وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ
بِآَيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ
الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ
بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَحِيمٌ . وَكَذَلِكَ نُفَصِّلُ الْآَيَاتِ
وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ} [الأنعام:54-55].
இந்தியா தனது
71 ஒன்றாவது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறது.
நம்முடைய நாடுதான்
உலகின் மிகப் பெரிய குடியரசு நாடு.
குடியரசு என்றால்
மக்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்கிக் கொண்ட அரசியலைப்புச் சட்டப்படி ஆளப்படும் நாடு
என்பது பொருள்.
நமது நாடு சுதந்திரம்
அடைந்த பிறகு நமது நாட்டின் தலைவர்கள் சுமார் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் ஒன்று
கூடி அமர்ந்து விவாதித்து நமது ஆட்சி முறைக்கான சட்ட தொகுப்பான அரசியல் சாசனத்த உருவாக்கினார்கள்.
1947 ஆகஸ் 15 தேதி
பிரிட்டிஷ் ஆதிக்கத்த்த்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது,
அப்போது 1935 ல்
ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட இந்தியச் சட்டம்
(Government of India Act of 1935.) நடைமுறையில் இருந்த்து. சுதந்திரம் பெற்ற
பிறகும் அதுவே சில காலம் தொடர்ந்த்து.
1947 நவம்பர்
4 ம் தேதி இந்தியாவுக்கான அரசியல் சாசனத்தை அமைக்கும் பணி தொடங்கியது. டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அமைந்த அரசியல் சாசன
அவையில் தமிழத்திலிருந்து நமது தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களும் இடம்
பெற்றிருந்தார், ‘
1949 நவம்பர் 26 ம் தேதி அம்பேத்கார் தலைமையில் உருவாக்கப் பட்ட
அரசியல் சாசனத்தை ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டார்.
அரசியல் சாசனம்
தயாரிக்கப் பட்டுவிட்ட போதும் அதை நடை முறைக்கு கொண்டு வருவதற்கான நாளாக 1950 ஜனவரி
26 ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது
ஜனவரி 26 ம் தேதியை
தேர்ந்தெடுக்க காரணம்
ஆங்கிலேயர்களுக்கு
எதிரான இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் மக்கள் அவ்வப்போது ஆங்கிலேயர்களிடம் சில
உரிமைகளை கேட்டு போராடிக் கொண்டிருந்தார்கள் . ஆங்கில அரசாங்கத்தின் சிற்சில சட்டங்களை
எதிர்த்து போராடிக் கொண்டிருந்தார்கள், முதன்முறையாக 1929 லாகூரில் நடைபெற்ற இந்திய
தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தான் முழு சுதந்திரம் கேட்கும் போராட்டம் தொடங்கியது.
1930 ஜனவரி 26 ம் தேதிக்குள் முழு சுதந்திரம் பெற்று விட வேண்டும் என்று அம்மாநாட்டில்
தீர்மாணித்திருந்தார்கள். அது நிறைவேறவில்லை என்றாலும் பூரணசுந்தந்திரம் கேட்ட தீர்மாணம்
நிறைவேற்றப் பட்ட அந்த நாளை இந்தியா குடியர்சாக ஆவதற்கான நாளாக அதாவது பிரிட்டிஷ் கார்ர்கள்
இந்தியச் சட்ட்த்திற்கு மாற்றாக இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வரும் நாளாக ஏற்றுக்
கொள்ளப் பட்டது.
அதனடிப்படையில்
1950 ஜனவரி 26ம் தேதி முதல் நமக்காக நம்மவர்களால் உருவாக்கப் பட்ட அரசியல் சாசனம் நடைமுறைக்கு
வந்த்து. அதையே நாம் குடியரசு தினம் என்கிறோம்.
உலகிலேயே மிகப்பெரிய
அரசியல் சாசணம் நம்முடையதாகும்.
இது தான் இதுவரை உலக
நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 103 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள்(Articles) மற்றும் 117,369 சொற்கள் உள்ளன.
அப்போது இந்திய
மக்கள் தொகை 35 கோடியே 90 இலட்சமாக இருந்தது.
