த போது ஒரு கிழவி அதை மறுத்து கருத்து கூறினார் . மஹர் விசயத்தில் உமர் ரலி அவர்களின் கருத்த் ஒரு நீதியின் அடிப்படையில் தான் இருந்த்து. பெண்கள் மஹரை பெருமளவில் அதிகரிப்பதால் அது ஆண்களுக்கு சிரமாகியது என்பது மட்டுமல்ல பெருமானார் (ஸல்) அவர்கள் தனது மனவியருக்கு கொடுத்த மஹரை விட அதிகமாகி சென்று விட்டது. ஆனால் தனது கருத்துக்கு எதிராக இருந்த போதும் கூட வேத வசனங்களை சுட்டிக் காட்டி ஒரு பெண்மணி கருத்துச் சொன்ன போது அதை உமர் ரலி நன்றியோடு வரவேற்றார்.

اعترضت  إمرأةعمر رضي الله عنه حينما خطب ينادي بعدم المغالاة في المهور، قال له: يا عمر يعطينا الله وتحرمنا، أليس الله سبحانه يقول: ﴿ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا [النساء: 20]، فقال عمر: أصابت امرأة وأخطأ عمر

உமர் ரலி அவர்களின் ஆட்சி வரலாற்றை தாண்டி நிலைத்து நிற்கிறது,

நாடு சுந்தந்திரம் பெற்ற போது இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் உமரைப் போல இருக்க வேண்டும் என்று காந்தியடிய்கள் கனவு கண்டார்.

மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பவர்களுக்கு அல்லாஹ் மேலும் ஹிதாயத்தை வழங்குவான் என்கிறது திருமறை . அவர்களே அறிவாளிகள் என்றும் கூறுகிறது,

أُولَٰئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ ۖ وَأُولَٰئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ (18)

குடிமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காதவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அடையாளம் தெரியாமல் அழிந்து போவார்கள்.

பிரான்ஸ் நாட்டில் 16 ம் லூயி மன்னர் படோபடமாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அந்த மன்னரட்சிக்கு எதிராக மூச்சு விடுவதற்கு கூட மக்களுக்கு அனுமதி இருக்க வில்லை. மன்னர் பாரிஸ் நகருக்கு வெளியே 16 கிலோ மீட்டர் தொலைவில் வெர்சேல் என்ற இடத்தில் தனியாக ஒரு பிரம்மாணட மாளிகையை எழுப்பி உல்லாசமாக வாழ்ந்து வந்தான். மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். அரசனுக்க்கு தங்களூடைய நிலையை புரிய வைப்பதற்காக பாரிஸ் நகரத்தில் இருந்து வெர்சேல் அரண்மனையை நோக்கி ரொட்டிவேண்டும் ரொட்டி வேண்டும் என்று கோஷம்ட்டவாறு ஊர்வலமாக சென்றனர். பிரட் மார்ச் என்று இதை வரலாறு குறிப்பிடுகிறது. ஊர்வலம் அரண்மனையை நெருங்கியதும் மக்களது கூக்குரல் அரண்மனைக்குள் கேட்டது.

வரலாறு கூறுகிறது.
மக்களின் கூக்குரலை கேட்டு கோபப் பார்வையோடு பால்கனிக்கு வந்து நின்றாள் 16 ம் லூயியின் மனைவி மேரி அண்டாய்னெண்ட் . என்ன வேண்டும் என்று மக்களைப் பார்த்து கேட்டாள். ரொட்டி வேண்டும் என்று மக்கள் முழங்கினர். ரொட்டியா அது கிடைக்காவிட்டால் கேக் சாப்பிடுங்கள் என்றாள் நிலைமையை புரியாயமல் அந்தப் பெண்.

வெடித்த்து மக்கள் போராட்டம். 16 ம் லூயி ஆட்சியை இழந்தான்.

இதே போல மக்கள் குரலுக்கு மதிப்பு தராத ஜார் மன்னர்கள் எத்தகைய வலிமையான நிலையில் இருந்த போதும் கம்யூனிஸ்ட்களிடம் ஆட்சியை இழந்தனர்.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் மக்கள் கருத்துக்கு மதிப்பதிக்காதவர்களின் நிலை பற்றிய இத்தகைய வரலாறுகள் நிறையவே இருக்கின்றன.

தற்போது நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் தீய திட்டத்தோடு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்தியாவில் கலவர சூழல் இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என வெளிநாடுகள் தம் குடிமக்களுக்கு அறிவுறுத்துகிற அளவில் நிலமை இருக்கிறது.

முதலில் வட கிழக்கு மாநிலத்தில் மட்டும் தான் எதிர்ப்பு வலுவாக இருந்த்து, நாட்கள் செல்லச் செல்ல  தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் வலுத்து வருகின்றன.

இது வரை சுமார் 24 பேர் இறந்திருப்பதாகவும் பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் எல்லா தரப்பினரும் மாணவர்கள் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் ஆண்கள் பெண்கள் பெரியவர்கள் சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்ட்த்தில் இறங்கி வருகின்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் கூட கடும் கட்டுப்பாடுகளை அச்சுறுத்தல்களை தாண்டி மக்கள் போராடி வருகின்றனர்.’

