வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, January 30, 2020

நோய்க்கிருமிகளும் சமூக கிருமிகளும்


நேற்று ஜனவரி 30 ம் தேதி காந்தியடிகள் நினைவு தினம்
இந்திய விடுதலைப் போராட்ட்த்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியதில் காந்தியடிகளுக்கும் மிக முக்கியப் பங்குண்டு.
அதுவரை விடுதலைப் போராட்டம் என்பது படித்தவர்கள் பெரியமனிதர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட்தாக இருந்தது.
1919 ல் காந்தி தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இறங்கிய பிறகு அவரது எளிமையும் போராட்ட உத்திகளும் மக்களை பெருமளவில் போராட்ட களத்தில் பங்கேற்க வைத்தன.
ஒரு பயணமாக தமிழகம் வந்த காந்தி மதுரைக்கருகில் ஒரு ஊரில் மக்கள் அணிந்து கொள்வதற்கு ஆடைகள் இல்லாதிருந்த்தட்ட பார்த்த போது தான் கோட் சூட் அணிவதை நிறுத்திக் கொண்டு இடுப்புக்கு ஒரு துண்டை மட்டுமே கட்டிக் கொள்வதாக சூளுரைத்தார்.  அதனால் அவரை அரையாடைப் பக்கிரி என ஆங்கிலேயர்கள் கேலி செய்தனர் என்ற போதும் அந்த அரையாடைப் பக்கிரி தான் தேச விடுதலைக்கு முக்கியப் பங்கு வகித்தார்.
1948 ஜனவரி 30ஆம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக சென்றபோது, காந்தி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். நாதுராம் விநாயக் கோட்சே என்பவன் பலரது முன்னிலையில்  நேரடியாக காந்தியை சுட்டான். தனது கையில் இஸ்மாயீல் என்று பச்சைக் குத்திக் கொண்டு அவன் இப்படுகொலையில் ஈடுபட்டான். கொலைப் பலி முஸ்லிம்கள் மீதும் விழட்டும் என்பதற்கான ஏற்பாடு இது.
ஆனால் அவன் உயிரோடு பிடிக்கப் பட்டான். மத்திய அரசின் உத்தரவின் பேரில், காந்தி படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க டெல்லி செங்கோட்டையில் தனி விசாரணை அரங்கு கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது.
1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்று , 6 வது முறை அவர் கொலை செய்யப்பட்டார் 

காந்தி கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்டு பேர் குற்றவாளி என தீர்ப்பளித்தது. காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நதுராம் கோட்ஸே மற்றும் கொலைக்கு மூளையாக செயல்பட்ட நாராயண் ஆப்தே இருவருக்கும் 1949, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
காந்தியின் படுகொலைக்கு காரணமாக ஆர் எஸ் எஸ் அமைப்பு இருந்த்து. ஆனால் அந்த அமைப்பை பாதுகாப்பதற்காக கோட்ஸே தான் அதிலிருந்து விலகி விட்ட்தாக கூறினான். ஆர் எஸ் எஸின் அமைப்பின் பிரதான தலைவர்களில் ஒருவரான சவர்கர் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப் பட்டிருந்தார். அவருக்கு தண்டனை வழங்கப் படுமானால் ஆர் எஸ் எஸ் கார்ர்கள் இந்தியாவில் மிகப்  பெரும் கலவரத்தை உருவாக்க கூடும் என்ற அச்சத்தால் சவர்காருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
2016 செப்டம்பர் எட்டாம் தேதியன்று எகனாமிக் டைம்ஸிற்கு பேட்டியளித்த கோட்ஸேவின் குடும்ப உறுப்பினர்கள், "கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு ஒருபோதும் விலகவுமில்லை அல்லது அவர் அங்கிருந்து வெளியேற்றப்படவும் இல்லை" என்று கூறினார்கள்.

