வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 02, 2020

காயங்களும் கைதுகளும் போராட்டத்தின் படிக்கட்டுகளே!



وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ ۗ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةً وَاحِدَةً ۚ 
ஆட்சியாளர்கள் கொடூரமானவர்களாககிற போது – அல்லது மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்காமல் போகிற போது – மக்கள் தமது எதிர்ப்பை காட்டுவதற்கு கையாளும் வழி போராட்டங்கள்.
போராட்டங்களை ஆதிக்க சக்திகள்  ஆரம்பத்தில் கண்டு கொள்ளாதவாறு இருப்பார்கள், அல்லது மக்களின் மீது வன்முறையை ஏவுவார்கள்.
இரண்டுமே ஆபத்தானவை.
போராட்டங்களை கண்டு கொள்ளாத  போக்கு வருந்த்த் தக்க பல பின் விளைவுகளை வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கிறது.
அதில் ஒன்றுதான் கிருத்துவ மதம் கத்தோலிக் – புரட்டஸ்டெண்டு என  இரண்டாக பிளவு பட்டது.
ரோமில் இருந்த ஒரு தேவாலயத்தில் கட்டிட நிதி திரட்ட ஒரு புதிய உத்தியை கையாண்டார்கள். மக்கள் பாவமன்னிப்பு கேட்டு பாதிரிகளிடம் வருகிறார்கள் அல்லவா அதற்கு மாற்றாக தேவாலயத்தில் பாவமன்னிப்பு சீட்டு விற்கப்படும். அதை வாங்கிக் கொண்டால் பாவ மன்னிப்பு பெற்றுவிடலாம் என அறிவித்தார்கள்.
மார்டின் லூதர் Martin Luther, 14831546)  அதை எதிர்த்தார். தேவாலயத்தில் ஒட்டப் பட்டிருந்த அறிவிப்பை கிழித்து எறிந்தார். அவர் தலைமையில் ஒரு போராட்டக்குழு உருவானது. (ப்ரொட்டெஸ்டர்ஸ்)
அப்போதைய போப்பாண்டவர் பத்தாம் லியோ (Pope Leo X ) அருகில் தான் இருந்தார். இதை சரியாக அவர் கவனித்து சரி செய்திருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர் போராட்டக் காரர்களை சாமாணியமாக நினைத்தார். அப்போது அவர் கூறிய வார்த்தை உலக பழமொழியாகி விட்ட்து.
ஒரு தேனீர் கோப்பைய்யில் எழுந்த புயல் ( a storm in a teacup)
போப் லியோ, மார்டின் லூதரின் போராட்டத்தை சரியாக கனிக்க வில்லை. ஆனால் அந்தப் போராட்டம் அவரது ஏக போக தலைமையை முடிவுக்கு கொண்டு வந்தது.  கிருத்துவ மதம் புரட்டஸ்டண்டுகள் என்ற ஒரு புதிய பிரிவை கண்டது.
இன்று உலகிலுள்ள கிருத்துவர்களில் சுமார் 40 சதவீதம் புரட்டஸ்டண்டுகளே!  
மக்களின் போராட்டங்களை ஆதிக்கத்தில் இருப்பவர்கள் சரியாக புரிந்து கொள்ள தவறும் பட்சத்தில் எவரும் எதிர்பாராத புதிய விளைவுகள் ஏற்படக் கூடும்
ஆட்சியாளர்கள் கையாளும் இரண்டாவது .வழி முறை போராட்டங்களை ஒடுக்க வன்முறையை கையாள்வது.
தற்போது குடியுரிமை திருத்த சட்ட்த்திற்கு எதிராக போராடிய உத்திரப் பிரதேச மக்கள் மீது அம்மாநில காவல் துறையை அங்குள்ள யோகி ஆதித்தியநாத்தின்  அரசு ஏவுயிருப்பது போல
உத்த்ரப்பிரதேச காவல் துறையின் மிக கொடூரமான தாக்குதல்கள்களை சிறு வீடியோ பதிவுகளாக ஊடகங்களில் பார்க்கிற போது உள்ளம் பதறுகிறது. ஒரு ஜனநாயக நாட்டின் காவல்துறையா இது ? அல்லது அரக்கர்களின் கூட்டமா என்ற சந்தேகம் வருகிறது. ஒரு காவல் துறை அதிகாரி முஸ்லிம் பெரியவர் ஒருவரை தாக்கி விட்டு பாக்கிஸ்தானுக்கு போ என்று சொல்கிறார்.  ஓரிடத்தில் ஊர்வலம் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது திடீரென பின்னால் சென்று கொண்டிருந்த காவல் துறை கண்மண் தெரியாமல் தாக்குகிறது. ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பாராமல் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் கொடூரமாக தாக்கப் பட்டிருக்கீறார்கள். இது வரை சுமார் 19 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். பல நூறு பேர் காயம்பட்டு மருத்துவமனை களில் இருக்கிறார்கள்.
1. The death toll in the violence that occurred last week is 19, a home department spokesperson said.
2. 1,113 people have been arrested across Uttar Pradesh for their alleged involvement in violence.
3  327 FIRs have been registered, the home department spokesperson said.
4. 5,558 preventive arrests have been made, he said.