இந்த சட்ட்த்தை ஏற்கப் போவதில்லை என்று இந்தியாவின் 11 மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த சட்ட திருத்த மசோதாவை ஆரம்ப கட்டத்திலேயே கடுமையாக எதிர்த்து இதை தமது மாநிலத்தில் இச்சட்ட்த்தை அமுல்படுத்தப் போவதில்லை என்றூ அறிவித்தார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அது மட்டுமல்ல தொடர்ந்து பல பெரும் போராட்டங்களை மம்தாவே முன்னின்று நடத்தினார்
தொடர்ந்து தமது தங்களது மாநிலத்திற்குள் இம்மசோதாவை அமுல் படுத்தப் போவதில்லை என அறிவித்த பாராட்டிற்குரிய முதல்வர்கள். 
1.   கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் (டிசம்பர் 12)
2.   தில்லி முதலமைச்சர் அர்விந்த கெஜ்ரிவால் (டிசம்பர் 12)
3.   பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் (டிசம்பர் 17)
4.   ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் (டிசம்பர் 18)
5.   புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி ( டிசம்பர் 20)
6.   பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் (டிசம்பர் 20)
7.   ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் (டிசம்பர் 22)
8.   மத்தியபிரதேச முதலமைச்சர் கமல்நாத் (டிசம்பர் 23)
9.   சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல் (டிசம்பர் 23)
10. மஹாராஷ்டிர முதலைமைச்சர் உத்தவ் தாக்கரே (டிசம்பர் 23
11. ஆந்திர முதலைமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி (டிசம்பர் 23)
இந்த மாநிலங்களில் இருக்கிற மக்கள் தொகையானது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 56 சதவீதமாகும்.

இவ்வளவு தூரம் மக்கள் எதிப்பை பெற்ற நிலையிலும் ஒரு நியாயமான அரசு மக்கள் கருத்டுக்கு கொஞ்சமாக இறங்கி வந்திருக்க வேண்டும்.

ஆனால் மத்திய பாஜக அரசோ தன்னுடைய கருத்தை எதிர்ப்பவர்களை பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று கூறி ஒதுக்கி தள்ளிவிடப் பார்க்கிறது.

இது கேக் சாப்பிடுங்கள் என்று சொல்வதை போன்றது தான் .

இத்தோடு நிறுத்திக் கொள்ளாத அரசு தாங்கள் மிகவும் உறுதியோடு இருப்பது போல காட்டிக் கொள்வதற்காக கடந்த 24.12.2019 ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை  கூட்ட்த்தில் புதிய ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2021 நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும் தயார் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.  2020 ஏப்ரல் மாத்த்திலிருந்து செப்டம்பர் மாத்த்திற்குள்ளாக இது நடை பெறும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது,

இதற்கு முன்னர் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வருகிறவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து யார் வாழ்கிறார்கள் யார் இறந்துள்ளனர். புதிதாக பிறந்த குழந்தைகளைப் பற்றிய தகவலை மட்டும் வாங்கிக் கொண்டு செல்வார்கள். அவர்களே விவரங்களை பூர்த்தி செய்து விட்டு ஒரு கையெழுத்தை மட்டும் வாங்கிக் கொள்வார்கள்.

தேசிய மக்கள் தொகை பதிவை பொறுத்தவரை (என், பி . ஆர்) ஒவ்வொருவரும் தாம் குறிப்பிட்ட முகவரியில் ஆறுமாதம் வசித்த்தற்கான ஆவணத்தை வழங்க வேண்டும்.

இதை வழங்கத் தவறுபவர்கள் மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற மாட்டார்கள்.

மத்திய அரசு தற்போதைய நாட்டு நிலவரத்தை கவனத்தில் கொள்ளாமல் ஒரு குருட்டு சித்தாந்த்த்தை கையில் வைத்துக் கொண்டு நாட்டு மக்களை தொடர்ந்து துன்ப்ப் படுத்தி வருகிறது.

மத்திய பாஜக அரசு கொண்டு வர உத்தேசிக்கிற இந்த திட்டமும் அதனுடையை இந்துராஷ்டிரா கனவின் ஒரு அங்கம் தான் என்பதால் இதை ஏற்க முடியாது என தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் மெளலான பி காஜா முயீனுத்தீன் பாகவி அறிவித்துள்ளார்.

எனவே இந்த திட்ட்த்திற்கு ஒத்துழைக்கப் போவதில்லை என பலரும் அறிவித்துள்ளனர்.

எனினும் இனி வரும் காலங்களில் ஏற்படக்கூடிய சூழல்களை பொறுத்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என ஜனநாயகத்தை அக்கறை கொண்ட தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மக்கள் CAA – NCR – NPR – மத்திய அரசு கொண்டு வருகிற கருப்புச் சட்டங்கள் அனைத்தையும் எதிர்க்க வேண்டும்.

மத்தியில் ஆளும் அரசு தொடர்ந்து மக்கள் கருத்துக்கு செவிசாய்க்க மறுக்குமானால் அரசை பதவியிறக்கம் செய்யும் போராட்டத்திற்கு தயாராக வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்/

நாம் எச்ச்சிக்கையாக இருப்போம். இந்த நாட்டை மத்தின் பெயரால் பிளவு பட ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

அல்லாஹ் பாதுகாப்பானாக!



No comments:

Post a Comment