1950 ஜனவரி 26 அன்று
இந்தியா இறையான்மையுள்ள சோசலிஸ் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்று அறிவிக்கப்
பட்ட்து. இதுவே இந்திய அரசியல் சாசனத்தின் மிக முக்கிய அம்சமாகும்.
on this day when
India was declared as a sovereign, socialist, secular, democratic republic.
1950 லிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஜனவரி 26 ம் தேதியும் இதே உணர்வோடு மிகுந்த எழுச்சியோடு இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த ஒவ்வொரு காலத்திலும் இந்தியாவின் ஜனநாக சிந்தனையிலும்
அதன் மதச்சார்பற்ற அம்சத்திலும் மிகப்பெரிய பாதிப்புக்கள் ஏற்பட்ட்தனால் அதற்குப் பின்னுன்ண்டான
ஒவ்வொரு குடியரசு தினமும் இந்துத்துவ மதவாத சக்திகளிடமிருந்து இந்தியாவை பாதுகாப்பதற்கான
தினமாக அமைந்து விட்டது.
இதோ இந்த 71 வது குடியரசு தினமும் இந்துத்துவ மதவாத சர்வாதிகார சக்திகளிடமிருந்து
இந்தியக் குடியரசை பாதுகாக்க வேண்டிய போராட்டங்களின் தினமாகவே அமைந்துள்ளது.
கடந்த புதன்கிழமை செய்தித்தாள்களில் வெளியான ஒரு தகவலை பாருங்கள். இந்தியக் குடியரசின் தற்போதைய தள்ளாட்ட்த்தை புரிந்து கொள்ளலாம். இது லண்டன் மாநகரிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று நடை பெறவுள்ள போராட்டம் பற்றியது.
On Wednesday, Indian High Commissioner
to UK, Ruchi Ghanshyam, called on UK Home Secretary Priti Patel expressing
concerns over the planned protests outside the UK mission on January 26. There
are banners that have been put up calling people to assemble outside all Indian
missions across the globe in a "Burn Indian
Constitution" drive. Another poster calls for 'London
Protest' to declare 'Indian Republic Day as Black Day'
இந்திய
அரசியல் சானத்தை எரியுங்கள் என்றும்
இந்தியக் குடியரசு தினத்தை கருப்பு நாளாக
அனுசரிக்குமாறும் ஒரு அமைப்பு கோரிக்கை
வைத்துள்ளது. அன்றைய தினம் லண்டன்
போராட்டம் என்ற பெயரில் ஒரு
போராட்டம் நட்த்தவும் அழைப்பு விடுக்கப் பட்டிருப்பதாகவும்.
இந்தப் போராட்டக் கார்ர்களிடமிருந்து இந்திய தூத்ரகத்திற்கு பாதுகாப்பு
தர வேண்டும் என்று இந்திய தூதர
அதிகாரி இங்கிலாந்து அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது லண்டனில்
மட்டுமல்ல. இப்போது இந்திய தலைநகர் தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள நிலையாகும்.
ஒட்டு மொத்த
இந்தியாவும் இந்த 71 குடியரசு தினத்தில் இதுவரை இல்லாத அளவில் பெரும் போராட்ட களமாக
மாறியிருக்கிறது
பல மாநில அரசுகள் மத்திய அரசுக்கு எதிராக தீர்மான்ங்களை
நிறைவேற்றியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் நிற்கின்றன.
இதற்கெல்லாம்
காரணம் மத்திய் அர்சு கடந்த டிஸம்பர் 9 ம் தேதி கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டமும்
(சி ஏ ஏ ) இப்போது நடை முறைப் படுத்துவதாக
அறிவித்துள்ள மக்கள் தொகை பதிவேடு சட்டமும் ஆகும் என், பி, ஆர்) நாடு முழுவது அது அமுல்
படுத்த நினைத்திருக்கிற என் ஆர் சி என்கிற திட்டமும் ஆகும்
என் ஆர் சி இந்தியக் குடிமக்கள் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிக்க
பலத்த சோதனைகளை சந்திக்க நிர்பந்தப் படுத்துகிறது. சி ஏ ஏ அதிலிருந்து மற்ற மதத்தவர்களை காப்பாற்றி
முஸ்லிம்கள் மட்டும் நாடற்றவர்களாக்குகிறது.