 காந்தியின் இறுதிக் காலத்தில் அவரது தனிச் செயலாளராக பணிபுரிந்த ப்யாரேலால் நையர், தான் எழுதிய "மகாத்மா காந்தி: கடைசி கட்டம்" (பக்கம் எண் 70) என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். "வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும், எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கனவே கூறியிருந்தார்கள். அதுமட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள்."
துஷார் காந்தி தனது நூலில் (லெட்டஸ் கில் காந்தி ) இவ்வாறு கூறுகிறார்.
காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் மாலை மூன்று மணிக்கே அல்வரில் அச்சடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கொலை நடந்தது மாலை 5.00 மணி 17 நிமிடத்தில்தான். காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அல்வரில் இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மகிழ்ச்சியுடன் இனிப்புகளை விநியோகித்தனர். (துஷார் காந்தி, பக்க எண்.770)
கோட்ஸேயின் சகோதர்ர்ர் பிற்காலத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படி கூறுகிறார்.
எங்கள் குடும்பமே ஆர்.எஸ்.எஸ். தான். ஆர்.எஸ்.எஸ்ஸில் அறிவார்ந்த ஆர்வலராக நதுராம் இருந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறுவதாக தனது அறிக்கையில் நதுராம் கூறியிருந்தார்."
"ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, கோல்வல்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு சிக்கல்கள் ஏற்பட்டதால், அவர்களை காப்பாற்றுவதற்காக நதுராம் இப்படி அறிவித்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் அவரை வெளியேற்றவில்லை'' என்று கூறியிருந்தார்.
அதே போல சவர்கருக்கு தண்டனை வழங்கப்படாத்தற்கான காரணத்தை துஷார் காந்தி குறிப்பிடுகிறார்.
"சவர்க்கருக்கு தண்டனை வழங்கப்பட்டால், தீவிரவாத இந்துக்களின் எதிர்வினை மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதை படேல் நம்பினார். இந்த அச்சம் காங்கிரசுக்கும் இருந்தது. காந்தி படுகொலை வழக்கில் சவர்கருக்கு சம்பந்தம் இல்லை என்பதை, அந்த வழக்கின் விசாரணை அதிகாரி நாகர்வாலாவே மறுத்துவிட்டார்."

ஆர் எஸ் எஸ் அமைப்பின் வழிகாட்டலில் தான் கோட்ஸே காந்தியை படுகொலை செய்தான் என்றாலும் தனது அமைப்பை காப்பற்றுவதற்காக தான் ஆர் எஸ் எஸை விட்டு விலகி இந்து மகா சபா விலே சேர்ந்து கொண்ட்தாக கோட்ஸே அறிவித்தார். அதை இன்று வரை இந்து மகாசபா மறுக்கவில்லை.
இன்று வரை ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவர்களும் இந்து மகாசபை கார்ர்களும் கோட்ஸே வின் அஸ்திக்கு பூஜை செய்து அவனை கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் பாஜக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் நாடாளுமன்றத்திலேயே கோட்ஸேவை தேசபக்தர் என்று குறிப்பிட்டார்
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் நடை பெற்ற மறக்க முடியாத மிகப்பெரும் பயங்கரவாதச் செயல் காந்தியின் படுகொலை. அந்த கொலையை ஆதரித்தவர்கள் தான் இப்போது நாட்டை ஆள்கிறார்கள் என்பது இந்தியாவுக்கு நேர்ந்த பெரும் துயரம்.
1948 ல் நாதுராம் கோட்ஸேவை வை வைத்து ஆர் எஸ் எஸ் நடத்திய அதே பயங்கவராதத்தை 2010 கோபால் என்பவனை வைத்து நேற்று தில்லி ஜாமியா பல்கலைகழக போராட்டக் கார்ர்கள் மீது மீண்டும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.   
மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டங்களுக்கு எதிராக நேற்று மக்கள் மேடை என்ற அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதிலும் ஒரே நேரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடை பெற்றது. போராட்டம் குறித்த சரியான தகவல் பரிமாற்றம் இல்லாத் இடங்களில் மிதமாகவும் சரியான தகவல்கள் பரிமாறப்பட்ட இடங்களில் பெருமளவிலும் மக்கள் திரண்டு போராடினர். அனைத்து மத மக்களும் இப்போராட்டத்தில் ஒன்றாக திரண்டு மத்திய அரசின் மதவாதப் போக்கிற்கு எதிராக குரல் எழுப்பியது இந்தியாவின் இன்னொரு சுதந்திரப் போருக்கான முன்னோட்டம் போலவே இருந்த்து.
அதே நேரத்தில் தில்லியில்  ஜாமியா மில்லியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது போராட்டத்திற்குள் புகுந்த ஒரு இந்துத்துவ வெறியின் போராட்டக் கார்ர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டான். யாருக்கு வேனும் சுதந்திரம் நான் தருகிறேன் சுதந்திரம் என கத்தியபடி அவன் சுட்ட்டான். ஏராளமான காவல் துறையினர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இந்தக் கொடூரம் நடந்துள்ளது. அவன் கையில் துப்பாக்கி இருக்கிறது என்று கூட்ட்த்திலிருப்பவர்கள் அலறுவது கேட்கிறது. இந்த அலரல் அருகிலிருக்கிற காவலர்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது.  
காந்தியை கோட்ஸே சுட்டுக் கொன்ற அதே தோற்றத்தில் கோபால் துப்பாக்கியால் சுட்டிருப்பது இன்று ஆட்சியில் இருப்பவர்கள் காந்தியை விட்டு விட்டு யாரை முன்னோடியாக கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.  
காந்தியை சுட்டதால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜன்நாயக நாடாக மாறுவதை எப்படி தடுக்கக முடியவில்லையோ அதே போல நேற்றையை கோபால்களால் இப்போதைய போராட்ட்த்தை தடுத்து விட முடியாது.
நேற்று ஒரு போராட்டக்கார்ர் முழுங்கினார்.
ஜீத் கயோதோ வதன் முபாரக்
மர் கயேதோ கபன் முபாரக்

