ஒவ்வொரு காலத்திலும்
சமூகங்களுக்கு ஒரு மனப்போக்கு இருக்கும்.
உமய்யா அரசர்களை
பற்றி பேசுகிற போது வரலாறு ஒரு செய்தியை சொல்லுகிறது. .
ஒரு காலம் மக்கள்
அதிகமாக திருமணம் செய்தனர். ஒரு காலத்தில் மக்கள் விதவிதமாக சாப்பிடுபகிறவர்களாக இருந்தனர். ஒரு காலத்தில் அதிகம்
தலாக் விட்டனர். அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் குலப்பெருமையும் அநீதியும் மக்களின் மனப்போக்காக
இருந்த்து.
சமூகத்தின் இந்த
மனப்போக்கை மாற்றுவது எளிதான காரியமல்ல,
ஒரு மாபெரும் தலைவர்
உருவாகி பெரும் முயற்சிகள் செய்தால் அன்றி மாற்றம் நிகழாது.
நாம் வாழ்கிற இந்தக்
காலம் அரசியல் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் அநீதியிழைத்து விட்டு குயுக்தியான வார்த்தைகளால்
அதையே நியாயம் என்று பேசுகிற காலம் இது.
ஜனவரி 3 ம் தேதி
– கடந்த வெள்ளிக்கிழமை - உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வு நடந்தது,
அமெரிக்கா, ஆள்
இல்லாத விமானம் மூலம் இராக் நாட்டின் தலைநகர் பக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு
அருகே நத்திய ஒரு ஏவுகணை தாக்குதலில் துல்லியமாக திட்டமிட்டு ஈரான் நாட்டின் படைத்தளபதிகளில்
ஒருவரும் ஈரான் மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்றவருமான காஸீம் சுலைமானி என்பவரை படுகொலை
செய்தது. அவருடன் இராக் படைத்தளபதில் ஒருவராக அபூமஹ்தி முஹன்திஸ் என்பவரும் கொல்லப்
பட்டார்.
இது அமெரிக்கா
அரசாங்கத்தின் ஒரு தீவிரவாத தாக்குதலாகும்.
இதற்கு சில நாட்களுக்கு
முன்னதாக பக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இரான் நாட்டின் ஆதரவு குழுவினர் சிலர்
தாக்கி சேதப்படுத்தினர். இதில் அமெரிக்க வீர்ர் ஒருவர் கொல்லப் பட்டார். ஒரு அமெரிக்க
வீர்ருக்கு பதிலாக அமெரிக்கா தனது ஆணவத்தை காட்டுவதற்காக ஈரானின் மிக முக்கியமான ஒரு
தளபதியை திட்டமிட்டு கொன்றிருக்கிறது.
ஜனவரி 6 ம் தேதி
ஈரான் தலை நகர் டெஹ்ரானில் சுலைமானியின் ஜனாஸா தொழுகையில் பல இலட்சக்கணக்கான மக்கள்
கலந்து கொண்டனர். சமீபத்தில் நடந்த மிகப்பெரிய இறுதி மரியாதை நிகழ்ச்சி இது என மீடியாக்கள்
வரணிக்கின்றன. ஈரானின் புரட்சியாளர் இமாம் குமைனியின் ஜனாஸாவுக்கு திரண்ட்தற்கு நிகராக
மக்கள் இக்கூட்டத்தில் திரண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்ல ஜனவரி 7 ம் தேதி கிர்மான் எனும் நகரில் சுலைமானியின் நல்லடக்த்தில்
திரண்ட கூட்ட்த்தில் ஏற்பட்ட நெரிசலில் 56 பேர் இறந்தனர், 212 பேர் காயமடைந்துள்ளனர்.
On 6 January, the body of
Soleimani and other casualties arrived at the Iranian capital Tehran. Huge crowds,
reportedly hundreds of thousands or millions, packed the streets.