இது அப்பட்டமாக
இந்திய அரசியலமைப்பு எதிரானதாகும் . அரசியலமைப்பின் முகத்தையே மாற்றிவிடக் கூடியதாகும்.
இந்திய அரசியல்சாசனத்தின்
14 வது விதி இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று
கூறுகிறது.
இந்திய அரசியல்சாசனத்தின்
15 வது விதி இந்திய மக்களுக்கு இடையே
மதம்
இனம்
ஜாதி
பாலினம்
பிறப்பிடம்
அடிப்படையில்
வேறுபாடு காட்டப் படக்கூடாது என்று கூறுகிறது.
மத்திய பாஜக
அரசு தற்போது கொண்டுவந்துள்ள சட்டங்கள் இந்த இரண்டு அம்சங்களையும் அப்பட்டமாக மீறுகின்றன.
உச்சநீதிமன்றம்
மத்திய அரசை கப்படுப்படுத்தும் என்று எதிர்ப்பார்த்திருந்தோம் ,. நேற்று முந்தினம்
அதுவும் பொய்த்துப் போய்விட்ட்து.
The Supreme Court on Wednesday refused
to stay the Citizenship (Amendment) Act (CAA), despite the matter being
“uppermost in everybody’s mind", saying it first wants to hear the
Centre’s response to pleas challenging the law.
The apex court also asked all high
courts not to pass any order on CAA.
A
three-judge bench
எல்லோருடைய
சிந்தனையிலும் மத்திய அரசின் இந்த்சட்டம்
தான் ஆக்கிரமித்திருக்கிறது என்ற போதும் இச்சட்ட்த்திற்கு
தடை விதிக்க முடியாது என்று
கூறி மறுப்பு தெரிவித்து விட்ட
உச்சநீதிமன்றம், அரசு விளக்கம் அளிக்க
நான்கு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
அத்தோடு நிற்காமல் நாட்டிலுள்ள எந்த உயர்நீதிமன்றமும் சி
ஏ ஏ வுக்கு
தடை விதிக்க கூடாது என்றும்
உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றங்கள்
ஆட்சியாளர்களுக்கு சாதகமாக எப்படி மாற்றப்பட்டிருக்கிறார்கள்
என்பதற்கான உதாரணம் இது.
உச்சநீதிமன்றம்
வழங்கிய இந்த கால இடைவெளிகளில் இந்தக் கருப்பு சட்டங்கள் மூலம் இந்திய மக்கள் பாதிக்கப்
பட்டால் அதற்கு உச்சநீதிமன்றம் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்ளுமா என்பதை உச்சநீதிமன்றம்
தெரிவிக்க வில்லை.
இந்தச் சட்ட்த்திலுள்ள
பல்வேறு அம்சங்களை கேள்விக்குள்ளாக்கி பதிவு செய்யப் பட்டுள்ள சுமார் 140 வழக்குள்
பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில் பல்விசயங்களிலும் மெளனம் சாதித்து விசாரனை முடியும்
வரை உத்தரவை நடை முறைப்படுத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த்தானது எந்த வகையான
அச்சத்தின் பிடியில் நீதிமன்றங்கள் சிக்கிக் கொண்டிருக்கின்ற அல்லது இந்துத்துவாவின்
தாக்கத்திற்கு எந்த அட்கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற கேள்வியை எழுப்புகிறது,
நீதிமன்றங்களின்
புனிதம் குறித்து சந்தேகம் எழுவது இந்திய ஜன்நாயகத்திற்கும் எழுந்துள்ள மிகப்பெரிய
அச்சுறுத்தலாகும்.
ஒரு மக்கள்
குடியரசு என்பது தனது அதிகாரத்தை மக்களது நன்மைக்கு பயன்படுத்த வேண்டும்.