அரசுகளின் வன்முறை எல்லை மீறி போகிற போது அது சாமாணிய போராட்டங்களை நசுக்கி விடும்.
ஆனால் வீறு கொண்ட மக்களின் போராட்டங்களை அது பெரிதாக பாதிக்காது.
தற்போது தொடர்ந்து உத்திரப்பிரதேசத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அரசு காவல்துறை எல்லை மீறி விட்ட்தாகவும் சில இடங்களில் அப்பாவிகள் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் இப்போது ஒத்துக் கொண்டிருக்கிறது.
போராட்டங்கள் தொடரும் போது நிச்சயமாக அரசுகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது குறித்து யோசித்தே ஆக வேண்டும்.
கடந்த சில மாதங்களாக ஹாங்காங்கில் நடை பெற்ற போராட்டங்கள் இதற்கு சமீபத்திய உதாரணம்.
சர்வ வல்லமை பொருந்திய சீன அரசு மக்கள் போராட்ட்த்திற்கு பணிந்த்து.
ஹாங்காங் சீன ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்றாலும் அங்கே தனியான ஒரு அரசு முறை செயல்படுகிறது.
“one country, two systems” principle that has applied to the territory since its 1997 handover from the UK to China.
சீன அரசு கொஞ்சம் கொஞ்சமாக ஹாங்காங்கை முழுமையாக எடுத்துக் கொள்ள திட்டமிட்டு ஹாங்காங்கில் குற்றம் செய்பவர்களை சீனாவில் விசாரிக்க வகை செய்யும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

ஹாங்காங் மக்கள் கொதித்தெழுந்தார்கள். 20 இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி போராடினார்கள். சமீபத்தில் இந்தப் பிராந்தியத்தில் இத்தகைய போராட்டம் நடந்த்தில்லை.

கடைசியில் சீனா அரசு பணிந்தது. மசோதாவை வாபஸ் வாங்கியது.

இதே போல ஐரோப்பிய நாடான ரோமில் சுமார் 30 இலட்சம் மக்கள் திரண்டு இராக் யுத்தத்திற்கு எதிராக போராடினார்கள்.

The city with the highest concentration of protesters was Rome, where an estimated three million people took to the streets to rally against the invasion of Iraq, reports The Guardian. The Guinness World Records book of 2004 cites the Rome protest as the biggest anti-war rally in history.

பல ஐரோப்பிய நாடுகள் இராக்கிலிருந்து பின் வாங்கும் முடிவை அறிவித்தன.

உப்பு சத்தியாகிரகம்

இந்தியர்கள் உப்புக் காய்ச்சக் கூடாது என்ற ஆங்கிலேயர்களை எதிர்த்து காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் தொடங்கினார். குஜராத்திலிருது 240 மைல் நடந்து சென்று தண்டியில் உப்புக் காய்ச்சப் போவதாக அறிவித்தார். அவர் தொடங்கும் போது சிலர் தான் அவருடன் இருந்தனர். ஆனால் போராட்டம் தண்டியை அடையும் போது இலட்சக்கணக்கான மக்கள் அவருடன் சேர்ந்து கொண்டனர். அந்தப் போராட்டத்தில் 60 ஆயிரம் பேரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர்.
  
ஆனால் இந்தியாவை விட்டு விட்டு அவர்கள் ஓடினர என்பதுதான் வரலாறு.

தற்போது மத்திய அரசு கொண்டிவந்திருக்கிற CAA சட்டம் , அது போல அசாமில் அமுல்படுத்தப் பட்டு , நாடு முழுவதும் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ள NRC NPR சட்டங்கள் நம்முடைய நாட்டில் ஜனநாயகத்திற்காக போராடக் கூடிய சக்திகளை ஓரணியில் திரட்டியிருக்கின்றன.

மக்கள் பேதமின்றி திரண்டெழுந்து தன்னெழுச்சியாக தங்களுக்கு தோன்றிய வகையில் எல்லாம் போராட ஆரம்பித்திருக்கிறார்கள்.