On 7 January 2020, a stampede took place at the burial procession for Soleimani in
Kerman attended by hundreds of thousands of mourners, killing 56 and injuring
212 more
இவ்வளவு மக்கள்
செல்வாக்குள்ள ஒருவரை படுகொலை செய்துவிட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார்
உலகின் ஒரு மோசமான
தீவிரவாதி கொல்லப் பட்டார்.
ஈரான் நாட்டின்
அரசியல் – சுலைமானியின் அரசியல் – இராக்கில் நடை பெறும் ஷியா அரசியலில் நமக்கு மாற்று
கருத்துக்கள் இருந்தாலும் கூட ஒரு நாட்டின் பல இலட்சக்கணக்கான மக்களின் அபிமானத்திற்குரியவரை
கொன்று விட்டு நாங்கள் எங்களது சக்தியை காட்டி பழிவாங்கவே அவரை கொன்றோம் என்று சொல்லிக்
கொள்ள தைரியம் அற்றி டிரம்ப் – தனது செயலை நியாயப்படுத்த சுலைமானியையை – ஒரு நாட்டின்
இராணுவ தளபதியை தீவிரவாதி என்கிறார்.
இது தான் இன்றைய
ஆதிக்க சமூகத்தின் மனப்போக்கு.
தங்களுக்கு தோன்றிய
அக்கிரமத்தை செய்து விட்டு அதை தர்மம் என்று அர்த்தப்படுத்துகிறார்கள்.
நம்முடைய நாட்டின்
ஆட்சியாளர்களும் இதே போல முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்துக்கிற சட்டங்களை இயற்றி விட்டு
இது ஊடுறுவல் கார்ர்களை தான் பாதிக்கும் இந்திய முஸ்லிம்களை அல்ல என்கின்றனர்
தொலைக்காட்சி விவாத்த்தில்
பேசுகீற அருனன் மிக அருமையாக கூறினார் . யார் இந்தியர்கள் என்பதை ஆர் எஸ் எஸ் தீர்மாணிக்கும்.
இத்தகைய சூழலை
மாற்றுவது என்பது அசாதாரணமான ஒரு பணியாகும். மிகப்பெரும் ஒரு மக்கள் தலைவர் உருவானால்
அன்றி இத்தகைய ஆதிக்க மனப்போக்கை உடைத்தெறிவது சாத்தியமானதல்ல.
உலகை சமநிலைப்படுத்த
கூடிய ஒரு தலைவருக்காக உலகம் ஏங்கிக் கொண்டிருக்கிறது.
இஸ்லாம் ஒரு வாக்குறுதி
அளிக்கிறது
உலக நாளின் இறுதியில்
மஹ்தி அலை தோன்றுவார்
அவர் நீதத்தால்
உலகை நிரப்புவார் என்கிறது.
ملا الارض عدلا كما ملئت جورا
உலகின் இந்த சமநிலை
அற்ற போக்கை மாற்றுவதற்கு மஹ்தி அலை அவர்கள் தான் வரவேண்டுமா ? அல்லது உலக அரசியலில்
வேறு வகையான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்பதை அல்லாஹ்வே அறிவான்.
அதுவரை மக்கள்
செய்ய வேண்டியது என்ன வெனில்
திருக்குர் ஆன்
கூறுகிறது.
يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ
لَعَلَّكُمْ تُفْلِحُونَ (200)
உங்கள் மார்க்கத்தில் பொறுமையாக இருங்கள், சகித்துக் கொள்ளுங்கள் .உங்களுக்கிடையான இணைப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
எதிரிகளை எதிர் கொள்ளும் மிக மகத்தான வழிகாட்டுதல்களை ஆலு இம்ரான் அத்தியாயத்தின்
இந்த வசனம் வழங்குவதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
முதலில் தேவைப்படுவது பொறுமை
பொறுமை என்றால் சும்மா இருப்பது அல்ல. முதல் கட்ட்த்திலேயே பதறாமல் இருப்பது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
رأى امرأة تبكي صبيًا فنصحها
فقالت: إليك عني فإنك لم تصب بمثل مصيبتي، فلما أخبرت أنه الرسول ﷺ ذهبت إليه
في بيته فلم تجد عند بابه بوابًا فاستأذنت عليه وأخبرته أنها لم تعرفه، فقال
لها ﷺ: إنما الصبر عند الصدمة الأولى
பொறுமை
என்பது பதற்றத்திற்கு உள்ளாகி தேவையற்ற
நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பதாகும்.