மக்களை துவம்சம்
செய்வதற்கு ஒரு அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்துமானால் அது குடியரசாக இல்லாமல் குண்டா
ராஜ்யமாக மாறிவிடும்.
ஒரு அரசு –
அதுவும் குடியரசு மக்கள் மீது கருணை காட்ட வேண்டும்.
இதுவே ஆட்சியாளரின்
இயல்பு
படைத்த ரப்புல்
ஆலமீன் தனது இய்ல்பாக ரஹ்மான் ரஹீம் என்பதையே குறிப்பிடுகிறான்.
முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் அமுல் படுத்தியவதை விட அதிகமான சட்டங்களை சிறப்பான சட்டங்களை – கடுமையான
சட்டங்களை இந்த உலகில் வேறு யாரும் அமுல் படுத்தியது கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட
சந்தர்ப்பத்தில் கூட மிக அதிகப் பட்ட மானுட தர்மத்தை முஹம்மது நபி ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
حديث أبي هريرة قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال:
هلكت، قال: وما ذاك؟ قال: وقعت بأهلي في رمضان، قال: تجد رقبة؟ قال: لا، قال: فهل
تستطيع أن تصوم شهرين؟ قال: لا، قال: فتستطيع أن تطعم ستين مسكينا؟ قال: لا، قال:
فجاء رجل من الأنصار بعَرَق والعَرَق المكتل فيه تمر، فقال: اذهب بهذا فتصدق به،
قال: على أحوج منا يا رسول الله؟ والذي بعثك بالحق، ما بين لا بتيها أهل بيت أحوج
منا، قال: اذهب فأطعمه أهلك.
وهذا لفظ البخاري.
இது ஒருவிசயத்தில் அல்ல ஒவ்வொரு விசயத்திலும் சட்டங்களை அமுல்படுத்துவதில்
கருணையை கைகொண்டார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்
மக்களின் ஆட்சியாளர் என்பதற்கு இது தான் பொருள் .
தங்களிடமுள்ள அதிகார மமதையில் மக்களை துன்புறுத்தும் சட்டங்களை இயற்றுகிறவர்கள்
ஆட்சியாளர்கள் அல்ல, குண்டர்கள்
மத்தியில் இருக்கும் பாஜக அரசு இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு புரியும் வரை மக்கள் தமது போராட்ட்த்தை தொடர வேண்டும். அப்போதுதான்
இந்திய குடியரசை பாதுகாக்க முடியும்.
இந்திய முஸ்லிம்கள் தங்களை குறிவைத்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களுக்கு
எதிராக சகோதர சமயத்தவர்களையும் இணைத்து கொண்டு போராட வேண்டும் அப்போதுதான் போராட்டம்
முழுமையடையும்.
இந்தப் போராட்டங்கள் இந்திய முஸ்லிம்களை பாதுகாப்பதற்கானதல்ல. இந்திய
குடிய்ரசு த்த்துவத்தை பாதுகாப்பதற்கானவை
இன்ஷா அல்லாஹ் வருகிற 30 ம்
தேதி வியாழக்கிழமை தமிழத்தில் இந்து பதிரிகையின் என் ராம் அவர்களது தலைமையில் அமைந்துள்ள
மக்கள் மேடை அமைப்பின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டங்களான
சி ஏஏ . என் ஆர்சி , என் பி ஆர் ஆகியவற்றுக்கு எதிராக சென்னையிலிருந்து கன்னியாகுமரி
வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற உள்ளது , அந்தப் போராட்ட்த்தில் முஸ்லிம்களும்
திரளாக கலந்து கொள்ளுமாறு மாநில ஜமாஅத்துல் உலமா சபையும் மற்ற இஸ்லாமிய கட்சிகளும்
கேட்டுக் கொண்டுள்ளன.
இன்ஷா அல்லாஹ் நமது பகுதிக்கான இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்புக்கள்
இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும்.
மக்கள் தமது போராட்டங்கள் மூலம் இந்திய குடியரசை மீட்க முயற்சி செய்கிறார்கள்.
அல்லாஹ் உதவி செய
No comments:
Post a Comment