ஜெயிச்சா நாட்டுக்கு நல்லது.
செத்தா வாழ்கைக்கு நல்லது.

தற்போதையை மத்திய அரசின் மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிரான மக்களின் உறுதி இந்த அளவில் இருக்கிறது.
மக்களை கொன்று அவர்களின் போராட்டக்களங்களை தடுத்து விடலாம் என நினைக்கிற ஆதிக்க சக்திகள் தோற்றுப் போவார்கள்.

இதற்கு வரலாறு சாட்சி

கர்பலா களத்தில் ஹுசைன் ரலி அவர்கள் படு கொலை செய்யப்  பட்டார்கள்.

முஆவியா ரலி அவர்கள் உருவாக்கிய உமய்யா சாம்ராஜ்யத்தை நிலை நாட்டுவதற்காக, யஜீதீன் அதிகாரத்தை உறுதிப் படுத்துவதற்காக இப்படுகொலை நிகழ்த்தப் பட்டது.

ஆனால்  வரலாறு என்ன காட்டுகிறது தெரியுமா ?

யஜீதுக்கு பிறகு அவரது சந்த்தியில் ஒருவரும் அரசராக வில்லை.

யஜீதுக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் முஆவியா பைஅத் செய்து வைக்கப் பட்டார். ஆனால் அவரோ ஆட்சி செய்ய வரவே இல்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் ஆட்சி செய்யவில்லை என டமாஸ்கஸின் பள்ளிவாசலில் அறிவிப்பு செய்து விட்டு தனது மாளிகைக்குள் சென்றவர் தான்.  சீக்கிரத்தில் மரணப் படுக்கையில் விழுந்தார். தன்க்குப் பிறகு ஒருவரை அறிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார்; .அவரது தாயார் அவரை மிக மோசமாக திட்டி அவரை  கண்டித்தார். நீ என்னிடம் மாதவிலக்கை துடைக்கும் துணியை விட கேவலமானவன் என்றார். அதற்கு இரண்டாம் முஆவியா ஒரு வேளை நான் அடுத்த ஆட்சியாளரை அறிவித்தால் நீங்கள் சொல்வது போல அந்த துணியை விட கேவலமானவன் தான் என்றார். சீக்கிரமே அவர் மரணத்தை தழுவினார். எனவே உமய்யா அரசாட்சி அவருக்குப் பின்னால் பல்லாண்டுகள் நிலைத்த்து என்ற போது அது யஜீதின் குடும்பத்தால் நிலைக்கவில்லை. யஜீதுக்குப் பின்னால் மர்வான் பின் ஹகம் குடும்பத்தாலேயே நிலைத்தது.   உமய்யா அரசர்களின் பெரும்பாலோர் மர்வானின் சந்ததிகளே ! யஜீதின் சந்த்திகள் அல்ல.
படுகொலைகளால் அரசியல் களத்தில் சாதிக்க நினைத்த எவரும் வெற்றியடைந்த்தில்லை. இப்போதைய மத்திய அரசும் வெற்றியடையப் போவதில்லை.
ஆனாலும் மக்கள் எதற்கும் தயாரகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதை நேற்றைய நிகழ்வு காட்டுகிறது.
மக்கள் தங்கள்து போராட்ட களங்களுக்குள் இத்தகைய தீவிரவாதிகள் ஊடுறுவி விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
عن أبي هريرة رَضِيَ الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: ((لا يُلْدَغُ المؤمنُ من جُحْرٍ مرتين))؛ رواه الشيخان