அதற்கு முதலில்
பயப்படாமல் இருக்க வேண்டும்.
மத்திய அரசு
கொண்டுவந்துள்ள இஸ்லாமிய விரோதச் சட்டங்கள் – அதை எதிர்த்து நடை பெறுகிற பிரம்மாண்ட
போராட்டங்கள் . அந்தப் போராட்டங்களை கண்டு கொள்ளாமல் மத்திய அரசு மேலும் மேலும் கடுமையாக
இருப்பது – இந்திய முஸ்லிம்களை – முஸ்லிம்களின் தலைவர்களை – மஹல்லா நிர்வாகிகளை – முஸ்லிம்
பொதுமக்களை ஓரளவில் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகை அல்ல.
பொறுமையின்
முதல் அசம்சம் அச்சமற்று இருப்பதாகும்
இப்போதைய நம்
அனைவரின் தேவை அச்சத்தை துடைத்தெரிவதாகும்
அல்லாஹ் நாடினால்
தவிர நமக்கு எதுவும் வந்து சேராது. அல்லாஹ் நாடிய எதுவும் நமக்கு வராமலும் போகாது.
அல்லாஹ்வை பயப்படுவோம்.
வருகிற எந்த சூழலையும் எதிர் கொள்வோம்.
சமீபத்தில்
ஒரு ஊரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திடீரென போலீஸ் கைது செய்யக் கூடும் என்ற நிலை
உருவான போது சில பிரமுகர்கள் மெதுவாக பின் வாங்கினார்கள். அது சபையில் ஒரு சல்சலப்பை
ஏற்படுத்தியது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்
இந்த அச்சம்
தான் ஆபத்தானது.
நாம் நியாயத்திற்கான
ஒரு போராட்ட்ததில் இணைந்திருக்கிறோம் என்கிற போது இந்த பயம் தேவையற்றது.
அது மட்டுமல்ல
இத்தகைய பயம் சமூகத்தின் துணிச்சலை சிதைத்து விடும். மட்டுமல்ல எதிரிகள் நம்க்குள்
புகுந்து விளையாட அது வாசலை திறந்து விடும.
கைது செய்தால்
என்ன ? நிலமை மோசமாகி விட்டால் இதை விட மோசமான சிரமங்களை சந்திக்க வேண்டிய வருமே என்பதை
யோசிக்க வேண்டும்.
எனவே எதிரிகளை
எதிர்கொள்ளும் போது அச்சமற்ற பொறுமை அவசியம்.
அது போல தேவையற்ற
பதற்றங்களுக்கு ஆளாகக் கூடாது.
அங்கே கணக்கெடுக்கிறார்கள்.
இங்கே வந்து விட்டார்கள் என தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகிற செய்திகளை பலரும் வாட்ஸப்
வழியாக கருத்துச் சொல்கிறார்கள்.
ஆனால் விசாரித்து
பார்த்த வரை என் பி ஆர் கணக்கெடுப்பை மாநில அரசு இதுவரை தொடங்க வில்லை.
ஒருவேளை அத்தகைய
கணக்கெடுப்பு நடக்குமானால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்பதை ஆலிம்கள் சமுதாய தலைவர்கள்
அறிவிப்பார்கள். அவர்களை விழிப்போடுதான் இருக்க்றார்கள்.