சென்னையில் சிலர் கோலம் போட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசு பலரை கைது செய்தும் சிலரை துன்புறுத்தியும் போராட்டத்தின் சூட்டை தணிக்கப் பார்க்கிறது.

மக்கள் தேசத்தின் அடிப்படை மரியாதையை காப்பதற்கான போரில் நாம் இறங்கியிருக்கிறோம் என்ற தெளிவோடு இருக்கிறார்கள்.

நாடு பாசிஸ் சக்திகளின் விளையாட்டு மைதானமாகி அதில் இந்தியர்களின் தலைகள் உருட்டப்படும் பந்துகளாக ஆக விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்திய முஸ்லிம்களான நாமும் பொறுப்பான குடிமக்கள் என்ற வகையில் இந்துத்துவ சக்திகளிடமிருந்து நாட்டை மீட்கிற ஒரு  சுதந்திரப் போராட்ட்த்திற்கு தயராக வேண்டியிருக்கிறது.

அரசு அடக்குமுறை அச்சுறுத்தல்களை காட்டி நம்மை அடக்கி விட நினைக்கலாம்.

நாம் அசந்து விடக் கூடாது.

சரியான – சட்ட பூர்வமான போராட்ட வழிமுறைகள் குறித்து நாம் விழிப்போடு தயார் நிலையிலும் இருக்க வேண்டும்

 وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ ۗ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةً وَاحِدَةً

ஒரு காலம் இருந்த்து. ஆயுதங்களால் போராட்டங்கள் நடை பெற்றன. ஆயுதங்களே வெற்றியை தீர்மாணித்தன. நபிகள் நாயக்ம் (ஸல்) அத்தகைய காலத்தில் சொன்னார்கள்.  தவறுகளை களைவதற்கு சாட்டைகளை வைத்துக் கொள்ளுங்கள் அந்த சாட்டைகளின் மரியாதை மிக உயர்ந்த்து என்றார்கள்

لموضع سوط أحدكم في الجنة خير من الدنيا وما فيها"[البخار

இப்போது சாட்டைகள் ஆயுதங்களுக்கு பதிலாக ஆதிக்க சக்திகளை மனோ திட்த்தோடு எதிர்கொள்வது – நீதி மன்றங்களில் மக்கள் மன்றங்களில் போராடுவது என்று வழி முறை மாறி இருக்கிறது.

இத்தகைய போராட்ட்த்திற்கு தயாராகிற ஒவ்வொரு வழி முறையும் மரியாதைக்குரியது தான்.

சொர்க்கத்தில் பெரும் அந்தஸ்திற்குரியது தான்.

எனவே காவல்துறையின் அத்துமீறல்கள் கைதுகள் ஆகியவற்றை சட்ட ரீதியாக தடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்து அத்தகைய அத்துமீறல்கள் நடை பெறாமல் பார்த்துக் கொள்வதும்

ஒருவேளை அத்தகை அத்துமீறல்கள் நடை பெறுமானால் போராட்ட களம் இன்னும் வலுவடையும் என்று உறுதிப்பாட்டை ஆதிக்க சக்திகளுக்கு தெரிவிப்பதும் மக்களின் பொறுப்பாகும்.

இமாம் அஹ்மது பின் ஹன்பல் ரஹ் அவர்கள் ஒரு கொள்கைக்காக போராடினார்கள். அதற்காக அப்போதைய அரசர் அவரை ஒட்டகத்தில் கட்டி வர வைத்து கடுமையான சவுக்கடிகள் கொடுத்து துன்புறுத்தினர்.

வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா ?

மூன்று அரசர்கள் மாறினார்கள் , ஆனால் இமாமின் போராட்டம் மாறவில்லை.

இறுதியில் அப்பாஸிய அரச குடும்பம் இமாமுக்கு பணிந்தது. தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டது.

சில நேரங்களில் சிரமப்படாமல் வெற்றியை அனுபவித்து விட முடியாது,

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ ۖ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ ۗ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

நமது போராட்டங்கள் உண்மையாக இருந்தால் நிச்சய்ம் அது வெற்றி பெறும்.

ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் சரி. கைது செய்தாலும் சரி .

அல்லாஹ் நம்முடைய நாட்டின் ஆட்சியாளர்களுக்கு நல்ல சிந்த்னைஅயை வழங்குவானக! அவர்களை நேர் வழிப்படுத்துவானாக!

அவர்களது தீய திட்டங்களை அவர்களை நோக்கியே திருப்பி விடுவானாக

மக்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக!  மக்களின் போராட்டங்கள பாதுகாப்பானக!  போராட்டங்களுக்கு வெற்றியளிப்பானக!

No comments:

Post a Comment