தில்லி ஜவஹர்லால் யுனிவர்சிடியின் மாணவர் கன்னைய்யா குமார் உருவாக்கிய
ஹம் கியா ஜாஜ்தேஹே! ஆசாதீ!
ஆர் எஸ் எஸ் ஸே ஆசாதி
பி ஜே பி ஸே ஆசாதி
மனுவாத் ஸே ஆசாதி
காந்தி வாலி ஆசாதீ
அம்பேத்கார் வாலி ஆசாதி
ஹம் லட்தே லேகேங்கே ஆசாதி
தும் குச் பீ கர்லோ ஆசாதி
ஹம் லேதே ரஹேன்கீ ஆசாதி
என்று தொடங்கும் கோசங்கள் நாடு இப்போது ஆங்கிலேயர்களுக்கு பதிலாக ஆர் எஸ் எஸ் கார்ர்களிடம் சிக்கியிருப்பதை அப்பட்டமாக எடுத்துக் காட்டி பழைய சுதந்திர உணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வக்கயில் அமைந்திருக்கிறது.
இந்த கோஷம் நாடு முழுவதிலும் பரவி வருகிறது.
அது மக்களின் போராட்ட்த்தை ஒரு முகப் படுத்தி வருகிறது.
தில்லியில் ஒலித்த கோஷம் இப்போதும் மும்பையிலும் கேரளாவிலும் ஒலிக்க ஆரம்பித்து விட்ட்து.
இதனால் ஆர் எஸ் எஸ் பெரிய அளவில் ஆத்திரமுற்றுள்ளது. எனவே தான்
நேற்றையை தினம் துப்பாக்கியால் சுட்டவன் “ கீஸ்கு ஜாஹியே ஆசாதி!  யாருக்கு சுதந்திரம் வேண்டும் நான் தருகிறேன் சுதந்திரம் என்று சொல்லி சுட்டிருக்கிறான்.
இது போராட்ட்த்தின் வீரியத்தின் மீது எழுந்த ஆதிக்க சக்திகளின்  கோபத்தின் வெளிப்பாடேயாகும்.
போராட்டம் வெற்றியை நோக்கி நகர்கிறது என்பதற்கான அடையாளம் இது.
கோபாலைப் போன்ற சமூக கிருமிகள் மிக ஆபத்த்தனவர்கள். ஆர் எஸ் எஸ் அமைப்பு நாடு முழுவதும் இத்தகை சமூக கிருமிகளை ஏராளமாக உருவாக்கி வைத்திருக்கிறது மக்கள் இதை உணர்ந்து உஷாராக செயல்பட வேண்டும்.
இப்போது எங்கு பார்த்தாலும் கெரேனோ வைரஸ் என்பது பேச்சாக இருக்கிறது.
சூனாவில் வூஹான் மாந்கரில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வைரஸீன் தாக்குதலில் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது, பயணிகளின் வழியாக உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது,

தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப் படாத இந்நோய் தாக்குதல் இப்போது பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது.
சீனாவின் வூஹான் மாநகர சந்தை எலிகள் நாய்கள் பாம்புகள் பூனைகள் செத்தவை சாகாதவை என பல்வேறு அருவெறுக்கத்தக்க உயிப்பிராணிகளின் சந்தையாகும். அந்த சந்தையை வீடியோவில் பார்த்தாலே குமட்டல் எடுத்துவிடும்.
அந்த சந்தையிலிருந்து தான் இந்த நோய் தொற்று ஏற்பட்த்தொடங்கியுள்ளது.
இப்போது அந்த சந்தையை சீனா மூடியுள்ளது. அந்த நகரத்திற்கும் சீல் வைத்துள்ளது, அதற்குள்ளாக வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவி உள்ளது,
நேற்று கேரளாவில் ஒரு சிறுவனுக்கு அந்நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இன்றைய செய்திகள் கூறுகின்றன.
அல்லாஹ் இத்தகைய கொடூர நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதிக்கப் பட்டிருக்கிற சீன நாட்டையும் அதன் மக்களையும் – மற்ற மக்களையும் நம்மையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக!’
இந்த நேரத்தில் அசைவ உணவுகளில் இஸ்லாம் அனுமதித்த அசைவு உணவு அதன் முறைகள் மட்டுமே ஆரோக்கியமானவை என்பதை நினைவு படுத்திக் கொள்வது பொருத்தமானது.
இஸ்லாம் அனுமதித்துள்ள உணவுகள் மனிதனது ஆரோக்கியம் மற்றும் சரியான சக்தி ஆகியவற்றை மையப் படுத்தியதாகும். இஸ்லாம் அனுமதிக்காத உணவு வழக்கங்கள் எப்போதும் இல்லாவிட்டாலும் கூட அதிகப்படியாக தீமைகளை விளைவிக்க கூடியதாகும்.
«يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات»،
العالم الأزهري، د. أحمد طه ريان - أستاذ الشريعة الإسلامية، عضو هيئة كبار العلماء - يوضح لنا بعض الأطعمة التي حرمتها شريعة الإسلام وفلسفتها في هذا التحريم، فيقول: فلسفة الإسلام في التحليل والتحريم مرتبطة بمصلحة الإنسان، فما فيه مصلحة ومنفعة للإنسان أباحته وحثت عليه، وكل ما يلحق ضرراً بالإنسان حذرت منه، ولذلك نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل كل ذي مخلب، أي الأظفار التي يصطاد بها فريسته كالصقر والنسر وما يشبههما، بخلاف ما ليس له ظفر يصطاد به كالحمام والدجاج وما يشبههما، لأن لحوم الطيور التي تحمل ظفراً ليست طيبة ولا مستساغة في الطعام، ولو حاول إنسان أكلها للفظها بمجرد تذوقها.

كذلك حرمت الشريعة الإسلامية من الحيوانات أكل كل ذي ناب يسطو به على غيره كالسباع والذئاب وما يشبهها، وأحلت ما ليس كذلك كالإبل والبقر والغنم وما يشبهها، قال ابن عباس في الحديث الصحيح: «نهى رسول الله صلى الله عليه وسلم  عن أكل ذي ناب من السباع، وكل ذي مخلب من الطير»

உலகிலேயே சீன சமுதாயம் தான் கட்டுப்பாடற்ற அருவருப்பான உணவு வகைகளை எந்த வித அருவருப்பு மின்றி உண்ணும் சமுதாயமாக இருந்து வருகிறதும். அதன் காரணமாகவே பல கொடிய வைரஸ்கள் அவர்களை தாக்குகின்றன.

சீன் மக்கள் தங்களது உணவுக் கலாச்சாரம் குறித்து சிந்திக்க வேண்டிய சூழ்நிலையை இந்த கெரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது
 உலக் மக்களும் எச்சரிக்கை அடைய வேண்டும்.
இந்த வைரஸ் பராவமல் இருப்பதற்கான முறையான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.
இந்த நடவடிக்கைகள் கூட 14 நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்லாம் கூறிய நடவடிக்கைகளாகும்.
روى البخاري (5739) ، ومسلم (2219) عن عبد الرحمن بن عوف رضي الله عنه أنه قال : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : (إِذَا سَمِعْتُمْ بِهِ [يعني : الطاعون] بِأَرْضٍ فَلَا تَقْدَمُوا عَلَيْهِ ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْه) .
நோய் தாக்குதலுக்கு உள்ளனவர்களுக்கு தனியான வார்டுகளை முதலில் அமைத்தவர்கள் முஸ்லிம்களே ஆவார்கள். அப்படி அமைத்த முதல் நகரம் பக்தாது ஆகும்.

அல்லாஹ் நோய்க்கிருமிகளின் தாக்குதல் களிலிருந்தும் சமூக கிருமிகளின் தாக்குதல்களிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!

நாமும் எச்சரிக்கை அடைவோமாக!

1 comment:

  1. மாஷா அல்லாஹ். தெளிவான குறிப்புகள். எழுத்துப் பிழைகள் நிறைய உள்ளது. திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும்.....

    அல்லாஹ் போதுமானவன்....!

    ReplyDelete