அதுவரை பொறுமை
காக்க வேண்டும்.
ஆளாளுக்கு திட்டம்
சொல்கிற பழக்கத்தை கை விட்டு விட வேண்டும். ஒரு தலைமையின் பேச்சுக்கு கட்டுப்பட பழக
வேண்டும். அதுதான் பொறுமையாகும்.
கேரளாவில் கனிசமான
முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். தேவையற்ற பதற்றத்திற்கு அவர்கள் ஒரு போதும் ஆட்படுவதில்லை.
தலைமை இருக்கிறது, தேவையான வழிகாட்டுதலை அது தரும் என்பதில் உறுதி கொண்டு தங்கள் தங்களது
வேலையை பார்க்கிறார்கள். தலைமை அழைக்கிற போது அலை கடலென திரண்டு விடுகிறார்கள்.
இது நாம் படிக்க
வேண்டிய பாடம்.
பொறுமையின்
அடுத்த பணி தேவையான நடவடிக்கைகளை அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்துவதாகும்.
முஆவியா ரல்
அவர்கள் தனது வீர்ர் ஒருவருக்கு நேர்ந்த அவமானத்தை பழிதீர்த்த விதம் ஆச்சரியமானது,
வரலாறு பல பக்கங்களில் அதை எழுதுகிறது.
ரோம் நாட்டிற்கு
சென்ற இஸ்லாமிய படை வீர்ர் ஒருவரை ரோம் அமைச்சர் ஒருவர் கன்னத்தில் அறைந்து விட்டார்.
முஆவியா ரல்
அவர்களுக்கு செய்தி கிடைத்தது.
ஒரு வியாபாரியை
ஏற்பாடு செய்து ரோம் அமைச்சர்களுக்கு வெளிநாட்டு பொருட்களை சப்ளை செய்ய சொன்னார்கள்.
அந்த குறிப்பிட்ட அமைச்சரை மட்டும் தவிர்க்க
சொன்னார். அந்த வியாபாரிக்கு நிறைய காசு கொடுத்து உயர் ரக பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.
அன்றைய காலத்தில் இஸ்லாமிய உலகில் தான் உயர்ரக பொருட்கள் கிடைத்தன. ரோமின் பிரதம் அமைச்சர்
உட்பட அனைவரும் அந்த வியாபாரிக்கு பழக்க மானார்கள், குறிப்பிட்ட அமைச்சருக்கு மட்டும்
அது கவலையளித்த்து இந்த வியாபாரி எனக்கு பொருட்களை வழங்குவதில்லையே என வருந்தினார்.
எனவே வியாபாரியை தனிமையில் அணுகி ஏன் என்னை தவிர்க்கிறீர் எனக் கேட்டார். வியாபார்
சொன்னார். ஐயோ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இனி உங்களை தனியாக கவனித்துக் கொள்கிறேன்
என்றார். அடுத்த பல தடவைகளில் அந்த அமைச்சருக்கு மிக நெருக்கமானார். அந்த அமைச்சர்
ஒரு தடவை தனக்கு அழகிய பெரிய கார்ப்பட் விரிப்பு ஒன்று வேண்டும் என்று கேட்டார். அதற்கு
சம்மதித்த வியாபாரி செய்தியை முஆவியா ரலியிடம் கூறினார் ,
முஆவியா ரலி
அவர்கள் சிரியாவிலுள்ள சிறந்த கலைஞர்களை எல்லாம் அழைத்து பல வண்ண ஒரு கார்ப்பட் தயார் செய்து வியாபாரியிடம் கொடுத்தனுப்பினார்.
வியாபாரி அந்த
முறை அமைச்சரை கட்த்தி வர அருமையாக திட்டம் தீட்டினார்; கப்பலை அமைச்சரின் வீட்டருகே
நிறுத்தினார். தான் சமிக்ஞை செய்யும் போது நங்கூரத்தை எடுத்து விடக் கூறினார். அது
போல கப்பலிலேயே விரிப்பை பார்வையிட வருமாறு அமைச்சரை அழைத்தார். அமைச்சர் வந்தார்
/ விரிப்பை பார்த்து அதன் அழகிலேயே மகிழ்ந்து அதில் உட்கார்ந்தார் . படுத்துப் பார்த்தார்.
இதற்குள்ளாக கப்பல் அவரது எல்லையை கடந்து விட்டது.
அமைச்சரை சிரியாவில்
முஆயா ரலி அவர்களுடைய சபையில் வியாபாரி ஒப்படைத்தார். முஆவியா ரலி அவர்கள் கன்னத்தில்
அடிபட்ட தனது வீர்ரை அழைத்து அந்த அமைச்சரை அது போல கன்னத்தில் அறையுமாறு கூறினார்.
பிறகு அமைச்சரை மரியாதையாக நடத்தி தனது வீர்ருக்கு நேர்ந்த அவமதிப்புக்கு பழிதீர்க்க
வே இப்படிச் செய்தேன் எனவே உங்களது அரசரிடம் சென்று மூஆவியா தனது வீர்ருக்கு நேர்ந்த
அவமதிப்பிற்கு தன்னுடைய சபைக்கே அமைச்சரை கொண்டு வந்து பழிவாங்கினார் . பிறகு அவரை
அனுப்பிவிட்டார் என்று சொல்லுங்கள் எனச் சொல்லி அனுப்பினார்.
வலிமையான நேர்மையான
ரோஷமுள்ள மனிதருக்கு உதாரணமாக முஆவியா ரலி அவர்கள் திகழ்ந்தார். இன்றைய டிரம்பை போல
ஆயுத்த்தை வைத்து முதுகிற்குப் பின் அடிப்பவர்ர போல அல்லாமல். மிகப் பொருமையாக முஆவியா
ரலி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை வர்லாற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இதற்கு எத்தனை
மாதங்கள் பிடித்திருக்கும். ?
எனவே எதிரிகளை
எதிர் கொள்கிற போது மிக எச்சரிக்கையான பொறுமையை கையாள வேண்டும்.
அதே போல எதிர்களின்
நடவடிக்கையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
அதே போல நமது
சக்திகளை ஒன்றினைக்க வேண்டும்.
நம்மில் ஒவ்வொருவரும்
நம்மை தனியாக அடையாளப் படுத்திக் கொள்ளும் முயற்சிதான் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின்
பெரும் தீங்காக இருக்கிறது.
நம்மை ஒற்றுமை
படுத்தும் சக்தி யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும். என்ற சிந்தனை வெகு குறைவாக இருக்கிறது.
கேரளாவில் இன்றைய
நிலையில் முஸ்லி லீக்கின் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள்.
தமிழகத்தில்
ஜமாஅத்துல் உலமாவின் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள் எனில் அதற்கு கீழ் நிற்க அனைவரும்
முயற்சிக்க வேண்டும்.
அதன் வழிகாட்டுதல்களுக்கு
காத்திருக்க வேண்டும்.
அப்படியானால்
எங்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்று சிந்திப்போமானால் நமது ஒருமைப்பாட்டுக்கு
அது வலுச்சேர்க்காது.
நமது வெற்றிக்கு
அது வழி வகுக்காது. எனவேன ஒன்றினைவதற்கான வழியை தேடி அதில் நாம் இணைந்து கொள்வதும்
இன்றைய தேவையில் மிக முக்கியமானதாகும்.
அநீதியிழைத்து
விட்டு அதை நீதியாக காட்டும் மிக கொடூரமான சூழலில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானக! நம்மை பொறுமையோடும் விழிப்புணர்வோடும் ஒன்றிணைபவர்களாக
அல்லாஹ் ஆக்கியருள்வானாக!
No comments:
Post a Comment